25 August 2016

ராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு!!!

இந்தச் சம்பவம் இராமாயண காலத்தில் நிகழ்ந்தது.இராமாயணமோ இன்றிலிருந்து 17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது.இத்தனை லட்சம் வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தமைக்கான ஆதாரங்கள் இந்தியா மற்றும் இலங்கை நெடுகக் காணப்படுகின்றன.இந்த ஆதாரங்கள் தற்காலத்தில் உண்மைதான் என்று நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகள் உறுதிபடுத்திக்கொண்டே இருக்கின்றன.
சென்னையிலிருந்து ஆந்திராவுக்குச் செல்லும் வழியில் நாகலாபுரம்,பிச்சாட்டூர்(ஊத்துக்கோட்டை வழி) செல்லும் சாலையில் நாகலாபுரத்தை அடுத்து இருக்கிறது.இந்த தலம் திருக்காரிக்கரை என்று புராணகாலத்தில் வழங்கப்பட்டுவருகிறது.இங்கே பைரவர் சுவேதபைரவர்,கல்யாண பைரவர்,சந்தான பைரவர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
கருவறையைச் சுற்றியுள்ள கோட்டங்களில் மேற்கில் இருவரும்,வடக்கில் இருவரும் ஆக நான்கு பைரவர்கள் இருக்கிறார்கள்.இது ஒரு பைரவத்தலம் என்பதால் நடுவில் சாமுண்டி அமைக்கப்பட்டு மற்றவர்கள் இருபுறமும் உள்ளார்கள்.

ராமகிரி பைரவரின் மகிமையை இப்போது பார்ப்போம்:ராவணனைக் கொன்ற பாவம் தீர,ஸ்ரீராமபிரான் ராமேஸ்வரத்தில் பரிகாரபூசை செய்ய முயன்றார்.அதற்காக காசியிலிருந்து சுயம்புலிங்கம் கொண்டு வருவதற்காக ஸ்ரீஆஞ்சநேயர் காசிக்குச் சென்றார்.
காசி நகரத்தின் காவலராக இருப்பவர் காலபைரவர்.அவரது அனுமதியின்றி தனது ஸ்ரீராமபிரானின் உத்தரவை நிறைவேற்றிட ஸ்ரீஆஞ்சநேயர் அவசரப்படுகிறார்.காசி நகரைச் சுற்றி பறந்து வரும்போது,சரியான சிவலிங்கத்தை அதன் நேர் மேலே கருடன் வட்டமிட்டுக்காட்டுகிறது;அந்த சிவலிங்கத்தின் அருகில் வந்ததும்,பல்லியின் குரல் போன்ற சுபசகுனத்தின் மூலமாக அடையாளம் கண்டுகொண்டார்.
தனது அனுமதியின்றி காசியிலிருந்து சுயம்புலிங்கத்தை எடுத்துச் சென்ற அனுமனை தடுத்து கால பைரவர் சமர் செய்தார்(போரிட்டார்!).தேவாதி தேவர்கள் அனைவரும் காசிக்காலபைரவரிடம் முறையிட்டு வேண்டியதால் அனுமனை சுயம்புலிங்கம் கொண்டு செல்ல அரை மனதோடு அனுமதியத்தார்.

இருந்தபோதிலும் காலபைரவருக்கு திருப்தியில்லை;அனுமன் பறந்து செல்லும் வழியில் உள்ள திருக்காரிக்கரையில், அனுமன் வரும் நேரத்தில் சூரியனை முழு சக்தியுடன் நன்கு பிரகாசிக்க ஆணையிட்டார்.கங்காதேவியை அனுமன் கண்ணில் படாமல் ஒளிந்திருக்கக் கட்டளையிட்டார்.வாயுவை பலமான காற்றை வீச உத்தரவிட்டார்.(பஞ்சபூதங்களும்,நவக்கிரகங்களும் கால பைரவரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது  என்பதற்கு இந்த சம்பவமே நேரடி ஆதாரம்!!!)
பஞ்சபூதங்களில் மூவரின்(நெருப்பு,நீர்,காற்று) தாக்கத்தை தாள முடியாமல் அனுமன் தாகமிகுதியால் துடித்தார்;அப்பொழுது ஸ்ரீகால பைரவர் மாடுமேய்க்கும் சிறுவன் ரூபத்தில் இருந்தார்.குடிக்க நீர் தேடிய அனுமனுக்கு,காளிங்கமடு என்னும் நீருள்ள தடாகத்தைக் காட்டினார்.அனுமன்,தான் நீரருந்தி வரும் வரையிலும் தன் கையில் உள்ள சுயம்புலிங்கத்தை சிறுவனாகிய கால பைரவரிடம் கொடுத்தார்.

சிறுவன் உருவெடுத்த காலபைரவர் அந்த சுயம்புலிங்கத்தை திருக்காரிக்கரையில் பிரதிஷ்டை செய்துவிட்டு மறைந்துவிட்டார்.அகந்தை கொண்ட அனுமன்,தன் வாலினால் அந்த சிவலிங்கத்தை கட்டியிழுக்க முயன்று தோற்றார்.ராமகிரி வாலீஸ்வரர் கருவறையுள் சிவலிங்கத்தை வணங்குகிற சிலாரூபம் உள்ளது.
பின்னர்,மீண்டும் அனுமன் காசிக்குச் சென்று.கால பைரவரை வணங்கி,அவரது முறையான அனுமதியைப் பெற்றுவிட்டு,அங்கிருந்து வேறொரு சுயம்புலிங்கத்தை ராமேஸ்வரத்துக்குக்  கொண்டு வந்தார்.அதற்குள் குறிப்பிட்ட நேரம்(நல்ல முகூர்த்தம்) கடந்து விட்டதால்,சீதாதேவி மணலில் உருவாக்கிய லிங்கத்தை ராமேஸ்வரத்தில் ராமர் பூஜை  செய்தார்.
இத்தல வரலாறு கால பைரவரின் மேன்மையைக் காட்டுகிறது.
ஓம்சிவசிவஓம்

சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!.

அதெப்படி? சங்கு சக்கரம் பார்த்தவுடன் திருமால் ஞாபகம் தானே வரும்! சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள் அல்லவா?.உண்மைதான். சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள்தான்.

