28 October 2014

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா8

இனி மந்திரங்களை காண்க

ஓம் ஆதித்ய குருவே லோக வசியம்
நான் நேசிக்கும் சித்திகளெல்லாம்
என் வசமாக சுவாக

(108 முறை கூறவும்)
இவ்வாறாக வணங்கி பிறகு நீங்கள் நிற்கும் தண்ணீரையும் வணங்கி பூமியையும் தொட்டு வணங்கி பூஜையை நிறைவு செய்யவும். இந்த குரு பூஜை பஞ்ச பூத பூஜையும் இணைந்தது. ஆகாயம், நெருப்பு, பூமி, தண்ணீர் பார்த்து வணங்குகீறீர்கள் மூச்சு பயிற்சியும் முன்னமே செய்கீறீர்கள். ஆக இது பஞ்ச பூதத்தையும் நம் வசமாக்குவதொடல்லாமல் நல்ல குருவும் கிடைத்து துணை நிற்பார்.

இது போல் 11 தினமும் செய்ததல் குரு பூஜை நிறைவு பெற்றது. இனி இரவில் ஒரு பயிற்சி உண்டு. அதையும் இந்த 11 தினமும் மட்டும் கடைபிடிக்கவும்.










விளக்கு பயிற்சி
சூரிய பூஜை என்னும் குரு பூஜை காலை ஒரு வேலை மட்டும் தான் செய்வீர்கள். அன்று மாலையை வீணாக்காமல் பயனுள்ள இன்னொரு பயிற்சியை செய்யுங்கள். வீட்டிற்குள்ளேயே ஒரு அறையில் கண் உயரத்திற்கு ஒரு காமாட்சி அம்மன் தீபத்தை 3 அடி தூரத்தில் வைத்து தாங்கள் பத்மாசனம் இட்டு அந்த தீபத்தின் ஒளியையே நெற்றிக் கண்ணால் ஒரு மணி நேரத்திற்கு உற்று பாருங்கள். அந்த ஒளி 11 தினத்தில்  நெற்றியில் வந்து அமர்ந்து விடும். அதன்பின் இந்த பயிற்சி தேவை இல்லை. (சூரிய பூஜையும் 11 தினத்தில் நிறைவடையும்). இந்த விளக்கு பயிற்சி செய்யும் போடு கண்களில் நீர் வடியும். சிலருக்கு கண் வலிப்பது போல் இருக்கும். அப்படி இருந்ததால் பூஜை நேரத்தை குறைத்து கொள்ளுங்கள். படிபடியாக ஒரு மணி நேரத்திற்கு கொண்டு வாருங்கள். தீபம் தீவட்டி போல் எரியாமல் நிதானமாக எரிய வேண்டும். அறையில் கற்று அதிகம் வீசி தீபம் ஒளியை ஆட்டிக் கொண்டே இருக்கக் கூடாது. அவ்வாறு நிகழ்ந்தால் பார்வை ஒரு நிலைப்படாது. எனவே நின்று எரிய கற்று அதிகம் இல்லாமல் இருந்தால் நல்லது. இப்பயிற்சி பார்வை பலப்படும். நெற்றிக்கண் திறக்க உதவும். அவசியம் கடைபிடிக்க வேண்டும். வீட்டில் சத்தம் அதிகமாக இருந்தால் காதில் பஞ்சை அடித்துக் கொண்டும் செய்யலாம்.
விளக்கமாக மீண்டும் கூறுகிறோம்
ஸ்ரீ சூரிய பூஜை என்னும் குரு பூஜையை 11 தினங்கள் காலை வேலை மட்டும் செய்வீர்கள். இன்று மாலை வேலைகளை ஒரு சில மன அடக்க உடல் அடக்க பயிற்ச்சிக்கு 11 தினங்களை பயன்படுத்துங்கள். அதாவது தங்கள் பூஜை அறையில் ஆசனத்தை விரித்து அதன் மேல் அமர்ந்து (பத்மாசனம் இட்டே அமர வேண்டும். இந்த ஆசனம் உடல் அடக்கத்திற்கு பயன்படும்) உங்கள் எதிரில் ஒரு விளக்கு ஏற்றி கண்ணுக்கு நேராக இருக்கும்படி 3 அடி தூரத்தில் வைக்கவும். அழகாக பத்மாசனம் போட்டு, சின்ன முத்திரை வைத்து அதாவது கட்டை விரலும், ஆள்காட்டி விரலும் ஒன்றின் முனை ஒன்றில் ஒட்டி வைத்து தொடை மேல் கைகளை நீட்டி வைத்திருப்பது சின்னமுத்திரை ஆகும். இரு கைகளிலும் இந்த முத்திரை பிடித்து இருக்க வேண்டும். (சிவன் தவக் கோலத்தில் உள்ள புகைப்படங்களை பார்த்தல் அதில் பத்மாசனம் இட்டு சின்முத்திரை பிடித்து நிமிர்ந்து அமர்ந்திருப்பார் அது போல இருக்க வேண்டும்) கழுத்தையும் அண்ணாந்து பார்க்காமல் நேராக தலை இருக்க வேண்டும். குனிந்து குனிந்து நிமிர கூடாது. நேராக உடல் இருக்க வேண்டும். அப்படியே எரியும் தீபச் சுடரையே கண்கள் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படியே உங்கள் மூச்சுகாற்று உள்ளே போவது வெளியே வருவது எவ்வாறு நிகழ்கிறது என அந்த காற்றையும் கவனிக்கவும். மிக எளிதில் நெற்றி கண்ணில் ஒளி வசப்படும். காற்று வசப்படும். உடல் வசப்படும். மனம் நிலைப்படும். ஆசனம் பழக்கப்படும். எனவே இப்பயிற்சியை அரை மணி நேரமுதல் 1 மணி நேரம் வரை செய்யலாம். இருட்டறையில் விளக்கு வெளிச்சம் மட்டுமே இருக்க வேண்டும். இப்பயிர்ச்சியை 11 தினம் செய்தல் போதும். அவசியமான பயிற்சி என்பதால் இதை செய்ய வேண்டும். வேண்டுமானால் விளக்கு பார்க்கும் போடு ஓம் என்று மனதிற்குள் கூறிக்கொண்டே பயிற்சி செய்யலாம். கட்டாயம் செய்ய வேண்டும்.
அடுத்த பூஜை மிக முக்கியமானது என்பதால் மன அழுத்தம் குறைய தேவை பட்டால் ஓரிரு நாட்கள் ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். முடியுமானால் தொடர்ந்தும் செய்யலாம். எந்த பூஜையும் விடியற்காலை தான் தொடங்க வேண்டும். அடுத்தடுத்த பூஜையா என்ற மலைப்பு இல்லாமல் ஆர்வத்தை அதிகபடுத்தி பூஜை செய்யுங்கள். நம் வாழ்வே இது தான் என்றான பின் மலைப்புக்கு இடம் தரலாகாது.
இதன் அவசியத்தை மனதில் பதியவைத்து படியுங்கள் மீண்டும் படியுங்கள்
இந்த முறை மூன்று தினங்கள் செய்ய வேண்டும்
மண் பூஜை
கடந்த பயிற்ச்சிகளில் நல்ல குருவை நாடி துணை பெற்றாகி விட்டது. இனி அடுத்த ஒரு பூஜையும் உண்டு. அது மண் பூஜை ஆகும். அதாவது, அவரவர் விதிக்கு தக்கப்படி இந்த வகை மனிதர்களின் பிரச்சனையைத் தான் ஒருவருக்கு போக்கும் சக்தி உண்டு என்ற கட்டுப்பாடு உண்டு.  வகை மனிதர்கள் எனபது ஜாதியோ மதமோ கிடையாது. நம் ஜாதகப்படி வசியமாகக் கூடியவர்கள், நாம் என்ன சொன்னாலும் அவர்களுக்கு அப்படியே பலிக்கும். நம்மை கண்டாலே ஒரு ஈர்ப்பு அவர்களுக்கு உண்டாகும். நமக்கு கட்டுப்படக்கூடியவர்கள் என்று இந்த லோகத்தில் உண்டு. அவர்கள் மட்டும் நம்மிடம் வந்து பலன் பெற வேண்டுமானால் வசியம் வேண்டும். இந்த வசியம் நம்மிடம் இல்லையேல் பலதரப்பானவரும் நம்மிடம் வருவர் அதில் நம் விதியோடு தொடர்பு உள்ளவருக்கு எல்லாம் நடக்கும். விதி தொடர்பு இல்லாதவர்களுக்கு எதுவும் நடக்காது. நடக்காதவர்கள் நம்மை தேவை இல்லாமல் புரிந்து கொள்ளாமல் தூற்றி பேசுவார்கள். நம் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கும். எனவே நம் விதி தொடர்பு உள்ளவர்கள் மட்டுமே நம்மிடம் வருவது நக்கு நலம். சரி அவர்களை மட்டும் அப்படி அடையாளம் கண்டுபிடிப்பது என்றால் நம்மால் முடியாது. சற்று சிரமமான விஷயமும் கூட. இதற்காக ஒரு உபாயம் உண்டு. அதற்க்கு உதவி செய்வது தான் மண் போசை. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த மண் பொதுவானது. அது போல இதன் அதிபதி ஸ்ரீ கணபதியும் பொதுவான கடவுள் இவரை வழிபடுவதே மான் பூஜையாகும். மண் பூஜை என்றால் வேறு எதோ தவறான அர்த்தம் கொள்ள வேண்டாம். மண்ணில் பிறந்த நமக்கு. நமக்குரியவர் மட்டும் நம்மை நாடி வர, வசியம் தர மக்களுக்குள் நமக்குரிய மக்களை பிரித்து நம்மிடம் சேர்க்க நம்மிடம் பலன் பெற தகுதி உள்ளவரை மட்டும் நம்மிடம் இணைக்க இந்த மண்ணில் இருந்து ஆளக்கூடிய பொருளையோ, உயிரையோ நமக்கு அடங்கி வசியமக்கி கொடுப்பார். எனவே ஸ்ரீ கணபதி பூஜையை செய்தேயாக வேண்டும். இந்த பூமியில் இருந்து எந்த மந்திரம் சொன்னாலும் அப்போது தான் கட்டுப்படும். பூமிக்கு ஆகாயமும், ஆகாயத்திற்கு பூமியும் எப்போதுமே வசபட்டுதான் இருக்கும். குரு பூஜையும், மண் பூஜையும், மண் பூஜையை அகர பூஜை என்றும் கூறலாம். மேலும் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பூமியில் எதற்காக மாந்தீரிக கலையை பயில்கிரீர்களோ, என்ன தேவைக்கு உபயோகபடுத்தபோகிறீர்களோ அதற்கு இவரிடமும் தான் அனுமதி பெற வேண்டும். அப்போது தான் அகரம் முதல் ஆகாயம் வரை வசப்பட்டு நிற்கும். இல்லையேல் மாயை உங்களை நம்பி ஏமாற்றி விடும். எனவே கொடுத்துல்ள்ள படி பூஜையையும், வேண்டுதலையும், மன நிறைவாக செய்யுங்கள். இந்த பூஜை மூன்று தினங்கள் செய்ய வேண்டும். காலை மாலை இரு வேலையும் செய்ய வேண்டும். மூல மந்திரம் ஒரு வேலைக்கு 504 முறை சொல்ல வேண்டும். காலை மாலை சேர்த்து 1008 முறை சொல்ல வேண்டும். 11 தினம் குரு பூஜைக்கு பிறகு வீட்டிலேயே யாம் கொடுத்துள்ள வெள்ளருக்கான பிள்ளையாருக்கு பால் அபிஷேகம் செய்து அலங்கரித்து அவருக்காக வாங்கிய துண்டை அவருக்கு அணிவித்து புஷ்பம் சாத்தி காமாட்சி அம்மன் தீபம் ஏற்றி பூஜையை துவக்கவும். இதை துவக்குவதற்கு முன் தங்கள் பகுதியில் உள்ள விநாயகர் ஆலயம் சென்று ( குறிப்பாக அரசமர அடி பிள்ளயராக இருந்தால் சிறப்பு) அவருக்கு புஷ்பம் வைத்து ஒரு தேங்காயை இரண்டாக உடைத்து அதில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி 9 முறை வளம் வந்து பின்பு ஏன் பாவங்களை மன்னித்து எனக்கு உதவுங்கள் என வேண்டி கொள்ளவும். பிறகு இல்லம் திரும்பி வெள்ளருக்கன் பிள்ளையாருக்கு பால் அபிஷேகம் செய்து அலங்கரித்து அவருக்காக வாங்க வைத்துள்ள துண்டை அவருக்கு அணிவித்து புஷ்பம் சாத்தி தீபம் ஏற்றி

No comments:

Post a Comment