20 October 2012

ஸ்ரீ வாராஹி மூல மந்திரம்)

  ஸ்ரீ வாராஹி மூல மந்திரம்)

ஒவ்வொருவரும் அம்பிகையைப் பூஜை செய்வது பூர்வ புண்ணிய பலத்தினால் வருவது. எதிலும் சக்தியே பிரகாசிக்கிறது. அந்த சக்தியை ஒரு இடத்தில் நிறுத்தி அதனுடைய பேரருளை பக்தி மார்க்கமாக வாராஹி அம்பாள் என்று நினைவில் வைத்து அம்பாளை லயம் செய்து கொள்வதே உபாசனை என்பதாகும். அவ்வாறு தாங்கள் வாராஹியை உபாசித்தால் சகலவிதமான காரியங்களும் நொடியில் சித்தியாகும். ஆதிசக்தியாகிய பராசக்தியின் படைக்கு சேனாதிபதியாக வாராஹி தேவி அவதரித்தாள். ஆகையால் நாம் வாராஹியை அன்றாடம் வழிபாடு செய்ய வேண்டும்.

குறிப்பு :

1. வாராஹிக்கு ஏற்ற மாலை - செவ்வரளி மாலை.
2. வாராஹிக்கு ஏற்ற புஷ்பம் - செந்தாமரை, வெண் தாமரை.
3. வாராஹிக்கு ஏற்ற கிழங்கு - தாமரைக் கிழங்கு, அல்லிக் கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, மாகாளிக் கிழங்கு, பனங்கிழங்கு.
4. வாராஹிக்கு ஏற்ற வாசனைத் தளிர்கள் - மரிக்கொழுந்து, கருப்பு துளசி, செந்தாழை, மல்லியிழை.
5. வாராஹிக்கு ஏற்ற வேர்கள் - வெட்டிவேர், அல்லி வேர், மல்லி வேர், சிறு நன்னாரி வேர், பெரு நன்னாரி வேர்.
6. வாராஹிக்கு ஏற்ற வஸ்திரங்கள்-செவ்வண்ண வஸ்திரம் ஹோமத்தில் சேர்க்க வேண்டும்.
7. வாராஹிக்கு ஏற்ற நெய்வேத்திய பலகாரங்கள் - கருப்பு உளுந்து வடை, பாதாம் கேசரி, முந்திரி உருண்டை இத்துடன் பானகம் முதலியன.

வாராஹியின் நான்கு திருக்கோலங்கள் :

1. சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் வாராஹி.
2. மகிஷ வாகனத்தில் (எருமை) அமர்ந்திருக்கும் வாராஹி.
3. புலி வாகன வாராஹி.
4. வெண் குதிரை வாகன வாராஹி.
இந்த நான்கு திருக்கோலங்களும் நான்கு விதமான பலன்களைத் தருவதாக சித்தர்களாலும், மந்திர சாஸ்திரங்களாலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

ஜபத்திற்கான மந்திரங்கள்

மந்திரங்கள் சப்த ரூபமாக உள்ளவை. இவை தேவதைகளின் ஸூக்ஷ்ம சரீரம். இவைகளில் இவ்வளவு என்று குறிப்பிட முடியாத சக்தி உண்டு. இன்ன மந்திரம் இன்ன பலன் தரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். உபாஸனை, ஜபத்தினால்தான் வலிமை பெறும். ஜபத்திற்கு சாதனம் மந்திரம்.

ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி?

மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறது. லட்சக் கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர்.

1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது.
சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.
 உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும்.

2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா அக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம் செய்ய வேண்டும். இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாக ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ண சதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்லி சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்கு ஏற்றவையே.

3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில் மந்திர ஸித்தியை விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில் தொடங்கி குறிப்பிட்ட அடுத்த திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும் ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம்.

4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது. அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக் கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம்.

5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில் மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை மூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம்.

6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்ய வேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம் முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714 ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில் செய்ய வேண்டும்.

7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால் அம்மந்திரம் ஸித்தியாகிறது.

8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை நவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்தி ஏற்படுகிறது.

9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ள எழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து குளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில் அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும் மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும் மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை.

11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக் கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும் கிடைக்கின்றன.

