1 July 2016

புலிப்பாணி வெற்றிலையில் மை

புலிப்பாணி வெற்றிலையில் மை
                   - புலிப்பாணி  வெற்றிலையில் மை
"பாரப்பா நிலவானை மலைகள் தோறும்
பண்பாகத் தானிருக்கு மறிந்து பாரு
வாரப்பா வதினுடைய விரையைத் தானும்
வளமாகப் பத்துபல மெடுத்து வந்து
சீராப்பா தலைமஞ்சள் கொடியு மாவுஞ்
சிறப்பாக முப்பாக முப்பூவும் வராகள் கூட்டித்
தேரப்பா வில்லைதட்டி யுலரப் போடு
திறமாக யுலர்த்தியதைத் தயிலம் வாங்கே."

- புலிப்பாணி -

மலைகளில் நிலவாகை என்று ஒருவகை செடி வளர்ந்திருக்கும், அந்த செடியைக் கண்டு பிடித்து அதன் விதையில் பத்து பலம் எடுத்து அதனுடன் தலைமஞ்சள் கொடியின் மாவு ஒரு விராகனும், முப்பூ ஒரு விராகனும் சேர்த்து நன்றாக அரைத்து வில்லைகளாகத் தட்டி அந்த வில்லைகளை நன்கு உலரவைத்து பின்னர் அதில் இருந்து குழித்தைலம் இறக்கி எடுத்துக் கொள்..

"வாங்கியே ஆள்காட்டி முட்டை தன்னை
வளமான சிற்றண்டத் தயிலம் போலே
தாங்கியே வாங்கியந்தத் தயில நேரே
தயவாகத் தானெத்துச் சிமிழிதனில் வைத்து
ஓங்கியே களவுமுதற் சூன்யம் யாவும்
உற்றுப்பார் தோற்றுமடா கள்ள மெல்லாம்
நீங்கியெ யதுகண் பிடித்துக் கொண்டு
நினைவாகக் குருபாதம் பணிவாய்த் தானே"

- புலிப்பாணி -

ஆள்க்காட்டி என்ற குருவியின் முட்டைகளைக் கொண்டு சிற்றண்டத்தைலம் போல தைலம் இறக்கி, அந்த தைலத்துடன் முன்னர் செய்த குழித் தைலத்தையும் சம அளவில் கலந்து சிமிழ் ஒன்றில் சேமித்து வைத்தல் வேண்டும்.

களவு போனாலோ அல்லது யாராவது சூனியம் செய்வினை போன்றவை செய்தாலோ அவற்றை செய்தவர் யார் என்று அறிய ஒரு வெற்றிலை ஒன்றை எடுத்து அதில் சிமிழில் சேமித்த தைலத்தில் சிறிது எடுத்து தடவி குருநாதரை நினைத்து வணங்கி பார்த்தால் திருடியது, சூனியம் செய்வினை ஏவல் செய்தது யார் என்று அதில் தெளிவாகத் தெரியும் என்கிறார் புலிப்பாணி.

அகத்தியர் பரிபூரணம் மாக வசிய வீபூதி -அகத்தியர் பரிபூரணம் மாக வசிய வீபூதி கிருபையுள்ள புலத்தியனேவ சியமென்று கெணிதமுடன் சொல்லுகிறே நன்றாய் கேளு துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று சுகமாக வெந்த அஸ்த்திநீயே டுத்து மைந்தா அருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி ஆதிசத்தி தன்னுடைய வேருங்கூட்டி க் கருவையினிச் சொல்லுகிறேன்க லசப் பாலாற் கருணையுடன் றானரைத்தே யுண்டை செய்யே புலத்தியனே வசியமுறை ஒன்றை கூறுகிறேன் கேட்பாயாக. சிவனின் பூமியாகிய சுடுகாட்டிற்க்கு சென்று நன்கு வெந்த அஸ்தியை எடுத்துகொள் அத்துடன் விஷ்ணு கிரந்தியின் வேரினை கூட்டி தாய்பால் விட்டரைத்து உருண்டை செய்து வைக்க வேண்டும்.. செய்யடா உருண்டைதனையு லர வைத்துச் செம்மையுட னெருவடுக்கிப் புடத்தைப்போடு மெய்யடா சொல்லிகிறே நீறிப் போகும் வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி வையடா சவ்வாதுடனேபு னுகு சேர்த்து மார்க்கமுடன் அங்கெனவெ லட்ச மோதி மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி மார்கமுடன் அரசாரிடன்சென்று பாரே இவ்வாறு செய்த உருண்டையை நன்கு உலரவைத்து நன்கு எருவடுக்கி புடத்தை போட வேண்டும் புடம் போட்டு வெந்த நீற்றை எடுத்து சவ்வாது ,புனுகு ஆகியவற்றை கூட்டி முறையாக "அங் " என்று ஒரு லட்சம் உரு ஓதி அரசரிடம் சென்று பார் ...... சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம் சிவசிவா செகமோகம் ஸ்ரீவ சியமாகும் அண்டர் பிரானருள் பெருகிவசிய முண்டாம் அப்பனே ஓம் கிலியு றீயு மென்று பண்டுபோலி லட்சமுரு வெற்றிப் பின்னர் பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால் தொண்டரென்றே சத்ருக்கள்வ ணங்கு வார்கள் துஷ்டனென்ற மிருகமெல்லாம்வ சிய மாமே ... -அகத்தியர் பரிபூரணம் அவ்வாறு சென்றவுடன் ராஜவசியமாகும். அதுமட்டுமல்லாது செக வசியமும் பெண் வசியமும் உண்டாகும். சிவன் அருள் பெருகி அனைத்தும் வசியமாகும். முறையாக அமர்ந்து "ஓம் கிலிறீ" என்று லட்சம் உரு கொடுத்து விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டால் எதிரிகள் உன்னை வணங்குவார்கள். துஷ்ட மிருகமெல்லாம் வசியமாகும் ...

