6 July 2016

சிவமயம்

சிவமயம்

ஓய்லி லாதன உவமனில் இறந்தன ஓள்மலர்த் தாள்தந்து நாயிலாகிய குலத்தினும் கடைப்படும் என்னை நன்னெறி காட்டித்தாயி லாகிய இன்னருள் புரிந்த என்தலைவனை நனிகாணேன் தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே.
     -திருவாசகம்

தெளிவுரை :

அழிவில்லாதவைகளும் ஒப்பு உவமை இல்லாதவைகளும் ஞான ஒளிவீசும் தாமரை போன்றவைகளுமாகிய தன் திருவடிகளை இறைவன் எனக்குத் தந்தருளினான். குலத்தில் நாயினும் கடைப்பட்ட எனக்கு அவன் ஞான நெறி காட்டியருளினான். தாயின் உள்ளம் கொண்டு அவன் என்னை ஆண்டருளினான். அவனை ஓவாது காணப் பெறாமையை முன்னிட்டு நான் தீயில் வீழ்ந்தோ,செங்குத்தான மலையினின்று உருண்டோ, ஆழ்கடலில் மூழ்கியோ உயிர் துறவாது இருக்கிறேன். அந்தோ !

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment