youtube

29 February 2016

கடன்கள் தீர நரசிம்ம ஸ்தோத்திரம்

கடன்கள் தீர நரசிம்ம ஸ்தோத்திரம்

1. தேவதா கார்ய ஸித்யர்த்தம்
ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
2. லக்ஷ?மி யாலிங்கித வாமாங்கம்
பக்தானாம் வர தாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
3. ஆந்த்ரமாலா தரம் ஸங்க
சக்ராப்ஜாயுத தரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம்
கத்ரூஜ விஷநாசனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
5. ஸிம்ஹநாதேன மஹதா
திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
6. ப்ரஹ்லாத வரதம்
ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
7. க்ரூரக்ரஹை : பீடிதானாம்
பக்தானாம் அ பயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
8. வேத வேதாந்த யக்ஞேசம்
ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
9. ய இதம் படதே நித்யம்
ருணமோசன ஸம்ச்ஞிதம்
அந்ருணீஜாயதே சத்ய :
தனம் சீக்ர - மவாப்னுயாத்
அகோபில நிவாஸாய ப்ரக்லாத வரதாத்மனே
மஹாவீரஜகந்நாத ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்
ருணவிமோச நாதாய ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்.

கடன் தொல்லையிலிருந்து விடுபட அங்காரகன் ஸ்லோகம்
மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:
ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக:
அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல
த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய.
இந்த சுலோகத்தை தினமும் காலையில் 11முறை பாராயணம் செய்யவும்.

நீண்ட ஆயுள் பெற, மரண பயம் நீங்க ஸ்ரீ ருத்ரம்

நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய - த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:

மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்
த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருஹ மிவ பந்தனாத் ம்ருத்யோர் மூஷியமா ம்ருதாத்!

மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்
(மார்க்கண்டேயர் அருளியது)
இந்த மார்க்கண்டேய ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு எமபயம் நீங்கும். நீண்ட ஆயுள் உண்டாகும்.
ஓம் ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும் நீலகண்டம் உமாபதிம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுகரிஷ்யதி!
காலகண்டம் கால மூர்த்திம் காலாக்னிம் கால நாசனம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
நீலகண்டம் விருபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
அனந்தம் அவ்யயம் சாந்தம் அக்ஷமாலா தரம் ஹரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
ஆனந்தம் பரமம் நித்யம் கைவல்ய பத்தாயினம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
தேவதேவம் ஜகன்னாதம் தேவேசம் வ்ருஷபத்வஜம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
ஸ்வர்க்கா பவர்க தாதாரம் ஸ்ருஷ்டி ஸ்திதியந்த காரணம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
கங்காதரம் சஸிதரம் சங்கரம் சூல பாணிநம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
பஸ்மோத் தூளித சர்வாங்கம் நாகாபரண பூஷிதம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
அர்த்தநாரீஸ்வரம் தேவம் பார்வதீ பிராணநாயகம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
நீலகண்டம் விரூபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
வாமதேவம் மகாதேவம் லோகநாதம் ஜகத்குரும்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
த்ரயக்ஷம் சதுர்ப்புஜம் சாந்தம் ஜடாமகுடதாரிணம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
ப்ரளய ஸ்திதி கர்த்தாரம் ஆதகர்த்தாரம் ஈஸ்வரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
வ்யோமகேசம் வ்ருபாக்ஷம் சந்திரார்க்கிருத சேகரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
கல்பாயுர் தேகிமேபுண்யம் யாவதாயுர் அரோகரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
சிவேசாரம் மஹாதேவம் வாமதேவம் ஸதாசிவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்
ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே
அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம
ஸம்ஸார வைத்ய ஸர்வக்ஞ பிஷஜாம் அபியோ பிஷக்
ம்ருத்யுஞ்ஜய: ப்ர ஸன்னாத்மா தீர்க்கம் ஆயு ப்ரயச்சது

நோய்கள் விலகவும் - நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திரி மந்திரம்
தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். திருப்பாற்கடலைக் கடையும்பொழுது அமிர்த கலசத்துடன் வந்தவர். கீழ்க்குறிப்பிட்ட அவருடைய மந்திரத்தை தினமும் காலை, மாலை வேளைகளில் பக்தியுடன் கூறிவந்தால் கொடிய நோய்கள் விலகும். நோயற்ற வாழ்வு கிட்டும். மேலும் மருத்துவமனைகளில் தன்வந்திரி படத்தை வைத்து இந்த மந்திரத்தையும் அதன்கீழ் எழுதி வழிபட்டால் அந்த மருத்துவமனை பிரபல்யமடையவும். தன்வந்திரியின் அருள் கிட்டும்.

ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய
தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா

தன்வந்திரி ஸ்லோகம்
சதுர்புஜம் பீத வஸ்திரம்
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

பஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று)
பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம் நாள் வருவது பஞ்சமி திதி. பஞ்ச என்றால் ஐந்து எனப்பொருள். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும். பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணெய் கலந்து குத்துவிளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும். வேண்டுதல்களை மனதிற்குள் நினைத்துக் கொண்டே ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி கற்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ.

ஆபத்துக்கள் விலக
சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும்.
தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும்.
விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது
தடவை - கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும்.

