26 March 2016

வீட்டு பூஜை குறிப்புகள் - 20

1 வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.

2. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

3. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.

4. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.

5. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.

6. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.

7. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.

8. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.

9. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.

10. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.

11. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.

12. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

13. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.

14. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.

15. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

16. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

17. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.

18. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்பும்போது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.

19. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.

20. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

25 March 2016

அகோரிகள்
கடவுளை அடைய சில சாதுக்கள் வழக்கத்திற்கு மாறான சில பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரமான இடமாக பிறரால் பார்க்கப்படுகிற இடங்களிலே இவர்கள் வாழ்வார்கள். அதில் ஒன்று தான் மயான பூமி. இவ்வகையான சாதுக்கள் பிணங்களின் சாம்பலை தங்கள் உடல் முழுவதும் பூசிக்கொண்டு, மனித மண்டை ஓட்டில் பானம் பருகி, மனித தசைகளை உட்கொண்டு வருவார்கள்.

தன்னின மாமிச உண்ணும் பழக்கங்கள், விலங்குகளை பலி கொடுப்பது மற்றும் இதர விந்தையான சடங்குகளை செய்வதற்கு பெயர் பெற்றவர்கள் அகோரிகள். பைரவ வடிவில் இருக்கும் சிவபெருமானின் தீவிர பக்தர்கள் இவர்கள்.

மறுபிறப்பில் இருந்து விடுபட்டு மோட்சத்தை அடையும் நோக்கில் மற்றும் தன் சுய அடையாளத்தை புரிந்து கொள்ளும் நோக்கில் தான் அவர்கள் வாழ்க்கை பயணிக்கிறது. மாறுபட்ட நிலையிலான மன உணர்வில் வாழ்பவர்கள் இவர்கள். சமுதாயத் தீய பழக்கங்களை வேரறுத்து, இருமை இயல்பற்றதை (அத்வைதா) உணர்வதே அவர்களின் உச்சகட்ட குறிக்கோளாகும்.

இருப்பினும், அகோரிகள் என்பவர்கள் சிவநேத்ராக்களை விட மாறுபட்டவர்கள். சிவநேத்ராக்கள் தீவிர டமாஸிக் பழக்க வழக்கங்களில் ஈடுபடாதவர்கள். சிவநேத்ராக்களும் சிவபெருமானை தான் வழிபடுவார்கள், ஆனால் சட்விக் வடிவத்தில். அகோரி என்ற வார்த்தை அகோர் என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து எடுக்கப் பட்டவையாகும். அதற்கு இருளற்றது என்பதே பொருளாகும்.இயற்கை நிலையிலான உணர்வை உட்குறிப்பவர்களே அகோரிகள். அந்த உணர்வில் பயமோ வெறுப்புணர்ச்சியோ துளியும் இருப்பதில்லை. அதனால் பயம் இல்லாமலும் பாரபட்சம் பார்க்காமலும் இருப்பவரே அகோரி. ADVERTISEMENT அகோரி சாதுக்களைப் பற்றி, அவர்களின் பழக்க வழக்கங்கள், அவர்களின் நம்பிக்கை ஆகியவைகளை பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாக பார்க்கலாமா?

வழக்கத்திற்கு மாறான, அதிபயங்கரமான சடங்குகள் உலகத்தில் எதுவுமே அசுத்தமில்லை எமனது அகோரிகளின் நம்பிக்கையாகும். சிவபெருமானிடம் இருந்து வந்த அனைத்தும் அவரிடமே செல்கிறது. அதனால் உலகத்தில் உள்ள அனைத்தும் தூய்மையானதே. அழிக்கும் கடவுளான சிவபெருமான் மயான பூமியல் தான் வாழ்கிறார் என நம்பப்படுகிறது. அதனால் தான் மயான பூமிக்கு அருகில் வாழ்கின்றனர் அகோரிகள். எரித்த சடலத்தின் சாம்பல் தான் உலகத்திலேயே தூய்மையானது என அவர்கள் கருதுவதால் அதனை உடல் முழுவதும் பூசிக் கொள்வார்கள் அவர்கள். உலகத்தில் எதுவுமே நிரந்தரமில்லை என்பதையும், வாழ்க்கை முடிந்தவுடன் அனைத்துமே சாம்பலாகி விடும் என்பதையும் குறிக்கிறது இந்த சாம்பல்.

வழக்கத்திற்கு மாறான, அதிபயங்கரமான சடங்குகள்

இறந்த மனிதர்களின் எலும்புகள் மற்றும் மண்டை ஓட்டை அகோரிகள்பயன்படுத்தி வருகிறார்கள் அகோரிகள். அதனை அணி கலன்களாகவும் கிண்ணமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். மோட்சத்திற்காக கங்கையில் வீசப்படும் எஞ்சியிருக்கும் மனித சடலத்தின் எலும்புகளை சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.

புனித நபர்கள், கர்ப்பிணி பெண்கள், பாம்பினால் கடிபட்டவர்கள், பிறக்காத சிசுக்கள் போன்றவர்களின் சடலங்களை எரிக்க கூடாது என்பது இந்து மதத்தில் பின்பற்றப்படும் வழக்கமாகும். அவர்களை கங்கையின் புனித நீரில் மூழ்கடித்து விட வேண்டும். இந்த சடலங்களை பலிபீடமாக பயன்படுத்தி கொள்வார்கள் அகோரிகள். ஏன், இறப்பை நினைவூட்டும் விதமாக அதனை உண்ணவும் செய்வார்கள்.

சிவபெருமான் : உச்ச சக்தி

பைரவ வடிவில் இருக்கும் சிவபெருமானை உச்ச சக்தியாக நம்புகின்றனர் அகோரிகள். நடக்கும் அனைத்திற்கும் சிவபெருமானே பொறுப்பு, நிபந்தைகள், விளைவுகள் மற்றும் தாக்கங்கள். உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஆத்மாவும் சிவபெருமான் என்று அவர்கள் நம்புகின்றனர். இந்த ஆத்மா அனைத்தும் உலகளாவிய 8 பிணைப்புகளால் (அஷ்டம ஹாபாஷா) மூடப் பட்டிருக்கிறது என்றும் அவர்கள் நம்புகின்றனர். சிற்றின்பம், கோபம், பேராசை, மன உறுத்தல், பயம் மற்றும் வெறுப்பே அந்த எட்டு பிணைப்புகலாகும். இந்த பிணைப்புகளை நீக்கும் திசையில் தான் அனைத்து அகோரிகளும் தங்களின் வழக்கங்களை மேற்கொண்டுள்ளனர்.

நம்பிக்கைகள்

சிவபெருமானை மனிதர்கள் உணர்ந்து கொள்ள தடையாக இருக்கும் இந்த 8 பிணைப்புகளையும் நீக்கும் திசையில் தான் அகோரிகளின் அனைத்து வழக்கங்கள் அமைந்திருக்கும். மயான பூமியில் செய்யப்படும் சடங்குகள் மனிதர்களின் மிகப்பெரிய பயமான மரண பயத்தை அளித்திடும். பாலியல் சம்பந்தப்பட்ட சடங்குகள் ஒருவரை சிற்றின்ப எண்ணங்களை நீக்கும். நிர்வாணமாக இருப்பது வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுடன் கூடிய அன்பு மற்றும் மன உறுத்தல்களை அழிக்கும். இந்த 8 பிணைப்புகளும் ஆன்மாவை விட்டு நீங்கினால், அவன் சதாசிவாவுடன் சேர்ந்து மோட்சத்தை பெறுவான் என அகோரிகள் நம்புகின்றனர்.

மாய வித்தை நம்பிக்கை

அகோரிகளின் விந்தையான குணாதிசயங்களை பார்த்து, அதனை மாய வித்தையுடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர் மக்கள். ஆனால் அது உண்மையல்ல. அவர்களிடம் அளவுக்கு அதிகமான இயற்கைக்கு மாறான சக்திகள் உள்ளது. அதற்கு காரணம் நீண்ட காலமாக அவர்கள் செய்து வரும் யோகாசனங்கள். ஆனால் அவர்கள் எந்த ஒரு மாய வித்தைகளையும் செய்வதில்லை. அவர்களின் சடங்குகளும், பழக்க வழக்கங்களும், மோட்சத்தை அடைவதிலும், சிவபெருமானின் உண்மையான இயல்பை உணர்வதிலுமே அடங்கியிருக்கும்.

யாரை வழிப்படுவார்கள் அகோரிகள்?

சிவபெருமானையும், காளி தேவியையும் வணங்குவார்கள் அகோரிகள். காளி தேவி அல்லது தாரா என்பவர் 10 மகாவித்யாக்களில் (அறிவை கொடுக்கும் கடவுள்கள்) ஒருவராகும். இக்கடவுள் இயற்கைக்கு மாறாக அதீத சக்திகள் கொண்டுள்ள அகோரிகளை மட்டுமே ஆசீர்வதிப்பார்கள். துமாவதி, பகளமுகி மற்றும் பைரவி வடிவில் இருக்கும் இக்கடவுளை இவர்கள் வணங்குகிறார்கள். மஹாகல், பைரவா மற்றும் வீரபத்ரா போன்ற மிகவும் கடுஞ்சினத்துடன் கூடிய வடிவத்தில் இருக்கும் சிவபெருமானையும் வணங்குவார்கள். அகோரிகளின் காப்பாளர் கடவுளாக விளங்குவது ஹிங்க்லஜ் மாதா.

