6 February 2016

கடும் குடும்ப பிரச்சினைகள் அகல

கடும் குடும்ப பிரச்சினைகள் அகல;

உங்கள் ஊர் அல்லது அருகாமையில்  பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட பாதிப்பு நீங்கும்.

"ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்டராய தீமஹி
தந்நோ லக்ஷ்மிநரசிம்ம ஹ ப்ரசோதயாத்...!"

பிரதோஷம் மகிமை அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன்

பிரதோஷம் மகிமை
அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன் என்ன என்று பார்போம்
ஞாயிறு பிரதோஷம்:
சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
திங்கள் பிரதோஷம்:
பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது
சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.
செவ்வாய் பிரதோஷம்:
செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.
பலன்:
செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும் , ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு.
புதன் பிரதோஷம்:
புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.
வியாழன் பிரதோஷம்:
குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
கரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.
வெள்ளி பிரதோஷம்:
சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
சனி மஹா பிரதோஷம்:
சனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.
கரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.
கண்டிபாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள் :
வருடத்திருக்கு வரும் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை ,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும், இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.
தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் :- மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அவர் அவர் நக்ஷத்திரம் அன்று வரும் பிரதோஷம் :- கவலை தீரும்.

2 February 2016

கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு தெரியுமா

கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு தெரியுமா

முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம்இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டிகவசம். இதை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். இவர்,மிகச்சிறந்த முருக அடியார் என்பதுதான் தெரியுமே தவிர, அவர் எங்கு,யாருக்கு மகனாக பிறந்தார்? எப்படியெல்லாம் வாழ்ந்தார்? என்பதற்குஎந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
250 வயது: எனினும், கந்த சஷ்டி கவசப் பாடல்களில் காணப்படும் சிலசொல்லாடல்களை வைத்துப் பார்க்கும்போது அவர் பாண்டிய நாட்டைச்சேர்ந்தவராக இருக்கலாம் என்று கணிக்க மட்டுமே முடிகிறது. கந்தசஷ்டி கவசத்தில் நிறைய சொற்கள் வடமொழியில் இருந்துஎடுத்தாளப்பட்டு இருப்பதால் பாலதேவராய சுவாமிகள் வடமொழியில்சிறந்த புலமை பெற்றவராக திகழ்ந்ததும் தெளிவாகிறது. மேலும், சஷ்டிகவசப் பாடல்களின் வயது சுமார் 250 ஆண்டுகள் இருக்கலாம் என்றும்கணிக்கப்படுகிறது.  பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் 6அறுபடை வீடுகளுக்கும் சஷ்டி கவசங்களை இயற்றினாலும், அவைஅனைத்துமே முருகப்பெருமானின் புகழ் பாடுவதால் கந்தர் சஷ்டிகவசம் என்று அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இப்போது அதிகம்பாடப்படுவது திருச்செந்தூர் தலத்திற்கு அவர் இயற்றிய, சஷ்டியைநோக்க சரவண பவனார்.. என்று ஆரம்பிக்கும் 270 வரிகளைக் கொண்டகவசம்தான்.
சஷ்டி கவசம் பிறந்த கதை: பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டிகவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது.  ஒருசமயம்அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோசிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை.வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலைசெய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்குவந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கனவேபாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்ததிருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழாமுடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே.. என்றுஎண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத்தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனைவழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில்அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள்புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்குஅளித்தார்.
அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்திவெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.
சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்...
என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தைமுதன் முதலாக எழுதி முடித்தார். அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு,முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம்,பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலைதிருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். 6 சஷ்டிகவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது,அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய்இருந்தது. கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னைமுருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதைஅறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். அழகன்முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார். திருவாசகத்திற்குமனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்குதங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவுசக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.
பாம்பன் சுவாமிகள்: பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவசநூலைமுருகன் மீது பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வாறு அவர்பாடியதுதான் சண்முக கவசம். இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டிகவசம் போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பதுகுறிப்பிடத்தக்கது. முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள்மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமைதிதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தைநிறைவு செய்ய வேண்டும். இதேபோல், முருகப்பெருமானுக்குமுகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்தகார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்றமுருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம்இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றைகுறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமைகொண்டவரும் முருகப்பெருமான்தான். அதனால், நாம் வழக்கமாகபாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றியசஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது.
சஷ்டி கவச பாராயண பலன்கள்: ஒருவர் சஷ்டி கவசத்தைநாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது, மனம்வாடாது, குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம்,நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள், குழந்தைபாக்கியம் கிட்டும்.... இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டிகவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.
எனது குருநாதர் சின்னமருதன்சித்தார் அருள் ஆசிஉடன் மந்திர தீட்சை, காளி தீட்சை ,சிவதீட்சை,அவர் அவர் குலதெய்வகள்,உபசனை தெய்வங்கள்,மந்திரஆகர்சணாம் மூலமாக அந்த நிமிடத்தில் வரவழைத்து உங்கள் உடலில் ஆவகணம் செய்து நீங்கள் அருள்வாக்கு அளிக்க தீட்சை கொடுக்கபடும்call +91 9047899359 +918675426286 (whatsapp number) e -mail ganesapandian11@gmail.com
எனது குருநாதர் சின்னமருதன்சித்தார் அருள் ஆசிஉடன் மந்திர தீட்சை, காளி தீட்சை ,சிவதீட்சை,அவர் அவர் குலதெய்வகள்,உபசனை தெய்வங்கள்,மந்திரஆகர்சணாம் மூலமாக அந்த நிமிடத்தில் வரவழைத்து உங்கள் உடலில் ஆவகணம் செய்து நீங்கள் அருள்வாக்கு அளிக்க தீட்சை கொடுக்கபடும்call +91 9047899359 +918675426286 (whatsapp number) e -mail ganesapandian11@gmail.com