மஹா சுதர்ஸன மஹாமந்திரம்
ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் ÷க்ஷõபன
கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா
ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம்

பிருஹஸ்பதி மந்திரம்
இம்மந்திரத்தை தினமும் பாராயணம் செய்வதால் செல்வம், அறிவு, சந்தானம் ஆகியவை கிட்டுவதுடன் ஆயுள் அதிகரிக்கும். மேலும் 1, 3, 6, 8, 12 முதலிய இடங்களில் குருவாசம் செய்தால் ஏற்படும் தோஷங்களும் நீங்கி குருவின் அருள் கிட்டும்.
1. ஸ்ரீ கணேஸாய நம: ஓம்
குருர் ப்ருஹஸ்பதிர் ஜீவ:
ஸுராசார்யோ விதாம் வர:
வாகீஸோ தி யோ தீர்க்க-
ஸமஸ்ரு: பீதாம்பரோ யுவா
2. ஸுதா-த்ருஷ்டிர் க்ர ஹாதீஸோ
க்ரஹ-பீடா-அபஹாரக:
தயா-கரஸ் ஸெளம்ய மூர்தி:
ஸுரார்ச்ய: குட்மல த்யுதி:
3. லோக்-பூஜ்யோ லோக-குரு
நீதி-க்ஞோநீதி-காரக
தாரா-பதிஸ்ச ச ஆங்கிரஸோ
வேத-வேத்யோ பிதாமஹ
4. பக்த்யா ப்ரஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா
நாமானி ஏதாநி ய: படேத்
அரோகீ பலவான் ஸ்ரீமான்
புத்ரவான் ஸ பவேந் நர:
5. ஜீவேத் வர்-ஸதம் மர்த்யோ
பாபம் நஸ்யதி நஸ்யதி
ய: பூஜயோத் குரு-தினே
பீத-கந்த-அக்ஷத-அம்பரை:
6. புஷ்ப-தீப-உபஹாரைஸ்ச
பூஜயித்வா ப்ருஹஸ்பதிம்
ப்ராஹ்மணான் போஜயித்வா
பீடா-ஸர்ந்திர் பவேத் குரோ:

கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க
கலைமகளுக்கு குரு ஹயக்ரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். திருமாலின் உருவங்களில் ஒன்றாக விளங்குபவர். கல்வியில் சிறப்படைய இந்த சுலோகத்தைத் தினமும் காலை, மாலை கூறி வந்தால் நல்ல கல்வி கிடைக்கும்.

ஹயக்ரீவர் மூலமந்திரம்
உத்கீத ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோசிந்த்ய
ஸர்வம் போதய போதய

ஹயக்ரீவர் காயத்ரீ
ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரசோதயாத்

ஹயக்ரீவர் தியான ஸ்லோகம்
1. ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே
2. சங்க சக்ர மஹாமுத்ரா
புஸ்தகாட்யம் சதுர்புஜம் சம்பூர்ணம்
சந்த்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே

சரஸ்வதி காயத்ரீ
ஓம் வாக் தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி
தந்நோ வாணீ ப்ரசோதயாத்
ஓம் வாக் தேவீ ச வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தந்நோ வாணீ ப்ரசோதயாத்

சரஸ்வதி தியான ஸ்லோகம்
1. ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா
2. ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸீதாம்சு ஸமவிக்ரஹாம்
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் ச சுகம் கரை
3. சதுர்பிர்த்தததீம் தேவீம் சந்த்ரபிம்ப ஸமானனாம்
வல்லபாம் அகிலார்த்தானாம் வல்லகீ வாதனப்ரியாம்
4. பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதிதேவதாம்
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி பாமினீம் பரமேஷ்புன
5. சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்
நமாமி தேவி வாணீ த்வாம் ஆச்ரிதார்த்த பர்தாயினீம்
6. பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம
7. பாசாங்குச தரா வாணீ வீணாபுஸ்தக தாரிணீ
மம வக்த்ரே வஸேந்தித்யம் ஸந்துஷ்டா ஸர்வதா சிவா
8. சதுர்தசஸூ வித்யாஸூ நமதே யா ஸரஸ்வதீ
ஸாதேவி க்ருபயாயுக்தா ஜிஹ்வாஸித்திம் கரோதுமே
9. பாஹிமாம் பாவனே தேவி ரக்ஷ ராக்ஷஸநாசினி
அவ மாம் அம்புஜாவாஸே த்ராஹிமாம் துஹினப்ரபே
10. தேஹி தேவி கலாதாஷ்யம் வாணி வாக்படுதாம் திச
ஸரஸ்வதி ஸூதான் ரக்ஷ கலே பாலயமே குலம்

சரபேஸ்வரர்
இந்த தியான சுலோகத்தை காலையும், மாலையும் கூறி வந்தால் பேராபத்திலிருந்தும், பெரும் நஷ்டத்திலிருந்தும், கொடும் நோயிலிருந்தும் விடுபடலாம். இவரை வழிபடுவதால் பேராபத்து, பூகம்பம், தீ விபத்து, மண்மாரி, இடி, புயல், மின்னல், பரிகாரம் காணமுடியாத துன்பம், தீராத வியாதிகள், மனநலம் இல்லாமை, விஷபயம், பூதப் பிரேத பைசாசம் ஆகியவைகளின் பயம் நீங்கும் என வியாசர் லிங்கபுராணம் 96வது அத்தியாயத்தில் கூறியுள்ளார்.



தியான ஸ்லோகம்
ஹூம்காரீ சரபேஸ்வர: அஷ்ட சரண:
பக்ஷ?சதுர் பாஹூக:
பாதர் கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர:
காலாக்னி கோடித்யுதி:
விச்வ ÷க்ஷõப நிருஸிம்ஹ தர்ப்ப சமன:
பிரும்மேந்திர முக்யைஸ்துத:
கங்கா சந்தரதர: புரஸ்த சாப:
ஸத் யோரிபுக் னோஸ்து ந:

மூல மந்திரம்
ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர
ஹாஸி, ப்ராணக்ரஹாஸி
ஹூம் பட் ஸர்வ சத்ரு சம்ஹாரனாய
சரப ஸாலுவாய பக்ஷ?ராஜாய ஹூம்பட் ஸ்வாஸா.