ஜபத்திற்குரிய இடங்கள்

ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.
சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.
பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.
கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.
சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.
கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.

ஸ்ரீ வாராஹி மூல மந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்! ஐம் க்லௌம்
ஐம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி
வாராஹி, வாராஹி வராஹமுகி, வராஹமுகி
அந்தே அந்தினி நம:
ருந்தே ருந்தினி நம :
ஸ்தம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம்
ஸ்ர்வேஷாம் ஸ்ர்வவாக்
சித்த, சக்ஷர் முககதி
ஜிக்வா, ஸ்தம்பனம் குருகுரு

சீக்ரம் வஸ்யம்

ஐம் - க்லௌம் - ட : ட : ட : ட
ஹும் அஸ்த்ராய பட்
ஓம் அஸ்யஸ்ரீ வாராஹி
மஹா மந்த்ரஸ்ய பகவான்
பைரவ ரிஷித் ருஷ்டிப் ஸந்தவராகி
மஹா சக்தி தேவதா
க்லைம் பீஜம்
க்லாம் சக்தி
க்லூம் கீலகம்
மம ஸ்ரீ வாராஹி
மஹா சக்தி பிரசன்ன
ஸித்தியர்த்தே ஜெபோ விநியோக ஹா!

நியாஸம் :

கரம் :
ஐம் - அங்குஷ் டாப்யாம் நம:
க்லிம் - தர்ஜ்ஜனிப்யாம் நம:
சௌ - மத்யமாப்யாம் நம:
ஐம் - அனாமி காப்யாம் நம:
க்லீம் - கனிஷ்ட காப்யாம் நம:
சௌ - கரதலப்ருஷ்டாப்யாம் நம:
நியாஸம் :
அங்கம் :
ஐம் ஹ்ருதயாக நமஹ
க்லீம் சிரசே ஸ்வாஹ
சௌம் சிகாயை வஷட்
ஐம் கவசாய ஹும்
க்லீம் நேத்ராய வெளஷட்
சௌம் அஸ்திராயபட்
பூர்ப்பு வஸ்ஸுவரோம் இதி திக்பந்த :
அஸ்ய ஸ்ரீ மஹா வாராஹி ! மஹா
மந்திரஸ்ய ! தரணீ
வாராஹ ருஷி ! ப்ரஹதீ சந்த்; மஹா
வாராஹி தேவதா !!
த்லௌம் பீஜம் ! ஐம் சக்தி !
ஹ்ரீம் கீலகம் ! ஸ்ரீ மஹா வாராஹி
ப்ரஸாத ஸித்தியர்த்தே ஜப விநியோக
தியானம் :
வந்தே வராஹவக்த்ராம் மணிமகுடாம்
வித்ரும ச்ரோத்ர பூஷாம்
ஹாரக்ரை வேய துங்கஸ்தனபர நமதாம்
பீத கௌசேய வஸ்த்ராம்
தேவீம் த்÷க்ஷõர்த்வ ஹங்தே முஸலமத்
வரம் லாங்கலம் வா கபாலம்
வாமாப்யாம் தாரயதீ குவலய கலிதாம்
ச்யாமளாம் ; சுப்ரனை !!
லம் இத்யாதி பஞ்சபூஜா
தியானம் :
அஸ்ய ஸ்ரீ மஹா வாராஹி மந்தரஸ்ய
தரணி வாராஹ ரிஷி : ப்ரஹதீ சந்தாம்ஸி
மஹா வாராஹி தேவதா
மமகார்ய சித்யர்த்தே வாராஹி தேவி வந்த
ஜெப சித்யர்த்தே மமகுல சந்தோஷணார்த்தே
ஜெபே விநியோகக

