9 March 2016

மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் பலன்கள்



நம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், எமக்கு பிடித்தவர்கள், பிரபலங்கள் போன்றோர் இறந்தால், சில நேரங்களில் எமது கனவில் அவர்களின் உருவம் வரக்கூடும். அவ்வாறு வருவதால் ஏற்படும் பலன்கள் பற்றி ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.
ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.
இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம்.
வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை....
நவ ரத்தின கற்களில் போலிகளை கண்டுபிடிக்க ஒரு எளிய வழி !!

அதிர்ஷ்ட கற்கள் என்று சொல்லப்படுபவைகள் நவரத்தினக் கற்களே ஆகும். மாணிக்கம், முத்து, பவளம், மரகதம், புஷ்பராகம், வைரம் நீலம், கோமேதகம், வைடூயம் ஆகிய கற்களை நவக்கிரகங்களின் அம்சமாக வேதங்கள் சொல்லுகின்றன. எனவே வேதகாலத்தில் இருந்தே கிரகங்களின் பரிகாரத்திற்காக நவரத்தினங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த இருப்பதை அறிய முடிகிறது.
ரத்தினங்களைப் பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. அவைகளில் மிக முக்கிய சிக்கல் ரத்தினங்கள் நல்லதா, போலியானதா என்பதைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பலரிடம் இல்லாததே ஆகும்.
இதைப் பயன்படுததி போலி ரத்தினங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. எனவே ரத்தினங்ளைப் பரிசோதனை செய்யும் எளிய முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
மாணிக்கம் கல்லை பாலில் போட்டால் பாலில் சிவப்பு நிறம் படரவேண்டும்.
நுரையுள்ள பாலில் முத்தைப் போட்டால் அது மிதக்க வேண்டும்.
பவளம் பாலில் விழுந்தவுடன் பால் சிவப்பாக மாறவேண்டும்.
நல்ல மரகதத்தை குதிரையின் மூக்கின் அருகே கொண்டு சென்றால் அது தும்ம வேண்டும்.
சந்தனம் அரைக்கும் கல்லின் மீது புஷ்ப ராகத்தை வைத்தால் தாமரைப் பூவின் வாசம் வரவேண்டும்.
வைரத்தின் கீழ் பகுதியின் விரல் வைத்தால் விரலில் பிம்பம் மேல்புறத்தில் தெரியக்கூடாது.
பசும்பாலில் நீலக்கல்லைப் போட்டால் பால் நீல நிறமாக மாறவேண்டும்.
பசும் பாலில் கோமேகத்தைப் போட்டால் பால் கோமியத்தின் வண்ணத்தைப் பெறவேண்டும்.
இருட்டில் வைடூயத்தை வைத்தால் அது பூனைக்கண் போல் ஜொலிக்க வேண்டும்.
அடுத்த சிக்கல் இயற்கை ரத்தினங்களை வாங்குவதா, செயற்கை ரத்தினங்கள் வாங்குவதா என்பது தான் அது. இயற்கை ரத்தினங்கள் அணிவது தான் நியாயப்படி சரியான பரிகாரம் ஆகும்.
ஆனால் அதன் விலை அதிகம் என்பதால் சாதாரண மனிதர்கள் வாங்க இயலாது. அதனால் செயற்கை ரத்தினங்களை அணிந்து கொள்ளலாம். என சிலர் சொல்கிறார்கள் ஆனால் அது முழுமையான பலனை தராது ஓரளவு பலன் தரும்.
ரத்தினக் கல் பரிகாரம் என்பது ஜாதகப்படி கிரக நிலைகள் நல்லவிதமாக அமைந்திருக்கும் நாளில் செய்வதால் தான் நல்ல பலனைத் தரும் அல்லது பலன் தராது. தீய விளைவுகளைக் கூட ஏற்படுத்தி விடலாம்
இன்று எங்குப்பார்த்தாலும் ராசிக்கல் மோகம் தலைவிரித்தாடுகிறது இந்த மோகத்தைப் பயன் படுத்தி பல போலி நிறுவனங்களும் நபர்களும் பல லட்சம் ரூபாய்க்களை அறுவடை செய்கிறார்கள்
மக்களுக்கு ராசிக்கல்லைப் பற்றி அதிகம் தெரியாததனால் தாங்கள் ஏமாற்றப்படுவது தெரியாமலே ஏமாந்துப் போகிறார்கள்..
பஞ்சாட்சரம் என்பது ஐந்து எழுத்துகளால் ஆனது என்று பொருள். இவை "நமசிவய" என்பதாகும்.



