youtube

29 October 2015

சரப்பயிற்சியின் போது கடைப்பிடிக்க வேண்டியது
ஈரமற்ற தரையில் விரிப்பின் மீது அமர்ந்து காற்றோட்டமுள்ள இடத்தில் செய்ய வேண்டும். பனியும், குளிரும் இல்லாத காலங்களில் நதிக்கரை, ஏரிக்கரை, தோட்டம், வெளி மலைப்பகுதி ஆகிய இடங்களில் செய்யலாம். உணவுக் கட்டுப்பாடு அவசியம், சாத்வீக உணவு நல்லது. அரை வயிறு உணவு, கால் வயிறு நீர், மீதி கால் வயிறு வெறுமையாய் இருக்க வேண்டும்.
சரப்பயிற்சி செய்ய ஏற்ற காலங்கள்
1.சூரிய உதயம் 3நாழிகை (3 x 24 = 72 நிமிடங்கள்)
2.மதியம்
3.சூரியன் மறைவதற்கு முன்னும் பின்னுமாக 4 நாழிகை.
4.(அர்த்த இராத்திரி) நடு இரவு சாமத்தில்.
சரப்பயிற்சியின் போது மூச்சை வெளிவிடல் உள் வாங்கல், மெதுவாகவும் நிதானமாகவும் செய்ய வேண்டும்.பூரித்த நாடி வழியே இரேசிக்காமல் பயிற்சி செய்வது சரியானபடி நன்மை அளிக்கும். இரேசித்த நாடி வழியே பூரிக்கலாம். இது பயிற்சி முறையைப் பொறுத்து அமையும். சரப்பயிற்சியின்போது பத்மாசனம் (அ) துறவிகளாக இருப்பின் சித்தாசனம் நிலையில் இருந்து கொள்ளலாம் (அ) சாதாரணமாக சுக ஆசனத்தில் (சப்பணமிட்டு அமர்தல்) இருந்து கொண்டு செய்யலாம்.
பயிற்சி முறை
முதலில் வலதுகையின் ஆட்காட்டு நடுவிரல்களை மடக்கிக் கொள்ள வேண்டும். வலது கட்டை விரலால் வலது நாசித் தொளையை மூடிக் கொண்டு இடது தொளையால் மெதுவாக காற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உள்ளிழுக்க வேண்டும்.அடுத்து வலது கட்டை விரலை எடுத்துவிட்டு மோதிர விரல் மற்றும் சிறுவிரல்களால் இடது நாசித் துவாரத்தை அடைத்துக் கொண்டு மிகவும் மெதுவாகவும், நிதானமாகவும் வலது நாசித் துவாரத்தின் வழியாகத் காற்றை இரேசிக்க வேண்டும். அடுத்து வலது மூக்குத் துளை வழியாகவே காற்றை பூரகம் செய்து பின் இடது மூக்குத் துளை வழியாக இரேசிக்க வேண்டும்.இதுவே பயிற்சியின் ஒரு கட்டமாகும். இதைத் தொடர்ந்து 50 முதல் 60 தடவை வரை செய்யலாம்.
பிரத்தியாகாரம்
இது 5 புலன்களை வசப்படுத்தும் விஞ்ஞானக் கலையாகும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய பொறிகளின் வழியாக அனுபவிக்கும் நுகர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் பயிற்சி முறை பிரத்தியாகாரம் ஆகும். புலனுகர்வு அளவுக்கு மிஞ்சும் போது உயிராற்றல் அழிகிறது. எனவே அளவுடன் புலனுகாலை அமைத்து உடலை நோய்வாய்படாமல் அழியாமல் காத்து வருவதற்கும் மனதை நம் கட்டுபாட்டிற்கு கொண்டு வரவும் இப்பயிற்சி உதவுகிறது.
தாரணை
இது மனதை ஒருமுகப்படுத்தும் (Concentration) கலை (அ) பயிற்சி முறையாகும். பிரத்தியாகாரப் பயிற்சி உடையவர்களுக்கு இது எளிதில் வாய்க்கும். ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி மனதை ஒருநிலைப்படுத்துதல் தாரணை எனப்படும். வாயு தாரணை என்பது பிராணாயமத்தின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி குண்டலினியை எழுப்பும் பயிற்சி முறை ஆகும் என்பர்.
தியானம்
மனதை வசப்படுத்தும் பரிபூரண விஞ்ஞானக்கலை, மனவிசை புலன்களின் வழியே பொறிகள் வாயிலாக கண்டபடி அலைக்கழிக்கப்படுவதை தடுத்து அதனை பிரசுத்தியாகாரம் தாரணை வழியாக ஒருமுகப்படுத்தி நம் வசப்படுத்தி ஏதேனும் ஒரு பொருள் பற்றிய இடைவிடாச் சிந்தனை (Cessation of all thoughts except one) சித்தர்கள் கடவுளையே சிந்தித்து இறைமையை உணர்வதற்கு தியானமே, கருவியாக ஆயிற்று, ஆழ்நிலை தியானம் (Transcendental Meditation) என்பது மேலும் ஒரு படி மேலே போய் சிந்தனையற்ற எண்ண அலைகள் நீங்கிய அமைதியான மன நிலையை அடைவதாகும்.
தியானத்தின் மூலம் மனக்கிலேதம் (Stress) நீங்குகிறது. மனமும், உடலும் புத்துணர்ச்சி பெறுகின்றன. மனம் அதிகம் பாதிப்பதால் உண்டாகும் அதி குருதி அழுத்த நோய், மதுமேக நோய் இவை வராது தடுக்கவும், வந்து விட்டால் அந்நோய்களைக் கட்டுப்படுத்தவும் தியானம் பயன்படுகிறது. தியானப் பயிற்சியின் மூலமாக குண்டலினியை எழுப்புதல் எளிய முறையாகும். தியானத்தை எப்போது வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். தியானத்தை சுக ஆசனத்தில் இருந்து கொண்டு அல்லது பத்மாசனத்தில் இருந்துக் கொண்டு செய்யலாம் (அ) படுத்துக் கொண்டேயும் செய்யலாம், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.
சமாதி
அஷ்டாங்க யோகத்தின் இறுதி நிலை, சித்தர்கள் இறைநிலையை உணர்ந்து இறை தன்மை அடையும் நிலை ஆகும். பொதுவாக கூறும்போது குறிப்பிட்ட இலக்கை நோக்கி மனதை செலுத்தி இறுதியில் இந்த இலக்கை அடைதல் சமாதி எனலாம்.

