14 March 2016

சிவாலயங்களில் சிவன் சன்னிதி கிழக்கு திசை


பொதுவாக சிவாலயங்களில் சிவன் சன்னிதி கிழக்கு திசை நோக்கியும், அம்பாள் சன்னிதி தெற்கு திசை நோக்கியும் இருக்கும். ஆனால் நெல்லையப்பர் கோயில் உள்பட நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவன் சன்னிதி-அம்பாள் சன்னிதி இரண்டுமே கிழக்கு திசை நோக்கியே இருக்கும். அகத்திய முனிவருக்கு இறைவன் திருமணக்கோலத்தில் காட்சியளித்த இடம் நெல்லை என்பதால் நெல்லை மாவட்டம் முழுவதும் சிவஸ்தலங்கள் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன. திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆகியும் திருமண வாழ்க்கையில் பிரச்சினை உள்ளவர்கள் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள சிவாலயங்களுக்கு சென்று வழிப்பட்டால், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.

No comments:

Post a Comment