சரபேஸ்வரர் காயத்ரீ
ஓம் ஸாலுவேசாய வித்மஹே பக்ஷ? ராஜாய தீமஹி
தந்நோ சரப : ப்ரசோதயாத்

திருமணம் நடைபெற பெண்கள் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

இந்த ஸ்லோகத்தை கல்யாண சுந்தரேசுவரர் உமாதேவியை தினமும் வணங்கி மனதில் தியானித்து குறைந்தது 45 நாட்களாவது பக்தியோடு சொல்லி வந்தால் திருமணம் நிச்சயமாக நடைபெறும் என்பது நம்பிக்கை.
தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திரப் பிரியபாமினி
விவாக பாக்யம் ஆரோக்யம்
புத்ரலாபம் ச தேஹி மே
பதிம் தேஹி சுகம் தேஹி
சௌபாக்யம் தேஹி மே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே சிவ சுந்தரி
காத்யாயனி மகாமாயே
மகா யோக நிதீஸ்வரி
நந்தகோப சுதம் தேவம்
பதிம்மே குருதே நம:"


திருமணம் கைகூட
இந்த ஸ்லோகத்தை காலை, மாலை இருவேளையும் பதினெட்டு தரம் ஜபித்து வர திருமணம் ஆகாத ஆண், பெண் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும்.
கல்யாணரூப: கல்யாண: கல்யாண குண ஸம்ரய:
ஸுந்தரப்ரூ: ஸுநயந:ஸுலலாட: ஸுகந்தர:

எமபயம் தீர, மன வலிமை பெற ப்ரத்யங்கிரா தேவி மந்திரம்
ஓம் ஹ்ரீம் யாம் கல்பயந்தினோரய
க்ருத்யாம் க்ரூராம் வதுரமிவே
ஹ்ராம்தாம் ப்ரம்ஹணா அவநிர்ணுத்ம
ப்ரத்யக் கர்த்தாரம் ச்சது
தினமும் காலையில் குளித்து விட்டு மனதில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை சொல்லவும்.

மஹா ப்ரத்யங்கிரா தேவியின் மூல மந்திரம்
ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே
கராள தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கிரே
க்ஷம் ஹ்ரீம் ஹும் பட்

கெட்ட கனவுகள் வராமலிருக்க
அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம்:
ஸோமம் ஜனார்த்தனம் ஹம்சம்:
நாராயணம் க்ருஷ்ணம் ஜயேத்
துர் ஸ்வப்பன சாந்தயே.
இரவில் கெட்ட கனவுகள் வராமல் இருக்க இந்த ஸ்தோத்திரத்தை படுக்கையில் அமர்ந்து கூறிவிட்டுத் தூங்கவும்.

அர்க்கள ஸ்தோத்ரம்
(எல்லாவித இடையூறுகளும் நீங்கி, எல்லா காரியங்களிலும் வெற்றி பெற)
ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலினீ
துர்க்கா க்ஷமா சிவதாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே
ஜயத்வம் தேவிசாமுண்டே ஜயபூதார்த்தி ஹாரிணி
ஜயஸர்வகதே தேவி காளராத்ரி நமோஸ்துதே
மதுகைடப வித்ராவி விதாத்ரு வரதே நம:
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்வி÷ஷா ஜஹி
மஹிஷாஸூர நிர்ணாச விதாத்ரி வரதே நம:
ரக்தபீஜவதே தேவி சண்டமுண்டவிநாசினி
சும்பஸ்யைவ நிசும்பஸ்ய தூம்ராக்ஷஸ்யச மர்தினி
வந்தி தாங்க்ரியுகே தேவி ஸர்வ ஸெளபாக்ய தாயினி
அசிந்த்ய ரூபசரிதே ஸர்வ சத்ரு வினாசினி
நதேப்யஸ் ஸர்வதா பக்த்யா சண்டிகே ப்ரணதாயமே
ஸ்துவத்ப்யோ பக்திபூர்வம் த்வாம் சண்டிகே வ்யாதிநாசினி
சண்டிகே ஸததம் யேத்வாம் அர்ச்சயந்தீஹ பக்தித:
தேஹி ஸெளபாக்யமாரோக்யம் தேஹிமே பரமம்ஸீகம்
விதேஹி த்விஷாதாம் நாசம் விதேஹி பலமுச்சகை
விதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ச்ரியம்
ஸூராஸூர சிரோத்ன நிக்ருஷ்ட சரணேம்பிகே
வித்யாவந்தம் யசஸ்வந்தம் லக்ஷ?மீவந்தம் ஜனம் குரு
ப்ரசண்டதைத்ய தர்ப்பக்னே சண்டிகே ப்ரணமதாயமே
சதுர்புஜே சதுர்வக்த்ர ஸம்ஸ்துதே பரமேச்வரீ
க்ருஷ்ணேண ஸம்ஸ்துதே தேவி சச்வத்பக்த்யா ஸதாம்பிகே
ஹிமாசல ஸூதாநாத பூஜிதே பரமேச்வரீ
இந்த்ராணீ பதிஸத்பாவ பூஜிதே பரமேச்வரி
தேவி ப்ரசண்ட தோர்த்தண்ட தைத்ய தர்ப்ப விநாசினி
தேவி பக்த ஜனோத்தாம தத்தானந்தோதயேம்பிகே
பத்னீம் மனோரமாம் தேஹி மனேவ்ருத்தானு ஸாரிணீம்
தாரீணீம் துர்க்க ஸம்ஸார ஸாகரஸ்ய குலோத்பவாம்
இதம் ஸ்தோத்ரம் படித்வா து மஹாஸ்தோத்ரம் படேன் நர:
ஸது ஸப்த சதீ ஸங்கயா வரமாப்னோதி ஸம்பதாம்.

சர்ப்ப தோஷம் நீங்க
நர்ம தாயை நம: ப்ராத
நர்ம தாயை நமோ நிசி
நமோஸ்து நர்மதே துப்யம்
த்ராஹிமாம் விஷ ஸர்பத !

மாலையில் ஜபிக்க வேண்டிய மங்கள ஸ்லோகங்கள்
விபூதி, குங்குமம் தரித்து, தீபத்தை ஏற்றி வைத்து ஒரு தட்டில் விபூதி, குங்குமத்தை சாமிபடத்தின் முன் வைத்து மூன்று முறை பாராயணம் செய்து பிறகு விபூதி, குங்குமத்தை உபயோகப்படுத்தினால் சகல மங்களமும் உண்டாகும்.

1. பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதி ச
ஜபேந் நாமத்ரயம்நித்யம் மஹாரோக நிவாரணம்
2. நித்யான்னதான நிரதம் ஸச்சிதானந்த விக்ரஹம்
ஸர்வரோக ஹரம் தேவம் ஸுப்ரம்மண்ய முபாஸ்மஹே
3. பஞ்சாபகேச ஜப்யேச ப்ரணதார்த்தி ஹரேதி ச
ஜபேந் நாமத்ரயம் நித்யம் புனர் ஜன்ம ந வித்யதே
4. ரட்ச பஞ்ச நதீநாத தயாஸிந்தோ மஹேச்வர
அநாதநாத பக்தானாம் அபயம் குரு சங்கர
5. ஸுமீனாக்ஷ? ஸுந்தரேசௌ பக்த கல்பமஹீருதௌ
தயோரநுக்ர ஹோ யத்ர தத்ர சோகோ ந வித்யதே
6. ஸ்ரீ கண்ட பார்வதீ நாத தேஜிநீபுர நாயக
ஆயுர்பலம் ச்ரியம் தேஹி ஹர மே பாதகம் ஹர
7. கௌரீவல்லப காமாரே காலகூட விஷாசன
மாமுத்ரா பதம் போதே: த்ரிபுரக்நாந்தகாந்தக
8. கௌரீபதே நமஸ்துப்யம் கங்காசந்த்ர கலாதர
அசேஷ க்லேச துரிதம் ஹராசு மம சங்கர
9. மஹாதேவம் மஹேசானம் மஹேச்வரம் உமாபதிம்
மஹா ஸேன குரும் வந்தே மஹாபய நிவாரணம்
10. ம்ருத்யுஞ் ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே
அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம:
11. ச்ரிய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
12. மங்களம் கோசலேந்த்ராய மஹநீய குணாத்மனே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வ பௌமாய மங்களம்
13. க்ருஷ்ண: கரோது கல்யாணம் கம்ஸ குஞ்சரீ கேஸரீ
காளிந்தீ ஜல கல்லோல கோலாஹலகுதூஹலீ
14. ஸ்ரீ ராம சந்திர: ச்ரிதபாரிஜாத: ஸமஸ்த கல்யாண குணாபிராம:
ஸீதாமுகாம் போருஹ சஞ்சரீக: நிரந்தரம் மங்கள மாத நோது
15. காஞ்சநாத்ரி நிபாங்காய வாஞ்சிதார்த்த ப்ரதாயிநே
அஞ்சநா பாக்ய ரூபாய ஆஞ்சநேயாய மங்களம்
16. பீதாம்பரம் கரவிராஜித சங்க சக்ர கௌ மோதகீ ஸரஸிஜம் கருணாஸமுத்ரம்
ராதாஸஹாயமதி ஸுந்தர மந்தஹாஸம் வாதாலயேச மநிசம் ஹருதி பாவயாமி
17. குண ரோகாதி தாரித்ரிய பாபக்ஷúபதப ம்ருத்யவம்
பயக்ரோத மந: க்லேசா: நச்யந்து மம ஸர்வதா !

ஜய ப்ரத ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்தோத்ரம்
ஜயத்தை அளிக்கும், ஐஸ்வர்யம், கல்வி, ஞாபசக்தி அதிகரிக்கும். கடன் தொல்லை, வியாதி நீங்கும்.

ஜய தேவேந்த்ரஜா காந்த ஜய ம்ருத்யுஞ் ஜயாத்மஜ
ஜய சைலேந்த்ரஜா ஸூநோ ஜய சம்புகணாவ்ருத
ஜய தாரக தர்பக்ன ஜய விக்னேச்வராநுஜ
ஜய தேவேந்த்ர ஜாமாத: ஜய பங்கஜ லோசன
ஜய சங்கரஸம்பூத ஜய பத்மாஸநார்ச்சித
ஜய தாக்ஷயணீஸூநோ ஜயகாசவநோத்பவ
ஜய பாகீரதி ஸூநோ ஜய பாவக ஸம்பவ
ஜய பத்மஜகர்வக்ந ஜய வைகுண்ட பூஜித
ஜய பக்தேஷ்ட வரத ஜய பக்தார்த்தி பஞ்சன
ஜய பக்த பராதீன ஜய பக்த ப்ரபூஜித
ஜய தர்மவதாம் ச்ரேஷ்ட ஜய தாரித்ரிய நாசன
ஜய புத்திமதாம் ச்ரேஷ்ட ஜய நாரத ஸந்நுத
ஜய போகீச்வராதீச ஜயதும்புருஸேவித
ஜய ஷடதாரகாராத்ய ஜய வல்லீ மனோஹர
ஜய யோக ஸமாராத்ய ஜய ஸூந்தர விக்ரஹ
ஜய ஸெளந்தர்ய கூபார ஜய வாஸவ வந்தித
ஜய ஷட்பாவ ரஹித ஜய வேதவிதாம் பர
ஜய ஷண்முக தேவேச ஜய போ விஜயீபவ

ஸ்ரீ துர்கா த்வாத்ரிம்சந் நாமமாலா

ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களை அஞ்சேல் என ரட்சிப்பது ஸ்ரீ துர்கா தேவியின் திருநாமம். இத்தகைய அன்னையின் 32 திருநாமங்கள் அடங்கிய இந்த ஸ்தோத்ரத்தை ஜபித்தால் மலை போன்ற இடர்களெல்லாம் நொடியில் நீங்கும்.