அகத்தியர் பரிபூரணம் மாக வசிய வீபூதி

  -அகத்தியர் பரிபூரணம்  மாக

வசிய வீபூதி 

கிருபையுள்ள புலத்தியனேவ  சியமென்று 
 கெணிதமுடன் சொல்லுகிறே நன்றாய் கேளு 
துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று 
 சுகமாக வெந்த அஸ்த்திநீயே டுத்து மைந்தா
அருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி 
 ஆதிசத்தி தன்னுடைய வேருங்கூட்டி க் 
கருவையினிச் சொல்லுகிறேன்க லசப் பாலாற்
 கருணையுடன் றானரைத்தே யுண்டை செய்யே 

 புலத்தியனே வசியமுறை ஒன்றை கூறுகிறேன் கேட்பாயாக. சிவனின் பூமியாகிய சுடுகாட்டிற்க்கு சென்று நன்கு வெந்த அஸ்தியை எடுத்துகொள் அத்துடன் விஷ்ணு கிரந்தியின் வேரினை கூட்டி தாய்பால் விட்டரைத்து உருண்டை செய்து வைக்க வேண்டும்..

செய்யடா உருண்டைதனையு லர வைத்துச்
 செம்மையுட னெருவடுக்கிப் புடத்தைப்போடு 
மெய்யடா சொல்லிகிறே நீறிப் போகும் 
 வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி 
வையடா சவ்வாதுடனேபு  னுகு சேர்த்து 
 மார்க்கமுடன் அங்கெனவெ லட்ச மோதி 
மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி 
 மார்கமுடன் அரசாரிடன்சென்று பாரே 

இவ்வாறு செய்த உருண்டையை நன்கு உலரவைத்து நன்கு எருவடுக்கி புடத்தை போட வேண்டும் புடம் போட்டு வெந்த நீற்றை எடுத்து சவ்வாது ,புனுகு ஆகியவற்றை கூட்டி முறையாக "அங் " என்று ஒரு லட்சம் உரு ஓதி அரசரிடம் சென்று பார் ......

சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம் 
 சிவசிவா செகமோகம் ஸ்ரீவ சியமாகும் 
அண்டர் பிரானருள் பெருகிவசிய முண்டாம் 
 அப்பனே ஓம் கிலியு றீயு மென்று 
பண்டுபோலி லட்சமுரு வெற்றிப் பின்னர் 
 பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால் 
தொண்டரென்றே சத்ருக்கள்வ ணங்கு வார்கள் 
 துஷ்டனென்ற மிருகமெல்லாம்வ  சிய மாமே ...
                                                                               -அகத்தியர் பரிபூரணம் 

அவ்வாறு சென்றவுடன் ராஜவசியமாகும். அதுமட்டுமல்லாது செக வசியமும் பெண் வசியமும் உண்டாகும். சிவன் அருள் பெருகி அனைத்தும் வசியமாகும். முறையாக அமர்ந்து "ஓம் கிலிறீ" என்று லட்சம் உரு கொடுத்துவிபூதியை நெற்றியில் பூசிக்கொண்டால் எதிரிகள் உன்னை வணங்குவார்கள். துஷ்ட மிருகமெல்லாம் வசியமாகும் ...அகத்தியர் பரிபூரணம் மாக வசிய வீபூதி

  -அகத்தியர் பரிபூரணம்  மாக

வசிய வீபூதி 

கிருபையுள்ள புலத்தியனேவ  சியமென்று 
 கெணிதமுடன் சொல்லுகிறே நன்றாய் கேளு 
துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று 
 சுகமாக வெந்த அஸ்த்திநீயே டுத்து மைந்தா
அருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி 
 ஆதிசத்தி தன்னுடைய வேருங்கூட்டி க் 
கருவையினிச் சொல்லுகிறேன்க லசப் பாலாற்
 கருணையுடன் றானரைத்தே யுண்டை செய்யே 

 புலத்தியனே வசியமுறை ஒன்றை கூறுகிறேன் கேட்பாயாக. சிவனின் பூமியாகிய சுடுகாட்டிற்க்கு சென்று நன்கு வெந்த அஸ்தியை எடுத்துகொள் அத்துடன் விஷ்ணு கிரந்தியின் வேரினை கூட்டி தாய்பால் விட்டரைத்து உருண்டை செய்து வைக்க வேண்டும்..

