16 March 2016

ஜோதிடக்கலையில் இருப்பவர்களின் குலதெய்வம்

!!!ஜோதிடக்கலையில் இருப்பவர்களின் குலதெய்வம்

ஞானத்தை வழங்கும் கடவுளாக விநாயகப் பெருமான் இருக்கிறார்;


கல்விக்கு கடவுளாக ஹக்ரீவர் கருதப்படுகிறார்;

செல்வத்தின் கடவுளாக ஸ்ரீமஹாவிஷ்ணு,ஸ்ரீமஹாலக்ஷ்மி,ஸ்ரீகுபேரன் இருக்கிறார்;இவர்களுக்கு செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுத்த கடவுள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

வீரத்தின் கடவுளாகவும்,செவ்வாயின் அம்சமாகவும் முருகக் கடவுள் இருக்கிறார்;
மருத்துவத்தின் கடவுளாக ஸ்ரீதன்வந்திரி இருக்கிறார்;
மும்மூர்த்திகளின் அம்சமாக ஸ்ரீத்த்தாத்தரேயர் இருக்கிறார்;

ஆனால்,மும்மூர்த்திகளையும் தன்னுள் கொண்டிருப்பவரே ஸ்ரீகாலபைரவப் பெருமான்!

படைத்தல் தொழிலை பைரவப்பெருமானின் கையில் உள்ள உடுக்கையும்,
காத்தல் தொழிலை பைரவப் பெருமானின் கையில் உள்ள கபாலமும்;
(பாவ வினைகளை)அழித்தல் தொழிலை அவர் உடலில் பூசிய விபூதியும் செய்து வருகின்றன;
கடவுள்களின் கடவுளாக ஸ்ரீமஹாகால பைரவர் இருக்கிறார்;
ஜோதிடத்தின் கடவுள் ஸ்ரீகாலபைரவப் பெருமானே!

உலகில் இருக்கும் அனைத்து மதங்களும் இறைவன் ஒருவனே! என்று கூறுகின்றன;அந்த ஒரே இறைவனே நமது இந்து தர்மத்தில் ஆதிசிவன் என்ற சதாசிவன் என்று அழைக்கிறோம்;கிராமங்களின் காவல் தெய்வமாக இருக்கும் முனீஸ்வரன்,ஸ்ரீகாலபைரவப் பெருமானே தான்;சிவனும் பைரவப் பெருமானும் வேறு வேறானவர்கள் அல்ல;அதே போல முனீஸ்வரனும் காலபைரவரும் ஒருவரே!

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,நவக்கிரக நாயகர்களாகிய சூரியன்,சந்திரன்,குரு,ராகு,புதன்,சுக்கிரன்,கேது,சனி,செவ்வாய் அனைவரும் ஸ்ரீகாலபைரவப் பெருமானைப் பணிந்து வணங்கி,தமது ஏக்கத்தைத் தெரிவித்தனர்;
“பூமியில் வாழ்ந்து வரும் அனைத்து மனிதர்களுக்கும் அவரவர் கர்மவினைப்படி நன்மைகளையும்,தீமைகளையும் நாங்களே தங்களின் உத்தரவுப்படி வழங்கிவருகிறோம்;ஆனால்,எங்களை மனிதர்கள் வழிபடுவதில்லை;இந்தக் குறையைத் தாங்கள்தான் போக்க வேண்டும்;”
ஸ்ரீகாலபைரவப்பெருமான் தம்மீது அர்ச்சனையாக விழுந்த செவ்வரளி மற்றும் மரிக்கொழுந்து மலர்களை நவக்கிரகங்கள் மீது தூவி ஆசிர்வாதம் செய்தார்;
“ ஜம்புத்வீபத்தின்(நமது இந்தியாவின் புராதனப்பெயர்) தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் காவிரிக்கரையோரம் செல்லுங்கள்;அங்கே லிங்கம் அமைத்து தொடர்ந்து தன்னை வழிபடச்” சொல்லி அருளினார்;
இதன்படி,
சூரியன் சூரியனார் கோவிலிலும்
சந்திரன் திங்களூரிலும்
குரு ஆலங்குடியிலும்
ராகு திருநாகேஸ்வரத்திலும்
புதன் திருவெண்காட்டிலும்
சுக்கிரன் கஞ்சனூரிலும்
கேது கீழப்பெரும்பள்ளத்திலும்
சனி திருநள்ளாறிலும்
செவ்வாய் வைத்தீஸ்வரன்கோவிலிலும்
லிங்கப் பிரதிஷ்டை செய்தனர்;லிங்க வடிவத்தினுள் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவப்பெருமானை வழிபட்டுவந்தனர்;பலகோடி ஆண்டுகள் இவ்வாறு வழிபட்டு ஸ்ரீகாலபைரவ தரிசனம் பெற்றனர்;அவரது அருளால் பூமியில் மனிதர்கள் வழிபடும் பேறு பெற்றனர்;


