5 January 2013

வருகைக்கு மிக்க நன்றி


நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.
தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

நமசிவாயத்தின் பொருள்

ந     - திரோத மலம்
ம    - ஆணவ மலம்
சி    - சிவம்
வா - திருவருள்
ய    - ஆன்மா
'ய' காரமான  'ஆன்மா'
'ந'  காரமான  'திரோத மலத்தினலே' 
'ம' காரமான ' ஆணவ மலத்தை' அழித்து
'வா' என்ற  'திருவருள்' துணை கொண்டு
சிவத்தை அடைய வேண்டும்

பிரதோஷ மகிமை பகுதி:3

பிரதோஷம்  மகிமை பகுதி1,  பிரதோஷம்  மகிமை பகுதி 2 படிக்காதவர்கள் அதை படித்துவிட்டு இப்பகுதிக்கு வரவும்.

பகுதி ஒன்றிலும், இரண்டிலும் பிரதோஷத்தை பற்றி பார்த்தோம். இப்போது பிரதோச நேரத்தை பற்றி பார்போம்.

பௌர்ணமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பும் அமாவாசைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பும் வரும் திதி த்ரயோதசி திதியாகும். அந்த திதி வரும் நாளை தான் நாம் பிரதோஷம் என்று அழைப்போம்.ஆக ஒரு மாதத்திருக்கு தேய்பிறை பிரதோஷம் வளர்பிறை பிரதோஷம் என்று இரண்டு வரும். ஒரு வருடத்திற்கு 24  பிரதோஷம் வரும். 
அதிலும் குறிப்பாக 4.30 மணியில் இருந்து 6 மணிக்கான இடைப்பட்ட நேரம் பிரதோஷம் ஆகும். இது த்ரயோதசி திதி அல்லாத நாட்களிலும் 4.30 மணியில் இருந்து 6 மணிக்கான இடைப்பட்ட நேரம் பிரதோஷம் நேரமாகவே கருத படுகிறது. இந்த இடை பட்ட நேரத்தில் நாம் எத்தையும் உண்ணாமல் பஞ்சாக்ஷரமும்  பன்னிரு திருமுறைகளும் ஓத  வேண்டும்.

ஞானிகளும் ரிஷிகளும்  பிரதோச விரதத்தை கடை பிடித்து சிவபாதம் அடைந்தார்கள்.
அவ்வளவு சிறப்பு வாய்ந்த பிரதோச விரதத்தை முறை படி கடை பிடித்து, உங்கள் ஜன்ம பாவங்களை போக்கி, இறை அருள் பெருக

பிரதோஷம் மகிமை பகுதி: 2

பிரதோஷம்  மகிமை பகுதி ஒன்ரை  படிக்காதவர்கள் அதை படித்து விட்டு வரவும்.

அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன் என்ன என்று பார்போம்

ஞாயிறு பிரதோஷம்:
சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.

பலன்:
இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

திங்கள் பிரதோஷம்:
பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது
சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.

பலன்:
மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.

செவ்வாய் பிரதோஷம்:
செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை  லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும். மனிதனுக்கு  வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.

பலன்:
செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம்  நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே  நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும் , ரணமும்  நீங்கும் என்பது சிவ வாக்கு.

புதன் பிரதோஷம்:
புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.

பலன்:
புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.

வியாழன் பிரதோஷம்:
குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.

பலன்:
கரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.


வெள்ளி  பிரதோஷம்:
சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.

பலன்:
உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

சனி மஹா பிரதோஷம்:
சனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால்  அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள்  சனியினால் வரும் துன்பத்தை போக்க  கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:
ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.
கரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும்  நீங்கும். சிவ அருள் கிட்டும்.


கண்டிபாக செல்ல வேண்டிய  பிரதோஷங்கள் :

வருடத்திருக்கு வரும் 24  பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள்  சித்திரை ,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும், இந்த  8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.

தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் :- மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அவர் அவர் நக்ஷத்திரம் அன்று வரும் பிரதோஷம் :- கவலை தீரும்.

பிரதோச மகிமை பகுதி:1

திருச்சிற்றம்பலம் 

கோவிலில் கருவறைக்கு பின்னால் இருக்கும் லிங்கோத்பவர் கதை நாம் அறிந்ததே. பொய் கூறியதால் பிரம்மாவிற்கு சிவ அபச்சாரம் எற்பட்டது. இதை போக்க பிரம்மா சிவனை வழிபட பூமியில் தேர்ந்து எடுத்த இடம் தான் திருவண்ணாமலை. அங்கு வந்த பிரம்மா மலையே லிங்க வடிவமாக இருக்கிறதே என்று அதை வளம் வர ஆரம்பித்தார்( திருவண்ணாமலை கிரி வலம் முதலில் வந்தவர் பிரம்மா). இரவு பகல் பாராமல் சிவனை வழிபட்டு கிரி வலம் வந்தார். பல நூறு ஆண்டுகள் கழிந்தன, அவருக்கு சிவ அபச்சாரம் நீங்கவில்லை, கால்கள் தேய்ந்தன அப்படியும் வலம்வந்தார், உடம்பு தேய்ந்தன வெறும் ஊயிருடன் வலம் வந்தார், என்று நம் முன்னோர்கள் எழுதி வைத்தார்கள். அப்படி வலம் வந்துகொண்டிருக்கும் போது, ஒருநாள் அசரிரி ஓலித்தது ' ஹே பிரம்மா ஏன் இவ்வளவு கஷ்ட படுகிறாய் நாளை சனி மஹா பிரதோஷம் நீ விரதம் இருந்து சிவனை வணங்கினால் உன் தோஷம் தீரும் என்று கூறியது '. அவ்வாறே வழிபட்ட பிரம்மாவிர்க்கு  சிவ அபச்சாரம் நீங்கியது. அதேபோல் தேவாதி தேவர்கள் பாற்கடல் கடைந்த போது சிவ அபச்சாரத்திற்கு உள்ளானார்கள், அதை போக்க பிரதோச தினத்தில்(திரயோதசி திதி) சிவனை வழிபட்டார்கள்  

சிவனுக்கு மிகவும் உகந்த நாளாக கருத படும் பிரதோஷம் தினத்தில் சிவ ஆலயம் சென்று சிவனை வழிபட்டால் நாம் எல்லை இல்லா பலன் பெறலாம்.
நாம் செய்த பாவங்களை  நீக்க  கூடிய நாள் பிரதோஷம். பிறர் தோசத்தை நீக்க கூடிய நாள் ஆகியதால் அதற்கு பிரதோஷம் என்று பெயர் வந்தது

'சனியைப் போல கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை'