எளிய தத்துவம்

அகோரிகளின் தத்துவப்படி, அவர்களுக்குள் தான் இந்த அண்டம் குடி கொண்டுள்ளது. நிர்வாணமாக இருப்பதால் அவர்களே உண்மையான மனித வடிவின் பிரதிநிதித்துவம். நாம் இந்த கோலத்தில் தான் இந்த உலகத்திற்குள் நுழைகிறோம். அதே போல் இந்த கோலத்தில் தான் இந்த உலகத்தை விட்டு வெளியேறுகிறோம். அதனால் நிர்வாணமாக இருப்பதற்கு அவர்கள் வெட்கப் படுவதில்லை. காதல், வெறுப்பு, பொறாமை மற்றும் தற்பெருமை போன்ற உணர்சிகளுக்கு அப்பர்ப்பட்டவர்கள் அவர்கள். அனைத்திலும், ஏன் தூய்மையில்லாத மற்றும் சுத்தமில்லாதவற்றிலும் கூட கடவுள் இருக்கிறார் என்பதே அவர்களின் நம்பிக்கையாகும்.

தவறாக புரிந்து கொள்ளப்பட்டது

அகோரிகள் என்பவர்கள் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள். அவர்களை பெரும்பாலும் மாய வித்தைகளுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள் மக்கள். அதற்கு காரணம் அவர்கள் இறந்த சடலங்களுடன் சேர்ந்து வாழ்வதால். ஆனால் அவர்களோ கடவுளை தேடும் காரணத்தினால் தீவிரமான வழிமுறைகளை பின்பற்றி வாழும் புனிதமான எளிய மனிதர்களாகும். குணமாக்கும் சக்தியையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
நோயாளிகளின் உடலில் இருந்து மாசுக்களை நீக்கி மீண்டும் பழைய ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வரும் “உருமாற்றும் குணமாக்கல்” சக்தியை அகோரிகள் பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது. இதற்கும் மாய வித்தைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. அகோரிகளின் உயரிய நிலையிலான உடல் மற்றும் மனதே, அவர்களுக்கு இவ்வளவு சக்தியை அளித்துள்ளது.....

24 March 2016

திருநீற்றின் மகிமை

திருநீற்றின் மகிமை


அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.
எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்து மதத்தவர்களிடம் காணப்படுகின்றது
.

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால் இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். பறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா. அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.
பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன.

சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.

இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்..

1. புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2. தொண்டைக்குழி (விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3. நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது

அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள்

அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள்

அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள்
அல்லிப்பூ             --    செல்வம்  பெருகும்      
பூவரசம்பூ                          --   உடல் நலம் பெருகும்
வாடமல்லி                      --    மரணபயம் நீங்கும்
மல்லிகை                         --    குடும்ப அமைதி
செம்பருத்தி           --    ஆன்ம பலம்
காசாம்பூ              --    நன்மைகள்
அரளிப்பூ              --    கடன்கள் நீங்கும்
அலரிப்பூ              --    இன்பமான வாழ்க்க
செம்பருத்தி                      -- ஆன்ம பலம்
ஆவாரம் பூ                       --  நினைவாற்றல்  பெருகும்
கொடிரோஜா                   --  குடும்ப ஒற்றுமை
ரோஜா பூ              --    நினைத்தது  நடக்கும்
மருக்கொழுந்து      --    குலதெய்வம் அருள்
சம்பங்கி              --  இடமாற்றம்  கிடைக்கும்
செம்பருத்தி பூ                 --    நோயற்ற வாழ்வு
நந்தியாவட்டை            --    குழந்தை குறை நீங்கும
சங்குப்பூ (வெள்ளை)   --  சிவப்பூஜைக்கு  சிறந்தது
சங்குப்பூ (நீலம்)             --   விஷ்ணு பூஜைக்கு  சிறந்தது
மனோரஞ்சிதம்       --   குடும்ப  ஒற்றுமைதேவ ஆகர்­ணம
தாமரைப்பூ                       --   செல்வம் பெருகும் அறிவு வளர்ச்சிபெறும் 
நாகலிங்கப்பூ                 --    லட்சுமி கடாட்சம்ஆரோக்யம
முல்லை பூ           --   தொழில் வளர்ச்சி,  புதிய தொழில்கள்
                                                      உண்டாகும்
பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) --  முன்னேற்றம் பெருகும்
தங்க அரளி (மஞ்சள் பூ) --   குருவின் அருள் , பெண்களுக்கு
                                                         மாங்கல்ய பலம் கடன்கள் நீங்கும் , 
                                                        கிரக பீடை நீங்கும்
பவள மல்லி                    --   இது தேவலோக புஷ்பமாகும். இந்த
                           செடியினை வீட்டில் வளர்ப்பது மிக
                           அவசியமாகும். இதன்மூலம் தேவர்
                           களினதும், ரிஷிகளினதும் அருளும்,
                           ஆசியும் கிடைக்கும்.
                       பழைய புஷ்பங்கள்மலராத மொட்டுக்கள்,  தூய்மைஇல்லாத பூக்களைக் கொண்டு இறைவனிற்கு அர்ச்சனை செய்யக்கூடாது.
                       அரச்சனை செய்த பூக்கள்  கோவிலில்  சாமிக்குபோட்ட மாலைகள்  காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம்.
                       கோவிலில்  சாமிக்கு போட்ட மாலைகளைவாகனங்களில்  முன்பக்கம் கட்டுவது மிகபெரிய சாபம்இதனால்  தீமைகள்  உண்டாகும்  நன்மைகள் கிடைக்காது.
திருமாலுக்கு   --  பவளமல்லி , மரிக்கொழுந்து  துளசி 
சிவன்           --  வில்வம்  செவ்வரளி
முருகன்                 --  முல்லைசெவ்வந்திரோஜா
அம்பாளுக்கு       -- வெள்ளை நிறப்பூக்கள்
பூசைக்கு சிறப்பானவை.
 
ஆகாதபூக்கள்
      விநாயகருக்கு        -- துளசி   
      சிவனுக்கு             -- தாழம்ப 
      அம்பாளுக்கு         -- அருகம்புல
      பெருமாளிற்கு        -- அருகம்புல்
      பைரவர்               -- நந்தியாவட்டை ,
      சூரியனுக்கு           -- வில்வம 
பூஜைக்கு ஆகாதவை

