11 February 2016

எலுமிச்சம்பழம்

எலுமிச்சம்பழம்

உலகில் தோன்றிய புல் பூண்டுக்குக் கூட உயிர் உண்டு. அதனால் அதற்குத் தீங்கு செய்யக் கூடாது. துறவிகள் அதை மிதித்து நடக்கக் கூடாது என்று சமண மதம் போதிக்கிறது.
ஒவ்வொரு தாவரத்திற்கும் மின் சக்தியும், காந்த சக்தியும் உண்டு. அவை தாவரத்திற்குத் தாவரம் வித்தியாசப்படும்.
எலக்ட்ரோ மீட்டா் வைத்து அதன் மின் சக்தியை அளக்கலாம். அந்த மின்சக்திக்கு பயோ எலக்ட்ரிசிட்டி எனப் பெயா். இதே மாதிரி அனேக ஜீவராசிகளிலும் மின் சக்தி உண்டு.
ஜீவனுள்ள கனி என்பது எலுமிச்சம் பழம்! எலுமிச்சம் பழத் தோப்புக்குள் ஆசாரமில்லாதவா்கள் போனால் அவை வாடி விடும்.
எலுமிச்சம்பழத் தோட்டத்தில் சாம்பிராணி புகை போட்டுத் தீய சக்தியை விரட்டுவார்கள்.
“பதார்த்தகுண சிந்தாமணி” என்னும் நூலில் எலுமிச்சம் பழ மருத்துவம் கூறப்பட்டுள்ளது.
முன்பு வாழ்ந்த இந்துத் துறவிகள் தங்களுக்கு மாயையினால் தூண்டப்படும் காம சக்தியை அடக்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
அக்கினி தத்துவமுள்ள ஆண் தெய்வங்களுக்கும், பெண் தெய்வங்களுக்கும் எலுமிச்சம் மாலை போட்டுக் குளிர்விக்கின்றனா்.
மாரியம்மன் கோயில், காளி அம்மன் கோயில் ஆகியவற்றில் பக்தா்கள் மஞ்சள் பொடி, நல்லெண்ணெய் சோ்த்து எலுமிச்சம் சாதம் நைவேத்தியம் செய்து பின் சாப்பிட்டால் தீராத நோய்கள் விலகும்.
செவ்வாய் மாலை எலுமிச்சம் சாதம் சூடாக நைவேத்தியம் செய்யலாம். முடிந்தால் எலுமிச்சம் சாதம் அன்னதானமும் செய்யலாம்.
எலுமிச்சை அதீத சக்தியைப் பற்றிய நூல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
அஷ்ட கா்மம் என்பது எண்வகைத் தொழில்கள். மோகனம், வசியம், ஆகா்ஷணம், ஸ்தம்பலம், உச்சாடனம், பேதனம், வித்வேடணம், மாரணம் ஆகியவை.
மேற்படி எட்டுத் தொழிலுக்கும் சித்தா்கள் எலுமிச்சம் பழத்தை உபயோகித்ததாகத் தெரிகிறது. மாந்திரீகா்கட்கு முக்கியமான பொருள் எலுமிச்சம்பழம். அது இல்லாவிட்டால் மாந்திரீகம் கிடையாது.
நம் வலது கையில் ஒரு எலுமிச்சம்பழம் வைத்து நாம் ஒருவரை எண்ணினால் நம் எண்ணம் நாம் எண்ணியவரிடம் போய் அலைஅலையாய்த் தாக்கும். அக்காலத் ரெலிப்பதி முறை இதுதான்.
ஒரு பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு சூரியக் கலையில் சுவாசம் செய்து கொண்டு பல கிரகங்களுடன் தொடா்பு கொள்ளலாம்.
கொடி எலுமிச்சை என்பது ஒரு வகை. அது பெரிதாக முட்டை அளவிருக்கும். அதைக் கையில் வைத்து எந்த மத தேவதைகளையும் மந்திரம் சொல்லி அழைக்கலாம். கொடி எலுமிச்சையை சாதாரண எலுமிச்சையுடன் கலந்து விற்பார்கள். ஒரு எலுமிச்சம் பழத்தை விலை பேசாமல் வாங்கி தெய்வ ஆகா்ஷண மந்திரத்தையும், பிதுா் ஆகா்ஷண மந்திரத்தையோ அதில் தினம் உரு ஏற்ற வேண்டும். அதைப் பூஜை அறையில் வைத்து வர வேண்டும்.