செய்யடா உருண்டைதனையு லர வைத்துச்
 செம்மையுட னெருவடுக்கிப் புடத்தைப்போடு 
மெய்யடா சொல்லிகிறே நீறிப் போகும் 
 வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி 
வையடா சவ்வாதுடனேபு  னுகு சேர்த்து 
 மார்க்கமுடன் அங்கெனவெ லட்ச மோதி 
மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி 
 மார்கமுடன் அரசாரிடன்சென்று பாரே 

இவ்வாறு செய்த உருண்டையை நன்கு உலரவைத்து நன்கு எருவடுக்கி புடத்தை போட வேண்டும் புடம் போட்டு வெந்த நீற்றை எடுத்து சவ்வாது ,புனுகு ஆகியவற்றை கூட்டி முறையாக "அங் " என்று ஒரு லட்சம் உரு ஓதி அரசரிடம் சென்று பார் ......

சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம் 
 சிவசிவா செகமோகம் ஸ்ரீவ சியமாகும் 
அண்டர் பிரானருள் பெருகிவசிய முண்டாம் 
 அப்பனே ஓம் கிலியு றீயு மென்று 
பண்டுபோலி லட்சமுரு வெற்றிப் பின்னர் 
 பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால் 
தொண்டரென்றே சத்ருக்கள்வ ணங்கு வார்கள் 
 துஷ்டனென்ற மிருகமெல்லாம்வ  சிய மாமே ...
                                                                               -அகத்தியர் பரிபூரணம் 

அவ்வாறு சென்றவுடன் ராஜவசியமாகும். அதுமட்டுமல்லாது செக வசியமும் பெண் வசியமும் உண்டாகும். சிவன் அருள் பெருகி அனைத்தும் வசியமாகும். 
முறையாக அமர்ந்து "ஓம் கிலிறீ" என்று லட்சம் உரு கொடுத்துவிபூதியை நெற்றியில் பூசிக்கொண்டால் எதிரிகள் உன்னை வணங்குவார்கள். துஷ்ட மிருகமெல்லாம் வசியமாகும் ...

பரசுராம அவதாரம்

பரசுராம அவதாரம்


பெருமாளின் அவதாரங்களில் இது 6வது அவதாரமாகும்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.


பிரம்மதேவருடைய புத்திரர் அத்திரி மகரிஷி. அவருக்கு ஒருநாள் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரில் உதித்தவன் சந்திரன். அவனை பிரம்மா, பிராமணர்கள், ஒளஷதி மற்றும் நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆக்கினார். இந்த சந்திர வம்சத்தில் தோன்றியவர்களில் காதிராஜன் என்ற மன்னன் பிரசித்தி பெற்றவன். அவனுக்கு சத்தியவதி என்ற பெண் பிறந்தாள். அந்தப் பெண்ணை பிருகு புத்திரரான ரிசிகன் என்ற பிராமணன் தனக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி யாசித்தான். சத்தியவதிக்கு இவன் ஏற்ற கணவன் அல்ல என்று எண்ணிய காதிராஜன், எப்படியாவது அவனைத் தட்டிக் கழிக்க ஓர் உபாயம் செய்தான். அவன் ரிசிகனைப் பார்த்து, பிராமணரே! நீர் என் பெண்ணுக்கு நான் கேட்கும் பொருளைக் கன்னிகா தானமாகத் தரமுடியுமா? என்று வினவினான். என்ன திரவியம் கேட்கிறீர், சொல்லும் என்றான் ரிசிகன். ஆயிரம் குதிரைகள் நீர் கொண்டு தர வேண்டும். அந்தக் குதிரைகளின் காதுகளில் ஒன்று பச்சைப் பசேல் என்றிருக்கும். மற்ற அங்கங்கள் எல்லாம் மிகவும் தூய வெள்ளையாக இருக்கும். இப்படிப்பட்ட தெய்வ ஜாதி குதிரைகளைக் கொண்டு வந்து கொடுத்தால் நீர் திருமணம் செய்ய நான் சத்தியவதியைக் கன்னிகாதானம் செய்கிறேன் என்றான் காதிராஜன். ரிசிகன் நேரே வருணனிடம் சென்று அப்படிப்பட்ட குதிரைகள் பெற்றுக்கொண்டு வந்து காதிராஜன் முன்பு நிறுத்தினான். இதைக் கண்டதும் காதிராஜன், ஆகா! நான் எது சாத்யமாகாது என்று நினைத்துச் சொன்னேனோ அதனையே இவன் எளிதாகச் செய்து முடித்து விட்டான். இனியும் இவனைப் பரிசோதனைக்கு ஆளாக்கினால் ஓர் அந்தணனுடைய சீற்றம், சாபங்களுக்கு இலக்காக நேரிடும்! என்று சிந்தித்தான். சத்தியவதியை அவனுக்குத் திருமணம் செய்து தந்தான். கொஞ்ச காலம் சென்றதும் சத்தியவதிக்கு தனக்கு ஓர் உத்தமமான பிள்ளை பிறக்க வேண்டும் என்று ஆசை வந்தது.