அதை யார் அவருக்குக் கொடுத்தது? எப்படி திருமால் அதைப் பெற்றார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

பரம்பொருளின் ஐந்து தொழில்களுள் ஒன்றான காக்கும் தொழிலைச்செய்யும் தொழிற்கடவுளான திருமால் சங்கு சக்கரம் இரண்டையும் சிவபூசை முறையாகச் செய்து அதனைப் பரம்பொருள் சிவபெருமானிடமிருந்து பெற்றார்.

சங்கு பெற்ற கதை:-

சகோதர்களான அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட பலப்பல தெய்வீக அற்புதப் பொருட்களில் சங்கும் ஒன்று. பாற்கடலில் தோன்றிய இந்தச் சங்கு ‘நமசிவாய’ என்ற பஞ்சவனான (ஐந்தெழுத்தன்) பரம்பொருளை அடைந்ததால் பாஞ்ச சைனம் எனப்பெயர் பெற்றது.

காப்போனைக் காக்கும் கடவுளான சிவபெருமான் திருக்கரத்தில் இருந்த இந்தச் சங்கினைப் பெறுவதற்குக் காக்கும் தொழிலைச் செய்யும் திருமால் விரும்பினார். சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து நியமம் தவறாமல் சிவ பூசை செய்தார்.

திருமால் ஆசைப்பட்ட மங்கலப்பொருளை சங்கினை சிவபெருமான் திருமாலுக்கு அருளிச் செய்தார். திருமால் சிவபூசை செய்து தெய்வீகச் சங்கினைக் கைக்கொண்ட திருத்தலம் திருச் சங்க மங்கை (திருச் சங்கம் அங்கை) எனப்பெயர் பெற்றது. திருமாலுக்குச் சங்கினை அருளித் திருச்சங்க மங்கையில் எழுந்தருளியுள்ள சிவனுக்குச் சங்கநாதர், சங்கேசுவரர் என்ற திருநாமம் உண்டு.

 சக்கரம் பெற்ற கதை:-

சலந்தரன் என்னும் அசுரன் தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனது தந்தை சமுத்திரராஜன். தாய் கங்காதேவி. இதனால், அவனது ஆணவத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. இந்திரனை ஓடஓட விரட்டிய அவன், விதியை நிர்ணயிக்கும் நான்முகனின் விதியையே கூட சிறிது நேரம் மாற்றி விட்டான். அவரை ஒருமுறை பிடித்த அவன், கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டான். நான்முகன், அவனிடமிருந்து தப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. இதையடுத்து, அவன் திருமாலைக் குறிவைத்தான். திருமாலை அவனால் வெல்ல முடியவில்லை. அதே நேரம், அவனையும் கொல்ல திருமாலால் முடியவில்லை.

அந்தளவுக்கு அவனது தவபலம் இருந்தது. எனவே, அவனுக்கு வரமருளிய பரம்பொருள் சிவனால் தான் அவனைக் கொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற் கேற்ப, அவனும் ஒருமுறைகைலாயம் சென்றான். அங்கே, சிவபெருமான் ஒரு முதியவரின் வேடத்தில் இருந்தார். அவரிடம் சலந்தரன், சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் யுத்தம் செய்து, கைலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன், என்றான். சிவன் அவனிடம், நல்லது மகனே! சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான் வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி உறுதி,என்றார். தாராளமாக! தேர்வைத்துவக்கலாம், என்றான்.
சிவன் தன் கால் விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டார். இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம், என்றார். சலந்தரன் கலங்கவில்லை. இதென்ன பிரமாதம் என்றவன், வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக் கொண்டான். அந்த வட்டச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து, அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான்.

இந்த சக்கரம் தன்னிடம் இருந்தால், எதிர்காலத்தில் பயன்படும் என்று உணர்ந்தார் திருமால். பரம்பொருள் சிவபெருமானிடம் அதைப் பெறுவதற்காக வேண்டினார். பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால், சக்கரம் கிடைக்குமென்றும் சிவன் கூறினார். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் லிங்க பூஜை செய்தார் திருமால். ஒருநாள், ஒரு பூ குறைந்தது. திருமால் சற்றும் யோசிக்காமல் தன் கண்ணை மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் வைத்தார். அவரின் பூசையை மெச்சிய பரம்பொருள் சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தைப் பரிசாக அளித்தார்
"கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்" உங்களுக்கு தெரியுமா ?

மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது.

கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அறிந்திருந்தான்.

அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்!

மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு?

இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது.

பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான்.

தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான்.

பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது.

எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது.

அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும்.

இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான்.

இதை யாரால் செய்து சாதிக்க முடியும்?

எனவே, அவனிடமிருந்து தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர்.

அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழித்து உதவுமாறு வேண்டினர்.

விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக அவதரித்தார்.

ஸஹஸ்ர கவசனை ஸம்ஹரிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர்.

நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார்.

இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை அறுத்து எறிந்தனர்.
இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது.

எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான்.

இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள (பூர்வ ஜன்ம கவசம்) ஒரு கவசத்தோடு பிறப்பெடுத்தான்.

இந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே!

இந்தக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் ஜனித்தனர்.

12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும்.

ஒரு கவசத்தை இந்திரன் மூலம் நீக்கிய விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே.

கவசம் நீங்கியதால்தான் அர்ஜுனன் கர்ணணை கொல்ல முடிந்தது.

நம்முடைய இந்த ஜன்ம வாழ்க்கை நிகழ்வுகளுக்குக் காரணம் தெரியாமல் திகைக்கிறோம்.

இவற்றுக்குக் காரணம் பூர்வ ஜன்மக் கர்மாக்கள் ஆகும்.

கர்ணனின் வாழ்க்கை அமைந்த விதம் இந்த உண்மையை நிரூபிக்கிறது.

நன்றி :

நாரதர் கதைகள

24 August 2016

உங்கள் பிறந்த நட்சத்திரப்படி நீங்கள் வளர்க்க வேண்டிய விருட்சமரங்கள்.

உங்கள் பிறந்த நட்சத்திரப்படி நீங்கள் வளர்க்க வேண்டிய விருட்சமரங்கள்.

நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை, பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு.. உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்.. அந்த மரம் வளர , வளர உங்கள் வாழ்வும் வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை கிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும்.

சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது.. உங்கள் கண் படும் இடங்களில் , உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக ஸ்தலங்களில் , ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாமி மலை) தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.
அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் மரம்.

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு

பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா

உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்ச

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா

தங்களுக்குரிய  நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..
 சில மரங்கள் - நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம். அருகில் இருக்கும் சித்த மருத்துவரையோ, அல்லது , கூகுள் லெ யோ தேடிப் பாருங்கள்.. இல்லையா , அந்த நட்சத்திரத்துக்கு மற்ற  பாதங்களுக்குரிய -பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.

மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு. அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது , நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது..  திருவண்ணாமலை சென்றால், அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள்..  உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பாருங்கள்.
எந்த ஒரு ஜாதகருக்கும், சில சமயங்களில், கிரக நிலைக்கு ஏற்ப எத்தனையோ பரிகாரங்களை செய்த போதிலும், பலன்கள் உடனடியாக கிடைக்காமல் போனால், நீங்கள் தாராளமாக இந்த விருட்சங்களை பரிந்துரைக்கலாம்.

வாழ்க வளமுடன்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வரலாறு

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வரலாறு

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில், திருநெல்வேலி மாவட்டம் உவரியிலுள்ள சிவன் கோயில். முதன்மைக் கடவுளான சிவன் இங்கு சுயம்புமூர்த்தியாக லிங்கவடிவில் உள்ளதால் இப்பெயர் வழங்கப்படுகிறது.

கோயில் வரலாறு:-
அருகில் உள்ள கூட்டப்பனையிலிருந்து ஒருவர் பால் விற்க தினமும் உவரி வழியாக செல்லும் போது தற்போது சுவாமி இருக்கும் இடத்தருகே வரும் போது கால் இடறி விழுந்து கொண்டே இருந்தார். கால் இடறக் காரணமாக இருந்த கடம்ப மரத்து வேரை வெட்டி வீழ்த்திய போது ரத்தம் பீறிட்டது. இறைவனும் அசரீராக தான் இந்த இடத்தில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும் படியும் சொல்ல பனை ஓலையில் கோயில் கட்டினர். நாளடைவில் பெரிய அளவில் கோயில் கட்டப்பட்டது. சுவாமியை வழிபட்டால் கூன், குஷ்டம் ஆகிய நோய்கள் குணமாவதால் இத்தலம் மிகவும் பிரபலமானதாக உள்ளது.

வழியில் கூடன்குளம் சிரட்டைப்பிள்ளையார் கோவிலுக்குச் சென்று அவரையும், சுடலைமாடனையும் மனம் உருக வணங்கி தங்கள் குறைகளை எடுத்துக்கூறி ஆறுதலைப்பெற்று அம்மனிடம் வழிபாடு செய்து தேங்காய் உடைத்து, அதில் தேங்காயை மட்டும் எடுத்துச் கொண்டு சிரட்டையை கோவிலிலேயே விட்டு விடுவர்.

ஆலயத்தில் சுடலைமாடசுவாமியின் அருள் பெற்று மீண்டும் மக்கள் புறப்படுவர். விசாகத்திற்கு முந்தைய நாள் காலைப்பொழுது புலரும் வேளையில் நாட்டாறு கடந்து பத்திரகாளியம்மன் கோவில் வந்து சேர்வார்கள். அங்கே காலையில் பல் துலக்கி, அம்மனை வழிபட்டு, பதநீர் அருந்தியபின் உவரி வந்து சேர்வார்கள், முற்காலத்தில் உவரி செல்லும் வழி முழுவதும் இலவசமாக பதநீர் குடிக்க கிடைக்கும்.

வழி நெடுக கனி வகைகளை உண்டு மகிழ்வார்கள்.குறிப்பாக இது கோடை காலம் மாம்பழம் அதிகம் கிடைக்கும் கால மாதலால் மாம்பழம், வாழைப்பழமும் சாப்பிடுவார்கள். முற்காலத்தில் மட்டுமின்றி இன்றும் ஏராளாமான மக்கள் விசாக நேரத்தில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து உவரி சுயம்புநாதரை வந்து வழிபடுகின்றனர்.

உவரி விசாகத்திற்கு வரும் மக்கள் விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் தங்கமாகிய கடல் மண்ணை எடுத்து சுயம்பு நாதர் ஆலயத்தின் அருகில் தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து குவிப்பார்கள். இதனால் தீரும் பாவ வினைகளும், நோய்களும், கஷ்டங்களும் ஏராளம். செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும்.

நினைத்த காரியங்கள் வெற்றி அடையும் சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து நிற்கும். கடல் குளித்த பின் விநாயகரை வழிபட்டு மும்முறை வலம் வந்து, சுயம்பு நாதர் ஆலயத்தை சுற்றி வந்து வணங்கி, முன்னோடியைத் தொழுது பிரம்மசக்தியம்மன், இசக்கியம்மாள் ஆலயங்களை வலம் வந்து சாஸ்த்தாவை வழிபடுவார்கள்.

தெப்பக்குளம் அல்லது கிணற்று நீரில் நீராடி தூய ஆடை அணிந்து சுயம்பு நாதர் ஆயலத்தினுள் சென்று மூலஸ்தானத்தை மூன்று முறை வலம் வந்து அர்ச்சனை செய்து கொடி மரத்தைத் தொழுது பிரார்த்தனை செய்வார்கள். குமரி மாவட்ட மக்கள் உவரியில் தங்குவதற்கும்,சமையல் செய்து பரிமாறுவதற்கும், பாதுகாப்பிற்காகவும் மடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நான்கு கால பூஜையும் முடிந்த பின் உற்சவ மூர்த்தி வீதிவுலா நடைபெறும். இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்று உற்சவ மூர்த்தி ஆலயத்தினுள் எழுந்தருளும் போது விடியும் நேரம் ஆகிய விடும் அதன் பின் மக்கள் தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டுச் செல்வர். விசாகத்திற்கு மறுநாள் பவுர்ணமி ஆகும். பெரும் பான்மையான மக்கள் உவரியில் பவுர்ணமி தீர்த்தமாடி சுயம்புலிங்க சுவாமியை வழிபடுவது வழக்கம்.

