30 December 2016

அறுபத்து நான்குவித பைரவ மூர்த்திகள்



அறுபத்து நான்குவித பைரவ மூர்த்திகள்

அறுபத்து நான்குவித பைரவ மூர்த்திகள்:

ஒரே பைரவர் எட்டு வகை பணிகளை எண் திசைகளிலும்
ஏற்கும்போது அவர் அஷ்ட பைரவர்களாகத் தோற்றம் தருகின்றனர் எனவும், அவரே அறுபத்து நான்கு காலங்களிலும் அறுபத்து நான்கு பணிகளை ஏற்றுச் செயல்படும்போது அறுபத்து நான்கு வடிவங்களாகத் தோற்றமளிக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.

1. நீலகண்ட பைரவர்
2. விசாலாக்ஷ பைரவர்
3. மார்த்தாண்ட பைரவர்
4. முண்டனப்பிரபு பைரவர்
5. ஸ்வஸ்சந்த பைரவர்
6. அதிசந்துஷ்ட பைரவர்
7. கேர பைரவர்
8. ஸம்ஹார பைரவர்
9. விஸ்வரூப பைரவர்
10. நானாரூப பைரவர்
11. பரம பைரவர்
12. தண்டகர்ண பைரவர்
13. ஸ்தாபாத்ர பைரவர்
14. சீரீட பைரவர்
15. உன்மத்த பைரவர்
16. மேகநாத பைரவர்
17. மனோவேக பைரவர்
18. ÷க்ஷத்ர பாலக பைரவர்
19. விருபாக்ஷ பைரவர்
20. கராள பைரவர்
21. நிர்பய பைரவர்
22. ஆகர்ஷண பைரவர்
23. ப்ரேக்ஷத பைரவர்
24. லோகபால பைரவர்
25. கதாதர பைரவர்
26. வஞ்ரஹஸ்த பைரவர்
27. மகாகால பைரவர்
28. பிரகண்ட பைரவர்
29. ப்ரளய பைரவர்  
30. அந்தக பைரவர்
31. பூமிகர்ப்ப பைரவர்
32. பீஷ்ண பைரவர்
33. ஸம்ஹார பைரவர்
34. குலபால பைரவர்
35. ருண்டமாலா பைரவர்
36. ரத்தாங்க பைரவர்
37. பிங்களேஷ்ண பைரவர்
38. அப்ரரூப பைரவர்
39. தாரபாலன பைரவர்
40. ப்ரஜா பாலன பைரவர்
41. குல பைரவர்
42. மந்திர நாயக பைரவர்
43. ருத்ர பைரவர்
44. பிதாமஹ பைரவர்
45. விஷ்ணு பைரவர்
46. வடுகநாத பைரவர்
47. கபால பைரவர்
48. பூதவேதாள பைரவர்
49. த்ரிநேத்ர பைரவர்
50. திரிபுராந்தக பைரவர்
51. வரத பைரவர்
52. பர்வத வாகன பைரவர்
53. சசிவாகன பைரவர்
54. கபால பூஷண பைரவர்
55. ஸர்வவேத பைரவர்
56. ஈசான பைரவர்
57. ஸர்வபூத பைரவர்
58. ஸர்வபூத பைரவர்
59. கோரநாத பைரவர்
60. பயங்க பைரவர்
61. புத்திமுக்தி பயப்த பைரவர்
62.  காலாக்னி பைரவர்
63. மகாரௌத்ர பைரவர்
64. தக்ஷிணா பிஸ்திதி பைரவர்

கங்கைக் கரையில் 64 கட்டங்களில் 64 பைரவர்கள் உள்ளனர்.

பிராண பைரவர்                  - பைரவரின் உபசக்தி

நவக்கிரகங்கள் -   பிராண பைரவர்                  - பைரவரின் உபசக்தி
1. சூரியன்        -   சுவர்ணாகர்ஷணபைரவர்    - பைரவி
2. சந்திரன்        -  கபால பைரவர்                    - இந்திராணி
3. செவ்வாய்    - சண்ட பைரவர்                   - கௌமாரி
4. புதன்            - உன்மத்த பைரவர்                  - வராஹி
5. குரு              - அசிதாங்க பைரவர்                - பிராமஹி
6. சுக்கிரன்        - ருரு பைரவர்                   - மகேஸ்வரி
7. சனி              - குரோதன பைரவர்                 - வைஷ்ணவி
8. ராகு              - சம்ஹார பைரவர்                   - சண்டிகை
9. கேது             - பீஷ்ண்பைரவர்    


திருநள்ளாறில் சனீஸ்வரரை வழிபடும் முறை:*


*திருநள்ளாறில் சனீஸ்வரரை வழிபடும் முறை:*

முதலில் நளதீர்த்தம் சென்று, குளத்தை வலமாக பிரதட்சணம் செய்து குளத்தில் நடுவில் இருக்கும், நளன், தமயந்தி குழந்தைகள் சிலைகளை வணங்க வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று 9 முறை மூழ்கி எழ வேண்டும். பின், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும். கோயிலுக்குள் உள்ள சுவர்ண கணபதியை வணங்கி, சுப்ரமணியர் சந்நிதியை தரிசனம் செய்தபின், மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், பின் தியாகேசரையும் தரிசிக்க வேண்டும். வலமாக வந்து, அம்மன் சந்நிதியை தரிசிக்க வேண்டும். கடைசியாக சனிபகவான் சந்நிதி வந்து வழிபட வேண்டும். பின்னர் பெரிய பிரகாரத்தை வலம் வர வேண்டும். அவரவர்களுடைய வசிக்கும் சக்திக்கும் ஏற்றபடி சனிபகவானுக்கு அர்ச்சனை, அபிஷேகம், ஹோமம், தர்ப்பணம், ரட்சை தானம், பிரீதி நவ நமஸ்காரம், நவ பிரதட்சணம் செய்யலாம். எல்லாநாளும் சனீஸ்வரரை வணங்கலாம் திருநள்ளாறு க்ஷேத்ரம் சனிபகவானுடன், தர்ப்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட மூர்த்திகளையும் கொண்டது. இங்கு சனிக்கிழமை மட்டும் தான் வழிபட வேண்டும் என்று சிலர் தவறாக வழிகாட்டுகின்றனர். இதனால் பக்தர்கள் கால்கடுக்க நின்று, சில நிமிடம் மட்டுமே சனிபகவானை தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது. ராகுகாலத்தில் ராகுவை வழிபடுவதைப் போன்றே சனிபகவானை, சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதன்படி ஞாயிறு காலை 10-11, மாலை 5-6, திங்கள் காலை 7-8, செவ்வாய் பகல் 11-12, இரவு 6-7, புதன் காலை 8-9, வியாழன் பகல் 12-1, இரவு 7-8, வெள்ளி காலை 9-10, மாலை 4-5, சனிக்கிழமை காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9, ஆக இந்த வார நாள் நேரங்களிலும் சனிபகவானை வழிபட்டு அவரின் பரிபூரண அருளைப் பெறலாம்.
சனிக்கிழமை விரதம்: சனிக்கிழமைதோறும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்ல வேண்டும். சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினமும் இரவு படுக்கும் போது அதனை தலைக்கு அடியில் வைத்து படுத்து மறுநாள் காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். இதனை நமது வசதிக்கேற்ப 9, 48, 108 வாரங்கள் என பின்பற்றலாம். தேங்காய் முறியில் நல்ணெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டும், அல்லது எள் தீபம் (தில தீபம்) ஏற்றலாம். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீலவஸ்திரம், வடைமாலை சாத்தலாம். எள் சாதம் நைவேத்யம் செய்யலாம். அர்ச்சகர், அந்தணர் ஏழை களுக்கு அவற்றை விநியோகம் செய்ய வேண்டும். சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமம், அபிஷேக ஆராதனை மண்டல பூஜை செய்யலாம். எள்ளை சுத்தம் செய்து வறுத்த வெல்லம், ஏலக்காய் பொடியுடன் இடித்து திலசூரணம் செய்து வெங்கடேசப் பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைத்து வினியோகிக்கலாம். ஆஞ்சநேயர், தர்மராஜன் ஆகிய தேவதைகளை ஆராதனை செய்யலாம். அவரவர் பிறந்த ஜன்ம நட்சத்திரம் அல்லது சனிபகவானின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியில் அர்ச்சனை செய்யலாம். எல்லா நாளும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம்.

ஜீவ சமாதி என்றால் என்ன?

ஜீவ சமாதி என்றால் என்ன?


நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வதேயாகும்.

ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும்.

மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். ஆனால் நம்மால் எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது.

மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.
இதைத்தான் ஜீவ சமாதி என்கிறோம்.

சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது.

 பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன. அந்திவேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது.

உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது.யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.
அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும்.

ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார். மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை.

அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். இது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுண்டு. உண்மை தான் ,அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மையாக விளக்கி அருளுவார்கள்.

உயிர் போகினும் போகாதுடலினை வீங்கித்
தலைகிறுத்த கல்வது தனஞ்செயன்.
பிராணனைக் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு இந்த தனஞ்செயன் வாயுவை மற்ற ஒன்பது பிராணன்களில் இருந்து பிரியாமல் இருக்க வைத்து நீண்ட நாள் தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும்.

பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்திமா? என்று கேட்டால் திருமூலர் சாத்தியமே என்கிறார்.

"ஒத்த இவ்வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே."

பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யோகியர் பிராணாயாமப் பயிற்சியின் வல்லமையால் இந்த தனஞ்செயன் என்கிற பத்தாவது பிராணனை மற்ற பிராணன்களில் இருந்து பிரியாமல் செய்து உடலையும், உயிரையும் காத்துக் கொண்டனர்.

 திருமூலர் 4500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாகச் சொல்வார்கள். அகத்தியரோ பல யுகங்களாக வாழ்வதாகச் சொல்வது உண்டு.
ஆனால் இந்த திருமந்திரப் பாடலைப் படித்தால் அது சாத்தியமே என்று தோன்றுகிறது.

இந்த தனஞ்செயன் வாயுவானது உயிர் போனாலும் உடலை விட்டுப் போகாமல் மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து பின் உடலை வீங்கச் செய்து கபாலம் வழியாக வெளியேறும் என்பது சித்தர்கள் கூற்று.

 இவ்வாயுவானது உடலைவிட்டு வெளியேறி விட்டால் உடலானது உடனே வீங்கி வெடித்து விடும்.
இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.

இந்த தனஞ்செயன் என்கிற வாயு மட்டும் மரணத்திற்குப் பிறகு மூன்று நாட்கள் இருப்பது ஏன் ?

அதாவது இந்த தனஞ்செயனானது இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி, அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குரு ஆகிய ஒன்பது நாடிகளிலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன், தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன் கூடி இருக்கும். அப்படி கூடி இருக்கும் வரைதான் உயிர் இருக்கும். இது பிரிந்து செயல்படும் இடத்தை நாற்சந்தி என்பார்கள். வயிரவன், முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன் என்ற இந்த நாற்சந்திகளில் அந்தர்யாம
பிராணவாயுவை உடலினுள்ளேயும், இரத்தத்தினுள்ளேயும் உருவாக்கிக் கொண்டே இருப்பதால் தான் இந்த தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கி விடுகிறது.

இதைப் பயன்படுத்தி சித்தர்கள் இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை அதிகரிக்கச் செய்து உயிர் பெற்று ஏழ வைத்துவிடுவார்கள். இதனால் தான் இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார்கள்.

சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில் இருந்து எவ்வித துன்பமும் இல்லாமல் தனஞ்செயன் வெளியறிவிடும். ஆனால் எரியூட்டப்படும் உடலில் இருந்து தனஞ்செயன் வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற சத்தத்துடன் மண்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும்.மேலும் ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி அவர்கள் தேகத்தை எரித்துவிடக்கூடும், என்று கருதியே வள்ளலார் எரியூட்டுவதைக் கடுமையாக எதிர்த்தார். எரிப்பது என்பது கொலைக்குச் சமம் என்கிறார்.

வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது, உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத் தான் கண்டதாக திரு. முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார்.

யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது. கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி அமர்ந்திருப்பவர்களை விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும். அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனில் மீண்டும் புதைத்து விடுவார்கள். அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள்.

அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு, மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து, மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்து விடும். ஆனால் கண்களைத் திறந்து நம் மீது கோபித்துக் கொள்ளவும் கூடும்.......

சிவ சிவ திருச்சிற்றம்பலம்...

சதுரகிரி சித்தர் தபோவனம்...

சகலமும் சிவார்ப்பணம்....

ஓம் நமசிவாய....

ராமேஸ்வரம் கோவில் சிறப்பு என்ன

ராமேஸ்வரம் கோவில் சிறப்பு என்ன..?
இந்த உலக மக்கள் அனைவருக்கும் பித்ரு தோஷம் போக்கும்  கோயில- ராமேஸ்வரம் கோவில்

யாருடைய ஜாதகத்திலாவது பித்துரு தோசம் இருக்கா அப்படின்னா நீங்க போய் வணங்க வேண்டியது இராமநாத சுவாமிளைத்தான். இந்த கோயிலதான் இராமேஸ்வரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். பித்ரு தோசத்திற்காக இந்தியா முழுவதிலும் இருக்கக்கூடிய அனைத்து ஜோதிடர்களும் சுட்டிக்காட்டும் ஒரே இடம் ராமேஸ்வரம் தான் என்பது அனைவரும் அறிந்த விஷயமே! குடும்பத்தில் யாராவது அகால மரணம் அடைந்துவிட்டாலோ விபத்து, தற்கொலை, காரணங்களால்  அவர்களின் ஆத்மா சாந்தியடைய இங்கு தர்ப்பணம், திதி கொடுப்பது அவசியமாகும. .அப்போதுதான் அக்குடும்பத்தில் நிம்மதி,சந்தோசம் பெருகும்.
பித்ரு சாபம் நீங்க எளிய பரிகாரம்
காலையில் எழுந்து பித்ரு காரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடுவது பித்ரு தோஷத்திற்கு தகுந்த இறை பரிகாரமாகும்.

ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்!சஹசிவ சூரியாய!
வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா

இந்த மந்திரத்தை தினமும் காலையில் சூரியனை பார்த்து மேற்சொன்ன முறைப்படி சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி கூறி வந்தால் பித்ருக்களினால் ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும்.

ஒம் நமசிவாய

கிரகங்களும் அவை தோற்றுவிக்கும் நோய்களும் அவற்றிற்கான பரிகாரங்களும்:

கிரகங்களும் அவை தோற்றுவிக்கும் நோய்களும் அவற்றிற்கான பரிகாரங்களும்:

ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ரோக ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதை அறியலாம். ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தை பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த காலக் கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.

சூரியன்: மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய் களையும் ஜுரம் போன்றவை.

சந்திரன்: மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் போன்றவை.

செவ்வாய்: மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிப்புகள்.

புதன்: இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் போன்றவை.

குரு: தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு போன்றவை.

சுக்கிரன்: கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பு வியாதிகள் போன்றவை.

சனி: மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிப்பு போன்றவை.

ராகு: அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் போன்றவை

கேது: புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு போன்றவை.

நோய்களும் அவற்றை குணப்படுத்தும் நவரத்தின கற்களும்:
மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான புதனுக்குரிய மரகதத் துடன், நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சுக்கிரனுக்குரிய வைரத்துடன் நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.

மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான செவ்வாய்க்குரிய ஜாதி சிகப்பு பவளத்துடன் நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.

