14 April 2016

துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க

ஒவ்வொரு வெள்ளியும் காலை 6-7 மணிக்குள் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகை கடை சென்று மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹாலக்ஷ்மி வரவிற்கு குறைவே இருக்காது.
வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்கு 5 வெற்றிலை 5 கொட்டை பாக்கு 5 ஒரு ரூபாய் நாணயம் அனைத்தும் பூஜையில் வைத்து லக்ஷ்மி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும். இப்படியே 14 வாரங்கள் செய்து முடிந்ததும் நாணயங்களை எடுத்து கொண்டு மற்றதை கடலில் அல்லது ஓடும் ஆற்றில் போட்டு விடலாம்.
வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்னை மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு மாதமும் செய்யலாம்.
வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்.
(1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம்.
(2) நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.
(3) மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம்,மன அழுத்தம்,சோர்வு போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும்.காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம்.நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும்.அதை குடிக்க கூடாது.
(4) காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி வர பய உணர்ச்சிகள் குறையும்.
(5) தற்கொலை எண்ணங்கள் மேலும் வாழ பிடிக்காதது போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி அணிய வேண்டியதில்லை.
அமானுஷ்ய பரிகாரங்கள
(1) வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது
(2)காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்
(3) இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும்
(4) வீட்டை சுற்றி நீரோட்டங்கள்இருந்தாலோ செயற்கையாகஅமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்
(5) காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும்
(6) சமையலறையும், படுக்கையரையும் அருகருகே இருக்கும் படி அமைத்து கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.
(7) துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும்.
நன்றி.


12 April 2016

கடன் தீர கணபதி வழிபாடு

கடன் தீர கணபதி வழிபாடு :-கீழ்க்கண்ட இரு மந்திரங்களும் கடன் தீர உதவும் சிறந்த மந்திரங்கள்.இரண்டில் எதையும் செய்யலாம்.ருணஹர கணபதி:-ஓம் |கணேசாய |ருணம் சிந்தி வரேண்யம்| ஹூம் நம பட்||ருஊநாசன கணபதி:-ஓம்|க்லௌம் க்ரோம் கணேசாய|ருணம் சிந்தி வரேண்யம்| ஹூம் நம பட்||ஸ்வாஹா ||இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர மலையளவு கடனும் விரைவில் தீரும்.கடன் பட்டவர்கள் செவ்வாய் கிழமை மதியம் 12:00 - 1:30 மணிக்குள் கடன் தொகையில் சிறிதளவாவது திரும்பசெலுத்தினால் கடன் விரைவில் தீரும்.புதன் கிழமை கடனை திரும்பச்செலுத்தக்கூடாது அவ்வாறு செலுத்தினால் கடன் அடையாது கூடிவிடும்.கிருத்திகை,கேட்டை,பூராடம் நட்சத்திரத்தன்று கடனை திரும்பச்செலுத்த,அடகு வைத்த பத்திரம்,நகை இவைகளை மீட்க திரும்பவும் கடன் வாங்கும் அடகு வைக்கும் ச

பஞ்சநத நடராஜர்

பஞ்சநத நடராஜர்
ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி. இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்கிற தகவல் கோயில் குருக்கள் மூலம் தெரியவந்தது.
சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.
பாறைகளின் சிறப்பு....... ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக்கலை வல்லுநரால் கூறப்பட்டுள்ளது. நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சிறப்பு பெறுகின்றன.
சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் இவ்வூர் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்து பாடாலூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள திருஊற்றத்தூர் (தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது) என்ற தலத்தில் உள்ள அபூர்வ நடராஜ பெருமான் திருமேனி.

10 April 2016

வாழ்க்கையில் வெற்றி பெறனுமா?... இதோ சில வழிகள்

வாழ்க்கையில் வெற்றி பெறனுமா?... இதோ சில வழிகள்...

* பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்தை பிடித்ததாக மாற்றிக் கொள்ளுங்கள். விரைவில் நீங்களே ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.