26 October 2015

அவை:நீர் மூலம், செண்டு மூலம், முளைமூலம், சிற்று மூலம், வரண் மூலம், ரத்த மூலம், வினைமூலம், மேக மூலம், பௌத்திர மூலம், கிரந்திமூலம், சூத மூலம், புற மூலம், சீழ் மூலம், ஆழி மூலம், தமரக மூலம், வாத மூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம் மற்றும் கவ்வு மூலம்.இதில் ஒன்பது வகைகள் மிகக் கடுமையானவை என்பதால் இவற்றை நவமூலம் என்றும் சொன்னார்கள்.நமது மூதாதையரான சித்தர்கள் மூல நோயை குணப்படுத்தும் பல அரிய மூலிகைகளை ஓலைச் சுவடிகளில் விட்டுச் சென்றுள்ளார்கள்.அதனடிப்படையில் மூலநோய்க்கு பிரத்யேகமான மூலிகை மருந்துகள் தயாரிக்கப்பட்டு அளிக்கும்போது பக்க விளைவுகள் இல்லாமல் மூலநோய் குணமாகும்.ஒரு மண்டலம் சாப்பிடும் மருந்துகளும் உள்ளன, ஒரே வாரத்தில் குணமாகும் மருந்துகளும் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளன.இதனால் உள் மூலம் குணமாகும், வெளிமூலம் சுருங்குகிறது. ஆசனவாயில் இருக்கும் சீழ்க்கட்டிகள் உடைந்து ஆற்றப்படுகின்றன. மல ஜலம் சுலபமான முறையில் வெளியேறுகிறது. மீண்டும் வருவதில்லை.உதாரணத்திற்கு ஒரு மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.துத்திக் கீரை என்ற ஒன்றை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த துத்திக் கீரையை தினந்தோறும் சமையலில் சாப்பிட்டு வந்தால் மூலநோய் தலைக் காட்டாது. எத்தகைய மூலக்கட்டிகள் வந்தாலும் துத்தி இலைமீது விளக்கெண்ணெய் தடவி, அனலில் காட்டி மூலக்கட்டியின் மீது வைத்துக் கட்டிவிட, கட்டி உடைந்துவிடும். மூல முனைகள் உள்ளுக்குச் சென்றுவிடும். வேண்டுமானால் நீங்கள் கூட செய்து பார்க்கலாம்.
🙏🙏👌👌🙏🙏👌👌🙏🙏

இந்துக்கள் அனைவரும் தம் இல்லத்திலோ அல்லது கோவில்களிலோ பூஜை செய்வதற்க்கு முண்னதாக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில, . . .
~~~~~~~~~~~~~~~~~~

1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாஸங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாஸங்கள்(3).
~~~~~~~~~~~~~~~~~~

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம் முதலில் . . .

1.தமிழ் வருடங்கள்:-

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை . . .

1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.
~~~~~~~~~~~~~~~~~~

2.அயணங்கள்:-

அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.
~~~~~~~~~~~~~~~~~~

3.ருதுக்கள்:-

ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது(ஆனி,ஆடி)
3.வர்ஷருது(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது(மார்கழி,தை)
6.சிசிரருது(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~

4.மாஸங்கள்:-

தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).
~~~~~~~~~~~~~~~~~~

5.பக்ஷங்கள்:-

பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~

6.) திதிக்கள்:-

திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்
1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.
~~~~~~~~~~~~~~~~~~

7.வாஸரங்கள்:-

வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்
1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்
~~~~~~~~~~~~~~~~~~

8.நட்சத்திரங்கள்:-

நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.
1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.
~~~~~~~~~~~~~~~~~~

9.கிரகங்கள்:-

கிரகங்கள் ஒன்பது ஆகும்
1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)
~~~~~~~~~~~~~~~~~~

10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:-

இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொருT நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், .. .

நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.

நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புனர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு
~~~~~~~~~~~~~~~~~~

11.நவரத்தினங்கள்:-

1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.
~~~~~~~~~~~~~~~~~~

12.பூதங்கள்:-
பூதங்கள் ஐந்து வகைப்படும்
பூதங்கள்
தன்மாத்திரைகள்
 நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)
~~~~~~~~~~~~~~y~~~~
y
13.மஹா பாதகங்கள்:-
மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்
1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.
~~~~~~~~~~~~~~~~~~

14.பேறுகள்
பெறுகள் பதினாறு வகைப்படும்
1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்.
~~~~~~~~~~~~~~~~~~

15.புராணங்கள்:-
புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.
1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம் 14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம் 16.மார்க்கண்டேய புராணம் 17.பிரம்மாண்ட புராணம் 18.பவிஷ்ய புராணம்.c
~~~~~~~~~~~~~~~~~~

16.இதிகாஸங்கள்:-
இதிகாஸங்கள் மூண்று வகைப்படும்.
1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.

இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது.

அனைவருக்கும் பகிர்வோம்.