சுழுமுனை தியானம்

சுழுமுனை தியானம்

சுழுமுனை தியானம்ஆக்கினைச் சக்கரம்  

     நன்றாக கால்களை மடித்து நேராக அமர்ந்துகொள்ளுங்கள். கண்களை  மூடிகொள்ளுங்கள்.மனதை அண்ணாக்கிற்கு நேரே சுழுமுனையில் நின்று, நாக்கை மேலண்ணத்தில் அழுத்தி, பின் தொண்டையில் காற்றை அழுத்தி சுழுமுனையை நோக்கி  செலுத்தவும்.
 மனதை அழ்ந்த அமைதியில் வைத்திருக்கவும். காற்றின் அசைவை மேல்நோக்கி மனதையும் சேர்த்து அண்ணாகிற்கு மேல் செலுத்தவும்.  சிறுதுகாலம் சென்றபெறகு பலபல வண்ணங்கள் தோன்றும்.  பின் கடைசியாக ஒரு சிருஒளி வெண்மை நிறத்தில் தோன்றும் பின் அதுவே வளர்ந்து அளவில்லாத எல்லையிலததாக மாறிவிடும்.
இப்போது கண்ணை மூடினால் இருட்டு தெரியாது வெறும் வெளிச்சம் தான் தெரியும்.  பின்னர் அந்த வெள்ளை ஒளிக்குள் ஒரு பொன்னிற ஒளி தோன்றும்.  அதுவும் எல்லையில்லாமல் வளர்ந்துவிடும்.  பின்னர் அந்த பொன்ஒளிகுள்.  ஒரு செவ்வொளி தோன்றும். அந்த ஒளி எங்கும் எல்லையில்லாமல் வளர்ந்து நிக்கும்.  பின் அந்தஒளிக்குள் ஒரு ஒளி உருவாகும் அது வந்து வந்து செல்லும்.
இதுவே நடராஜர் நடனம் ஆகும்.  பொன்னமம்பலம் மேடையில் நடராஜர் நடனம்  நடக்கும். இப்போது நாம் ஒரு பொருளாகவும் செவ்வொளி ஒரு பொருளாகவும் இறுக்கும்.  பின்னர் நீ நான் என்று வேறுபாடு இல்லாமல் அந்த பொன்னம்மபலமே மிஞ்சும். (அட்டகம் –  தந்தனை தன் மயமாக்கி ….).  பின்னர் எல்லையில்லா ஆனந்தம் உடலில் பாயும்.  வானவேடிக்கை நடக்கும் ஆயிரதுஎட்டு தாமரை இதழ் மேல் சிவலிங்கம் தோன்றி மறையும்.
அதன் பின்னர் இப்போது கூடவே சங்கு ஓசையும் பின்னர் சலங்கை ஓசையும் கேட்கும்.  பின்னர் அமைதி நிலவும்.  பின்னர் பொன்னம்பலத்தில் ஒரு ஓட்டை ஏற்படும் அதுதான் சொர்கவாசல் திறப்பதாகவும். ( காகபுஜண்டர் பாடல் –  கொல்லிமலை ஏறி குகையை கண்டு குகையில் இருந்து தவமே செய்தால் ….) . இப்போது உள்ளே செல்லும் காற்று  வெளியே வராது.
இடகலை, பிங்கலை மற்றும் பொன்னம்பலம் மூன்றும் ஒன்றாகிவிடும் இதுவே முச்சுடர் ஆகும். ( அகத்தியர் பாடல் –  ரவிமதிசுடர் மூன்றும் ஒன்றது ஆகும் பின்னர் தணலாய் கீழ் நோக்கி  பாயும் …..) கனல் போல் உடலில் வெப்பம் பரவும். உடல் வெப்பத்தில் வேதிக்கபடும்.   பின்னர் எல்லா காட்சிகளும் மறைந்து நான் நீ என்ற இரு நிலையும் இல்லம்மல் போகும்.
இப்போது பத்து திசைகளும் தெரியும் உங்கள் உடல் பற்றிய நினைப்பு மறைந்து எல்லையில்லாமல் நாமே விரிந்து விளங்கும்.  பின்னர் அந்த நிலையும் போய் இப்போது இங்கு என்ன நடக்கிறது  என்றே தெரியாது.  இதுவே சும்மா  இருக்கும் இடமாகும்.  அந்த நிலையில் எவ்வளவு நேரம் நீடித்தது என்றும் தெரியாது.
கண்ணை திறந்தால் சிலமணி நேரம் கடந்து இருக்கும். இதுவே அருட்பெரும் ஜோதி அனுபவமாகும்.  இந்தநிலையை  அடைந்த பிறகே அறிவு துலங்க ஆரம்பிக்கும்.  தன்னை பற்றிய அறிவும், உலகத்தின் இயக்கம் மற்றும் இறைநிலை பற்றிய அறிவும் விளங்கும்.  இதன் பின்னர் ஞான பாதை துலங்கும்.  அதன் பின்னர்  என்னவாகும் என்று ஆண்டவர் அறிவித்தபின் எழுதுகிறேன்.
கண்களின் ஒளி —  நட்சத்திர ஒளி . 
மனதின் ஒளி —  வெள்ளை ஒளி . 
ஜீவனின் ஒளி —  பொன் ஒளி. 
ஆன்மாவின் ஒளி — செவ்வொளி

மஹா சிவராத்ரி பூஜை

மஹா சிவராத்ரி பூஜை

[காலம் : பிரதி வருஷம், மாசி மாதம், கிருஷ்ணபக்ஷ சதுர்தசி (மஹா சிவராத்ரி) யன்று, மாலையில் ஸ்நானம், ஸந்த்யா வந்தனம் முதலியவைகளைச் செய்தபின், ராத்திரி வேளையில் நான்கு யாமமும் சிவராத்ரி பூஜை செய்ய வேண்டும்.)

விக்நேச்வர பூஜை :

(மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு)
 
கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே  
 கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்|  
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே  
 ஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்||  
 
 அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி  
 மஹா கணபதிம் ஆவாஹயாமி 
 
    மஹாகணாதிபதயே  ஆஸநம்     ஸமர்ப்பயாமி  
 " " அர்க்யம்    " 
 " " பாத்யம்    " 
 " " ஆசமநீயம்    "  
 " " ஔபசாரிகஸ்நாநம்  "  
 " " ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் "  
 " " வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந்  "  
 " " யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதாந் "  
 " " கந்தாந் தாரயாமி   "  
 " " கந்தஸ்யோபரி அக்ஷதாந்  "  
 " " அலங்கரணார்த்தம் அக்ஷதாந் "  
 " " ஹரித்ரா குங்குமம்  "  
 
    புஷ்பை : பூஜயாமி (புஷ்பம், அக்ஷதையால் மஞ்சள் பிள்ளையாருக்குப் பூஜை செய்யவும்.) 
 
 ஓம் ஸுமுகாய நம: ஓம் தூமகேதவே நம: 
  "   ஏகதந்தாய நம:  "   கணாத்யக்ஷாய நம:  
  "   கபிலாய நம:  "   பாலசந்த்ராய நம:  
  "   கஜகர்ணகாய நம:  "   கஜாநநாய நம:  
  "   லம்போதராய நம:   "   வக்ரதுண்டாய நம:  
  "   விகடாய நம:  "   ச்சூர்ப்ப கர்னாய நம:  
  "   விக்நராஜாய நம:  "   ஹேரம்பாய நம:  
  "   கணாதிபாய நம:  "   ஸ்கந்த பூர்வஜாய நம:  
 
    ஓம் மஹாகணாதிபதயே நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. 
 
  தூபார்த்தம், தீபார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. 
 (வெற்றிலை, பாக்கு, பழம், வெல்லம் நிவேதனம் செய்யவும்.) 

நிவேதந மந்த்ரங்கள் :

ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் | தேவஸ்வித : ப்ரஸுவ | ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி.
அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி ஸ்வாஹா, ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா.
 
 ப்ரஹ்மணிம ஆத்மாம்ருதத்வாய | மஹாகணாதிபதயே  
 குடகண்ட, கதளீபல நிவேதநம் ஸமர்ப்பயாமி. 
 மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தராணியில் தீர்த்தம் எடுத்து விடவும்) 
 
 அம்ருதாபிதாநமஸி - உத்தராபோச்சநம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)  
 
 தாம்பூலம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தாம்பூலத்தில் விடவும்) (கற்பூரம் ஏற்ற வேண்டும்.) 
 நீராஜநம் ஸமர்ப்பயாமி. 
 நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்) 
 

பிரார்த்தனை :

வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப | அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா|| (ப்ரதக்ஷிணமும் நமஸ்காரமும் செய்யவும்) கணபதி ப்ரஸாதம் ச்சிரஸா க்ருஹ்ணாமி (கணபதி ப்ரஸாதத்தை சிரஸில் தரித்துக் கொள்ள வேண்டும்)

ப்ராணாயாமம் :

ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ஓம்மஹ: - ஓம்ஜந: - ஓம்தப: - ஓம் ஸத்யம் - ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் - பர்க்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோந: ப்ரசோதயாத் - ஓமாப: - ஜ்யோதீரஸ: - அம்ருதம் ப்ரஹ்ம - பூர்ப்புவஸ்ஸுவரோம்.

ஸங்கல்பம் :

அந்தந்த ப்ரதாந பூஜைக்குரிய ஸங்கல்பத்தை அங்கங்கே குறிப்பிட்டதுபோல் செய்யவும்.

விக்நேஸ்வர உத்யாபநம் :

உத்தரணி ஜலத்தால் கையைத் துடைத்துக்கொண்டு, "விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டா பயாமி; ச்சோபநர்த்தே க்ஷேமாய புநராகமநாய ச" என்று மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் பக்கமாக நகர்த்த வேண்டும்.

ப்ரதாந பூஜை

பூஜா ஆரம்பம் :

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் | ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||

ப்ராணாயாமம் :

ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ஓம்மஹ: - ஓம்ஜந: - ஓம்தப: - ஓம் ஸத்யம் - ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் - பர்க்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோந: ப்ரசோதயாத் - ஓமாப: - ஜ்யோதீரஸ: - அம்ருதம் ப்ரஹ்ம - பூர்ப்புவஸ்ஸுவரோம்.

ஸங்கல்பம் :

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வரப்ரீத்யர்த்தம் சுபே சோபநே முஹூர்த்தே, ஆத்யப்ரஹ்மண: த்விதீய ப்ரார்த்தே, ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே, அஸ்மிந் வர்த்தமாநே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே...நாமஸம்வத்ஸரே உத்தராயனே, சிசிர ருதௌ, கும்ப மாஸே, க்ருஷ்ண பஷே, சதுர்தஸ்யாம் சுபதிதௌ...வாஸர யுக்தாயாம்...நக்ஷத்ர யுக்தாயாம்..., சதுர்தச்யாம் சுபதிதௌ, சிவராத்ரி புண்யகாலே, மம ஜந்மாப்யாஸாத் ஜந்ம ப்ரப்ருதி ஏதத்க்ஷண பர்யந்தம், பல்யே வயஸி, கௌமாரே, யௌவநே, வார்த்தகே ச ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷுப்தி அவஸ்தாஸு, மத்யே ஸம்பாவிதாநாம், ஸர்வேஷாம் பாபாநாம், ஸத்ய: அபநோதநார்த்தம், ஸ்ரீ ஸாம்ப ஸதாசிவ ப்ரஸாதேந, ஸகுடும்பஸ்ய மம, தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம், ஜ்ஞாந வைராக்ய மோஷ ப்ராப்த்யர்த்தம், சிவராத்ரி புண்ய காலே ஸாம்ப பரமேச்வர பூஜாம் கரிஷ்யே. ததங்கம் கலசபூஜாம் ச கரிஷ்யே ||
(அப உபஸ்ப்ருச்ய) ஜலத்தைத் தொட்டு, 'விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டாபயாமி' என்று சொல்லி, அக்ஷதை புஷ்பம் சேர்த்து மஞ்சள் பிள்ளையாரை வடக்கே நகர்த்தவும்.
 