அதே சமயம் சத்தியவதியின் தாய் காதிராஜனுடைய பத்தினிக்கும் அதே ஆசை ஏற்பட்டது. ஆனால் தனக்குப் பிறப்பவன் பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும் என நினைத்தாள். அவர்கள் இருவரின் ஆசைகளையும் நிறைவேற்றும் பொருட்டு ரிசிகன் யாகப் பிரசாதமான இரு கவளை அன்னத்தை வீட்டிற்கு எடுத்து வந்தான். அவைகளில் ஒன்றில் உத்தமமான ஞானக்குழந்தை பிறக்குமாறு மந்திர உச்சாடணம் செய்தான். மற்றொன்றில் தன் மாமியார் விரும்பும் பராக்கிரமம் மிகுந்த பிள்ளை பிறக்க வேண்டும் என்று மந்திர ஆவாகனம் செய்தான். உத்தமனும் ஞானியும் பிறக்குமாறு ஓதிய முதல் கவளை அன்னத்தை விவரமாகச் சொல்லி சத்தியவதியை உண்ணும்படி சொன்னான். மற்ற ஒன்றை தன் மாமியாரிடம் கொடுக்கும்படி சொன்னான். அன்னக் கவளைகளை அளித்து விட்டு ரிசிகன் ஆற்றுக்கு குளிக்கப் போனான். உள்ளூர தனக்கு ஒரு அந்தணனாக ஞானியாகப் பிள்ளை பிறப்பான் என்றும், தன் மாமியாருக்கு பராக்கிரமம் மிக்க க்ஷத்திரிய வீரன் பிறப்பான் என்றும் நம்பிக்கை இருந்தது. குளித்து விட்டு வீட்டுக்கு வந்தான்.ரிசிகனுக்குப் பிள்ளையாக ஜமதக்னி பிறந்தார். சத்யவதி பின்னர் தன் வாழ்க்கையைத் துறந்து கௌசிகா என்ற நதியாக மாறிவிட்டாள். ஜமதக்னி ரேணு என்பவருடைய புத்திரியான ரேணுகா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வசுமனன் முதலான புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் ராமன் என்பவன் கடைசியாகப் பையனாகப் பிறந்தார். அவன் பரந்தாமனுடைய அம்சமாக அவதரித்தான். அவனே பூலோகத்தில் இருபத்தொரு க்ஷத்திரியப் பரம்பரையை வேரோடு அழித்தவன். இவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து பரசு என்ற கோடரியைப் பெற்ற காரணத்தால் இவனுக்குப் பரசுராமன் என்ற பெயர் ஏற்பட்டது. தாய் தந்தையரிடம் மிகவும் அன்பு கொண்டவன் பரசுராமன். ரேணுகாதேவியின் மற்றொரு பெயர் சீலவதி என்பதாகும். அவள் தன் கணவனைத் தவிர உலகில் வேறு தெய்வமே கிடையாது என்ற கொள்கையும் நினைப்பும் கொண்டவள். தினமும் அவள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அங்கே மண்ணைக் கையில் எடுத்துப் பிசைவாள். நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் நான் பிசைந்த மண் அழகியதொரு மண்குடமாக மாறட்டும்! என்பாள். அது குடமாக மாறும். பின்பு அதில் தண்ணீர் மொண்டு வருவாள். இது அவளுக்கு வாடிக்கை. இப்படிக் கொண்டு வந்த தண்ணீரைத்தான் அவள் கணவராகிய ஜமதக்னி முனிவருடைய பூஜைக்கு வழங்குவாள்.

சூரிய குலத்திலே கேகய நாட்டை ஆண்டு வந்த கிருதவீரியன் என்பவனுக்கும் சுனந்தை என்பவளுக்கும் கார்த்தவீர்யார்ச்சுனன் என்பவன் பிறந்தான். அவன் பிறக்கும் போது கைகள் கிடையாது. அதைக் கண்டு பெற்றோர்கள் மிகவும் வருந்தினார்கள். தன் கையிலாக் குறை நீங்க கார்த்தவீர்யார்ச்சுனன் தத்தாத்திரேயரையே உபாசித்து வந்தான். தத்தாத்திரேயர் என்பவர் அத்திரி முனிவருடைய புதல்வர். அத்திரிமுனி பரந்தாமனிடம் அவரே வந்து தனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என விரும்பினார். ஆகவே ஸ்ரீஹரி அம்சமாகத் தத்தாத்திரேயர் அவதரித்தார். அவரைத் தான் அவன் வழிபட்டு வந்தான். அவரை நோக்கித் தவம் செய்த காரணத்தால் அவனுக்கு ஆயிரம் கைகள் முளைத்தன. அதுமட்டுமல்ல. அவனைக் கண்டால் பகைவர்கள் பயப்படும் தன்மையையும் இந்திரிய சக்தி, செல்வம், பொருள் மற்றும் யோகஞான சக்திகளையும் அவன் பெற்றான். இத்தகைய சீரும் சிறப்பும் பெற்றதினால் மிகுந்த செருக்குடன் இருந்தான். தத்தாத்திரேயரிடம் பெற்ற வரத்தால் அவன் காற்றைப் போல எங்கும் தடையின்றித் திரியும் வல்லமையும் பெற்றிருந்தான். அதனால் மூன்று உலகங்களிலும் சஞ்சரித்து வந்தான். ஒரு சமயம் நர்மதா நதியில் தன் பத்தினிகளுடன் நீராடச் சென்றான். தன் ஆயிரம் கைகளால் நீரை ஏரி போல் தேக்கி அதில் நீராடி மகிழ்ந்தனர். நதியின் மேற்புறமாக திக் விஜயம் செய்வதற்காக இராவணன் ஆற்றில் வெள்ளமே இல்லாத இடத்தில் தன் லிங்கத்தை வைத்து சிவபூஜை செய்தான். நீராடி முடித்ததும் கார்த்தவீரியார்ச்சுனன் தான் அணைபோல் வைத்திருந்த தன் ஆயிரம் கைகளை எடுத்ததான். அப்போது நீர் வேகமாக பிரவாகம் எடுத்து பூஜை செய்து கொண்டிருந்த ராவணனின் பொருட்களை அடித்துச் சென்றது. இதை அறிந்த ராவணன் கார்த்தவீரியனோடு சண்டைக்குப் போனான். கார்த்தவீரியனோ ராவணனை தோற்கடித்து தன் பட்டணமான மாகிஷ்மதிக்குக் கொண்டு சென்று சிறைவைத்தான். இதை அறிந்த புலஸ்தியர் கார்த்தவீரியனை மிகவும் வேண்டிக் கொண்டு ராவணனை மீட்டுச் சென்றான்.