"நமசிவய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம். சிவம் என்றால் காரணமில்லாத மங்களம் என்று பொருள்.

பிரபஞ்சம் நாதம் அல்லது ஓசையின் தூலவடிவே. இறைவன் நாதமாயும், நாதத்திற்கு அப்பாற்பட்டும் உள்ளான்.

நாதத்தின் நாயகனை நாதத்தால்தான் கட்ட இயலும். "நமசிவய" என்னும் மூலமந்திரத்தை ஓதவேண்டும்.

மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லுதல் தூலஜபம். ஒலி வெளிவராமலும் நாவசைந்து ஓதுதல் சூக்கும ஜபம். நாவசையாது, ஒலி வெளிவராது உள்ளுக்குள்ளே ஓதுதல்தான் உன்னத காரண நிலை.

"நமசிவய"

இந்த எழுத்துக்களில், ந- பிருதிவியையும், ம- அப்புவையும், சி- தேயுவையும், வ-வாயுவையும், ய-ஆகாயத்தையும் குறிக்கும்.

மனித உடம்பில் சாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம்,விசுத்தி, ஆக்ஞை என்கின்ற ஆதாரங்கள் இந்த பஞ்சபூதங்களுக்கு உரிய இடமாகும் என்கிறார் திருமூலர்.

மேலும், மனித இடம்பில் நமசிவாய என்பது, ந -சுவாதிஷ்டானதில், ம-மணிபூரகத்தில், சி அனாகதத்தில், வ- சிசுத்தியில், ய- ஆக்ஞையில் இருப்பதாக சொல்கிறார்.

திருஞான சம்பந்தர் நான்கு வேதங்களுக்கும் மெய்பொருளாகவிளங்குவது "நமசிவாய" இது எல்லாவற்றிற்குமான நாதன் நாமம் என்றும் சொல்கிறார்.

"நானேயோ தவம் செய்தேன் சிவயநம எனப்பெற்றேன்" என்று பஞ்சாட்சர மகிமையை மாணிக்க வாசகரும் கூறுகிறார்.

வற்றாத செல்வம் தரும் வலம்புரிச் சங்கு பூஜை மற்றும் மந்திரம்!!

வற்றாத செல்வம் தரும் வலம்புரிச் சங்கு பூஜை மற்றும் மந்திரம்!!

பாற்கடல் கடையும் பொழுது  அதில் இருந்து தோன்றிய உயர்ந்த பொருட்களில் ஒன்று சங்கு அதிலும் வலம்புரிச் சங்கு மிக உயர்ந்தது .மகாலட்சுமிக்கு ஈடானது ஏன் என்றால் மகாலக்ஷ்மியும் அதில் இருந்து தோன்றியவளே.எனவே வலம்புரிச் சங்கு "லக்ஷ்மி சகோதராய" என்று அழைக்கப் படுகிறது.ஸ்ரீ மஹாவிஷ்ணு  வலம்புரிச் சங்கை தனது கரத்திலும் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயை ஹ்ருதய கமலத்திலும் தாங்கியபடி காட்சி யளிக்கிறார்.