1 February 2016

உங்கள் ஜனன ஜாதகத்தில்

உங்கள் ஜனன ஜாதகத்தில் எந்தக் கிரகம் தீய பலன்களைத் தரும்படி உள்ளதோ அதைச் சாந்தி செய்யக் கீழ்க்கண்ட  பரிகாரத்தைச் செய்து பலன் பெறுங்கள்.தீய பலன்களைத் தரும் கிரகத்தின் தசை,புத்தி நடைபெறும் சமயங்களிலும் இதைச் செய்யலாம்.

1.சூரியபகவான்  - சனிக்கிழமை அன்று 7 வகையான தானியங்களை ஊற வைத்து  ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும்.இதை 7 ஞாயிற்றுக்கிழமை  செய்து வர சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

2.சந்திரபகவான்  -   வளர்பிறை திங்கள் கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும்.சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

3.செவ்வாய்பகவான்  -   தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக ஸ்வீட் வாங்கிப்  பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய செவ்வாய்க் கிரகத்தின்   கெடுபலன்கள் குறையும்.

4.புதபகவான் - பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கா ஜலம் வைத்திருந்தால் புதன் கிரகத்தின்  கெடுபலன்கள் குறையும்.

5.குருபகவான்  - வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றில் திலகம் இட்டு வரக் குருபகவானால் உண்டான  கெடுபலன்கள் குறையும்.

6.சுக்ரபகவான்  - சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட சுக்கிரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

7.சனிபகவான்  -  ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து நெருப்பில் போட்டு எரிக்கச் சனிபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

8.கேது பகவான் - இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கிப் பிச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க கேது பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.


9.ராகு பகவான் - பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட ராகு பகவானால் உண்டான   கெடுபலன்கள் குறையும்.இதை நாகபஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி ) அன்று செய்யவும்.

துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்

துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்
1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்வாய்க்கிழமை   தோறும் ஒரு பசுவுக்கு நாட்டு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்துவர வறுமை   நீங்கி செல்வ நிலையில் உயர்வு உண்டாகும்.

2.தொழில் முடக்கம் நீங்கி தொழில் விருத்தி அடைய

ஒரு கரும்புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம்பழம்  ஒன்று வாங்கி கடை,அலுவலகம் முழுவதும் வளாகம் முழுவதும்  வெளியில் நின்று நாகு துண்டாக நறுக்கி தெற்கு முகமாக நின்று குங்குமம் தடவித் திசைக்கு ஒன்றாக எறிந்து விடவும். கடை அலுவலகம் இவற்றில் இருந்த தொழில் முடக்கம் நீங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.இதை செவ்வாய்க்கிழமை அன்று செய்யவும்.வியாபாரம் இல்லாமல் அடைத்து வைத்தட கடைகளில் இதை செய்து பின் கடை திறந்து வியாபாரம் செய்யத் தொழில் சிறக்கும்.

