6 June 2016

சிவனுக்கு உகந்த 8 விரதங்கள்

சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப் பெறலாம்.

சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப் பெறலாம்.

1. சோமவார விரதம் - திங்கள் கிழமைகளில் இருப்பது

2. உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது

3. திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது

4. சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது

5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது

6. பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது

7. அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது

8. கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.
பைரவர் வழிபாடு கைமேல் பலனை தரும்


கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார்.

சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுத மொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது.

கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். அதனால் தான் பைரவர் வழிபாட்டின் பலனைக் குறிக்க இந்தப் பழமொழி வழங்கப்பட்டது. நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள்.

அதுவே அவர்களின் நல்ல பார்வையால் சிலர் எதிர்பாராத நன்மைகளையும், புகழையும் அடைகிறார்கள். நன்மைகள் கிடைத்தால் சரி, ஆனால், வரும் துன்பங்களிலிருந்து மீள என்ன வழி என்று கேட்டால் பைரவர் பூஜை செய்யுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பைரவர் பூஜை செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் என்று பைரவர் வழிபாட்டில் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.

நமது ஜாதகத்தை தகுந்த சோதிடர்களிடத்தில் காண்பித்து நிலவும் கிரக நிலைகளை ஆராய்ந்து, எந்தக் கிரகத்தால் தோஷம் உள்ளதோ, அல்லது எந்தக் கிரகம் பலவீனமாக உள்ளதோ, அது பலமடைய எந்தக் கிரக திசாபுத்தி நடப்பில் உள்ளதோ அதற்குரிய பைரவரை வழிபட்டு நலம் பெறுதல் வேண்டும்.

நவக்கிரகங்களின் தொல்லைகளிலிருந்து மீள ஒன்பது விதமான பைரவ வழிபாடுகள் பரிகாரங்களாக சோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன.நீங்கள் நல்ல பயனை அடைய, கிரகங்களின் பிராணனாக உள்ள பைரவரின் காயத்ரீயையும், அந்த பைரவரின் உபசக்தியின் காயத்ரீயையும் சேர்த்து துதித்து வந்தால் உங்கள் துன்பங்கள் யாவும் ஓடி ஒளியும். இன்பங்கள் எல்லாம் தேடி வரும்.
திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்!

வருஷத்துக்கு ஒருமுறைதான் திருப்பதிக்கு போகமுடியுது…அதுலயும், அங்க இருக்குற கூட்டத்துல பலமணிநேர காத்திருத்தலுக்கு பின்னாலதான் சாமிய பாக்கவே முடியுது.

அதுக்குள்ள அங்க இருக்கறவங்க நம்மள ஜருகண்டி, ஜருகண்டின்னு புடிச்சு தள்ளிவிட்டுடறாங்க..

கூட்ட நெரிசல்ல கோயில விட்டு வெளிய வந்த பின்னாலதான் “அடடா..இதையெல்லாம் சாமிகிட்ட வேண்டலாம்னு இருந்தோமோ, எல்லாத்தையும் மறந்துட்டோமே..

ஆமா, சாமி என்ன அலங்காரத்துல இருந்தாரு..சே..சரியாவே தரிசனம் செய்ய விடலயே..”  இப்படின்னெல்லாம் எல்லாருமே அங்கலாய்ச்சிருப்போம்..,

கூட்ட நெரிசலாலதான் சாமிய சரியா பார்க்க முடியல..சாமிகிட்ட நம்ம பிரார்த்தனைய சொல்லமுடியல..அப்படின்னெல்லாம் நினைச்சிருப்போம்..ஆனா, அதெல்லாம் உண்மையில்லீங்க..

சாமிய நாம தரிசனம் பண்ற இடத்துல இருக்குற ஒரு விசேஷ சக்திதான் இப்படி நம்ம ஞாபக சக்தியோட விளையாடுதுன்னு சொல்றாரு..டாக்டர் ரமண தீட்சிதர்..

இத கேக்கும்போதே எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

சிலநொடிகள்கூட நம்மள  சாமிய பார்க்க விடறதில்ல..
ஆனா, இவங்கெல்லாம்(கோயில் அர்ச்சகர்கள்,தேவஸ்தான அதிகாரிகள்) மட்டும் உள்ளேவே இருந்து மணிக்கணக்குல சாமியோட இருக்காங்களேன்னு பொறாமைப்பட்டேன்..ஆனா, அவங்களுக்கும் இப்படித்தான் நினைவுகள் அழிக்கப்படுவதா ரமண தீட்சிதர் குறிப்பிட்டாரு..

