ராகு தோஷம் நீங்க
1. கடுமையான ராகு தோஷம் நீங்க எருமை, பூமிதானம், குடை, எண்ணையுடன் பாத்திரம், உளுந்து, மந்தாமரை மலர் இவைகளை ஒரு சுப நாளில் தானம் செய்யவும்.
2. ராகு திசை நடப்பவர்களும் ராகுவுக்கு கிரக பரிகாரம் செய்ய நினைப்பவர்களும், ராகு பகவானை வேண்டி கோமேதகக் கல்லை ஆபரணங்களில் சேர்த்து அணிந்து கொண்டு சனிக்கிழமை தோறும் விரதம் இருக்க வேண்டும்.
3. 7-ல் ராகு இருப்பது கடுமையான திருமண தோஷமாகும். எவ்வளவு முயன்றும் திருமணம் கூடுவதில்லை. இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் (அ) செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வரவும். இவ்விதம் ஒன்பது வாரம் விளக்கு ஏற்றி வந்தால் ராகு தோஷத்தால் தடைப்பட்டு வரும் திருமணம் நடக்கும்
No comments:
Post a Comment