23 May 2013

நுட்பங்களாய் விளங்கும் யோக அன்னை

ஸ்ரீ சக்ரவிளக்கம் 

    பிரபஞ்ச ஸ்வரூபமாயிருக்கும்  'ஓம்'  ஒலியும் அதனால் உருவான அணுச்சலனத்திற்கு ஆதாரம் என்ற 'மூலாதாரம்' என்பது, பூமியும் அதன் கர்த்தா புவனத்தின் நாயகன் நர்த்தனன், அவனே முதல்சக்கரமான நாற்சதுரபீடத்தின் இதழ்கள் நான்கு மஹாமேருபீடம்  3 முக்கிய (ஒலி,ஒளி, நாடிகளான) இட,பிங்க, சூஷ்மனா நாடிகளென்ற மூன்றினைக் காட்டுவதே (நாற்சதுர 3 கோடுகள் ).

    'சாக்தம்' என்ற சக்தி வழிபாட்டில் ஆதிசங்கரர் வெகுவாக சௌந்தர்ய லஹரியில் பராசக்தியின் பெருமைகளைப் பாடுகிறார்.


                                                                          
படைத்தல்,காத்தல்,ஒடுக்குதல்,மறைத்தல்,அருளல், என ஐந்தொழில்களைப் புரிகின்ற, பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகியவர்கள் 5 மூர்த்திகள்.
சக்தியானவள், அமுதக்கடலின் நடுவில் கற்பக விருட்ஷங்களால் சூழப்பெற்ற ரத்தினமயமான தீவில்,சிந்தாமணியால் இழைக்கப்பட்ட அரண்மனையில் மஞ்சத்தில் அன்னை அமர்ந்திருக்க அம்மஞ்சத்தின் நான்கு கால்களாக, பிரமன், விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன்,ஆகிய நால்வரும் இருப்பார்கள்.

அக்கால்கள் தாங்கி நிற்கும் மஞ்சப் பலகையாக சதாசிவன் பரந்ததிருக்க, அதன்மேல் காமேஸ்வரனோடு கூடிய காமேஸ்வரியாக காட்சிதருபருவள், அன்னை பராசக்தி.

                பரபிரம்மத்துடன் இணைந்த பராசக்தியை,    ஸ்ரீ வித்யாவாகவும், அன்னையின்
மந்திரத்தை ஸ்ரீ வித்யை எனவும், அன்னையின் சக்கரவடிவத்தை
ஸ்ரீ சியாமளசக்கரமெனவும்,

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம,

ஸ்ரீலலிதா திரிசதி,

ஸ்ரீ காயத்திரி, ஸ்ரீ பஞ்சதசாட்ஷரி ஆகிய மந்திர ரூபமாகவும்,                                யோகசித்தாம்ச வடிவில் துவாதசாந்தப் பெருவழி ஜோதிவடிவாயும் இருப்பவளாகும்.

                                                                                                                                                   இதனைக் கண்டுயுணர்ந்து உலகிற்கு உணர்த்தியவர்கள் பன்னிருவரே.

1)சிவன்

2)முருகன்

3)இந்திரன்

4)சூரியன்

5)சந்திரன்

6)அக்னி

7)குபேரன்

8)மன்மதன்

9)மனு

10)அகத்தியர்

11)துர்வாசர்

12)வாக்தேவதைகள் ஒருவரான அகத்தியரின் பத்தினி   லோபமுத்ரா ஆகியவர்களாகும்.

ஆதித்யன், அம்புலி, அங்கி, என்ற முச்சுடர்களின் மத்தியில் ஒளிரும் அம்பிகையை
64 கோடி யோகியினிகள் வணங்குகிறார்கள். 'எண்ணிலார் போற்றும் தையலையை' என அபிராமிபட்டர் உருகிப் பாடுகிறார்.


   அம்பிகையின் ஸ்ரீ சக்கரம் ஒன்பது சுற்றுக்களைக் கொண்டதாகும், நவாவர்ணம் என்பர். ஆவரணம் என்பது சுற்று,அடைப்பு எனப் பொருள்படுவதாகும்.

   ஸ்ரீ ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரியில், கூறுகிறபடி, நாற்பத்திநான்கு தத்துவங்களாக விளங்குகிற சியாமளசக்கரம் அமைப்பு.

