மேற்கண்ட தெய்வங்களில் ஸ்ரீ வாராஹி அன்னையையே
யாம் உபசிக்கும்படி தெரிவித்துகொள்கிறோம். காரணம் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி பெண் குணம்
கொண்டவர். யட்சணி அன்னையும் பெண் குணம் கொண்டவள், ஸ்ரீ வாராஹி அன்னையும்
பென்மையானவர் இவர்கள் மூவருமே சம்சார பிராப்ததை கொடுத்து, சந்தோசங்களையும்
கொடுத்து தெய்வ வாக்கையும் கொடுத்து அருள்புரிவார்கள்.
ஸ்ரீ ஆஞ்சநேயரும், ஸ்ரீ கால பைரவரும் அவ்வாறு
இல்லை சன்யாசம் இருப்பவருக்கே கெடுதல் இல்லாமல் உதவுவார்கள். எனவே மேற்கண்ட பெண்
தத்துவ தெய்வங்களையே உபாசியுங்கள் இதில் நிலைகளே முக்கியம். எனவே ஸ்ரீ உச்சிஷ்ட
கணபதி உபாசனை முதல்நிலை, ஸ்ரீ வாரஹி இரண்டாம் நிலை, ஸ்ரீ யட்சணி மூன்றாம் நிலை
இந்த நிலைமைகளை மாற்றக்கூடாது. ஒன்றன் பின் ஒன்றாக உபாசனை செய்யுங்கள்.
ஒன்றை மட்டும் தான் உபாசனை செய்வதாக இருந்தால்
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை உபாசியுங்கள். ஆனால் இவரிடம் உங்கள் செயல்களுக்கு
உறுதுணையாக இருக்க மட்டுமே வேண்டுங்கள். நேர்மையான மனிதருக்கு மட்டுமே இவர்
உதவுவார். இதை மறக்காதீர்கள். ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை உபாசனை செய்யும்போது பல்
தேய்க்க வேண்டும். குளிக்க வேண்டும், சுத்தபத்தமாக இருக்க வேண்டும், மகாலட்சுமி
அம்சமாக பூசையிட்டு வாசனையுடன் தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை
இவருக்கு. ஆனால் மனசுத்தம் மிக மிக முக்கியம். அது போன்று மனிதருக்குத்தான் இவர்
சக்தியை பயன்படுத்த வேண்டும். எனவே தான் இவரிடம் முன்பே பிரார்த்தனையை வலுவாக கூற
வேண்டும். இறைவா ஏன் கோரிக்கைகளையும் என் வாழ்வை முன்னேற்றத்திற்கும், என்
அடுத்தடுத்த உபாசனைக்கும் உறுதுணையாய் இருந்து வெற்றியையும், பாதுகாப்பையும்,
நல்லோர் சேர்ப்பை மட்டுமே தாருங்கள் என சங்கல்பம் செய்து கொள்ளுங்கள்.
என் தனிப்பட்ட கருத்தையும் சற்று கவனியுங்கள்
இக்கால கட்டத்தில் நல மனிதரை காண வேண்டுமானால் நாம் காட்டுக்கு தான் செல்ல
வேண்டும். அங்கு மிருகங்களே தேவலாம் என்ற நினைப்பே வரும். இதை தவறாக நினைக்க வேண்டாம். உங்களிடம் ஒரு சக்தி வந்தஉடன் நாம் அருள்
வாக்காக வெளிபடுத்த முயற்ச்சிப்போம். அப்போது நம்மை சுலக்கொடியவர்களில் நல்ல தர்ம
ஆத்ம ஆயிரத்தில் ஒன்றாக மட்டுமே இருக்கும். பாவ ஆத்மாக்கள் தன் நிம்மதிக்காக
உங்களை சூழ்ந்தே இருப்பார்கள். நிம்மதி பரிகாரம் கேட்பார்கள். அந்த அன்பு அழகையை
தவிர்க்க முடியாமல் அவர்கள் கட்டுபாட்டில் அகப்பட்டு கொள்வீர்கள். நம்மையும் பாவ
பங்கு சூழும். இது போன்ற ஜனங்களே இன்று அருளாளர்களை சந்திக்க வருகின்றனர். எனவே
தங்கள் ஒரு உபாசனையோடு இல்லாமல் யாம் முன்பு கூறிய மூன்று உபாசனையும்
கடைபிடியுங்கள். பாவிகளையும் வாழ வையுங்கள் தர்மத்தையும் கடைபிடியுங்கள்.
இனி முதல் நிலையான ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி பூஜையை காண்க.
இவருக்கான பூஜையை சதுர்த்தி அன்று ஆரம்ப்பித்து
மறு சதுர்த்தி திதியில் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். 16 நாள் பூஜை செய்தால் போதும். துவங்கும் நாள்
வளர்பிறையாகவும் இருக்கலாம் தெயபிரையாகவும் இருக்கலாம் நல்லதே. வளர்பிறை சதுர்த்தி
திதியில் ஆரம்பித்தால் தேய்பிறை சதுர்த்தியில் முடிக்க வேண்டும். இது பூஜா விதி.
இவரின் மூல மந்திரத்தை ஒரு தடைவைக்கு 444
தடவை ஜெபிக்க வேண்டும். காலை மதியம் மாலை அல்லது இரவு இந்த மூன்று வேலையும் மந்திரம்
ஒரு வேலைக்கு 444 தடவை கூறி பூஜிக்கலாம்.
படையல்கள்
இவருக்கு நெய்வேத்தியம் முதல் நாளும் இறுதி
நாளும் மிக விமரிசையாக இவருக்க பிடித்தமானதை எல்லாம் வைத்து படிக்கலாம்.