துர்கா, துர்காதிஸமநீ, துர்காபத் விநிவாரணீ
துர்கமச்சேதிநீ, துர்கஸாதிநீ, துர்கநாஸிநீ
துர்கதோத்தாரிணீ, துர்கநிஹந்த்ரீ, துர்கமாபஹா
துர்கமஜ்ஞாநதா, துர்க தைத்யலோக தவாநலா
துர்கமா, துர்கமாலோகா, துர்கமாத்ம ஸ்வரூபிணீ
துர்கமார்க ப்ரதா, துர்கம வித்யா, துர்கமாஸ்ரிதா
துர்கமஜ்ஞாத ஸம்ஸ்தாநா, துர்கம த்யான பாஸிநீ
துர்க மோஹா, துர்கமஹா, துர்க மார்த்த ஸ்வரூபிணி
துர்க மாஸீர ஸம்ஹந்த்ரீ, துர்கமாயுத தாரிணீ
துர்க மாங்கீ, துர்கமாதா, துர்கம்யா, துர்கமேஸ்வரி
துர்கபீமா, துர்கபாமா, துர்கபா, துர்கதாரிணீ

செல்வம் மேலும் வளர

இந்த ஸ்லோகத்தை காலையில் எழுந்தவுடன் பதினோரு தடவை பாராயணம் செய்து வந்தால், வறுமை ஒழியும், தனதான்யங்கள் விருத்தியாகும்.
அநர்க்க ரத்ந ஸம்பூர்ணோ மல்லிகா குஸும ப்ரிய
தப்த சாமீகராகாரோ ஜித தாவாநலாக்ருதி:

ஆபத்துகள் அகல

இந்த ஸ்லோகத்தை காலை வேளையில் பத்து தடவை ஜெபித்து வர, நம்மைச் சுற்றியுள்ள சகல துன்பங்களும், ஆபத்துகளும் அறவே அகன்று விடும்.
சிந்தாயோக ப்ரயமநோ ஜகதாநந்த காராக:
ரய்மிமாந்த புவநேயய்ச தேவாஸுர ஸுபூஜித:

சிறை பயம் நீங்க

இந்த ஸ்லோகத்தை காலையில் நூற்று எட்டு தரம் உருக்கமாகப் பாராயணம் செய்து வர சிறைவாச பயம் நீங்கும்.
கணாகரோ குணய்ரேஷ்ட்ட: ஸச்சிதாநந்த விக்ரஹ:
ஸுகத: காரணம் கர்த்தா பவபந்த விமோசக்:

ஞானம் விருத்தியடைய
இந்த ஸ்லோகத்தை காலையிலும், மாலையிலும் படிப்பதற்கு முன், பதினோரு தடவை பாராயணம் செய்து வந்தால் ஞானம் விருத்தியடைவதோடு படிப்படில் சி
றந்து விளங்குவார்கள். சிறந்த அறிவாளியாகவும் திகழ்வர்.
வர்த்திஷ்ணுர் வரதோ வைத்யோ ஹரிர் நாராயணோச்யுத:
அஜ்ஞாநவந தாவாக்நி: பரஜ்ஞாப்ராஸாத பூதி:

நினைத்த காரியம் நிறைவேற
இந்த ஸ்லோகத்தை தினமும் இரவில் உறங்குவதற்கு முன் பதினோரு தடவை பாராயணம் செய்து வர நினைத்த காரியம் எதுவாகினும் நிறைவேறும்.
சிந்தாமணி: ஸுரகுரு: த்யேயோ நீராஜநப்ரிய:
கோவிந்தோ ராஜராஜேரா பஹு புஷ்பார்ச்ச நப்ரிய:

எல்லா விருப்பங்களும் நிறைவேற யோக நரசிம்மர் ஸ்லோகம்
ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம்
அபய ஹஸ்தாங்கித கருணாமூர்த்தே
ஸர்வ வியாபிதம் லோகரக்ஷகாம்
பாபவிமோசன துரித நிவாரணம்
லட்சுமி கடாட்ச சர்வாபீஷ்டம்
அநேகம் தேஹி லட்சுமி நிருஸிம்மா

ஐயனே! லட்சுமி நரசிம்ம பிரபோ! மிக பயங்கரமான உருவமும் சிங்கமுகமும் உடையவரே! கருணை நிரம்பியவரே! அபயம் காக்கும் கரத்தினை உடையவரே! உலகைக் காக்கும் பொருட்டு எங்கும் நிறைந்த பெருமானே! எங்களது பாவங்களை உடனடிகயாகக் களைந்து நலம் தருபவரே! எங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற அன்னை லட்சுமியின் அருளை எங்களுக்குக் குறைவில்லாமல் அளித்தருளும்.

என்றும் ஐஸ்வர்யம் நிலைக்கவும், நிம்மதி அடையவும் ஸ்லோகம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் !
கமலே கமலாலயே ப்ரஸீதப்ரஸீத !
ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் மஹாலக்ஷ?ம்யை நமஹ,
ஓம் ஸ்ரீம் ஹரீம், ஐம்
ஞானாயை, மஹாலக்ஷ?ம்யை, ஐஸ்வர்யாயை
கமலதாரிண்யை, சக்த்யை, சிம்ஹவாஹின்யை நமஹ !

சுதர்சன சக்கரத்தாழ்வார் மந்திரம்
வெற்றியைக் கொடுக்கும். நோய் நீக்கும். பயம் விலக்கும்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய-கோவிந்தாய கோபீ ஜநவல்லபாய-பராய பரம புருஷாய பரமாத்மநே-பரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத-விஷ ஆபிசார
அஸ்த்ர ஸஸ்த்ரான் ஸம்ஹர ஸம்ஹர-ம்ருத்யோர் மோசய மோசய.
ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்ஸநாய-ஓம் ப்ரோம் ரீம் ரம் தீப்த்ரே ஜ்வாலா பரீதாய-ஸர்வதிக் க்ஷபண கராய ஹும் பட் பரப்ரஹ்மணே-பரம் ஜ்யோதிஷே
ஸ்வாஹா.
ஓம் நமோ பகவதே ஸுதர்ஸநாய-ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்ஸநாய-மஹாசக்ராய-மஹா ஜ்வாலாய-ஸர்வரோக ப்ரஸமநாய-கர்ம-பந்த-விமோசனாய
-பாதாதி-மஸ்த பர்யந்தம் வாதஜநித ரோகாந், பித்த-ஜநிதி-ரோகாந், ஸ்லேஷ்ம ஜநித ரோகாந், தாது-ஸங்கலிகோத்பவ-நாநாவிகார-ரோகாந் நாஸய நாஸய, ப்
ரஸமய ப்ரஸமய, ஆரோக்யம் தேஹி தேஹி, ஓம் ஸஹஸ்ரார ஹும் பட் ஸ்வாஹா.