'சனியைப் போல கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை' 'சனியைப் போல கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை' என்பது வழக்கு மொழி. சனி என்றாலே நம்மையறியாமல் நமக்கு பயம் ஏற்படுகிறது. எதிராளிகளை கோபத்துடன் திட்டும்போது 'சூரியன், சந்திரன்' என்றெல்லாம் கூறாது 'சனியனே' என்று வைகிறோம். ஆக, நம்மை அறியாமலே நாம் சனியின் பெயரை அடிக்கடி உச்சரிக்கிறோம்!
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆகும் சனி அடுத்தடுத்த ராசிகளுக்குப் பெயர்ந்து நன்மை தீமைகளை உண்டாக்குகிறார்.
ஒருவர் பிறந்த ராசிக்கு நான்காமிடத்தில் சனி சஞ்சரித்தால் அது 'அர்த்தாஷ்டம சனி'. பிறந்த ராசிக்கு ஏழில் சஞ்சரிக்கும் காலம் 'கண்டச் சனி' எனப்படும். எட்டாம் ராசியில் இருந்தால் 'அஷ்டமத்துச் சனி'. பிறந்த ராசியிலிருந்து 12, 1, 2 ஆகிய இடங்களில் சஞ்சரித்தால் 'ஏழரை நாட்டுச் சனி'. முதல் சுற்றில் 'மங்கு சனி' எனப்படும். அப்பொழுது மிகவும் கஷ்டப்படும் நிலை வரும். அடுத்த சுற்று 'பொங்கு சனி'. பொன்னும், பொருளும் ஏராளமாகச் சேரும். மூன்றாம் சுற்று 'மரணச் சனி' எனப்படும்.
சனியின் பிடியில் அனைவரும் அகப்பட்டே ஆக வேண்டும்! இதற்கு சிவபிரானும் விதிவிலக்கல்ல! சனியின் தாக்கத்தாலேயே சிவபெருமான் பிச்சை எடுத்தார்; ராமபிரான் சீதையைப் பறிகொடுத்து வாடினார்; சந்திரமதியை அரிச்சந்திரனே வாளால் வெட்டும் நிலை ஏற்பட்டது. பாண்டவர்கள் வனவாசம் சென்றது சனியினாலேயே. ராவணன் நவ கிரகங்களை படிகளாக்கி மிதித்த்ஹபோது சனியின் பார்வை பட்டதாலேயே கேடு காலம் ஆரம்பித்து, மரணமடைந்தான். நளனோ மனைவியை இழந்து, சுய உருவமும் இழந்து பைத்தியம் போல திரிய, "நீ திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபடு" என்று நாரதர் சொன்னதற்கிணங்க, அவன் திருநள்ளாறு சென்று வழிபட, சனியும் அவனை விட்டு விலகி, "நளராஜனே! உன் சரிதம் படித்து, நள்ளாறு வந்து வழிபடும் பக்தர்களுக்கு சனிப் பெயர்ச்சியால் எத்துன்பமும் ஏற்படாது" என்றருளினார்.
  • புதுச்சேரி மாநிலத்தில் காரைக்காலிலிருந்து ஐந்து கி. மீ. தொலைவிலுள்ள திருநள்ளாறு திருத்தலத்தில் சனி கிரகத்தின் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது. இதனாலேயே சனிப் பெயர்ச்சியின் சமயம் இவ்வாலயம் சென்று ஒரு நாளாவது தங்க வேண்டும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன. சனிப் பெயர்ச்சி சமயம் செல்ல முடியாதோர், அதற்கு பதினைந்து நாள் முன்போ, பின்போ சென்று தரிசித்தால் கடுமையான சோதனையும் கடுகாக மாறிவிடும் என்பது ஜோதிடர்கள் கூற்று. இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி, அனுக்கிரக மூர்த்தியாக அபய வரத முத்திரையுடன், அருளாட்சி செய்கிறார்.
  • மதுரை மாவட்டம், தேனியிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள குச்சனூரில் சனீசுவரர் கல்தூண் போன்ற உருவத்தில் பூமி வெடித்து சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.நாமக்கல் அருகிலுள்ள தத்தகிரி முருகன் ஆலயத்தில் அமர்ந்த நிலையில் எட்டடி உயரமான சனீஸ்வரர் மேற்கு நோக்கி ஆலயம் கொண்டுள்ளார். எதிரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஆஞ்சநேயரை வழிபட சனியின் துன்பங்கள் குறையும்.
  • சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் 'வட திருநள்ளாறு' என்ற பெயரில் மனைவியுடன் அற்புதக் காட்சி தரும் சனீஸ்வரருடன், பஞ்சமுக ஆஞ்சநேயரும், விநாயகப் பெருமானும் இணைந்து அருளாட்சி செய்கின்றனர்.
  • சென்னை ஆதம்பாக்கம் ஈ.பி. காலனியில் தரிசனம் தரும் விஸ்வரூப சர்வ மங்கள் சனீஸ்வர பகவான் நெடிதுயர்ந்து கம்பீரமாகக் காட்சி தந்து, தன்னை நாடி வரும் பக்தர்களின் துன்பங்களை துடைத்தெறிகிறார்.
  • மும்பையில் சனீஸ்வரனுக்கு சிறிய தனிக் கோயில்கள் நிறைய உண்டு. நாசிக் அருகிலுள்ள சனி சிங்கணாப்பூரில் சனி பகவான் நான்கடிக்கு மேற்பட்ட உயரத்தில் பாறை வடிவில் சுயம்புவாகக் காட்சி தருகிறார். இந்த சனி பகவானை ஆண்கள் மட்டுமே சுத்தமாகக் குளித்து ஆலயத்திலேயே கிடைக்கும் ஆடை அணிந்து பூசிக்கலாம். பெண்கள் விலகி நின்றே தரிசிக்கலாம். மேற்கூரையும் கிடையாது. சனி பகவான் அனுக்கிரகத்தினால் இவ்வூரிலுள்ள வீடுகள், கடைகள், குளியலறைகளுக்குக் கூட கதவு கிடையாது. இங்கு திருட்டே நடக்காதாம். அவ்வூரில் திருடிக் கொண்டு எவரும் அவ்வூரை விட்டு வெளியேற முடியாதது இன்று வரை நடக்கும் அதிசயமாம்!
  • சனிக்கு உகந்த தானியம் எள்ளானதால் எள் சாதம், நல்லெண்ணெய் தீபம் ஏற்றது. சனிக்கு உகந்தவர் ஆஞ்சநேயர், விநாயகர், திருப்பதி பெருமாள்.
  • ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தி, உளுந்து வடை மாலை சாற்றி, உள்ளன்போடு துதிக்க சனியின் துன்பங்கள் குறையும். புரட்டாசி சனி விரதம் இருப்போர் எள்ளு சாத நிவேதனம் செய்து, விநியோகம் செய்ய வேண்டும். "உன் பக்தர்களை அண்டமாட்டேன்" என்று சனி பகவான் பெருமாளிடம் வாக்குக் கொடுத்துள்ளதாக புராண வரலாறு!
  • சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிக்க மகிமை வாய்ந்தது. சிவபெருமான் பாற்கடலில் பொங்கிய விஷத்தைப் பருகிய நாள் சனியாதலால், அன்று விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று வழிபட்டு, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி, எள் நைவேத்யம் செய்து வழி பட்டால் சனியின் அருள் பெறலாம்.
  • சனி பகவானின் வாகனம் காக்கை. அது இறந்து போன முன்னோரின் பிரதி நிதியாகக் கருதப்படுவதால், தினமும் காக்கைக்கு அன்னமிடுவதால் சனியின் பாதிப்பு குறையும். இந்து மதம் தவிர புத்த, ஜைன மதங்களிலும் சனி வழிபாடு உள்ளது. புத்த மதத்தில் சனி தண்டம் ஏந்தியவராய், ஆமை வாகனம் கொண்டவராகவும், ஒன்பது கிரகங்களில் ஏழாம் இடத்தை உடையவராயும் வணங்கப்படுகிறார்.
     
  • சனி காயத்ரி:
  • காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|    தந்நோ மந்த: ப்ரசொதயாத்||
எளிய 'சனிப்போற்றி" துதி:
முனிவர்கள் தேவர் ஏனை
மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வுன்
மகிமையல்லால் வேறுண்டோ?
கனிவுள தெய்வம் நீயே!
கதிர் சேயே! காகம் ஏறும்
சனியனே உனைத் துதித்தேன்
தமியனேற்கருள் செய்வாயே!
நீரினை உண்டெழு மேக வண்ணா போற்றி!
நெடுந்தவத்தில் உறு கமலக் கண்ணா போற்றி!
சூரியன் தன் தவத்தில் வருபாலா போற்றி!
தூய நவக்கிரக்த்துள் மேலா போற்றி!
காரியெனும் பேர் கொள் உபகாரா போற்றி!
காசினியில் கீர்த்தி பெற்ற தீரா போற்றி!
மூரி கொளும் நோய் முகவா முடவா போற்றி!
முதுமணிகள் முண்டகத்தாள் போற்றி! போற்றி!
என்பது வழக்கு மொழி. சனி என்றாலே நம்மையறியாமல் நமக்கு பயம் ஏற்படுகிறது. எதிராளிகளை கோபத்துடன் திட்டும்போது 'சூரியன், சந்திரன்' என்றெல்லாம் கூறாது 'சனியனே' என்று வைகிறோம். ஆக, நம்மை அறியாமலே நாம் சனியின் பெயரை அடிக்கடி உச்சரிக்கிறோம்!
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆகும் சனி அடுத்தடுத்த ராசிகளுக்குப் பெயர்ந்து நன்மை தீமைகளை உண்டாக்குகிறார்.
ஒருவர் பிறந்த ராசிக்கு நான்காமிடத்தில் சனி சஞ்சரித்தால் அது 'அர்த்தாஷ்டம சனி'. பிறந்த ராசிக்கு ஏழில் சஞ்சரிக்கும் காலம் 'கண்டச் சனி' எனப்படும். எட்டாம் ராசியில் இருந்தால் 'அஷ்டமத்துச் சனி'. பிறந்த ராசியிலிருந்து 12, 1, 2 ஆகிய இடங்களில் சஞ்சரித்தால் 'ஏழரை நாட்டுச் சனி'. முதல் சுற்றில் 'மங்கு சனி' எனப்படும். அப்பொழுது மிகவும் கஷ்டப்படும் நிலை வரும். அடுத்த சுற்று 'பொங்கு சனி'. பொன்னும், பொருளும் ஏராளமாகச் சேரும். மூன்றாம் சுற்று 'மரணச் சனி' எனப்படும்.
சனியின் பிடியில் அனைவரும் அகப்பட்டே ஆக வேண்டும்! இதற்கு சிவபிரானும் விதிவிலக்கல்ல! சனியின் தாக்கத்தாலேயே சிவபெருமான் பிச்சை எடுத்தார்; ராமபிரான் சீதையைப் பறிகொடுத்து வாடினார்; சந்திரமதியை அரிச்சந்திரனே வாளால் வெட்டும் நிலை ஏற்பட்டது. பாண்டவர்கள் வனவாசம் சென்றது சனியினாலேயே. ராவணன் நவ கிரகங்களை படிகளாக்கி மிதித்த்ஹபோது சனியின் பார்வை பட்டதாலேயே கேடு காலம் ஆரம்பித்து, மரணமடைந்தான். நளனோ மனைவியை இழந்து, சுய உருவமும் இழந்து பைத்தியம் போல திரிய, "நீ திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபடு" என்று நாரதர் சொன்னதற்கிணங்க, அவன் திருநள்ளாறு சென்று வழிபட, சனியும் அவனை விட்டு விலகி, "நளராஜனே! உன் சரிதம் படித்து, நள்ளாறு வந்து வழிபடும் பக்தர்களுக்கு சனிப் பெயர்ச்சியால் எத்துன்பமும் ஏற்படாது" என்றருளினார்.
  • புதுச்சேரி மாநிலத்தில் காரைக்காலிலிருந்து ஐந்து கி. மீ. தொலைவிலுள்ள திருநள்ளாறு திருத்தலத்தில் சனி கிரகத்தின் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது. இதனாலேயே சனிப் பெயர்ச்சியின் சமயம் இவ்வாலயம் சென்று ஒரு நாளாவது தங்க வேண்டும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன. சனிப் பெயர்ச்சி சமயம் செல்ல முடியாதோர், அதற்கு பதினைந்து நாள் முன்போ, பின்போ சென்று தரிசித்தால் கடுமையான சோதனையும் கடுகாக மாறிவிடும் என்பது ஜோதிடர்கள் கூற்று. இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி, அனுக்கிரக மூர்த்தியாக அபய வரத முத்திரையுடன், அருளாட்சி செய்கிறார்.
  • மதுரை மாவட்டம், தேனியிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள குச்சனூரில் சனீசுவரர் கல்தூண் போன்ற உருவத்தில் பூமி வெடித்து சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.நாமக்கல் அருகிலுள்ள தத்தகிரி முருகன் ஆலயத்தில் அமர்ந்த நிலையில் எட்டடி உயரமான சனீஸ்வரர் மேற்கு நோக்கி ஆலயம் கொண்டுள்ளார். எதிரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஆஞ்சநேயரை வழிபட சனியின் துன்பங்கள் குறையும்.
  • சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் 'வட திருநள்ளாறு' என்ற பெயரில் மனைவியுடன் அற்புதக் காட்சி தரும் சனீஸ்வரருடன், பஞ்சமுக ஆஞ்சநேயரும், விநாயகப் பெருமானும் இணைந்து அருளாட்சி செய்கின்றனர்.
  • சென்னை ஆதம்பாக்கம் ஈ.பி. காலனியில் தரிசனம் தரும் விஸ்வரூப சர்வ மங்கள் சனீஸ்வர பகவான் நெடிதுயர்ந்து கம்பீரமாகக் காட்சி தந்து, தன்னை நாடி வரும் பக்தர்களின் துன்பங்களை துடைத்தெறிகிறார்.
  • மும்பையில் சனீஸ்வரனுக்கு சிறிய தனிக் கோயில்கள் நிறைய உண்டு. நாசிக் அருகிலுள்ள சனி சிங்கணாப்பூரில் சனி பகவான் நான்கடிக்கு மேற்பட்ட உயரத்தில் பாறை வடிவில் சுயம்புவாகக் காட்சி தருகிறார். இந்த சனி பகவானை ஆண்கள் மட்டுமே சுத்தமாகக் குளித்து ஆலயத்திலேயே கிடைக்கும் ஆடை அணிந்து பூசிக்கலாம். பெண்கள் விலகி நின்றே தரிசிக்கலாம். மேற்கூரையும் கிடையாது. சனி பகவான் அனுக்கிரகத்தினால் இவ்வூரிலுள்ள வீடுகள், கடைகள், குளியலறைகளுக்குக் கூட கதவு கிடையாது. இங்கு திருட்டே நடக்காதாம். அவ்வூரில் திருடிக் கொண்டு எவரும் அவ்வூரை விட்டு வெளியேற முடியாதது இன்று வரை நடக்கும் அதிசயமாம்!
  • சனிக்கு உகந்த தானியம் எள்ளானதால் எள் சாதம், நல்லெண்ணெய் தீபம் ஏற்றது. சனிக்கு உகந்தவர் ஆஞ்சநேயர், விநாயகர், திருப்பதி பெருமாள்.
  • ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தி, உளுந்து வடை மாலை சாற்றி, உள்ளன்போடு துதிக்க சனியின் துன்பங்கள் குறையும். புரட்டாசி சனி விரதம் இருப்போர் எள்ளு சாத நிவேதனம் செய்து, விநியோகம் செய்ய வேண்டும். "உன் பக்தர்களை அண்டமாட்டேன்" என்று சனி பகவான் பெருமாளிடம் வாக்குக் கொடுத்துள்ளதாக புராண வரலாறு!
  • சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிக்க மகிமை வாய்ந்தது. சிவபெருமான் பாற்கடலில் பொங்கிய விஷத்தைப் பருகிய நாள் சனியாதலால், அன்று விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று வழிபட்டு, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி, எள் நைவேத்யம் செய்து வழி பட்டால் சனியின் அருள் பெறலாம்.
  • சனி பகவானின் வாகனம் காக்கை. அது இறந்து போன முன்னோரின் பிரதி நிதியாகக் கருதப்படுவதால், தினமும் காக்கைக்கு அன்னமிடுவதால் சனியின் பாதிப்பு குறையும். இந்து மதம் தவிர புத்த, ஜைன மதங்களிலும் சனி வழிபாடு உள்ளது. புத்த மதத்தில் சனி தண்டம் ஏந்தியவராய், ஆமை வாகனம் கொண்டவராகவும், ஒன்பது கிரகங்களில் ஏழாம் இடத்தை உடையவராயும் வணங்கப்படுகிறார்.
     
  • சனி காயத்ரி:
  • காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|    தந்நோ மந்த: ப்ரசொதயாத்||
எளிய 'சனிப்போற்றி" துதி:
முனிவர்கள் தேவர் ஏனை
மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வுன்
மகிமையல்லால் வேறுண்டோ?
கனிவுள தெய்வம் நீயே!
கதிர் சேயே! காகம் ஏறும்
சனியனே உனைத் துதித்தேன்
தமியனேற்கருள் செய்வாயே!
நீரினை உண்டெழு மேக வண்ணா போற்றி!
நெடுந்தவத்தில் உறு கமலக் கண்ணா போற்றி!
சூரியன் தன் தவத்தில் வருபாலா போற்றி!
தூய நவக்கிரக்த்துள் மேலா போற்றி!
காரியெனும் பேர் கொள் உபகாரா போற்றி!
காசினியில் கீர்த்தி பெற்ற தீரா போற்றி!
மூரி கொளும் நோய் முகவா முடவா போற்றி!
முதுமணிகள் முண்டகத்தாள் போற்றி! போற்றி!

குங்குமம் தரும் பயன்


குங்குமம் தரும் பயன்





                                 குங்குமத்தினால் என்ன பயன் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்

ஆன்மிகத்தில் முக்கிய இடம் வசிக்கும் குங்குமம் அழகு சாதன பொருட்கள் வரிசையிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

அழகாக ஆடை அணிந்து இரு புருவங்களுக்கு மத்தியில் நெற்றி வகிட்டில் குங்குமத்தை இட்ட பெண்களை பார்க்கும் போது லஷ்மிகரமாக தோன்றுவதை காணலாம்.

நெற்றியில் குங்குமம் இட்டவர்களை ஹிப்நாட்டிஸம் மெஸ்மெரிஸம் செய்ய முடியாது ஒருவரை அமைதிபடுத்தும் சக்தியும் இதற்கு உண்டு.