கலச பூஜை :

(சந்தனம், குங்குமம், அக்ஷதை இவைகளால் தீர்த்த பாத்திரத்தை அலங்கரித்துக் கையால் மூடிக்கொண்டு) கலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர : ஸமாச்ரித : மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா: || குக்ஷெள து ஸாகரா : ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்தரா | ருக்வேதோத யஜுர்வேத : ஸாமவேதோப்யதர்வண : || அங்கைச்ச ஸஹிதா : ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா : | ஆயாந்து தேவபூஜார்த்தம் துரிதக்ஷய காரகா : || கங்கே யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி : நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு || (என்று ஜபித்து, கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜாத் திரவ்வியங்களையும், தன்னையும் ப்ரோக்ஷணம் செய்து கொள்க.)

கண்டா பூஜை :

ஆகமார்த்தந்து தேவாநாம் கமநார்த்தந்து ரக்ஷஸாம் | கண்டாரவம் கரோம்யத்ய தேவதாஹ்வாந லாஞ்ச்சநம். என்று சொல்லி மணியை அடிக்கவும்.

தியானமும் ஆவாஹனமும் :

சந்த்ர கோடி ப்ரதீகாசம் த்ரிணேத்ரம் சந்த்ர பூஷணம் | ஆபிங்கள ஜடாஜூடம் ரத்ந மௌளி விராஜிதம் || நீலக்ரீவம் உதாராங்கம் தாரஹாரோப சோபிதம் | வரதாபய ஹஸ்தஞ்ச ஹரிணஞ்ச பரச்வதம் || ததாநம் நாக வலயம் கேயூராங்கத முத்ரகம் | வ்யாக்ர சர்ம பரீதாநம் ரத்த ஸிம்ஹாஸந ஸ்திதம் || ஆகச்ச தேவதேவேச மர்த்யலோக ஹிதேச்சயா | பூஜயாமி விதாநேந ப்ரஸந்ந : ஸுமுகோ பவ || உமா மஹேச்வரம் த்யாயாமி, ஆவாஹயாமி

ப்ராண ப்ரதிஷ்டை :

(அந்தந்த பூஜைக்குரிய தேவதையை விக்ரஹ மூர்த்தியிலோ, கலசத்திலோ, படம் முதலியவைகளிலோ கீழ்கண்ட வகையில் ப்ராண ப்ரதிஷ்டை செய்ய வேண்டும். தேவதா ப்ரதிமை இருந்தால் பஞ்ச கவ்யத்தால் அந்த ப்ரதிமையைச் சுத்தி செய்து ப்ராணப் ப்ரதிஷ்டை செய்ய வேண்டும். படமாக இருந்தால் ப்ராண ப்ரதிஷ்டை மட்டும் செய்ய வேண்டும்.)
ஓம் அஸ்ய ஸ்ரீ ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய, ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்வரா: ரிஷய:, ருக் யஜூஸ் சாம அதர்வாணி ச்சந்தாம்ஸி || ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார ஹாரிணீ ப்ராண சக்தி: பரா தேவதா |
ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம். ப்ராண ப்ரதிஷ்டாபநே விநியோக:
ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:, ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:, க்ரோம் மத்யமாப்யாம் நம:
ஆம் அநாமிகாப்யாம் நம:, ஹ்ரீம் கநிஷ்ட்டிகாப்யாம் நம:, க்ரோம் கரதல கரப்ருஷ்ட்டாப்யாம் நம:
ஆம் ஹ்ருதயாய நம:, ஹ்ரீம் சிரஸே ஸ்வாஹா, க்ரோம் சிகாயை வஷட், ஆம் கவசாய ஹும், ஹ்ரீம் நேத்ர த்ரயாய வௌஷட், க்ரோம் அஸ்த்ராய பட், பூர்ப்புவஸ் ஸுவரோமிதி திக்பந்த: ||
 

த்யாநம் :

ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ தருண ஸரோஜா திரூடா க்ராப்ஜை: பாசம் கோதண்ட மிக்ஷூத்பவ மளிகுண- மப்யங்குசம் பஞ்சபாணாந் | பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிணயந லஸிதா பீந வக்ஷோருஹாட்யா தேவீ பாலார்க்கவர்ணா பவது ஸுககரீ ப்ராணசக்தி: பரா ந: ||
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் | க்ரோம் ஹ்ரீம் ஆம் | அம் யம் ரம் லம் வம் சம் ஷம் ஸம் ஹம் ளம் க்ஷம் அஹ : ஹம்ஸ: ஸோஹம், ஸோஹம் ஹம்ஸ: |
அஸ்யாம் மூர்த்தௌ ஜீவஸ்திஷ்ட்டது. அஸ்யாம் மூத்தௌ ஸர்வேந்த்ரியாணி வாங் மநஸ் தவக் சக்ஷுச் ச்ரோத்ர ஜிஹ்வா க்ராண வாக் பாணி பாத பாயூபஸ்த்தாநி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்ட்டந்து ஸ்வாஹா |
(புஷ்பம், அஷ்தை இவைகளைத் தீர்த்தத்துடன் பிம்பத்தின் மீது விடவும்).
அஸுநீதே புநரஸ்மாஸு சக்ஷு: புந: ப்ராணமிஹ நோ தேஹி போகம் | ஜ்யோக் பச்யேம ஸூர்ய மூச்சரந்த மநுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி ||
*ஆவாஹிதோ பவ | ஸ்த்தாபிதோ பவ | ஸந்நிஹிதோ பவ | ஸந்நிருத்தோ பவ | அவகுண்டிதோ பவ | ஸுப்ரீதோ பவ | ஸுப்ரஸந்நோ பவ | ஸுமுகோ பவ | வரதோ பவ | ப்ரஸீத ப்ரஸீத ||
(* ஸ்த்ரீ தேவதையானால் 'ஆவாஹிதா பவ, ஸ்த்தாபிதா பவ.' என்ற வகையில் இங்குள்ள சொற்களை மாற்றிக் கொள்ளவும்.
**ஸ்வாமிந் ஸர்வஜகந்நாத யாவத் பூஜாவளாநகம் | தாவத் த்வம் ப்ரீதி பாவேந பிம்பேஸ்மிந் ஸந்நிதிம் குரு || என்று பிரார்த்தித்து, வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒன்றை நிவேதநம் செய்யவும்.
(** ஸ்த்ரீ தேவதையானால் 'தேவி ஸர்வ ஜகந்மாத:' என்று மாற்றிக்கொள்ளவும்.)
குறிப்பு : இவ்வாறு பூர்வாங்க பூஜைகளை முடித்தபின் பிரதான பூஜையைத் தொடங்கவேண்டும்.
 
 பாதாஸநம் குரு ப்ராஜ்ஞ நிர்மலம் ஸ்வர்ண நிர்மிதம் | 
 பூஷிதம் விவிதை: ரத்நை: குரு த்வம் பாதுகாஸநம் || 
  உமாமஹேச்வராய நம:, ரத்நாஸநம் ஸமர்ப்பயாமி. 
 
 கங்காதி ஸர்வ தீர்த்தேப்ய: மயா ப்ரார்த்தநயாஹ்ருதம் | 
 தோயம் ஏதத் ஸுகஸ்பர்சம் பாத்யார்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம் ||  
  உமாமஹேச்வராய நம:, பாத்யம் ஸமர்ப்பயாமி.  
 
 கந்தோதகேந புஷ்பேண சந்தநேந ஸுகந்திநா |  
 அர்க்யம் க்ருஹாண தேவேச பக்திம் மே ஹ்யசலாம் குரு ||  
  உமாமஹேச்வராய நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி.  
 
 கர்பூரோசீர ஸுரபி சீதளம் விமலம் ஜலம் |  
 கங்காயாஸ்து ஸ்மாநீதம் க்ருஹாணாசமநீயகம் ||  
  உமாமஹேச்வராய நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.  
 
 ரஸோஸி ரஸ்ய வர்கேஷு ஸுக ரூபோஸி சங்கர |  
 மது பர்க்கம் ஜகந்நாத தாஸ்யே துப்யம் மஹேச்வர ||  
  உமாமஹேச்வராய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.  
 
 பயோததி க்ருதஞ்சைவ மதுசர்க்கரயா ஸமம் |  
 பஞ்சாம்ருதேந ஸ்நபநம் காரயே த்வாம் ஜகத்பதே ||  
  உமாமஹேச்வராய நம: பஞ்சாம்ருத ஸ்நாநம் ஸமர்ப்பயாமி.  
 
