30 August 2012
ஏழரைச் சனி
பிறப்பு ஜாத கத்தில் கிரகங்க ளின் நிலையை ஆரா ய்ந்து கோச்சாரம் நன்மை யைத் தருமென்பதை முடிவு செய்தல் அவசியம். உதாரண மாக, துலா ராசிக்கு, சனிப் பெயர்ச் சியின்போது ஏழரைச் சனியாக வந் துள்ளது. சனி பகவான் துலாத்தில்தான் உச்சம் பெறுகிறார். பொதுப்படையாக ஏழ ரைச் சனி கெடுபலன் என்று கூறுவதும் தவறு. உச்ச சனி அனைத்து துலா ராசிக்காரர்களுக்கும் அள்ளிக்கொடுக்கப் போகிறது என்பதும் தவறா னதே. அதற்காகப் பரிகாரங்களோ, பூஜைகளோ செய்யும்போது தனக்கு எவ்வாறு செய்வது என்று அறிந்து, புரிந்து அதன்படி செய்து நிச்சய பலன் பெற வேண்டும்.
ஏழரைச் சனி என்ற உடனேயே நீலக்கல் அணிதல் கூடாது. முதலில் ஒரு ஜாதகரின் தசா புத்தியை ஆராய்ந்து, அந்தத் திசை நட்புத் திசையா, பகைத் திசையா என்றெல்லாம் பார்த்து, அந்தத் திசையின் அதிபதிக்கும், சனிபகவானுக் குமான நட்பை யோசித்தப் பிறகுதான் நீலக்கல் லைப் பரிந்துரை செய்யவேண்டும். நீலக்கல்லை கொடுக்கும் முன் அந்தக் கல் எவ்வளவு முற்றிய தன்மையினதாக இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து, எந்த பூமியில் விளைந்த இரத்தி னம் கொடுக்கவேண்டும் என்பதை முடிவு செய்து, ஜாதகரின் மற்ற நிலையை ஆரா ய்ந்தும் கொடுக்கும் போதுதான் ஜாத கர் பலன் பெற முடியும். இவ்வாறு தான் அனைத்துக் கிரகங்களின் கோச்சார நிலையில் இரத்தினம் கொடுக்கவேண்டும். பலருக்கு வாழ்நாள் முழுக்கக் கொடுக் கும் இரத்தினமே கோச்சாரத் திற்குப் பொருந்தும். சில ருக்கு கோச்சாரத்தில் தனி இரத்தினமே தேவைப் படும். அதனால் தான் பொதுப்படையாகக் கொடுக்காமல் அவரவர் ஜாதகத்தைத் துல்லியமாக ஆராய்ந்த பிறகே இரத்தினத் தைப் பரிந்துரை செய்ய வேண்டும்.
குருபகவானின் பெயர்ச்சி, ராகு-கேது எனும் சாயா கிரகங்களின் பெயர்ச்சி, சனி பகவானின் பெயர்ச்சியை மன தில் கொண்டு, முக்கியத்துவம் கொடுத்து, தனக்கு வரவிருக்கும் நன்மை, தீமையை ஆராய்ந்து, தீய பலன் எனில் தக்க சாந்திகளைச் செய்து, ஸ்லோகம் உச்சரித்து, கோயில்களுக்குச் சென்று, அந்நிலையிலான உணவுப் பழக்கங்களை மாற்றிக்கொண்டு அதற்கான இரத்தினங்களை அணிந்து கொள்வ தனால் சிரமங்கள் வந்தபோதும் சூரியனைக் கண்ட பனிபோல் கெடுபலன் கரைந்துவிடும்.
அந்தக் கிரகங்கள் கொடுக்கும் கெடுபலனைத் தடுக்கவல்ல கிரகமும் குறைக்க வல்லவரும் குரு பகவான்தான்.
கெடுபலனைக் குறைக்கும் சக்தியும் குருபகவானுக்கு மட் டும்தான் உண்டு. ஜாதக ரீதியாக குருவின் பார்வை இருக்குமாயின், வாழ்க்கை எனும் படகு அழகாக நகர்ந்து செல்லும். அதனால்தான் `குரு பார்க்கக் கோடி நன்மை' என்பர். இவ்வளவு அழகான ராஜகுரு ஒருவரின் ஜாதகத்தில் சிறந்த பலன் கொடுக்கும் 2, 5, 7, 9, 11 ஆகிய இடங் களில் வீற்றிருக்கப் பெற்றவர்களாயின் கொடுத்து வைத்தவர்கள் எனும் அட்டவணை யின் கீழ் அடங்குவர்.
http://www.silverjewelrywholesales.com/wp-content/uploads/2010/04/Cubic_Zirconia_Gems_Stones.jpg
இவ்வாறு பார்க்கும் பொழுது, இராசியை மட் டும் பார்க்காமல் பிறப்பு லக்கினத்தையும் கணக்கில் கொண்டு பிறகே முடிவு எடுத்தல் அவசியம். லக் கினமோ, இராசியோ - ஏதாவது ஒன்றுக்கு குரு பார்வை கிடைத்தாலே சராசரி மனித வாழ்க் கையைவிட நல்லதொரு வாழ்க்கை நிலையை அடையலாம்.
No comments:
Post a Comment