23 November 2012

விநாயகர் யந்திரம் (கிழக்கு

விநாயகர் யந்திரம் (கிழக்கு)

கிழக்குத் திசை நோக்கி தலைவாயில் கொண்ட இல்லத்தில், வடக்கில் மட்டும் மற்றொரு வாயில்
அமைத்துக் கொண்டால் அந்த இல்லம் அமைதியைத் தராது. வீட்டு மூலைகளில் கழிவறை இருப்பதும் கூடாது. கிழக்கு நோக்கிய வீட்டில் ஏற்படும் பஞ்சபூத தாக்கங்களிலிருந்து காப்பாற்ற உதவும் இந்த விநாயகர் எண் யந்திரம், 25 எண்கணித கோணங்களில் நல்வழிப்படுத்தித் தரும். வளர்பிறையில் வைத்துக் கொண்டால் தொய்வின்றி நன்மைகள் அதிகரிக்கும்.


குபேர வசிய யந்திரம் (வடக்கு)

இல்லத்தில் வசிப்பவர்கள் தீராத கடனாலும் ஏழ்மை யினாலும் துன்புறாமல் பாதுகாக்கும் பஞ்ச வண்ண யந்திரம் இது. வடக்குத் திசையில் தலைவாயில் உள்ள இல்லத்தில் ஏற்படக்கூடிய வாஸ்து தோஷங் களை அறவே அகற்றிவிடும். மடம், சத்திரங் கள், பாழாகிவிட்ட மனைகள் போன்றவற்றை விலை கொடுத்து வாங்கி வீடு, கடை கட்டியவர்களிடம் இருக்க வேண்டிய வசிய யந்திரம். யாவருக்கும் செல்வச் செழிப்பை ஏற்படுத்தித் தர பாடுபடும்.

பத்ரகாளி யந்திரம் (மேற்கு)

வாஸ்துரீதியாக மேற்கு சனியின் பார்வைக்கு உட்பட்ட திசை. பிறரை வசப்படுத்திக் கொள்ளுதல், செல்வ வளர்ச்சி, அறிவாற்றல் இவைசார்ந்த நன்மைகளை அதிகரிக்கச் செய்யும் யந்திரம் இது. கோவில் அருகில் இருப்பதால் விளையக்கூடிய தோஷங்கள், முக்கோண வடிவமுள்ள மனையில்  ஏற்படும் கெடுதல்கள், முக்கோண வடிவத்தில் வீடு கட்டியிருந்தால் உருவாகும் பின்னடைவுகள் போன்றவற்றிலிருந்து காப்பாற்றும் சக்திவாய்ந்த யந்திரம்.


கணபதி யந்திரம் (தெற்கு)

தென்மேற்கு, மேற்குத் திசையில் பள்ளமாக இருத்தல், இல்லத்தில் அறைகள் முறையாக அமையாமல் திருஷ்டியால் ஏற்படும் தோஷம், கிருக கர்ப்பத்தில் (மையத்தில்) சுவர் முதலியன இருப்பதால் ஏற்படும் தோஷம், வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்ததால் உருவாகும் வாஸ்து தோஷம் இவற்றிலிருந்து தப்பிக்க வைக்கும் பஞ்சவண்ண யந்திரம் இது. வடக்கு சுவரில் தெற்கு நோக்கி இருத்தல் சிறப்பு.

ஷீரடி சாயி பாபா சக்தி யந்திரம்

"என்னை நினைவுகூர்ந்து, எனது அற்புத சக்தியினை உணரும் பக்தர்களுக்கு நான் பக்கத் துணையாக இருந்து, இன்பத்தை அள்ளித்தர அயராது துணை நிற்பேன். சாயி, சாயி, சாயி என உச்சரித்தால் பாவங்கள் தொலைந்துவிடும்.'

-சாயிபாபா

எண் 6-ன் ஆதிக்கம் பெற்ற- சுக்கிரனின் பலம்வாய்ந்த யந்திரம் இது. சித்திரை, மாசி, மார்கழி மாதங்களில் கோரிக்கைகளை வைத்தால் ஆறே மாதங்களில் வேகமான பலன் கிடைக்கப் பெறும். முயலுங்கள்; பாபா அருள்புரிவார்!

No comments:

Post a Comment