ஸ்ரீ அஸ்வாரூடாம்பா மகா மந்திரம்

ஓம் அஸ்ய ஸ்ரீ அஸ்வாரூடாம்பா மகா
ஸ்வச் சந்த பைரவ ருஷி காயத்ரீ மந்திரஸ்ய சந்த:
ஸ்ரீ அஸ்வாரூடாம்பா தேவதா!
ஆம் பீஜம் ஹ்ரீம்சக்தி க்ரோம் கீலகம்
மமஸ்ரீ அஸ்வாரூடாம்பா பிரசாத சித்யர்த்தே
அஸ்வாரூடாம்பா மந்த்ர ஜெப விநியோக
ஆம் - அங்; ஹ்ரீம் - த; க்ரோம் - ம
ஏஹி - அனா - பரமேஸ்வரி - கனி ஸ்வாஹா
கர தலகிர நம
ஏவம் க்ருதயன்யாச :
தியானம்
அஸ்வாரூடாம் காராக்ரைர் நவ கனக மயீம்
வேத்ர யஷ்டிம் ததானம்
தக்ஷன்யே நா நாயந்கீம் பக்த நூலதாம்
பாராபத்தம் சுசாத்யம்
தேவீம் நித்ய பிரசன்னாம் சசி சகலதராம் தாம்
த்ரிநேத்ரா பிராமாம்
உத்யத் கவ்யாம் சபத்யாம் சகல சுப
பலப்பிராப்தி
(க்ருத்சாம் ஸ்ரீ யன் நம:)
மந்திரம் :
ஆம் - ஹ்ரீம் - க்ரோம் ஏஹி
பரமேஸ்வரி ஸ்வாஹா

ஸ்ரீ வாராஹி அஷ்டகம்

தேவி க்ரோடமுகி ந்வதங்ரி கமலத்வத்
த்வானு ரக்தாத்மனே
மஹ்மம் த்ருஹயதயோ மஹேசி மனஸா
காயேன வாசா நர ;
தஸ்யாசு த்வதயோக்ர நிஷ்டுரஹலா
கதா ப்ரபூதவ்யதா
பர்யஸ்யன் மனஸோ பவந்து வபுஷ ;
ப்ராணா ப்ராயாணோன் முகா
தேவி த்வத்பத பத்ம பக்தி விபவ ப்ரஷீனே
துஷ்கர்மணி
ப்ராதுர்பூத ந்ருசபர்ஸ பாவமலினாம்
வ்ருத்திம் விதத்தே மயி
யோ தேஹி புவணேத தீய ஹ்ருதாயாந்
நிர்கத்வரைர் லோஹிதை
ஸத்ய; பூரயஸே கராப்ஐ சஷகம்
வாஞசாபலைர் மாமயி
சண்டோத்துண்ட விதீர்ண துஷ்ட ஹ்ருதய
ப்ரோத்பின்ன ரக்தச்சுடா
ஹாலாபான மதாட்ட ஹாஸநித
தா கோப ப்ரதா போந் கடே,
மாதர் மத் பரிபந்தினா மபஹ்ருதை ;
ப்ரானண ஸத் வதங்ரித்வயம்
த்யானோட்டாமர வைபவோதய வசாத்
ஸந்தர்ப்பயாமி க்ஷணா ;
ச்யாமாம் தாமரஸானனாங்ரி நயனாம்
ஸோமார்த்த ஷடாம் ஜகத்
த்ராண வ்யக்ர ஹலாயு தோக்ர முஸலாம்
ஸந்த்ராஸ முத்ராவதீம்
யேத்வாம் ரக்த கபாலினீம் ஹரவராரோ
ஹேவரா ஹானனாம்
பாவை; ஸந்தத்தே சதப் க்ஷணம்பி
ப்ராணாந்தி தேஷம் த்விஷ
விஸ்வாஸ்தீஸ்வர வல்லபே ஜெயஸேயா
த்வம் நித்யந்த்ரி யாத்மிகா
பூதானாம் புருஷாயு ÷ஷாவதிகரீ
பகா ப்ரதா கர்மணாம்
தர்மயாசே பவதீம் கிமப்யவிதகம்
யோமத் விரோ நீஜன ;
தஸ்யாயர்ம வாஞ் சிதாவதி பவேத்
மாதஸ்தவை வாக்ஞயா
மாதஸ்ஸம்யகு பாஸிதும் ஜடமதி ஸ்திவாம்
நைவ சக்னோம் யஹம்
யத்யப்யன் வித தேசிகாங்ரி கமலானுக் ரோச
பாத் ஸங்கின ;
வாராஹி வ்யத்மான மானஸ களத்
ஸெனக்யம் ஹதாசாபலம்
ஸிதத்தம் தமபாக்ரு தாத்ய வஸிதம் ப்ராப்தா
கிலோத் பாதகம்
கிரந்தத் பந்துஜனம் களங்கித குலம் கண்ட
வரணோத்யத் க்ரியிம்
பச்யாமி ப்ரதிக்ஷமா பதிதம் ப்ராந்தம்
லுடந்தம் முஹு
வாராஹி த்வம்சேஷ ஜந்து ஹீபுன ;
ப்ராணாத்மிகா ஸ்பந்தஸே
சக்திவ்யாபத சராசர கலுய தஸ்த்வாமேத
தப்யர்த்தயே
த்வத பாதாம்புஜ ஸங்கினோமம ஸக்ருத்
பாபம சிகீர் ஷத்தியே
தோஷாம் மாகுரு சங்கரப் பிரியதமே
தேஹாந்தரா வஸ்திதம்