குரு பகவான் தேவகுருவாக இருந்தமையால்,அவரது உபதேசத்தால் வானவர்கள் பலவிதமான சாபங்களில் இருந்து விமோசனம் பெற்றனர்;அந்த சாபவிமோசனத்தால் குருவை கர்மாக்கள் பிடித்துக் கொண்டன;அதிலிருந்து விடுபட அவர் வழிபட்ட ஸ்தலமே கும்பகோணத்தில் அமைந்திருக்கும் வியாழசோமேஸ்வரர் திருக்கோவில் ஆகும்;(ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கிறது)


சுக்கிரபகவான் அசுரகுருவாக இருந்தமையால்,அவருக்கும் அசுரர்களின் கர்மாக்கள் பிடித்துக்கொண்டன;அதிலிருந்து விடுபட அவர் வழிபட்ட ஸ்தலமே அட்டவீரட்டானங்களில் ஒன்றான திருக்கோவிலூர் வீரட்டானம் ஆகும்;

நவக்கிரகங்கள் ஒவ்வொருவரையுமே அஷ்டபைரவர்கள் சூட்சுமமாக இயக்கிவருகிறார்கள்;
சூரியனின் பிராணதேவதையாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரும்
சந்திரனை ஸ்ரீகபால பைரவரும்
குருவை அசிதாங்க பைரவரும்
ராகுவை சம்ஹார பைரவரும்
புதனை உன்மத்த பைரவரும்
சுக்கிரனை ருரு பைரவரும்
கேதுவை பீஷண பைரவரும்
சனியை குரோதன பைரவரும்
செவ்வாயை சண்ட பைரவரும் பிராணதேவதையாக இருந்து இயக்கிவருகிறார்கள்;எனவேதான் யாரெல்லாம் கடந்த மூன்று பிறவிகளில் சித்தரின் சீடராக இருந்தார்களோ அவர்கள் மட்டுமே இப்பிறவியில் பைரவ வழிபாடு செய்ய முடியும்;அல்லது முப்பிறவிகளில் முழுவதும் பழுத்த சிவனடியாராக இருந்தால் மட்டுமே இப்பிறவியிலும் பைரவ வழிபாட்டைத் தொடரமுடியும்;

ஒரு சாஃப்ட்வேர் என் ஜினியரின் சிந்தனையில் படைப்புத்திறனும்,ஒருங்கிணைந்து பணிபுரியும் தன்மையுமே இருக்கும்;

ஒரு அனிமேட்டரின் சிந்தனையில் கலைத்திறன் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்;

ஒரு திரைப்பட இயக்குநரின் சிந்தனையில் ஒரு காட்சியை எப்படியெல்லாம் சிறப்பாக வெளிப்படுத்துவது என்ற சிந்தனை மட்டுமே இருக்கும்;

ஒரு அரசியல்வாதியின் சிந்தனையில் எப்போதும் தனது அரசியல் எதிரியை எப்படி கவிழ்ப்பது? என்ற நோக்கம் மட்டுமே இருக்கும்;

ஆனால்,ஒரு ஜோதிடரின் சிந்தனையில் அவரது தொழிலில்,அதாவது ஒவ்வொரு ஜாதகம் பார்க்கும் போதும் நவக்கிரகங்களின் இயக்கம் மட்டுமே இருக்கும்;எனவே,நியாயமான விதத்தில் தன்னை நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கு ஜாதகப்படி உண்மையை உரைப்பது ஒவ்வொரு ஜோதிடரின் கடமை;

எந்த ஒரு ஜோதிடரும் ஒரு போதும் (தோஷம் நீங்கிட) பரிகாரத்துக்கு பணம் வாங்கக் கூடாது;மீறி வாங்கினால்,அந்த தோஷத்தின் முழுப் பரிமாணமும் ஜோதிடரையும்,அவரது குடும்பத்தாரையும்,வம்சத்தையும் பல தலைமுறைகளுக்குப் பாதிக்கும்;எந்த ஒரு ஜாதகரும் தனது தோஷத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு,அதிலிருந்து விடுபட தாமே முயற்சி செய்ய வேண்டும்;நமது கர்மவினையை நாம் தான் முயற்சி செய்ய வேண்டும்.அன்னதானத்தை மட்டுமே ஒரு ஜாதகர் சார்பாக யார் வேண்டுமானாலும் செய்யலாம்;


இந்து தர்மத்தின் நேரடிப்பிரதிநிதிகளாக அகோரிகள்,மடாதிபதிகள்,ஆச்சாரியர்கள்,ஆதினங்கள்,சங்கராச்சாரியார்கள்,ஜோதிடர்கள் இருந்தாலும்,இந்து சமுதாய மக்களுக்கு ஒவ்வொரு நாளும் நேரடியாக வழிகாட்டுவது ஜோதிடர்கள் மட்டுமே!


