9 July 2016

எலுமிச்சம்பழம்

எலுமிச்சம்பழம்

எலுமிச்சம்பழம்

உலகில் தோன்றிய புல் பூண்டுக்குக் கூட உயிர் உண்டு. அதனால் அதற்குத் தீங்கு செய்யக் கூடாது. துறவிகள் அதை மிதித்து நடக்கக் கூடாது என்று சமண மதம் போதிக்கிறது.
ஒவ்வொரு தாவரத்திற்கும் மின் சக்தியும், காந்த சக்தியும் உண்டு. அவை தாவரத்திற்குத் தாவரம் வித்தியாசப்படும்.
எலக்ட்ரோ மீட்டா் வைத்து அதன் மின் சக்தியை அளக்கலாம். அந்த மின்சக்திக்கு பயோ எலக்ட்ரிசிட்டி எனப் பெயா். இதே மாதிரி அனேக ஜீவராசிகளிலும் மின் சக்தி உண்டு.
ஜீவனுள்ள கனி என்பது எலுமிச்சம் பழம்! எலுமிச்சம் பழத் தோப்புக்குள் ஆசாரமில்லாதவா்கள் போனால் அவை வாடி விடும்.
எலுமிச்சம்பழத் தோட்டத்தில் சாம்பிராணி புகை போட்டுத் தீய சக்தியை விரட்டுவார்கள்.
“பதார்த்தகுண சிந்தாமணி” என்னும் நூலில் எலுமிச்சம் பழ மருத்துவம் கூறப்பட்டுள்ளது.
முன்பு வாழ்ந்த இந்துத் துறவிகள் தங்களுக்கு மாயையினால் தூண்டப்படும் காம சக்தியை அடக்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
அக்கினி தத்துவமுள்ள ஆண் தெய்வங்களுக்கும், பெண் தெய்வங்களுக்கும் எலுமிச்சம் மாலை போட்டுக் குளிர்விக்கின்றனா்.
மாரியம்மன் கோயில், காளி அம்மன் கோயில் ஆகியவற்றில் பக்தா்கள் மஞ்சள் பொடி, நல்லெண்ணெய் சோ்த்து எலுமிச்சம் சாதம் நைவேத்தியம் செய்து பின் சாப்பிட்டால் தீராத நோய்கள் விலகும்.
செவ்வாய் மாலை எலுமிச்சம் சாதம் சூடாக நைவேத்தியம் செய்யலாம். முடிந்தால் எலுமிச்சம் சாதம் அன்னதானமும் செய்யலாம்.
எலுமிச்சை அதீத சக்தியைப் பற்றிய நூல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
அஷ்ட கா்மம் என்பது எண்வகைத் தொழில்கள். மோகனம், வசியம், ஆகா்ஷணம், ஸ்தம்பலம், உச்சாடனம், பேதனம், வித்வேடணம், மாரணம் ஆகியவை.
மேற்படி எட்டுத் தொழிலுக்கும் சித்தா்கள் எலுமிச்சம் பழத்தை உபயோகித்ததாகத் தெரிகிறது. மாந்திரீகா்கட்கு முக்கியமான பொருள் எலுமிச்சம்பழம். அது இல்லாவிட்டால் மாந்திரீகம் கிடையாது.
நம் வலது கையில் ஒரு எலுமிச்சம்பழம் வைத்து நாம் ஒருவரை எண்ணினால் நம் எண்ணம் நாம் எண்ணியவரிடம் போய் அலைஅலையாய்த் தாக்கும். அக்காலத் ரெலிப்பதி முறை இதுதான்.
ஒரு பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு சூரியக் கலையில் சுவாசம் செய்து கொண்டு பல கிரகங்களுடன் தொடா்பு கொள்ளலாம்.
கொடி எலுமிச்சை என்பது ஒரு வகை. அது பெரிதாக முட்டை அளவிருக்கும். அதைக் கையில் வைத்து எந்த மத தேவதைகளையும் மந்திரம் சொல்லி அழைக்கலாம். கொடி எலுமிச்சையை சாதாரண எலுமிச்சையுடன் கலந்து விற்பார்கள். ஒரு எலுமிச்சம் பழத்தை விலை பேசாமல் வாங்கி தெய்வ ஆகா்ஷண மந்திரத்தையும், பிதுா் ஆகா்ஷண மந்திரத்தையோ அதில் தினம் உரு ஏற்ற வேண்டும். அதைப் பூஜை அறையில் வைத்து வர வேண்டும்.
