ஒருவரது லக்னம், லக்னாதிபதி, ராசி, ராசியாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியவை பாதிப்படைந்தோ, பலவீனமாகவோ இருந்தால் அவருக்கு கண் திருஷ்டியாலோ, எதிர்மறை சக்திகளாலோ கஷ்ட நஷ்டங்கள் உண்டாகும்.
6,8,12 ஆகிய இடங்கள் பலமாக இருந்து, கோச்சார நிலைகள் பாதகமாக இருந்தாலும் அவற்றின் திசா புத்தி காலங்களிலும் மேற்கண்ட பிரச்சினைகள் உண்டாகும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலனைத்தரும், அனுமன் மீது அமைந்த இரண்டு முக்கியமான மந்திரங்களை இங்கு காணலாம்.
‘ஓம் நமோ ஹனுமதே ருத்ர
அவதாராய பர யந்த்ர மந்த்ர
தந்த்ர த்ராதக நாசகாய
ஸ்ரீ ராம தூதாய ஸ்வாஹா’
‘புத்திர் பலம் யஸோ தைர்யம்
நிர்பயத்வமரோகதா அஜாத்யம்
வாக்படுத்வம் ச ஹநுமத்
ஸ்மரணாத் பவேத்’
இதை ஒருவரது ஜன்ம நட்சத்திரத்தன்று காலையில் ஒரு அனுமனின் சன்னிதியில் இருந்து ஏதாவது ஒன்றை மட்டும் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும். பிறகு தினமும் காலையில் வீட்டிலிருந்தே ஜபம் செய்து வரலாம். இந்த மந்திரங்களை எப்போதுமே 48 அல்லது 108 என்ற எண்ணிக்கையிலேயே ஜபித்து வருதல் முக்கிய அம்சமாகும்
No comments:
Post a Comment