youtube

29 February 2016

எது தானம் ? எது தர்மம் ?

எது தானம் ? எது தர்மம் ?
~~~~~~~~~~~~~~~~~~~
மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது.

சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார்.

சூரியனே,
என்ன தடுமாற்றம் உன் மனதில் ?
கேட்டது ஈசன்.

பரம்பொருளே..
பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.
ஆனால்,
எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது?
இது அநீதி அல்லவா? என
கேட்டார் சூரியத் தேவன்.

இறை சிரித்தது.
சூரியனே...
நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள்...

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....

ஆனால்,  தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர  தர்மமாகப் பெறவில்லை.
எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.
அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா ?

கேட்ட ஈசனை வணங்கிய சூரியத் தேவன்.
புரிந்தது இறைவா !
தானமும்
தர்மமும்
பாவமும்
புண்ணியமும்
எல்லாமும் நீயே
என்பதும் புரிந்தது என்றார்.

கேட்டு கொடுப்பது தானம் !
கேட்காமல் அளிப்பது தர்மம்!

கிழக்கு நோக்கு ஜபம் செய்தால் வசியம்

கிழக்கு நோக்கு ஜபம் செய்தால் வசியம்
தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும்
தெற்கு நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை
தென்மேற்கு நோக்கு ஜபம் செய்தால் வருமை
மேற்கு நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு
வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல்
வடக்கு நோக்கி ஜபம் செய்தால் தங்கம் கல்வி கிடைக்கும்
வடகிழ்க்கு நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்

சித்தர்களின் மூல மந்திரம்.


சித்தர்களின் மூல மந்திரம்.

நந்தீச மூல மந்திரம் …”ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!”

அகத்தியர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”
திருமூலர் மூல மந்த்திரம்…
“ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!”
போகர் மூல மந்திரம்…
“ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!”
கோரக்கர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!”
தேரையர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!”
சுந்தரானந்தர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!”
புலிப்பாணி மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!”
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!”
காக புசண்டர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!”
இடைக்காடர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!”
சட்டைமுனி மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!”
அகப்பேய் சித்தர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!”
கொங்கணவர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!”
சிவவாக்கியர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!”
உரோமரிஷி மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!”
குதம்பை சித்தர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!”
கருவூரார் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!”

சக்தி மந்திரம்!

சக்தி மந்திரம்!
அந்தரி சுந்தரி அதிபயங்கரி சக்தி
மந்தாகினி வாலைக்குமரி மஹாசக்தி
நிரந்தரி நீலி கால பைரவி
திரிசூலி தேவி மஹிஷாசுர மர்த்தினி
சரணம் சரணம் சரணம் தேவி
எனைக் காத்தருள்வாய மஹாசக்தி

இம்மந்திரம் ஐந்து முறை படிக்க வேண்டும்! அதன் பின்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைப் படிக்க வேண்டும்!

காரணமும் தனுவு  நினைக்கெனத் தந்தேன்
காளி நீ காத்தருள் செய்யே!

மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன்;
மாரவெம் பேசயினை அஞ்சேன்;
இரணமும் சுகமும் பழியு நற்புகழும்
யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்!

சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்!
தாயெனைக் காத்தருள் கடனே!

தவத்தினை எளிதாப் புரிந்தனள்; யோகத்
தனி நிலை ஒளியெனப் புரிந்தாள்;

சிவத்தினை எளிதாப் புரிந்தனள்; மூட்ச்
சித்தமும் தெளிவுறச் செய்தாள்;

பவத்தினை வெறுப்ப அருளினாள்; நாளும்
பான்மைகொ ளவள்மயம் புரிந்தாள்;

அவத்தினைக் களைந்தாள்; அறிவென விளைந்தாள்;
அருந்தவமா வாழ்கவிங் கவளே!

ஓம்  ஓம்  ஓம்!

நாகம்மன் மந்திரம்:

நாகம்மன் மந்திரம்:

ஓம் ரூபப் பிரபவம் நமஹ;
ஓம் சாரும் கேவும் நமஹ;
ஓம் சரவும் பரவும் நமஹ;
ஓம் நய்யும் மெய்யும் நமஹ;
ஓம் ஜெகமும் புரமும் நமஹ;
ஓம் காளத்தி மேளத்தி நமஹ;
ஓம் ஜாலும் மேலும் நமஹ;
ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;
ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;
ஓம் சரசாலி பிரசாலி நமஹ;
ஓம்   ஓம்   ஓம்!!

மிகவும் சக்திவாய்ந்த சக்தி மந்திரங்கள்!


மிகவும் சக்திவாய்ந்த சக்தி மந்திரங்கள்!

பூஜை வேளைகளில் சக்தி மந்திரம் சொல்வதற்கு!

மிகவும் சக்திவாய்ந்த மந்திரங்கள்! 

ஓம் காளி நமஹ; ஓம் மாகாளி நமஹ;
ஓம் ஜெய காளி நமஹ; ஓம் உக்கிர காளி நமஹ;
ஓம் உத்தண்ட காளி நமஹ; ஓம் ஓங்கார காளி நமஹ;
ஓம் ஆஙகார காளி நமஹ; ஓம் ருத்ர காளி நமஹ;
ஓம் நீலி நமஹ; ஓம் சூலி நமஹ;


ஓம் திரிசூலி நமஹ; ஓம் முப்புரத்து நீலி நமஹ;
ஓம் சங்கரி நமஹ; ஓம் பயங்கரி நமஹ;
ஓம் பூரணி நமஹ; ஓம் காரணி நமஹ;
ஓம் மோஹினி நமஹ; ஓம் யோகினி நமஹ;
ஓம் வர்த்தினி நமஹ; ஓம் மஹிஷாசுர மர்த்தினி நமஹ;
ஓம் ஆனந்த ரூபிணி நமஹ; ஓம் ராஜ சிம்மாஸினி நமஹ;
ஓம் பவானி நமஹ; ஓம் பைரவி நமஹ;
ஓம் ஈஸ்வரி நமஹ; ஓம் அகிலாண்டேசுவரி நமஹ;
ஓம் மந்தி தாரணி நமஹ; ஓம் ராஜ ராஜேசுவரி நமஹ;
ஓம் காளி ! ஓம் மாகாளி ஓம் ஓம் மாகாளி ஸ்வாஹ!

துர்க்கையம்மன் மந்திரம்

ஸ்ரீ சிவகாமி சங்கரி தேவி 
துர்க்கா தேவி சரணம்!
ஞான சக்தி சுந்தரி தேவி சரணம்
சிவப் பிரியாயை தேவி சரணம் சரணம்
இந்திரா தேவி மோஹினி சரணம்
மஹேந்திர ஜால மத்யஸ்த்தாயை
கமலாதேவி சரணம் சரணம்
பக்த ஜனப்பிரியாயை மோஹினி சரணம்
புவனேசுவரியே மாலினி தேவி சரணம்
மதனுல்லாஸ் மோஹினி சரணம் சரணம்
மஹாலஷ்மி சாவித்ரி தேவி சரணம்
மஹாபைரவ மோஹினி தேவி சரணம்
ருத்ராதேவி ஆதிசக்தி தேவி சரணம்
பங்கஜவல்லி துர்க்காதேவி சரணம் சரணம்!!

நட்சத்திரங்கள் – அதிர்ஷ‌டம் தரும் தெய்வங்கள்

நட்சத்திரங்கள் – அதிர்ஷ‌டம் தரும் தெய்வங்கள்

01. அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி 
02. பரணி – ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்
03. கார்த்திகை – ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்
04. ரோகிணி – ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்
05. மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்
06. திருவாதிரை – - ஸ்ரீ சிவபெருமான் 
07. புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்
08. பூசம் – ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்
09. ஆயில்யம் – ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்
10. மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்
11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி 
12. உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி 
13. அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி 
14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார் 
15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி 
16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்
17. அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்
18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்
19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர் 
20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்
21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்
22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்
23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப்பெருமான்
24. சதயம் - ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்
25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்
26. உத்திரட்டாதி ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்
27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.


நட்சத்திரங்கள் - கிரகம் – தெய்வம்


1. கார்த்திகைஉத்திரம்உத்திராடம் – சூரியன் – சிவன் 
2. ரோகிணிஅத்தம்திருவோணம் – சந்திரன் – சக்தி 
3. மிருகசீரிடம்சித்திரைஅவிட்டம் – செவ்வாய் – முருகன் 
4. திருவாதிரைசுவாதிசதையம் - ராகு – காளிதுரக்;கை 
5. புனர்பூசம்விசாகம்பூரட்டாதி – குரு – தட்சிணாமூர்த்தி 
6. பூசம்அனுசம்உத்திரட்டாதி – சனி – சாஸ்தா 
7. ஆயில்யம்கேட்டைரேவதி – புதன் – விஷ்ணு 
8. மகம்மூலம்அசுவினி – கேது – வினாயகர்


9. பரணிபூரம்பூராடம் – சுக்கிரன் – மகாலட்சுமி