8 February 2016

8.2.2016 திங்கட்கிழமை நாளை தை
அமாவாசை..திங்கட்கிழமையும்
அமாவாசையும் சோ்ந்து வருவது
மிகஅற்புதமான நாளானதால் அன்று
அரசமரமும் வேப்பமரமும் சோ்ந்திருக்கும்
இடத்தில் சூரியன் உதயமாவதற்கு முன்
விடியற்காலையில் குளித்து விட்டு 108
முறை ப்ரதா்சஷணம் (வலம்) வருவதால்
உடற்பிணிகள் விலகுவதோடு நினைத்தது
நடக்கும் ..

இதற்கு அஷ்வத்தாம பூஜை என்று
பெயா்...அஷ்வத்தாய நமஹ என ப்ரதா்சஷணம்
வரும் போது சொல்லிக் கொண்டே செய்யவும்.

முன்னோரது ஆசி பெற அமாவாசை,
வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை.

இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை,
சுபநிகழ்ச்சிகளை இந்நாட்களில்
தவிர்க்கவேண்டும் என்பது விதி. இதன்
காரணமாக, இந்த நாளை ஆகாத நாளாக
எடுத்துக் கொள்ளக்கூடாது. தை அமாவாசை
நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை
படைத்து வழிபாடு செய்யவேண்டும்.

அந்த ஆடை. உணவை ஏழைகளுக்கு தானமாகக்
கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம்
வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும்.

தடைபட்ட திருமணம், வேலையின்மை, நீண்ட
நாள்பட்ட நோய்நொடிகள், மன வருத்தம்
ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும்
நம் இல்லத்திலும் உள்ளத்திலும்
ஊற்றெடுக்கும்.

தசரதருக்கு ராமர் செய்த பித்ரு தர்ப்பணம்:
தசரதர் பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி
யாகத்தை ரிஷ்ய சிருங்கமுனிவரின்
தலைமையில் செய்தார். யாகத்தின் பயனாய்
கிடைத்த பாயாசத்தை பட்ட மகிஷிகள்
கோசலை, கைகேயி இருவரும் தங்கள் பங்கு
போக மீதியை சுமித்ராவிற்குக் கொடுத்தனர்.

அதனால், கோசலைக்கு ராமன்,
கைகேயியிக்குப் பரதன், சுமித்ராவிற்கு
லட்சுமணன், சத்ருக்கனன் பிறந்தனர். ஆனால்,
இந்த நால்வரின் பிறப்புக்கு வேறொரு
காரணமும் சொல்வதுண்டு.

ஒருபிள்ளையைப் பெற்றுக் கொண்டால், அந்த
பிள்ளை பிதுர் தர்ப்பணத்தை கயா
க்ஷேத்திரத்தில் செய்வானோ மாட்டானோ என்ற
சந்தேகம் அவருக்கு இருந்ததாம். கயாவில்
பிதுர்க்கடன் செய்வது மிகவும் விசேஷம்.

அதனால், ஒருவன் இல்லாவிட்டால்
வேறொருவனாவது கயாவில் தனக்குப் பிண்டம்
போடுவான் என்று தசரத சக்கரவர்த்தி
நினைத்தார். அதனாலேயே தனக்கு நான்கு
பிள்ளைகள் இருக்கட்டும் என்று
முடிவெடுத்ததாக வால்மீகி ராமாயணத்தில்
ஒரு செய்தி உண்டு.

இதன்மூலம் பிதுர்தர்ப்பணத்தை பிள்ளைகள்
அவசியம் பெற்றோருக்கு செய்யவேண்டும்.

ராமாயண காலத்திற்கு முந்தியே கயாவில்
தர்ப்பணம் செய்யும் பழக்கம் இருந்திருக்கிறத
ு என்ற உண்மைகள் வெளிப்படுகிறது. ஒரு
பிள்ளை செய்யாவிட்டாலும் இன்னொரு
பிள்ளையாவது முன்னோருக்குரிய
பிதுர்க்கடனை அவசியம் செய்ய வேண்டும்
ஆகிய கருத்துகளை அறிய முடிகிறது.