ஒரு நாள் தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாடப் போனான் கார்த்தவீரியன். வேட்டையை முடித்துவிட்டு திரும்புகையில் ஜமதக்னி முனிவருடைய ஆசிரமத்திற்கு வர நேர்ந்தது. பசியால் வாடிய அவர்களைக் கண்ட முனிவர் அறுசுவை உண்டியும், பானமும் கொடுத்தார். மற்றும் பல சவுகர்யங்களையும் செய்து கொடுத்தார். தவிர ஆசிரமத்தில் ஏராளமான செல்வமும் இருப்பது கண்டு கார்த்தவீரியனுக்கு பெரிய ஆச்சர்யம் ஏற்பட்டது. முனிவர் ஆசிரமத்தில் நின்ற தேவ பசுவாகிய காமதேனுவால்தான் அவருக்கு அனைத்தும் கிடைக்கிறது என்று தெரிந்து கொண்டான். அந்த பசுவை ஜமதக்னி முனிவரிடம் தனக்கு பரிசாகத் தரும்படிக் கேட்காமல் முனிவரும், அவர் பிள்ளைகளும் இல்லாத சமயத்தில் சேவகர்களை அனுப்பி அதைத் தூக்கிக் கொண்டு சென்றான். முனிவர் ஆசிரமத்திற்கு திரும்பி வந்த நேரம் காமதேனு அங்கு இல்லை. கார்த்தவீரியன் தான் அதை கவர்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த முனிவர், தனது புதல்வர் பரசுராமரிடம் கூறினார்.  இதைக் கேள்விப்பட்ட பரசுராமர் தன் கோடாரி, வில், அம்புகளுடன் நேரே கார்த்தவீரியன் பட்டணமான மாகிஷ்மதிக்கு விரைந்தார். அங்கே கார்த்தவீரியனின் சேனைகள் அனைத்தையும் அழித்தார். கார்த்தவீரியனும் அவருடன் சண்டைக்கு வந்தான். ஆயிரம் கைகளில் ஐந்நூறு வில் ஏந்தி பாணக்கூட்டத்தை அவர் மீது வீசினான். அவனுடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் தன் தபோ பலத்தால் அறுத்து எறிந்ததோடு, அவனுடைய சிரசையும் சீவித் தள்ளினார். பிறகு காமதேனுவையும் அதன் கன்றையும் மீட்டு ஆசிரமத்தில் சேர்ப்பித்தார் பரசுராமர். நடந்ததை எல்லாம் தன் தந்தையிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு அவர் மிகவும் வருந்தினார்.

ராமா, காரணம் இல்லாமல் ஓர் அரசனைக் கொன்று விட்டாயே! அரசனைக் கொல்வது ஓர் அந்தணனை வதை செய்வதைவிடக் கொடிய குற்றம். அரசன் என்பவன் ஆண்டவனின் அம்சம் என்று சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன. செய்த தீமையை மறந்து தீயவர்களை மன்னிப்பது தான் பிராமண தருமம். மேலும் நாம் பொறுமையை கடைபிடிப்பதால் தான் அனைவராலும் பூஜிக்கப்படுகிறோம். இத்தகைய பெரிய பாவத்தை செய்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரைக்குப் போய் பல புண்ணிய ÷க்ஷத்திரங்களை தரிசனம் செய்துவிட்டு வா! என்றார். தந்தையின் அறிவுரை கேட்டு அதன்படி பரசுராமர் ஓராண்டு காலம் தல யாத்திரை செய்தார். பிறகு ஓர் நாள் நீர்நிலைக்குச் சென்ற ரேணுகாதேவி தரையில் குனிந்து குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள். அப்படி அள்ளும் போது ஓர் தேவபுருஷன் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள். இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தாள். கற்பின் நிறைக்குப் பதில் களங்கம் தெரிந்தது. கூட்டி எடுத்த கை மண்குடம் ஆகவில்லை. ஜமதக்னி முனிவர் தன் பூஜைக்குத் தண்ணீர் கொண்டுவரச் சென்றவள் இன்னும் வரவில்லையே என்று சிந்தித்தார். தன் ஞானக் கண்ணால் அவள் கற்புக்கு களங்கம் ஏற்பட்டதை அறிந்தார். சினம் பொங்க தன் புதல்வர்களை வரவழைத்து அழுக்கு உள்ளம் கொண்ட தாயைக் கொல்லுமாறு கர்ஜித்தார். மற்ற பிள்ளைகள் அனைவரும் தயங்கினர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப பரசுராமர் தன் பரசு என்ற ஆயுதத்தை எடுத்தார். அன்னையின் மீது வீசினார். அவள் தலை கீழே விழுந்தது. கூடவே சகோதரர்களின் தலைகளும் உருண்டன. ஜமதக்னி முனிவருக்கு சாந்தம் வரவில்லை என்றாலும் தன் சொல்லைக் காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டு பார்த்தார். ராமா! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். பரசுராமர் பகவான் அம்சம். ஒரு பிரச்சனைக்குரிய பரிதாபமும் பாவப்பட்டதுமான அவதாரம் ஆயிற்றே. இறந்த என் தாயும் சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும். அதோடு நான் அவர்களைக் கொன்றேன் என்ற நினைப்பின் நிழல்கூட அவர்களுக்குத் தெரியக்கூடாது என்று வரம் கேட்டார். மறுபடி அன்னை உயிர்த்தெழுந்ததை முன்னிட்டு ரேணுகாதேவியேதான் மாரி அம்மன் என்றும், தலை மட்டும் மாரியம்மன் கோயில்களில் வைத்து பூஜிக்கப்படுவதற்கு பரசுராம அவதார நிகழ்ச்சியே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஜமதக்னி முனிவர் சம்பதக்கினி முனியானார். இறந்த தாயும் சகோதரர்களும் உயிர்பெற்று எழுந்தனர். தூங்கி விழித்தது போன்ற உணர்வு தவிர வேறு முந்திய நிகழச்சி எதுவும் அவர்கள் நினைவில் இல்லை. தம் தந்தையை இழந்த கார்த்தவீரியன் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரிடமும், பரசுராமரிடமும் பகைமை பாராட்டி வந்தார்கள். அதனால் பழிக்குப் பழி வாங்க தீர்மானித்தார்கள்.