பணங்கிழங்கும், வேர்க்கடலையும் வளியில் அதிகம் வாங்கிச் சாப்பிடுவர். தங்கள் உறவினர்களை எல்லாம் கண்டு கடற்கரையில் அமர்ந்து பேசி மகிழ்வர். வைகாசி விசாக திருவிழா முடிவில் ஒரு வருடத்திற்கான புண்ணியத்தை ஒரே நாளில் உவரியில் பெற்ற திருப்தி ஒவ்வொரு பக்தனுக்கும் உண்டாகும்.

மூலவர் -சுயம்புநாதர்
அம்மன்/தாயார் -பிரம்பசக்தி
தல விருட்சம் -கடம்பமரம்
தீர்த்தம் -தெப்பகுளம்
பழமை -500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் -வீரைவளநாடு

கோயில்:-
           உவரி சுயம்புலிங்க சுவாமி
இயற்கை எழில்மிக்க கடற்கரையோரமாக இக்கோவில் உள்ளது. இங்கு சிவன் சுயம்பு லிங்கோத்பவராக எழுந்தருளியுள்ளார். கடலோரத்தில் நான்கு நன்னீர் ஊற்றுக்கள் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து சுயம்புநாதருக்கு அபிஷேகத்திற்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இருப்பிடம்:-
                    இக்கோயில் திருச்செந்தூர்-கன்னியாகுமரி ([[மாநில நெடுஞ்சாலை 176 (தமிழ்நாடு|எஸ்.எச்-176) சாலையில் உள்ளது. திருச்செந்தூரிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும்., கன்னியாகுமரியிலிருந்து சுமார் 52 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. காலை 6-11 மணி வரையும் 4-8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்செந்தூர், கன்னியாகுரி
அருகிலுள்ள விமான நிலையம் : தூத்துக்கூடி, மதுரை

அமைப்பு:-
                  கோயிலின் நுழைவாயிலினைக் கடந்து உள்ளே மூலஸ்தானத்திற்குச் சென்றால் அங்கே சுயம்புலிங்கசுவாமியைக் காணலாம். கோயிலின் வெளிப்புறம் வலது புறத்தில் கன்னிவிநாயகருக்கான தனிக் கோயில் உள்ளது. சிவன் கோயிலுக்கு இடப்புறமாக பிரம்மசக்தி அம்மன் சன்னதி உள்ளது. இச்சன்னதியில் முன்னடி சாமி உள்ளது. அதற்கடுத்தபடியாக பேச்சியம்மன் சன்னதி உள்ளது. பேச்சியம்மன் சன்னதியில் பேச்சியம்மன், மாடசாமி, இசக்கியம்மன் ஆகிய தெய்வங்களைக் காணமுடியும்.

திருவிழா:-
                     3 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் மகர மீனுக்கு சுவாமி காட்சிதருதல் சிறப்பு நிகழ்வாகும். ஒவ்வொரு தமிழ்மாத கடைசி வெள்ளிக் கிழமையும் பக்தர்கள் இங்கு அதிகம் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை, தை அமாவசை, திருவாதிரை திருநாள், கார்த்திகை தீபம் ஆகிய நாட்களிலும் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.வையும் இக்கோயிலில் இத்தலத்து விழாக்களாகும். தவிர பௌர்ணமி, கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, தமிழ் வருடப்பிறப்பு, பிரதோசம் தீபாவளி, பொங்கல் ஆகிய நாட்களில் கோயிலில் விசேச வழிபாடுகள் உண்டு. பக்தர்கள் வேண்டுதலுக்காகக் கடற்கரை மண்ணை 11 அல்லது 41 ஓலைப்பெட்டியில் சுமந்து கொண்டுவந்து போட்டு வழிபடுதல் இங்கு விசேடமான வழிபாடாக உள்ளது.

சிறப்பு:-

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். மார்கழி மாதம் முழுக்க காலை 7 மணிக்கு சூரிய ஒளி சுவாமி மீது விழுகிறது. சுவாமியின் அபிஷேகத்துத் தண்ணீர் எடுக்கப்படும் 4 நன்னீர் ஊற்றுகளும் கடல் ஓரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

குலதெய்வ கோவம் தணிய 200 வருடம் முன்புள்ள பரிகாரம் ஒன்று உள்ளது

குலதெய்வ கோவம் தணிய 200 வருடம் முன்புள்ள பரிகாரம் ஒன்று உள்ளது.
தேவையான பொருட்கள் ,
 எழுமிச்சை , தாமரைநூல், சாதா திரி, வேப்ப எண்ணெய்.. வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோயிலில் மாலை 6.45க்கு மேல் அது சூரியன் முழுமையாக அஸ்தமனம் அடையும் நேரம்.கோவிலுக்கு சென்று எழுமிச்சை பழத்தை தரையில் வைத்து உருட்டிவிட்டு அதன் தலையில் சிறிதாக துளையிட்டு உள்ளிருக்கும் சாறு விதைகளை நீக்கிவிட்டு , இங்க் பில்லர் மூலமாக வேப்ப எண்ணையை அதில் நிரப்ப வேண்டும் , பின் சாதா திரியையும் தாமரைநூலையும் இணைத்து அந்த கனியின் உள்ளே செழுத்தி தீபம் ஏற்றி இரு கைகளிலும் வைத்துக்கொண்டு அம்மனிடம் குலதெய்வ கோபம் நீங்க அருள்புரியுமாறு வேண்டிக்கொள்ள வேண்டும்.. கோவில் பூட்டியிருந்தாலும் பரவாயில்லை.. தவறில்லை.. நீங்கள் வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் நீங்கள் ஏற்றிய அந்த தீபம் அம்மனிடம் பேசும் ..தொடர்ந்து 15 நாட்கள் இதை செய்ய வேண்டும் இடையில் தடை ஏற்ப்பட்டால் அதை செய்வதை நிறுத்திவிட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.. இதை செய்துகொண்டிருக்கும்போதே பல மாற்றங்களை உணரப்பெறலாம்...