ஸ்ரீ வாராஹி ஸ்தோத்ரம்

தேவ்யுவாச :
1. நமோஸ்து தேவி வாராஹி ஐயைகாரஸ்வரூபிணி !
ஜபித்வா பூமிரூபேண நமோ பகவதிப்பரியே!!

2. ஜயக்ரோ டாஸ்து வாராஹி தேவித் வாம்ச நமாம்யஹம்!
ஜய வாராஹிவிஷ் வேஸிமுக்ய வாராஹிதே நம!!

3. ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டாநாம் வாக் ஸ்தம்ப நகரீநம!
நமஸ் ஸ்தம்பிநி ஸ்தம்பே தவாம் ஜ்ரும்பே ஜரும்பிணி தே நம!!

4. முக்யவாரா ஹிவந்தே த்வாம் அந்தே அந்திநி தே நம!
ருந்தே ருந்தேநிவந்தே த்வாம் நமோ தேவீது மோஹி நீ !!

5. ஸ்வபக்தானாம் ஹி ஸர்வேஷாம் ஸர்வகாம ப்ரதே நம!
பாஹ்வோ ஸ்தம்பகரீம் வந்தே சித்தஸ் தம்பிந தே நம!!

6. சக்ஷúஸ் ஸ்தம்பிநி த்வாம் முக்யஸ்தம்பி தே நமோ நம
ஜகத்ஸ்தம்பிநி வந்தே த்வாம் ஜீஹ்வாஸ்தம்பந காரிணி

7. ஸ்தம்பனம் குரு ஸத்ரூணாம் குரு மே ஸத்ருநாஷநம்
ஸீக்ரம் வஸ்யம் ச குரு யோக்நௌ வாசாத்மகேநம

8. டசதுஷ்டயரூபே த்வாம் ஸரணம் ஸர்வதா பஜே
ஹோமாத்ம மகே பட்ரூபேண ஜய ஆத்யாநநேஸிவே

9. தேஹி மே ஸகலான் காமான் வாராஹீ ஜெகதீஸ்வரி
நமஸ்துப்யம், நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம

10. இதம் ஆத்யாநநா ஸ்தோத்ரம் ஸர்வ பாபவிநாஸநம்
படேத்ய ஸர்வதா பக்த்யா பாத கைர் முச்யதே ததா

11. லபந்தே ச ஸத்ரவோ நாஸம் து ; கரோகாபம்ருத்யவ
மஹதாயுஷ்யமாப் நோதி அல க்ஷ் மீர் நாஸமாப்நுயாத்

12. ந பயம் வித்ய தே க்வாபி ஸ்ர்வதா விஜயோ பவேத்
அபீஷ்டார்தான் லபேத் ஸர்வான் ஸரீரீ நாத்ர ஸம்ஸய
(இதி ஸ்ரீருத்ர யாமளே உமா மஹேஸ்வர ஸம்வாதே
ஆதிவாராஹீ ஸ்தோத்ரம் ஸமாப்தம்)

19 October 2012

ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்:

ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்:


1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.
2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.
3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.
4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.
5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.
6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.
7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.
8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.
9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.
10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.
11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.
12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.
13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.
14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.
15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.
16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.
17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.
18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.
19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.
20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.
21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.
22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.
23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.
24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.
25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.
26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.
27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.
28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.
29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.
30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.
31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.
32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.
33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.
34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.
35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.
36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.
37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.
38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.
39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.
40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.
41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.
42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.
43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.
44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.
45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.
46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.
47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.
மரண மாற்று மூலிகை ஆடாதோடை.
23/12/2010

மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள்.  அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள்.
இந்த  வகையில் நீண்ட ஆரோக்கியத்தை கொடுக்கவல்ல காய கற்ப மூலிகையான ஆடாதோடை பற்றித் தெரிந்து கொள்வோம்.
இது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.  ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது.
ஆடாதோடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது.  இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர்.  இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது.  மனிதனை அன்றாடம் துரத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும்.
ஆடாதோடை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும்.  எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது.  கிராமப்புற மக்களும் சரி, அங்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களும் சரி, ஆடாதோடை இலையை அதிகம் பயன்படுத்துவார்கள்.  நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள்.  இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.  அதுபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக ஆடாதோடை இலை ஒன்றுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னக் கொடுப்பார்கள்.  இது உடனடி நிவாரணமாகும்.
மனித உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும்.  இது சுவாசக் காற்றை உள்வாங்கி  அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது.  நுரையீரல் நன்கு செயல் பட்டால்தான் இரத்தம் சுத்தமடையும்.  இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது.  இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.  இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர்.
ஆடாதோடை இலை, தூதுவளை இலை (2010 மார்ச் இதழில் இதுபற்றி விரிவாகக் கூறியுள்ளோம்) சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும்.  சளித் தொல்லை அணுகாது.  நுரையீரல் பலம்பெறும்.  மேலும் இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தோடைக்கு உண்டு.
ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும்.  நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
மேற்கண்ட முறைப்படி 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எப்போதுமே சளித் தொல்லை உண்டாகாது.
ஆடாதோடை வேரையும், கண்டங்கத்திரி வேரையும் இடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக மாற்றி அதனுடன் திப்பிலி பொடி சேர்த்து அருந்தி வந்தால் வறட்டு இருமல் மற்றும்  தொண்டைப் புகைச்சல் குணமாகும்.
ஆடாதோடை இலை, தூதுவளை,  துளசி இலை இவைகளை வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் பொடியில் தேன் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு, தும்மல், இருமல், சுவாச காச நோய்கள் நீங்கும்.  ஆடாதோடை இலையைக் குடிநீர் செய்தோ, அல்லது பொடி செய்து தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் நல்ல குரல் வளம்கிடைக்கும்.  ஆடாதோடை இலைகளை உலர்த்திப் பொடியாக்கி சிறிது நீர்விட்டு குழைத்து நெஞ்சில் பற்றுப் போட்டால், நெஞ்சுச்சளி அறவே நீங்கும்.
ஆடாதோடை இலை     – 2,  வெற்றிலை – 2,  மிளகு – 5, சுக்கு – 1 துண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல்வலி, நெஞ்சுச் சளி நீங்கும்.
இண்டு, இசங்கு, தூதுவளை, கண்டங்கத்திரி , ஆடாதோடை, நறுக்குமூலம் இவற்றின் இலைகளைச் சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் இருவேளை, கஷாயம் செய்து அருந்தி வந்தால், ஈளை, இழுப்பு, இருமல், சுவாசகாசம், போன்றவை குணமாகும்.
காயவைத்த ஆடாதோடையிலை – 5, அதிமதுரம்-2 கிராம்,  திப்பிலி-1 கிராம், தாளிச பத்திரி – 1 கிராம், சிற்றரத்தை 1/4 கிராம் எடுத்து  இடித்து பொடியாக்கி அதனை 500 மி.லி. நீர்விட்டு கொதிக்க வைத்து அது 200 மி.லி.யாக வரும்போது இறக்கி வடிகட்டி காலை மாலை என இருவேளையும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி நீங்கும்.  கோழை வெளியேறும்.  இரைப்பு நீங்கும்.
கழுத்து வலி, கை, கால் மூட்டு வலி, தோள்பட்டை வலி இவைகளுக்கு ஆடாதோடை காய்ந்த இலையுடன்  வசம்பு, மஞ்சள், சுக்கு இவைகளை சம அளவு எடுத்து இடித்து அதனுடன் தவிடு சேர்த்து துணியில் கிளி பொட்டலமாகக்  கட்டி சட்டியில் வைத்து சூடாக்கி வலி உள்ள இடங்களில் ஒற்றடம் கொடுத்தால் வலிகள் நீங்கும்.
ஆடாதோடை இலை, வேர்ப்பட்டை, கண்டங் கத்திரி, இண்டு இவற்றை காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் மண்டைக்குத்து, தொண்டைவலி, வறட்டு இருமல் போன்றவை நீங்கும்.  இந்த பொடியை தேனில் கலந்துகூட அருந்தலாம்.