படிகாரம் சுண்ணாம்பு தண்ணீர் மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் செய்ய வேண்டும் இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புசத்தாக மாறிவிடும் படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது.

மூளைக்கும் உடலின் பிற பகுதிகளுக்கும் செல்லும் நரம்புகளுக்கு நெற்றிவகிட்டில் குங்குமம் இடுவதால் சக்தி கிடைக்கிறது.

மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் அதை கட்டுப்படுத்திக்கூடிய பகுதி நெற்றி அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.

நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்வதால் தனி பலன் கிடைக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.

சூரியனின் கதிர்கள் நெற்றியில் இட்டுள்ள குங்குமத்தின் மீது படும்போது குங்குமத்துடன் சேர்க்கப்படும் படிகாரம் சுண்ணாம்பு தண்ணீர் மஞ்சள் மற்றும் வைட்டமின் டி அல்ட்ரா கதிர்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து காந்த சக்தியை உருவாக்குகின்றன.

இதனால் குங்குமம் இட்டுக்கொள்பவருக்கு புதிய பவர் கிடைக்கிறது,
குங்குமம் முறையாக தயாரித்தால் தான் இந்த பலன்களை அனுபவிக்க முடியும். கலப்படமான குங்குமத்தை இட்டுக்கொள்வதால் சில பிரச்சினைகள் வரலாம்


லக்கினத்தில் கிரகங்கள்


லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்துடன் சேர்ந்து இருக்கலாம். நல்லத்தையே செய்யும். லக்கினாதிபதி ஒருபாப கிரகத்துடன் சேர்ந்து இருந்து, லக்கினத்தில் ராகு இருப்பாரேயாகில் அவருக்கு தாழ்மை உணர்வு இருக்கும். சூரியன்,சனி, செவ்வாய் ஆகியவை வரண்ட கிரகங்களாகும். இவை ஒருவரின் லக்கினத்திலே இருப்பாரேயாகில் அவர் சற்று ஒல்லியான உருவம் கொண்டவராக இருப்பர். ஒருவரின் லக்கினம் சரராசியாக இருந்து, அதன் அதிபர் சர ராசியில் இருந்தால் அவர் அதிகம் வெளியூர்ப்பயணம் செய்து பணம் சம்பாதிப்பார் எனக் கொள்ளலாம். லக்னம் சரராசியாகி, நவாம்ச லக்கினமும் சர ராசியாகி, நவாம்சத்தில் லக்கினாதிபதி சர லக்கினத்தில் இருப்பாரே யாகில் அவரும் வெளியூர்ப் பயணம் மேற்கொண்டு ஜீவனம் செய்வார் எனக் கொள்ளலாம். ஒருவருக்கு லக்கினத்தில் பல பாப கிரகங்கள் இருப்பாரேயாகில் அவர் வாழ்க்கையில் பல துக்ககரமான  சம்பவங்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும். லக்கினத்திற்கு இருபுறமும் ராகுவும், சனியும் அதாவது 12, 2 ஸ்தானங்களில் இருப்பார்களேயாகில் அவர்களுக்கு திருட்டு பயம் இருக்கும். அதேபோல் ராகுவும், செவ்வாயும் அல்லது சனியும் செவ்வாயும்  லக்கினத்திற்கு 2, 12 வீடுகளில் இருந்தால் திருட்டு பயம் இருக்கும்.
ஒருவரின் உறுவ அமைப்பைப் பற்றிப் பார்க்கும்போது சூரியன் லக்கினத்தில் இருந்தால் நல்ல உடல் அமைப்பைக் கொடுப்பார். சந்திரன் இருந்தால் உடல் அமைப்பு நல்ல விகிதத்தில் இருக்கும். சிலரைப் பார்த்து இருப்பீர்கள். அவர்களுக்கு கை, அல்லது கால் நீண்டு இருக்கும். அல்லது முகம் மட்டும் நீண்டு இருக்கும். சந்திரன் லக்கினத்தில் இருப்பாரேயாகில் உடல் அமைப்பு சரியாக இருக்கும்.  செவ்வாய் இருந்தால் நல்ல ஆரோக்கியமான, உறுதியான உஷ்ணப் பாங்கான உடல் அமைப்பைக் கொடுப்பார். புதனும் லக்கினத்தில் இருந்தால் நல்ல உறுவமைப்பைக் கொடுப்பார். குரு இருப்பாரேயாகில் நல்ல மதிப்பை உண்டாக்கும் வகையில் உறுவ அமைப்பைக் கொடுப்பார். சுக்கிரன் இருப்பாரேயாகில் கவர்ச்சிகரமான உறுவ அமைப்பைக் கொடுப்பார். ஆனால் அந்த உறுவமைப்பில் பெண்மை கலந்து இருக்கும். சனி இருப்பாரேயாகில் நல்ல கறுமையான கூந்தலைக் கொடுப்பார். குருகிய மார்பு அமைப்புடன் சிறிது சோம்பேரித்தனமாக இருப்பார்.
ஒருவரின் மனதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சந்திரனின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும். சந்திரன்தான் மனதுக்குக் காரகம் வகிப்பவர். சந்திரன் சுபகிரகங்களான புதன், குரு, சுக்கிரனுடன் சேர்ந்து இருக்கலாம். புதனுடன் சேர்ந்து இருந்தால் நியாய உணர்வுடன் இருப்பர். நியாயத்தைப் பேசுபராக இருப்பர். புதன் அடிக்கடி மாறும் குணமுள்ளவரதலால் சந்திரனுடன் சேரும்போது இவர் தன் எண்ணங்களை மாற்றக் கூடியவராக இருப்பர். சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் எப்போதும் கவலை கொண்டவராக இருப்பார். செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் பெண்களாக இருப்பின் மாதவிலக்கு சம்மந்தமான பிரச்சனை இருக்கும். அவர்கள் மன உறுதியுடனும் தைரியத்துடனும் இருப்பர். சந்திரனும், ராகுவும் சேர்ந்து இருந்தால் அதுவும் லக்கினத்தில் இருந்தால் Hysteria என்னும் மன நோய் இருக்கும். சந்திரனும்
குருவும் சேர்ந்து இருந்தால் நல்ல எண்ணங்களோடு மன உறுதியுடன் இருப்பர். பொதுவாக சந்திரனும் ராகுவும், சனியுமோ அல்லது செவ்வாயுமோ இருக்குமேயாகில் அவர்கள் நிச்சயமாக ஒரு emotional Character ஆக இருப்பர். பாப கிரகங்கள்
சந்திரனுடன் சேராமல் இருப்பது நல்லது. சந்திரனும் சூரியனும் சேர்ந்து இருந்தால் மிகவும் வலுவான மனதைக் கொண்டவராக இருப்பார். அதே சமயம் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் கொண்டவராகவும் இருப்பார். அம்மாவாசை அன்றுதான் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும். அப்போது பிறந்தவர் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் கொண்டவராக இருப்பர்.
ஒருவரின் ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோ லக்கினத்தில் இருக்குமேயாகில் அவர்களுக்கு நரம்பு சம்மந்தமான தொந்தரவுகளிருக்கும். சூரியன் உடலுக்கும், சந்திரன் மனதிற்கும் காரகம் வகிப்பவர்கள் என்று நாம் கூறி இருக்கிறோம்.
சூரியனோ அல்லது லக்கினமோ வர்க்கோத்தமத்தில் இருந்தால் முதல் வீடு பலம் பொருந்தியதாகக் கருதப் படும். வர்க்கோத்தமம் என்றால் என்ன? வர்க்கோத்தமம் என்பது ராசியிலும், நவாம்சத்திலும் ஒரு கிரகமோ அல்லது வீடோ ஒரே இடத்தில் இருப்பது. ஒருவருக்கு சூரியன் ராசியில் மேஷத்தில் இருக்கிறார் எனக் கொள்வோம். நவாம்சத்திலும் மேஷத்தில் சூரியன் இருப்பாரேயாகில் அது வர்க்கோத்தமம் எனப்படும். அதாவது சூரியன் ராசியிலும், நவாம்சத்திலும் மேஷத்தில் இருக்கிறார். இது சூரியனுக்கு மட்டுமல்ல எந்த கிரகமாக இருந்தாலும் ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருந்தால் அது வர்கோத்தமம் எனப்படும். லக்கினம் வர்கோத்தமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று கூறலாம். சூரியன் வர்கோத்தமத்தில் இருந்தால் அவர் உடல் வலு உள்ளவராகக் கருதலாம்.
பொதுவாக நல்ல கிரகங்கள் லக்கினத்தில் இருப்பது நல்லது. பாப கிரகங்கள் இருப்பது அவ்வளவு நல்லது இல்லை. நாம் இத்துடன் முதல் லக்கின பாவத்தை முடித்துக் கொள்வோம். இனி 2-ம் பாவத்தைப் பற்றிப் பார்ப்போம்.
இரண்டாம் வீட்டை அதன் அதிபதியைக் கொண்டும், அதில் இருக்கும் கிரகங்களை வைத்தும், அந்த வீட்டைப் பார்க்கும் கிரகங்களை வைத்தும் பலன் கூறவேண்டும். 2-ம் வீட்டை வைத்து எந்தெந்த பலங்களைக் கூறலாம் என்பதைப் பார்ப்போம்.
2-ம் வீடு குடும்பத்தைக் குறிக்கிறது. குடும்பத்தில் அமைதி இருக்குமா அல்லது குழப்பம் இருக்குமா என்பதை இந்த வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும். ஆகவே இதை குடும்பஸ்தானம் என்று நாம் குறிப்பிடுகிறோம். ஒருவருக்குக் குழந்தை
பிறக்கிறது எனக் கொள்வோம். அதாவது அந்த வீட்டில் ஒரு நபர் கூடி இருக்கிறார் என்றுதானே இதற்குப் பொருள். அதனால்தான் குழந்தை பிறப்பை இந்த வீட்டை வைத்துக் கூறுகிறோம். அடுத்ததாக இதை தனஸ்தானம் என்று கூறுவார்கள். அதாவது ஒருவருக்குப் பணவரவு நன்றாக இருக்குமா அல்லது சொற்பமாக இருக்குமா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவரின் கண்பார்வை நன்றக இருக்குமா அல்லது பார்வையில் கோளாறு இருக்குமா என்பதையும் இந்த வீட்டையும் வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவரின் வாக்கு வன்மையையும் இதை வைத்துத்தான்
கூறவேண்டும். ஒருவர் சிரிக்கச், சிரிக்கப் பேசுவர். ஒருவர் எப்போதுமே ஒருவரையும் மதியாமல் பேசுவர். சிலர் திக்கித்திக்கிப் பேசுவர். ஆக ஒருவரின் நாக்கு வன்மையை இதைவைத்துத்தான் கூறவேண்டும். ஒருவரின் வங்கியில் உள்ள பணம், Liquid Cash என்று சொல்லக் கூடிய கையிருப்புப் பணம், நகைகள், Investments ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவருக்குக் கல்யாணம் ஆகவில்லையா? ஏன் என்பதையும் நாம் இந்த இரண்டாம் வீட்டை வைத்துத்தான் ஆராய வேண்டும். இதைத்தவிர வேறொன்றும் கிடையாதா? உண்டு. இளைய சகோதரத்தின் மரணம், இளைய சகோதரத்தின் வீண் செலவுகள் ஆகியவற்றையும் கூறலாம். எப்படி? 3-ம் வீடு இளைய சகோதரத்தைக் குறிக்கிறது. 3-ம் வீட்டிற்குப் பன்னிரெண்டாம் வீடு
2-ம் வீடு அல்லவா? ஆக 2-ம் வீடானது இளைய சகோதரத்தின் மரணம், வீண் செலவுகள், ஆகியவற்றையும் இந்த வீடு குறிக்கிறது.
4-ம் வீடு தாயாரைக் குறிக்கிறது. 4ம் வீட்டிற்குப் 11-ம் வீடு 2-ம் வீடு அல்லவா? ஆக தாயாரின் லாபங்களையும் இது குறிக்கிற்து. ஒருவரின் 7-ம் வீடு கணவன் அல்லது மனைவியைக் குறிக்கிறது. 7-ம் வீட்டிற்கு 8-ம் வீடு 2-ம் வீடல்லவா? ஒருவருக்குக் கன்னியா லக்கினம் எனக் கொள்ளுங்கள். இவருக்கு 7-ம் வீடு மீனம். இது இவருடைய மனைவியைக் குறிக்கிறது. 7-ம் வீட்டிற்க்கு 8-ம் வீடு எது? துலாம் அல்லவா? இந்த 8-ம் வீட்டில் குரு இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். அதாவது ஜாதகரின் தனஸ்தானத்தில் குரு இருக்கிறார். குரு எதையும் குறைவில்லாமல் கொடுப்பவர். ஆக இவருக்குப் பணம் குறைவில்லாமல் இருக்கும் எனக் கொள்ளலாம். இவருக்குக் குழந்தை பாக்கியமும் குறைவில்லாமல் இருக்கும் எனவும் கொள்ளலாம். இவரின் மனைவிக்கு இது 8-ம் இடம் என்றும் கூறினோமல்லவா? 8-ம் இடம் என்ன? ஆயுள் ஸ்தானம். ஆக இந்த 8-ம் இடத்தில் குரு இருப்பதால் இவரின் மனைவிக்கு நீண்ட ஆயுள் இருக்குமெனக் கூறலாம். இவ்வாறாக ஒரு வீட்டை வைத்து ஜாதகர் மட்டுமில்லாது மற்றவரின் பலன்களையும் கூறமுடியும். 2-ம் வீட்டை வைத்து ஒருவரின் மூத்த சகோதரத்தின் வீடு, வாசல் ஆகியவற்றைக் கூறமுடியும். மூத்த சகோதரத்தைக் குறிப்பது 11-ம் வீடு. 11-ம் வீட்டிற்கு 4-ம் வீடு ஜாதகரின் 2-ம் வீடல்லவா? ஆக 2-ம் வீட்டை வைத்து ஜாதகரின் ஸ்திரசொத்துக்கள், கல்வி ஆகையவற்றயும் கூறமுடியும்

