11 January 2017

ஒன்பது கிரகங்களும் நமக்கு, ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன நவகிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும் நமக்கு, ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன. அதன் விவரம் வருமாறு :


ஒன்பது கிரகங்களும் நமக்கு, ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன
நவகிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும் நமக்கு, ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன. அதன் விவரம் வருமாறு :

சூரியன் ....................ஆரோக்கியம், தலைமைப் பதவி.
சந்திரன் ...................கீர்த்தி, சிந்தனாசக்தி.
அங்காரகன் ............. செல்வம், வீரம்.
புதன் ....................... அறிவு, வெளிநாட்டு யோகம், நகைச்சுவை உணர்வு.
வியாழன் .................. நன்மதிப்பு, போதிக்கும் ஆற்றல்.
சுக்கிரன் ................... அழகு, அந்தஸ்து, நல்வாழ்க்கை.
சனி .......................... சந்தோஷம், ஆயுள் விருத்தி.
ராகு .......................... பகைவர் பயம் நீங்குதல், பண வரவு அதிகரித்தல்.
கேது ........................ குல அபிவிருத்தி.

எந்த தெய்வத்தின் மூலம் எந்த பலன் கிடைக்க வேண்டுமானாலும் விநாயகரை வணங்கினாலே போதும். அவர் அந்த தெய்வத்திடம் கூறி அருளை பெற்றுத் தருவார்.
இஷ்டதெய்வம் இருந்தாலும், வம்சாவளியாக வரும் குலதேவதையை அவசியம் பூஜிக்க வேண்டும். இதற்கு முன் விநாயகருக்கு "சுக்லாம் பரதரம்' குட்டிக் கொள்ள வேண்டும்.
செம்பைத் தினமும் கழுவி வெளுப்பாக்குவது போல, மனதில் தினமும் சேரும் அழுக்கையும் பக்தியால் சுத்தம் செய்ய வேண்டும்.
ஆசையை விட்டு மனம் கட்டுப்படும் வரை, ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் பைத்தியமாகத்தான் இருக்கிறான்.
ராமநாமத்தை தாரக மந்திரம் என்கிறோம். "தாரகம்' என்றால் "பாவங்களைப் பொசுக்குவது' என்று பொருள்.
நம் துன்பத்தையே பெரிதாக நினைக்கக்கூடாது. அந்த துன்பத்துக்கு மத்தியிலும், நம்மால் உலகத்துக்கு நலம் ஏற்பட வேண்டும் என்ற உணர்வு வேண்டும்.
எந்தக்குற்றமும் செய்யாதவன் பாவமற்றவன். அவன் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை.

No comments:

Post a Comment