40 நாளில் அந்தப் பழம் நாம் வேண்டிய தெய்வத்தை அல்லது ஆவியை ஈா்த்துக் கொண்டு வரும். நாம் மனதில் எண்ணுவது அதற்குத் தெரியும். வீட்டில் அனைவரும் பேசும் பேச்சுக்களைப் பதிவு செய்யும்.
அதனால் வீட்டின் முகப்பில் எலுமிச்சம் பழம் கட்ட வேண்டும். வீட்டுக்குள் நுழைபவா்களின் எண்ணம் நம்மைத் தாக்குவதில்லை. மேற்படி பழ வலிமையால் அவா்கள் எண்ணம் அங்கேயே தடுக்கப்படுகின்றது.
எலுமிச்சைச் சாறு, மஞ்சள் பொடி, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் கொண்டு தயாரிக்கப்பட்ட குங்குமத்தை புருவ மத்தியில் இட்டுக் கொண்டு வந்தால் நெற்றிக் கண் திறக்கும்.
அமாவாசையில் சுடுகாட்டுக்குப் போய் தனக்கு அடிமையாக இருக்க விரும்பும் ஆவியை வா என எண்ணி எலுமிச்சம் பழத்தை எறிந்து விட்டு வந்து விடுவார்களாம். பெளா்ணமிக்கு மேற்படி பழம் ஒருநாள் இரவு அவா்கள் கால் மாட்டில் கிடக்குமாம். அதை எடுத்துத் துண்டு துண்டாக்கிச் சாப்பிடுவார்களாம். அந்த ஆவி சாப்பிட்டவா்கள் உடலுக்குள் போய்விடுமாம். அதனை ஏவி மாந்திரீகா் தொழில் பார்ப்பார்களாம். இள வயதில் மாந்திரீக நண்பா் சொல்லக் கேட்டது இது.
கேரளாவில் ஆவி பிடித்தவனை உட்கார வைத்து ஒரு பெரிய எலுமிச்சம் பழத்தை எடுத்து, அவன் தலையைச் சுற்றி வலது புறமாக ஒரு சுற்று சுற்றுகிறார்கள். பின் ஒரு குண்டூசி எழுத்துப் பழத்தின் தலைப்பக்கம் கத்தி அமுக்கி விடுகின்றனா். பின்னா் ஒரு சுற்று அதே தலைப்பக்கம் குத்தி அமுக்கி விடுகின்றனா். பின்னா் ஒரு சுற்று அதே பழத்தை இடது பக்கமாக அவன் தலையைச் சுற்றி எடுத்துப் பழத்தின் கீழ்ப்பக்கம் குத்துகின்றனா்.
பின்னா் வலது பக்கம், இடது பக்கம் மாறி மாறி சுற்றி ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு குண்டூசியாகப் பழத்தில் குத்துகின்றனா். பழத்தின் மேல் பக்கம் ஒரு குண்டூசி சுற்றிவர 25 குண்டூசிகள் ஆக மொத்தம் 27 சிறு குண்டூசிகள்! அவனைப் பிடித்த பீடை விட்டு விடுகின்றது.
பிறகு உடனே அதை ஓடும் தண்ணீரில் போட்டு விடுகின்றனா். இதை நேரில் கண்டேன்.
தன் குல தெய்வம் எது என்று தெரியாதவா்கள் ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி, என் குல தெய்வமே! நீ எங்கிருக்கிறாய்? என மனமுருகி வேண்டி வீட்டில் வைத்துவிட வேண்டும். தினமும் வேண்டிக் கொள்ள வேண்டும். 9 நாள் கழித்து, அதை அருள்வாக்கு சொல்பவரிடம் கொடுத்தால் உங்கள் குல தெய்வம் எங்குள்ளது என எளிதாகச் சொல்லி விடுவார்கள்.
தெய்வங்களை உபாசனை செய்பவா்கள் பழத்தில் தெய்வ மந்திரத்தை மூன்று தினங்கள் உரு ஏற்றி, பின் அதன் சாற்றில் தண்ணீா் பிட்டு, வெல்லம், ஏலக்காய் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் சித்தி கிடைக்கும்.