 மந்தாகிந்யா: ஸமாநீதம் ஹேமாம்போருஹ வாஸிதம் |  
 ஸ்நாநாய தே மயா பக்த்யா நீரம் ஸ்வீக்ரியதாம் விபோ ||  
  உமாமஹேச்வராய நம: சுத்தோதகஸ்நாநம் ஸமர்ப்பயாமி.  
   ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.  
 
 வஸ்த்ரம் ஸூக்ஷ்மம் துகூலே ச தேவாநாமபி துர்லபம் |  
 க்ருஹாண த்வம் உமாகாந்த ப்ரஸந்நோ பவ ஸர்வதா ||  
  உமாமஹேச்வராய நம:, வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி.  
 
 யக்ஞோபவீதம் ஸஹஜம் ப்ரஹ்மணா நிர்மிதம் புரா |  
 ஆயுஷ்யம் பவ வர்ச்சஸ்யம் உபவீதம் க்ருஹாண போ: ||  
  உமாமஹேச்வராய நம: யஜ்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி.  
 
 ஸ்ரீகண்டம் சந்தநம் திவ்யம் கந்தாட்யம் ஸுமனோஹரம் |  
 விலேபநம் ஸுரச்ரேஷ்ட மத்தத்தம் ப்ரதி க்ருஹ்யதாம் ||  
  உமாமஹேச்வராய நம: கந்தம் ஸமர்ப்பயாமி.  
 
 அக்ஷதாந் சந்த்ர வர்ணாபாந் சாலேயாந் ஸதிலாந் சுபாந் |  
 அலங்காரார்த்தமாநீதாந் தாரயஸ்வ மஹாப்ரபோ ||  
  உமாமஹேச்வராய நம: அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.  
 
 மால்யாதீநி ஸுகந்தீநி மாலத்யாதீநி வை ப்ரபோ |  
 மயா ஹ்ருதாநி புஷ்பாணி பூஜார்த்தம் தவ சங்கர ||  
  உமாமஹேச்வராய நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி.  
 

|| அங்க பூஜா ||

சிவாய நம : பாதௌ பூஜயாமி சர்வாய நம : குல்பௌ " ருத்ராய நம : ஜாநுநீ " ஈசாநாய நம ஜங்கே " பரமாத்மநே நம : ஊரு " ஹராய நம : ஜகநம் " ஈச்வராய நம : குஷ்யம் " ஸ்வர்ண ரேதஸே நம : கடிம் " மஹேச்வராய நம : நாபிம் " பரமேச்வராய நம : உதரம் " ஸ்படிகாபரணாய நம : வக்ஷஸ்தலம் " த்ரிபுரஹந்த்ரே நம : பாஹூன் " ஸர்வாஸ்த்ர தாரிணே நம : ஹஸ்தான் " நீலகண்டாய நம : கண்டம் " வாசஸ்பதயே நம : முகம் " த்ரியம்பகாய நம : நேத்ராணி " பால சந்த்ராய நம : லலாடம் " கங்காதராய நம : ஜடாமண்டலம் " ஸதாசிவாய நம : சிர : " ஸர்வேச்வராய நம : ஸர்வாண்யங்காநி " (பிறகு அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்யவும்)

|| சிவாஷ்டோத்தர சத நாமாவளி : ||

ஓம் சிவாய நம : ஓம் வீரபத்ராய நம : " மஹேச்வராய நம : " கணநாதாய நம : " சம்மவே நம : " ப்ரஜாபதயே நம : " பிநாகிநே நம : " ஹிரண்ய ரேதஸே நம : " சசிசேகராய நம : " துர்த்தர்ஷாய நம : " வாமதேவாய நம : " கிரீசாய நம : (60) " விரூபாக்ஷாய நம : " கிரிசாய நம : " கபர்திநே நம : " அநகாய நம : " நீலலோஹிதாய நம : " புஜங்க பூஷணாய நம : " சங்கராய நம : (10) " பர்க்காய நம : " சூல பாணயே நம : " கிரிதந்வநே நம : " கட்வாங்கிநே நம : " கிரிப்ரியாய நம : " விஷ்ணுவல்லபாய நம : " க்ரித்திவாஸஸே நம : " சிபிவிஷ்டாய நம : " புராராதயே நம : " அம்பிகா நாதாய நம : " பகவதே நம : " ஸ்ரீ கண்டாய நம : " ப்ரமதாதிபாய நம : (70) " பக்தவத்ஸலாய நம : " ம்ருத்யுஞ்ஜயாய நம : " பவாய நம : " ஸூக்ஷம தநவே நம : " சர்வாய நம : " ஜகத் வ்யாபிநே நம : " த்ரிலோகேசாய நம : (20) " ஜகத் குரவே நம : " சிதி கண்டாய நம : " வ்யோம கேசாய நம : " சிவா ப்ரியாய நம : " மஹாஸேந ஜநகாய நம : " உக்ராய நம : " சாரு விக்ரமாய நம : " கபர்திநே நம : " ருத்ராய நம : " காமாரயே நம : " பூத பதயே நம : " அந்தகாஸுர ஸூதநாய நம : " ஸ்தாணவே நம : (80) " கங்காதராய நம : " அஹிர்புத்ந்யாய நம : " லலாடாக்ஷாய நம : " திகம்பராய நம : " கால காலாய நம : " அஷ்டமூர்த்தயே நம : " க்ருபா நிதயே நம : (30) " அநேகாத்மநே நம : " பீமாய நம : " ஸாத்விகாய நம : " பரசு ஹஸ்தாய நம : " சுத்த விக்ரஹாய நம : " ம்ருகபாணயே நம : " சாச்வதாய நம : " ஜடாதராய நம : " கண்ட பரசவே நம : " கைலாஸ வாஸிநே நம : " அஜாய நம : " கவசிநே நம : " பாப விமோசநாய நம : (90) " கடோராய நம : " ம்ருடாய நம : " த்ரிபுராந்தகாய நம : " பசுபதயே நம : " வ்ருஷாங்காய நம : " தேவாய நம : " வ்ருஷபாரூடாய நம : (40) " மஹா தேவாய நம : " பஸ்மோதூளித விக்ரஹாய நம : " அவ்யயாய நம : " சாம ப்ரியாய நம : " ஹரயே நம : " ஸ்வரமயாய நம : " பகநேத்ரபிதே நம : " த்ரயீமூர்த்தயே நம : " அவ்யக்தாய நம : " அநீச்வராய நம : " தக்ஷாத்வரஹராய நம : " ஸர்வஜ்ஞாய நம : " ஹராய நம : (100) " பரமாத்மநே நம : " பூஷதந்தபிதே நம : " சோம ஸூர்யாக்நி லோசநாய நம : " அவ்யக்ராய நம : " ஹவிஷே நம : " ஸஹஸ்ராக்ஷாய நம : " யஜ்ஞ மயாய நம : (50) " ஸஹஸ்ரபதே நம : " ஸோமாய நம : " அபவர்க்க ப்ரதாய நம : " பஞ்சவக்த்ராய நம : " அநந்தாய நம : " ஸதாசிவாய நம : " தாரகாய நம : " விச்வேச்வராய நம : " பரமேச்வராய நம : (108) ஸாம்ப பரமேச்வராய நம :, நாநாவித பரிமளாத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி ||

உத்தராங்க பூஜை

வநஸ்பதிரஸோத்பூத : கந்தாட்யச்ச மநோஹர : | ஆக்ரேய : ஸர்வதேவாநாம் தூபோயம் ப்ரதிக்ருஹ்யதாம் || உமாமஹேச்வராய நம:, தூபம் ஆக்ராபயாமி. ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்நிநா யோஜிதம் மயா | தீபம் க்ருஹாண தேவேச த்ரைலோக்ய திமிராபஹம் || உமாமஹேச்வராய நம:, தீபம் தர்சயாமி. நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவ பக்திம் மே ஹ்யசலாம் குரு | சிவேப்ஸிதம் வரம் தேஹி பரத்ர ச ப்ராம் கதிம் || உமாமஹேச்வராய நம:, மஹாநைவேத்யம் ஸமர்ப்பயாமி.
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம், பர்க்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓம் தேவ ஸவித : ப்ரஸுவ, ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி, அம்ருதோபஸ்தரண மஸி. ஓம் ப்ராணாயஸ்வாஹா, ஓம் அபாநாயஸ்வாஹா, ஓம் வ்யாநாயஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாயஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணேஸ்வாஹா, ப்ரஹ்மணி ம ஆத்மா அம்ருதத்வாய.
 
அம்ருதாபிதாநமஸி.  
  நைவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.  
 
 பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர் யுதம் |  
 கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் || 
  உமாமஹேச்வராய நம:, கர்ப்பூர தாம்பூலம் ஸமர்ப்பயாமி.  
 
 சக்ஷுர்தம் ஸர்வலோகாநாம் திமிரஸ்ய நிவாரணம் |  
 ஆர்திக்யம் கல்பிதம் பக்த்யா க்ருஹாண பரமேச்வர || 
  உமாமஹேச்வராய நம:, கர்ப்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி. 
      ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. 
 
 யாநி காநிச பாபாநி ஜந்மாந்தர க்ருதானி ச |  
 தாநி தாநி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே ||  
  உமாமஹேச்வராய நம:, பரதக்ஷிணம் ஸம்ர்ப்பயாமி.  
 
 புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண கருணாநிதே |  
 நீலகண்ட விரூபாக்ஷ வாமார்த்த கிரிஜ ப்ரபோ ||  
  உமாமஹேச்வராய நம: புஷ்பாஞ்ஜலிம் ஸமர்ப்பயாமி. 
   மந்த்ரபுஷ்பம் ஸுவர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி.  
 
 மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஸுரேச்வர | 
 யத்பூஜிதம் மயா தேவ பரிபூரணம் ததஸ்து தே ||  
 
 வந்தே சம்புமுமாபதிம் ஸுரகுரும் வந்தே ஜகத்காரணம்  
  வந்தே பந்நகபூஷணம் ம்ருகதரம் வந்தே பசூநாம் பதிம் | 
 வந்தே ஸூர்ய சசாங்க வஹ்நி நயநம் வந்தே முகுந்த ப்ரியம்  
  வந்தே பக்த ஜநாச்ரயஞ்ச வரதம் வந்தே சிவம் சங்கரம் ||  
 
 நமச்சிவாய ஸாம்பாய ஸகணாய ஸஸூநவே | 
 ஸநந்திநே ஸகங்காய ஸவ்ருஷாய நமோ நம: || 
 
 நமச்சிவாப்யாம் நவ யௌவநாப்யாம்  
  பரஸ்பராச்லிஷ்ட வபுர் தராப்யாம் | 
 நகேந்த்ர கந்யா வ்ருஷ கேதநாப்யாம்  
  நமோ நமச்சங்கர பார்வதீப்யாம் || 
 

அர்க்யம் :

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் | ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வவிக்நோப சாந்தயே || மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா பரமேச்வர ப்ரீத்யர்த்தம், மயா சரித சிவராத்ரி வ்ரதபூஜாந்தே க்ஷீரார்க்ய ப்ரதாநம், உபாயநதாநஞ்ச் கரிஷ்யே || நமோ விச்வஸ்வரூபாய விச்வஸ்ருஷ்ட்யாதி காரக | கங்காதர நமஸ்துப்யம் க்ருஹாணார்க்யம் மயார்ப்பிதம் || உமாமஹேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் | நமச்சிவாய சாந்தாய ஸர்வபாபஹராயச | சிவராத்ரௌ மயா தத்தம் க்ருஹாணார்க்யம் ப்ரஸீத மே || உமாமஹேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் | துக்க தாரித்ர்ய பாபைச்ச தக்தோஹம் பார்வதீபதே | மாம் த்வம் பாஹி மஹாபாஹோ க்ருஹாணார்க்யம் நமோஸ்து தே || உமாமஹேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் | சிவாய சிவரூபாய பக்தாநாம் சிவதாயக | இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ப்ரஸந்தோ பவ ஸர்வதா || உமாமஹேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் | அம்பிகாயை நமஸ்துப்யம் நமஸ்தே தேவி பார்வதி | அம்பிகே வரதே தேவி க்ருஹ்ணீதார்க்யம் ப்ரஸீத மே || பார்வத்யை நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் | ஸுப்ரஹ்மண்ய மஹாபாக கார்த்திகேய ஸுரேச்வர | இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ வரதோ பவ || ஸுப்ரஹ்மண்யாய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் | சண்டிகேசாய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் | அநேந அர்க்ய ப்ரதாநேந பகவாந் ஸர்வதேவதாத்மக: ஸபரிவார ஸாம்ப பரமேச்வர: ப்ரீயதாம் ||

உபாயந தாநம் :

ஸாம்பசிவ ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸநம், அமீதே கந்தா: (தாம்பூலம் தக்ஷிணை, வாயநம் ஆகியவற்றைக் கீழ்க்கண்ட மந்த்ரம் சொல்லித் தர வேண்டும்.)
 
 ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ: | 
 அநந்தபுண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயச்ச மே || 
 
 இதமுபாயநம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸாம்பசிவ ப்ரீதிம்  
  காமயமாந: துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம||  (நமஸ்காரம் செய்யவும்) 
 
 
   || ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து

சிவசக்தி (ஹைட்ரஜன்)

பூமியில் பொருட்கள் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆனபோதிலும், இன்னும் ஒன்றுடன் ஒன்று வேதியல் வினைகளில் ஈடுபட்டு புதிய பொருட்கள் தோன்றுவது, நிற்காமல் நடந்து கொண்டிருக்கிறது. பொருட்கள் எந்த வித வேதியல் வினைகளில் ஈடுபட்டாலும் ஒன்றிலிருந்து இன்னொன்றாகத்தான் மாறுகிறது என்றும், எந்த சூழ்நிலையிலும் முற்றிலுமாக அழிவதில்லை என்பதையும் கண்டுபிடித்தனர்.ஒரு பொருளை எரித்தால் அது அழிவதில்லை அது காற்றாகவும் திரவமாகவும் மாறி இந்த பூமியில்தான் சுற்றிக்கொண்டிருக்கும். எப்பொருளுக்கும் அழிவில்லை.இதன் மூலம் ”பொருள் அழிவின்மைத் (Conservation of Matter ) தத்துவம்” தோன்றியது.



இந்த படத்திற்கான கவிதை

காற்றால் வந்தது
வீழ்ந்தது எப்படியோ

தீயினால் சுட்டபோது
மண்ணில் இருந்து

எடுத்ததை மண்ணிற்கு
விட்டு விட்டு

காற்றால் வந்தது
காற்றாய் போனது.


மேலும் தனிமங்களை (Elements) ஆராயத் தொடங்கிய அறிவியலார்கள் இந்த 92 பொருட்களும் மிக நுண்ணிய அணுக்களால் ஆகியவை என்றும், அந்த அணுக்களும் இரண்டு நுண்ணிய அடிப்படை துகள்களால் ஆனவை என்று அறிந்தனர். அனைத்துப் பொருட்களும் இந்த இரண்டு துகள்களின் மாறுபட்ட எண்ணிக்கையினாலும் அமைப்பினாலும் உருவானவையே என்று கண்டு பிடிக்கப்பட்டது. ஆக தொன்னூற்றி இரண்டாக ஆக இருந்தது சுருங்கி இரண்டில் வந்து நின்று விட்டது. இந்த அண்டமும் அனைத்துப் பொருட்களும் பெரும்பாலும் இந்த இரண்டு துகள்களினால் உருவாக்கப்பட்டவை என நிறுவப் பட்டது. அவைகள் எலக்ட்ரான்,புரோட்டான் எனவும் இவை இரண்டும் கலந்துள்ள கலவைக்கு நியூட்ரான் எனவும் பெயரிடப் பட்டது.

இந்த நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் அணுவாக எப்படி அமைந்துள்ளது என நீல்ஸ் போர் என்பவரால் விளக்கப் பட்ட மாடலுக்குப் பெயர் ”நீல்ஸ் போர் மாடல்” எனப் படுவதாகும். அதாவது சூரியமண்டலம் எப்படி அமைந்துள்ளதோ அது போன்று, மையத்தில் நியூட்ரான் புரோட்டான்கள் அமைதியாக இருக்க எலக்ட்ரான்கள் அதைச்சுற்றிக் கொண்டே இருக்கின்றன.

அண்டத்தில் உள்ளது பிண்டமானது




பிண்டத்தில் உள்ளது அண்டமானது.




ஹீலியத்தின் அணு அமைப்பு





மேலே உள்ளது லிதியம் என்ற தனிமத்தின் அணு அமைப்பு.


ஏதோ ஒரு பிரளய அழிவினால் இன்றுள்ள அனைத்து உயிரினமும்,அறிவியல் அறிவும் அழிந்து போய்விட அடுத்து தோன்றும் உயிரினத்துக்கு, மிகக் குறைந்த வார்த்தைகளில் சொல்லப்படும் அதிகளவில் தகவல்கள் உள்ள அறிவியல் செய்தி என்னவாக இருக்கும் என்று ரிச்சர்டு ஃபெய்மன் என்ற அறிவியலாரிடம் கேட்டதற்கு அவர் கூறிய செய்தி இது தான்,

”அனைத்துப் பொருட்களும், அழுத்தினால் எதிர்க்கும், விலக்கினால் ஈர்க்கும் இடையறா இயக்கம் உள்ள ஒருவகை துகள்களினால் ஆனவையே”


அழிவுக்குப் பின்னும்


கடந்த 200 வருடங்களில் நூற்றுக்கணக்கான அறிஞர்கள், சில சமயங்களில் உயிரைக் கொடுத்து கூட கண்டுபிடித்தவற்றை இதைவிட சுருக்கமாகவும் விளக்கமாகவும் கூற முடியாது. இந்த ஒரு கண்டுபிடிப்புதான் எல்லாவற்றிற்கும் திறவுகோல்.