3.திருமணத்தடை,வறுமை,வேலையின்மை மற்றும் தோஷம் உள்ளவர்கள்  நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து கொஞ்சம் பஞ்சகவ்யம் சேர்த்து குளித்து அருகில் உள்ள ஆலயம் சென்று அர்ச்சனை செய்து கொள்ள தோஷங்கள் விரைவில் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.
ஆண்கள் - சனிக்கிழமை
பெண்கள் - வெள்ளிக்கிழமை

4.பொருளாதாரம் உயர:-
ஞாயிற்றுக்கிழமையும் பூசம்  நட்சத்திரமும் கூடிய நாளன்று அதிகாலையில்  நாயுருவிச் செடிக்கு முறைப்படி காப்புக் கட்டி சாபநிவர்த்தி செய்து பிடுங்கி
அதைக் கையில்  வைத்துக்கொண்டே சண்டி நவாக்ஷரி மந்திரம் 1008 உரு ஜெபம் செய்து பின்னர் வெள்ளைநிறப் பட்டு அல்லது பருத்தித் துணியை மஞ்சள் கலந்த தண்ணீரில்  நனைத்து அந்தத் துணியால்  நாயுருவிச் செடியைச் சுற்றவும். இதைக் கடை,அலுவலகம், வீடுகளில் வைக்க பொருளாதார நிலை உயர்வடையும்.

5.இரவில் கை,கால் ,முகம் கழுவிய பின்னர் தூங்கினால் துஷ்ட சக்திகள் தொல்லை செய்யாது.இரவில் தானாக விந்தி சக்தி வெளியேறாது.

6.அடிக்கடி ஆபத்துகளைச்  சந்தித்து வருபவர்கள்,அஷ்டமத்துச் சனி நடப்பவர்கள், அஷ்டமாதிபதி தசை அல்லது புத்தி நடப்பவர்கள் மஹாம்ருத்யுஞ்சய மந்திரம் ஜெபித்து பின் வெளியே கிளம்பினால் விபத்துகள் இன்றி வீடு திரும்பலாம்.

7.அரச மரத்தின் அற்புத சக்தி :

1. தீரா நோய் தீர

ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும்.குறிப்பிட பகுதியில் பாதிப்பு ,நோய் இருந்தால் பாதிப்பு  / நோய் உள்ள பகுதியில் வேரைத் தொட்டு
வைக்கவும்.விரைவில் குணம் கிடைக்கும்.

2.ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது .

3.குறைந்த அல்லது உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ,அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள் இனிப்பு பண்டம் அல்லது சர்க்கரை கலந்த நீரை அரச மர வேரில் விட  விரைவில் ரத்த அழுத்த நோய் பாதிப்பு குறையும்.

4.தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.

5.ஆயுள் தோஷம் உள்ளவர்கள் (அற்பாயுள் ) சனிக்கிழமை தோறும் அரச மரத்திற்கு நீர் விட்டு தொட்டு வணங்கி வர ஆயுள் கூடும்.

வாழ்க வையகம்||வாழ்க வளமுடன் ||

ஓம் நமசிவாய ஆன்மிக தேடல் ஆன்மிக இந்து மதம்

ஓம் நமசிவாய ஆன்மிக தேடல்
ஆன்மிக இந்து மதம்  அன்பர்களுக்கு  எனது  நன்றி

நீங்கள் மிகவும் பழைமையான சிவன் கோயிலுக்கு

நீங்கள் மிகவும் பழைமையான சிவன் கோயிலுக்கு சென்று திரும்பி வரும் பொழுது உங்கள் கண்களில் சித்தர்கள் அல்லது மகான்கள் ஆன்மிக பெரியவர்கள் பார்த்தால் அவர்களிடம் சென்று ஆசி பெற்று அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து அவர்களுக்கு ஏதாவது  தொண்டு செய்து அவரிடம் ஆசி பெற்று அங்கிருந்து கிளம்புங்கள்...ஒரு சித்தருக்கும் ஒரு சிவனடியார்களுக்கும் நீங்கள்  வணங்கி தொண்டு செய்தால் 12 சிவாலயங்களில் சென்று வணங்கிய புண்ணியம் கிடைக்கும்..மற்றும் உங்கள் கர்மவினைகளால் நீங்கள் படும் துயரம் படி படியாக குறைந்து உங்கள் வாழ்க்கை தரம் உயரும்...இங்கனம்  ஆன்மீகம் - அறிவுரை-இந்து மதம்ஓம் நமசிவாய ஆன்மிக தேடல்
ஆன்மிக இந்து மதம்  அன்பர்களுக்கு  எனது  நன்றி

கர்மாவை சுமக்கும் வாகனங்கள்

கர்மாவை சுமக்கும் வாகனங்கள்  

                                                         
                 
நம் சந்ததியருக்கு எதை சேர்த்து வைக்கவேண்டும் ..? புண்ணியங்களையா ..?பாவங்களையாம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்...! நாமோ நமது முன்னோர்களின்
கர்மாவை சுமக்கிறவர்கள்...!! ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே ..!!

நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் நாம்..!நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்.. !நம் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் ஜீன், நம்மிடம் இருக்கிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. அதனால்தான் மருத்துவர் கேட்கிறார் "இந்த நோய், உங்கள் அப்பா அம்மா - தாத்தா பாட்டிக்கு இருந்ததா?' என்று.நோய் மட்டுமல்ல; பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்தி சாலித்தனம் வெற்றிதோல்வி இவை எல்லாமும் வழிவழியாக சந்ததிகள் வழியே பயணிக்கிறது.

தாத்தா வழியாக வந்த நோய்க்கு நாம் மருந்து எடுத்துக்கொண்டு பரிகாரம் தேடுவதுபோல், அவர்கள் வழியாக வந்த நமது தீய அம்சங்களுக்கும் எதிர்மறைகளுக்கும் ஆன்மிகம் மூலம் நாம் தீர்வைத் தேடுகிறோம்.

நீ செய்யும் தீவினையைக் கண்டவர் யாரு மில்லைஎன்ற கற்பனையில் நீ உலாவ ..உன்னிலிருப்பவனே பதிந்திட்டுக்காத்திருப்பான் காலத் திற்காக ..தக்க தருணத்தில் வெளியிடுவான் ..அதை நீ அனுபவிக்க ...என்பதே மெய்ஞ்ஞானம்.

நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க நாம் நமது பிந்தைய தலைமுறை பயன் படும் வகையில் நாம் புண்ணியம் செய்தல் வேண்டும்.ஆக என்ன செய்தால் எத்தனை தலை முறைக்கு புண்ணியம் என்பதைப் பார்ப்போம் ...!நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே :

பட்டினியால் வருந்தும்ஏழைகளுக்கு உணவளித்தல் ........ 3 தலைமுறைக்கு.

புண்ணிய நதிகளில் நீராடுதல் ........3 தலைமுறைக்கு.

திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ....5 தலைமுறைக்கு.

அன்னதானம் செய்தல் ....................5  தலைமுறைக்கு
.
ஏழைப்பெண்ணுக்குதிருமணம் செய்வித்தல் ................ 5 தலைமுறைக்கு.

பித்ரு கைங்கர்யங்களுக்குஉதவுவது ..........................................6 தலைமுறைக்கு.

திருக்கோயில் புனர்நிர்மாணம் ........7 தலைமுறைக்கு.

அனாதையாக இறந்தவர்களுக்குஅந்திம கிரியை செய்தல் .................9 தலைமுறைக்கு.

பசுவின் உயிரைக் காப்பாற்றுவது ..14 தலைமுறைக்கு.

முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் ..21 தலைமுறைக்கு.

நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்...!

நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும்

31 January 2016

செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம்

செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை  போன்றவை  ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை  பாதிக்காது.

ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று  அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9, நாட்டு வாழைப்பழகம்- 18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை -18, கதம்பப்பூ- ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும். செய்வினை தோஷத்தை விரட்டும் மற்றொரு பரிகாரம் வருமாறு:-

முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு  தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும்.

அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள். செய்வினை பறதோடிவிடும். யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்.