கடக லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான குருவிற்குரிய கனக புஷப ராகத்தை நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சனிக்குரிய நீலத்தை, நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள்; வரும்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சனிக்குரிய நீலத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான குருவுக்கு உரிய கனக புஷபராகத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான செவ்வாய்க்குரிய சிகப்பு பவளத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சுக்கிரனுக்குரிய வைரத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன்; இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

மகர லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான புதனுக்குரிய மரக தத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சந்திரனுக்குரிய ஜாதி முத்தினை, நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

மீன லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சூரியனுக்குரிய மாணிக்கத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.
இரண்டு ரத்தினங்களை இணைக்கும்போது, அவைகளுக்குள் பேதை ஏற் படுமானால், நடுவில் ஏதேனும் சாதாரண கல்லினை வைக்க வேண்டும். மோதிரம் அடியில் திறப்புடன் ஓபன்- செட்டிங் முறையில் அமைக்கப்பட வேண்டும். நோயின் தாக்கம் தீர்ந்தவுடன், மோதிரத்தை எடுத்துவிட வேண் டும். மேலே குறிப்பிட்டவை பொதுவானது ஆகும். தனிப்பட்ட ஜாதகங் களில், கிரகங்களின் நிலையை ஆராய்ந்து, நவரத்தினங்களை உரிய முறையில் அணிந்து, நன்மைகளைப் பெறலாம்
மஞ்சள்  நிறமுடைய  புஷ்பராகக்கல்:
மூன்றாம் எண் குருவிற்கு உரியது.
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் எண் 3ஆம் எண்ணாகும்.
இந்த மூன்றாம் எண்காரர்கள் பொதுவாக வசீகரமானவர்கள். ஆண்கள் கம்பீரமாக இருப்பார்கள். இந்த எண்ணில் பிறந்த பெண்கள் அழகாக இருப்பார்கள். சிலர் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகுடன் இருப்பார்கள்
ஜோதிடமாகட்டும் அல்லது எண் ஜோதிடமாகட்டும், குருவிற்கு முக்கியமான பங்கு உள்ளது. சூரியனிட மிருந்து தான் பெறும் சக்தியைவிடப் பன்மடங்கு சக்தியை வெளிபடுத்தும் கிரகமாகும் அது. நியாயத்தையும், தர்மத்தையும் போதிக்கும் கிரகம் அது. அதனால்தான் அதற்குப் பிரஹஸ்பதி அல்லது வாத்தியார் என்ற பெயரும் உண்டு. பண்டைய நூல்கள் குருவை முக்கியப்படுத்திப் பல செய்திகளைச் சொல்கின்றன.
Jupiter is a planet of courage, boldness, power, hard work, energy, knowledge, and speech.
சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் குருவிற்கு நட்புக் கிரகங்களாகும். தனுசு, மீனம் ஆகிய இரண்டு ராசிகளும் குருவிற்குச் சொந்த இடங்களாகும். கடகம் உச்சமான இடம். மகரம் நீசமான இடம்.
பாக்கியஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் வீட்டிற்குக் காரகன் குரு. தந்தைக்குக் காரகன் சூரியன் என்றபோதிலும். ஒன்பதாம்வீட்டின் மற்ற செயல்பாடுகளுக்கெல்லாம் குருவே அதிபதி.
ஒன்பதாம் வீடுதான் அதிர்ஷ்டத்தைக்குறிக்கும் வீடு. அதிர்ஷ்டத்திற்கு அதிபதி குரு. அதை மறக்க வேண்டாம். ஜாதகத்தில் குரு, கேந்திர கோணங்களில் இருப்பது நன்மை பயக்கும்!
நுண்ணறிவு, திருமணம், வாரிசு, ஆகியவற்றிற்கும் குருவின் அமைப்பு முக்கியம். பெண்ணின் ஜாதகத்தில் குருவின் அமைப்பைவைத்துத்தான் அவளுக்கு நல்ல கணவன் அமைவான். ஜாதகத்தில் குரு மறைவிடங்களில் இருந்தால் திருமணம் தாமதமாகும்.
சனி, ராகு அல்லது கேதுவுடன் கூட்டாகவோ அல்லது எதிரெதிர் பார்வையுடனோ இருக்கும் குருவால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. மிதுனம், கன்னி லக்கினக்காரர்களுக்கு, அதுபோன்ற அமைப்பு இருந்தால், சிலரது திருமணம் விவாகரத்தில் முடிந்துவிடும்
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் கடினமான உழைப்பாளிகள். விடாமுயற்சியுடன் செயல்படக்கூடியவர்கள். தங்களைத் தாங்களே பலவிதமான செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடியவர்கள். சோம்பேறித்தனம் என்பது சிறிதும் இருக்காது. அதீதமாகப் பொருள் ஈட்டக்கூடியவர்கள். அதாவது சம்பாதிக்கக்கூடியவர்கள்.
அறவழிகளில் ஈடுபாடு உடையவர்கள். கடமையே வெற்றிக்கு வழி என்பதிலும் உறுதியாக இருக்கக் கூடியவர்கள். செயல்படக்கூடியவர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர்கள். ஓய்வு என்று சொல்லி ஒரு இடத்தில் சும்மா இருக்கமாட்டார்கள். செய்யும் வேலை அலுப்பைத் தந்தாலும், அதை விடாது செய்து முடிக்கும் ஆற்றலைக் கொண்டவர்கள்.
எந்த வேலையை மேற்கொண்டாலும், அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடியவர்கள். அந்த விதமான செயல்பாடே அவர்களுக்கு அதீதமான தன்னம்பிக்கையைக் கொடுக்கும். அந்தத் தன்னம்பிக்கைதான் அவர்களின் தாரக மந்திரம். சொன்ன சொல்லையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றக் கூடியவர்கள். அதனால் பலரது நம்பிக்கைக்கும் ஆளாகியிருப்பவர்கள். எதிலும் ஒரு ஒழுங்கை விரும்புபவர்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சிறப்புடன் வாழ்பவர்கள். முத்தவர்களின் அன்பு, பாசம், பரிவு, ஆலோசனை என்று அனைத்தும் இவர்களைத் தேடி வரும். சமூக அந்தஸ்தும் தேடிவரும்.
ஆரோக்கியமான உடற்கட்டு இருக்கும். வாழ்க்கையுடன் இயைந்து போவார்கள். ஆக்கபூர்வமானவர்கள். மகிழ்ச்சியை உடையவர்கள். நகைச்சுவை உணர்வுடையவர்கள். மற்றவர்களுக்குத் தூண்டுதலாக விளங்கக்கூடியவர்கள். மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்கள்.
ஒற்றிலக்க எண்களில் - அதாவது 1,3,5,7,9 எனும் எண்களில் 3ஆம் எண்தான் அதிக சக்தியுள்ள எண். தலைமை எண் என்றும் சொல்லலாம்.
It makes its natives independent, bold, active, hard, working, dependable, popular, disciplined & self-confident. At the beginning of their career, which they start quite early in life they have to struggle a lot. This struggle, however, is very beneficial for their growth and development and makes them shine.
கடுமையான உழைப்பினால், சிலருக்கு, மன அழுத்தங்கள் உண்டாகும். சில இடையூறுகள் ஏற்படும். ஆனால் இந்த எண்ணிற்கு இயற்கையாகவே உள்ள அதிர்ஷ்டம்தரும் அமைப்பினால், அவைகள் எல்லாம் அவ்வப்போது களையப்பட்டுவிடும். தேவையானபோது இந்த எண்காரர்களுக்குப் பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும். செய்யும் வேலையில் அல்லது தொழிலில் தலைமை ஏற்கும் நிலைக்கு உயர்வார்கள்.
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்: 3,12, 21 மற்றும் 30. அதுபோல 6,9,15,18,24 & 27 தேதிகளும் நன்மை பயக்கக்கூடியதாகவே இருக்கும். வியாழக்கிழமை உரிய கிழமையாகும். அதுபோல திங்கள், செவ்வாய் & புதன் கிழமைகளும் இந்த எண்காரர்களுக்குச் சாதகமான கிழமைகளே!
இந்த எண்காரர்களுக்குச் சாதகமான நிறம் மஞ்சள். மஞ்சள் நிறத்தில் துண்டு, படுக்கைவிரிப்பு, தலயணை உறை, கைக்குட்டை என்று எல்லாவற்றிலும் மஞ்சள் நிறத்தையே போற்றி வைத்துக்கொள்ளலாம்
நவரத்தினங்களில் மஞ்சள் நிறமுடைய புஷ்பராகக்கல் நன்மை பயக்கும்!
உடல் நலம்: இந்த எண்காரர்களுக்கு, நீரழிவு நோய், மஞ்சள்க் காமாலை நோய் போன்றவைகள் வரக்கூடும்.  எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இந்த எண்காரர்களின் வாழ்க்கையில், 21, 30, 33, 36, 48, 57, 66, ஆகிய வயதில் வாழ்க்கை ஏற்ற முடையதாக இருக்கும்
ஐந்தான் ஜார்ஜ் மன்னர், அப்ரஹாம் லிங்கன், வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற பிரபலங்கள் எல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்கள்.

ஒருவருடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய எந்தக் கல்லை தேர்ந்தெடுத்து அணிவது என்பதை 'ஜெம்மாலஜி' என்ற அறிவியல் எடுத்துரைக்கின்றது. நவக்கிரகத்தில் புதனுக்குரிய கல் மரகதப் பச்சையாகும். மத்தளம் அடித்தால் மரகதம் சிதறும் என்பார்கள். எனவே தான் மரகத லிங்கமுள்ள திருக்கோவில்களில் சிவலிங்கத்திற்கு தீபம் மட்டும் காட்டுவதாகச் சொல்வார்கள்.

புதன் கிரகத்தால் பலன் பெற விரும்புபவர்கள் மரகதப் பச்சை அணியலாம். மோதிரத்தை எந்த வடிவத்தில் செய்து எந்த விரலில் எப்பொழுது அணிய வேண்டும் என்பதை சுய ஜாதக ரீதியாக அறிந்து கொண்டு அணிந்தால் வளர்ச்சி அதிகரிக்கும். பொதுவாக பெண்கள் நல்ல ஜாதி மரகதக் கல் அணிந்து கொண்டால் கர்ப்பப்பை கோளாறுகள் அகலும். இருதயத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். ஆண்கள் அணிந்து கொண்டால் அற்புதப் பலன்களைக் காணலாம். புத்திக் கூர்மை ஏற்படும்.  விவாகத்தினால் விவகாரம் ஏற்படாமல் வியக்கும் வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும். இது பொது நியதி என்றாலும் அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப ரத்தினங்களைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொள்வதே நல்லது.

அஷ்டமாதிபதியை ராசிநாதனாகக் கொண்டவர்கள், ராசிப்படி கல் அணியலாமா?

உதாரணமாக விருச்சிக லக்னம் மிதுன ராசியில் மரகதத்தை மோதிரமாக் அணியலாமா? கன்னி லக்னம் மேஷ ராசியில் பிறந்த ஒருவர் பவழத்தை அணியலாமா?  கூடாது.

கடக லக்னம், கடக ராசி உள்ள ஒருவருக்கு எட்டில் சனி. அவருக்கு சனி தசை ஆரம்பித்த நாலே வருடங்களில் தொழில் சரிவு ஏற்பட்டு குடும்பத்தினரும் பிரிந்து விட்டனர்.  கையில் நீலக் கல் மோதிரம் அணிந்திருந்த அவர் கூறியதென்னவென்றால்,  சனி தசை நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக நீலக்கல் அணியும்படி ஒரு நகைக் கடைக்காரர் கூறியதாகக் கூறினார்.  கேட்டதும் அதிர்ச்சி அடையாமல் வேறென்ன செய்வது?

அஷ்டமாதிபதியின் கல்லை அணியக்கூடாது என்ற அடிப்படை விஷயம்கூட அறிவுரை சொல்பவர்களிடம் இல்லை.  எனவே நவரத்தினங்களில் எதை அணியலாம்; எதை அணியக்கூடாது என்பது பற்றி  நமது மேலான ஜோதிட சாஸ்திரம் சொல்வதை நன்கு ஆராய்ந்து பார்த்து கீழ்க்கண்ட உண்மைகளை எடுத்து இயம்பியுள்ளோம்.

1. லக்னப்படியும் ராசிப்படியும் நல்லது செய்ய விதிக்கப்பட்டிருந்த கிரகம் வலிமை குறைந்திருந்தால், அந்தக் கிரகத்துக்குரிய கல்லை அணியலாம்.
2.  6, 8 க்குடையவர்களின் ராசிக்கல்லை கண்ணெடுத்தும் பார்க்கக்கூடாது. பாதகாதிபதியின் ராசிக்கல்லும் அப்படியே. ( பாதகாதிபதி ராசிநாதனாக வந்தாலும் அணியக்கூடாது)
3. லக்னாதிபதி வலிமை குறைந்திருந்தால், அவருடைய ராசிக்கல்லை வலதுகை மோதிர விரலில் அணிவது நல்லது. அவருக்கு ஆறு , எட்டு என மறு ஆதிபத்தியம் இருந்தால், லக்னாதிபதி இருக்கும் இடம், மற்றும் அவரது மூலத் திரிகோணாதிபத்தியம் ஆகியவற்றை வைத்து முடிவெடுக்கவேண்டும்.
4. 5,9 போன்ற யோகாதிபதிகளின் தசை நடக்கும்போது அவர்களின் ராசிக்கல்லை தாராளமாக அணியலாம்.
5. 2,11,4,7,10 பாவங்களின் அதிபதிகள் சுபராகி அவர்களின் தசை நடந்தால், அவர்கள் இருக்கும் இடத்தின்படி ஆராய்ந்து மோதிரம் அணியலாம்.
5. ராகு கேதுக்களின் தசை நடக்கும்போது அவர்கள் இருந்த ராசியின் அதிபதி , லக்ன சுபராகி  அவர் வலிமை குறைந்திருந்தால்,  அந்த ராகு கேதுக்கள் இருக்கும் ராசிக்கு  அதிபதியின் கல்லை அணியலாம்.
6. ராகு கேதுக்கள் 3,11ல் இருந்தால், மட்டுமே அவர்றின் ராசிக் கற்களை அணியலாம். அல்லது அவர்கள் லக்ன சுபரின் வேறு வீட்டில் இருந்தால் இருந்தால், அணியலாம். உதாரணமாக மிதுன லக்னத்திற்கு 12ல் ரிஷபத்தில் ராகு இருந்தால் கோமேதகம் அணியலாம்.
7. கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற ,  அதாவது கேந்திரத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற குருவும், புதனும், எந்த பாபர் பார்வையும் , சேர்க்கையும் இல்லாமல் தனித்து இருக்கும்  நிலையில் அவர்களின் ரத்தினங்களை அணியக் கூடாது. {லக்னம் , கேந்திரத்துக்கும் திரிகோணத்துக்கும் பொதுவானது.  லக்கினத்தில் அவர்கள் இருந்தால் தோஷம் இல்லை} .
8. மிதுன, கன்னி, ரிஷபம், துலாம் லக்னக்காரர்கள் ராசிக்கல்லை வெள்ளியில் அணியவேண்டும். மகரம், கும்பம், கடக லக்னக்காரர்கள் ராசிக்கல்லை பஞ்ச லோகத்தில் அணியலாம். தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், சிம்ம லக்கினக்காரர்கள் தங்கத்தில் அணியலாம்.
9. ரத்தினங்களைக் கடையில் வாங்கி அப்படியே அணியக்கூடாது. அவற்றை அணியப் போகிறவரின் ராசி, நட்சத்திரப்படி மந்திர உருவேற்றிய பின்பே, அது மோதிரமாக அணியப்பட வேண்டும்.

யாரெல்லாம் நவரத்தின மோதிரம் அணியலாம் …?
மேஷ ராசி, மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள்
மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .

எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.
பிறவி எண் 2, 7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணிய கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்துதான் அணிய வேண்டும்.

யாரெல்லாம் முத்து அணியலாம்
கடக ராசிக்கு அதிபதி சந்திரன். சந்திரனுக்குரிய ரத்தினம் முத்து. எனவே கடக ராசிக்காரர்கள் முத்து அணியலாம். ரோஹிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திர காரர்களும் முத்து அணியலாம்.

எண் கணிதபடி 2,11,20,20 தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தையும் கூட்டினால் 2 எண் வருபவர்களும், பெயர் எண் 2 கொண்டவர்கள்களும் முத்து அணியலாம். மேலும், 7,16, 25 தேதிகளில் பிறந்தவர்கள், பெயர் எண் 7 கொண்டவர்களும் முத்து அணியலாம்.

யாரெல்லாம் வைரம் அணியலாம் ..!
சுக்கிரனை அதிபதியாய் கொண்ட ரிஷபம் மற்றும் துலாம் ராசிகாரர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர காரர்களும் 6, 15. 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பெயர் எண் மற்றும் விதி எண் 6, 15, 25 கொண்டவர்களும் வைரம் அணியலாம்..!

யாரெல்லாம் வைடூரியம் அணியலாம்
அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திர காரர்களும், 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண், பெயர் எண் 7 வருபவர்களும் வைடூரியம் அணியலாம்.
மேலும், 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 2 வருபவர்களும் இந்த கல்லை அணியலாம் …!

யாரெல்லாம் மாணிக்கம் அணியலாம் ..!
சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். சூரியனுக்குரிய ரத்தினம் மாணிக்கம் ஆகும். எனவே சிம்மராசிக்காரர்கள் இந்த கல்லை அணியலாம். மேலும் கிருத்திகை, உத்தரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் மாணிக்கம் அணியாலாம். எண்கணித படி 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த கல்லை அணியலாம். பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை கூட்டினால் 1 வருபவர்களும், பெயர் எண் 1 ஆக அமைந்தவர்கள் மாணிக்கம் அணியலாம்.