23 August 2016

இந்த சிவ மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபம் செய்யுங்கள்

இந்த சிவ மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபம் செய்யுங்கள் ….
நங்சிவாயநம – திருமணம் நிறைவேறும்
அங்சிவாயநம – தேக நோய் நீங்கும்
வங்சிவாயநம – யோக சித்திகள் பெறலாம்.
அங்சிவாயநம – ஆயுள் வளரும், விருத்தியாகம்
ஓம்அங்சிவாய – எதற்கும் நிவாரணம் கிட்டும்.
கிலிநமசிவாய – வசிய சக்தி வந்தடையும்
ஹிரீநமசிவாய – விரும்பியது நிறைவேறும்
ஐயும்நமசிவாய – புத்தி வித்தை மேம்படும்.
நமசிவாய – பேரருள், அமுதம் கிட்டும்.
உங்யுநமசிவாய – வியாதிகள் விலகும்.
கிலியுநமசிவாய – நாடியது சித்திக்கும்
சிங்வங்நமசிவாய – கடன்கள் தீரும்.
நமசிவாயவங் – பூமி கிடைக்கும்.
சவ்வுஞ்சிவாய – சந்தான பாக்யம் ஏற்படும்
.சிங்றீங் – வேதானந்த ஞானியாவார் உங்றீம்
சிவாயநம – மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
அங்நங் சிவாய – தேக வளம் ஏற்படும்.
அவ்வுஞ் சிவாயநம – சிவ தரிசனம் காணலாம்
ஓம் நமசிவாய – காலனை வெல்லலாம்.
லங்ஸ்ரீறியுங் நமசிவாய – விளைச்சல் மேம்படும்
ஓம் நமசிவாய – வாணிபங்கள் மேன்மையுறும்
ஓம் அங்உங்சிவாயநம – வாழ்வு உயரும், வளம் பெருகும்.
ஓம் ஸ்ரீறியும் சிவாயநம – அரச போகம் பெறலாம்.
ஓம் நமசிவாய – சிரரோகம் நீங்கும்.
ஓங் அங்சிவாய நம – அக்னி குளிர்ச்சியைத் தரும்.

1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்

1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.
2. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
3. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.
4. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால்எடுத்துச் செல்லக் கூடாது
5. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.
6. எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.
7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது.
மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.
8. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது
.9. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.
10. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.
11. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.
12. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச்செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.
13. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.
14. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது
.15. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.
16. பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.
17. செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல்,வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.
18. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம.
19. வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.
20. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.
21. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.
22. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது..

மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்

மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்…
மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்…

மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்…

கி.பி. 18 நூற்றாண்டில் வாழ்ந்த ஒப்ப‍ற்ற‍ ஆன்மீக சிகரம்மாக திகழ்ந்த‌

 வ‌ள்ளலார் (வடலூர் ராமலிங்க சுவாமிகள்) 1874ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி நள்ளிரவில் தனது அறையில் உள்ளே சென்று தாளிட்டுக் கொண்டவர். திரும்பி வரவில்லை. முன்னதாக தன் அறையின் உள்ளே இருந்த விளக்கை வெளியே கொண்டு வந்து வைத்த அவர், தனது சீடர்களிடம் யாரும் அறையைத் திறக்க வேண்டாம் என்று அருளிவிட்டு உள்ளே சென்றார். அவர் ஜோதி யாக ஆனாரா, காற்றிலே கலந்தாரா என்பது தெரியாவிட்டாலும், அவர் மரணத்தை வென்ற மாபெரும் ஞானி என்பதை உலகம் உணர்ந்தது.

வள்ளலார்பற்றி அறிய தென்னாற்காடு கலெக்டர் ஒரு டாக்டருட ன் சித்திவளாகம் விரை ந்தார். உடல் சிதைந்து நாற்றம் எடுக்கும் என்று நம்பிய டாக்டர், அறைக்குள் நுழைந்தவுடன் திகைத்தார். பச்சைக் கற்பூரமணம் கமழ்ந்தது! அங்கிருந்த சீடர்களிடம் வள்ள லார் பற்றி நன்கு விசாரித்து அறிந்த கலெக்டர், அவரது மாபெரு ம் ஆன்மீக உயர்வைப் போற்றியதோடு தன் பங்கிற்கு இருபது ரூபாயை அளித்தார்...

மாந்திரீக சூச்சும பரிகாரங்கள்

மாந்திரீக சூச்சும பரிகாரங்கள்

(1) சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கடன்,பொன்,பொருள் எதுவும் கொடுக்க கூடாது. கொடுத்தால் திரும்பி வராது. கண்டிப்பாக கடனாளி ஏமாற்றி விடுவார்.

(2) கணவன் அன்பாக நடந்து கொள்ள விசாக நட்சத்த்திரத்தில் மனைவியானவர் விரதமிருந்து முருகரையும்,வள்ளி யையும் வழிபட கணவரின் அனுசரணையும் அன்பும் பெருகும்.திருமணமாகாத பெண்கள்,நல்ல கணவன் அமையவும் இப்படி செய்யலாம்.

(3) நீண்ட கால நோய்களுக்கு பரிகாரம், மரண பயத்திற்கு பரிகாரம், மற்றும் ரகசிய ஒப்பந்தங்களில் ஈடுபட, மாந்திரீகம் கற்க கேட்டை நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்கலாம்.

(4) எதிரிகளை வெற்றி கொள்ள, ஏவல், பேய், பில்லி சூனியன்களில் இருந்து விடுபட பரிகாரங்கள் அவிட்ட நட்சத்திரத்தில் செய்ய உடனடி பலன் உண்டு.

 (5) அரசியலில் வெற்றி அடைய, அரசு வேலைகளில் உயர் பதவி அடைய திருவண்ணாமலையரை தொடர்ந்து 3 மாத காலம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்

6) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

(7) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

(8) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.

(9) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.

(10) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.

(11) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.

திருவோணம் அன்று விஷ்ணுவை துளசி மாலை போட்டு துவரம் பருப்பு பாயசத்தினால் நிவேதனம் செய்து அதை தானம் செய்து வர நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். தீருவீழிமலை சென்று படிக்காசு வைத்து வணங்கி வர பண வருவாய் அதிகரிக்கும்.

திருவாதிரை அன்று சிவனை வணங்கி விட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால், பல வருடங்களாக தீராத நோயும் எளிதில் குணமாகும்.
வறுமை நீங்க ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட சுபிட்சம் பெறலாம்.

பிறரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மிருகசீஷ நட்சத்திரத்தில் முருகரை வழிபட்டு பின் சென்று கேட்டால் கட்டாயம் கிடைக்கும்...

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தர் ..

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தர் ...

மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.

அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார்.

சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா...!

அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான்.

போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள்.

ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள்.

ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர்.

உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.

பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால்
பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.

உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்

மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.

தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.

இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் ஒரு வகையில் நவரசங்களால் ஆனதுதான்.

பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி பெரிதாக செய்திகள் இல்லை. ஆனால்,நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தி.அதை இவரது, அரிய நூல்களுள் ஒன்றான 'போகர் ஏழாயிரம்' எனும் நூலின் வழி அறியலாம்.

பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக்கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு வெளியாகவே விளங்கியது.

இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.

போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது.

துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்; உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால், அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்; என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார்.

இதனால், அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர், நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார்.

மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள். பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற, போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது.அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி, தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள், போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள்.
ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, 'அமிர்தமணிப்பழம்' என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள்முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய 'பசி, தாகம், மூப்பு' என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.

இப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பானவையே..

ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது?

இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை?

இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப்படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.

இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் 'போகர் ஏழாயிரம்', போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.

இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின.

அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர்.

சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.

அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும்கண்டு அதைக் கைப்பற்றுவர்.

அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.

தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார்.

போகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவேசெய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.

மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.

அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது.

அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.

சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம்,
புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று.

போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.

அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார்.பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணத்தின் பலன்கள்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணத்தின் பலன்கள்.
  மூல நட்சத்திரம் இதன் அதிபதி கேது பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. மூலம் தனுசு ராசிக்குரியதாகும்.
மூல நட்சத்திராதிபதி கேது பகவானாவார். இது வாயு புத்திரான ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதார நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். ஒழுக்க சீலர்கள் கம்பீரமான தோற்றமும், தெய்வ பக்தியும் எந்த பிரச்சனைகளையும் தைரியத்துடன் எதிர் கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவர்கள். கேது சாரத்திலும், குருபகவானின் ராசியிலும் பிறந்திருப்பதால் மத சம்பிரதாயங்களிலும் ஆன்மீக தெய்வீக காரியங்களிலும் ஈடுபாடு அதிகமிருக்கும். ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்ற பழமொழி அல்ல. வீண் பழிமொழி என்று சொல்லாம். ஆனி மூலம் அரசாளும் அதாவது ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்து  சந்திரனை குருபார்வை செய்தால் நற்பலன்கள் தேடி வரும். பின் மூலம் நிர்மூலம் என்பது சந்திரனை பாவ கிரகங்கள் பார்வை செய்வதால் உண்டாவது. எனவே  மாமனாருக்கு ஆகாது என பெண்களை ஒதுக்கி வைக்க வேண்டாம். சிறு வயதிலேயே நல்ல உடல் வாகும் பேச்சு திறமையும் சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தின் பலன்கள்.
 சிறு வயதில் கேது திசை வருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பும் குடும்பத்தில் பிரச்சனைகளும் உண்டாகும் என்றாலும் வளர வளர குடும்பம் செழிக்கும் பெரியோர் தாய் தந்தை போன்றவர்களிடம் மரியாதை பாசமும் அதிகமிருக்கும். மற்றவர்களிடம் எதிர் கேள்வி கேட்டதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கல்லூரி பருவத்தில் நிகழ்ந்த காதல் சம்பவங்கள் அடிக்கடி மனதில் நிழலாகும். பிள்ளைகளை திட்டமிட்டு வளர்த்து படிக்க வைப்பார்கள். இவர்களுக்குள் உறங்கி கொண்டிருக்கும் மிருகத்தை தட்டி எழுப்பாமலிருப்பது அனைவருக்கும் நல்லது. பலர் வயதான காலத்தில் மண வாழ்க்கையை துறந்து துறவறத்தில் நாட்டம் கொள்வார்கள். கோயில்கள், சித்தபீடங்கள், தியான மண்டபங்களை தேடிப் போய் சரணடைவார்கள்.
தொழில் பலன்கள்.
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருத்துவம், துறைகளில் சிறந்து விளங்குவார்கள். பலர் இராணுவம், காவல் துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிப்பார்கள். பீரங்கி, ஏவுகணை போன்ற போர் தளவாடங்களை கையாள்வதில் கை தேர்ந்தவர்கள். நாட்டை பாதுகாக்கும் பாதுகாவலர்கள் என்று மூல நட்சத்திர காரர்களை கூறலாம். கொடி நாள், குடியரசு தினம், சுதந்திர தினம் என வந்து விட்டால் மனதில் உற்சாகம் கொள்வார்கள். பணபுரியம் நிறுவனங்களுக்கு மிகவும் விசுவாசத்துடனும், சுறுசுறுப்புடனும் பணிபுரிவார்கள். மூத்த அதிகாரிகளுக்கும், கடைநிலை ஊழியர்களுக்கும் இடையே பாலமாக விளங்குவார்கள். தனது பதவிகளுக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டால் எவ்வளவு பெரிய பதவியாக இருந்தாலும் ஒரு நிமிடத்தில் தூக்கி எறிவார்கள். நல்ல அதிகாரமிக்க பதவிகளை வகிப்பார்கள். ஒய்வு பெற்ற பின்பும் சும்மா இருக்க மாட்டார்கள். சிலர் சுய தொழில் தொடங்குவார்கள். ஏற்றுமதி இறக்குமதி கெமிக்கல்,ரியல் எஸ்டேட், கல்குவாரி, மருத்துவ கம்பெனி போன்றவற்றால் சிறந்த லாபம் கிட்டும்.
இவர்களுக்கு
பொருந்தாத நட்சத்திரங்கள். அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.