ஆக இந்த அண்டத்தில் கானப்படும் பொருட்களுக்கும் இயக்கத்திற்கும் காரணம் சில துகள்களும், சில விசைகளும், சிலவிதிகளும் தான் என்பது முடிவாயிற்று. அதில் சில முக்கியமான விசைகள் என்னவென்று பார்ப்போம்.


விசைகள்

1) ஈர்ப்பு விசை

2) மின் காந்த விசை

3)அணுக் கருவிசை(வலியது)

4)அணுக் கருவிசை(மெலியது)

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்

1) ஈர்ப்பு விசை

எடையுள்ள பொருட்களெல்லாம் தங்களது எடைக்குத் தக்கவாறு எடையின் மையத்தை நோக்கி மற்ற பொருட்களை இழுக்கும் ஈர்ப்பு விசை கொண்டுள்ளது. இது பொருட்களின் எடையையும் இடையேயுள்ள தூரத்தையும் மட்டும் பொறுத்துள்ளது. இருப்பதிலே மிகவும் பலமற்ற விசை இதுதான்.ஆனாலும் இதனுடைய பிரமாண்டத்தை புரிந்து கொள்ள ஒரு உதாரணம், சுமார் எட்டு கோடி மைல் தொலைவில் மணிக்கு சுமார் 70,000 மைல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தையும் நிலவையும் இழுத்து பிடித்து தனது வட்டபாதையில் சூரியன் வைத்திருப்பதற்கு காரணம் இந்த பலமற்ற விசைதான். இந்த விசைக்கு தூரம் ஒரு பொருட்டல்ல எடை இருந்தால் போதும்.

2) மின்காந்த விசை

முதலில் காந்த விசை, மின்விசை என தனித்தனியாக வகைப்படுத்தப் பட்டிருந்தது. ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளதால் இரண்டும் ஒன்றாக்கப்பட்டது. காந்தத்தில் வடதுருவம் தென் துருவம் உள்ளது போல் மின்விசை இரு வகைப்படும். அவை முறையே நேர் மின்னோட்டம், எதிர் மின்னோட்டம் ஆகும். இதன் முக்கிய பண்பு ,ஒத்த மின்னோட்டங்கள் ஒன்றை ஒன்று விலக்கி தள்ளும் மாறுபட்ட மின்னோட்டங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்ளும். காந்தத் துண்டுகளிலும் மாறுபட்ட துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கவும் ஒரே துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்கவும் செய்யும், இந்த பண்பை பார்த்திருப்பீர்கள்.இது ஒரு பலமான விசைதான்.

3)அணுக்கருவிசை(வலியது)

இது துகள்களுக்கிடையேயான ஈர்ப்பு விசைதான்.வலுவான விசை என்பது நியூட்ரான், புரோட்டான் இவைகளுக்கிடையேயான ஈர்ப்பு விசையாகும். மிக நெருக்கத்தில் அதாவது அணுவுக்குள் மட்டும் தான் இந்த விசை செயல்படும். இதை மைக்ரோ மில்லிமீட்டரில் செயல்படும் ஈர்ப்பு விசையாக கூட கருதலாம்.ஆனால் ஈர்ப்பு விசையை விட பல பில்லியன் பில்லியன் மடங்கு பலமானது இவ்விசைக்கு பலம் ஒரு பொருட்டல்ல தூரம் தான் பொருட்டு.


4) அணுக்கருவிசை(மெலியது)

இது பொதுவாக கதிர் வீசும் இயல்புடன் சம்பந்தப் பட்டது. கதிரியக்கத்துடன் தொடர்புடையது. பின்னர் பார்க்கலாம்.

துகள்கள்

இப்பொழுது துகள்கள் பற்றி பார்ப்போம். அந்த இரண்டு அடிப்படை துகள்களும் முறையே புரோட்டான், எலக்ட்ரான் ஆகும். புரோட்டான் ஓர் அலகு எடையும் ஓர் அலகு நேர் மின்னோட்டமும் கொண்டது. எலக்ட்ரான் எடையற்றது, ஆனால் ஓர் அலகு எதிர் மின்னோட்டம் மட்டும் கொண்டது. புரிதலின் எளிமை கருதி ஒரு உருவகத்திற்காக புரோட்டான், எலக்ட்ரான் நியூட்ரான் இவற்றை சிவன்(ஆண்), சக்தியாக (பெண்),அர்த்த நாரீஸ்வரர் (ஆண்+பெண்) குறிப்பிடுகிறேன். அப்பொழுதான் சிவசக்தியை பார்க்கும் போது ஒரு ஹைட்ரஜன் நினைவுக்கு வரும். அர்த்தநாரீஸ்வரரை பார்க்கும் போது நியூட்ரான் ஞாபகத்திற்கு வரும்.

ஒரு அணுவுக்குள் புரோட்டானும், எலக்ட்ரானும் எப்பொழுதுமே சம எண்ணிக்கையில்தான் இருக்கும். புரோட்டான் மையத்தில் இருக்கும்.ஆகவே எலக்ட்ரானின் எண்ணிக்கையும் இருப்பிடமும் தான் பொருட்களின் தன்மையை தீர்மானிக்கின்றது.


புரோட்டானும் (நேர் மின் துகள்) எலக்ட்ரானும் (எதிர் மின் துகள்) அருகருகே இருந்தால் ஒன்றை ஒன்று ஈர்த்து சிவன், சக்தியாக இருந்தவர்கள் சக்தியாக மாறி மறைந்து விடுவதைப் போல் சக்தி வெளிப்பாட்டுடன் மறைந்துவிடும்.



சிவசக்தி (ஹைட்ரஜன்)



அர்த்தநாரீஸ்வரார் (நியூட்ரான்)

நியூட்ரானைத் தனிமைப்படுத்தினால் அது நிலையற்றது. (ஏதோ பக்தர்கள் விரும்பினால் மட்டும் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்து மறைவது போல்) சில நிமிடங்களில் சிதைவுற்று எலக்ட்ரான். புரோட்டான் நியூட்ரினோ என மூன்று துகள்களாக மாறிவிடும். நியூட்ரினோ ஒரு அடிப்படை துகள் இல்லையா எனக் கேட்கலாம், இந்தக் கேள்வி நியாயமானது. ஆனால் தற்பொழுது அது நிலையற்றது என கருத்தில் கொள்ளுங்கள் பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

ஒரே ஒரு புரோட்டானும், எலக்ட்ரானும் உள்ள பொருட்களுக்கெல்லாம் ஆதிமூலமாக கருதப்படும் ஹைட்ரஜன் என்பதற்கு சரியான உதாரணமாக சிவசக்தியைத் தான் குறிப்பிட வேண்டும். மேலும் நமக்கு இப்போதைக்கு, நமது சிற்றறிவுக்கு குழப்பத்தை விளைவிக்க கூடிய, முழுமையாக அறியப் படாத ஏறத்தாழ 30(முப்பது) துகள்கள் (அவைகளை சிவ கணங்களோ என நீங்கள் கருதிக் கொண்டால் அது உங்களது விருப்பம்), மற்றும் அவற்றுடன் தொடர்புள்ள கதிர்கள் பற்றிய கருத்துக்கள் உள்ளன. அவற்றைப் பற்றி விஞ்ஞானிகள் என்ன மாதிரி சரடு(String) தி(ய)ரிக்கிறார்கள் என்று பின்னர் பார்ப்போம். இப்பொழுது ”முதலில் வந்தது முதலில்” என்ற ரீதியில் பார்ப்போம்.

விதிகள்

இயற்பியல், வேதியல்,தாவரவியல்,விலங்கியல் ஆகிய எல்லாவற்றிற்கும் விதிகளும், மாறிலிகளும் ஏராளம் உள்ளன. இயற்பியலில் நமக்கு தேவையான விதிகளை மட்டும் பார்ப்போம்.

1)” இயங்கும் இயங்காப்பொருட்கள் அனைத்தும் வேறெரு விசை தாக்காத வரை அதே திசையில் தனது நிலையிலேயே தொடர்ந்து இருக்கும்.” இந்த விதியை மட்டும் நீங்கள் சரியாக புரிந்து கொண்டால் பிற்காலத்தில் நீங்கள் ஒரு ஐன்ஸ்டீன்தான். இயற்பியலின் மூலாதாரம் இதுதான். எல்லா இயற்பியல் கண்டுபிடிப்புகளுக்கும் ஆதாரம் இதுதான்

2) ஒவ்வொரு விசைக்கும் எதிர் விசை உண்டு.

3) ஈர்ப்பு விசை எடைக்கு நேர் விகிதத்தில் கூடுகிறது, தூரத்தின் அடுக்கிற்கு எதிர் விகிதத்தில் குறைகிறது என சுமாராக அறிந்து கொள்ளலாம்.

4) ஒத்த மின்னோட்டங்கள் ஒன்றை ஒன்று விலக்கி தள்ளும் மாறுபட்ட மின்னோட்டங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்ளும்.