யாரெல்லாம் மரகதம் அணியலாம்..?
மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன். புதனுக்குரிய ரத்தினம் மரகதம்.
மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் மற்றும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திர காரர்கள் மரகதம் அணியலாம். எண்கணிதப்படி 5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் எண் 5 உடையவர்களும் மரகதம் அணியலாம்

யாரெல்லாம் புஷ்பராகம் அணியலாம்
தனுசு, மீனம் ஆகிய ராசிகளின் அதிபதியான குரு விற்கு உரிய ரத்தினம் புஷ்பராகம்.
தனுசு, மீன ராசிக்காரர்களும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர காரர்களும் புஷ்பராகம் அணியலாம். எண்கணித படி 3 ,12, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண்,பெயர் எண் 3 அமைய பெற்றவர்களும் புஷ்பராகம் அணியலாம்

யாரெல்லாம் பவழம் அணியலாம்
பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி, எனவே மேஷம் மற்றும் விருச்சிக ராசி காரர்களும் ,மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் ஆகிய நட்சத்திர காரர்களும் எண் கணிதபடி 9,18,27 தேதிகளில் பிறந்தவரும்,பெயர் எண் 9 வருபவர்களும் பவழம் அணியலாம்.

யாரெல்லாம் நீலம் அணியலாம்
சனி பகவானை அதிபதியாக கொண்ட மகரம், கும்பம் ராசிக்காரர்கள்; மற்றும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள்; எண் கணித படி 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், விதிஎண், பெயர் எண் 8 கொண்டவர்களும் நீலம் அணியலாம்.

மேலும் ராகுவின் எண் 4, 13, 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் விதி எண் பெயர் எண் 4 கொண்டவர்களும் நீலம் அணியலாம்

யாரெல்லாம் கோமேதகம் அணியலாம்..?
திருவாதிரை, சுவாதி,சதய நட்சத்திர காரர்கள். மற்றும் எண்கணித படி 4, 13, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 4 வருபவர்களும் கோமேதகம் அணியலாம்.

இப்படியான விதிமுறைகளை ஆராய்ந்த பின்னர், தேவைப்பட்டால், உங்கள் பிறந்த ஜாதகத்துடன்  குடும்ப ஜோதிடரின் ஆலோசனைகளைப் பெற்று ராசிக்கல்லை அணிந்தால்,  தொல்லைகள் நீங்கி நற்பலன்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

செல்வம் செழிக்க

செல்வம் செழிக்க:-

வீட்டில் இருந்து உடனடியாக இவற்றை சுத்தப்படுத வேண்டும்...

வீடு - தோட்டம்

சிலரது வீட்டில் என்னதான் கைநிறைய சம்பாதித்தாலும் பணம் தங்காது. இதற்காக பல்வேறு வழிபாடுகளை நடத்தியும், வீட்டில் சில மந்திர பொருட்களை வைத்தாலும், வீட்டில் வைக்ககூடாது சில முக்கிய பொருட்களை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

புறா கூடு

வீட்டில் புறா கூடு இருந்தால், அது வீட்டின் வறுமையை அதிகரித்து, உறுதியற்ற நிலையை ஏற்படுத்தும். எனவே உங்கள் வீட்டில் பணம் சேர வேண்டுமானால், உங்கள் வீட்டினுள் இருக்கும் புறா கூட்டினை வெளியேற்றுங்கள்.

தேன் கூடு

வீட்டினுள் தேன் கூடு இருப்பது ஆபத்தானது மட்டுமின்றி, வீட்டில் வறுமை மற்றும் துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும். உங்கள் வீட்டில் தேன் இருப்பின், உடனே அதனை வெளியேற்றுங்கள்.

சிலந்தி வலை

வீட்டில் சிலந்தி வலை இருப்பது என்பது வாழ்வில் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறியாகும். எனவே வீட்டில் சிலந்து வலையைக் கண்டால், உடனே அதை சுத்தம் செய்துவிடுங்கள்.

உடைந்த கண்ணாடி

வாஸ்து சாஸ்திரப் படி, உடைந்த கண்ணாடிகளை வீட்டில் வைத்திருப்பது என்பது வீட்டில் வறுமையை அதிகரித்து எதிர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதாக கருதப்படுகிறது. ஆகவே உங்கள் வீட்டில் ஏதேனும் உடைந்த கண்ணாடி இருப்பின், அதை பத்திரப்படுத்தாமல் உடனே தூக்கி எறிந்துவிடுங்கள்.

வவ்வால்

வவ்வால் உடல்நல பிரச்சனை, மோசமான சம்பவங்கள், வறுமை அல்லது இறப்பைக் குறிப்பதாக கருதப்படும் ஒன்று. இத்தகைய வவ்வால் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டினுள் நுழைவது கெட்ட சகுணம்.

எனவே மாலை நேரத்திற்கு பின் வீட்டின் ஜன்னல் கதவுகளை அடைத்துவிடுங்கள்.

ஒழுகும் குழாய்

வீட்டினுள் இருக்கும் குழாயில் இருந்து எப்போதும் நீர் வடிந்து கொண்டிருந்தால், அதனால் நீர் மட்டும் வீணாவதில்லை, வீட்டின் சேர்த்து வைத்திருந்த பொருட்களும் வீணாகி, சில நேர்மறையாக எண்ணங்களும் வீணாகின்றன என்று அர்த்தம்.

காய்ந்த மலர்கள்

பூஜை அறையில் சாமிக்கு பூக்களைக் கொண்டு அலங்கரிப்பது வழக்கம். அப்படி அலங்கரிக்கும் பூக்கள் காய்ந்து பல நாட்களாக பூஜை அறையில் இருப்பது, வீட்டின் செல்வ வளத்திற்கு இடையூறை ஏற்படுத்தும்.

எனவே தினமும் தவறாமல் பூஜை அறையை சுத்தம் செய்யுங்கள்...

எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?



எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?

பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது.  உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக்கூடியதாகும்.  இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும்.  அவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.  இல்லையேல் நமது வாழ்வில் குழப்பங்கள் உண்டாகும்.  எனவே குழப்பங்களை தவிர்த்து இறை வழிபாடு தழைக்கவே இப்பதிவு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள் / தெய்வங்கள் /  தேவதைகள்:-
அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  இது மிகவும் நன்மை பயக்கும்.  குல தெய்வம் நம்மை கண்ணின் இமை போல் காத்து நிற்கும்.  குல தெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை.  குல தெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது.
அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  இதுவும் நன்மை பயக்கும்.  நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நம்மை காப்பாற்றும் தெய்வம் இஷ்ட தெய்வமே.  குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே.
எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம்.  முழு முதற் கடவுள் இவரே.  இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம்.  காரியசித்தி உண்டாக்குபவர் இவரே.  விக்கினங்களையும், வினைகளை களைபவரும் இவரே.  நல்வழி காட்டுபவரும் இவரே.
குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம்.  இது குழந்தை வரம் தரும்.  குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.  நல்ல குழந்தைகள் பிறக்கும்.  பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும்,  அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.  இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசாங்கமும் இல்லை.
மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும்.  திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும்.  இல்லறம் நல்லறமாக நடக்கும்.
அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம்.  நாம்  அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.  பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர்.  தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும்.  தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.
சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம்.   சிவசக்தி கலப்பே உலகம்.  சிவசக்தி கலப்பில்லாமல் உலகில்லை.  சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம்.  எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.
ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம்.  இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும்.  இந்த வடிவம் தம்பதியர் இடையே அன்பு, பாசம், காதல், நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும்.  தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.
[30/12 09:25] ‪+91 77601 51307‬: குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம்.  இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது.  இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும்.  குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும்.
தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே.  பைரவ வடிவங்களிலேயே சிறந்த இவ்வடிவத்தினை வணங்கி வர அறம், பொருள் மற்றும் இன்பம் அனைத்தும் பெருகும்.
ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே.  பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர்.  அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இதனால் திருமகளின் அருள் கிட்டும்.  நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.
சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இது சிவசக்தி அருளைத் தரும்.  16 பேறுகளும் கிட்டும்.  நடனம், இசை முதலான நுண்கலைகளில் புலமை உண்டாகும்.  கர்மவினைகள் தொலையும்.  மாயை விலகும்.  முக்தி கிட்டும்.
ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று.  இதனால் அறிவும், ஞாபக சக்தியும் உண்டாகும்.  கல்வி ஞானம் கிட்டும்.  ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே.  கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கிட்டும்.
கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே.  இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும்.  நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள்.  போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம்.  குபேரனுக்கு அருள் பாலிக்கும் லட்சுமி படமும், லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு அருள் பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை.  இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும். 8 ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம்.  இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும்.  மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது.
துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது.  இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும்.  கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும்.  செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும்.  வியாபாரம் பெருகும்.
அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது.  இதன் மூலம் வறுமை அகலும்.  பசி, பட்டினி, பஞ்சம் தீரும்.  வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இதனால் குருவருள் வந்து சேரும்.  தோஷங்கள் விலகும்.  கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும்.  வளமான, நிம்மதியான வாழ்க்கை கிட்டும்.
எமக்கு தெரிந்தவரை மேலே பட்டியலிட்டிருக்கிறேன்.  இதனை படிக்கும் ஆன்மீக அன்பர்களுக்கு வேறு தகவல்கள் தெரிந்திருப்பின் தவறாது கருத்துரையிலோ அல்லது மின்னஞ்சலிலோ தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  நீங்கள் தெரிவிக்கும் தகவல்கள் இப்பதிவினை மேலும் மேம்படுத்த உதவும்.  நன்றி…!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்


29 December 2016

அர்ச்சுனன் கர்வம் நீக்கிய ஆஞ்சநேயர்

அர்ச்சுனன் கர்வம் நீக்கிய ஆஞ்சநேயர்

கண்ணனின் திறமையை அறிந்திருந்த அர்ச்சுனனுக்கு, ராமரின் திறமை புரியவில்லை. அர்ச்சுனனின் கர்வத்தை ஆஞ்சநேயர் நீக்கிய கதையை கீழே பார்க்கலாம்.

மகாபாரத காலத்தில் ராமரை தரிசிக்க வேண்டும் என்பதற்காக, பூமியில் ராமனை நினைத்து தவ வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார் அனுமன். அமைதி தவழ்ந்து கொண்டிருந்த நதிக்கரையோரம் அது. ஒரு நாள் அந்த வழியாக வந்தான் அர்ச்சுனன். அப்போது மரத்தில் அமர்ந்து ராமரை நினைத்து தியானித்துக் கொண்டிருந்த ஆஞ்சநேயர் அவன் கண்ணில் பட்டார். அவரைப் பார்த்து, ‘வானரரே! தாங்கள் யார்?’ என்று வினவினான்.

அர்ச்சுனன் யார் என்பதை தன் தவ வலிமையால் உணர்ந்து கொண்ட ஆஞ்சநேயர், ‘அர்ச்சுனா! நான் ராமாயண காலத்தில் ராமனுக்கு தூதுவனாக இருந்த ஆஞ்சநேயன்’ என்று பதிலுரைத்தார். அவரை பற்றி பல வழிகளிலும் கேள்விப்பட்டிருந்த அர்ச்சுனன் அவரிடம் தலைதாழ்ந்து தனது வணக்கத்தை தெரிவித்தான். அப்போது அவனுக்குள் இருந்த கர்வம் விழித்துக் கொண்டது.

‘வாயு புத்திரரே! ராமாயண காலத்தில் சீதாதேவியை தேடி இலங்கைக்கு அனைவரும் புறப்பட்டபோது, கடலுக்கு நடுவில் வானரங்களை கொண்டு கல்லால் பாலம் அமைத்ததாக கேள்வியுற்றேன். ராமர் சிறந்த வில்லாளி என்று அறிந்தேன். ஆனால் அவர் தனது வில்லை நம்பாமல், வானரங்களை வைத்து கல் பாலத்தை அமைத்ததைப் பார்த்தால், ராமர் சிறந்த வில் வித்தை வீரர் இல்லை என்பதுபோல் தோன்றுகிறதே!’ என்று கேள்வி எழுப்பினான்.

ராமனே சித்தம் என்று நித்தமும் எண்ணிக் கொண்டிருக்கும் அனுமனிடம், அர்ச்சுனன் இப்படி ராமரின் திறமையை பரிகசித்து பேசி, எகத்தாளமாக கேள்வி எழுப்பியதும், அவருக்கு கோபம் வந்து விட்டது. கண்ணனின் திறமையை அறிந்திருந்த அர்ச்சுனனுக்கு, ராமரின் திறமை புரியவில்லை. ஏனெனில் அவன் கண்ணனும், ராமரும் வேறுவேறு என்று நினைத்து விட்டான்.

‘அர்ச்சுனா! ராமர் நினைத்திருந்தால் பாலம் அமைத்து தான் அங்கு செல்ல வேண்டும் என்பதே இல்லை. அவர் நினைத்தால் அந்த நிமிடமே நினைத்த இடத்தில் இருக்கும் வல்லமை பெற்றவர். அப்படிப்பட்டவரை நீ இகழ்வாக பேசி விட்டாய். உன்னால் அனைவரையும் தாங்கும் ஒரு பாலத்தை அம்பால் அமைக்க முடியுமா?, அப்படி அமைத்தாலும் அது என் ஒருவனின் கட்டை விரல் சுமையையாவது தாங்குமா?. அப்படி தாங்கி விட்டால் மகாபாரத போரில் உனது தேரில் கொடியாக இருந்து உனக்கு உதவி புரிகிறேன்’ என்றார் ஆஞ்சநேயர்.

‘ஏன் முடியாது? என் திறமை தெரியாமல் பேசுகிறீர்கள். என்னால் எதுவும் முடியும். இப்போதே இந்த நதியில் என் வில்லின் சக்தி கொண்டு ஒரு பாலம் அமைக்கிறேன்’ என்று கூறி, அம்புகளை சரமாரியாக தொடுத்து கண நேரத்தில் ஒரு அம்பு பாலத்தை கட்டி முடித்தான் அர்ச்சுனன். பின்னர், வானரரே! இப்போது இதில் ஏறி குதித்து விளையாடும், அங்கும் இங்கும் ஓடும். அப்போது என் திறமையை உணர்ந்து கொள்வீர். பாலம் உடைந்து விட்டால் நான் இங்கேயே தீயில் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்கிறேன்’ என்று மீண்டும் ஆணவம் பொங்க பேசினான்.

இதைக் கேட்டு நகைப்புடன், ராம ராம என்று துதித்த படி தனது வலது காலின் கட்டை விரலை அந்த அம்பு பாலத்தின் மீது வைத்து அழுத்தினார் ஆஞ்சநேயர். அது மண் மாளிகை போன்று பொலபொலவென சரிந்து விழுந்தது. இதனை பார்த்ததும் அர்ச்சுனனின் முகம் கறுத்துப் போயிற்று. தன் திறமை என்னவானது என்று எண்ணினான். தன் ஆணவப் பேச்சுக்கு விழுந்த அடியால் துவண்டு போனான்.

பின் தான் அழித்த வாக்குறுதிப்படி தீக்குளிக்க முயன்றான். அப்போது அந்தணர் உருவில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் அர்ச்சுனன் தீக்குளிக்க முயலும் காரணத்தைக் கேட்டார். அப்போது நடந்த விவரங்களை அர்ச்சுனன் கூறினான். அதற்கு அந்த அந்தணர், ‘நடுவர் ஒரு வரும் இல்லாமல் எப்படி போட்டி நடத்தி வெற்றி தோல்வியை நிர்ணயிப்பீர்கள். எனவே போட்டி மீண்டும் நடைபெறட்டும். நான் நடுவராக இருந்து தீர்ப்பு கூறுகிறேன்’ என்று கூறினார்.

அதன்படி மீண்டும் போட்டி நடந்தது. அர்ச்சுனன் இப்போது கண்ணனை நினைத்தபடி மீண்டும் தனது வில்லை எடுத்து அம்பு மழை பொழியச் செய்து பாலத்தை கட்டி முடித்தான். ஆஞ்சநேயர் அதனை காலால் மிதித்தார். ஆச்சரியம் பாலம் உடையவில்லை. ஏறி நின்று குதித்தார். தனது திறமையை எல்லாம் காட்டினார். ஆனால் அந்த பாலம் அசையவில்லை. ஆஞ்சநேயர் திகைத்து போனார்.

அப்போது அந்தணர் உருவில் இருந்த கண்ணன் சுயஉருவை காட்டி இருவருக்கும் அருள்புரிந்தார். மேலும் அனுமனே நீ கூறியபடியே மகாபாரத போரில் அர்ச்சுனன் தேரில் கொடியாக இருந்து அவனுக்கு உதவியாக இரு! என்று கூறினார். அப்போது ஆஞ்சநேயர் தனது தவத்தை தெரிவித்ததும், அவருக்கு ராமராகவும் காட்சியளித்தார். அந்த திருக்காட்சியை கண்டு ஆஞ்சநேயரும், அர்ச்சுனனும் ஆனந்தத்தில் திளைத்தனர்.

கல்யாண ஆஞ்சனேயர்

கல்யாண ஆஞ்சனேயர். நீங்கள் அறியாத தகவல்.வானிலே பறந்துசெல்லும் வல்லமை படைத்த அனுமன், அளப்பரிய ஆற்றல்கொண்ட சூரியதேவனிடம் கல்வி கற்க விரும்பினான். சூரிய பகவானும், அனுமன் வருங்காலத்தில் மக்களின் துன்பங்களைப் போக்கும் சக்தி கொண்டவன் என்பதையறிந்து, அனுமனை சீடனாக ஏற்றுக்கொண்டு ஒரு நிபந்தனையையும் விதித்தார்.