22 August 2016

சில பயனுள்ள சிவ மந்திரங்கள் சில சிவ மந்திரங்களைப் பார்ப்போம்:

சில பயனுள்ள சிவ மந்திரங்கள்
சில சிவ மந்திரங்களைப் பார்ப்போம்:
ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.
ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.
ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும். துஷ்ட தேவதைகள் அழியும். மன்னர்கள் அருள் கிடைக்கும்.
ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும்.ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.
சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும்.
மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.
இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.
சிங் சிங் சிவாய ஓ என ஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.
ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.
லீங் க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.
சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.
மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:
மசிவயந ஜபித்தாலும், நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷி
சிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-நந்தீசர் மகரிஷி

21 August 2016

10,சகல தேவதா வசிய மந்திரம்

10,சகல தேவதா வசிய மந்திரம்
ஆக 10 வித மந்திரங்களை கீழே காண்போம்
1. மகா கணபதி தியானம்
ஐம் கணபதி
க்லீம் கணபதி
ஸவ்ம் கணபதி
வாவா கணபதி
சர்வ தேவாதி தேவர்களும்
சர்வ ஜீவராசிகளும்
நான் நினைத்த அணைத்தும்
என் வசியமாக
வசிவசி அசியசி ஸ்வாஹா
2) தெஷிணாமூர்த்தி தியானம்
ஓம் நமசிவய சிவ சிவ சரணம் சிவானந்தம்
சிவ சிவ சிவாய ஆக்ருஷ்ய
( குறிப்பு: எந்த மந்திரம் சொல்லும் முன்பு மேற்கண்ட மந்திரத்தை தெட்சணாமூர்த்தி சன்னதியில் இருந்து 21 முறை சொல்லிவிட்டு பிறகு மந்திரங்கள் உச்சரித்தால் மந்திரம் சீக்கிரம் பலன் தரும்.)
3) சகல மந்திரங்களின் சாப நிவர்த்தி
ஓம் அங் உங் சிங் க்லீம் ஹபீம் அவவும் சல மந்திரங்களின் சாபம் நாசி மாசி சுவாகா .
4) பிராண பிரதிஷ்டை மந்திரம்
ஆம் ஹ்ரீம் க்ரோம் யரல வஷக்ஷனி ஹோம் ஹம்ச ஷெஷம் சோகம் அம்ச அஸ்ய (தேவதை பெயர்)பிராணா இகிப்ராணா ஜீவ இஹஸ்திதா அஸ்யஸர் வேந்திரியாணி வாங்க்மன த்வச் சஹீஷ் சோதர தான சமான இகைவ .ஆக்த்ய அஸ்மின் பிம்பே யந்திரே (தேவதையின் பெயர்)ஸூகம் சிரம் திஷ்டந்து சுவாஹா .(தேவதையின் பெயர்)பிராணன் பிரதிஷ்டையாமி .
5) சகல யந்திரங்களுக்கும் அர்ச்சனை மந்திரம்
1) ஓம் பிராணயா பிராண ரூபாய பிராண லிங்காய பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,
2) ஓம் ஜீவாயா ஜீவா ரூபாயா ஜீவ லிங்காயா ஜீவ பிரதிஷ்ட்டாய ஸ்வாகா
3) ஓம் மந்திராயா மந்திர ரூபாயா மந்திர லிங்காயா ம்,மந்திர பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,
4 ஓம் தந்திராயா தந்திர ரூபாயா தந்திர லிங்கயாதந்திர பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,
5) ஓம் பிரம்மாயா பிரம்மா ரூபாயா பிரம்மா லிங்காயா பிரம்மா பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,
6) மந்திர காயத்ரி .
மந்திர ராஜாய வித்மஹே மஹா மந்திராய தீமகி தன்னோ மந்திர பிரசோதயாத்
7) யந்திர காயத்ரி
யந்திர ராஜாய வித்மஹே மஹா யந்திராய தீமகி தன்னோ யந்திர பிரசோதயாத் .
8) சகல கருக்கலுக்கும் சக்தி அளிக்கும் மந்திரம்
நங் லங் மங் லங் சிங் லங் வங் லங் யங் லங் லம் லங் ஓம் ஆம் லா லீ லு உம் படு ஸ்வாஹா ரெட்டு கட்டு கட்டவிழ்க்கவும் .
9) பூஜிக்கும் தேவதைகளுக்கு பந்தந் நிவர்த்தி
ஐம் ஹ்ரீம் பகளாமுகி பூஜ்யமான சகல தேவதா மம சத்ரு பிரேரித தேவதாக்கு பந்தாத் முக்த பந்தா குரு குரு ஸ்வாஹா வங் சிங் உச்சாடாய உச்சாடாய .
10) சகல தேவதா வசிய மந்திரம்
மீறியும் கிரியும் சிரியும் வசி வசி
இந்த பத்து மந்திரங்களை முறைப்படி தெரிந்து செய்வதுவே நலம் செய்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பலன் தரும் .

சில காரண காரியங்களுக்கு எந்த தெய்வங்களை வணங்கினால் , உங்கள் குறை தீரும் என்று , நம் முன்னோர்கள் - சித்தர் பெருமக்கள் கூறியவற்றை கொடுத்துள்ளேன்

🗣

சில காரண காரியங்களுக்கு எந்த தெய்வங்களை வணங்கினால் , உங்கள் குறை தீரும் என்று , நம் முன்னோர்கள் - சித்தர் பெருமக்கள் கூறியவற்றை கொடுத்துள்ளேன்.. உரிய டிபார்ட்மென்ட் மேனஜர் , சூப்பர்வைசர் தானே உடனடியாக தீர்வு கொடுக்க இயலும். முயன்று பாருங்கள்...    மனிதம் வளர்ப்போம் !

காரியம் நடக்க
விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்
செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன்
மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி
திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி
புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி
புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி
விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி
உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி
வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர்
சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன்
பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி
நோய் தீர
முடி நரைத்தல், உதிர்தல்- மகாலட்சுமி, வள்ளி
கண் பார்வைக் கோளாறுகள்- சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்
காது, மூக்கு, தொண்டை நோய்கள்- முருகன்
ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்- மகாவிஷ்ணு
மாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கை
அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா- தட்சிணாமூர்த்தி, முருகன்
நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு- முருகன்
பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி
மூட்டுவலி, கால் வியாதிகள்- சக்கரத்தாழ்வார்
வாதங்கள்- சனிபகவான், சிவபெருமான்
பித்தம்- முருகன்
வாயுக் கோளாறுகள்- ஆஞ்சநேயர்
எலும்பு வியாதிகள்- சிவபெருமான், முருகன்
ரத்தசோகை, ரத்த அழுத்தம்- முருகன், செவ்வாய் பகவான்
குஷ்டம், சொறி சிரங்கு- சங்கர நாராயணன்
அம்மை நோய்கள்- மாரியம்மன்
தலைவலி, ஜீரம்- பிள்ளையார்
புற்று நோய்- சிவபெருமான்
ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு.

