29 August 2017

எழுத்துகளின் சக்தி

எழுத்துகளின் சக்தி

எழுத்துகளின் சக்தி

          
அநேக மந்த்ரங்களில் அம் ,ஆம் ,இம் ,ஈம் என்றுவரும் .இந்த ஒவ்வொரு எழுத்திற்கும் சக்தி உண்டு .
"ர"  என்ற எழுத்து அக்னி பீஜம் "ரம் " ர அழைப்பாகவும் பயன்படும் .
 "ய " என்பது  வாயு பீஜம் எங்கும் நிறைத்துள்ளது .நமசிவய , நாராயன .என்பதை காண்க .
இந்த சப்தங்களின் வலிமை கொண்டுதான் நியுமரலாஜி உருவானது .
சொல்லுக்கும் கொள்ளும் தன்மை உண்டு என்பதற்கு ஆதர நூல் "நந்திகலம்பகம் ".

       ஒருவனுக்கு பட்சி அரசாக இருந்து சூரிய நாடியும் நடக்கும்போது அவன் சொல்வது பலித்துவிடும் . இதற்கு நல்லவன் கெட்டவன் பேதம் கிடையது .
ஆகவேதான் குடியிருக்கும் வீட்டிலிருந்து அவச்சொற்களை பேசக்கூடாது என பெரியோர்கள் சொல்வர் .ஆகவே கோபத்தில் குழந்தைகளை திட் டுவதும் வேண்டாம் .

" மந்த்ரங்கள் சப்தங்களின் வடிவாக உள்ளன என என் குருநாதர் கூறுவார் ."
       ஆதியில் மந்திரங்களை வாய்மொழியாகத்தான் கூறுவார்கள் .அதை சீடர்கள் உச்சரிப்பை அறிந்து மனனம் செய்வார்கள் .
"க " என்னும் எழுத்து கஷ்டங்களை நீக்கும்
" ங" என்னும் எழுத்து சகல விஷங்களையும்  நீக்கும்.
" ச " என்னும் எழுத்து வசியம் தரும்
" ண  " என்னும் எழுத்து சித்திகளை தரும்
" ப " என்னும் எழுத்து பேய் பிசாசுகளை பந்தனம் பண்ணும்

இதைப்போல் எல்லா எழுத்துகளுக்கும் சக்தி உண்டு

No comments:

Post a Comment