முடிந்தவர்கள் அன்றாடம் கூட படைக்கலாம். முடியாதவராக இருந்தாலும் அன்றாடம் வெற்றிலை
பாகு வாழை பழமாவது வைத்து வணங்க வேண்டும். என்னென வைவேத்தியமாக வைக்கலாம்
என்பதையும் தெரிவிக்கிறோம்.
மாதுளம் பலம் முத்துக்களில் தேன் கலந்து நெய்வேத்தியமாக வைக்கலாம். ஸ்ரீ உச்சிஷ்ட கணபதிக்கு எலுமிச்சை பழம் மிகவும் பிடித்தமானது அதையும் வைத்து படிக்கவும்.
மாதுளம் பலம் முத்துக்களில் தேன் கலந்து நெய்வேத்தியமாக வைக்கலாம். ஸ்ரீ உச்சிஷ்ட கணபதிக்கு எலுமிச்சை பழம் மிகவும் பிடித்தமானது அதையும் வைத்து படிக்கவும்.
மேலும் இவருக்கு பிடித்தமானது அருகம்புல்,
எருக்கம்பூ, வெற்றிலை மாலை, தாமரை பூ, வன்னி இல்லை, வேப்ப இல்லை, வில்வ இல்லை,
செம்பருத்தி பூ, அரளி பூ, நந்திய வட்டை பூ இந்த புஷ்பங்களை சூட்டவும்
அர்ச்சனைக்கும் பயன்படுத்தலாம்.
உணவு வகையில் தயிர் சாதம், எள் சாதம், மிளகு
சாதம், அத்தி பழம், உளுந்து வடை. தேங்காய், வெண்ணை, தேன், கொழுக்கட்டை, சுண்டல்,
அவல்,பொறி, இவைகளும், மஞ்சள் குங்குமமும் இவருக்கு பிடித்தமான பொருட்கள்.
இதில் உங்களால் என்ன முடிகிறதோ அதை வைத்து
செய்யுங்கள். சிறிய தம்ப்ளேரில் பசும் பால் வைத்து பூஜிப்பதும் சிறந்ததே.
முடியாதவர்கள் வெற்றிலை பாக்கு பழம் மட்டும் வைத்து பூசித்தல் போதும்.
இங்கு ஒரு ரகசியத்தை
கவனிக்க வேண்டும்
ஸ்ரீ விநாயகரை முதலில் வழிபட சில காரணங்கள்
உண்டு அறிவீராக. பிராப்தம் என்ற ஒரு பெயரை நாம் அதிஷ்டம் என்றும் கூறலாம்.
ஒருவருக்கு ஒரு செயல் முயற்சி இல்லாமலேயே கிடைத்து விட்டாலும், பலரும் முயன்று
அவர்களுக்கு கிடைக்கமால் குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டுமே கிடைத்தாலும் தன்னால்
ஒருவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்தாலும் அதை நாம் பிராப்தம் என்று கூறுவோம்
அல்லது அவருக்கு அதிஷ்டம் என்று கூறுவோம். ஆன்மிக குருக்கள் சீடர்களுக்கு அடிக்கடி
கூறும் வார்த்தை பிராப்தம் இருந்தால் தான் தெய்வ அருள் கிட்டும் என்றும்
கூறுவார்கள். இந்த பிராப்தம் ஏன் ஒருவருக்கு ஏற்பட்டு அதிஷ்ட வாய்ப்புகளை தருகிறது
என்றால் முற்பிறவி மற்றும் இப்பிறவி தர்மம், நன்மைகள், இறைவழிபாடு, ஒழுக்கம் இவைகள்
அளிப்பது தான். மேலும் பலருக்கும் இந்த பிராப்தம் கிடைக்காமல் போவதற்கு காரணம் கண்
திருஷ்டியினால் ஏற்படக் கூடிய தோஷங்கள், செய்வினையால் ஏற்படக்கூடிய வினைகள்,
குடியிருக்கும் வீட்டின் சல்லிய தோஷங்கள், எதிர்படும் போட்டி, பொறாமை, பிணிகள்,
குடும்பத்தில் சர்ச்சை சச்சரவு, பொருளாதார கஷ்டத்தால் தரித்திரம், தர்மம் செய்யாது
போதல், பித்ரு குல தெய்வங்களை மதியாமல் போதல், பெற்றோர் சாபம், முன்வினை கோளாறு,
அறியாமல் செய்த தவறுகள், துரோகம், பொய்பேசி மற்றவரை புண்படுத்துதல், இது போன்ற பல
காரணங்களால் பிராப்தமும் அதிஷ்டமும் ஒருவருக்கு கிடைக்காமலேயே போகிறது. குறிப்பாக
தெய்வ அனுகிரகம் கிடைப்பதில்லை. எல்லாருக்கும் மேற்கண்ட குறைகளில் இன்றைய கால
கட்டத்தில் ஒன்றாவது குறை இருக்க தான் செய்கிறது.
|
ஸ்ரீ விநாயகர் மூலகடவுள் எனபது உங்கள்
அனைவருக்கும் தெரியும். மூலகடவுள் என்றால் என்ன? என்ற கேள்வியும் எழுப்பும். இதை
மூன்று விதமாக சித்த ஞானிகள் கூறுகிறோம். ஒன்று எட்டு முளைக்கும் (திக்கு) என்ன
தத்துவமோ அவை இவரால் மட்டும் காபந்து செய்யபடுகிறது எனவே மூலகடவுள் என்று பெயர்
வைத்தனர். அடுத்து மூலாதாரம் முதல் உச்சி சக்கரம் வரை உள்ள முக்கிய எட்டு
சக்கரங்களை இயக்க கூடியவர் இவர் என்பதாலும் இப்பெயர் அழைக்கபடுகிறது,