20 March 2013

நெல்லிகாய்

nellikani

கருநெல்லி, அருநெல்லிஎன்ற இரு இனம் உண்டு.
அரு நெல்லி அத்தனை மருத்துவ குணம் உடையது இல்லை .மிக சிறியதாக இருக்கும் .
கரு நெல்லி , எனும் தோப்பு நெல்லி எனும் காய் தான் சத்துநிறைந்தது , உருண்டையாக இருக்கும் .

இலை, பட்டை.வேர்,காய்,பழம்,காய்ந்த பழம், பூ, மற்றும் வேர்பட்டை,விதை அனைத்தும் பயன்தருவது .
சத்துக்கள் விவரம் 

மாவுச் சத்து-14 கி. புரத சத்து-0.4 கி. கொழுப்புச்சத்து- 0.5 கி, பாஸ்பரஸ்- 21 மி.கி.கால்ஷியம்-15 மி.கி. இரும்புச்சத்து - 1 மி.கி. வைட்டமின் பி1 28 மி.கி. வைட்டமின் சி 720 மி.கி. நியாசின் - 0,4 மி.கி. கலோரிகள் - 60


நெல்லிக்காயில் உவர்ப்பும், புளிப்பும் சேர்ந்து இருக்கிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புசத்தும் இருக்கிறது. இது உடல் உஷ்ணத்தையும் கட்டுபடுத்தும். ஒரு நெல்லிக்காய் மூன்று நான்கு ஆப்பிளுக்கு சமம் என்கிறது மருத்துவம். 

நெல்லிக்காயை அனைவரும் சாப்பிடலாம். ஆயுளை பலப்படுத்தும். சிலருக்கு வயிற்றில் உஷ்ணம் அதிகமானால் வாய் துர்நாற்றம் ஏற்படும். அவர்களுக்க நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் உஷ்ணத்தையும், வாய் துர்நாற்றத்தையும் தீர்க்கும். அத்துடன் 

நெல்லிக்காய், இன்சுலின் சுரப்பதை தூண்டுகிறது. இதனால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது நெல்லிக்காய்.


வேறு எந்த காயகனியிலும் இதிலுள்ள வைட்டமின் 'சி ' அளவைப் போல் பெற இயலாது. ஒரு நெல்லிக் காயில் இருபத்து --முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்து உள்ளது.
நெல்லிக்காய் சாறு 15 மி.லி. தேன் 15 மி.லி.எலுமிச்சைச்சாறு 15 மி.லி.கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம் முற்றிலும் தீரும்.

மஞ்சளையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து சிறுநீர்ப்பைத் தொற்று வியாதிகளுக்கு மருந்தாகக் கொடுப்பார்கள்.
சிறுநீர் கழியாமல் தடைபடும் நிலையில் ஏலக்காயையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து மருந்தாகக் கொடுப்பார்கள்.
இரத்தம் கலந்து சிறுநீர், சிறுநீர் கழியும் போது வரும் எரிச்சல் போன்றவற்றிற்கு நெல்லிக்காயை தேனில் கலந்து அரைத்துக் கொடுப்பார்கள்.
நெல்லிக்கனி விதையைப் பவுடராக்கி, அதனுடன் அரிசி கஞ்சியை கலந்து கொடுத்து வந்தால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் கட்டுப்படும்.
தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்து ணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக் காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.
ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.
நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.
ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராது.
உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்குவியாதி குணமாகிவிடும்.

நெல்லிகாயை காயல்கனி என்பார்கள். காலங்களில் சிறந்தது வசந்தகாலம். இந்த வசந்த காலத்தில் நெல்லிகாய் எல்லா இடங்களிலும் கிடைக்கும். மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த நெல்லிகாயை நிறைய பயன்படுத்தினால் நலமாய் வாழலாம். நெல்லிக்காயில் வைட்டமின் சி 100 கிராமிற்கு 600 கிராம் நிறைந்துள்ளது. சி வைட்டமின் நம் உடலில் குறைவதால் தோல் நோய்கள் ஏற்படுகின்றன. அடிக்கடி சிலருக்கு ஜலதோசம் பிடிக்கும். இதுவும் வைட்டமின் சி குறைவினால் தான் ஏற்படுகிறது. 
இது தவிர புரதம் கொழுப்பு சுண்ணாம்புசத்து பாஸ்பரஸ், மாவுசத்து நார்ச்சத்து வைட்டமின் ஏ போன்ற சத்துகளும் உண்டு. நெல்லி உடலுக்கு குளிர்ச்சி தரும். இதை உண்பதால் சிறுநீர் தாரளமாக பிரியும். கர்ப்பபை கோளாறகள் நீங்கும். இரத்தம் தூய்மை அடையும். இக்காயின் இன்னும் ஒரு சிறப்பு காயை உலர்த்தினாலும், வேகவைத்தாலும் குளிர வைத்தாலும் அதிலுள்ள வைட்டமின் சி குறையாது. 
வாங்கியவுடன் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யவும். ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவுக்கு மேலாக தண்ணீர் விட்டு வேகவிடவும். தேவையான கல் உப்பும் சிறிது மஞ்சள்  தூளும் போடவும் 5 அல்லது 10 நிமிடத்திற்குள் ஒரு காயை எடுத்து அழுத்திப் பார்த்தால் அழகாக உடையும் உடனே இறக்கி வைத்து ஆறிய பிறகு பாட்டிலில் நீரோடு எடுத்து வைக்கவும். இதை சாம்பார் சாதம், ரசம் சாதம் என்று எல்லாவற்றிற்கும் தொட்டு கொள்ளலாம்.

தேவையான வெந்த நெல்லிகாயை எடுத்து உடைத்து விதை நீக்கி ஊறுகாய் போடலாம். தேங்காய் பச்சை மிளகாய் வெந்த நெல்லிகாய் சேர்த்து அரைத்து புளிக்காத தயிரில் சேர்த்து உப்பு பச்சடி செய்யலாம். பச்சை நெல்லிகாயை துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து கொண்டு பருப்பு ரசம் மிளகு ரசம் இவைகளில் சேர்க்கலாம். புளியை குறைவாக சேர்த்து கொள்ள வேண்டும்.

நெல்லிகாயை உப்பு எதுவும் போடாமல் வேக வைத்து விதை நீக்கி நன்கு மசித்துக்கொள்ள வேண்டும். ஒரு கிலோ நெல்லிகாய் என்றால் அரைக்கிலோ சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து கிளற வேண்டும். சிறிது சிட்ரிக் அமிலம் சேர்த்து லேகியம் போல் வரும்போது இறக்கி வெண்ணிலா எசன்ஸ் அல்லது ரோஸ் மில்க் எஸன்ஸ், ஸ்ட்ராபெர்ரி ஏதாவது ஒன்றை அரை தேக்கரண்டி சேர்த்து  சூடு ஆறியதும் காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். சப்பாத்தி, பிரட் தோசை, இட்லி போன்ற அனைத்திற்கும் தொட்டு கொள்ளலாம்.  கொளுத்தும் வெயிலுக்கு நம் உடம்பிற்கு ரொம்ப நல்லது.

நெல்லிகாயை நிறைய வாங்கி வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கலாம். இதை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி வைத்து கொண்டு தினமும் சிறிது தலையில் தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். முளைச்சூடு குறையும். கூந்தல் கரு கரு வென செழித்து வளரும். முடிகளை வலுவாக்கும் பொடுகும் வராது. 

சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.

நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.
நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.


இதயக்கனி ஆரோக்கிய கனி என்று அழைக்கப்படும் நெல்லிகனியை நாம் தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்

No comments:

Post a Comment