* வாழ்க்கையில் எதற்கும் பயப்படாதீர்கள். வேலை பாதுகாப்பு என்பதை கருதி ஒரே இடத்தில் இருந்து விடாதீர்கள். புதிய முயற்சிகளால் மட்டுமே முன்னேற்றத்தை உணர முடியும்.

* மற்றவர்களையும் உங்களுக்காக உழைக்க வைக்கும் புத்திசாலித்தனம் இருந்தால் மட்டுமே நல்ல ஒரு leader ஆகா முடியும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

* கீழே விழுவது வேகமாக எழுவதற்காகவே, அதனால் விழுவதைப்பற்றி கவலை படாதீர்கள். அது வெற்றியின் ஏணிப்படி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* வெற்றிக்கு நேரம் அவசியம் என்பதால், நேரத்தை உருப்படியாக செலவிட தெரிந்து கொள்ளுங்கள்.

* எதற்கும் கவலை படுவதை விட்டு விட்டு எப்பொழுதும் பாசிடிவ் எண்ணங்களுடன் இருங்கள்.

* வெற்றிக்கான முதல் சாவி உழைப்பு தான். அதனால் தினமும் குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் உழையுங்கள்.

* முடியாது, கஷ்டம், நடக்காது போன்ற சொற்களை உங்கள் அகராதியில் இருந்து தூக்கி எறியுங்கள்.

* வாய்ப்புக்களை தவற விடாதீர்கள். சரியான நேரத்தில் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

* நீங்கள் என்னதான் உழைத்தாலும் சில நேரங்களில் அதிர்ஷ்டம் தேவை. இறைவனை நம்புங்கள். உங்கள் வெற்றியினை இறைவனுக்கு காணிக்கை ஆக்குங்கள்.

* வாழ்க்கையில் சந்தோஷம் என்பது பணத்தினால் மட்டுமே வருவது இல்லை. அதனால், உலகில் அனைத்து விஷயங்களையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

* நாளை பார்க்கலாம் என்று எதனையும் தள்ளிப் போடாதீர்கள். அது நடக்காமலே கூட போய்விடக்கூடும்.

* துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடிய தைரியம் வேண்டும்.

* வெற்றி உடனடியாக கிடைத்து விடாது. ஒவ்வொரு படியாக, மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுங்கள்.

* தொழிலில் பல சிக்கல்களும் இடயூருகலும் வரும் என்றாலும் கூட, நீங்கள் அஞ்சாமல் மன தைரியத்துடன் அவற்றை சந்திக்க வேண்டும்.

துர்முகி ஆண்டு வரும் வியாழகிழமை பிறக்கிறது

துர்முகி ஆண்டு வரும் வியாழகிழமை பிறக்கிறது::
'துர்முகி 'என்ற பெயர் இருப்ப தால் அது எப்படியிருக்குமோ என்று கலங்க வேண்டியதில்லை.

"துர்முக" என்றால் குதிரை என்று அர்த்தம். துர்முகி ஆண்டில் சுக்கிரனின் ஆதிக்கம் உள்ளது. சுக்கிரனுக்கு அடுத்ததாக ஆதிக்கம், அதிகாரம் பெறுவது, புதன் .
புதனின் அதிதேவதை ஶ்ரீஹயக்ரீவர்.

ஞானம், கல்வி, நேர்மை ஆகியவற்றை அளிப்பவர் இவர்.
அவர் மகளே 'துர்முகி '.அவள் பெயரை இந்த துர்முகி ஆண்டு முழுவதும் ஶ்ரீ ஹயக்ரீவரின் சக்தியே மக்களுக்குத் துணையிருந்து வழிகாட்ட இருப்பதால், இந்த ஆண்டிற்கு இந்த பெயர் ஏற்பட்டுள்ளது.