ஒரு பொருளின் வேகத்தை எது வரைக்கும் அதிகப் படுத்தலாம்?.வேகத்தை கூட்ட கூட்ட கூடிக் கொண்டேதான் இருக்கும். ஆனால் வேகம் கூட ஆரம்பித்தவுடன், அது காலத்தோடு போட்டுக் கொண்ட உடன்பாட்டை கையில் எடுத்துக் கொண்டு காலத்தை கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ளும். வேகம், எனக்கு ஒரு வரம்பு உள்ளது அதற்கு மேல் கூடமாட்டேன் ஆகவே நீ உன்னை குறைத்துக் கொள் என்று காலத்திடம் கூறிவிடும்.(Time dilation)

அது என்ன உடன்படிக்கை?

எப்பொருளாயிருந்தாலும் அதன் வேகத்தின் எல்லை, ஒளியின் வேகத்திற்கும் குறைவுதான், ஃபோட்டான் போன்ற துகளால் மட்டும்தான் அந்த வேகத்தை அடைய முடியும். அதற்கு மிஞ்சிய வேகம் கிடையாது. எந்த பொருளாவது ஒளியின் வேகத்தை அடையும் போது (அடைய முடியாது என்பதுதான் உன்மை, நெருங்கும் போது) அந்த இடத்தில் காலம் தன்னை மிகவும் அதீதமாக சுருக்கிக் கொள்ளும். எடையோ எல்லையில்லாத அளவுக்கு கூடிவிடும், பொருளின் நீளமும் எல்லையில்லாத அளவுக்கு குறைந்துவிடும்,ஒரே தொகுப்பில் எதிரெதிர் திசையில் சென்றாலும் ஒன்றை ஒன்று சார்ந்து எப்படிப் பட்ட சூழ்நிலையிலும் ஒளியின் வேகத்தை மீற முடியாது.(லாரன்ஸ் டிரான்ஸ்பார்மேஷன்கள்)(Lorentz Transformations)

வேகம், காலம், எடை, வெளி ஆகிய நான்கும் பெரு வெடிப்புக் காலத்தில் பிறக்கும் போது போட்டுக் கொண்ட ஒப்பந்தம் அது. நான்கும் ஒரு தொகுப்பை (Frame of reference) பொறுத்தவரை ஒன்றை ஒன்று சார்ந்திருக்க வேண்டும் என்பதுதான் அது. அதனால்தான் அதற்கு சார்பியல் தத்துவம் எனப் பெயரிடப் பட்டுள்ளது.

எடுத்துக் கொள்ளப்பட்ட குறிப்பிட்ட தொகுப்பில் (frame of reference) ஒன்று மீறும் போது ஒளியைத் தவிர மற்ற மூன்றும் தங்களை மாற்றிக் கொண்டு ஏதோ ஒருவகையில் ஈடுகட்டிக் கொள்கிறது.

குறைந்த பட்ச வெப்பநிலை என்பது -273 பாகை செல்சியஸ் என்றும் அதற்கு கீழ் கிடையாது என்பதுவும் விதி. ஏனென்றால் பொருளில் அணுக்களின் இயக்கம்தான் வெப்பமாக உணரப் படுகிறது.அணுக்களின் (துகள்கள் அல்ல) இயக்கம் நின்றுவிட்டால் வெப்பம் சூன்யம் எனப்படும். அந்த சூன்ய வெப்ப நிலைதான் 0 டிகிரி கெல்வின்(-273 டிகிரி செல்ஸியஸ்). உலகில் வெப்பம் என்பது மட்டும்தான் உள்ளது குளிர் என்று ஒன்று அறிவியலைப் பொறுத்தவரை இல்லை. அந்த மைனஸ் என்பதெல்லாம் ”பனிக்கட்டியைப் பொறுத்து” என்கிற மனிதக் கற்பிதக் கணக்கு. (இங்கேயும் ஃப்ரேம் ஆப் ரெபரன்ஸ் தான்). மனிதன் எப்படி காலத்தை கி.மு, கி.பி என்று பிரித்து குழப்பியடிக்கிறானோ அது போன்றதுதான். (இந்த கி.மு, கி.பி பற்றி இன்னும் சில பட்டதாரிகளுக்கே சரியாகப் புரிய வில்லை என்பதுதான் யதார்த்த நிலை).

ஆகவே தற்பொழுது கூறப்பட்டுள்ள அமைப்பில், அணுவுக்குள் இருக்கும் புரோட்டான், எலக்ட்ரான் நிலைமை பற்றி சில கேள்விகள் எழுகிறது. உங்களுக்கு எழுகிறதா?

1) அணுவுக்குள் புரோட்டனும் எலக்ட்ரானும் ஒன்றை ஒன்று ஈர்த்து (நியூட்ரலாக) ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து சமன் செய்து சூன்யமாக மாறி விடாமல் எவ்வாறு தனித்தனியே இருக்கின்றது?




பதில் : சூரிய மண்டல மாதிரியான அமைப்பில்தான், ஈர்க்கும் பொருட்களாகி சூரியன், பூமி ஒன்றை ஒன்று ஈர்த்தாலும் ஒன்றுக்குள் ஒன்று முழ்கிவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் சுற்று வட்டப்பாதையில் பூமியின் வேகம் சூரியனின் ஈர்ப்பை சமன் செய்து விடுகிறது. ஆகவே அது போன்ற அமைப்பில் தான் நியூட்ரான், புரோட்டான் அடங்கிய நியூக்கிளியஸை மையமாக கொண்டு எலக்ட்ரான்கள் வட்டப்பாதையில் மையத்திலிருந்து இருக்கும் தூரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சுற்றுவதாக கூறலாம். இங்கு எலக்ட்ரானின் சுற்றும் வேகம்தான் ஈர்ப்பை வென்று பிரித்தே வைக்கிறது. ஆகவே அணுவுக்குள் இடையறாத இயக்கம் நடந்து கொண்டே இருக்கிறது.


2) ஒன்றை ஒன்று விலக்கி தள்ளும் ஒத்த தன்மையுள்ள புரோட்டான்கள் எவ்வாறு மையத்தில் ஒற்றுமையாக சேர்ந்து இருக்க முடியும்?



பதில் : ஹைட்ரஜனை தவிர மற்ற எல்லா தனிமங்களிலும் புரோட்டான்களின் எண்ணிக்கைக்கு சமமாகவோ அல்லது கூடுதலாகவோ நியூட்ரான்கள் உள்ளன. நியூட்ரான்களின் அணுக்கருவிசை புரோட்டான்களின் தள்ளுவிசையை மிஞ்சி புரோட்டான்களை ஈர்த்து வைத்துள்ளது. ஆகவே நியூக்கிளியசில் அமைதி நிலவுகிற்து.

இங்கே காட்டப் பட்டுள்ள லிதியம் அணுவில் 3புரோட்டான்கள், 4 நியூட்ரான்கள், 3 எலக்ட்ரான்கள் உள்ளது. இதிலுள்ள அதிகப்படியான நியூட்ரான்கள், புரோட்டான்களை இழுத்துப் பிடித்து வைத்துள்ளது.

ஹைட்ரஜனில் ஒரே ஒரு புரோட்டான் இருப்பதால் தள்ளுமுல்லுக்கு இடமில்லை. ஆகவே நியூட்ரானின் தயவு தேவை இல்லை.ஆகவே நியூட்ரானும் இல்லை.

3) நியூட்ரானையும் ஏன் தனி ஒரு துகளாகக் குறிப்பிடவில்லை?

புரோட்டனும் எலக்ட்ரானும் சேர்ந்த கலவைதான் நியூட்ரான்,ஆகவே அடிப்படைத்துகள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

சிவனையும் சக்தியையும் கணக்கில் கொண்டதால் அர்த்தநாரீஸ்வரரை தனியாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை அல்லவா அது போன்றதுதான்.

துகள்கள் பருப்பொருளா (குறிப்பிட்ட உருவம் கொண்டதா) ?

சூரிய மண்டல ஈர்ப்பு விசையும் அணுவுக்குள் இருக்கும் மின்விசையும் வெவ்வேறு விதமாக செயல்படும். சாதாரணமாக உபயோகத்தில் உள்ள மின் இயக்கவியல் விதிகள் எதுவும் அணுவுக்குள் உள்ள துகள்களுக்கு ஒத்து வரவில்லை. ஏனென்றால் அது துகளா அல்லது அலையா என பிரித்தறிய முடியவில்லை.அதாவது குறிப்பிட்ட உருவம் கொண்டதா அல்லது உருமில்லா ஆற்றலா எனக் கூறமுடியாத இரண்டும் கெட்டான் நிலை. காந்தத் துண்டுகளை சுற்றிலும் ஒரு கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி இருப்பதை தெரிந்து கொள்ளலாம். அதைத் தான் காந்த புலம் என்கிறோம். இது காந்த அலைகளால் ஏற்பட்டதானாலும் அதுவும் ஒருவகைத் துகள் சம்பந்தப்பட்டது தான். அதனால்தான் மின்காந்த அலைகள் என்கிறோம். மின்துகள்கள் தான் காந்தஅலைக்கு காரணம்