சுதர்சன காயத்ரி
ஸுதர்ஸநாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ர: ப்ரசோதயாத்

சுதர்சன மூல மந்திரம்
ஓம், ஸ, ஹ, ஸ்ரா, ர, ஹும், பட்.

மாலையில் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்து சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபஜ்யோதி பரம் பிரம்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன
தீபோஹரது மே பாபம்
சந்த்யாதீப நமோஸ்துதே
சுபம் கரோது கல்யாணம்
ஆரோக்யம் சுகசம்பதம்
மம புத்தி ப்ரகாசாய
தீப ஜ்யோதிர் நமோஸ்துதே"

முக்கியமான 3 சக்திகள்

முக்கியமான 3 கலைகள்

முக்கியமான 3 சக்திகள்

வாழ்க்கையில் எந்த ஒரு மனிதரும் நோயில்லாமல் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் குறிப்பிட்ட வயதுக்கு மேல் மருந்து, மாத்திரைகளால் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எந்த மனிதரும் உடல், உயிர், உள்ளம் இந்த மூன்றுக்கும் ஓரளவாவது முக்கியத்துவம் தந்து விட்டால் அவர்களது வாழ்வில் எந்த நோயும் இல்லாமல் நலமுடன் வாழ்வார்கள். இந்த மூன்றுக்கும் தேவையான 3 முக்கியமான சக்திகளைப் பற்றி சிறிது விரிவாகப் பார்ப்போம்!

யோகக் கலை: புதிதாக ஒரு தையல் மெஷின் வாங்குகிறோம். அது சில ஆண்டுகள் மட்டும் நன்றாக இருந்த பின்னர், அதன் பாகங்கள் தேய்மானம் அடைந்து விடுகின்றன. தினசரி அதனை எண்ணெய் போட்டு சுத்தம் செய்வது அந்த மெஷினுக்கு அவசியமாகிறது. அதேபோலத்தான் மனித உடலும் தேய்மானம் அடையும் போது மெஷினைப் பாதுகாப்பது போல பாதுகாக்க வேண்டியுள்ளது.
நமது உடலை எப்போதும் இளமையோடும், முகப் பொலிவோடும் வைத்திருக்க யோகக் கலை முக்கியமாகும். இருக்கிற அத்தனை யோகாசனங்களையும் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. தினசரி 10 நிமிடம் செய்தாலும் கூட போதுமானது. சர்க்கரை நோய், மூலநோய், மூட்டு வலிகள் இருப்பவர்கள் கூட இக் கலையினைத் தொடர்ந்து செய்து வந்தால், நோய்களின் தாக்கம் குறைவதை உணர முடியும்.
எனவே, எந்த மனிதரது உடல் ஆரோக்கியத்திற்கும் யோகக் கலை முக்கியமான சக்திகளில் ஒன்றாகும்.

பிராணாயாமக் கலை: உடல் நன்றாக இருந்தால்தானே உயிர் இருக்கும். உயிர் போய் விட்டால் எப்போது தூக்குவார்கள் என்கிறார்கள்? சாலையின் ஓரத்தில் அதிக சுமை ஏற்றி நின்று கொண்டிருக்கும் லாரி அதில் இருக்கும் டயரால்தான் நிற்கிறது என்றாலும், உண்மையில் லாரியின் டயருக்குள் இருக்கும் காற்றால் தான் நிற்கிறது.
டயரில் நிரம்பி இருக்கும் காற்று இல்லையென்றால், லாரி சாய்ந்து விடும். அதுபோலவே மனித உடலும் மூச்சு என்று கூறப்படும் காற்றால் அதாவது உயிர் சக்தியால்தான் நிற்கிறது. அந்த உயிர்சக்தியை எப்போதும் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளும் கலைக்கு பிராணாயாமக் கலை என்கின்றனர். நமது உடலில் ஏதேனும் ஓர் உறுப்பு நோய்வாய்ப்பட்டிருந்தாலும், நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து அந்த இடத்தில் சிறிது நேரம் நிறுத்திவைத்து பழுதான நம் உறுப்பையும் சரிசெய்து விடலாம் என்கிறார்கள் இக்கலையை கற்றுத் தேர்ந்த வல்லுநர்கள்.
எனவே, எந்த மனிதருக்கும் உயிர்சக்தியை புத்துணர்வோடு வைத்துக் கொள்ள பிராணாயாமம் என்ற சக்தியும் முக்கியமான சக்திகளில் ஒன்றாகிறது. பிராணன் போயிருச்சு என்று சொல்லாமல் இருக்கவும் நலமோடும், நீண்ட ஆயுளோடும் இருக்கவும் பிராணாயாமம் அவசியம்.