ஒரு நாள் ஜமதக்னி முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். பரசுராமனும் தன் சகோதரர்களுடன் ஆசிரமத்தை விட்டு வெளியே போயிருந்தான். ரேணுகா தேவி மட்டும் ஆசிரமத்தில் இருந்தாள். அப்போது ஆசிரமத்தில் கார்த்தவீரியனின் புதல்வர்கள் ரகசியமாக நுழைந்தனர். அவர்களில் ஒருவன் கையில் வெட்டரிவாளுடன் முனிவர் பக்கம் போகும் போதே ரேணுகா தேவி சிரசு வெடிக்கும்படி கதறினாள். அரசகுமாரர்களே! அவர் ஓர் அந்தண சிரேஷ்டர். மகா முனிவர். தயவுசெய்து அவரை வெட்டி வீண்பழிக்கு ஆளாகாதீர்கள் என்று அலறினாள். நச்சுப்பகை கொண்ட அந்த ராஜன்மார்களுக்கு அவளுடைய கூக்குரல் நரகமாக இருந்தது. ஓங்கின வாள் மேலும் உயர்ந்தது. ஒரே வெட்டு, ஜமதக்னி முனிவர் தலை தரையில் உருண்டது. சீலவதியின் கண்ணீர் ரத்தமும் கரை புரண்டு தரையை மட்டுமா நனைத்தது? தரும தேவதைகளையும் தலை முழுகச் செய்தது. கொய்த தலையை கொடியவர்கள் கொண்டு போனார்கள். அவளுடைய அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அவரது நாடி நரம்புகள் துடித்தன. அப்பொழுதே இந்தக் கொடிய க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார்.  பரசுராமர் மாகிஷ்மதி நகருக்கு விரைந்தார்.அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். ரத்த ஆறு ஓடியது. குரு÷க்ஷத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. தன் தகப்பனார் தலையைக் கொண்டு வந்து உடலுடன் சேர்ந்தார். ஈமச் சடங்குகளைச் செய்தார். பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் அற்றுப் போகும்படி இருபத்தொரு திக்விஜயம் செய்து வேரறுத்தார். அந்தப் பாவம் தீர வேள்வி செய்தார். அந்த வேள்வியில் கிழக்குத் திசையை அத்துவரியவுக்கும், வடக்கை உதகாதாவுக்கும், மத்திய தேசத்தை ஆசியபருக்கும், ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்டாவுக்கும் அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தை சதசியர்களுக்கும் அளித்தார். சரஸ்வதி நதியில் சுபவிருத ஸ்நானம் செய்தார். பரசுராமரால் பூஜிக்கப்பட்ட ஜமதக்னி முனிவர், ஞான தேசம் பெற்று சப்தரிஷி மண்டலங்களில் ஏழாவது ரிஷியாக விளங்கினார். தற்சமயம் அவர் மகேந்திர பர்வதத்தில், சித்தர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பாராட்டும் புகழும் பெற்று அங்கு தவக்கோலத்தில் சிரஞ்சீவியாக இருக்கிறார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. ராமஅவதாரத்திற்கு முன்பு சூர்ய குலத்தில் பிறந்தவன் மூலகன் என்ற அரசன். பூலோகத்தில் அப்போது ராஜவம்சம் இல்லாமல் அழித்துவிட பரசுராமர் புறப்பட்டார். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பு அந்த வம்சத்தை தழைக்கச் செய்தவன் மூலகனே. மூலகனுக்குப் பின்னர் தசரதன், அளபடி, கட்டுவாள்கள், தீர்க்கபாடு, ரகு, அவன் மகன் அஜன். இந்த அஜனின் மகன் தான் ராமரின் தந்தையான தசரதன். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது.

ராமாவதாரத்தில் பரசுராமர்: ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவதையும் ராமபாணத்திற்கு இரையாக்கிவிட்டு, தாம் பிராமணர் என்ற நிலையில், நீ எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார் பரசுராமர். இலங்கையின் அசோகவனத்தில் சீதை சிறை இருந்த சமயம் இதை நினைவுபடுத்தி ராவணனுக்கு புத்திமதி கூறுகிறாள். தூர்த்தனே! கார்த்த வீரியார்ச்சுனனுக்கு ஆயிரம் கைகள் இருந்தன. அவன் உனது இருபது தோள்களையும் பிடித்து உலுக்கி சண்டையிட்டு வென்றான். அப்பேற்பட்ட கார்த்தவீரியனைப் பரசுராமர் கொன்றார். அதே பரசுராமர் என் பர்த்தவிடம் தோற்றுப் போனார். ஆகையினாலே மகாவீரராகிய எனது கணவருடைய வீரம், புகழ், பெருமை இவைகளை நீ அறியாமல் என்னிடம் வம்பு செய்யாதே. மீறி நீ செய்தால் அழிந்து விடுவாய்! ஜாக்கிரதை என்கிறாள் சீதாப்பிராட்டி.

மகாபாரதத்தில் பரசுராமர்: காசிராஜாவிற்கு அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்று மூன்று பெண்கள். இவர்களுக்கு சுயம்வரம் செய்து வைக்க காசிராஜன் ஏற்பாடு செய்தார். பீஷ்மர் அந்த மண்டபத்திற்கு வந்தார். இந்த மூன்று பேர்களையும் கவர்ந்து வந்தார். அவர்களில் அம்பிகை, அம்பாலிகை இருவரையும் தன் தம்பி விசித்திர வீரியனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அம்பையோ பீஷ்மருடைய தம்பியைத் திருமணம் செய் மறுத்து விட்டாள். தான் சாலுவ மன்னனை விரும்புவதாகக் கூறினாள். அதனால் பீஷ்மர் அவளைச் சாலுவனிடம் அனுப்பினார். ஆனால் அவனோ அவளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவனிடமிருந்து திரும்பிய அம்பை மீண்டும் பீஷ்மரை சந்தித்தாள். சாலுவ மன்னன் என்னை மணம் செய்து கொள்ள மறுக்கிறான். ஆக சுயம்வரத்தின் போது என்னைக் கவர்ந்து வந்த நீர்தான் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள். பீஷ்மரோ தாம் ஏற்கனவே திருமணம் செய்து கொள்வதில்லை என சபதம் ஏற்றிருப்பதால் தாம் அவளை மணம் செய்து கொள்ள முடியாது என வருத்தம் தெரிவிக்கிறார். பீஷ்மர் தன்னை மணக்க மறுத்ததும், அவருக்கு குருவாகிய பரசுராமரை அம்பை அணுகினாள். தங்கள் சீடர் என்னை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கி வந்து விட்டார். ஆக, அவர் என்னை சம்பிரதாயமாகக் கல்யாணம் செய்வதுதான் க்ஷத்திரிய மரபு. தாங்கள் என்னை அவர் மணந்து கொள்ள உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள். பரசுராமர் அதற்கு சம்மதித்து பீஷ்மரைச் சந்தித்து அம்பையை மணம் செய்யும்படி வற்புறுத்திப் பார்க்கிறார். பீஷ்மர் அதற்கு மசியவில்லை என்ற உடனே போர் செய்தார். பீஷ்மர், நான் காக்கும் விரதத்தை முன்னிட்டு என் குருவுடன் மோதி செத்தாலும் சாவேனே ஒழிய, விரதத்தை மீறி நரகத்திற்குப் போவதற்காக உயிருடன் வாழ மாட்டேன் என்று பரசுராமருடன் ஆவேசமாய் போர் செய்தார். போரில் பரசுராமர் தோற்றார். பின்பு தவம் செய்யச் சென்றார். மகாபாரதத்தில் மற்றொரு சமயமும் பரசுராமர் வருகிறார்.

பரசுராமர் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்தார். அதில் கர்ணன் தன்னை ஒரு பிராமணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் வில்வித்தை கற்றான். காரணம் க்ஷத்திரியர்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காதே. ஒருநாள் கர்ணனுடைய தொடையில் தலை வைத்து பரசுராமர் தூங்கிக் கொண்டு இருந்தார். அதுசமயம் இந்திரன் ஒரு வண்டு உருவம் எடுத்தான். கர்ணனுடைய துடையைத் துளைத்துக் கொண்டே சென்றான். கர்ணனுக்கு ஒரே கடுப்பு, வேதனை. அவன் துடையில் ரத்தம் கசிந்து பெருகிக்கொண்டு இருந்தது. கசிந்த ரத்தத்தின் ஈரம் பரசுராமர் கழுத்தில் படவே தூங்கிக் கொண்டு இருந்த அவர் எழுந்தார். வண்டுக்கடியை வலிதாங்க முடியாத சூழ்நிலையிலும் பொறுத்துக் கொண்டே இருந்த நீ நிச்சயமாக ஒரு பிராமணனாக இருக்கமுடியாது. நீ உண்மையில் ஒரு க்ஷத்திரியன் தானே! உண்மையைக் கூறிவிடு என்று அதட்டிக் கேட்டார் பரசுராமர். கர்ணன் தான் ஒரு க்ஷத்திரியன் என்பதை ஒத்துக் கொண்டான். பொய் சொல்லி அவரை ஏமாற்றியதை அவரால் ஜீரணிக்க முடியாமல் அதற்காக ஒரு சாபத்தை அவர் கொடுத்தார். கர்ணா! நீ என்னிடம் பொய் சொல்லி வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய். அதனால் நான் கற்றுக் கொடுத்த வில்வித்தை உனக்குத் தக்க தருணத்தில் உதவாமல் போகக் கடவது! என்று சபித்தார். அந்த சாபத்தை குரு÷க்ஷத்திரக்களத்தில் நினைத்து நினைத்து கர்ணன் வருந்தினான். அந்த சாபத்தால் கற்ற வித்தை கர்ணனுக்கு கை கொடுக்கவில்லை என்பதை சொல்லுக்கு வில்லி, உதவாமல் மழுவாளி உரை செய்த சாபத்தை உற உன்னினான் என்று இயம்புகிறார்.