முற்பிறவியில் ஒருமுறையாவது பைரவ வழிபாடு செய்து பைரவ அனுக்கிரகம் கிடைத்திருந்தால் மட்டுமே இப்பிறவியில் ஒருவர் ஜோதிடராக முடியும் என்பது சித்தர் ரகசியம்!!!


ஜோதிடர்களின் கடவுளாக ஸ்ரீகாலபைரவப் பெருமான் திகழ்ந்து வருகிறார் என்பது பல யுகங்களாக மறைக்கப்பட்ட உண்மை!ஏனினில்,ஸ்ரீகாலபைரவப் பெருமானின் சுவாசமே வாக்கியப் பஞ்சாங்கமாகவும்,திருக்கணிதப் பஞ்சாங்கமாகவும் விரிவடைகிறது;

ஜோதிடத் தொழிலில் பேரும் புகழும் அடைந்து,இப்பிறவியோடு பைரவப் பெருமானின் திருவடியை அடைய விரும்புவோர் ஸ்ரீகாலபைரவப்பெருமானை பின்வருமாறு வழிபட வேண்டும்:-

அவரவரின் ஜன்ம நட்சத்திர பைரவப் பெருமானை வழிபட வேண்டும்.எப்படித் தெரியுமா?


ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் ராகு காலத்தில் ஜன்ம நட்சத்திர பைரவர் இருக்கும் ஊருக்குச் சென்று அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளி மாலை,பால் ஒரு லிட்டர்,அரகஜா போன்ற பொருட்களால் பைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அபிஷேகம் நடைபெறும் நேரத்தில் “ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ” என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;அபிஷேகம் முடிந்தப் பின்னர்,கோவில் பூசாரிக்கு ரூ.30/-இன் மடங்குகளில் கண்டிப்பாக தட்சிணை தர வேண்டும்;அபிஷேகம் முடிந்தப் பின்னர் வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமல் நேராக அவரவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும்;இவ்வாறு 27 ஜன்ம நட்சத்திர நாட்களுக்கு செய்ய வேண்டும்;

அசுபதி =பேரூர் ஞானபைரவர்(கோயம்புத்தூர் அருகில்)
பரணி  =பெரிச்சி கோவில் நவபாஷாணபைரவர்(காரைக்குடி அருகில்)
கார்த்திகை=அண்ணாமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்
ரோகிணி=திருக்கண்டியூர் வடுகபைரவர்(அட்டவீரட்டானங்களில் ஒரு வீரட்டானம் இது)
மிருகசீரிடம்=க்ஷேத்திரபாலபுரம்(கும்பகோணம் டூ மாயவரம்/மயிலாடுதுறை)
திருவாதிரை=திருவண்டார்கோவில்(பாண்டிச்சேரி)
புனர்பூசம்=சாதுசுவாமிகள் மடாலயம்,விஜயபைரவர்,பழனி ரோப்கார் மையம் எதிரே.
பூசம்=ஸ்ரீவாஞ்சியம் யோகபைரவர்
ஆயில்யம்=காளஹஸ்தி பாதாளபைரவர்
மகம்=வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலய பைரவர்
பூரம்=பட்டீஸ்வர பைரவர்
உத்திரம்=சேரன்மஹாதேவி அம்மநாதர்+ஆவுடையம்மன்கோவில் ஜடாமண்டலபைரவர்
அஸ்தம்=திருப்பத்தூர் யோகபைரவர்
சித்திரை=தர்மபுரி கோட்டை கல்யாணகாமாட்சி அம்பிகை உடனுறை அருள்நிறை மல்லிகார்ஜீன சுவாமி கோவிலில் அமைந்திருக்கும் பைரவர்
சுவாதி=பொற்பனைக்கோட்டை(திருவரங்குளம்) பைரவர்,புதுக்கோட்டை அருகே
விசாகம்=திருமயம் கோட்டை பைரவர்
அனுஷம்=ஆடுதுறை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர்
கேட்டை=சூரக்குடி கதாயுதபைரவர்(காரைக்குடி அருகே பள்ளத்தூர்)
மூலம்=சீர்காழி சட்டநாத ஆகாசபைரவர்
பூராடம்=அவிநாசி காலபைரவர்
உத்திராடம்=கரூர் பசுபதீஸ்வரர் கோவில் பைரவர்
திருவோணம்=வைரவன்பட்டி மார்த்தாண்டபைரவர்
அவிட்டம்=சீர்காழி அஷ்டபைரவர்
சதயம்=சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர்
பூரட்டாதி=(திருச்செங்கோடு)கொக்கராயன்பேட்டை ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்திருக்கும் பைரவர்
உத்திரட்டாதி=(கும்பகோணம்)சேங்கனூர் வெண்கல ஓசை உடைய பைரவர்
ரேவதி=தாத்தையங்கார்பேட்டை ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலய பஞ்சமுகபைரவர்

