10 February 2016

லிங்காஷ்டகம் - 1


ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் - நான்முகப் பிரம்மனாலும் முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும் எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப் பட்ட லிங்கம்

நிர்மல பாஸித ஸோபித லிங்கம் - குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்

ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் - பிறப்பு இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.

***

லிங்கம் என்ற வடமொழிச் சொல்லுக்கு அடையாளம் என்று பொருள். சிவலிங்கம் என்றால் சிவனைக் குறிக்கும் ஒரு அடையாளம் என்று பொருள். ஆனால் பழம் என்றாலே வாழைப்பழம், பூ என்றாலே தாமரைப்பூ, ஸஹஸ்ரநாமம் என்றாலே விஷ்ணு ஸஹஸ்ரநாமம், தமிழ்கடவுள் என்றால் முருகப்பெருமான் என்று ஆனது போல் லிங்கம் என்றாலே அது சிவலிங்கம் என்றே பொருள் என்று ஆகிவிட்டது. அதனால் இந்தப் பாடல் முழுவதும் சிவலிங்கம் என்ற பொருளில் லிங்கம் என்ற சொல்லே பயன்படுத்தப் பட்டுள்ளது

No comments:

Post a Comment