சிவன் சுடுகாட்டில் ஆடும் சாமி என்று சிவனை விமர்சித்து இன்று பலர் நம்மையும் குழப்பி,

சிவன் சுடுகாட்டில் ஆடும் சாமி என்று சிவனை விமர்சித்து இன்று பலர் நம்மையும் குழப்பி,

மற்றவர்களையும் குழப்பி வருகிறார்கள்.

இதன் உண்மை சூட்சுமம் என்ன?

இதுபற்றிய ஒரு பார்வை.

சுடுகாடு என்பது உயிர் எனும் மெய் இருந்த கூடாகிய நம் உடலை விட்டு பிரிந்த பின் கூடு ஆகிய உடலை பயனற்ற கூட்டை  நெருப்பு கொண்டு எரிக்கும் இடம் சுடுகாடு.

அதாவது, உயிர் உடல் என்னும் கூட்டில் இருக்கும் வரை, உயிரினம்,

உயிரற்ற உடல் பிணம் (சவம்).

60 – 70 ஆண்டு காலம் வாழ்ந்த கூடாகிய உடலை விட்டு உயிர் பிரியும்போது, தான் இத்தனை ஆண்டுகள் இருந்த கூட்டில் மீண்டும் நுழைய  முடியாமல் நம் ஆன்மா பரிதவிக்கும்.

ஒரு ஆண்டு வசித்தாலும் ஒரு வீட்டை விட்டு நாம் பிரியும்போது ஏற்படும் உணர்வு போல ...

60 – 70 ஆண்டு காலம் இருந்த கூடு தமக்கு என்றும் நிரந்தரம் என நினைத்து பேணி காத்த உறவுகள் அனைவரும் நம் உடலை எரித்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் சென்று விடும்போது இன்புற சேர்த்த சொத்து அனைத்தும் தமக்கு இல்லை என்ற மெய்யை உணர்ந்து நமது ஆன்மா பரிதவிக்கும் போது,

மாபெரும் கருணை யாளன் எம்பெருமான் ஈசன் கருணையுடன் உயிரை தன்னுள்ளே ஒடுக்கி அந்நேரத்தில் நமக்கு அபயம் அளிக்கிறார்,

இதை உணர்த்தவே அப்பர் பெருமான் திருஅங்கமாலை  தேவாரத்தில்....

"உற்றார் ஆருளரோ
உயிர் கொண்டு போகும்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றா ராருளரோ..?

என்று மிக தெளிவாக கூறியுள்ளார்.

யார் உதவியும் ஆறுதலும் கிட்டாது அல்லல்பட்டு நம் ஆன்மா பரிதவிக்கும் நேரத்தில்,

சிவன் மட்டுமே நமக்கு கருணையுடன் அடைக்கலம் தந்து நமக்கு அருளும் மாபெரும் கருணையை உணராமல் சுடுகாட்டில் ஆடும் கடவுள் என்று சிவனை கூறுவது எவ்வளவு சிறுமை  என்று உணர்ந்து பாருங்கள்.

சுடுகாட்டில் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கும் கடவுள் இல்லை,

அகிலத்தையே ஆட்டுவிக்கும் ஆண்டவன்,

நம் உயிரின் பரிதவிப்பை பொறுக்காமல் அந்த உயிருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி,

சுடுகாட்டிலும் எழுந்தருளி மாபெரும் கருணையோடு உய்வு பெறவேண்டிய உயிர்கள் உய்யும் பொருட்டு காக்கிறான் என்பதே உண்மை.

இதை உணராதவர்கள் தான் வீண்பேச்சு பேசுகிறார்கள்.

மாபெரும் கருணையாளன் ஈசன்
கருணையை உணராமல் அல்லது மெய் உணராமல் இருப்பவர்கள்,

மெய் உணர வேண்டி ஈசன் திருவருளால் அடியார்கள் பாதம் பணிகிறேன்.

"நல்லதே நடக்கிறது"

பஞ்ச நந்திகள்

பஞ்ச நந்திகள்

போக நந்தி:

ஒருசமயம் பார்வதியும் பரமேஸ்வரனும் பூவுலகம் செல்ல எண்ணினர். அப்போது இந்திரன், நந்தி வாகனமாகி அவர்களை பூவுலகம் அழைத்துச் சென்றான். போகநந்தி எனப்படும் அபூர்வ நந்தி கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது.

பிரம்ம நந்தி:

பிரம்மன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும்முன் சிவனிடம் உபதேசம் பெற விரும்பினார். சிவன் உயிர்களைப் பாதுகாக்க அடிக்கடி உலாப் போவதால் ஓரிடத்தில் இருந்து உபதேசம் பெற பிரம்மனால் இயலவில்லை. எனவே, நந்தி உருவுடன் சிவனைச் சுமந்து சென்றபடி உபதேசம் பெற்றுக் கொண்டார். பிரம்ம நந்தி எனப்படும் இது சுதைச் சிற்பமாக பிராகார மண்டபத்தில் உள்ளது.

ஆன்ம நந்தி:

பிரதோஷ கால பூஜையேற்கும் நந்திதான் ஆன்ம நந்தி. இது கொடிமரம் அருகே இருக்கும். எல்லா ஆன்மாக்களிலும் இறைவன் இருப்பதால், அந்த ஆன்மாக்களின் வடிவாக ஆன்ம நந்தி உள்ளது.

மால்விடை:

மால் என்றால் மகாவிஷ்ணு; விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும்போது, மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார். மால்விடை எனப்படும் இது கொடி மரத்திற்கும் மகாமண்டபத்துக்கும் இடையில் அமைந்திருக்கும்.

தரும நந்தி:

இது கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு மிக அருகில் இருக்கும். ஊழி முடிவில் உலக உயிர்கள் எல்லாம் உமாபதிக்குள் அடங்கிவிடும். அப்போது தர்மம் மட்டும் நிலைக்கும். அதுவே ரிஷபமாகிறது. இது தரும நந்தி.