கோயில்கள்: பரசுராமருக்கென்று தனிக் கோயில்கள் ஒரு சிலவே இந்தியாவில் உள்ளன. பரசுராமர் தன் கோடாரியைக் கொண்டு மேற்கு கடற்கரையில் சீர்படுத்திய பகுதியே இன்றைய கேரளா என்பர். பரசுராம ÷க்ஷத்திரம் என இன்றும் அழைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் விமானநிலையம் அருகே பரசுராமருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் சிக்மகளூர் அருகே நஞ்சன்கட் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கண்டேஸ்வரர் கோயில் பரசுராமர் வழிபட்ட தலமாகும். இது ஒரு சிவாலயம் தன் தாய் ரேணுகாவைக் கொன்ற பாவம் தீர சிவபூஜை செய்வதற்காக பரசுராமர் இங்கு வந்தார். இங்குள்ள கபிலநதியில் நீராடி, சிவலிங்க பூஜை செய்தார். அவர் நதியில் மூழ்கி எழவும் தோன்றிய சுயம்புலிங்கம் இது. பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோரால் இந்த லிங்கம் பூஜிக்கப்பட்டது. இந்த இடத்தில் தான் பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீர, சிவபெருமான் இட்ட கட்டளையின் படி தவம் செய்தார். இவர் தவமியற்றிய இடத்தில் சாஸ்னா என்ற கல்பீடம் எழுப்பப்பட்டுள்ளது. பீடத்தில் பரசுராமரின் பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பாதங்களுக்கு தினமும் வழிபாடு செய்யப்படுகிறது. சாஸ்னா பீடத்தின் முன்புறம், பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் அழகிய சிற்பம் இருக்கிறது. இந்த பீடம் கண்டேஸ்வரர் கோயிலில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது. பீடத்துக்கு நித்ய பூஜை செய்யப்படுகிறது. இங்கு பூஜை செய்பவர்களுக்கு நோயற்ற ஆரோக்கிய வாழ்வும், நிம்மதியான மனநிலையும் ஏற்படுவதால் இங்கு பக்தர்கள் ஏராளமாக குவிகின்றனர். மேலும் ஒழுக்கம் தவறும் கணவன், குழந்தைகளை ஒழுங்குப்படுத்த வேண்டி, பரசுராமரை வேண்டவும் மக்கள் வருகின்றனர். நஞ்சன்கட் அருகிலுள்ள சிக்மகளூரில் ராமர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சுவரில், பரசுராமரின் கோடரி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது பாழடைந்து கிடப்பதால் பக்தர்கள் அதிகம் செல்வதில்லை.

மேகத்தைத் தடுத்து நிறுத்துத்தல் ஜாலம் வித்தை சித்துவிளையாட்டு

மேகத்தைத் தடுத்து நிறுத்துத்தல் ஜாலம் வித்தை சித்துவிளையாட்டு

மேகத்தைத் தடுத்து நிறுத்துத்தல் ஜாலம் வித்தை சித்துவிளையாட்டு
ஓம் ஹ்ரூம் ஹிரீம் சாஸம்
சாஸம் சாஸம் சாஸம் சாஸம்
செளம் ஹம் ஹம் ஹும்பட் சுவஹா
சாதகர் கிழக்கு முகமாக அமர்ந்து இதை ஒரு உரு தடவை ஜெபிக்க .அக்னியில்  முன்  நெய்யில் யாகம் செய்க  மந்திரம் சித்தியாகும்
மேகம் முன் மந்திரம் சொன்னால் மழை பொழியும், நீங்கள் நினத்தால் களையும்.

தூக்கம் வராதிர்க்க ஜாலம் வித்தை சித்துவிளையாட்டு

தூக்கம் வராதிர்க்க ஜாலம் வித்தை சித்துவிளையாட்டு

தூக்கம் வராதிர்க்க  ஜாலம் வித்தை சித்துவிளையாட்டு
கிரகண வேலையில் ஓம் சிவாய நம மந்திரத்தை சித்து செய்து
பாப்பாராமுள்ளி – கட்டு இலுப்பை இவற்றின் வேரை எடுத்து
அரைத்துப் பொடி செய்து அந்துப் பொடியை மூக்கில் உறிஞ்ச தூக்கம் வராது.