தனது தேரின் ஓட்டத்தை எக்காரணத்தைக் கொண்டும் ஒரு கணம்கூட நிறுத்த இயலாது என்றும், அனுமனது முகத்தைப் பார்த்துதான் தன்னால் உபதேசிக்க இயலும் என்றும் சொன்னார்.

அந்த நிபந்தனைக்கு உடன்பட்டு, சூரிய பகவானைப் பார்த்தபடி தேரின் ஓட்டத்திற்கேற்ப பின்புறமாக ஓடிக்கொண்டே கல்வி பயின்றான் அனுமன்.

தன் மாணவன் பின்னோக்கி ஓடி சிரமப்படுகிறானே என்று பரிதாபப்பட்டாலும், தன் தேரோட்டத்தை நிறுத்தினால் உலகமே ஸ்தம்பித்து கோடிக்கணக்கான உயிர்கள் துன்பப்படுமே என்ற கவலையும் சூரியன் மனதில் எழுந்தது.

ஒருசமயம்…

கற்புக்கரசியான நளாயினியின் கணவன், ஒரு முனிவர் சொன்ன அறிவுரைகளைக் கேட்காமல் தாசி வீடு சென்று உல்லாசமாக இருந்தார். கோபம்கொண்ட முனிவர், “நாளை சூரியன் உதிக்கும்போது நீ காலமாகக் கடவாய்” என்று சபித்துவிட்டார்.

இதையறிந்த நளாயினி, சூரியன் உதித்தால்தானே என் கணவர் மரணமடைவார் என்று, “சூரிய பகவானே, நாளை நீ உதிக்காதே” என்று ஆகாயத்தைப் பார்த்துக் கட்டளையிட்டாள். பதிவிரதையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டார் சூரியன்.

ஓயாது ஓடிக்கொண்டிருந்த சூரிய ரதம் ஒரே ஒருநாள் நின்றது. பூலோகம் செயலற்றுப் போனது.

ஜீவன்கள் துன்பப்பட்டன. உடனே தேவர்கள், நளாயினியை சமாதானப்படுத்தினர். சாபம் கொடுத்த முனிவரும் தன் சாபத்தை மாற்றிக்கொண்டு கானகம் சென்றார்.

இவ்வாறு சூரியனின் ரதம் நின்றதும் பல நிகழ்வுகள் நடந்தன.



சூரியனின் தேரோட்டியான அருணன், வெகுநாட்களாக தேவலோகம் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளைக் காண விருப்பம் கொண்டிருந்தான். இந்த ஒருநாள் விடுமுறையை அதற்குப் பயன்படுத்திக்கொள்ள எண்ணினான்.

அதே உருவத்தில் இந்திர லோகத்திற்கு சென்றால் அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த அருணன், அழகான அப்சரக்கன்னி வடிவெடுத்து இந்திரலோகம் சென்றான். அங்கே காவலர்கள் அவனைத் தடுத்தார்கள்.

“நான் மேனகையின் தோழியான அருணாதேவி. மேனகைக்கு ஒப்பனை செய்பவள். இன்று அவசரத்தில் சரியாக ஒப்பனை செய்யவில்லை. அதனால் முகம் களையிழந்துவிடும்” என்று காவலர்களைப் பார்த்து புன்னகைத்தாள் அருணாதேவி.

அவளது புன்னகையில் மயங்கிய காவலர்கள், “இவள் மேனகையைவிட மிக அழகாக இருக்கிறாளே’ என்று அவளது அழகை ரசித்தபடி உள்ளே செல்ல அனுமதித்தனர்.

அங்கே மேனகையின் நடனத்தை ரசித்துக்கொண்டிருந்த இந்திரன், சபையினுள்ளே வந்தமர்ந்த அருணாதேவியைக் கண்டு, அவள் அழகில் நிலை குலைந்தான்.

நடனம் முடிந்ததும் எல்லாரும் சென்றுவிட, அருணாதேவியைப் போக விடாமல் அவள் முன்வந்து நின்றான். பெண்களை வசப்படுத்தும் கலையில் நிபுணனான இந்திரன், அவளைக் கட்டியணைத்தான். அதன் விளைவாக அழகான குழந்தை ஒன்று பிறந்தது.

(தேவலோகத்தில் இனக்கவர்ச்சிக்குக் கட்டுப்பட்டால் பத்து மாத கர்ப்பம் இல்லை.)

“மேனகையின் நடனத்தைக் காணும் ஆவலில் இங்கே வந்தேன். உண்மையில் நான் பெண்ணல்ல. சூரிய தேவனின் தேரோட்டியான அருணன். அழகிய பெண் வடிவில் வந்தது இப்போது வினையாகிவிட்டது. நாளை மீண்டும் நான் ஆணாகி தேரோட்டும் பணியைத் தொடரவேண்டும். அப்போது இது தாயில்லாத குழந்தையாகிவிடுமே. என் செய்வேன்?” என்று வருந்தினான் பெண்ணாக இருந்த அருணன்.

அதற்கு இந்திரன், “கவலைப்படாதே அருணாதேவி. இந்தக் குழந்தையை அகல்யாதேவியிடம் ஒப்படைத்துவிடு. அவள் வளர்த்துக்கொள்வாள்” என்று ஆலோசனை கூறினான்.

அதன்படியே அகல்யாதேவியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அருணாதேவி மீண்டும் அருணனாக மாறி சூரியலோகம் வந்தடைந்தான்.

மறுநாள் தேர் ஓட்டுவதற்கு வந்தான் அருணன். அவன் முகத்தில் ஏதோ கவலை சூழ்ந்திருப்பதைக் கண்ட சூரிய பகவான், “எங்கே நேற்று முழுவதும் உன்னைக் காணவில்லை?” என்று கனிவுடன் கேட்டார்.

அருணன், வெட்கத்துடன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் சொன்னான்.

“அப்படியா?” என்று வியந்த சூரியன், “நீ எடுத்த பெண் உருவத்தை நான் காணவேண்டுமே” என்று சொல்ல, வேறு வழியின்றி அருணன் மீண்டும் அருணாதேவியாக மாறினான்.

அவளது அழகில் மயங்கிய சூரியன் அருணாதேவியை நெருங்கி ஆலிங்கனம் செய்தார்.

இப்போது இன்னொரு குழந்தை அங்கே அழ ஆரம்பித்தது.

மீண்டும் ஆணாக மாறிய அருணன் சூரியனிடம், “தேவனே, இந்திரனும் நீங்களும் உணர்ச்சிவசப்பட்டதால், இப்பொழுது இரண்டு தாயில்லாத குழந்தைகள் அவதரித்துவிட்டன. இந்தக் குழந்தையையும் அகல்யா தேவியிடம் ஒப்படைத்துவிடுகிறேன்” என்று சொல்லி, அப்படியே ஒப்படைத்தான்.

கௌதம ரிஷியின் மனைவியான அகல்யா, இரு குழந்தைகளையும் வளர்த்துவந்தாள். இந்த நிலையில், அகல்யாதேவி தவம் மேற்கொள்ள விரும்பினாள்.

இந்திரனுக்கும் சூரியனுக்கும் மகனாக அவதரித்த பிள்ளைகளால் தன் மனைவியின் தவம் கெட்டுவிடக்கூடாது என்றெண்ணிய கௌதம ரிஷி, அதற்கு என்ன செய்வதென்று யோசித்தார்.

வனத்தில், குரங்கு முகமுடைய வனராஜன் ஒருவன் மகப்பேறுக்காக ஒற்றைக்காலில் நின்று நெடுங்காலம் தவம் செய்வதை அறிந்த கௌதம ரிஷி, அந்த இரு குழந்தைகளின் முகங்களையும் வானரவடிவத்தில் மாற்றி அவன்முன் சமர்ப்பித்தார். குழந்தைகள் அழும் குரலைக் கேட்டு தவம் கலைந்த வனராஜன், தன்னைப்போல முகம் கொண்ட இரு குழந்தைகளைக் கண்டு, இறைவன் கொடுத்த வரம் என்று அன்புடன் அரவணைத்து எடுத்துச் சென்றான்.

அந்த இரு குழந்தைகளும் கிஷ்கிந்தை என்ற கானகத்தில் வளர்ந்தன.

இந்திரனின் புதல்வன்தான் வாலி. சூரியனின் மகன்தான் சுக்ரீவன்.

ராமகாவியத்தில் இந்த இருவரும் சிறப்பான இடத்தைப் பெறுகிறார்கள்.

“அனுமனே! நீ என் மகன் சுக்ரீவனுக்கு என்றென்றும் துணையாக இருக்கவேண்டும். உன் ஞானம், பராக்கிரமம் அனைத்தும் அவனுக்கே பயன்படவேண்டும். இதுவே நான் எதிர்பார்க்கும் குருதட்சணை” என்று சூரியன் சொல்ல, அதை மனமார ஏற்றுக்கொண்டான் அனுமன்.

கல்வி, இசை, கலை, வேதங்கள் என அனைத்தையும் அனுமனுக்குக் கற்றுத்தந்தார் சூரியன்.

அனைத்தையும் கற்றுணர்ந்த அனுமன் “நவவியாகரண பண்டிதன்‘ என்ற பட்டமும் பெற விரும்பினான். ஆனால், ஒரு குறிப்பிட்ட வியாகரணத்தைக் கற்கவேண்டுமானால் குடும்பஸ்தனாக இருக்கவேண்டும் என்பது நியதி. ஆகவே, அனுமன் மணம் புரியவேண்டும்.

சூரியதேவன், நவவியாகரணத்தை முழுவதும் கற்றுக் கொடுக்க விரும்பினார். அதற்காக தன் மகள் சுவர்ச்சலாதேவியை தன் மாணவனுக்குத் திருமணம் முடித்துவைத்தார் என்கிறது சூரியபுராணம்.

பிரம்மச்சாரி என்று பெரும்பாலோர் போற்றும் அனுமனின் திருமணக்கோலத்தை, சென்னை- செங்கல்பட்டு சாலையில், தைலாவரம் என்னும் திருத்தலத்திலுள்ள ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர் கோவிலில் தரிசிக்கலாம். இங்கு மூலவராகசுமார் எட்டடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீஜெயவீர ஆஞ்சனேயர் எழுந்தருளியுள்ளார். இதே கோவிலில் தனிச்சந்நிதியில் உற்சவராக சுவர்ச்சலாதேவியுடன் பத்மபீடத்தில் தரிசனம் தருகிறார் ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர். நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம் ஏந்திய திருக்கோலத்தில், சுவர்ச்சலா சமேத சதுர்புஜ சுபமங்களவரத ஆஞ்சனேயர் என்ற திருநாமத்தில் பக்தர்கள் வேண்டுவதை அளித்து மகிழ்விக்கிறார்.

ஆக, அனுமனுக்கு குருவான சூரியனே மாமனாராகவும் ஆனார் என்கிறது புராணம்.

கல்யாண ஆஞ்சனேயர். நீங்கள் அறியாத தகவல்.

கல்யாண ஆஞ்சனேயர். நீங்கள் அறியாத தகவல்.வானிலே பறந்துசெல்லும் வல்லமை படைத்த அனுமன், அளப்பரிய ஆற்றல்கொண்ட சூரியதேவனிடம் கல்வி கற்க விரும்பினான். சூரிய பகவானும், அனுமன் வருங்காலத்தில் மக்களின் துன்பங்களைப் போக்கும் சக்தி கொண்டவன் என்பதையறிந்து, அனுமனை சீடனாக ஏற்றுக்கொண்டு ஒரு நிபந்தனையையும் விதித்தார்.

தனது தேரின் ஓட்டத்தை எக்காரணத்தைக் கொண்டும் ஒரு கணம்கூட நிறுத்த இயலாது என்றும், அனுமனது முகத்தைப் பார்த்துதான் தன்னால் உபதேசிக்க இயலும் என்றும் சொன்னார்.

அந்த நிபந்தனைக்கு உடன்பட்டு, சூரிய பகவானைப் பார்த்தபடி தேரின் ஓட்டத்திற்கேற்ப பின்புறமாக ஓடிக்கொண்டே கல்வி பயின்றான் அனுமன்.

தன் மாணவன் பின்னோக்கி ஓடி சிரமப்படுகிறானே என்று பரிதாபப்பட்டாலும், தன் தேரோட்டத்தை நிறுத்தினால் உலகமே ஸ்தம்பித்து கோடிக்கணக்கான உயிர்கள் துன்பப்படுமே என்ற கவலையும் சூரியன் மனதில் எழுந்தது.

ஒருசமயம்…

கற்புக்கரசியான நளாயினியின் கணவன், ஒரு முனிவர் சொன்ன அறிவுரைகளைக் கேட்காமல் தாசி வீடு சென்று உல்லாசமாக இருந்தார். கோபம்கொண்ட முனிவர், “நாளை சூரியன் உதிக்கும்போது நீ காலமாகக் கடவாய்” என்று சபித்துவிட்டார்.

இதையறிந்த நளாயினி, சூரியன் உதித்தால்தானே என் கணவர் மரணமடைவார் என்று, “சூரிய பகவானே, நாளை நீ உதிக்காதே” என்று ஆகாயத்தைப் பார்த்துக் கட்டளையிட்டாள். பதிவிரதையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டார் சூரியன்.

ஓயாது ஓடிக்கொண்டிருந்த சூரிய ரதம் ஒரே ஒருநாள் நின்றது. பூலோகம் செயலற்றுப் போனது.

ஜீவன்கள் துன்பப்பட்டன. உடனே தேவர்கள், நளாயினியை சமாதானப்படுத்தினர். சாபம் கொடுத்த முனிவரும் தன் சாபத்தை மாற்றிக்கொண்டு கானகம் சென்றார்.

இவ்வாறு சூரியனின் ரதம் நின்றதும் பல நிகழ்வுகள் நடந்தன.



சூரியனின் தேரோட்டியான அருணன், வெகுநாட்களாக தேவலோகம் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளைக் காண விருப்பம் கொண்டிருந்தான். இந்த ஒருநாள் விடுமுறையை அதற்குப் பயன்படுத்திக்கொள்ள எண்ணினான்.

அதே உருவத்தில் இந்திர லோகத்திற்கு சென்றால் அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த அருணன், அழகான அப்சரக்கன்னி வடிவெடுத்து இந்திரலோகம் சென்றான். அங்கே காவலர்கள் அவனைத் தடுத்தார்கள்.

“நான் மேனகையின் தோழியான அருணாதேவி. மேனகைக்கு ஒப்பனை செய்பவள். இன்று அவசரத்தில் சரியாக ஒப்பனை செய்யவில்லை. அதனால் முகம் களையிழந்துவிடும்” என்று காவலர்களைப் பார்த்து புன்னகைத்தாள் அருணாதேவி.

அவளது புன்னகையில் மயங்கிய காவலர்கள், “இவள் மேனகையைவிட மிக அழகாக இருக்கிறாளே’ என்று அவளது அழகை ரசித்தபடி உள்ளே செல்ல அனுமதித்தனர்.

அங்கே மேனகையின் நடனத்தை ரசித்துக்கொண்டிருந்த இந்திரன், சபையினுள்ளே வந்தமர்ந்த அருணாதேவியைக் கண்டு, அவள் அழகில் நிலை குலைந்தான்.

நடனம் முடிந்ததும் எல்லாரும் சென்றுவிட, அருணாதேவியைப் போக விடாமல் அவள் முன்வந்து நின்றான். பெண்களை வசப்படுத்தும் கலையில் நிபுணனான இந்திரன், அவளைக் கட்டியணைத்தான். அதன் விளைவாக அழகான குழந்தை ஒன்று பிறந்தது.

(தேவலோகத்தில் இனக்கவர்ச்சிக்குக் கட்டுப்பட்டால் பத்து மாத கர்ப்பம் இல்லை.)

“மேனகையின் நடனத்தைக் காணும் ஆவலில் இங்கே வந்தேன். உண்மையில் நான் பெண்ணல்ல. சூரிய தேவனின் தேரோட்டியான அருணன். அழகிய பெண் வடிவில் வந்தது இப்போது வினையாகிவிட்டது. நாளை மீண்டும் நான் ஆணாகி தேரோட்டும் பணியைத் தொடரவேண்டும். அப்போது இது தாயில்லாத குழந்தையாகிவிடுமே. என் செய்வேன்?” என்று வருந்தினான் பெண்ணாக இருந்த அருணன்.

அதற்கு இந்திரன், “கவலைப்படாதே அருணாதேவி. இந்தக் குழந்தையை அகல்யாதேவியிடம் ஒப்படைத்துவிடு. அவள் வளர்த்துக்கொள்வாள்” என்று ஆலோசனை கூறினான்.

அதன்படியே அகல்யாதேவியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அருணாதேவி மீண்டும் அருணனாக மாறி சூரியலோகம் வந்தடைந்தான்.