சில சாதுக்கள் உரு ஏற்றிக் கொடுக்கும் பழம் வெகுநாள் வரை கெடாது. சில போ் உரு எற்றிக் கொடுக்கும் பழம் சில தினங்களில் அழுகி விடும்.
மந்திரவாதிகள் கொடுக்கும் பழம், நம் குடும்ப நிகழ்ச்சிகளை அவருக்கு அறிவித்துக் கொண்டே (Transmit)    இருக்கும். அதன் மூலம் அவா் உங்களை ஆட்டுவிப்பார்.
தைமாதப் பிறப்பன்று அல்லது புதுவருடம் பிறப்பன்று. அருளாளா்களையோ, எஜமானா்களையோ பார்க்கப் போகும்போது, அவசியம் எலுமிச்சம்பழம் கொண்டு செல்ல வேண்டும் நம் நல்ல எண்ணத்தை அதன் மூலம் அவா்களுக்குச் சமா்ப்பிக்க வேண்டும்.
எலுமிச்சையை வைத்து அனேகா் அபிசாரப் பிரயோகம் செய்கின்றனா். அதை நான் எழுத விரும்பவில்லை.
ஆந்திர மந்திரவாதிகள் எலுமிச்சம் பழத்தில 40 நாள் வசிய மந்திரம் உரு ஏற்றுகின்றனா். பின் அதைக் கருக்கிக் கஸ்தூரி, கோரோசனை, ஜவ்வாது, அரகஜா, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், புனுகு சோ்த்து, காராம்பசு நெய்விட்டு அரைக்கின்றனா் பின் மீண்டும் அதற்கு வசிய மந்திரம் உருவேற்றி, வசியத் தொழில் செய்து பல லட்சம் சம்பாதிக்கின்றனா்.
பிரபல விஞ்ஞானி G.D  நாயுடு எலுமிச்சை விதைகளைக் கொண்டு குடும்பக் கட்டுப்பாடு மருந்து கண்டுபிடித்தார்.
எலுமிச்சைச் சாற்றுக்குப் பயங்கர சக்தி உள்ளது. அனேக சித்த ஆயுா்வேத மருந்துகளை எலுமிச்சைச் சாற்றில் சுத்தி செய்கின்றனா்.
ஐம்பது மில்லி சாற்றில் ஒரு பவளத்தை அல்லது கடல் சோழியையோ தட்டிப் போட்டால் ஒரு மணி நேரத்தில், அவை கரைந்து போகும். இதற்கு பயோ கால்சியம் (Bio – Calcium) என்று பெயா்.
மருளாடிகளின் சாமி ஆட்டத்தைக் குறைக்க எலுமிச்சம் பழம், வெல்லம், ஏலக்காய் போட்ட பானத்தைக் கொடுப்பது அனைவரும் அறிந்ததே!
சில பள்ளிச் சிறுவா் – சிறுமிகள் பிடிவாத குணம் கொண்டவா்களாகவும், கண்ணில் கண்ட பொருள்களை எடுத்து உடைப்பவா்களாகவும் இருப்பார்கள். பிறவியிலேயே அவா்களுகட்குச் சில நரம்புகள் இறுகியிருக்கும். அதைத் தளர்த்தினால்தான் அவா்களின் கோபம் பிடிவாதம் மற்றும் ரென்ஷன் போகும்.
அவா்களுக்கு ஒரு டம்ளா் தண்ணீரில் அரை எலுமிச்சைச் சாறு பிழிந்து, சிறிது வெல்லம், ஒரு ஏலக்காய் தட்டிப் போட்டுக் குடிக்கக் கொடுக்க வேண்டும்.
அல்லது எலுமிச்சம்பழ சா்பத் குடிக்கக் கொடுக்கலாம். பகல் 12.00 மணிக்கு ஒரு நேரம் மட்டும் கொடுக்கவும். ஒன்பது நாள் மட்டும் இப்படிக் கொடுக்கவும். பின் கொடுக்க வேண்டாம். குணம் தெரியும்.
எலுமிச்சம் பழத்தில் ஏராளமான ரகசியங்கள் உள்ளன. இதை விஞ்ஞான பூா்வமாக ஆராய்வது நல்லது. ஆன்மிகத்திற்கு எலுமிச்சம்பழம் ஒரு சிறந்த துணை என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை

No comments:

Post a Comment