40 நாளில் அந்தப் பழம் நாம் வேண்டிய தெய்வத்தை அல்லது ஆவியை ஈா்த்துக் கொண்டு வரும். நாம் மனதில் எண்ணுவது அதற்குத் தெரியும். வீட்டில் அனைவரும் பேசும் பேச்சுக்களைப் பதிவு செய்யும்.
அதனால் வீட்டின் முகப்பில் எலுமிச்சம் பழம் கட்ட வேண்டும். வீட்டுக்குள் நுழைபவா்களின் எண்ணம் நம்மைத் தாக்குவதில்லை. மேற்படி பழ வலிமையால் அவா்கள் எண்ணம் அங்கேயே தடுக்கப்படுகின்றது.
எலுமிச்சைச் சாறு, மஞ்சள் பொடி, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் கொண்டு தயாரிக்கப்பட்ட குங்குமத்தை புருவ மத்தியில் இட்டுக் கொண்டு வந்தால் நெற்றிக் கண் திறக்கும்.
அமாவாசையில் சுடுகாட்டுக்குப் போய் தனக்கு அடிமையாக இருக்க விரும்பும் ஆவியை வா என எண்ணி எலுமிச்சம் பழத்தை எறிந்து விட்டு வந்து விடுவார்களாம். பெளா்ணமிக்கு மேற்படி பழம் ஒருநாள் இரவு அவா்கள் கால் மாட்டில் கிடக்குமாம். அதை எடுத்துத் துண்டு துண்டாக்கிச் சாப்பிடுவார்களாம். அந்த ஆவி சாப்பிட்டவா்கள் உடலுக்குள் போய்விடுமாம். அதனை ஏவி மாந்திரீகா் தொழில் பார்ப்பார்களாம். இள வயதில் மாந்திரீக நண்பா் சொல்லக் கேட்டது இது.
கேரளாவில் ஆவி பிடித்தவனை உட்கார வைத்து ஒரு பெரிய எலுமிச்சம் பழத்தை எடுத்து, அவன் தலையைச் சுற்றி வலது புறமாக ஒரு சுற்று சுற்றுகிறார்கள். பின் ஒரு குண்டூசி எழுத்துப் பழத்தின் தலைப்பக்கம் கத்தி அமுக்கி விடுகின்றனா். பின்னா் ஒரு சுற்று அதே தலைப்பக்கம் குத்தி அமுக்கி விடுகின்றனா். பின்னா் ஒரு சுற்று அதே பழத்தை இடது பக்கமாக அவன் தலையைச் சுற்றி எடுத்துப் பழத்தின் கீழ்ப்பக்கம் குத்துகின்றனா்.
பின்னா் வலது பக்கம், இடது பக்கம் மாறி மாறி சுற்றி ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு குண்டூசியாகப் பழத்தில் குத்துகின்றனா். பழத்தின் மேல் பக்கம் ஒரு குண்டூசி சுற்றிவர 25 குண்டூசிகள் ஆக மொத்தம் 27 சிறு குண்டூசிகள்! அவனைப் பிடித்த பீடை விட்டு விடுகின்றது.
பிறகு உடனே அதை ஓடும் தண்ணீரில் போட்டு விடுகின்றனா். இதை நேரில் கண்டேன்.
தன் குல தெய்வம் எது என்று தெரியாதவா்கள் ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி, என் குல தெய்வமே! நீ எங்கிருக்கிறாய்? என மனமுருகி வேண்டி வீட்டில் வைத்துவிட வேண்டும். தினமும் வேண்டிக் கொள்ள வேண்டும். 9 நாள் கழித்து, அதை அருள்வாக்கு சொல்பவரிடம் கொடுத்தால் உங்கள் குல தெய்வம் எங்குள்ளது என எளிதாகச் சொல்லி விடுவார்கள்.
தெய்வங்களை உபாசனை செய்பவா்கள் பழத்தில் தெய்வ மந்திரத்தை மூன்று தினங்கள் உரு ஏற்றி, பின் அதன் சாற்றில் தண்ணீா் பிட்டு, வெல்லம், ஏலக்காய் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் சித்தி கிடைக்கும்.
