29 August 2017

மந்திரங்கள்

மந்திரங்கள்

மந்திரங்கள்

வாய்மையை  வாழ்க்கையில்  கடைபிடித்து வாழும் உத்தம மனிதரின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எல்லாம் மந்திரங்கள்  தான் .
தற்காலத்தில் புத்தகங்களிலும்  , இனணய தளதிலும் பலவிதமான மந்திரங்களை வெளியிடுகின்றனர்.இந்த மந்திரங்களை கூறினால் பலன் கிடைக்குமா? சந்தேகம்தான் ! மந்திரம்  யாருக்கு சித்தியாகும் ? என்பதை அவர்களின் ஜாதக அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை   முன் கட்டுரையில் பார்த்தோம் . அவ்வாறு இல்லா விட்டால் போலி வேடமிட்டு ,பிறர் பொருளை அபகரித்த பாவதிற்குரிய தண்டனையை அடைவார்கள் .இதைத்தான் மந்திரம் கால் மதி முக்கால்
என்பார்கள்.

மதி என்றால் சந்திரன்,  சந்திரன் மனதிற்குரியவன், மன வலிமை வேண்டும் .அடியேன் என் குருநாதரிடம் " சாமி பல லட்சம் உரு ஜெபித்தாலும் புத்தகத்தில் எழுதிருப்பதைப்  போல் பலன் நடைபெறவில்லையே   ஏன் ? என கேட்டேன் அதற்கு அவர் " அட்சரலட்சம் " என்றார் . மந்திரம்  ஜெபித்து சித்து அடைய சில நியமனங்கள் உள்ளன .  அவைகளில் ஒன்று  ஆகார  நியமணம். இதை பற்றி முன்  கட்டுரையில் கண்டோம் .

             மந்திரத்தை 1 லட்சம் உரு ஜெபித்தாலும் அதில் 10 ல் ஒரு பகுதி தர்ப்பணம் செய்யவேண்டும் ,10 ல் ஒரு பகுதி ஹோமம்  செய்யவேண்டும் .  அப்படி இல்லாவிட்டால் அதைபோல் 4 மடங்கு அதாவது 1 லட்சம் என்றால் 4 லட்சம் மொத்தம்  5 லட்சம் உரு நியமனத்துடன் ஜெபிக்கவேண்டும் .இவ்வளவு கஷ்டம் இருக்கும்போது "நீ பணத்தை கொடு நான் தெய்வத்தை காட்டுகிறேன் என்று ஒருவர் சொன்னால் எப்படி நம்புவது? அப்படி ஏமாந்த சிலரையும்  அடியேன் சந்தித்து இருகின்றேன்  .

 " மந்திரங்கள் 100 சதவீதம் உண்மை.மந்திரங்கள் பலிக்கவில்லை என்றால் அது ஜெபித்தவருடைய  தவறே  தவிர  மந்திரந்தின் தவறே அல்ல .

       மந்திரம் என்றால் மனதில் திறம் என கூறுவார்கள். மனதை ஒருநிலை படுத்தி சொல்லும்போது மந்திரம் நிச்சயமாக பலிக்கும் . உதாரணத்திற்கு   ஒரு மந்திரம் தருகிறேன்.இந்த மந்திரத்தை முறைப்படி ஜெபித்தால் பிறர் நம்மைக்கண்டு  வசியமாவதொடு, நம் கட்டளையை ஏற்று நடப்பார்கள் .

" ஓம் சக்தி ,உலக சக்தி, ஆதி சக்தி, ஆதார சக்தி, சிவ சக்தி ,சித்த சக்தி ,வாக்கு  சக்தி, வசிய சக்தி, எண்ணிய எண்ணம் எண்ணியபடியே ,என்னைக்கண்டோர் என்வசம் ஆகவும் ,என்னை நினைத்தோர்
என் வசம் ஆகவும் ,என்சொல் கேட்டு இசைந்தே நடக்க ,நானே நீயாய் ,நீயே நானாய் செய் " (இதற்குரிய செயல்முறை விளக்கத்தை வெளியிட்டால் சிலர் தவறாக பயன்படுத்துவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக செயல்முறை விளக்கம் வெளியிடவில்லை )

   " மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டம் "  

நலமே பெற்று! வளமாய் வாழ்க !

No comments:

Post a Comment