மறுநாள் தேர் ஓட்டுவதற்கு வந்தான் அருணன். அவன் முகத்தில் ஏதோ கவலை சூழ்ந்திருப்பதைக் கண்ட சூரிய பகவான், “எங்கே நேற்று முழுவதும் உன்னைக் காணவில்லை?” என்று கனிவுடன் கேட்டார்.

அருணன், வெட்கத்துடன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் சொன்னான்.

“அப்படியா?” என்று வியந்த சூரியன், “நீ எடுத்த பெண் உருவத்தை நான் காணவேண்டுமே” என்று சொல்ல, வேறு வழியின்றி அருணன் மீண்டும் அருணாதேவியாக மாறினான்.

அவளது அழகில் மயங்கிய சூரியன் அருணாதேவியை நெருங்கி ஆலிங்கனம் செய்தார்.

இப்போது இன்னொரு குழந்தை அங்கே அழ ஆரம்பித்தது.

மீண்டும் ஆணாக மாறிய அருணன் சூரியனிடம், “தேவனே, இந்திரனும் நீங்களும் உணர்ச்சிவசப்பட்டதால், இப்பொழுது இரண்டு தாயில்லாத குழந்தைகள் அவதரித்துவிட்டன. இந்தக் குழந்தையையும் அகல்யா தேவியிடம் ஒப்படைத்துவிடுகிறேன்” என்று சொல்லி, அப்படியே ஒப்படைத்தான்.

கௌதம ரிஷியின் மனைவியான அகல்யா, இரு குழந்தைகளையும் வளர்த்துவந்தாள். இந்த நிலையில், அகல்யாதேவி தவம் மேற்கொள்ள விரும்பினாள்.

இந்திரனுக்கும் சூரியனுக்கும் மகனாக அவதரித்த பிள்ளைகளால் தன் மனைவியின் தவம் கெட்டுவிடக்கூடாது என்றெண்ணிய கௌதம ரிஷி, அதற்கு என்ன செய்வதென்று யோசித்தார்.

வனத்தில், குரங்கு முகமுடைய வனராஜன் ஒருவன் மகப்பேறுக்காக ஒற்றைக்காலில் நின்று நெடுங்காலம் தவம் செய்வதை அறிந்த கௌதம ரிஷி, அந்த இரு குழந்தைகளின் முகங்களையும் வானரவடிவத்தில் மாற்றி அவன்முன் சமர்ப்பித்தார். குழந்தைகள் அழும் குரலைக் கேட்டு தவம் கலைந்த வனராஜன், தன்னைப்போல முகம் கொண்ட இரு குழந்தைகளைக் கண்டு, இறைவன் கொடுத்த வரம் என்று அன்புடன் அரவணைத்து எடுத்துச் சென்றான்.

அந்த இரு குழந்தைகளும் கிஷ்கிந்தை என்ற கானகத்தில் வளர்ந்தன.

இந்திரனின் புதல்வன்தான் வாலி. சூரியனின் மகன்தான் சுக்ரீவன்.

ராமகாவியத்தில் இந்த இருவரும் சிறப்பான இடத்தைப் பெறுகிறார்கள்.

“அனுமனே! நீ என் மகன் சுக்ரீவனுக்கு என்றென்றும் துணையாக இருக்கவேண்டும். உன் ஞானம், பராக்கிரமம் அனைத்தும் அவனுக்கே பயன்படவேண்டும். இதுவே நான் எதிர்பார்க்கும் குருதட்சணை” என்று சூரியன் சொல்ல, அதை மனமார ஏற்றுக்கொண்டான் அனுமன்.

கல்வி, இசை, கலை, வேதங்கள் என அனைத்தையும் அனுமனுக்குக் கற்றுத்தந்தார் சூரியன்.

அனைத்தையும் கற்றுணர்ந்த அனுமன் “நவவியாகரண பண்டிதன்‘ என்ற பட்டமும் பெற விரும்பினான். ஆனால், ஒரு குறிப்பிட்ட வியாகரணத்தைக் கற்கவேண்டுமானால் குடும்பஸ்தனாக இருக்கவேண்டும் என்பது நியதி. ஆகவே, அனுமன் மணம் புரியவேண்டும்.

சூரியதேவன், நவவியாகரணத்தை முழுவதும் கற்றுக் கொடுக்க விரும்பினார். அதற்காக தன் மகள் சுவர்ச்சலாதேவியை தன் மாணவனுக்குத் திருமணம் முடித்துவைத்தார் என்கிறது சூரியபுராணம்.

பிரம்மச்சாரி என்று பெரும்பாலோர் போற்றும் அனுமனின் திருமணக்கோலத்தை, சென்னை- செங்கல்பட்டு சாலையில், தைலாவரம் என்னும் திருத்தலத்திலுள்ள ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர் கோவிலில் தரிசிக்கலாம். இங்கு மூலவராகசுமார் எட்டடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீஜெயவீர ஆஞ்சனேயர் எழுந்தருளியுள்ளார். இதே கோவிலில் தனிச்சந்நிதியில் உற்சவராக சுவர்ச்சலாதேவியுடன் பத்மபீடத்தில் தரிசனம் தருகிறார் ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர். நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம் ஏந்திய திருக்கோலத்தில், சுவர்ச்சலா சமேத சதுர்புஜ சுபமங்களவரத ஆஞ்சனேயர் என்ற திருநாமத்தில் பக்தர்கள் வேண்டுவதை அளித்து மகிழ்விக்கிறார்.

ஆக, அனுமனுக்கு குருவான சூரியனே மாமனாராகவும் ஆனார் என்கிறது புராணம்.

28 December 2016

லக்ஷ்மி பூஜை செய்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யமும் கிட்டும்.



லக்ஷ்மி பூஜை செய்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யமும் கிட்டும்.


 வெள்ளிகிழமைகளில் நேரம் இருப்பவர்கள் இப்பூஜையை செய்து பலன் அடையலாம். இதற்கு வேண்டிய பொருட்கள்:
குத்து விளக்கு - ஒன்று
உதிர்த்த மல்லிகை மற்றும் சாமந்தி பூக்கள் - ஒரு சிறு பாத்திரத்தில்
பால் - ஒரு கிண்ணம்(சுத்தமான வெள்ளி கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளலாம்) பழங்கள் - வாழை, எந்த பழம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
தண்ணீர் - ஒரு கிண்ணம்
குங்குமம் - இடுவதற்கு
சந்தனம்/மஞ்சள் - இடுவதற்கு
பெரிய தாம்பாளம் - ஒன்று
லக்ஷ்மி உருவம் பதித்த வெள்ளி தகடு - அவரவர்கள் வசதிக்கேற்ப வெண்கலத்திலும் சிறிய மகா லக்ஷ்மி விக்ரகாங்கள் கிடைக்கின்றன
சர்க்கரை பொங்கல் - நெய்வேத்யம் செய்ய
முளை கட்டிய கருப்பு கொண்டாய் கடலை - (பூஜைக்கு முன் நாள் காலையிலே கடலைகளை ஊற வைத்து விடுங்கள்)
பூஜை அன்று பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து கோலம் இடுங்கள்.
குத்து விளக்குடன் லக்ஷ்மி தகடை சிறிய நூலால் கட்டிவிடுங்கள். மாட்டுவதற்கு விளிம்பு இருந்தால் குத்து விளக்கில் மாட்டிவிடலாம். குத்து விளக்கை தாம்பாளத்தில் வைத்து மஞ்சள் குங்குமம் இடுங்கள். இப்போது நெய்வேத்யம் செய்ய பால், தண்ணீர், பொங்கல், பழங்கள், கடலைகளை தயாராகி வைத்துவிடுங்கள். ஐந்து முக விளக்கை ஏற்றுங்கள். நெய்யினால் கூட விளக்கு ஏற்றலாம். பூஜையை மலர்களை வைத்து ஆரம்பிக்கலாம். லக்ஷ்மி அஷ்டோத்திர மந்திரத்தை முழுவதுமாக மலர்களை கடவுளுக்கு அர்ச்சனை செய்துகொண்டே
மனம் ஒன்றி படியுங்கள். படித்து முடித்தவுடன், சகல ஐஸ்வர்யமும் கிட்ட கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். தீர்த்தம் கொண்டு சர்க்கரை பொங்கல், பழங்கள், பால் மற்றும் கொண்டாய் கடலைகளை கடவுளுக்கு நெய்வேத்யம் செய்யுங்கள். பின் ஒரு புது துணியில் முளை விட்ட கடலைகளை கட்டி வெற்றிலை பாக்குடன் வைத்து, நெய்வேத்யம் செய்த சர்க்கரை பொங்கல் சேர்த்து சுமங்கலிகளுக்கு கொடுக்கலாம். இவ்வாறு செய்து வர, மகா லக்ஷ்மி நம் வீடு தேடி வருவாள்.
முளை கட்டிய கடலைகள், சகல சௌபாக்ய வாழ்க்கையின் நம்பிக்கையாக வழங்கப்பட்டு வருகிறது.


27 December 2016

குலதெய்வங்கள் என்றால் என்ன...

குலதெய்வங்கள் என்றால் என்ன...?

அவர்களின் பெருமை என்ன...?

குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?

- சற்று ஒரு பார்வை...

குலதெய்வம்... 
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.

குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.

மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும்.

சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

அதன் சக்தியை அளவிடமுடியாது...

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள்

*குலதெய்வங்கள்*

என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.

இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது..?

நம் முன்னோர்கள்...

அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.

இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.

அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...

இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்...

இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!

நாம் அங்கே போய் நின்று...

அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக் கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்!...

விஞ்ஞான முறையில் யோசித்தால்...

ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே...

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.

இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.

இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது.

தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.

தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.

ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...

இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்...

பிறக்கின்றது.

என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.

ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது.

பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.

ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன.

அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது...

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து...

இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு...

தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசு களாக்கினார்கள்...

பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...

பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...

ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக் கிறதாம்.

எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...

அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...

புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...

திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...

அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.

இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...

குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி

(குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.

அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.
அக்கோவிலுக்கு உதவுங்கள்..

பஞ்ச கற்பூர ஆரத்தி

பஞ்ச கற்பூர ஆரத்தி

ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே ஸமேகமான் காம காமாய மஹ்யம் ! காமேஸ்வரோ வைஸ்ரவனோத தாது ! குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம:

மந்த்ர புஷ்பம்

யோ பாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜவான் பசுமான் பவதி எ ஏவம் வேத ஆயதனம் வேத ஆயதனவான் பவதி

ஓம் வேதாதௌஸ்வர : ப்ரோக்தோ வேதாந்தேச ப்ரகடித : தஸ்ய ப்ரக்ருதி நஸ்ய:ய: பரஸ்ஸ மஹேஸ்வர

ஓம் கௌரி மிமாய ஸலிலானி தக்ஷத்யேகபதீ த்விபதிஸா சதுஷ்பதீ அஷ்டாபதி நவபதி பபூஷஷி க்ஷரா பரமே வ்யோ மன்

சதுர்வேதம்

ஓம் அக்னி மீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம்ருத் விஜம் ஹோதாரம் ரத்னதாதமம்

ஓம் இஷேத்வோர்ஜேத்வா வாயவஸ்ஸத்தோபாய வஸ்த்த தேவோ வஸ்ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்ட்டதமாய கர்மணே

ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஓம்சந்ரோதே வீரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோரபிஸ்ரவந்து ந:

க்ருஹ்ய சூத்ரம்

ஓம் அதோதோ தர்ச பூர்ணமா ஸவ்யாக்யா ஸ்யாமஹ ப்ராதர் அக்னிஹோத்ரம் ஹுத்வா அன்ய மாஹம்ருணீயம் ம்ருண்ய அக்னே நன்வா ததாதி நஹ்ஸ்யோன்ய மக்னிம் ப்ரணயதி

இதிகாச புராணம்

ஓம் ஆஜ்யம் புருஷ மீசானம் புருஹுதம் புரஷ்க்ருதம்
பரமேகாக்ஷரம் ப்ரும்ம வ்யக்தா வ்யக்தம் சநாதனம்

ஸ்வஸ்தி வாசகம்

ஓம் ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தஸ்வா; ஸ்வஸ்திந: புஷா விஸ்வ வேதா
ஸ்வஸ்திநதார்ச்யோ அரிஷ்டநேமி: ஸ்வஸ்தினோ ப்ருஹஸ்பதிர் தாதது:

பஞ்சாட்சர ஸ்தோத்திரம்

ஓம் சிவலிங்கம்மணிஸ்ஸாக்ஷõது மந்த்ர: பஞ்சாட்சர சுத:
பூதரே ஒளஷதம் பும் சாந் த்ரிவிதம் முக்தி காரணம்

சிவஞான போதம்

ஓம் ஸ்த்ரிபும் நபும்சகா தத்வாது ஜகத: கார்ய தர்ஸனாது
அஸ்தி கர்த்தா சஹ்ருதவைதது ஸ்ருஜத்யஸ்மாத ப்ரபுர் ஹர:

தலமான்மியம்

விஸ்வஞ்ஞானம் சிவஞ்ஞானம் சர்வக்ஞானப் ரதாயகம்
ஆனந்த மயஞ்ஞானம் ஞானமூர்த்திம் சிவம் பஜே
ஞானசக்திம் ப்ராணசக்திம் சர்வ சக்திப் ரகாசிநீம்
சக்திசித் வியாபிநீம் தேவீம் ஞானாம்பிகாம் சிவாம் பஜே

பஞ்சாங்க ச்ரவணம்

திசேச்ச ச்ரியமாப்னோ தீவாராதாயுஷ்ய வர்த்தனம்
நட்சத்ராது ஹரதே பாபம் யோகாது ரோக நிவாரணம்
கரணாது கார்ய சித்திஞ்ச பஞ்சாங்கம் பலமுத்தமம்
வியோம வியாபி பரசிவ ப்ரம்மாத்மகம் மானசம்
ச்ருஷ்டி ஸ்திதி அதிகார போகம் அமலம் பாவாத்மகம் வாசிகம்
லோக÷க்ஷம சுரட்சண பாலனம் ஸ்வாபேட்ச சித்தா ரச்ரிதம்
வந்தே சுந்தர பரசிவ குடிலம் சித்தேச்வரம் சாச்வதம்

வாழ்த்து

ஞானநன் மறைகள் வாழ்க நற்றவம் வேள்வி வாழ்க
ஞானநல் லன்னை யோடும் ஞானநல் மூர்த்தி வாழ்க
ஊனமில் லரசு மன்னி உயர்தனிச் செங்கோ லோச்ச
வானநல் வளங்கள் ஆர்ந்து வையகம் வாழ்க ! வாழ்க !

பஞ்ச கற்பூர ஆரத்தி

ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே ஸமேகமான் காம காமாய மஹ்யம் ! காமேஸ்வரோ வைஸ்ரவனோத தாது ! குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம:

மந்த்ர புஷ்பம்

யோ பாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜவான் பசுமான் பவதி எ ஏவம் வேத ஆயதனம் வேத ஆயதனவான் பவதி

ஓம் வேதாதௌஸ்வர : ப்ரோக்தோ வேதாந்தேச ப்ரகடித : தஸ்ய ப்ரக்ருதி நஸ்ய:ய: பரஸ்ஸ மஹேஸ்வர

ஓம் கௌரி மிமாய ஸலிலானி தக்ஷத்யேகபதீ த்விபதிஸா சதுஷ்பதீ அஷ்டாபதி நவபதி பபூஷஷி க்ஷரா பரமே வ்யோ மன்

சதுர்வேதம்

ஓம் அக்னி மீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம்ருத் விஜம் ஹோதாரம் ரத்னதாதமம்

ஓம் இஷேத்வோர்ஜேத்வா வாயவஸ்ஸத்தோபாய வஸ்த்த தேவோ வஸ்ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்ட்டதமாய கர்மணே

ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஓம்சந்ரோதே வீரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோரபிஸ்ரவந்து ந:

க்ருஹ்ய சூத்ரம்

ஓம் அதோதோ தர்ச பூர்ணமா ஸவ்யாக்யா ஸ்யாமஹ ப்ராதர் அக்னிஹோத்ரம் ஹுத்வா அன்ய மாஹம்ருணீயம் ம்ருண்ய அக்னே நன்வா ததாதி நஹ்ஸ்யோன்ய மக்னிம் ப்ரணயதி

இதிகாச புராணம்

ஓம் ஆஜ்யம் புருஷ மீசானம் புருஹுதம் புரஷ்க்ருதம்
பரமேகாக்ஷரம் ப்ரும்ம வ்யக்தா வ்யக்தம் சநாதனம்

ஸ்வஸ்தி வாசகம்

ஓம் ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தஸ்வா; ஸ்வஸ்திந: புஷா விஸ்வ வேதா
ஸ்வஸ்திநதார்ச்யோ அரிஷ்டநேமி: ஸ்வஸ்தினோ ப்ருஹஸ்பதிர் தாதது:

பஞ்சாட்சர ஸ்தோத்திரம்

ஓம் சிவலிங்கம்மணிஸ்ஸாக்ஷõது மந்த்ர: பஞ்சாட்சர சுத:
பூதரே ஒளஷதம் பும் சாந் த்ரிவிதம் முக்தி காரணம்

சிவஞான போதம்

ஓம் ஸ்த்ரிபும் நபும்சகா தத்வாது ஜகத: கார்ய தர்ஸனாது
அஸ்தி கர்த்தா சஹ்ருதவைதது ஸ்ருஜத்யஸ்மாத ப்ரபுர் ஹர:

தலமான்மியம்

விஸ்வஞ்ஞானம் சிவஞ்ஞானம் சர்வக்ஞானப் ரதாயகம்
ஆனந்த மயஞ்ஞானம் ஞானமூர்த்திம் சிவம் பஜே
ஞானசக்திம் ப்ராணசக்திம் சர்வ சக்திப் ரகாசிநீம்
சக்திசித் வியாபிநீம் தேவீம் ஞானாம்பிகாம் சிவாம் பஜே

பஞ்சாங்க ச்ரவணம்

திசேச்ச ச்ரியமாப்னோ தீவாராதாயுஷ்ய வர்த்தனம்
நட்சத்ராது ஹரதே பாபம் யோகாது ரோக நிவாரணம்
கரணாது கார்ய சித்திஞ்ச பஞ்சாங்கம் பலமுத்தமம்
வியோம வியாபி பரசிவ ப்ரம்மாத்மகம் மானசம்
ச்ருஷ்டி ஸ்திதி அதிகார போகம் அமலம் பாவாத்மகம் வாசிகம்
லோக÷க்ஷம சுரட்சண பாலனம் ஸ்வாபேட்ச சித்தா ரச்ரிதம்
வந்தே சுந்தர பரசிவ குடிலம் சித்தேச்வரம் சாச்வதம்

வாழ்த்து

ஞானநன் மறைகள் வாழ்க நற்றவம் வேள்வி வாழ்க
ஞானநல் லன்னை யோடும் ஞானநல் மூர்த்தி வாழ்க
ஊனமில் லரசு மன்னி உயர்தனிச் செங்கோ லோச்ச
வானநல் வளங்கள் ஆர்ந்து வையகம் வாழ்க ! வா

கணபதி மந்திரங்கள்

!