31 December 2012

பரசுராம அவதாரம்

Picture
பெருமாளின் அவதாரங்களில் இது 6வது அவதாரமாகும்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.


பிரம்மதேவருடைய புத்திரர் அத்திரி மகரிஷி. அவருக்கு ஒருநாள் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரில் உதித்தவன் சந்திரன். அவனை பிரம்மா, பிராமணர்கள், ஒளஷதி மற்றும் நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆக்கினார். இந்த சந்திர வம்சத்தில் தோன்றியவர்களில் காதிராஜன் என்ற மன்னன் பிரசித்தி பெற்றவன். அவனுக்கு சத்தியவதி என்ற பெண் பிறந்தாள். அந்தப் பெண்ணை பிருகு புத்திரரான ரிசிகன் என்ற பிராமணன் தனக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி யாசித்தான். சத்தியவதிக்கு இவன் ஏற்ற கணவன் அல்ல என்று எண்ணிய காதிராஜன், எப்படியாவது அவனைத் தட்டிக் கழிக்க ஓர் உபாயம் செய்தான். அவன் ரிசிகனைப் பார்த்து, பிராமணரே! நீர் என் பெண்ணுக்கு நான் கேட்கும் பொருளைக் கன்னிகா தானமாகத் தரமுடியுமா? என்று வினவினான். என்ன திரவியம் கேட்கிறீர், சொல்லும் என்றான் ரிசிகன். ஆயிரம் குதிரைகள் நீர் கொண்டு தர வேண்டும். அந்தக் குதிரைகளின் காதுகளில் ஒன்று பச்சைப் பசேல் என்றிருக்கும். மற்ற அங்கங்கள் எல்லாம் மிகவும் தூய வெள்ளையாக இருக்கும். இப்படிப்பட்ட தெய்வ ஜாதி குதிரைகளைக் கொண்டு வந்து கொடுத்தால் நீர் திருமணம் செய்ய நான் சத்தியவதியைக் கன்னிகாதானம் செய்கிறேன் என்றான் காதிராஜன். ரிசிகன் நேரே வருணனிடம் சென்று அப்படிப்பட்ட குதிரைகள் பெற்றுக்கொண்டு வந்து காதிராஜன் முன்பு நிறுத்தினான். இதைக் கண்டதும் காதிராஜன், ஆகா! நான் எது சாத்யமாகாது என்று நினைத்துச் சொன்னேனோ அதனையே இவன் எளிதாகச் செய்து முடித்து விட்டான். இனியும் இவனைப் பரிசோதனைக்கு ஆளாக்கினால் ஓர் அந்தணனுடைய சீற்றம், சாபங்களுக்கு இலக்காக நேரிடும்! என்று சிந்தித்தான். சத்தியவதியை அவனுக்குத் திருமணம் செய்து தந்தான். கொஞ்ச காலம் சென்றதும் சத்தியவதிக்கு தனக்கு ஓர் உத்தமமான பிள்ளை பிறக்க வேண்டும் என்று ஆசை வந்தது.