வலம்புரிச் சங்கு வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை :-
1.கரும்புள்ளிகள்,கருப்பு நிறத்தில் குழிகள் இருக்கக் கூடாது.
2.செயற்கை நிறங்கள் பூசப் பட்டதாக இருக்கக் கூடாது.
3.வெடிப்பு,கீறல் இல்லாததாக இருக்க வேண்டும்.
4.வாய் பகுதி மற்றும் பிற பகுதிகள் சேதமடையாததாக இருக்க வேண்டும்.
5.தாமச குணம் என்று சொல்லப்படும் மந்தபுத்தி உடையவர்கள்,மாந்திரீகம் செய்பவர்கள் மட்டும் கருநிற வலம்புரிச் சங்கு பயன்படுத்தலாம். மற்றவர்கள் கருப்பு தவிர வெண்ணிற அல்லது  மாநிறம் உள்ள சங்கைப் பயன்படுத்த வேண்டும்.வெள்ளையே சிறந்தது.

1.சங்கை எப்பொழுதும் வெறும் தரையில் வைக்கக் கூடாது.

2.வடக்கு முகமாக அல்லது கிழக்கு முகமாக அமர்ந்து ஒரு வாழை இலையில் கொஞ்சம் பச்சரிசி பரப்பி அதன் மேல் சங்கை வைத்து இந்த மந்திரத்தை சொல்லவும்.அல்லது ஒரு மஞ்சள் பட்டு அல்லது மஞ்சள் காட்டன் துணியில் கொஞ்சம் பன்னீர் தெளித்து அதன் மேல் சங்கை வைத்து அதற்குச் சந்தனம்,குங்குமம் வைத்து மல்லிகை,பிச்சி,ரோஜா அல்லது செந்தாமரை மலர்கள் கொண்டு கீழே உள்ள மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜெபித்து அர்ச்சிக்கவும்.பின்னர் சாம்பிராணி அல்லது ஊதுவத்தியால் தூபம் காட்டிக் கற்பூர தீபம் காட்டிக்  கற்கண்டு,பால் நைவேத்யம் செய்து பூஜையை நிறைவு செய்யவும்.

3.பூஜை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சங்கை மஞ்சள் பட்டு அல்லது காட்டன் துணியில் சுற்றி வைக்கலாம்.அல்லது ஒரு சிறிய பித்தளை,வெள்ளி, செம்பு தட்டு அல்லது கிண்ணத்தில் சுத்தமான நீர் ஊற்றி அதில் சிறிது பச்சைக்கற்பூரம் போட்டு அதில் வைக்க நல்ல பலன்களைத் தரும்.அந்த நீரைத் தினமும் மாற்ற வேண்டும்.முந்தைய நாளில் பயன்படுத்திய நீரைக் குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வறுமை நீங்கும்.
குளிக்க முடியாதவர்கள் அந்த நீரை காலில் மிதிபடாதபடி மரம் அல்லது செடிகளுக்கு  ஊற்றி விடவும்.

தொழில் செய்யும் இடங்களில் தெளித்து வரத் தொழில் விருத்தி உண்டாகும்.
வியாபாரிகள்,தொழில் அதிபர்கள் அந்த நீரால் முகம் கழுவி வெளியில் செல்ல சகல காரியங்களில் வெற்றியும் வசீகர சக்தியும் உண்டாகும்.

யாவரும் தினமும் அந்த நீரால் முகம் கழுவி வர அவர்களை ஒருபோதும் வறுமை வாட்டாது.


கீழே தரப்பட்டுள்ள மந்திரங்களில் உங்கள் மனம் விரும்பும் மந்திரம் எதுவோ அதைத் தேர்ந்தெடுத்து ஜெபிக்கலாம்.பூஜை ஆரம்பித்து முடியும் வரை மந்திரத்தை மாற்றக்கூடாது.

1.ஓம் ஸ்ரீம் லக்ஷ்மி சகோதராய நமஹ

2.ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீதரகரஸ்தாய | பயோனிதி ஜாதாய |லக்ஷ்மி சகோதராய | தக்ஷிணாவர்த்த சங்காய நமஹ ||


  1. 3.ஓம் ஹ்ரீம் ஸ்ரீதர கரஸ்தாய |  லக்ஷ்மி ப்ரியாய | தக்ஷிணாவர்த்த சங்காய |மம சிந்தித  பல ப்ராப்தார்த்தாய  நமஹ