தியானம்: நமது உடலில் உள்ளம் என்ற ஓர் உறுப்பு இருக்கிறதா? அது கறுப்பா, சிவப்பா, வெள்ளையா, சிறியதா, பெரியதா என்றால் எதுவும் இல்லை. நமது உடலிலேயே இல்லாத ஓர் உறுப்பை “உள்ளம்’ என்றும் “மனசு’ என்றும் சொல்கிறோம். கண்போன போக்கிலே கால் போகலாமா? கால்போன போக்கிலே மனம் போகலாமா? என்ற கண்ணதாசனின் கவிதை வரிகள் கூட நமக்கு நினைவுக்கு வரலாம்.
சூரியனின் ஒளிக்கதிர்கள் எல்லா இடத்திலும் பரவி இருக்கின்றன. அக் கதிர்களை ஒரு லென்ஸ் மூலம் குவிக்கிற போது அது ஒரு காகிதத்தை கூட எரித்து விடும் சக்தி பெறுகிறது. இதுபோலவே மனதை அலைபாய விடாமல் நமது சொல்படி நடக்க மன ஒருமைப்பாடு அவசியமாகிறது. மனதை ஒருமுகப்படுத்தும் கலையைக் கற்றுக் கொண்டால் மேம்பட்ட ஆற்றல்களை நம்மால் பெற முடியும்.
எனவே, உள்ளத்தை அதாவது மனதை ஒருமுகப்படுத்திட, மேம்படுத்திட தியானம் என்கிற சக்தியும் முக்கியமானதாகிறது.
டிரைவர் இருந்தால் தான் காரை ஓட்ட முடியும். காரும் இருந்து டிரைவரும் இருந்து பெட்ரோல் இல்லையேல் கார் ஓடாது. எனவே, கார் ஓட டிரைவரும், பெட்ரோலும் எப்படி முக்கியமோ, அதுபோல உடல் என்கிற காருக்கு மூச்சுக் காற்றான டிரைவரும், மனதை ஒருமுகப்படுத்தும் சக்தியான தியானம் என்கிற பெட்ரோலும் இருந்தால் தான் உடல் என்கிற கார் நன்றாக, வேகமாக ஓடும்.

யோகக் கலை, பிராணாயாமக் கலை, தியானம் இந்த மூன்று சக்திகளுக்கும் முக்கியத்துவம்கொடுத்து கற்றுக்கொண்டு அதனை தினசரி செய்யத் துவங்கி விட்டால் உடலில் நோய்களே வர வாய்ப்பில்லை.
எப்போதும் புத்துணர்வுடனும் இருக்க முடியும். எந்தச் செயலாக இருந்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி அதைச் சிறப்பாகச் செய்துவிட முடியும். சாதனைகள் பலவும் நிகழ்த்த முடியும்.
சுவாமி விவேகானந்தரின் கம்பீரமான தோற்றம், உயர்ந்த சிந்தனைகள், சிறப்பான செயல்பாடுகளுக்கு இவை மூன்றும்தான் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. இந்த மூன்றையும் முறையாகப் பயன்படுத்தியதால்தான் சித்தர்கள், முனிவர்கள் போன்றோர் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள்.
நம் உடல் உறுப்புகளில் ஒன்றாகவே ஆகி விட்ட செல்போன் தினசரி சார்ஜ் செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். அதைப்போலவே இந்த 3 சக்திகளையும் நமது உடலில் தினசரி சார்ஜ் செய்யக் கற்றுக் கொண்டால் சிறப்பாகச் செயல்பட முடியும். இல்லையேல் சார்ஜ் ஏற்றப்படாத செல்போனாகி விடுவோம்.
ஆரோக்கியத்துக்காக தினசரி ஒருமணி நேரமாவது ஒதுக்கவில்லையெனில், நோய்க்காக தினசரி பலமணி நேரங்களை ஒதுக்கவேண்டிய நிலை வந்துவிடும்!

சுபகாரியங்களில் வெற்றிலை பாக்கு பழம் கொடுப்பது ஏன்

சுபகாரியங்களில் வெற்றிலை பாக்கு பழம் கொடுப்பது ஏன்?


ஒரு முறை ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை தரிசிக்க ஒரு மாணவன் வந்திருந்தான். அவனிடம் பெரியவர் "என்ன படிக்கிறாய்?" என்றார். அவன் தாவரவியல் படிப்பதாகக் கூறினான். சுவாமிகள் தன் முன் வைத்திருந்த பழம் பாக்கு வெற்றிலைத் தட்டில் இருந்த வெற்றிலையைக் காட்டி "அதன் பெயர் என்ன?" என்று வினவினார்.

மாணவனும் 'வெற்றிலை' என்றான்.

"அதற்கு ஏன் வெற்றிலை என்று பெயர் வந்தது?" என்று சுவாமிகள் கேட்க மாணவன் சொல்லத் தெரியாமல் திகைத்தான்.

சுவாமிகள் கூறினார் "எல்லாக் கொடிகளும் பூவிடும், காய் காய்க்கும். ஆனால் வெற்றிலைக் கொடி பூக்ககாது, காய்க்காது. உண்ணக்கூடிய வெறும் இலை மட்டும் தான் விடும். அதனால் அது வெற்று இலை ஆயிற்று' என்றார்.

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு வெற்றிலையில் 'A' டு 'Z' எல்லா வைட்டமின்களும் இருக்கிறது. வெற்றிலையில் இரும்பு, சுண்ணாம்பு, பி.கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், லைகோபின், டோட்டல் பினால்ஸ், டோட்டல் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக்டிவிட்டி போன்ற 'டங்க் ட்விஸ்டர்கள்' இருக்கிறதென்று மருந்துகடை அன்னாச்சி நாக்கை சுழற்றினார்.

வெற்றிலை பாக்குடன் சுன்னாம்பு சேர்த்து சாப்பிட்டால் நீண்ட நேரம் நல்ல எனர்ஜி இருக்கும். வயிறு செரிமானத்திற்கு பெரிதும் உதவும். சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. வாயுத் தொல்லை நீங்கும். வெற்றிலையுடன் சுன்னாம்பு சேர்த்து சாப்பிடுவதால் கால்ஷியம் உடலில் சேரும்.

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும். தலை வலித்தால் பலர் வெற்றிலையை கிள்ளி தலையில் ஒட்டிக்கொள்வதை பார்த்திருப்போம்.

வெற்றிலைச் சாறும் சீரகமும் வயிற்று வலிக்கு நல்லது.

சளி இருமல் போன்றவற்றிர்கு வெற்றிலையுடன் சுக்கு கஷாயம் குடிப்பார்கள்.

வெற்றிலையையும் மிளகையும் சேர்த்து தின்றால் தேள் விஷம் கூட முறியும் என்பார்கள்.