அதே சமயம் சத்தியவதியின் தாய் காதிராஜனுடைய பத்தினிக்கும் அதே ஆசை ஏற்பட்டது. ஆனால் தனக்குப் பிறப்பவன் பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும் என நினைத்தாள். அவர்கள் இருவரின் ஆசைகளையும் நிறைவேற்றும் பொருட்டு ரிசிகன் யாகப் பிரசாதமான இரு கவளை அன்னத்தை வீட்டிற்கு எடுத்து வந்தான். அவைகளில் ஒன்றில் உத்தமமான ஞானக்குழந்தை பிறக்குமாறு மந்திர உச்சாடணம் செய்தான். மற்றொன்றில் தன் மாமியார் விரும்பும் பராக்கிரமம் மிகுந்த பிள்ளை பிறக்க வேண்டும் என்று மந்திர ஆவாகனம் செய்தான். உத்தமனும் ஞானியும் பிறக்குமாறு ஓதிய முதல் கவளை அன்னத்தை விவரமாகச் சொல்லி சத்தியவதியை உண்ணும்படி சொன்னான். மற்ற ஒன்றை தன் மாமியாரிடம் கொடுக்கும்படி சொன்னான். அன்னக் கவளைகளை அளித்து விட்டு ரிசிகன் ஆற்றுக்கு குளிக்கப் போனான். உள்ளூர தனக்கு ஒரு அந்தணனாக ஞானியாகப் பிள்ளை பிறப்பான் என்றும், தன் மாமியாருக்கு பராக்கிரமம் மிக்க க்ஷத்திரிய வீரன் பிறப்பான் என்றும் நம்பிக்கை இருந்தது. குளித்து விட்டு வீட்டுக்கு வந்தான்.ரிசிகனுக்குப் பிள்ளையாக ஜமதக்னி பிறந்தார். சத்யவதி பின்னர் தன் வாழ்க்கையைத் துறந்து கௌசிகா என்ற நதியாக மாறிவிட்டாள். ஜமதக்னி ரேணு என்பவருடைய புத்திரியான ரேணுகா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வசுமனன் முதலான புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் ராமன் என்பவன் கடைசியாகப் பையனாகப் பிறந்தார். அவன் பரந்தாமனுடைய அம்சமாக அவதரித்தான். அவனே பூலோகத்தில் இருபத்தொரு க்ஷத்திரியப் பரம்பரையை வேரோடு அழித்தவன். இவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து பரசு என்ற கோடரியைப் பெற்ற காரணத்தால் இவனுக்குப் பரசுராமன் என்ற பெயர் ஏற்பட்டது. தாய் தந்தையரிடம் மிகவும் அன்பு கொண்டவன் பரசுராமன். ரேணுகாதேவியின் மற்றொரு பெயர் சீலவதி என்பதாகும். அவள் தன் கணவனைத் தவிர உலகில் வேறு தெய்வமே கிடையாது என்ற கொள்கையும் நினைப்பும் கொண்டவள். தினமும் அவள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அங்கே மண்ணைக் கையில் எடுத்துப் பிசைவாள். நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் நான் பிசைந்த மண் அழகியதொரு மண்குடமாக மாறட்டும்! என்பாள். அது குடமாக மாறும். பின்பு அதில் தண்ணீர் மொண்டு வருவாள். இது அவளுக்கு வாடிக்கை. இப்படிக் கொண்டு வந்த தண்ணீரைத்தான் அவள் கணவராகிய ஜமதக்னி முனிவருடைய பூஜைக்கு வழங்குவாள்.

சூரிய குலத்திலே கேகய நாட்டை ஆண்டு வந்த கிருதவீரியன் என்பவனுக்கும் சுனந்தை என்பவளுக்கும் கார்த்தவீர்யார்ச்சுனன் என்பவன் பிறந்தான். அவன் பிறக்கும் போது கைகள் கிடையாது. அதைக் கண்டு பெற்றோர்கள் மிகவும் வருந்தினார்கள். தன் கையிலாக் குறை நீங்க கார்த்தவீர்யார்ச்சுனன் தத்தாத்திரேயரையே உபாசித்து வந்தான். தத்தாத்திரேயர் என்பவர் அத்திரி முனிவருடைய புதல்வர். அத்திரிமுனி பரந்தாமனிடம் அவரே வந்து தனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என விரும்பினார். ஆகவே ஸ்ரீஹரி அம்சமாகத் தத்தாத்திரேயர் அவதரித்தார். அவரைத் தான் அவன் வழிபட்டு வந்தான். அவரை நோக்கித் தவம் செய்த காரணத்தால் அவனுக்கு ஆயிரம் கைகள் முளைத்தன. அதுமட்டுமல்ல. அவனைக் கண்டால் பகைவர்கள் பயப்படும் தன்மையையும் இந்திரிய சக்தி, செல்வம், பொருள் மற்றும் யோகஞான சக்திகளையும் அவன் பெற்றான். இத்தகைய சீரும் சிறப்பும் பெற்றதினால் மிகுந்த செருக்குடன் இருந்தான். தத்தாத்திரேயரிடம் பெற்ற வரத்தால் அவன் காற்றைப் போல எங்கும் தடையின்றித் திரியும் வல்லமையும் பெற்றிருந்தான். அதனால் மூன்று உலகங்களிலும் சஞ்சரித்து வந்தான். ஒரு சமயம் நர்மதா நதியில் தன் பத்தினிகளுடன் நீராடச் சென்றான். தன் ஆயிரம் கைகளால் நீரை ஏரி போல் தேக்கி அதில் நீராடி மகிழ்ந்தனர். நதியின் மேற்புறமாக திக் விஜயம் செய்வதற்காக இராவணன் ஆற்றில் வெள்ளமே இல்லாத இடத்தில் தன் லிங்கத்தை வைத்து சிவபூஜை செய்தான். நீராடி முடித்ததும் கார்த்தவீரியார்ச்சுனன் தான் அணைபோல் வைத்திருந்த தன் ஆயிரம் கைகளை எடுத்ததான். அப்போது நீர் வேகமாக பிரவாகம் எடுத்து பூஜை செய்து கொண்டிருந்த ராவணனின் பொருட்களை அடித்துச் சென்றது. இதை அறிந்த ராவணன் கார்த்தவீரியனோடு சண்டைக்குப் போனான். கார்த்தவீரியனோ ராவணனை தோற்கடித்து தன் பட்டணமான மாகிஷ்மதிக்குக் கொண்டு சென்று சிறைவைத்தான். இதை அறிந்த புலஸ்தியர் கார்த்தவீரியனை மிகவும் வேண்டிக் கொண்டு ராவணனை மீட்டுச் சென்றான்.

ஒரு நாள் தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாடப் போனான் கார்த்தவீரியன். வேட்டையை முடித்துவிட்டு திரும்புகையில் ஜமதக்னி முனிவருடைய ஆசிரமத்திற்கு வர நேர்ந்தது. பசியால் வாடிய அவர்களைக் கண்ட முனிவர் அறுசுவை உண்டியும், பானமும் கொடுத்தார். மற்றும் பல சவுகர்யங்களையும் செய்து கொடுத்தார். தவிர ஆசிரமத்தில் ஏராளமான செல்வமும் இருப்பது கண்டு கார்த்தவீரியனுக்கு பெரிய ஆச்சர்யம் ஏற்பட்டது. முனிவர் ஆசிரமத்தில் நின்ற தேவ பசுவாகிய காமதேனுவால்தான் அவருக்கு அனைத்தும் கிடைக்கிறது என்று தெரிந்து கொண்டான். அந்த பசுவை ஜமதக்னி முனிவரிடம் தனக்கு பரிசாகத் தரும்படிக் கேட்காமல் முனிவரும், அவர் பிள்ளைகளும் இல்லாத சமயத்தில் சேவகர்களை அனுப்பி அதைத் தூக்கிக் கொண்டு சென்றான். முனிவர் ஆசிரமத்திற்கு திரும்பி வந்த நேரம் காமதேனு அங்கு இல்லை. கார்த்தவீரியன் தான் அதை கவர்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த முனிவர், தனது புதல்வர் பரசுராமரிடம் கூறினார்.  இதைக் கேள்விப்பட்ட பரசுராமர் தன் கோடாரி, வில், அம்புகளுடன் நேரே கார்த்தவீரியன் பட்டணமான மாகிஷ்மதிக்கு விரைந்தார். அங்கே கார்த்தவீரியனின் சேனைகள் அனைத்தையும் அழித்தார். கார்த்தவீரியனும் அவருடன் சண்டைக்கு வந்தான். ஆயிரம் கைகளில் ஐந்நூறு வில் ஏந்தி பாணக்கூட்டத்தை அவர் மீது வீசினான். அவனுடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் தன் தபோ பலத்தால் அறுத்து எறிந்ததோடு, அவனுடைய சிரசையும் சீவித் தள்ளினார். பிறகு காமதேனுவையும் அதன் கன்றையும் மீட்டு ஆசிரமத்தில் சேர்ப்பித்தார் பரசுராமர். நடந்ததை எல்லாம் தன் தந்தையிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு அவர் மிகவும் வருந்தினார்.