சில சாதுக்கள் உரு ஏற்றிக் கொடுக்கும் பழம் வெகுநாள் வரை கெடாது. சில போ் உரு எற்றிக் கொடுக்கும் பழம் சில தினங்களில் அழுகி விடும்.
மந்திரவாதிகள் கொடுக்கும் பழம், நம் குடும்ப நிகழ்ச்சிகளை அவருக்கு அறிவித்துக் கொண்டே (Transmit)    இருக்கும். அதன் மூலம் அவா் உங்களை ஆட்டுவிப்பார்.
தைமாதப் பிறப்பன்று அல்லது புதுவருடம் பிறப்பன்று. அருளாளா்களையோ, எஜமானா்களையோ பார்க்கப் போகும்போது, அவசியம் எலுமிச்சம்பழம் கொண்டு செல்ல வேண்டும் நம் நல்ல எண்ணத்தை அதன் மூலம் அவா்களுக்குச் சமா்ப்பிக்க வேண்டும்.
எலுமிச்சையை வைத்து அனேகா் அபிசாரப் பிரயோகம் செய்கின்றனா். அதை நான் எழுத விரும்பவில்லை.
ஆந்திர மந்திரவாதிகள் எலுமிச்சம் பழத்தில 40 நாள் வசிய மந்திரம் உரு ஏற்றுகின்றனா். பின் அதைக் கருக்கிக் கஸ்தூரி, கோரோசனை, ஜவ்வாது, அரகஜா, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், புனுகு சோ்த்து, காராம்பசு நெய்விட்டு அரைக்கின்றனா் பின் மீண்டும் அதற்கு வசிய மந்திரம் உருவேற்றி, வசியத் தொழில் செய்து பல லட்சம் சம்பாதிக்கின்றனா்.
பிரபல விஞ்ஞானி G.D  நாயுடு எலுமிச்சை விதைகளைக் கொண்டு குடும்பக் கட்டுப்பாடு மருந்து கண்டுபிடித்தார்.
எலுமிச்சைச் சாற்றுக்குப் பயங்கர சக்தி உள்ளது. அனேக சித்த ஆயுா்வேத மருந்துகளை எலுமிச்சைச் சாற்றில் சுத்தி செய்கின்றனா்.
ஐம்பது மில்லி சாற்றில் ஒரு பவளத்தை அல்லது கடல் சோழியையோ தட்டிப் போட்டால் ஒரு மணி நேரத்தில், அவை கரைந்து போகும். இதற்கு பயோ கால்சியம் (Bio – Calcium) என்று பெயா்.
மருளாடிகளின் சாமி ஆட்டத்தைக் குறைக்க எலுமிச்சம் பழம், வெல்லம், ஏலக்காய் போட்ட பானத்தைக் கொடுப்பது அனைவரும் அறிந்ததே!
சில பள்ளிச் சிறுவா் – சிறுமிகள் பிடிவாத குணம் கொண்டவா்களாகவும், கண்ணில் கண்ட பொருள்களை எடுத்து உடைப்பவா்களாகவும் இருப்பார்கள். பிறவியிலேயே அவா்களுகட்குச் சில நரம்புகள் இறுகியிருக்கும். அதைத் தளர்த்தினால்தான் அவா்களின் கோபம் பிடிவாதம் மற்றும் ரென்ஷன் போகும்.
அவா்களுக்கு ஒரு டம்ளா் தண்ணீரில் அரை எலுமிச்சைச் சாறு பிழிந்து, சிறிது வெல்லம், ஒரு ஏலக்காய் தட்டிப் போட்டுக் குடிக்கக் கொடுக்க வேண்டும்.
அல்லது எலுமிச்சம்பழ சா்பத் குடிக்கக் கொடுக்கலாம். பகல் 12.00 மணிக்கு ஒரு நேரம் மட்டும் கொடுக்கவும். ஒன்பது நாள் மட்டும் இப்படிக் கொடுக்கவும். பின் கொடுக்க வேண்டாம். குணம் தெரியும்.
எலுமிச்சம் பழத்தில் ஏராளமான ரகசியங்கள் உள்ளன. இதை விஞ்ஞான பூா்வமாக ஆராய்வது நல்லது. ஆன்மிகத்திற்கு எலுமிச்சம்பழம் ஒரு சிறந்த துணை என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை

வற்றாத செல்வம் தரும் வலம்புரிச் சங்கு பூஜை மற்றும் மந்திரம்!!

வற்றாத செல்வம் தரும் வலம்புரிச் சங்கு பூஜை மற்றும் மந்திரம்!!

வற்றாத செல்வம் தரும் வலம்புரிச் சங்கு பூஜை மற்றும் மந்திரம்!!

பாற்கடல் கடையும் பொழுது  அதில் இருந்து தோன்றிய உயர்ந்த பொருட்களில் ஒன்று சங்கு அதிலும் வலம்புரிச் சங்கு மிக உயர்ந்தது .மகாலட்சுமிக்கு ஈடானது ஏன் என்றால் மகாலக்ஷ்மியும் அதில் இருந்து தோன்றியவளே.எனவே வலம்புரிச் சங்கு "லக்ஷ்மி சகோதராய" என்று அழைக்கப் படுகிறது.ஸ்ரீ மஹாவிஷ்ணு  வலம்புரிச் சங்கை தனது கரத்திலும் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயை ஹ்ருதய கமலத்திலும் தாங்கியபடி காட்சி யளிக்கிறார்.

வலம்புரிச் சங்கு வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை :-
1.கரும்புள்ளிகள்,கருப்பு நிறத்தில் குழிகள் இருக்கக் கூடாது.
2.செயற்கை நிறங்கள் பூசப் பட்டதாக இருக்கக் கூடாது.
3.வெடிப்பு,கீறல் இல்லாததாக இருக்க வேண்டும்.
4.வாய் பகுதி மற்றும் பிற பகுதிகள் சேதமடையாததாக இருக்க வேண்டும்.
5.தாமச குணம் என்று சொல்லப்படும் மந்தபுத்தி உடையவர்கள்,மாந்திரீகம் செய்பவர்கள் மட்டும் கருநிற வலம்புரிச் சங்கு பயன்படுத்தலாம். மற்றவர்கள் கருப்பு தவிர வெண்ணிற அல்லது  மாநிறம் உள்ள சங்கைப் பயன்படுத்த வேண்டும்.வெள்ளையே சிறந்தது.

1.சங்கை எப்பொழுதும் வெறும் தரையில் வைக்கக் கூடாது.

2.வடக்கு முகமாக அல்லது கிழக்கு முகமாக அமர்ந்து ஒரு வாழை இலையில் கொஞ்சம் பச்சரிசி பரப்பி அதன் மேல் சங்கை வைத்து இந்த மந்திரத்தை சொல்லவும்.அல்லது ஒரு மஞ்சள் பட்டு அல்லது மஞ்சள் காட்டன் துணியில் கொஞ்சம் பன்னீர் தெளித்து அதன் மேல் சங்கை வைத்து அதற்குச் சந்தனம்,குங்குமம் வைத்து மல்லிகை,பிச்சி,ரோஜா அல்லது செந்தாமரை மலர்கள் கொண்டு கீழே உள்ள மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜெபித்து அர்ச்சிக்கவும்.பின்னர் சாம்பிராணி அல்லது ஊதுவத்தியால் தூபம் காட்டிக் கற்பூர தீபம் காட்டிக்  கற்கண்டு,பால் நைவேத்யம் செய்து பூஜையை நிறைவு செய்யவும்.

3.பூஜை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சங்கை மஞ்சள் பட்டு அல்லது காட்டன் துணியில் சுற்றி வைக்கலாம்.அல்லது ஒரு சிறிய பித்தளை,வெள்ளி, செம்பு தட்டு அல்லது கிண்ணத்தில் சுத்தமான நீர் ஊற்றி அதில் சிறிது பச்சைக்கற்பூரம் போட்டு அதில் வைக்க நல்ல பலன்களைத் தரும்.அந்த நீரைத் தினமும் மாற்ற வேண்டும்.முந்தைய நாளில் பயன்படுத்திய நீரைக் குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வறுமை நீங்கும்.
குளிக்க முடியாதவர்கள் அந்த நீரை காலில் மிதிபடாதபடி மரம் அல்லது செடிகளுக்கு  ஊற்றி விடவும்.

தொழில் செய்யும் இடங்களில் தெளித்து வரத் தொழில் விருத்தி உண்டாகும்.
வியாபாரிகள்,தொழில் அதிபர்கள் அந்த நீரால் முகம் கழுவி வெளியில் செல்ல சகல காரியங்களில் வெற்றியும் வசீகர சக்தியும் உண்டாகும்.

யாவரும் தினமும் அந்த நீரால் முகம் கழுவி வர அவர்களை ஒருபோதும் வறுமை வாட்டாது.


கீழே தரப்பட்டுள்ள மந்திரங்களில் உங்கள் மனம் விரும்பும் மந்திரம் எதுவோ அதைத் தேர்ந்தெடுத்து ஜெபிக்கலாம்.பூஜை ஆரம்பித்து முடியும் வரை மந்திரத்தை மாற்றக்கூடாது.

1.ஓம் ஸ்ரீம் லக்ஷ்மி சகோதராய நமஹ

2.ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீதரகரஸ்தாய | பயோனிதி ஜாதாய |லக்ஷ்மி சகோதராய | தக்ஷிணாவர்த்த சங்காய நமஹ ||


  1. 3.ஓம் ஹ்ரீம் ஸ்ரீதர கரஸ்தாய |  லக்ஷ்மி ப்ரியாய | தக்ஷிணாவர்த்த சங்காய |மம சிந்தித  பல ப்ராப்தார்த்தாய  நமஹ

ஸ்ரீ நாகதேவ கன்னிகா மஹா மந்திரம்

ஸ்ரீ நாகதேவ கன்னிகா மஹா மந்திரம்

ஸ்ரீ நாகதேவ கன்னிகா மஹா மந்திரம்

தியானம்: 
  மின்னலை யொத்த திருமேனி அழகும் இரண்டும் கரங்களில் பாரிஜாத மலரும் வெண்மையான ஆடையும் நவரத்ன கிரீடமும் தரித்து புன்முறுவலுடைய முக மண்டலமும் ஆகிய மோகன வடிவமான தேவ கன்னிகையை துதிக்கிறேன்.....
                
                   
                      

மூல மந்திரம்:
                       "ஓம் க்லீம் நமோ பகவதி சுரலோகவாகினி சர்வலோக வஸங்கரி க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஓம் சுர சுந்தரி தேவ கன்னிகாயை ஸ்வாக"

பூஜை முறைகள் :
                    பால் ,பழம் ,தேன்,வாசனை திரவியம் , சர்க்கரை பொங்கல், முதலியன வைத்து கணபதியை வணங்கி வடக்கு முகமாக அமர்ந்து 1008 உரு வீதம் 40 நாட்கள் ஜெபிக்க மந்திரம் சித்தியாகி தேவி பிரசன்னமாகும்..

இதன் பலன் :
                         முக்காலமும் சொல்லும் அஷ்டகர்மமும் சித்தியாகும். அறுபத்துநாலு சித்துகளும் ஆடலாம். மேலும் ஜால வித்தைகள், மை முறைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்..

ஸ்ரீ சித்த வித்யா யட்சணி தேவி மஹா மந்திரம்

ஸ்ரீ சித்த வித்யா யட்சணி தேவி மஹா மந்திரம்

ஸ்ரீ சித்த வித்யா யட்சணி தேவி மஹா மந்திரம்



ஸ்லோகம்: 

                          ஸ்ந்த்யா கால சூரியனைப் போன்றவளும் திக்குகளை பிரகாசிக்கும் ஒளி உடையவளும் சிவந்த ஆடை அணிந்தவளும் நவரத்ன கிரீடம் சூடி வரதம் எனும் முத்திரையுடன் கூடிய ஸ்ரீ சித்த வித்யா யஷணி தேவியை வணங்குகிறேன்.

மூல மந்திரம்:                               "ஓம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸௌம் நமோ பகவதி பகவதி யஷ குல ப்ரமுகி சித்த வித்யா யஷணியை மமவசம் குருகுரு ஸ்வாஹா...."
நிவேதனம் :                              பால்பழம்,தேன்கற்கண்டு,சுண்டல்வடை இவைகளை நிவேதனமாக கொண்டு மல்லிகை மலரால் பூஜை செய்து மூல மந்திரத்தை1008 உரு வீதம் 27 நாட்கள் ஜெபிக்க தேவி தரிசனம் கிடைக்கும் ...
பயன்கள் :                      பலவித தேவைகளை அடுத்த நல்லவர்கள் மூலமாக நடத்திவைக்கும். முக்காலமும் சொல்லும்மற்றும் வசியம்,மோகனம் சித்தியாகும்