    மூலிகை காமவர்த்தினி


    தொமூலிகை காமவர்த்தினிட்ட உடன் தன்னை சுரு க்கிக் கொள்ளும் தொட்டா ற் சுருங்கி காந்த சக்தி உடைய மூலிகையாகும். இதனை தொ டுகின்ற போடு அதனுள் இரு க்கும் சக்தி மின்சாரம்போல நம் முள் பாயும். நாற் பத்தெ ட்டுநாள் தவறாமல் தொட்டு வர மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக் குமாம். நினைத்தது நடக்குமாம். இதனை நமஸ்காரி என்றும் அழைக்கின்றனர். மனதில் உணர்ச்சியை அதி கரித்து சிற்றின் பத்தை ஊட்டுவதால் காமவர்த்தினி என்றும் அழைக்கின்றனர்.
    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

    இத்தாவரத்தில் சிட்டோ, ஸ்டி ரால், பினிடால், நார்எபிநெப் ரைன், மிமோலைன், டேனின் உள்ளன. விதைகள் மியூசிலே ஜ் கொ ண்டவை. இதில் குளுக் கோனிக் அமிலம் ஆகியவை காணப்படு கின்றன.
    மாந்தீரிக மூலிகை
    தொட்டாற்சுருங்கி செடி மந்திரீக தன்மை உடையது.
    பகரவே இன்னமொரு மூலிகேளு
    பாங்கான சிணுங்கியப்பா காப்புக் கட்டி நிகரவே
    பூசையிடு மந்திரத்தால் நினைவாக
    உத்தமனே தூபமிட்டு வைத்துக் கொள்ளே.” என்பது ஒரு பழம் பாடல், இதன் வேரை வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம் செய் யப் பயன்படுத்துவர்.
    சிறுநீர் கோளாறுகளை போக்கும்
    ஒரு மீட்டர் உயரம் வளரக்கூடிய இந்த புதர் ச்செடியின் தண்டு மற்றும் இலைக் காம்புகள் முட்களால் மூடியவை. இலை கள் மற்றும் வேர்கள் மருத்துவப் பயன் கொண்டவை.
    இலைகளின் சாறு சைனஸ்,மூலநோய், புண் புரைகளுக்கு மருந் தாகிறது. பசை சுரப்பிகளின் வீக்கம் மற் றும் விரை வீக்கத்திற்கு மேல் பூச்சாகிறது. வேர் சிறுநீர் உறுப்பு கோளாறுகளை போக்கும். இதன் இலையைக் களி மண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ் வாதம் கரையும்.

    இதன் வேரையும் இலை யையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணி யில் சலித்து வைக்க வும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும் பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச் சூடு, ஆசன க்கடுப்பு தீரு ம். சூடு பிடித்தால் சிறு நீர்த்தாரை எரியும். இதற்கு இதன் இலை யை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குண மாகும்.
    ஆண்மை பெருகும்

    பத்து முதல் இருபது நாட்கள் தொடர்ந்து உட்கொள்ள சிற்றின் பம் பெருகும். ஆண் மை பெருக இரவு பா லில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமி ச்சை யளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப் புண் ணும் ஆறும்.
    ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரை பஞ்சு போல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்ச வேண்டும். பின்னர் வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடு க்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுத்து வர நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.
    இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசன த்தில் தடவி வர அவை விரைவில் ஆறும். இதன் இலையை மெழுகு போல் அரைத்து விரை வாதம், கை, கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வை த்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற் றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத புண் களில் வைத்து கட்டி வைக்க ஆறி வரும்.
    வசியம் உண்டாகும்
    வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலி கை என்பதால் துளசி போல வீட்டில் வைக் கலாம். நாளும் தொட வாய்ப்பாகும். மாத வில க் காகும் பெண்கள் இச்செடியின் அரு கில் செல்லக் கூடாது, தொடுதலும் கூடாது. தொட்டாற் சுருங்கி மேக மூத்தி ரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டு கின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும்.

     

      15 October 2012

      wel come

      der sir all country sister and brother welcome thank for your eternal support