தசரதருக்கு அந்திமக்கிரியைச் செய்யும்
பாக்கியத்தை பெற்ற பிள்ளை நான்காவது
பிள்ளையான சத்ருக்கனனே. ராமனும்,
லட்சுமணனும் காட்டிற்குச் சென்றதாலும்,
கைகேயி பெற்ற வரத்தால் பரதனும் தசரதருக்கு
இறுதி கடமையைச் செய்ய முடியாமல்
போனது. ராமன் மீண்டும் அயோத்திக்கு வந்து
பட்டாபிஷேகம் செய்த பிறகு, தசரதருக்காக
கயா சென்று பிண்டம் அளித்ததாக ஆனந்த
ராமாயணம் கூறுகிறது.

முன்னோர் வழிபாட்டில் காகத்தின் பங்கு:
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று
தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர்
வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம்
உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில்
இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும்
சொல்வதுண்டு. காகத்திற்குச் சாதம்
வைத்தால் எமலோகத்தில் வாழும் நம்
முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பர்
என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த
உணவைத் தீண்டாவிட்டால் இறந்துபோன நம்
முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாகக்
கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து
வருகிறது. பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில்
உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர்.
அந்தப் பாறையில் தான் பிண்டம் வைத்து
வணங்குவர். பகுத்துண்டு பல்லுயிர்
ஓம்புதல் என்று தன்னிடம் உள்ள பொருளை
பிறருக்குப் பகுத்துண்டு வாழவேண்டும் என்று
வள்ளுவர் நமக்கு போதித்திருக்கிறார்.

அப்பாடத்தை தவறாமல் பின்பற்றும் குணம்
காகத்திற்கு இருக்கிறது. தான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம் என்று பிற
காக்கைகளையும் கரைந்து அழைத்தபின்னரே,
காகம் உணவு உண்ணும். அப்படிப் பட்ட
உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுதன்
மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்
என்று சாஸ்திரம் கூறுவது சரிதானே!
முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர்:

முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி
பலன்களை நம்மிடம்இருந்து பெற்று
பிதுர்தேவதைகளிடம் வழங்குபவர்சூரியன்.

அந்த தேவதைகளே மறைந்த நம்
முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன.

அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்று
ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அமாவாசை
நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது,
பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம்
செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது)
மிகுந்த நன்மை தரும். சமுத்திரத்தில் அல்லது
புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால்
அளவு நீரில் நின்றுகொண்டு,
சூரியனைநோக்கி மூன்று முறை அர்க்கியம்
செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக
பெறமுடியும்.

பிள்ளைக்குரிய முழு தகுதி எது?

கிருதயுகம், திரேதாயுகங்களில் வருஷதிதி
நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம்
கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும்
ஏற்றுக் கொண்டனர். அந்த யுகங்களில்
பூவுலகில் தர்மம் தழைத்திருந்தால் இந்நிலை
இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம்
கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன்
பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக
ராமாயணம் கூறுகிறது.

துவாபரயுகம் மற்றும்
கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத்
தெரியாமல் போய்விட்டனர். ஆனால், சூட்சும
வடிவில் அவர்கள் நம்மை நேரில்
பார்ப்பதாகவும், ஆசியளிப்பதாகவும்
சாஸ்திரநூல்கள் குறிப்பிடுகின்றன.

ஒருவரின்
வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகிவிட
முடியாது. பிள்ளைக்குரிய முழு தகுதியை
ஒருவன் பெற வேண்டுமானால், வாழும்
காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு,
இறப்புக்குப் பிறகும் பிதுர்கடனை முறையாகச்
செய்யவேண்டும். தனது பித்ருக்களுக்கும்
தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று
எவன் நினைக்கிறானோ அவன் புத்தியில்லாத
மூடனாவான் என்று கடோபநிஷதத்தில்
எமதர்மன் நசிகேதனிடம் கூறுகிறார்.

நன்றி

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment