3 December 2016

வசிய காப்பு

வசிய காப்புகளுக்கென மாந்திரிக நூல்களிலும் சித்தர்களின் நூல்களிலும்  பல தகவல்கள் கிடைக்கின்றன அப்படியான ஒரு வசிய காப்பு பற்றி அகத்தியரும் கூறியிருக்கிறார்


கொடி அறுகம் புல்லை வேருடன் பிடிங்கிக் கொண்டு வந்து அதை பிரணவ மந்திரமான ஓம் என்பதுபோல் வளைத்து தேனில் போட்டு ஒரு மண்டல காலம் வைக்கவேண்டும். பின் அதை எடுத்தப் பார்க்க, நீரெல்லாம் வற்றிப் பதமாக இருக்கும்.


வெள்ளி, செம்பு, தங்கம் ஆகிய மூன்று உலோகங்களையும் சம எடையாக எடுத்து ஒனறாகச் சேர்த்து உருக்கி தகடாகத் தட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த தகட்டில் தேனில் உறவைத்து எடுக்கப் பட்ட பதமான அந்த கொடியறுகை வைத்து சுருட்டவேண்டும். பின்னர் சூரியனைப் போன்று வளையமாகச் செய்து கொண்டு இரு முனையையும் இணைத்து ஒட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இந்த வளையத்தை சூரிய ஒளி படும்படியான இடத்தில் வைத்து வணங்கிக் கொள்ள வேண்டும்.

இப்போது இந்த வளையத்தினை வலது கையில் அணிந்து கொள்ளவேண்டும். அப்படி வளையத்தை அணிந்து கொண்டு சென்றால், பெண்கள் துவங்கி மன்னாதி மன்னர்கள், விலங்குகள் என அனைவரையும் வசியமாக்கும்.

No comments:

Post a Comment