 கணபதி மந்திரங்கள்

1. ஸ்ரீ வல்லப மஹா கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் கம் கணபதயே வர
வரத சர்வ ஜனம்மே
வசமானய ஸ்வாஹா

2. தன ஆகர்ஷண கணபதி மந்திரம்

ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே
வரவரத மம தன
தான்ய சம்ருத்திம் தேஹி
தேஹி ஸ்வாஹா

3. வ்ராத கணபதி மந்திரம்

ஓம் நமோ வ்ராத பதயே
நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து
லம்போதராய
ஏகதந்தாய விக்னவிநாசினே
சிவ சுதாய
வரத மூர்த்தயே நமோ நம:

4. கணபதி காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய
தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்

5. ஸ்ரீ லட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

6. ஸர்வ வித்யா கணபதி மந்திரம்

தினமும் காலையில் 108 முறை சொல்ல கல்வி, அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.

ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ
வித்யாம் தேஹி ஸ்வாஹா

1. ஸ்ரீ வல்லப மஹா கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் கம் கணபதயே வர
வரத சர்வ ஜனம்மே
வசமானய ஸ்வாஹா

2. தன ஆகர்ஷண கணபதி மந்திரம்

ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே
வரவரத மம தன
தான்ய சம்ருத்திம் தேஹி
தேஹி ஸ்வாஹா

3. வ்ராத கணபதி மந்திரம்

ஓம் நமோ வ்ராத பதயே
நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து
லம்போதராய
ஏகதந்தாய விக்னவிநாசினே
சிவ சுதாய
வரத மூர்த்தயே நமோ நம:

4. கணபதி காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய
தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்

5. ஸ்ரீ லட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

6. ஸர்வ வித்யா கணபதி மந்திரம்

தினமும் காலையில் 108 முறை சொல்ல கல்வி, அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.

ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ
வித்யாம் தேஹி ஸ்வாஹா

கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருக

கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருக
கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருக

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை
ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை
சர்வ தாரித்திரிய நிவாரணாயை
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா:

ஸ்ரீ மஹாலெட்சுமி மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஸ்ரீரியை நம

காலை மாலை 108 முறை சொல்லி வந்தால் விரைவில் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

மனோவியாதி, விரோதிகளால் அச்சம் நீங்கி மனோதைரியம் பெற

ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
ஸூகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம்
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னி தத்ஸ்வ !!

எடுத்த காரியத்தில் வெற்றி பெற

ராமதூத மஹாதீர ருத்ர வீர்ய சமுத்பவ
அஞ்ஜநாகர்ப்ப சம்பூத, வாயு புத்ரா நமோஸ்துதே

(திருமண தடைநீங்கி திருமணம் நடைபெற தினமும் பெண்கள் கூறவேண்டியது. இதை தினமும் 108 முறை சொல்லவும்)

சர்வ மங்கள மாங்கல்யே சிவே
சர்வார்த்த சாதகே ! சரண்யே
த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே

இதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும்.

ஸ்ரீசுப்ரமண்யர்

(செவ்வாய்தோஷம் விலக தினமும் 108 முறை சொல்லவும்)

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்
மஹாமதிம் திவ்ய மயூர வாகனம்
ருத்ரஸ்ய ஸுனும் ஸூரசைன்ய நாதம்
குஹம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

சகல காரியங்களும் ஸித்திக்கும் ஸ்ரீவித்யா மகா மந்திரம்

ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
சர்வாபீஷ்டம சாதய சாதய ஆபதோ நாசய நாசய
சம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ

சகல தேவதா ஸ்ரீகாயத்ரி மந்திரங்கள்
ஸ்ரீ காயத்ரி கஷ்டங்கள் விலக

ஓம்
பூர்ப் புவஸ்ஸுவ
தத்ச விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீம ஹி
தியோ யோந ப்ரசோதயாத்

வில்வ மரவழிபாட்டு மந்திரம்

வில்வ மரவழிபாட்டு மந்திரம்

வில்வ மரத்தை தரிசனம் செய்யும்போது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி வழிபட இறை அருள் கிட்டும்

தர்சனம் பில்வ வ்ருக்ஷஸ்ய
ஸ்பர்சனம் பாபநாசனம்
அகோர பாபஸம் ஹாரம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்.

செல்வம் பெருக மந்திரம்
108 முறை சொல்லவும்

லக்ஷ்மீ-பதே கமல-நாப
ஸுரேஸ விஷ்ணோ
வைகுண்ட க்ருஷ்ண
மதுஸூதன புஷ்கராக்ஷ
ப்ரஹ்மண்ய கேஸவ
ஜனார்தன வாஸுதேவ
லக்ஷ்மீ - ந்ருஸிம்ஹ
மம தேஹி கரா வலம்பம்.

மேற்கண்ட மந்திரத்தை லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டு ஜெபிக்கவும்.

மாலையில் தீபம் ஏற்றும் போது கூற வேண்டிய மந்திரம்

மாலை நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றும் போது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி விளக்கேற்றினால் சகல சுகமும் உண்டாகும்.

சிவம் பவது கல்யாணம்
ஆயுராரோக்ய வர்த்தனம்
மம: துக்க வினாசாய
ஸந்த்யா  தீபம் நமோ நம:

கெட்ட கனவு பரிகார மந்திரம்

நீங்கள் தூங்கும் போது கெட்ட சொப்பனங்கள் ஏற்பட்டால் கீழ்க்கண்ட மந்திரத்தை 5 முறை கூறினால் பரிகாரம் ஏற்படும்.

ஓம் ஸ்ரீ கோவிந்தன நமஹ

வேலை கிடைக்க மந்திரம்

ஸ்ரீ தேவி ஹி அம்ருதோத்
பூதா-கமாலா-சந்த்ரசேபாநா
விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச
வராஹோஹச்ச ஸார்ங்கிணீ
ஹரி-ப்ரியா தேவ-தேவி
மஹாலக்ஷ்மீ ச ஸுந்தரீ

ஸ்ரீலக்ஷ்மி தாயை வழிபட்டு மேற்கொண்ட மந்திரத்தை 21 முறை ஜெபிக்கவும்.

நாளும், கோளும் நல்லன ஆக மந்திர்ம

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
கேளாய் நங்கிளை கிளைக்குங் கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே.

சிவபெருமானையும், அம்பாளையும், வழிபட்டு 5முறை மேற்கண்ட மந்திரத்தை ஜெபிக்கவும்.

சுப மங்களங்கள் உண்டாக மந்திரம்

சுப மங்களங்கள் உண்டாக மந்திரம்

பிரம்மா முராரி:
த்ரிபுராந்தகஸ்ச
பாநுஸ்ஸீ பூமிஸுதோ புதஸ்ச
குருஸ்ச ஸுக்ர:
ஸநி-ராகு-கேதவ:
குர்வந்து ஸர்வே
மம ஸுப்ரபாதம்

மேற்கண்ட மந்திரத்தை காலை வேளையில் 21 முறை ஜெபித்து வர சுப மங்களங்கள் ஏற்படும்.

விதியை வெல்ல மந்திரம்

தங்குவர் கற்பகத் தாருவின் நீழிலில் தாயரின்றி
மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை மால் வரையும்
பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

ஞானமூர்த்தி நாள் வழிபாட்டு மந்திரங்கள்

அஷ்ட புஷ்பாஞ்சலி

ஓம் பவாய தேவாய நம:
ஓம் பவஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:
ஓம் ஸர்வாய தேவாய நம:
ஓம் ஸர்வஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:
ஓம் ஈசானாய தேவாய நம:
ஓம் ஈசானஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:
ஓம் பசுபதயே தேவாய நம:
ஓம் பசுபதஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:
ஓம் ருத்ராய தேவாய நம:
ஓம் ருத்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:
ஓம் உக்ராய தேவாய நம:
ஓம் உக்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:
ஓம் பீமாய தேவாய நம:
ஓம் பீமஸ்ய தேவஸ்ய பதன்யை நம:
ஓம் மஹதே தேவாய நம:
ஓம் மஹாதேவஸ்ய பத்ன்யை நம:

அஷ்ட அர்க்கியம்

ஓம் பவம் தேவம் தர்ப்பயாமி
ஓம் பவஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் ஸர்வம் தேவம் தர்ப்பயாமி
ஓம் ஸர்வஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் ஈசானம் தேவம் தர்ப்பயாமி
ஓம் ஈசானஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் பசுபதயே தேவம் தர்ப்பயாமி
ஓம் பசுபதஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் ருத்ரம் தேவம் தர்ப்பயாமி
ஓம் ருத்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் உக்ரம் தேவம் தர்ப்பயாமி
ஓம் உக்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் பீமம் தேவம் தர்ப்பயாமி
ஓம் பீமஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் மஹதே தேவம் தர்ப்பயாமி
ஓம் மஹா தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா

26 December 2016

செவ்வாய் தோஷம்:

செவ்வாய் தோஷம்:
செவ்வாய் தோஷ பாதிப்பு உடையவர்கள் மண்கலயத்தில் கும்பம் வைத்து தேங்காய்க்கு பதிலாக வாழை ப10வை வைத்து, மல்லிகை பூவை கொண்டு 1008 உரு “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்” என்று செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் ஜெபித்து (7 வாரம்) கடல் மற்றும் ஆற்று தண்ணீரில் வாழை பூவை, விட்டு விட உடனே செவ்வாய் தோஷம் விலகும்.
கெட்ட கனவு, சகுன பாதிப்பில் இருந்து விடுபட:
எந்த கிழமையாக இருந்தாலும் அன்ற சூரிய உதயத்திற்கு முன்பு வாசி யோகத்தில் “ஓம் சிவசிவ ஓம்”மனதார ஜெபித்து வெண்ப10சணியை உணவில் சேர்த்து சாப்பிட உடனே தோஷம் நீங்கும்.
காரிய வெற்றி ஏற்பட:
ஒரு 1 அடி நீளம் 1 அடி அகலம் உள்ள வெள்ளை நிற அட்டையில் பச்சை நிறத்தால் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து அதில் மேற்படி மந்திரம் எழுதி கிழக்கு திசையில் உங்கள் தரையில் உட்காரும் பொழுது நெத்தி பொட்டிற்கு எதிரில் ஒட்டி
இதனை பார்த்து மனதார “ஓம் சிவசிவ ஓம்” என்று ஜெபித்து வர எண்ணிய நியாயமான எண்ணங்கள் படிப்படியாக நடைபெறும்.
குழந்தைகளை திருத்த:
இரவில் குழந்தைகள் ஆழ்ந்து உறங்கிய பின்பு அவர்கள் தலைமாட்டில் அமர்ந்து அவர்கள் தலையில் கை வைத்து “ஓம் சிவசிவ ஓம்” என்று மனதார ஜெபித்து உரு ஏற்ற படிப்படியாக குழந்தைகள் நமது சொல்படி கேட்டு நடக்க ஆரம்பிப்பார்கள்.
ராகு திசையின் பாதிப்பு நீங்க:
பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயரை வணங்கி அவரை 18 சுற்றுகள் அப்பிரதட்சணமாக சுற்றி அங்கு “ஓம் சிவசிவ ஓம்” என்று ஜெபித்து வர (தினமும்) ராகு திசையில் கெடுபலன் விலகும்.
கேது திசை பாதிப்பு நீங்க:
தனியாக உள்ள விநாயகர் கோவிலில் அப்பிரதட்சணமாக “ஓம் அரி ஒம்”;      சுற்றுகள் சுற்றி தினமும் ஜெபித்து வர வேண்டும். யானையை கொண்டு நமது முகத்தில் காற்றை ஊதிவிட செய்ய வேண்டும். கேது திசை கெடுபலன் குறையும்.
செல்வம் சேர (நியாயமான முறையில்):
தாமரை தண்டு திரியை பன்னீரில் நனைத்து காயவைத்து கன்னி மூலையில் விளக்கு ஏற்றி தீபம் வடக்கு நோக்கி எரிய வேண்டும். இதன் முன்பு பட்டு துணியில் அமர்ந்து “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்” என்று மனதார 1008 உரு தினசரி 90 நாட்கள் ஜெபித்து வர படிப்படியாக செல்வம் சேரும்.
மேலே கூறியபடி இன்னும் எத்தனையோ முறைகளில் தந்திரமாக மந்திரங்களை மாற்றி ஜெபித்து நம்முடைய தடைகளை நீக்கி வாழ்வில் வளமாக வாழலாம்


பஞ்சபூதநவகிரகதவம்

பஞ்சபூதநவகிரகதவம்
சிறந்த சக்தி வாய்ந்த பலரும் அறியாத ஒன்று தான் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் பஞ்சபூத நவகிரக தவம்.நாம் பஞ்சபூத நவகிரகத் தவத்தை வாரத்திற்கு ஒருமுறையோ, மாதத்திற்கு ஒரு முறையோ தவறாமல் செய்துகொண்டிருப்பது மிகவும் நல்லது. முக்கியமாக- சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரு நேர்கோட்டில் வரும்போது சக்தி அதிகமாக இருக்கும். எனவே அந்த நேரத்திலே இந்தத் தவத்தை தொடர்ந்து செய்து பழகிக்கொள்ள வேண்டும். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பஞ்சபூத நவகிரகத் தவத்தைமுக்கியமாகச் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்தால் கோள்களால் வரக்கூடிய மாற்றங்கள் நமக்கு நன்மையை மட்டுமே தரும். கெடுதல் வருவதற்கு இடமே இல்லை. அதற்காகத்தான் பஞ்சபூத நவகிரகத் தவம் செய்யவேண்டும்.
பஞ்சபூத நவகிரக தவம்:
இறையாற்றலின் தத்துவத்தை விஞ்ஞானப்பூர்வமாக விளக்கி, குண்டலினி உள்ளிட்ட பல்வேறு யோகங்களை எளிமைப்படுத்தி பலருக்கும் கற்பித்து, வாழ்நாளெல்லாம் மனிதகுல நன்மைக்கு பெருந்தொண்டாற்றியவர் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி.நவகிரகங்களிலிருந்து வரும் காந்த அலைகளை ஏற்புடையதாகவும், தீமை செய்யும் அலைகளை நல்லவையாகவும் மாற்றும் சூட்சும வித்தையையும் "பஞ்சபூத நவகிரகத் தவம்' என்னும் தியான முறையாகஅவர் வடிவமைத்துத் தந்துள்ளார்.உலகெங்குமுள்ள அவரது லட்சக்கணக்கான அடியவர்கள் இதைச் செய்து பயன்பெறுகின்றனர்.பஞ்சபூதங்களின்மீதும் நவகிரகங்களின்மீதும் மனதையும் அறிவையும் செலுத்தி தவம் செய்வதையே பஞ்சபூத நவகிரகத் தவம் என்கிறோம்.நட்சத
்திரங்கள்,கோள்களின் இயக்கத்தால் ஏற்படும் காந்த ஆற்றல் நிலவுலகில் வாழும் உயிர்களை பாதிக்கின்றன.குறிப்பாக மனிதர்களின் உயிருக்கும், உடலுக்கும், மனதிற்கும் நன்மை, தீமைகளை ஏற்படுத்துவதாய்
அமைகின்றன.மனித மனம் விரியும்பட்சத்தில், நமது வாழ்வில் மகிழ்ச்சியையும்
நன்மையையும் அள்ளித்தரும்.அப்படி முழு அறிவைப் பெற்ற நிலையில் மனமானது அமைதியையும் நிறைவையும் பெறும்.விரிந்த மனதும் தெளிந்த நுண்ணறிவும் வாழ்வில் வெற்றியை ஏற்படுத்தும்.
பஞ்சபூத தவம்:
பிரபஞ்சப் பொருட்கள் அனைத்தும் பஞ்சபூதங்களால் ஆனவை. நாமும் பஞ்சபூதங்களால் ஆனவர்கள்.1.பருவுடல் - நிலம்.2.ரத்தம் - நீர்.3.உடல் சூடு - நெருப்பு.4.மூச்சு - காற்று.5.உயிர் - ஆகாயம்.ஆகாயமே மற்ற பூதங்களிலும் மனிதர்களுக்குள்ளும் இருப்பதால், ஐந்து பூதங்களையும் பிரபஞ்சத்தையும்மனித மனதால் உணரமுடியும்.அந்த ஆகாயமே உயிராகவும் இருப்பதால் உயிர்க்கலப்பு எதனோடும் ஏற்பட முடியும்.நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் என்று ஒவ்வொரு பூதத்தின் பெருமை உணர்தல், உயிர்க் கலப்புப் பெறுதல், உற்பத்தி ரகசியம் தெரிந்துகொள்ளல், காப்புப் பெறுதல், பயன்கொள்ளல் என்பனவற்றை உணர்ந்து தியானித்தலே பஞ்சபூதத் தவம் எனப்படுகிறது.
நவகிரகத் தவம்:
அடுத்து நட்சத்திரம், கோள்களை நினைத்து நவகிரகத் தவம் செய்ய வேண்டும். சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன், செவ்வாய், வியாழன், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் ஒவ்வொன்றிலும் மனதைச் செலுத்தவேண்டும்
.ஒவ்வொரு கிரகத்தின் பெருமை, சூரியனைச் சுற்றி வரும் காலம், நிறம், நமது எந்த உடலுறுப்போடு தொடர்புள்ளது என்பவற்றைத் தெரிந்து தியானிக்க வேண்டும்.அந்த கிரகங்கள் நமக்கு செய்யக்கூடிய நன்மைகள், அந்த கிரகத்திலிருந்து வரக்கூடிய அலைகளை நாம் ஏற்றுப் பயன் கொள்ள வேண்டும்.அந்தந்த கிரகத்தினுடைய ரசாயன அமைப்பிற்குத் தக்கவாறும், மனிதர்களுடைய கருவமைப்பிற்குத் தக்கவாறும் கோள்களிலிருந்துவரும் அலைகளின் பாதிப்பு அமையும்.கிரகங்களிடம் நட்புணர்வோடு உயிர்க்கலப்பு பெறுவதால், அதனால் ஏற்படும் பாதிப்பு குறையும் என்பதையும், நன்மைகள் விளையும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
பஞ்சபூதத் தவம் செய்யும் முறை
முதலில் கீழுள்ள நான்கு வேண்டுதல்களை மும்மூன்று முறை சொல்லி தியானிக்கவும்.1. காப்பு: அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும்
வழிநடத்துவதாகவும் அமைவதாக.2. இடத்தூய்மை: நாம் அமர்ந்துள்ள இடத்தைச் சுற்றிலும் நல்ல தெய்வீக ஆற்றலே நிரம்பின.3. அருட்பேராற்றல் உடலிலே, உயிரிலே அலை அலையாகப் பாய்ந்து நிரம்புவதை உணர்கிறேன்.4. அன்னைக்கு வணக்கம்; தந்தைக்கு வணக்கம்; ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு வணக்கம்.
இதன்பின் பஞ்சபூதங்களில் ஒன்றான மண் என்ற தத்துவத்தின்மீது தவத்தைத் தொடங்குவோம். நிலத்திற்கு அறிகுறியாக இந்தப் பூவுலகையே மனதில் கொள்வோம்.● இந்தப் பூவுலகம் மிகப்பெரியது. 25,000 மைல் சுற்றளவுடையது. மண், உலோகங்கள், ரசாயனங்கள் போன்றவற்றாலானது
.தன்னைத்தானே மணிக்கு 1,000 மைல் வேகத்தில் சுற்றிக்கொள்கிறது. சூரியனின் பாதையில் நாள் ஒன்றுக்கு சுமார் 16 லட்சம் மைல் ஓடுகிறது. இத்தகைய வியத்தகு கோள் இந்த நிலம்.● இதன் பெருமையையும் மதிப்பையும் மன விரிவுகொண்டு மதித்துப் போற்றுவோம்.● இதனோடு ஒன்றிக்கலந்து உயிர்த் தொடர்புகொண்டு, அதனுடைய தெய்வீகத் தன்மையை கிரகித்துக்கொள்
வோம்.● பிரபஞ்சப் பரிணாமத்தில் மண்ணின் உற்பத்தி ரகசியத்தை உணர்ந்து கொள்வோம்.● இந்த நிலவுலகம் என்ற மண்ணினாலும், மண்ணிலிருந்தும்வாழ்நாள் முழுமைக்கும் காப்புப் பெறுவோம்.● மண்ணைப் பயனுள்ள முறையிலே பயன்படுத்திக்கொள்ளத்தக்க விஞ்ஞானத்தை வளர்த்துக்கொள்வோம்.மண் என்ற நிலவுலகின்மீது மனம் செலுத்தி தவம் இயற்றுவோம்.(இரண்டு நிமிடம் உலகத்தை எண்ணி தியானிக்கவும்.)
அடுத்து பிரபஞ்சப் பரிணாமத்தில் நான்காவது தத்துவமாகிய நீரின்மீது தவம் தொடங்குவோம்.● இந்தப் பூவுலகம் நூற்றுக்கு 72 பாகம் நீரால் சூழப்பட்டுள்ளது. நீரினுடைய இருப்பை மேகங்களிலும், தாவரங்களிலும், உயிரினங்களிலும்நாம் காணமுடிகிறது. நீர் உயிர்களின் வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்பதைத் தெரிந்துகொள்கிறோம்.● நீரின் பெருமையையும் மதிப்பையும் மனவிரிவு கொண்டு மதித்துப் போற்றுவோம்.● நீரோடு ஒன்றிக் கலந்து உயிர்க்கலப்புப்பெறுவோம்.● பிரபஞ்சப் பரிணாமத்தில் நீரின் உற்பத்தி ரகசியத்தை உணர்ந்து கொள்வோம்.● நீரிலிருந்தும்,நீரினாலும் வாழ்நாள் முழுமைக்கும் காப்புப் பெறுவோம்.● நீரைப் பயனுள்ள முறையிலே பயன்படுத்துகின்ற விஞ்ஞானத்தை வளர்த்துக் கொள்வோம்.நீரின்
மீது மனம் செலுத்தித் தவம் இயற்றுவோம். (இரண்டு நிமிடம் தியானிக்கவும்).
பிரபஞ்சப் பரிணாமத்தில் மூன்றாவது தத்துவமாகிய நெருப்பின்மீது தவம் இயற்றுவோம்.● பூமி தன்னைத்தானே வேகமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதனால் அதன் கனத்த அணுக்களெல்லாம்ந
டுமையத்தில் நெருக்கமாகக் கூடிக்கொண்டிருக்கின்றன.அந்த நெருக்கத்தால் அணுச்சிதைவு ஏற்பட்டு எப்பொழுதும் ஒரு பெரிய நெருப்பு பூமியின் நடுமையத்தில் ஏற்பட்டுக்கொண்ட
ேயிருக்கிறது.அதனுடைய கனல் பூமியின் மேற்பகுதி வரை வந்து, அங்கு வாழும் உயிர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துக் கொண்டேயிருக்கிறது.அந்தப் பெருநெருப்பையே தவத்திற்கு மனதில் கொள்வோம்.● நெருப்பின் பெருமையையும் மதிப்பையும் மனவிரிவு கொண்டு மதித்துப் போற்றுவோம்.● நெருப்போடு ஒன்றிக் கலந்து, உயிர்க்கலப்புப்பெறுவோம்.● பிரபஞ்சப் பரிணாமத்தில் நெருப்பின் உற்பத்தி ரகசியத்தை உணர்ந்து கொள்வோம்.● நெருப்பிலிருந்தும், நெருப்பினாலும் வாழ்நாள் முழுமைக்கும் காப்பு பெறுவோம்.● நெருப்பைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துகின்ற விஞ்ஞானத்தை வளர்த்துக் கொள்வோம்.● நெருப்பின்மீது மனம் செலுத்தித் தவம் இயற்றுவோம். (இரண்டு நிமிடம் தியானிக்கவும்).
பிரபஞ்சப் பரிணாமத்தில் இரண்டாவது தத்துவமாகிய காற்றின்மீது தவத்தைத் தொடங்குவோம்.● நிலவுலகைச் சுற்றி சுமார் 19 மைல் உயரத்திற்கு அடர்த்தியாகவும்
, அதற்கு மேல் லேசாகவும்கவசம்போல் சூழ்ந்து காற்று இயங்கிக் கொண்டிருக்கின்ற
து.● உயிர்களின் வாழ்க்கைக்கு காற்று எவ்வளவு அவசியம் என்பதை உணர்வோம்.● மனவிரிவு கொண்டு காற்றின் பெருமையையும் மதிப்பையும் உணர்ந்து போற்றுவோம்.● அதனோடு ஒன்றிக்கலந்து, உயிர்த்தொடர்பு கொண்டு அதனுடைய தெய்வீகத் தன்மையை கிரகித்துக் கொள்வோம்.● பிரபஞ்சப் பரிணாமத்தில் காற்றின் உற்பத்தி ரகசியத்தை உணர்ந்து கொள்வோம்.● காற்றிலிருந்தும், காற்றினாலும் வாழ்நாள் முழுமைக்கும் காப்புப் பெறுவோம்.● காற்றைப் பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ளத்தக்க விஞ்ஞானத்தை வளர்த்துக்கொள்வ
ோம்.காற்றின்மீது மனம் செலுத்தித் தவம் இயற்றுவோம். (இரண்டு நிமிடம் தியானிக்கவும்).
பிரபஞ்சப் பரிணாமத்தில் முதல் தத்துவமாகிய விண்ணின்மீது தவம் தொடங்குவோம்.● இந்தப் பிரபஞ்சத் தோற்றங்களுக்கெல்லாம் காரணமாகிய நுண்ணிய மூலக்கூறுதான் விண் என்ற உயிராற்றல்.நம் உடலில் உயிராற்றலாகவும், பிரபஞ்சம் முழுவதும் ஆற்றல் களமாகவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது விண்.இந்த விண்ணின் சேர்க்கைதான் நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற மற்ற நான்கு பூதங்களும்.● மனவிரிவு கொண்டு விண்ணின் பெருமையையும் மதிப்பையும் உணர்ந்து போற்றுவோம்.● அதனோடு ஒன்றிக்கலந்து, உயிர்க்கலப்புப்
பெற்று அதனுடைய தெய்வீகத் தன்மையை கிரகித்துக் கொள்வோம்.● பிரபஞ்சப் பரிணாமத்தில் விண்ணின் உற்பத்தி ரகசியத்தை உணர்ந்து கொள்வோம்.● விண்ணிலிருந்தும், விண்ணினாலும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லாத் தொழில்களிலும் காப்புப் பெறுவோம்.● விண்ணைப் பயனுள்ள முறையில் பயன்படுத்தும் விஞ்ஞானத்தை அறிந்துகொள்வோம்.விண்மீது மனம் செலுத்தித் தவம் இயற்றுவோம்.(பிரபஞ்சம் முழுவதும் உள்ள விண் நிறைந்த சக்திக் களத்தை நோக்கி இந்தத் தவத்தை இரண்டு நிமிடம்இயற்றவேண்டும்.)
நவகிரகத்தவம்
விண் நிறைந்த சக்திக் களமாகிய பிரபஞ்சத்தில் பலகோடி நட்சத்திரங்களைப் பார்க்கின்றோம்.
ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு சூரியனே. அவற்றில் ஒரு நட்சத்திரம்தான்இப்பூவுலகம் சுற்றி வந்துகொண்டிருக்கும் சூரியன்.சூரியனையும் அதைச் சார்ந்த கோள்களையும் நவகோள்கள் என்று அழைக்கிறோம்.சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லாக் கோள்களிலிருந்தும் வருகின்ற காந்த அலைகளும், மனிதனின்உடலோடும் உயிரோடும் நேரடியான தொடர்புள்ளவை.இப்பொழுது இக்கோள்களின்மீது மனம் செலுத்தித் தவம் இயற்றுவோம்.
சூரியன்மீது தவம் தொடங்குவோம்.● சூரியன் ஒரு மாபெரும் நெருப்புக்கோளம். இதன் விட்டம் 8.7 லட்சம் மைல் என்று கணக்கிட்டுள்ளார
்கள். சூரியன் பூமியைவிட 1,400 மடங்கு உருவத்தில் பெரியது. 25 நாட்களுக்கு ஒரு சுற்று வீதம் தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது.● சூரியன் ஆரஞ்சு நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டுள்ள
து. இக்கதிர்கள் நம் உடலிலுள்ள எலும்போடு தொடர்புடையவை.● சூரியனுடைய காந்த அலைக்கதிர்கள் வாழ்வில் வெற்றியையும் அறிவு மேன்மை, கல்வி மேன்மை, வாழ்க்கை வளங்கள் இவையனைத்தையும் அளிக்க வல்லவை.● சூரியனின் காந்த அலைக்கதிர்களை ஏற்று நம் உடலோடும் உயிரோடும் ஒன்றுபடுத்திக் கொள்வோம். அவை எப்பொழுதும் நமக்கு நன்மையே செய்து கொண்டிருக்குமாக
.சூரியனின்மீது மனம் செலுத்தித் தவம் இயற்றுவோம். (இரண்டு நிமிடம் தியானிக்க வேண்டும்.)
புதன் என்ற கோள்மீது தவம் இயற்றுவோம்.● சூரியனிலிருந்துசுமார் மூன்று கோடி மைல்களுக்கப்பால் முதல் வட்டப் பாதையில் சூரியனை வலம்வந்து கொண்டிருக்கக்கூ
டிய கோள் புதன். இதன் விட்டம் 3,030 மைல்கள். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர 88 நாட்களை எடுத்துக்கொள்கிறது.● புதன், பசுமை நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நம் உடலில் உள்ள தோலோடு தொடர்புடையன.● இந்த காந்த அலைக்கதிர்கள் நமக்கு அறிவு மேன்மை, கல்வி மேன்மை, வாழ்க்கை வளங்கள் இவை அனைத்தையும் அளிக்க வல்லவை.● புதனுடைய பசுமை நிறமான காந்த அலைக்கதிர்களை ஏற்று நம் உடலோடும் உயிரோடும் ஒன்றுபடுத்திக்கொள்வோம். அவை நமக்கு எப்பொழுதும் நன்மையே செய்துகொண்டிருக்குமாக.புதன் என்ற கோள்மீது மனம் செலுத்தி தவம் இயற்றுவோம். (இரண்டு நிமிடம் தியானிக்க வேண்டும்.)
சுக்கிரன் என்ற கோள்மீது தவம் தொடங்குவோம்.● இது சூரியனிலிருந்து
இரண்டாவது வட்டப்பாதையில் சுமார் ஆறு கோடி மைல்களுக்கு அப்பால் சூரியனை வலம் வந்துகொண்டிருக்கிறது.இதனுடைய விட்டம் 7,625 மைல்கள் என்று கணக்கிட்டுள்ளார
்கள். இது சூரியப் பாதையில் ஒருமுறை சுற்றிவர 225 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.● சுக்கிரன் வெண்மை நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நமது உடலில் உள்ள சுக்கிலத்தோடு தொடர்புடையன.● இக்கதிர்கள் நமக்கு மனமகிழ்ச்சியையும், உயர் நட்பையும், வாழ்க்கை வளங்களையும் அளிக்க வல்லது.● சுக்கிரனுடைய காந்த அலைக்கதிர்களை ஏற்று நம் உடலோடும் உயிரோடும் ஒன்றுபடுத்திக்கொள்வோம். அவை நமக்கு எப்பொழுதும் நன்மையே செய்துகொண்டிருக்குமாக.சுக்கிரன் என்ற கோள்மீது மனம் செலுத்தி தவம் இயற்றுவோம். (இரண்டு நிமிடம் தியானிக்க வேண்டும்.)
சந்திரன் என்ற கோள்மீது தவம் இயற்றுவோம்.சூரியனிலிருந்துமூன்
றாவது வட்டப்பாதையில் சுமார் ஒன்பது கோடியே முப்பது லட்சம் மைல்களுக்கு அப்பால் சூரியனை சுற்றிவந்து கொண்டிருக்கும் கோள் பூவுலகம்.இப்பூவ
ுலகிலிருந்து சுமார் 2,40,000 மைல்களுக்கு அப்பால் இப்பூவுலகை வலம் வந்துகொண்டிருக்கும் துணைக்கோள் சந்திரன்.இதனுடைய விட்டம் 2,175 மைல்கள் என்று கணக்கிட்டுள்ளார்கள். இது ஒருமுறை பூமியைச் சுற்றிவரசுமார் 29 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.● சந்திரன் வெண்மை நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டிருக்கிறது. இக்கதிர்கள் நம் உடலிலுள்ள ரத்தத்தோடு தொடர்புடையன.● இந்த காந்த அலைக்கதிர்கள் நம் உடலில் ஓடும் ரத்த ஓட்டத்தை சீரமைப்பது; அறிவு வளம், வாழ்க்கை வளங்கள் ஆகியவற்றை அளிக்கவல்லது.● சந்திரனுடைய காந்த அலைக்கதிர்களை ஏற்று நம்மோடு ஒன்றுபடுத்திக் கொள்வோம்.● அவை எப்பொழுதும் நமக்கு நன்மையே செய்துகொண்டிருக்குமாக.சந்திரன் என்ற கோள்மீது மனம் செலுத்தி தவம் இயற்றுவோம். (இரண்டு நிமிடம் தியானிக்கவும்.)
செவ்வாய் என்ற கோள்மீது தவத்தைத் தொடங்குவோம்.சூரியனிலிருந்துநான
்காவது வட்டப் பாதையில் சுமார் 14 கோடி மைல்களுக்கு அப்பால் சூரியனை வலம்வந்து கொண்டிருக்கும் கோள் செவ்வாய்.இதனுடை
ய விட்டம் 4,300 மைல்கள். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர 18 மாதங்களை எடுத்துக்கொள்கிறது.● செவ்வாய் செந்நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நம் உடலிலுள்ளமஜ்ஜையோடு தொடர்புடையன.இந்த காந்த அலைக்கதிர்கள் விஞ்ஞான அறிவையும் மெய்யறிவையும் தைரிய உணர்வையும் வாழ்க்கை வளத்தையும் அளிக்கவல்லவை.● செவ்வாயினுடைய காந்த அலைக்கதிர்களை ஏற்று நம் உடலோடும் உயிரோடும் ஒன்றுபடுத்திக்கொள்வோம்.● இவை எப்பொழுதும் நமக்கு நன்மையே செய்துகொண்டிருக்குமாக.செவ்வாய் என்ற கோள்மீது மனம் செலுத்தி தவம் இயற்றுவோம். (இரண்டு நிமிடம் தியானிக்க வேண்டும்.)
குரு என்ற ஆற்றல்மிக்க கோள்மீது தவம் இயற்றுவோம்.சூரியனிலிருந்துஐந்தாவது வட்டப்பாதையில் சுமார் 48 கோடி மைல்களுக்கு அப்பால் சூரியனை வலம் வந்துகொண்டிருக்கும் கோள் குரு.இதனுடைய விட்டம் 88,000 மைல்கள் என்று கணக்கிட்டுள்ளார்கள். இது சூரியப் பாதையில் ஒரு சுற்று முடிக்க 12 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.● குரு பொன்னிறமான காந்த அலைக் கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நம் மூளைசெல்களோடு தொடர்புடையன.குர
ுவினுடைய காந்த அலைக்கதிர்கள் மெய்யுணர்வையும்அனைத்து வாழ்க்கை வளங்களையும் அளிக்கவல்லன.● குருவினுடைய காந்த அலைக்கதிர்களை ஏற்று நம் உடலோடும் உயிரோடும் ஒன்று படுத்திக் கொள்வோமாக.● அவை நமக்கு எப்பொழுதும் நன்மையே செய்துகொண்டிருக்குமாக.குரு என்ற கோளின்மீது மனம் செலுத்தி தவம் இயற்றுவோம். (இரண்டு நிமிடம் தியானிக்க வேண்டும்.)
சனி என்ற ஆற்றல்மிக்க கோள்மீது தவம் இயற்றுவோம்.சூரியனிலிருந்துஆறாவது வட்டப் பாதையில் சுமார் 88 கோடி மைல்களுக்கு அப்பால் சூரியனை வலம்வந்து கொண்டிருக்கும் கோள் சனி.இதனுடைய விட்டம் 75,000 மைல்கள் என்று கணக்கிட்டுள்ளார
்கள். இது சூரியப் பாதையில் ஒரு சுற்றுவர 30 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.சனி சாம்பல் நிறமான காந்த அலைக் கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இந்தக் கதிர்கள் உடலில் உள்ள நரம்புகளோடு தொடர்புடையன.● சனியினுடைய இந்த சாம்பல் நிறமான காந்த அலைக்கதிர்கள் நீண்ட ஆயுளையும் உடல்நலத்தையும் அளிக்கவல்லன.● சனியினுடைய காந்த அலைக்கதிர்களை ஏற்று நம் உடலோடும் உயிரோடும் ஒன்றுபடுத்திக்கொள்வோம். அவை நமக்கு எப்பொழுதும் நன்மையே செய்து கொண்டிருக்குமாக.சனி என்ற கோள்மீது மனம் செலுத்தி தவம் இயற்றுவோம். (இரண்டு நிமிடம் தியானிக்கவும்.)
ராகு, கேது என்ற காந்த அலைப் பாதைகளின்மீது தவம் இயற்றுவோம்.சூரி
யனுடைய மையத்தில் அணுக்கள் செயலற்று நின்றுவிடுகின்றன.அவை சுத்தவெளியாக, பிரம்மமாக மாறிக்கொண்டிருக்கும் நிலை.மேலும் அவை மிகவே, அங்கு நிற்க முடியாமல் ஒரு கோடுபோல் சூரியனின் மையத்தில் ஆரம்பித்து பிரபஞ்சத்தையெல்லாம் கடந்து சுத்தவெளியுடன் கலந்துகொண்டிருக்கின்றன.இவ்வாறு சூரியனின் இருபுறமும் எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கக்கூடிய கருநிறமான காந்த அலைப்பாதைகளைத்தான் ஒரு புறம் ராகு என்றும், மறுபுறம் கேது என்றும் கூறுகிறோம்.● ராகு, கேது காந்த அலைப் பாதைகளிலிருந்துகருமை நிறமான காந்த அலைக் கதிர்கள் வீசிக்கொண்டுள்ளன. இக்கதிர்கள் நம் உடலில் உள்ள ஓஜஸ் என்ற சுத்த சக்தியோடு தொடர்புகொள்கின்றன.● இந்த காந்த அலைகள் மெய் விளக்கம், உடல்நலம், வாழ்க்கை வளங்கள் ஆகியவற்றை அளிக்கவல்லன.● ராகு, கேதுவின் காந்த அலைகளை நாம் ஏற்று உடலோடும் உயிரோடும் ஒன்றுபடுத்திக்கொள்வோம்.● அவை நமக்கு எப்பொழுதும் நன்மையே செய்துகொண்டிருக்குமாக.ராகு, கேது காந்த அலைப்பாதைகளின்மீது மனம் செலுத்தி தவம் இயற்றுவோம். (இரண்டு நிமிடம் தியானிப்போம்).
பிரபஞ்சக் களம்
இப்பேரியக்க மண்டலம் என்ற பிரபஞ்சக் களத்தில் சூரிய குடும்பத்தைப் போல் கோடானுகோடி சூரியக் குடும்பங்கள் உள்ளன.அவற்றையெல்லாம் நட்சத்திரங்கள் என்று அழைக்கின்றோம்.இப்படி பிரபஞ்சம் முழுவதும் உள்ள எல்லா நட்சத்திரக்கூட்
டங்களையும் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ற 12 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.இந்த அனைத்து நட்சத்திரத் தொகுதிகளிலிருந்து காந்த அலைகள் வீசிக்கொண்டிருக்கின்றன.இக்காந்த அலைகள் நமக்கு நன்மையே செய்துகொண்டிருக
்குமாக.மெய்ப்பொருள்பிரபஞ்சக் களத்தைக் கடந்து மனதை விரிக்கிறோம். எல்லையற்றதாக இருக்கின்ற சுத்தவெளி, மெய்ப்பொருள்.அத
ே மெய்ப் பொருள் இப்பேரியக்க மண்டலம் முழுவதிலும் ஒவ்வொரு அணுவுக்கு மத்தியிலும் இரண்டு அணுக்களுக்கு இடையேயும் இருப்பதை உணர்கிறோம்.இந்த மெய்ப்பொருள் என்ற சுத்த வெளியே நமக்குள்ளாக அறிவாக இயங்கிக்கொண்டிர
ுப்பதையும் உணர்கிறோம்.அந்த மெய்ப்பொருள் என்ற சுத்த வெளியே நமக்குள்ளாக கெட்டிப் பொருளான உடல், ரத்த ஓட்டம், வெப்பஓட்டம், காற்று, உயிர் என்ற ஐந்து பௌதிகப் பிரிவுகளாக இயங்குவதை உணர்கிறோம்.இவை எல்லாவற்றையும் அவ்வறிவே ஆண்டுகொண்டிருப்பதையும் உணர்கிறோம்.இதேபோன்று ஒவ்வொரு மனிதரிடத்தும் ஒவ்வொரு உயிரிடத்தும் அமைந்திருப்பதையும் உணர்கிறோம்.இவ்வ
ாறு மெய்ப்பொருள் என்ற பிரம்மமே பரிணாமத்தில் எல்லா உயிர்களாகவும் வந்துள்ளன என்பதை உணர்ந்து,எந்தவொரு உயிருக்கும் துன்பம் செய்விக்காமலும்; எங்கு, எந்தவொரு உயிர் துன்பப்பட்டாலும் அந்ததுன்பத்தை போக்குமளவிற்கு நம் செயல்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு கருணையோடும் வாழமுயல்வோம்.இந்த விரிவான மனநிலையில் எப்பொழுதும் நாம் மறவாது மனதில் கொண்டு வாழ்வில் சிறப்பாக வாழ செயல்பட முயல்வோம்.அருட்
பேராற்றலின் கருணையினால் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்வோம்.வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!நம் மனதில் அமைதி நிலவட்டும்!நம்மைச் சுற்றிலும் அமைதி நிலவட்டும்!உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும்!அமைதி! அமைதி! அமைதி!
பஞ்சபூத நவகிரகத் தவத்தின் பயன்கள்
=============================
நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ கோள்களிலிருந்தும் பொருட்களிடமிருந
்தும் மக்களிடமிருந்தும் அலைகள் வந்துகொண்டே இருக்கும். அந்த அலைகள் நமக்கு சாதகமாகவும் பாதகமாகவும் இருக்கலாம்.பாதகம் என்பது வெளியிலிருந்து வரக்கூடிய ஆற்றல் நம்மிடையே இருக்கக்கூடிய ஆற்றல்மீது அதிக அழுத்தம் தருமானால், அதைத் தாங்க முடியாதபொழுது அது துன்பத்திற்குரி
யதாக மாறுகிறது. அதைத்தாங்கும் பொழுது அதுவே இன்பமாக மாறுகிறது.நமக்கு எப்போதுமே கோள்களிலிருந்துவரக்கூடிய அலையினாலும், பொருட்களிடமிருந்து வரக்கூடிய அலையினாலும், நாம் செய்கின்ற செயல்களிலிருந்து வரக்கூடிய அலையினாலும் அதிகமாக பாதிக்கப்படாத நிலையான தாங்கும் சக்தி அவசியம்.அந்த ஆற்றலை ஏற்படுத்திக் கொள்வதற்காக நாம் நமது உடல், உயிர், சீவகாந்தம், மனம் என்ற நான்கையும் சேர்த்து ஒவ்வொரு பஞ்சபூதப் பிரிவோடும் இணைக்கவேண்டும்.இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவு என்பது பஞ்சபூதங்களின் நன்மையை உணர்ந்து கொள்வதுதான். ஏனென்றால் பஞ்சபூதங்களையும் அதிலிருந்து வரக்கூடிய விளைவுகளையும் தவிர வேறொன்றையும் மனிதன் அறிவதில்லை.எனவே, இதையெல்லாம் அறிந்துகொள்வதற்குரிய சங்கற்பத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.பஞ்சபூதத் தவம் செய்வதன் மூலமாக எந்தப் பொருளோடும் சக்தியோடும் இணைந்து பயன்கொள்ள முடிகிறது.எந்தப் பொருள் சக்தியாலும் விளையக்கூடிய தீமைகளிலிருந்தும் காப்பு பெறமுடிகிறது.அந்தப் பொருள் சக்தியைப் பற்றிய முழு விளக்கமும் தெளிவும் பெற்றுக்கொள்ள முடிகிறது.உடலுக்கும் உயிருக்கும் ஆக்கம் கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.ஒவ்வொரு கோளும் பல ரசாயனங்களைக் கொண்டு பரிணாமம் அடைந்ததற்குத் தக்க வாறு அலை வீசிக்கொண்டே இருக்கின்றது.ரசாயன அம்சங்கள் அடைந்த அந்த அலை எந்தப் பொருள்மீது வீசுகிறதோ, அந்தப் பொருளிலே அந்த அலையின்தன்மை அத்தனையும் தூண்டிவிடும்.ஒன்பது கோள்களின் தன்மைகளும், அதன் அலைகளும் வந்துகொண்டே இருக்கின்றன.உடலுக்கு ஆறுவகையில் ரசாயன மாற்றங்கள் உண்டாகிறது.