வெற்றிலை பாக்கு சுன்னாம்புக் கலவை ஆண்மையின் உந்துதலுக்கு நல்லது. கணவனுக்கு மனைவி வெற்றிலை மடித்து கொடுத்து சந்தோஷப்படுத்துவது ஏன் என்று இப்போது புரிந்திருக்கும்.

அதனால் தான் சிறு வயது பிள்ளைகள் வெற்றிலை போட்டால் மாடு முட்டும் என்று பயமுறுத்துவார்கள். ஏதோ அடல்ஸ் ஒன்லி இலை போல கைவைக்க விடமாட்டார்கள். வாழைப்பழமும் வெற்றிலையும் ஆண்மைக்கு நல்ல தென்பதாலேயே கல்யாணம் மற்றும் சுபகாரியங்களுக்கும் ஒருவருக்கொருவர் வெற்றிலைபாக்கு பழம் கொடுத்து பரிமாரிக்கொள்கிறார்கள். குறிப்பாக பெண்கள் வீட்டிற்கு வரும் பிற பெண்களுக்கு வழியனுப்பும்போது வெற்றிலை பாக்கு பழம் வைத்து கொடுத்து வழியனுப்புகிறார்கள். அதாவது இதனால் எனக்கு கிடைத்த இன்பத்தை நீயும் உன் வீட்டில் அனுபவி என்பது பெண்களுக்குள்ளான சிம்பாலிக் 'கோட் வேர்ட்'.

ஏனெனில் கணவன் மனைவி உறவு எந்தளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறதோ அந்தளவிற்கு குடும்பம் பலப்படும். அதனால் வெற்றிலை பாக்கு பழம் இல்லாத சுபகாரியங்களும் நற்காரிய பரிமாற்றங்களும் நம் சமூகத்தில் பார்க்கவே முடியாது. நமக்கு குடும்பமே கோவில் அல்லவா!



கொசுறு: அந்த காலத்து ராஜாக்களெல்லாம் இப்படி பக்குவமாக வெற்றிலையை மடித்து கொடுப்பதர்கே சம்பளத்திற்கு ஆள் வைத்திருந்தார்களாம். சம்பளத்தில் வெற்றிலையும் அடங்குமாம்!

28 February 2016

ஐயனார் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்திருப்பார். மார்பில் பூணூல் அணிந்திருப்பார். இளைஞரைப்போன்றவர். கீரீடம் அணிந்திருப்பார். வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார், மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். சந்தனம் பூசியிருப்பார். வலதுகையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார். இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார். குதிரை மீதோ யானை மீதோ அமர்ந்திருப்பார்.

கண்மாய்க்கரை அல்லாத இடங்களில் உள்ள ஐயனார் நின்றபடி இருப்பார். ஐயனார் நிற்கும் ​​கோயில்களில் தேவியர்களும் நின்றபடி இருப்பர்.

ஐயனார் அல்லது சாஸ்தா வரலாறு

தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க வேண்டியிருந்தது. இதற்காகப் பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், விஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார். அவரது தோற்றத்தைக் கண்டவர்களின் மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது.

மோகினியானவள் ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று அவர்களின் மனத்தை அலைபாயச் செய்தார். இதனால் வேள்வி தடைபட்டது.


  • ஆனால், பிட்சாடனர் மோகினியின் உருவத்தில் காமமுற்று அவளை அடையவேண்டி விரட்டிச் சென்றார். அப்போது காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் பிறந்தவர் ஐயனார் அல்லது சாஸ்தா ஆவார்.


ஐயனார் மாசி மாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார்.ஐயனார் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்திருப்பார். மார்பில் பூணூல் அணிந்திருப்பார். இளைஞரைப்போன்றவர். கீரீடம் அணிந்திருப்பார். வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார், மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். சந்தனம் பூசியிருப்பார். வலதுகையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார். இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார். குதிரை மீதோ யானை மீதோ அமர்ந்திருப்பார்.

கண்மாய்க்கரை அல்லாத இடங்களில் உள்ள ஐயனார் நின்றபடி இருப்பார். ஐயனார் நிற்கும் ​​கோயில்களில் தேவியர்களும் நின்றபடி இருப்பர்

அகத்தியர் கருஆமையில் சித்து

கருஆமையில் முன்றானாமை என்றொரு வகை இருக்கிறதாம். அதை குருவருளால் கண்டு அதன் கருவை எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்தக் கருவை சிவப்பு பட்டுத் துணியால் சுற்றி திரியாக செய்து கொள்ள வேண்டுமாம். அந்தத் திரியை விளக்கில் வைத்து நெய்விட்டு தீபமேற்ற வேண்டுமாம். தீபமேற்றினால் திரி எரிந்து அந்தக் கருவானது கருகி இருக்குமாம்.

அப்போது அதை எடுத்து கல்வத்தில் போட்டு காரெள்ளுத் தைலம் சேர்த்து கடைந்து எடுத்தால் மையாகுமாம். அந்த மைக்கு சம எடை சவ்வாது சேர்த்து  திலகமாக இட்டு நான்கு திசையையும் சுற்றிப் பார்த்தால் வெகு தூரம் வரை தெளிவாய் தெரியுமாம்.

அப்படியே மேலும் கீழும் நன்றாகப் பார்த்தால் மேலே பார்க்கும் போது அண்டம் வரையும், கீழே பார்க்கும் போது பாதாளம் வரையும் தெளிவாகத் தென்படுமாம். அப்போது அங்கே பாதாளத்தில் சங்கநிதி, பதுமநிதி என்னும் இரண்டு நிதிகளும் ஒன்றாகி பெருநிதியாகத் தோன்றுமாம். அப்போது அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு பூரணத்தில் மனதை நிலை நிறுத்தி கைலாய நிதியைத் தேட, அட்டாங்க வளமைகள் அனைத்தும் வந்து சேரும் என்கிறார் அகத்தியர்.