அதாவது, பரி (குதிரை) முகத்தைத் கொண்டுள்ள ஶ்ரீ ஹயக்ரீவரின் அனுக்ரகத்தை தரும் ஆண்டாகத் திகழப் போவதை துர்முகி என்ற அவர் மகள் பெயர் கொண்டுள்ளது.
தந்தையை வணங்க மகள் மனம் குளிர்வாள் அல்லவா .அதனால்
ஸ்ரீ ஹயக்ரீவரை வணங்கி இந்த வருடம் முழுவதும் நன்மை அடைவோம் .

இங்கனம்

யோகா

"யோகா"

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சித்தர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர்.

ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை ( Resting Position / Posture ) கொண்டு இயங்குவதை காண்கின்றனர்.

இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர்.

பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர்.

நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது.

இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக வடிவமைக்கின்றனர்.

இவையே பிற்காலங்களில் யோகாசனங்கள் மற்றும் பிரணாயாமங்கள் எனப்படுகின்றன.

இந்த வகையில் மயிலை அடிப்படையாக கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம் ஆகும்.

வடமொழியில் மயூரா என்றால் மயில் ஆகும்.

இதை போன்றே பிற உயிரினங்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்களின் பட்டியலை கீழே காணலாம்.

ஒவ்வொரு ஆசனத்தின் அருகிலும் அதற்கு அடிப்படையான வடமொழி சொல்லும், அதன் தமிழ் பொருளும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

மகராசனம் (மகரம்–முதலை),
சலபாசனம் (சலபம் – வெட்டுக்கிளி),
சசாங்காசனம் ( சசாங்கம் – முயல் ),
மச்சாசனம் ( மச்சம் – மீன் ),
கூர்மாசனம் ( கூர்மம் – ஆமை ),
புஜங்காசனம் ( புஜங்கம் – பாம்பு ),
பாகாசனம் ( பாக – கொக்கு ),
பேகாசனம் ( பேக – தவளை ),
குக்கூட்டாசனம் ( குக்கூடம் – சேவல் ),
சிம்மாசனம் ( சிம்மம் – சிங்கம் )
உஷ்ட்ராசனம் ( உஷ்ட்ரா – ஒட்டகம் ),
கபோடாசனம் ( கபோடா- புறா )

இதைப் போன்று மரம் மற்றும் மலர்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்கள் :

பத்மாசனம் ( பத்மா – தாமரை மலர் ),
விருட்சாசனம் ( விருட்சம் - மரம் )

பிறகு அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை அடிப்படையாகக் கொண்டும் ஆசனங்களை வடிவமைக்கின்றனர்.

அவற்றுள் சில பின்வருமாறு,

நாவாசனம் ( நாவா – படகு ),
தனுராசனம் ( தனுரா-வில் ),
ஹலாசனம் ( ஹலா- கலப்பை ),
துலாசனம் ( துலா – தராசு )
சக்கராசனம் ( சக்கரா- சக்கரம் ),
தண்டாசனம் ( தண்டா – கம்பு,தடி )

இதே போன்று சில உயிரினங்களை அடிப்படையாக கொண்டு, மூச்சு பயிற்சிமுறைகளையும் வடிவமைக்கின்றனர்.

இவ்வாறாக முற்றிலும் இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகளை தமிழ் மொழியில் தொல் தமிழர்கள் வடிவமைத்தனர்.

இதனை நீண்ட உடல் நலத்திற்காகவும்,உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பொருட்டும் அன்றாடம் பயிற்சி செய்து வந்துள்ளனர்.

இப்பழக்கம் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.

அதன் பிறகு காலப்போக்கில் கடல்கோள்கள் போன்ற இயற்கை சீற்றங்களாலும், ஆட்சி மாற்றங்களாலும் இந்த வழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது.

பின்னர் ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி செல்வாக்கு பெற்றிருந்த வேளையில் ( இன்றைக்கு ஆங்கிலம் செல்வாக்கு பெற்றிருப்பதை போல ) இந்த இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள் சமஸ்கிருத மொழியில் அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன.

இவ்வாறு சமஸ்கிருத மொழியில்இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் என பெயர் பெறுகின்றன.

இனி இந்த யோகாசனங்கள் வரலாற்றில் எவ்வாறெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன என காணலாம்.

தமிழ்நாட்டில் அகத்தியர், திருமூலர், பதஞ்சலி உள்ளிட்ட பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.

இவர்கள் எழுதிய நூல்களில் யோகாசனங்களை பற்றிய செய்திகளை காணலாம்.

இதில் பதஞ்சலி முனிவர் வடநாட்டுக்கு சென்று யோக சூத்திரம் என்ற நூலை எழுதுகின்றார்.

இது எட்டு உறுப்புகளை கொண்டதால் அஷ்டாங்க யோகா என அழைக்கப்படுகின்றது.

பிறகு 15 ஆம் நூற்றாண்டில், யோகி ஸ்வாத்மராமா என்பவர் ஹத யோகா பற்றிய நூலை எழுதுகின்றார்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளில் ராஜ யோகம் பற்றி விளக்குகின்றார்.

இதனைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் அரவிந்தர், சுவாமி சிவானந்தர் போன்றோர் ஆன்மீக ரீதியிலான யோகாவை பரப்புகின்றனர்.

1920 களில் மைசூர் மாகாணத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணமாச்சார்யா எனும் யோக நிபுணர் ஆரோக்கிய ரீதியிலான யோகாவை வடிவமைக்கின்றார்.

பல்வேறு நோய்களுக்கும் இயற்கை உணவு +மருந்து + யோகாசனங்கள் அமைந்த சிகிச்சை திட்டங்களை தீட்டி நோய்களை குணப்படுத்துகின்றார்.

இம்முறை பின்னர் பல்வேறு யோக ஆசிரியர்களாலும் கடைபிடிக்கப்படுகின்றது.

1980 களில் டீன் ஆர்னிஷ் ( Dean Ornish ) எனும் அமெரிக்க மருத்துவ நிபுணர், யோகாவின் மூலம் இருதய நோய்கள் குணமடைவதை மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கின்றார்.

சுவாமி சச்சிதானந்தாவிடமிருந்து இவர் யோகாவை கற்றவராவார்.

இதன் பிறகு மேற்கு நாடுகளில் யோகாவை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இன்றைய நிலையில் தமிழ் வழி யோகா என்பது இல்லை.

நாம் இன்று பெறக்கிடைப்பது வட நாட்டு யோகா ஆகும்.

வருங்கால ஆராய்ச்சிகள் முற்றிலும் இயற்கை சார்ந்த, அனைவருக்கும் பொதுவான தமிழ் வழி யோகாவை உருவாக்கும் என நம்புவோமாக.

யோகா செயல்படும் விதம் :

யோகா பயிற்சிகளின் போது தொடர்புடைய பகுதிகளில் இரத்த ஒட்டம் அதிகரிக்கின்றது.

இதனால் ஊட்டச்சத்துக்களும்,ஆக்ஸிஜனும் தேவையான அளவு செல்களுக்கு கிடைப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கின்றது.

இதனால் உள்ளுறுப்புகள் நன்கு இயங்குகின்றன.

பொதுவாக உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் நன்கு உறுதி செய்யப்பட்டு உடலின் ஆரோக்கியம் தொடர்ந்து அதிகரிக்கின்றது.

உடல் முழுவதும் பரவியுள்ள நரம்பு மண்டலமும் சீரான நிலையில் வைக்கப்படுகின்றது.

நம் சுவாசத்திற்கும், எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

கோபம், கண்ணீர்,அதிக சந்தோஷம் போன்ற உணர்ச்சி வசப்பட்ட தருணங்களில் நாம் வேகமாக மூச்சு விடுவோம்.

அதாவது அந்த நிலையில் நம் மனதின் எண்ண ஒட்டங்கள் அதிகமாக இருக்கும்.

மாறாக அமைதியான தருணங்களில் ஆழ்ந்து மூச்சு விடுவோம்.

அதாவது தெளிவான எண்ண நிலையில் இருப்போம்.

இந்த அடிப்படையில் மூச்சு பயிற்சி, நம் சுவாசத்தை ஆழப்படுத்தி அமைதியான எண்ணங்களை நிலை கொள்ளச் செய்யும்.

இது உளவியல் ரீதியாக மிகுந்த பலனை நமக்கு தரும்.

யோகா பற்றிய குறிப்புகள் :

• யோகாசனங்கள் எப்பொழுதும் இருபக்க சமச்சீரானவை.

முதலில் இடது பக்கம் செய்யப்படும்அசைவுகள், அடுத்ததாக வலது பக்கமும் அதே அளவு செய்யப்படும்.

இந்த அடிப்படையில் பார்க்கும்போது இரண்டு கைகளையும் சமமாக பயன்படுத்தும் பழக்கம் தொல் தமிழர்கள் வாழ்வில் இருந்திருக்க வேண்டும்.

இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.

• ஒவ்வொரு ஆசனத்திலும், ஆரம்ப நிலையில் தொடங்கி ஒவ்வொரு நிலையாக கடந்து இறுதி நிலையை அடைய வேண்டும்.

பிறகு அதே படிவரிசையில் ஆரம்ப நிலையை அடைய வேண்டும்.

அதாவது 1-2-3-4-5 என்றவாறு ஆசனத்தின் இறுதி நிலையை அடைந்தபின் 5-4-3-2-1 என்றவாறு ஆரம்ப நிலைக்கு திரும்ப வேண்டும்.

இதுவே உடலின் பாதுகாப்பை உறுதி செய்யும்.மீறினால் சுளுக்கு,தசைபிடிப்பு ஏற்படலாம்.

• ""''ஸ்திரம் சுகம் ஆசனம்" என்ற அடிப்படையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

முதலில் உடல் ஆடாமல் நிலையாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

பிறகு வலியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

பிறகு இறுதி நிலையை முயற்சிக்க வேண்டும்.

இதற்கு உரிய நாட்களை எடுத்து கொள்ளவேண்டும்.

சில ஆசனங்களை செய்வதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம்.

மாறாக அவசரப்பட்டால் தவறு நேரலாம்.

• கீழ்நோக்கிய அசைவுகள் மூச்சு விட்டுக் கொண்டே செய்யப்படும்.

மேல்நோக்கிய அசைவுகள் மூச்சை இழுத்துக் கொண்டே செய்யப்படும்.

இந்த வகையில் யோகப்பயிற்சிகள் புவியீர்ப்பு விசையை கருத்தில் கொண்டவை.

யோகாவின் இன்றைய அவசியங்கள் :

இன்றைய நிலையில் நமது வாழ்வில், உடலுழைப்பு குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம்.

இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, அல்சர், முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என பல்வேறு நோய்களை சந்தித்து வருகின்றோம்.

பொருளாதார நெருக்கடி, அவசரம் , பதற்றம் காரணமாக பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றோம்.

இதனால் நம்முடைய மன நலமும் குறைகின்றது.

இதனால் சமூகத்தில் உளவியல் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.

இவற்றுக்கெல்லாம் தீர்வாக நம் முன்னோர்கள் வழியில், நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

தினசரி அரைமணி நேரமாவது யோக பயிற்சிகளை செய்யலாம்.

இயலாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்ய முயற்சிக்கலாம்.

இதன் மூலம் உங்கள் உடல் நலமும்,மனநலமும் மேம்படுவது உறுதி.

நீண்ட காலம் தொடர்ந்து செய்தால் நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்.

இது சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அமைதிக்கு வழி வகுக்கும்.

குடும்பத்தில் ஒருவர் யோக பயிற்சிகள் செய்யும்போது, இந்த பழக்கம் குழந்தைகள், இளைஞர்களிடமும் பரவும்.

எல்லோரும் இன்புற்று வாழலாம்.

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் யோகா பற்றிய விழிப்புனர்வை ஏற்படுத்துவோம்.

"ஆரோக்யமாய் வாழ யோகா அவசியம்"