18 February 2016

#அணு_நடனம்

சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதப்படுகிறது. அதனாலேயே அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று திருமூலர் கூறியுள்ளார்.

God’s particle, Higgs Boson என்று பலவற்றை கண்டாலும் அது நடராஜரை தொடர்புபடுத்துகிறது, திருமூலரும் அப்படியே கூறுகிறார்.

பல பில்லியன் டாலர்கள் செலவில் , செர்ன் (CERN) என்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் , பிரான்ஸ்-ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே , 574 அடி ஆழத்தில் 27 கி.மி. நீளம் உள்ள சுரங்கப்பாதையில் Large Hadron Collider ஒன்று உருவாக்கப்பட்டது. நடராஜர் தாண்டவமும் அணுவின் செயல்பாடும் சம்பந்தப்பட்டுள்ளது என்று நம்புவதால் அங்கே நடராஜர் சிலை வைத்துள்ளனர்.

நம் சித்தர் பிரான் திருமூலர் இறைவனைப் பற்றி என்ன சொல்கிறார் பாருங்கள்,
“அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே”

கடவுளை, அணுவின் அணுவே என்று பாடுகிறார். அதையே சிவமாகப் பார்க்கிறார். இந்த அணுவின் அணுவை இப்போது தான் விஞ்ஞானிகள் நெருங்கியிருக்கிறார்கள்.
விஞ்ஞானிகள் போஸான் என்று அழைப்பதைத் திருமூலர் ஈச(சா)ன் என்று அழைக்கிறார்.
இந்த ஹிக்க்ஸ் போஸானின் உருவம் என்ன?!! சிவனின் அளவைச் சொன்ன திருமூலர் சிவனின் உருவத்தை சொல்லாமலா இருந்திருப்பார்?

“கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே”

இறைவனை, “அனைத்திலும் கலந்தும் கலக்காமலும் இருப்பவனே, கண்ணுக்குத் தெரியாமல் இருப்பவனே , பரந்த சடையுடையவனே , பசும் பொன்னிறத்தில் இருப்பவனே , நினைப்பவர்கெல்லாம் கிடைக்காதவனே , அனைவரையும் மயக்கும் வெண்ணிலவானவனே” என்கிறார் திருமூலர்.

இணையதளத்தில் உலா வரும் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால் , அதைக் சிவமாகக் கண்டுவிட்டாரே திருமூலர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே !!!.

“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே”

சிவனுடைய வடிவைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பசுவின் முடியை எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறுகிறார் திருமூலர்.

ஓம் நமசிவாய

No comments:

Post a Comment