ராமா, காரணம் இல்லாமல் ஓர் அரசனைக் கொன்று விட்டாயே! அரசனைக் கொல்வது ஓர் அந்தணனை வதை செய்வதைவிடக் கொடிய குற்றம். அரசன் என்பவன் ஆண்டவனின் அம்சம் என்று சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன. செய்த தீமையை மறந்து தீயவர்களை மன்னிப்பது தான் பிராமண தருமம். மேலும் நாம் பொறுமையை கடைபிடிப்பதால் தான் அனைவராலும் பூஜிக்கப்படுகிறோம். இத்தகைய பெரிய பாவத்தை செய்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரைக்குப் போய் பல புண்ணிய ÷க்ஷத்திரங்களை தரிசனம் செய்துவிட்டு வா! என்றார். தந்தையின் அறிவுரை கேட்டு அதன்படி பரசுராமர் ஓராண்டு காலம் தல யாத்திரை செய்தார். பிறகு ஓர் நாள் நீர்நிலைக்குச் சென்ற ரேணுகாதேவி தரையில் குனிந்து குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள். அப்படி அள்ளும் போது ஓர் தேவபுருஷன் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள். இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தாள். கற்பின் நிறைக்குப் பதில் களங்கம் தெரிந்தது. கூட்டி எடுத்த கை மண்குடம் ஆகவில்லை. ஜமதக்னி முனிவர் தன் பூஜைக்குத் தண்ணீர் கொண்டுவரச் சென்றவள் இன்னும் வரவில்லையே என்று சிந்தித்தார். தன் ஞானக் கண்ணால் அவள் கற்புக்கு களங்கம் ஏற்பட்டதை அறிந்தார். சினம் பொங்க தன் புதல்வர்களை வரவழைத்து அழுக்கு உள்ளம் கொண்ட தாயைக் கொல்லுமாறு கர்ஜித்தார். மற்ற பிள்ளைகள் அனைவரும் தயங்கினர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப பரசுராமர் தன் பரசு என்ற ஆயுதத்தை எடுத்தார். அன்னையின் மீது வீசினார். அவள் தலை கீழே விழுந்தது. கூடவே சகோதரர்களின் தலைகளும் உருண்டன. ஜமதக்னி முனிவருக்கு சாந்தம் வரவில்லை என்றாலும் தன் சொல்லைக் காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டு பார்த்தார். ராமா! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். பரசுராமர் பகவான் அம்சம். ஒரு பிரச்சனைக்குரிய பரிதாபமும் பாவப்பட்டதுமான அவதாரம் ஆயிற்றே. இறந்த என் தாயும் சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும். அதோடு நான் அவர்களைக் கொன்றேன் என்ற நினைப்பின் நிழல்கூட அவர்களுக்குத் தெரியக்கூடாது என்று வரம் கேட்டார். மறுபடி அன்னை உயிர்த்தெழுந்ததை முன்னிட்டு ரேணுகாதேவியேதான் மாரி அம்மன் என்றும், தலை மட்டும் மாரியம்மன் கோயில்களில் வைத்து பூஜிக்கப்படுவதற்கு பரசுராம அவதார நிகழ்ச்சியே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஜமதக்னி முனிவர் சம்பதக்கினி முனியானார். இறந்த தாயும் சகோதரர்களும் உயிர்பெற்று எழுந்தனர். தூங்கி விழித்தது போன்ற உணர்வு தவிர வேறு முந்திய நிகழச்சி எதுவும் அவர்கள் நினைவில் இல்லை. தம் தந்தையை இழந்த கார்த்தவீரியன் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரிடமும், பரசுராமரிடமும் பகைமை பாராட்டி வந்தார்கள். அதனால் பழிக்குப் பழி வாங்க தீர்மானித்தார்கள்.

ஒரு நாள் ஜமதக்னி முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். பரசுராமனும் தன் சகோதரர்களுடன் ஆசிரமத்தை விட்டு வெளியே போயிருந்தான். ரேணுகா தேவி மட்டும் ஆசிரமத்தில் இருந்தாள். அப்போது ஆசிரமத்தில் கார்த்தவீரியனின் புதல்வர்கள் ரகசியமாக நுழைந்தனர். அவர்களில் ஒருவன் கையில் வெட்டரிவாளுடன் முனிவர் பக்கம் போகும் போதே ரேணுகா தேவி சிரசு வெடிக்கும்படி கதறினாள். அரசகுமாரர்களே! அவர் ஓர் அந்தண சிரேஷ்டர். மகா முனிவர். தயவுசெய்து அவரை வெட்டி வீண்பழிக்கு ஆளாகாதீர்கள் என்று அலறினாள். நச்சுப்பகை கொண்ட அந்த ராஜன்மார்களுக்கு அவளுடைய கூக்குரல் நரகமாக இருந்தது. ஓங்கின வாள் மேலும் உயர்ந்தது. ஒரே வெட்டு, ஜமதக்னி முனிவர் தலை தரையில் உருண்டது. சீலவதியின் கண்ணீர் ரத்தமும் கரை புரண்டு தரையை மட்டுமா நனைத்தது? தரும தேவதைகளையும் தலை முழுகச் செய்தது. கொய்த தலையை கொடியவர்கள் கொண்டு போனார்கள். அவளுடைய அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அவரது நாடி நரம்புகள் துடித்தன. அப்பொழுதே இந்தக் கொடிய க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார்.  பரசுராமர் மாகிஷ்மதி நகருக்கு விரைந்தார்.அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். ரத்த ஆறு ஓடியது. குரு÷க்ஷத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. தன் தகப்பனார் தலையைக் கொண்டு வந்து உடலுடன் சேர்ந்தார். ஈமச் சடங்குகளைச் செய்தார். பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் அற்றுப் போகும்படி இருபத்தொரு திக்விஜயம் செய்து வேரறுத்தார். அந்தப் பாவம் தீர வேள்வி செய்தார். அந்த வேள்வியில் கிழக்குத் திசையை அத்துவரியவுக்கும், வடக்கை உதகாதாவுக்கும், மத்திய தேசத்தை ஆசியபருக்கும், ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்டாவுக்கும் அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தை சதசியர்களுக்கும் அளித்தார். சரஸ்வதி நதியில் சுபவிருத ஸ்நானம் செய்தார். பரசுராமரால் பூஜிக்கப்பட்ட ஜமதக்னி முனிவர், ஞான தேசம் பெற்று சப்தரிஷி மண்டலங்களில் ஏழாவது ரிஷியாக விளங்கினார். தற்சமயம் அவர் மகேந்திர பர்வதத்தில், சித்தர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பாராட்டும் புகழும் பெற்று அங்கு தவக்கோலத்தில் சிரஞ்சீவியாக இருக்கிறார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. ராமஅவதாரத்திற்கு முன்பு சூர்ய குலத்தில் பிறந்தவன் மூலகன் என்ற அரசன். பூலோகத்தில் அப்போது ராஜவம்சம் இல்லாமல் அழித்துவிட பரசுராமர் புறப்பட்டார். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பு அந்த வம்சத்தை தழைக்கச் செய்தவன் மூலகனே. மூலகனுக்குப் பின்னர் தசரதன், அளபடி, கட்டுவாள்கள், தீர்க்கபாடு, ரகு, அவன் மகன் அஜன். இந்த அஜனின் மகன் தான் ராமரின் தந்தையான தசரதன். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது.

ராமாவதாரத்தில் பரசுராமர்: ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவதையும் ராமபாணத்திற்கு இரையாக்கிவிட்டு, தாம் பிராமணர் என்ற நிலையில், நீ எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார் பரசுராமர். இலங்கையின் அசோகவனத்தில் சீதை சிறை இருந்த சமயம் இதை நினைவுபடுத்தி ராவணனுக்கு புத்திமதி கூறுகிறாள். தூர்த்தனே! கார்த்த வீரியார்ச்சுனனுக்கு ஆயிரம் கைகள் இருந்தன. அவன் உனது இருபது தோள்களையும் பிடித்து உலுக்கி சண்டையிட்டு வென்றான். அப்பேற்பட்ட கார்த்தவீரியனைப் பரசுராமர் கொன்றார். அதே பரசுராமர் என் பர்த்தவிடம் தோற்றுப் போனார். ஆகையினாலே மகாவீரராகிய எனது கணவருடைய வீரம், புகழ், பெருமை இவைகளை நீ அறியாமல் என்னிடம் வம்பு செய்யாதே. மீறி நீ செய்தால் அழிந்து விடுவாய்! ஜாக்கிரதை என்கிறாள் சீதாப்பிராட்டி.

மகாபாரதத்தில் பரசுராமர்: காசிராஜாவிற்கு அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்று மூன்று பெண்கள். இவர்களுக்கு சுயம்வரம் செய்து வைக்க காசிராஜன் ஏற்பாடு செய்தார். பீஷ்மர் அந்த மண்டபத்திற்கு வந்தார். இந்த மூன்று பேர்களையும் கவர்ந்து வந்தார். அவர்களில் அம்பிகை, அம்பாலிகை இருவரையும் தன் தம்பி விசித்திர வீரியனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அம்பையோ பீஷ்மருடைய தம்பியைத் திருமணம் செய் மறுத்து விட்டாள். தான் சாலுவ மன்னனை விரும்புவதாகக் கூறினாள். அதனால் பீஷ்மர் அவளைச் சாலுவனிடம் அனுப்பினார். ஆனால் அவனோ அவளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவனிடமிருந்து திரும்பிய அம்பை மீண்டும் பீஷ்மரை சந்தித்தாள். சாலுவ மன்னன் என்னை மணம் செய்து கொள்ள மறுக்கிறான். ஆக சுயம்வரத்தின் போது என்னைக் கவர்ந்து வந்த நீர்தான் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள். பீஷ்மரோ தாம் ஏற்கனவே திருமணம் செய்து கொள்வதில்லை என சபதம் ஏற்றிருப்பதால் தாம் அவளை மணம் செய்து கொள்ள முடியாது என வருத்தம் தெரிவிக்கிறார். பீஷ்மர் தன்னை மணக்க மறுத்ததும், அவருக்கு குருவாகிய பரசுராமரை அம்பை அணுகினாள். தங்கள் சீடர் என்னை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கி வந்து விட்டார். ஆக, அவர் என்னை சம்பிரதாயமாகக் கல்யாணம் செய்வதுதான் க்ஷத்திரிய மரபு. தாங்கள் என்னை அவர் மணந்து கொள்ள உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள். பரசுராமர் அதற்கு சம்மதித்து பீஷ்மரைச் சந்தித்து அம்பையை மணம் செய்யும்படி வற்புறுத்திப் பார்க்கிறார். பீஷ்மர் அதற்கு மசியவில்லை என்ற உடனே போர் செய்தார். பீஷ்மர், நான் காக்கும் விரதத்தை முன்னிட்டு என் குருவுடன் மோதி செத்தாலும் சாவேனே ஒழிய, விரதத்தை மீறி நரகத்திற்குப் போவதற்காக உயிருடன் வாழ மாட்டேன் என்று பரசுராமருடன் ஆவேசமாய் போர் செய்தார். போரில் பரசுராமர் தோற்றார். பின்பு தவம் செய்யச் சென்றார். மகாபாரதத்தில் மற்றொரு சமயமும் பரசுராமர் வருகிறார்.

பரசுராமர் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்தார். அதில் கர்ணன் தன்னை ஒரு பிராமணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் வில்வித்தை கற்றான். காரணம் க்ஷத்திரியர்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காதே. ஒருநாள் கர்ணனுடைய தொடையில் தலை வைத்து பரசுராமர் தூங்கிக் கொண்டு இருந்தார். அதுசமயம் இந்திரன் ஒரு வண்டு உருவம் எடுத்தான். கர்ணனுடைய துடையைத் துளைத்துக் கொண்டே சென்றான். கர்ணனுக்கு ஒரே கடுப்பு, வேதனை. அவன் துடையில் ரத்தம் கசிந்து பெருகிக்கொண்டு இருந்தது. கசிந்த ரத்தத்தின் ஈரம் பரசுராமர் கழுத்தில் படவே தூங்கிக் கொண்டு இருந்த அவர் எழுந்தார். வண்டுக்கடியை வலிதாங்க முடியாத சூழ்நிலையிலும் பொறுத்துக் கொண்டே இருந்த நீ நிச்சயமாக ஒரு பிராமணனாக இருக்கமுடியாது. நீ உண்மையில் ஒரு க்ஷத்திரியன் தானே! உண்மையைக் கூறிவிடு என்று அதட்டிக் கேட்டார் பரசுராமர். கர்ணன் தான் ஒரு க்ஷத்திரியன் என்பதை ஒத்துக் கொண்டான். பொய் சொல்லி அவரை ஏமாற்றியதை அவரால் ஜீரணிக்க முடியாமல் அதற்காக ஒரு சாபத்தை அவர் கொடுத்தார். கர்ணா! நீ என்னிடம் பொய் சொல்லி வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய். அதனால் நான் கற்றுக் கொடுத்த வில்வித்தை உனக்குத் தக்க தருணத்தில் உதவாமல் போகக் கடவது! என்று சபித்தார். அந்த சாபத்தை குரு÷க்ஷத்திரக்களத்தில் நினைத்து நினைத்து கர்ணன் வருந்தினான். அந்த சாபத்தால் கற்ற வித்தை கர்ணனுக்கு கை கொடுக்கவில்லை என்பதை சொல்லுக்கு வில்லி, உதவாமல் மழுவாளி உரை செய்த சாபத்தை உற உன்னினான் என்று இயம்புகிறார்.

கோயில்கள்: பரசுராமருக்கென்று தனிக் கோயில்கள் ஒரு சிலவே இந்தியாவில் உள்ளன. பரசுராமர் தன் கோடாரியைக் கொண்டு மேற்கு கடற்கரையில் சீர்படுத்திய பகுதியே இன்றைய கேரளா என்பர். பரசுராம ÷க்ஷத்திரம் என இன்றும் அழைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் விமானநிலையம் அருகே பரசுராமருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் சிக்மகளூர் அருகே நஞ்சன்கட் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கண்டேஸ்வரர் கோயில் பரசுராமர் வழிபட்ட தலமாகும். இது ஒரு சிவாலயம் தன் தாய் ரேணுகாவைக் கொன்ற பாவம் தீர சிவபூஜை செய்வதற்காக பரசுராமர் இங்கு வந்தார். இங்குள்ள கபிலநதியில் நீராடி, சிவலிங்க பூஜை செய்தார். அவர் நதியில் மூழ்கி எழவும் தோன்றிய சுயம்புலிங்கம் இது. பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோரால் இந்த லிங்கம் பூஜிக்கப்பட்டது. இந்த இடத்தில் தான் பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீர, சிவபெருமான் இட்ட கட்டளையின் படி தவம் செய்தார். இவர் தவமியற்றிய இடத்தில் சாஸ்னா என்ற கல்பீடம் எழுப்பப்பட்டுள்ளது. பீடத்தில் பரசுராமரின் பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பாதங்களுக்கு தினமும் வழிபாடு செய்யப்படுகிறது. சாஸ்னா பீடத்தின் முன்புறம், பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் அழகிய சிற்பம் இருக்கிறது. இந்த பீடம் கண்டேஸ்வரர் கோயிலில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது. பீடத்துக்கு நித்ய பூஜை செய்யப்படுகிறது. இங்கு பூஜை செய்பவர்களுக்கு நோயற்ற ஆரோக்கிய வாழ்வும், நிம்மதியான மனநிலையும் ஏற்படுவதால் இங்கு பக்தர்கள் ஏராளமாக குவிகின்றனர். மேலும் ஒழுக்கம் தவறும் கணவன், குழந்தைகளை ஒழுங்குப்படுத்த வேண்டி, பரசுராமரை வேண்டவும் மக்கள் வருகின்றனர். நஞ்சன்கட் அருகிலுள்ள சிக்மகளூரில் ராமர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சுவரில், பரசுராமரின் கோடரி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது பாழடைந்து கிடப்பதால் பக்தர்கள் அதிகம் செல்வதில்லை.