புலிப்பாணி சித்தர் நெருப்பு வித்தை

புலிப்பாணி சித்தர் நெருப்பு வித்தை

 புலிப்பாணி சித்தர் நெருப்பு வித்தை
 மானப்பா மணத்தக்காளி சாறுகூட
 மைந்தனே உத்தமாணியின் சாறுகூட்டி
வானப்பா வசலையின் சாறுசேர்த்து
  வளமாக மத்தித்து வைத்துக்கொண்டு
தானப்பா கைகாலில் தடவிக்கொண்டு
  தன்மையாய் தணல்மிதிக்க தணலும் நீர்போல்
ஏனப்பா யவ்விதமே செய்தாயானால்
  இதமாகத் தணலதுவுந் தயங்குந்தானே...
                                                                               -புலிப்பாணி சித்தர்

பொருள்:
                       மணத்தக்காளி சாறும்,உத்தாமணி சாறும்,வசலை சாறு இம்மூன்றையும் ஒன்றாக கலந்து கைகளில் பூசி நெருப்பை எடுக்கவும்,அல்லது கால்களில் பூசி நெருப்பை மிதிக்கவும்,கை கால்கள் சுடாது... நெருப்பானது நீர்போல இருக்கும். எந்த நேரம் விளையாடினாலும் விளையாடலாம்....

குப்பைமேனி வேர் ஆக்ருஷ்ணம்

குப்பைமேனி வேர் ஆக்ருஷ்ணம்

. குப்பைமேனி வேர் ஆக்ருஷ்ணம்
தோற்றுமடா மேனியொன்று தனித்து நின்றால்
    சுத்தி செய்து பால் பொங்கல் இட்டுப்பின்னும்
மாற்றமுடன் கலைக்கொம்பால் கெல்லிக்கொண்டு
    மந்திரந்தான் துட்டமிருக ஆகர்ஷணி
ஏற்றமுயர் விசுவாமித்திர சுவாகாவென்று
    சொல்லியே வாங்கிதன் வாயிற்போட
ஆற்றமுடன் மிருகங்கள் தன்னை நோக்கி
    அழைத்துடனே மிருக ஆக்ருஷ்ணமுமமே.
                                                                                            -கருவூரார்

பொருள்:
                     குப்பைமேனி செடி தனியாக முளைத்திருந்தால் அந்த இடத்தில் சுத்தம் செய்து பால்,பொங்கல் வைத்து மான் கொம்பால் கொத்தி

"துட்ட மிருக ஆகர்ஷணி ஏற்றமுயர் விசுவாமித்திர சுவாகா "     என்று மந்திரம் சொல்லி வேரை பிடுங்கி  வாயில் அதக்கிக்கொண்டு மிருகங்களை 

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு


போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !

.கிருஸ்து பிறப்பதற்கு 3000
ஆண்டுகள் முன்னாடி பிறந்தவர் போகர் என்ற
மாபெரும் சித்தர் இவர் காளாங்கிநாதர் என்ற
சித்தரின் சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும்
ஆவார் இவர் பழனியில் இருக்கும் நவபாஷான
சிலையை செய்தவரும்
இவர்தான்.இவரை பற்றிய தகவல் மிக
ஆச்சரியத்தை கொடுக்கும்.இவரை பற்றிய
ஒரு தகவலை அவர் இயற்றிய சப்தகாண்டம்
என்ற நுலில் அவர் கூறிப்பிட்ட
தகவலை படித்து ஆச்சரியத்தின்
உச்சத்துக்கே சென்று விட்டேன் .இப்பேர்பட்ட
தமிழனை உலகம் முழுவுதும் தெரியபடுத்த
வேண்டும் என்பதே என் நோக்கம்.அவர் இயற்றிய
அந்த நூலில் 1799, 1800 ஆம் பாடலில் விமான
தொழில்நுட்பத்தை பற்றிய குறிப்பையும்
அதை எப்படி செய்யவேண்டும் என்றும்
அதை வைத்து அவர் பறந்ததையும்
தெள்ளதெளிவாக கூறிப்பிட்டிருக்கிறார்
அது மட்டும் அல்ல 1926 ஆம் பாடலில்
நீராவி இஞ்சின்(steam engine)
வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும்
கப்பலின் டிசைனிங்கையும் குறிப்பிட்டிருக்கிறா­
ர் இதை 5000 ஆண்டுகள் முன்பே தமிழன்
கண்டுபிடித்துவிட்டான் என்பது நமக்கெல்லாம்
பெருமை ஆனால் அப்பேர்பட்ட தமிழனை நாம்
மறந்து விட்டோம் என்பது வேதனையளிக்கிறது.
தமிழனின் புகழ் உலகம் முழுவதும்
பரவவேண்டும் உலகத்தின் முதல் இனமும்
முதல்மொழியும் முதல் அறிவியல்
விஞ்சானியும் முதல் மருந்துவனும் முதல்
ஆன்மீகவாதியும் தமிழனே.இப்படி தமிழனின்
புகழை மறந்து நாத்திகம் பேசியும் மதமாற்றம்
செய்தும் தமிழனின்
பெருமை மறைக்கபட்டுவிட்டது. }

போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது.
மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.

அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார்.
சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா...!

அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான்.
போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள்.
ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள்.
ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர்.
உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.
பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால்
பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.
உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்.
மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.
தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.
இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் ஒரு வகையில் நவரசங்களால் ஆனதுதான்.
பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி பெரிதாக செய்திகள் இல்லை. ஆனால்,நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தி.அதை இவரது, அரிய நூல்களுள் ஒன்றான 'போகர் ஏழாயிரம்' எனும் நூலின் வழி அறியலாம்.

பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக்கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு வெளியாகவே விளங்கியது.
இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.
போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது.
துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்; உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால், அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்; என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார்.
இதனால், அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர், நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார்.
மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள். பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற, போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது.அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி, தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள், போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள்.
ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, 'அமிர்தமணிப்பழம்' என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள்முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய 'பசி, தாகம், மூப்பு' என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.
இப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம்
தொடர்பானவையே..
ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது?
இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை?
இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப்படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.
இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் 'போகர் ஏழாயிரம்', போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.
இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின.
அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர்.
சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.
அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும்கண்டு அதைக் கைப்பற்றுவர்.
அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.
தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார்.
போகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவேசெய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.
மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.
அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது.
அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.
சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம்,
புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று.
போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.
அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார்.பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம்.

அகஸ்திய முனிவர் போக சித்தரை சீன தேசத்தவர் என்று கூறுகிறார். புலிப்பாணியின் குரு என்றும் இவருடைய தாய் தந்தையர் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்றும் அகத்தியர் கூறுகிறார்.
போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது.
போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார்.

அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.
1. போகர் – 12,000
2. சப்த காண்டம் – 7000
3. போகர் நிகண்டு – 1700
4. போகர் வைத்தியம் – 1000
5. போகர் சரக்கு வைப்பு – 800
6. போகர் ஜெனன சாகரம் – 550
7. போகர் கற்பம் – 360
8. போகர் உபதேசம் – 150
9. போகர் இரண விகடம் – 100
10. போகர் ஞானசாராம்சம் – 100
11. போகர் கற்ப சூத்திரம் – 54
12. போகர் வைத்திய சூத்திரம் – 77
13. போகர் மூப்பு சூத்திரம் – 51
14. போகர் ஞான சூத்திரம் – 37
15. போகர் அட்டாங்க யோகம் – 24
16. போகர் பூஜாவிதி – 20
இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.

இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார்.
தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதேஎன்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர்.

போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.

சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே போகா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.

பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார்.

யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறதுஎன்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது.
அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்என்றும் வேண்டிக் கொண்டனர்.
போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.

போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.
அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோண்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார்.
அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.

தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.

போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.
தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுது அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராகஎனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.
போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.

போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.
இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு.
பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.

போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது.
இங்கு கூறப்பட்ட வரலாற்று செய்திகளனைத்தும் சதுர கிரி தலப்புராணத்தில் கூறப்பட்டவை.

தியானச்செய்யுள்

சிவிகை ஏந்தி, சிரம் தாழ்த்தும் சித்தர் பெருமக்களுக்கு;
மூலிகை மேனியாய் பேரருள் புரியும் போகர் பெருமானே;
சிவபாலனுக்கு சீவன் தந்த சித்த ஒளியே;

நவபாசாணத்து நாயகனே உங்கள் அருள் காக்க காக்க