1.    பிரகாரங்கள்-3 (சதுரங்கள்)
2.    மேகலைகள்-3 (வட்டங்கள்)
3.    தளங்கள்-16 (தாமரை இதழ்கள்)
4.    சிவரூபசக்கரங்கள்-4
5.    சக்திரூப சக்கரங்கள்-5
6.    மூலகாரண தாதுக்கள்-9
7.    பிந்துஸ்தான மந்திரகோணங்கள்
8.    எட்டுக் தாளங்கள்(தாமரை இதழ்கள்)

என்று மஹாசக்தி பிரவாகமாக விளங்கும் ஸ்ரீ சக்கரம் சூட்ஷமமான வடிவிலுள்ளதாகும். இதை பெரியோர்கள் மூலம் அறியத்தக்கதாகும்.

ஒன்றின் கீழ்(ஒன்றுக்குள் ஒன்றாக) ஒன்றாய், நேர்கோணங்கள் 4.
தலைகீழ் (ஒன்றுக்குள் ஒன்றாக) ஒன்றாய் முக்கோணங்கள் 5.
முக்கோணங்கள் 14
வெளிமுக்கோணங்கள் 10
உள்முக்கோணங்கள் 10
நடுமுக்கோணம் 1 (சிறியது)
ஒரு புள்ளி 1 (சிறுமுக்கோண நடுவில்)

  சிவகோணம் முன்பகர்வது ஒரு நாலு சக்தி நெறி
     செறிகோணம் அத்தொடு ஒரு மருவு கோன்
  நவகோணம் உட்படுவது எழுமூ இரட்டி ஒரு
     நவில் கோணம் உற்றதுவும் வலயமாய்
  இவரா நிரைந்த  தளம் இருநாலும் எட்டுஇணையும்
     ஏழிலாய வட்ட மொடு சதுரமாய்
  உவமானம் அற்ற தனி தனி மூவகைக்கணும் என்
     உமை பாதம் உற்ற சிறு வரைகளே.



லோக நாயகி யோக நாயகியாய், யோக நெறியின் விளக்கமாக உள்ளதே ஸ்ரீ சக்கரம்  என்பர்.
                                                                                                                                                             யோக தத்துவங்களின் விளக்கங்களாக அந்தக்கரணம், மன விருத்திகள்,என எண்ணப்பரவல்களின் நிலைப்பாடு, குறித்து மேம்படுத்தும் நிலையாகும்.                
           
3 சதுரபிரகாரங்களில் ஒன்றான சித்த விருத்தி
(மனமாறுதலை அடக்கி விகாரம் இல்லாமல் செய்தல்) யோகமாகும்.

மூன்று குணங்களாகிய சத்வகுண,தமோ குண,ரஜோகுண நிலைகளை மாற்றி சத்வகுண மேம்பாட்டை ஏகாக்ரஹ சிந்தையை வைராக்ய நிலையில் வைத்திருக்கும் போது கிடைக்கும்        அட்டமா சித்திகளைப் பெறச் செய்யும்

அணிமா ,மகிமா ,லஹிமா,கரிமா,பிராப்தி,பிராகாம்யம் ,ஈசித்வம் ,வசித்வம்  
ஆகியவற்றை அளிக்கும் 8 தேவதைகளும்

 காமம் ,குரோதம்,மோஹம்,லோபம் ,மதம்,மாச்சர்யம்,புண்ணியம்,பாவம் 

என்ற  8  தேவதைகளும் அடுத்து  ஆதாரங்களான

மூலாதாரம்  ,சுவாதிஷ்டானம்,மணிபூரகம் ,அனாஹதம் ,விசுத்தி ,ஆக்ஞை ,சகஸ்ராரம் 

  பரவெளி என 8 ஆதாரசக்தி தேவதைகளும் 3 மேகலையாக

விழிப்பு

உறக்கம்

கனவு

வீடு , மோட்ஷம் என்பது சுத்த சைதன்ய ரூபமான புருஷனுக்கு அந்தக்கரணம் முதலிய உபாதிகள் விலக்கி அவனது உண்மையான ஸ்வரூபத்தில் நிலை பெறச்செய்து தன்னையும் தன்னுள் அடங்கிய மஹாசக்தியை வெளிபடுத்தி உலகை உய்யச்செய்யும் ஸ்ரீஆதிபராசக்தியின் அதி அருள் சூட்சம வடிவே இந்த ஸ்ரீசக்கரமாகும்.

    எங்கெங்கும் காணினும் சக்தியடா.... எனவும்
   
    ஆதிப்பரம் பொருளின் ஊக்கம்--அதை
    அன்னையெனப் பணிதல் ஆக்கம்
    மூலம் பழம்பொருளின் நாட்டம்--இந்த
    மூன்று புவியும் உனது ஆட்டம்     எனவும்

அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம் இப்படி பாரதியின் பாடல் நம்மை அன்னையிடம் சரணடைய  வைக்கிறது

No comments:

Post a Comment