வெள்ளியங்கிரி
அருள்மிகுவெள்ளிங்கிரிஆண்டவர்திருக்கோயில்
சிறப்பு:
ஏழாவது மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் குகைக்கோயில் அமைந்துள்ளன.
இம்மலையில் மிகவும் கடுங்குளிராக இருக்கும்.
பெருமை:
5,833 அடி உயரம் கொண்ட மலை. சித்தர்கள் கடுந்தவம் செய்த இடங்களில் இம்மலையும் ஒன்று.
முதல் மலை;
முதல் மலை முழுவதும் படிகளாகவே உள்ளது. அடிவாரத்தில் இருந்து வெள்ளை பிள்ளையார் கோவில்
வரை சுமார் 2000 படிகள் இருக்கும்.
இரண்டாவது மலை:
வெள்ளை பிள்ளையார் கோவிலில் இருந்து இரண்டாவது மலை தொடங்குகிறது. இங்கு படிகள் கிடையாது.
கரடு முரடான பாதைகள் மட்டுமே.
மூன்றாவது மலை:
இம்மலையில் வழுக்குப்பாறை உள்ளது இதில் ஏறுவதற்கு படிகள் பல செதுக்கி உள்ளனர் மற்றும் வேங்கை மரங்கள் அதிகம் காண படும். இம்மலை முடிவில் பாம்பாட்டி சுனை உள்ளது.
நான்காம் மலை:
இம்மலையை ஒட்டன்சமாதிமலை அல்லது திருநீர்மலை என்பார்கள். இங்கு கோரை புல்கள் அதிகம் உள்ளது.
இம்மலையின் பாதைகள் வெண்மையான மணல்கள் நிறைந்து காண படுவதால் திருநீர்மலை என்பார்கள்.
இங்கு வாடாத சீறமஞ்சள் மற்றும் வசுவாசி என்ற மதுரகளி பாக்கு விளைகிறது.
ஐந்தாவது மலை:
இம்மலையை பீமன் உருண்டை மலை என்பார்கள். ஒரு பெரிய பாறை களி உருண்டை போல் உள்ளதால் இப்பெயர்
வந்திருகிறது. இங்கு சீதை வனம் உள்ளது. இதில் சீதை சிலை ஒன்று உள்ளது. இம்மலை சமவெளியாகயும்
செண்பகம் மற்றும் குறுஞ்சி செடிகள் உள்ளது. காற்று அதிகம் வீசும் மலை.
ஆறாவது மலை:
இம்மலையை சந்தன மலை என்பார்கள். மலை முழுவதும் சந்தன நிறத்தில் உள்ளது. புல்கள் அதிகம் உள்ள பகுதி.
இங்கும் அதிக அளவில் காற்று வீசும். ஆண்டிசுனை இம்மலை முடிவில் உள்ளது. இது தான் பிரம்மா தீர்த்தம்
என்கிறார்கள். ஏழாம் மலையில் உள்ள வெள்ளியங்கிரி நாதர்க்கு இங்குள்ள தண்ணீரில் தான் அபிஷேகம்
நடைபெறுகிறது. இங்கு அர்ச்சுனன்/கிருஷ்ணன் தவம் செய்த சேத்திழைக்குகை உள்ளது.
ஏழாவது மலை:
இம்மலையில் பாதைகள் சிறிது சிரமமாக இருக்கும். இம்மலை பாதைகளின் இருபுறமும் குறுஞ்சி செடியும் புல்களும் அதிகம் உள்ளது. உச்சியில் தோரண கல் மலையாக உள்ளது. இதில் பிள்ளையார் சந்நிதி முதலில் இருக்க குகைக்குள் அம்மன் சந்நிதி உள்ளது. வெள்ளியங்கிரி ஆண்டவர் இன்னொரு குகைக்குள் இருந்து சுயம்பு லிங்கமாக அருள் தருகிறார் . இது பஞ்ச பூதங்கள் அனைத்தும் ஒருகிணைந்த சுயம்பு லிங்கம் ஆகும். இதை சுவாமி முடி மலை என்பார்கள்.
பார்க்க வேண்டிய இடங்கள் :
அடிவாரக் கோயில்:
1.4 1/2அடி ஐம்பொன் நடராஜர் சிலை
2.63 நாயன்மார்கள் கற்சிலை
3.பஞ்ச விநாயக மண்டபம்/ 5 விநாயகர்
4.இராசி தூண்
மலைக்கோயில்:
1.வெள்ளை பிள்ளையார் கோவில்
2.பாம்பாட்டி சுனை தீர்த்தம்
3.வழுக்குபாறை
4.விபூதி/திருநீர் மலை / ஒட்டன் சமாதி
5.பீமன் களியுருண்டை மலை
6.கைதட்டிசுனை
7.சீதை வனம்
8.சந்தன மலை
9.ஆண்டி சுனை/பிரம்பி தீர்த்தம்
10.சேத்திழைக் குகை/அர்ச்சுனன் தவம்
11.சுவாமிமுடி மலை
12.பொய்ப்பாலம்
13.ருத்திராட்ச மரம்
▶
No comments:
Post a Comment