அல்லது

தொடர்ந்து 27 நாட்களுக்குச் செய்யலாம்;ஜன்ம நட்சத்திரத்தில் ஆரம்பித்து அடுத்த ஜன்ம நட்சத்திர நாளில் தினசரி அபிஷேககத்தை நிறைவு செய்யலாம்;


சில ஜோதிடர்களுக்கு ஜன்ம நட்சத்திரம் தெரியாமல் இருக்கலாம்;அவர்கள் ஸ்ரீகாலபைரவப் பெருமானின் அவதார நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தன்று இதே வழிபாட்டைச் செய்யலாம்;


ஜோதிடத்தைத் தொழிலாகச் செய்பவர்கள் மட்டுமே இந்த வழிபாடு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது;ஜோதிடத்தை கற்றுக் கொண்டிருப்பவர்களும்,ஜோதிடத்தின் மீது ஆர்வம் கொண்டிருப்பவர்களும்,ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்துபவர்களும்,ஜோதிடம் அறிந்த பூசாரிகள்,பட்டர்கள்,சிவாச்சாரியார்கள்,வாஸ்து நிபுணர்கள்,எண்கணித வித்தகர்கள்,பஞ்சாங்கம் வெளியிடுபவர்கள்,ஜோதிட பயிற்சிப் பள்ளி நடத்துபவர்களும் இந்த வழிபாட்டுமுறையைப் பின்பற்றலாம்;


ஜோதிடத்தின் மூலமாக தர்மத்தை நிலைநாட்டுபவர்கள்,நேர்மையான வழியில் ஜோதிடப் பலன்களைச் சொல்பவர்களுக்கு ஸ்ரீகாலபைரவப்பெருமானின் அருள் உடனடியாகக் கிட்டும்;

மேலும் அஷ்டபைரவர்களின் அமைவிடமான காசியில் பின்வரும் ஆலயங்களுக்கு ஒவ்வொரு ஜோதிடரும் தமது வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வர வேண்டும்;

லட்பைரவர் கோவிலில் சந்திரனின் பிராணதேவதையான ஸ்ரீகபால பைரவர் அருள்பாலித்துவருகிறார்;


வருத்தகாளேஸ்வரத்தில் குருவின் பிராணதேவதையான அசிதாங்கபைரவர் அருள்பாலித்துவருகிறார்;


த்ரிலோசனக்கஞ்சில் ராகுவின் பிராணதேவதை சம்ஹாரபைரவர் அருள்பாலித்துவருகிறார்;

தேவராகிராமத்தில் புதனின் பிராணதேவதை உன்மத்தபைரவர் அருள்பாலித்துவருகிறார்;

அனுமன் கட்டில் சுக்கிரனின் பிராணதேவதை ருருபைரவர் அருள்பாலித்துவருகிறார்;

காசிபுராவில் கேதுவின் பிராணதேவதை பீஷணபைரவர் ஆட்சிபுரிந்துவருகிறார்;

காமாச்சாவில் சனிபகவானின் பிராணதேவதை குரோதனபைரவராக(இங்கே வடுகபைரவர் என்ற பெயரில்) அருள்புரிந்துவருகிறார்;

துர்காமந்திரில் செவ்வாயின் பிராணதேவதை சண்டபைரவர் அருள்புரிந்துவருகிறார்;

நிறைவாக காசி விஸ்வநாதரை வழிபட்டுவிட்டு,வீடு திரும்பவேண்டும்;

இதுவும் செய்ய முடியாதவர்கள் அவரவர் சொந்த ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் இருக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமானை ஜன்ம நட்சத்திரம் வரும் நாட்களில் தொடர்ந்து 27 முறை அபிஷேகம் செய்தும் வழிபடலாம்;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment