6 November 2016

குலதெய்வ தரிசனம் கனவில் வர இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வத்துடன் பேச,தரிசிக்க



குலதெய்வ தரிசனம் கனவில் வர
இஷ்ட தெய்வம் மற்றும்
குலதெய்வத்துடன் பேச,தரிசிக்க
உதவும் மந்திரம்
இம்மந்திர ஜெபத்தின் பயனாக
நமக்கு விருப்பமான தேவதையின்
( இஷ்ட தெய்வம்,குலதெய்வம்)
தரிசனம் கனவில் கிடைக்கும்.சில
நாட்களில் அந்த தெய்வத்தோடு
பேசி நம் விருப்பங்களை
நிறைவேற்றிக்
கொள்ளலாம்.மேலும் உறங்கும்
முன் ஏதேனும் ஒன்றை கனவில்
காண வேண்டுமென்றால்
ஊதுபத்தி ஏற்றிச் செம்பில் தண்ணீர்
வைத்துக் கொண்டு இன்ன
காரியம் அறியவேண்டும் என்று
சங்கல்பம் செய்து 108 தடவை
மந்திரம் ஜெபித்து செம்பில் உள்ள
தீர்த்தத்தைக் குடித்து உறங்கினால்
வேண்டியது கனவில்
வெளிப்படும்.
சனிக்கிழமை காலை அல்லது
இரவில் ஆரம்பிக்கலாம்.ஸ
்வப்நேச்வரி தேவியின் படத்தை
பிரேம் செய்து முன்னால்
வைத்துக் கொள்ளவும். வீட்டை
அல்லது பூஜை அறையை பச்சைக்
கற்பூரம் கலந்த நீரால் சுத்தம்
செய்யவும்.பின்னர் நெய்
விளக்கேற்றி பூக்களால் விளக்கை
அர்ச்சனை செய்து
,சாம்பிராணி,குங்கிலியம்
போட்டு கற்பூரஆரத்தி
காட்டவும்.வெள்ளை விரிப்பு
விரித்துக் கிழக்கு முகமாக
அமரவும்.தினமும் குறிப்பிட்ட
ஒரே எண்ணிகையில் ஜெபம்
செய்து 45 முதல் 90 நாட்களுக்குள்
51000 உரு மந்திரம் ஜெபித்து
முடிக்க மந்திரம் சித்தியாகும்.
(45 நாட்கள் என்றால் 44 நாட்களுக்கு
1133 எண்ணிக்கையும் 45 வது நாள்
1148 உரு ஜெபித்து பூஜையை
முடிக்கவும்.)
(90 நாட்கள் என்றால் 89 நாட்களுக்கு
566 எண்ணிக்கையும் 90 வது நாள்
626 உரு ஜெபித்து பூஜையை
முடிக்கவும்.)
மந்திரம் :-
ஓம் ஹ்ரீம் விசித்திர வீர்யம் ஸ்வப்னே
இஷ்ட தர்ஷய நமஹா||
இம்மந்திரம் பல தாந்த்ரீகர்கள்,
ஜோதிடர்கள் மற்றும் யோகிகளால்
பயன்படுத்தப்படுகிறது. குல தெய்வம் அறியும் வழிபாடு
-------------------------------------------------
குல தெய்வம் தெரியாதவர்கள்,
ஜாதகத்தில் ராசிக்கு பூர்வ புண்ணிய
ஸ்தானம் எனப்படும் ஐந்தாம் வீட்டின்
அதிபதிக்குரிய கடவுளையோ அல்லது ஐந்தாம்
வீட்டின் அதிபதி பெற்ற சாரநாதரின்
அதிபதிக்குரிய தெய்வத்தை மனமுருகி
வணங்கி வர, குலதெய்வம் பற்றிய
செய்தி பிறர் மூலமோ அல்லது கனவிலோ
அல்லது ஏதாவது ஒருவகையில்
அறியப்பெறுவீர்கள்.
உதாரணமாக, மீன ராசி எனில் பூர்வ
புண்ணிய வீடு கடகம் அதன் அதிபதி
சந்திரன். சந்திரனுக்குரிய அதிதேவதை
பார்வதி ஆவார். மேலும் சந்திரன்
அமர்ந்த நட்சத்திரம் உத்திரட்டாதி எனில்,
அதன் அதிபதி சனி ஆவார். சனியின்
அதிதேவதை ஐயப்பன் ஆவார். இவவரை
மனமுருகி தொடர்ந்து பிராத்தனை
செய்ய, குலதெய்வம் பற்றி அறிய
உதவுவார்கள்.


No comments:

Post a Comment