இதுல சாமிய பார்க்க வருகிற சுயநலமில்லாத யோகிகள், வாழும் மகான்களுக்கு மட்டும்தான் இதுல விதிவிலக்காம்..

(சமீபத்துல கூட ஐயா கவிஞர் பெருமாள் ராசுவும் அம்மா மஹாலட்சுமியும் திருப்பதி தரிசனத்துக்கு போயிருந்தப்ப, பொறுமையா அவங்கள எந்த இடையூறும் செய்யாம சாமிய தரிசனம் செய்ய அனுமதிச்சிருக்காங்க..

அதுமட்டுமில்லீங்க..ஐயா கவிஞர் பெருமாள் ராசு சாமிய பாத்துட்டு திரும்பும்போது,

அவர கூப்பிட்டு, “நாராயணா…, இத வாங்கிட்டுப்போங்க நாராயணா….”ன்னு  சொல்லி,

சாமி பாதத்துல இருந்த துளசிதளங்களையும், முந்திரி, பாதாம் போன்ற பிரசாதங்களை கைநிறைய அள்ளி கொடுத்து அனுப்பியிருக்காங்க.)

இனி..,

கருவறைக்குள் நம் வேண்டுதல்கள் மறந்து போவது ஏன்..? ஓர் விசித்திர அனுபவம் பற்றி திருமலை திருப்பதியின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதை பார்ப்போம்

“சுவாமியை தரிசனம் செய்ய கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடும், அடுத்து, சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததும், சுவாமியை நாம் தரிசனம் செய்தபோது இருந்து அலங்காரம், சுவாமியின் கோலம் எல்லாம் மறந்துபோகும் இது ஏன்..எல்லோருக்கும் இப்படி ஓர் விசித்திர அனுபவம் ஏற்படுவதுண்டு.

அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணத்தை இன்று நாம் ஆராய்வோம்.

கருடாழ்வார் சன்னதியில் இருந்து கர்ப்பாலயம் வரையிலும் இருக்கும் ஒரு இடம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு எனர்ஜி பீல்ட் என்று சொல்லப்படும் விஷயமாக இருக்கும்.

இந்த எனர்ஜி பீல்டு என்பது ஆகமத்தில் சொல்லியிருக்கும் வகையில், நித்தியமும் சுவாமியை தரிசிக்க கோடானுகோடி தேவர்கள், கிண்ணரா, கிம்புருஷா,கருடா, கந்தர்வா, சித்தா, சாத்யா, யட்சா, ராட்சசா முதலிய இனங்களைச்சேர்ந்த தேவதைகள் எல்லாரும் சுவாமியை தரிசித்துக்கொண்டு இருப்பார்கள் என்றும்,

சுவாமி அஷ்டோத்ரத்தில் வரும் நாமப்படி ஸ்வேத்ததீபம் எனும் ஒரு முக்தி அடைந்த சித்தர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சித்தர்கள் நித்தியமும் சுவாமியை தரிசித்துக்கொண்டிருப்பார்கள் என்றும்,

குமாரதாரா என்ற தீர்த்தத்தில் எப்பவும் தவத்தில் இருக்கும் ஸ்கந்தன் எனும் முருகப்பெருமான் தினமும் சுவாமியை தரிசிப்பார் என்றும்,

பல தேவதைகளும் கர்ப்பகிரகத்தில் சுவாமியை வணங்க வருவார்கள் என்றும்,

அப்படி வருகின்ற தேவதைகளுக்கு பௌதீகமான சொரூபம் (கண்ணுக்கு புலனாகும் உருவம் ) இல்லை என்றும்,

அவர்கள் சக்தி சொரூபமாகவே சூட்சும ரூபத்தில் வந்து அங்கு கர்ப்பாலயத்தில் இருப்பார்கள் என்றும்,

அவர்களுடைய வருகையினால், அவர்களுடைய இருக்கையினால்,சக்தி வளையங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.

இப்படிப்பட்ட தேவதைகள் இருக்கும் சக்திவளையங்களுக்குள் மனிதர்கள் செல்லும்போது மனிதர்களின் அறிவு அலைகள் ஆல்பா வேவ்ஸ் இந்த சக்தி வளையத்தின் தாக்குதலால் ஸ்தம்பித்து போய்விடுகிறது.அதாவது, இட்ஸ் கோயிங் பிளாங்..,

அதனால், அவர்கள் சுவாமியிடம் என்ன வேண்டும் என்று கேட்க வந்தார்களோ,அந்த விஷயங்களை மறந்து விடுவார்கள்…எ லாஸ் ஆப் மெமரி ஹேப்பன்ஸ்..,

அதேசமயத்தில் கருவறையில் சாமியை தரிசித்த ஞாபகங்கள் மூளையில் தங்காமல் துடைத்து விடப்படுகிறது…டெலிட்டிங் தி மெமரி…,

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சக்தி வளையத்தின் மிகத்தீவிரமான தாக்குதலால் ஏற்படும் மாற்றங்கள்.

இது திருமலை ஸ்ரீ வேங்கடமுடையான் கோயில் கருவறைக்குள் நடக்கும் அதிசயங்களில் ஒன்று…”

ஆச்சரியமா இருக்குல்ல..அடுத்ததா, ஜனவரி 11 அன்னைக்கு வைகுண்ட ஏகாதசி..இதுபத்தியும் சில புதிய தகவல்கள சொல்லியிருக்காரு..டாக்டர் ரமண தீட்சிதர்

“..திருமலை திருப்பதியில் இன்று (ஜனவரி 11) வைகுண்ட ஏகாதசியை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். மாசத்தில் இரண்டு முறை வரும் ஏகாதசி, இரண்டு பர்வங்கள்,திருவோண நட்சத்திரம் இந்த ஐந்தும் விஷ்ணு பஞ்சகம் என்று மஹாவிஷ்ணுவிற்கு பீரீத்தியான நாட்கள்.

அன்று மட்டும் மற்ற வைணவ கோயில்களில் வடக்கு துவாரம் வழியாக உற்சவர்  கொண்டுவரப்பட்டு  பக்தர்கள் வடக்குதுவாரம் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால், திருமலை திருப்பதியில் வடக்குதுவாரம் என்பதற்கு பதிலாக ஏகாதசி,  துவாதசி இரண்டு நாட்களுக்கு மட்டும் வைகுண்ட பிரதட்சணம் நடைபெறுகிறது.

அதாவது 12 ம் நூற்றாண்டில் ஆனந்த நிலையம் விரவுபடுத்துவதற்காக, கர்ப்பாலயத்தை சுற்றிவரும் பாதை அகலப்படுத்தப்பட்டது. அந்த பழைய குறுகலான பாதையே வைகுண்ட பிரதட்சணமாக, இந்த இருநாட்கள் மட்டும் திறந்து விடப்படுகிறது.

மற்றநாட்களில் நாம் கோயிலை சுற்றிவரும் பாதையில் ஆனந்த நிலைய விமானத்தில் வடக்குமுகமாக விமான வேங்கடேஸ்வர சாமி எழுந்தருளியிருக்கிறார்.கூடவே, பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார் ,

வருடத்தின் 365 நாளும் இவரை தரிசிக்கலாம், இது வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் என்பது ஆகமம்.

paramapadanathar(within the coloured box)

ஆனந்த நிலைய விமானத்தில் பரமபதநாதர் என்பது வைகுண்டத்தில் பாற்கடலில் மஹாவிஷ்ணு கோலம் ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் பூமியை தொட்டுஇருக்கும் இந்த திருக்கோலம்தான் பரமபதநாதர் எனப்படுகிறது.

இது பிரம்மா முதலானவர்களுக்குக்கூட கிடைக்காத தரிசனம் பரமபதநாதர் எனபது இந்த தரிசனத்தை பக்தர்கள் ஆனந்த நிலைய விமானத்தில் எப்போதும் தரிசிக்கலாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று மற்றொரு விசேஷம்,

ரதரங்கடோலோத்சவம். புதிதாக செய்யப்பட்ட தங்கத்தேரில் உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதகராக விசேஷமான திருவாபரணங்கள் அணிந்து  மாடவீதி வலம் வருவார் என்பது விசேஷம்..”

இனி ஒவ்வொரு முறை திருப்பதி போகும்போதும் சாமிகிட்ட என்ன வேண்டறதுன்னெல்லாம் யோசிக்க வேண்டியதில்லீங்க…உந்தன் திருக்கமல பாதங்களே சரணம்னு மட்டும் நாம நமஸ்காரம் செஞ்சிட்டா போதும்..மீதி எல்லாம் பெருமாள் பாத்துக்குவாருன்னு முடிவு செஞ்சிருக்கேன்.

அதே மாதிரி, ஆனந்த நிலையம் (கருவறைக்கு மேலிருக்கும் தங்ககோபுரம்) விமானத்தில் வடக்கு முகமாக ஒரு வெள்ளி தோரணத்தில் விமான வெங்கடேஸ்வரர் சிலை இருக்கும். இது ஒரு சிவப்பு அம்புக்குறியால மார்க் செய்யப்பட்டிருக்கும்.

இது எதுக்காகன்னு ஒருமுறை கவிஞர் ஐயா பெருமாள் ராசு அவங்ககிட்ட கேட்டிருந்தேன்.

“..உள்ளே, சாமிய நாம கூட்டத்துல சரியா பார்த்து வேண்டுதல்கள சொல்லமுடியாத காரணத்துனால, கோபுரத்துல அதே கோலத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர் அமைக்கப்பட்டிருக்காரு..,இவருகிட்ட உங்களோட வேண்டுதல்கள மனசார சொல்லிட்டு வாங்க..அது அப்படியே மூலவர்கிட்ட சொன்னமாதிரி..நிச்சயம் நல்ல பலன் தரும்..”

அப்படின்னு ஐயா கவிஞர் பெருமாள் ராசு அவங்க சொல்லியிருந்தாங்க..

இது உங்க எல்லாருக்கும் பயன்படட்டும்னுதான் இங்க எழுதியிருக்கேன். அதுமட்டுமில்லாம..இனிமே, திருப்பதிக்கு போறவங்க..ஆனந்த நிலையத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர மட்டும் தரிசனம் செஞ்சிட்டு வந்துடாம,

அவருக்கு பக்கத்தலயே இருக்குற பரமபதநாதரையும் வணங்கிட்டு வாங்க..இவர எப்போ தரிசனம் செஞ்சாலும் வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு பெருமாள தரிசனம் செஞ்ச பலன் கிடைக்கும்னு ஆகமங்கள்லயே சொல்லியிருக்குன்னு ரமண தீட்சிதரே சொல்லியிருக்காரு.

சாமானிய ஜனங்களுக்கும் சின்ன,சின்ன இந்த நுட்பமான ஆன்மீக தகவல்கள் போய் சேரணும், அதன்மூலம் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கணும் அப்படிங்கறதுதான்  பெருமாளோட விருப்பம்..இதையெல்லாம் உங்களோட பகிர்ந்துகொள்ள கிடைச்ச இந்த வாய்ப்பு.. எனக்கு ரொம்பவே பெருமிதம்..!

திருமலை திருப்பதி – பிரபஞ்ச ரகசியங்கள் –
தினம் தினமும் மருத்துவத்துக்கே கட்டுப்படாத நோயினால் கஷ்டப்படுகிறீர்களா?

ஸ்ரீ தன்வந்திரி பகவானை மனதில்
நினைத்து வீட்டில் தீபம் ஏற்றி
தீபத்திற்கு முன்பு கீழ்க்கண்ட
இந்த ஸ்லோகத்தை 108 முறை
ஒரு மண்டலம் (48 நாட்கள்)
த்தியினித்து வர உங்களை பிடித்த
நோய்கள் விட்டோடும்.....!

முடிந்தால் ஸ்ரீ வைத்தீஸ்வரன், மற்றும் ஸ்ரீ ரங்கநாதர் ஆலயங்களில் உள்ள
தன்வந்திரி பகவானையும் தரிசித்து வரலாம்.....!
வெற்றிலை பரிகாரம்

மேஷம்:
வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துனபங்கள் அகலும்.
ரிஷபம்:
வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.
மிதுனம்:
வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.
கடகம்:
வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக் கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்.
சிம்மம்:
வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்.
கன்னி:
வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.
துலாம்:
வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.
விருச்சிகம்:
வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.
தனுசு:
வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
மகரம்:
வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
கும்பம்:
வெற்றிலையில் நெய் வைத்து சனிகிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
மீனம்:
வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.