சரும பிரச்சனைகளைப் போக்கும் மஞ்சள்

சரும பிரச்சனைகளைப் போக்கும் மஞ்சள்!

கிராமப்புறத்தில் வாழும் பெண்களின் அழகின் ரகசியம் என்னவென்று கேட்டால், அவர்கள் மஞ்சளைத் தான் சொல்வார்கள். விலைமலிவில் கிடைக்கும் மஞ்சளில் அவ்வளவு சக்தி உள்ளதா என்று பலர் கேட்பார்கள். ஆம் உண்மையிலேயே மஞ்சளில் பலர் நினைக்காத அளவில் நன்மைகளானது நிறைந்துள்ளது.

மேலும் நம் அம்மா, பாட்டியின் அழகிற்கும் மஞ்சள் தான் காரணமாக இருக்கும். ஏனெனில் மஞ்சளில் ஆன்டி-செப்டிக், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் அதில் குர்க்யூமின் என்னும் மஞ்சன் நிறமி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும்.

சரும கருமையைப் போக்க எலுமிச்சையை எப்படியெல்லாம்
பயன்படுத்தலாம்?

அதுமட்டுமல்லாமல் மஞ்சளை நீரில் கலந்து நாளுக்கு ஒரு முறை அதனை குடித்து வந்தால், இரத்தமானது சுத்தமாகும். குறிப்பாக மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளித்து, சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். இதுப்போன்று மஞ்சளானது சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே இப்போது மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

முகப்பரு

முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் தூளில் கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப் செய்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால், பருக்கள் மறையும்.

கருமையைப் போக்கும்

மஞ்சள் தூளில், வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

சுருக்கங்கள்

சருமம் சுருக்கங்களுடன் காணப்பட்டால், மஞ்சள் தூளில் கரும்புச்சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் சரிசெய்யலாம். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள். மஞ்சள் தூளில் மோர் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

குதிகால் வெடிப்பு

குதிகால் வெடிப்பு இருந்தால், அதனை போக்க, தினமும் காலையில் 3 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், சில துளிகள் தேங்காய் எண்ணெய்/விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிக்க செல்ல வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மஞ்சளானது வெடிப்புக்களை போக்கும்.

கரும்புள்ளிகள்.

கடலை மாவில், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, குளிக்கும் போது ஈரமான சருமத்தில் தடவி நன்கு 5 நிமிடம் மசாஜ் செய்து குளித்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளுடன், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

அழகான உதடுகள்

உதடுகள் கருமையடைந்து இருந்தால், மஞ்சள் தூளில் பால் சேர்த்து கலந்து, உதட்டில் மட்டுமின்றி முகத்திலும் தடவி மசாஜ் செய்து கழுவி வந்தால், உதடுகள் அழகாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.

முடி வளர்ச்சியை தடுக்கும்

பெண்களின் மூக்குக்கு கீழே, கை, கால்களில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்க, மஞ்சள் தூளுடன், வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், முடியின் வளர்ச்சியானது தடுக்கப்படும்.

பொலிவான சருமம்

சருமம் பொலிவோடு இருக்க, மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும்.

ஸ்ட்ரெட்ச் மார்க்

பிரசவத்திற்கு பின் ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படாமல் இருக்க, கர்ப்ப காலத்தில் தினமும் தயிர் மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து, வயிற்றில் தடவி வந்தால், பிரசவத்திற்கு பின் ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தடுக்கலாம்.