youtube

17 May 2016

குரளி வசிய மந்திரம்

குரளி வசிய மந்திரம்



அரி அரிபகவான் ஆனந்தபகவான்

அரஹரசிவசிவ அம்பிகை துணையே

ஓம்நமோபகவதே உத்கண்ட பகவதே

உருதேறீ குழந்தை வாவா

உயிர்எனப்பண்ணும் உகம்மான தாயே வாவா

ஒரு கையில்பந்தும் ஒருகையில் செம்பு

ஒரு கையில்சூலமும் இப்படிபலபல

காரண காட்சிகள் காட்டும் கண்கட்டு

களறீவிளையாடும் காரணக் குரளி வாவா

குறளிவாவா நான்நினைத்த புஷ்பம் பொன்காசுபூதலம்

மொய்க்கப்புபுதுமைகள் காட்ட

தன்கையில் எடுத்து என்கையில் தருவாய்

தங்ககாசி உன்னுடைய சிங்காரம்

சிறுவேல்விழியும் மாகணவிரிப்பு

அதுமேல்விருப்பு பொர்காவடியும்

பூமாலை ஆகாச சிங்கா தனத்திலிருந்து

வாவாதாயே வரந்தருவாய்

வந்து என் முன்னின்று என் சொல்லைகேட்டு

என் வசம்மகா நின்ற சுவாஹா

இந்தவிதமாக1௦௦8தரம்உருகொடுக்க புழுங்கல் அரிசி சோரு கோலிக்கறீ சாராயம் மலர் இளநீர் கச்சைகருவாடு பழம் பானகம்வைத்துசாம்பிராணிபுகைபோட பழம் முதலியவைதிண்பண்டங்கள் கொண்டுவந்து கொடுக்கும்

10 May 2016

எளிய பரிகாரங்களும் ,மிக பெரிய பலன்களும்

நவகிரக பாதிப்புகளிலிருந்து விடுபட சில பரிகாரங்களை தொடர்ந்து செய்தால் நம்முடைய கஷ்டங்களின் தாக்கம் குறையும் என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள்.அவைகள் என்ன என்று பார்க்கலாமா ?

காகத்திற்கு உணவு அளித்தல் .இதை நாம் நிறைய வீடுகளில் பாத்திருப்போம்.

பறவைகளுக்கு தாகம் தீர மாடியில் நீர் வைத்தல்.

பசுவிற்கு அகத்தி கீரை,பச்சரிசி ,வெல்லம் கொடுத்தல்.


எறும்பு உண்ண பச்சரிசி மாவில் கோலம் போட  வேண்டும்.எறும்பிற்கு உணவு அளித்தால் 108 பிராமிணர்கள் சாப்பிடுவதற்கு சமம்.

மீன்களுக்கு பொரி அளித்தல்.மதுரைக்கு அருகில் உள்ள  திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களில் அங்கு வரும் பக்தர்கள் பொரி வாங்கி மீன்களுக்கு போடுவார்.
மலை மேல் உள்ள கோவில்களில் குரங்குகள் நிறைய இருக்கும் .அதற்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டும்.

கோவிலில் உள்ள விளக்கிற்கு எண்ணெய்  ஊற்றுதல் சிறந்த பலனை கொடுக்கும்.

ஊனமுற்றவர்களுக்கு உணவு ,உடை அளிக்க வேண்டும்.

அரச மரத்திற்கு நீர் ஊற்றுதல் .

அன்ன தானம் ,நீர் பந்தல் போன்றவைகளை செய்தல் வேண்டும்."நிழலின் அருமை வெயிலில் தெரியும்" என்பது  போல ஒருவனுக்கு வயிறார உணவு கொடுப்பதும் ,தாகம் என்று வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பதும் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது .சித்திரை மாதத்தில் வரும் மதுரை சித்திரை திருவிழா காலத்தில் மக்கள் நீர் மோர் கொடுத்தும் ,நீர் கொடுத்தும் புண்ணியத்தை சேர்ப்பர் .

உங்களுக்கு எவையெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்யுங்க .நம்ம கையாலே பிறருக்கு உணவு அளிப்பது மிக சிறந்தது .அதுவும் பறவைகள்,எறும்புகள் போன்றவை வாய் பேச முடியாத ஜீவராசிகள் .அவர்களுக்கு செய்யும் சேவையே நாம் கடவுளுக்கு செய்யும் சேவையாகும் .

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்கள் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..


வளமான வாழ்வை தரும் தீபம்

நம் இந்து சமயத்தில் ,எல்லோர் வீட்டு பூஜையறைகளிலும் தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளது .தீபம் எப்படி இருளை விரட்டி ஒளியை நமக்கு தருகிறதோ அதுபோலத்தான் நம் மனதிலுள்ள தீய எண்ணங்களை விரட்டி நல்ல எண்ணங்களை தருகிறது .

நாம் ஒளியின்  மூலமாக இறைவனை காண்கிறோம் .அந்த ஒளிச்சுடர் தீபம் ஏற்றுவதால் கிடைக்கிறது.ஊருக்கு முன் விளக்கு ஏற்றின் உயர்ந்த குடியாகும் என்பது  பழமொழி .அதாவது விடியற்காலை சூரியன் உதயமாகும் முன் பெண்கள் எழுந்து குளித்து ,வாசல் தெளித்து கோலம் போட்டு ,பிரம்ம  முர்த்த வேளையான 4.30 முதல் 6 மணி வரை நம் பூஜையறையில் தீபம் ஏற்ற வேண்டும்.அந்த அதிகாலையில் தீபம் ஏற்றுவதால்  நாம் செய்யும் அனைத்து காரியங்களும்   நன்றாக அமையும் .ஆதலால் தான் குழந்தைகளை அந்த நேரத்தில் எழுந்து, படிக்க  சொல்கிறோம் .

இந்த அவசர உலகத்தில் அதுக்கு எல்லாம் நேரம் எங்கே  இருக்கிறது? என இதைப் படிக்கும் தோழிகளுக்கு எண்ணங்கள்  ஓடிக் கொண்டிருக்கும் .அதற்கும் ஒரு வழி  இருக்கிறது .மாலையில் நீங்கள் அலுவலகத்தில் இருந்து வந்தவுடன்,கை ,கால்களை கழுவி விட்டு ,பூஜையறைக்கு சென்று  உங்கள் கையால் தீபம் ஏற்றி உங்கள் இஷ்ட தெய்வங்களை மனதார வழிபட்டால் நமக்கு கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கும் .நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு செயல்களும் வெற்றியை தேடி தரும்.

மாலை சூரியன் மறைவதற்கு முன் 4.30 முதல் 6 வரை அல்லது கருங்கல் நேரமான 6.30 மணிக்கு தீபம் ஏற்றுவது நல்லது .4.30 --6.00 மணி பிரதோஷ காலமாகும்.சிவனுக்கு உகந்த காலமாக சொல்லப்படுகிறது.அக்னியின் வாயிலாக பகவானுக்கு அவிர்பாகம் அளிக்க செய்யும் யாகத்திற்கு இணையான பலனை தரக்கூடியது. பூஜையறையில்  இரு தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும்.

தீபம் ஏற்றும் எண்ணெய்

தீபம் ஏற்றுவதற்கு ஏற்ற எண்ணெயை தேர்ந்தெடுப்பது முக்கியம் .

எந்த எண்ணெயில் விளக்கு ஏற்றினால் என்ன பயன்?

நெய் தீபம்  ஏற்றினால் சுகமும் ,சந்தோஷம் வரும்.

நல்லெண்ணெயில் தீபம் ஏற்றினால் , எல்லா பீடைகளும் தொலைந்து போகும்.

விளக்கெண்ணெய்  தீபம் ஏற்றினால் ,புகழ் கிடைக்கும்.

வேப்பெண்ணெய் ,நெய்,இலுப்பை எண்ணெய் இவை முன்றும் கலந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் செல்வம் சேரும் .

நெய் ,விளக்கெண்ணெய் ,வேப்பெண்ணெய் ,இலுப்பை எண்ணெய் ,தேங்காயெண்ணெய் போன்ற 5 வகை எண்ணெயில் தீபம் ஏற்றி,அம்மனை வழிபட்டால் தேவியின்  அருள் கிடைக்கும்.

கடலை எண்ணெய் ,பாமாயில் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்தக் கூடாது .

எந்த திசையில் தீபம் ஏற்ற வேண்டும்?

கிழக்கு திசை   ----- துன்பம்  அகலும்,கிரகங்களின்  சோதனைகள் விலகும் .

மேற்கு திசை  -------கடன் தொல்லை ,சனி ,பீடை ,கிரக தோஷம்,பங்காளி பகை நீங்கும்.

வடக்கு திசை-----செல்வம் சேரும்,திருமணத் தடை ,கல்வி தடை நீங்கி சர்வ மங்களம் உண்டாகும்.

தெற்கு திசை -----ஒரு போதும் இந்த திசையில் தீபம் ஏற்றக் கூடாது .அபச குணம் உண்டாகும்.

தீபங்களை ஏற்ற எந்த திரியை பண்படுத்த வேண்டும்?

தாமரை தண்டு திரி -----முன் வினை கர்ம பாவங்கள் நீங்கும்.

பஞ்சு திரி -----தெய்வ குற்றம் ,பிதுர்களால் ஏற்பட்ட சாபம்,வம்சாவளிப் பிரச்சினை போகும் .

நல்ல பலனை பஞ்சுத்திரி கொடுக்கும் .

சிவப்பு வர்ண துணி  திரி ----திருமண தடை நீங்கும்.குழந்தை பிறக்கும் பேறு உண்டாகும்.

மஞ்சள் வர்ண துணி திரி ------வெற்றி கிடைக்கும் .தேவியின் பூரண அருள் கிடைக்கும் .தம்பதியர் ஒற்றுமை ஏற்படும் .காற்று சேட்டைகள் நீங்கி நலம் பெறவும் ,செய்வினை நீங்கவும் இந்த திரியால் விளக்கு ஏற்ற வேண்டும்.

வாழைத்தண்டு திரி ----குடும்ப அமைதி ,குழந்தை பேறு உண்டாகும் .முன்னோர்களால் ஏற்பட்ட சாபம் நீங்கும் .

வெள்ளெருக்கு திரி ----துர் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும்.

தினம்தோறும் தீபம் ஏற்றி வழிபட்டால்,நமக்கு எல்லா வளங்களும் கிடைக்கும் .அதுவும் முக்கியமாக அதிகாலையில் அம்பாளை வழிபடும் பக்தர்களுக்கு அம்பாள் குறைவில்லாத செல்வத்தையும்,அருளையும் கொடுப்பாள் .

நம் குழந்தைகள் கல்வியில் சிறந்தவராக திகழ்வர்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் .

இங்கனம்:- JSK ஆன்மீகம் அறிவுரை இந்துமதம்

27 April 2016

வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டுமா

* வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சாதாரணமாக மனிதன் மண் மீது ஒரு வீடுகட்டி குடி போகிறார். ஆனால், ஏற்கனவே அவன் வீடு கட்டுவதற்கு முன்பு அந்த மண் மீது என்ன இருந்தது, அந்த மண் மீது எது வாழ்ந்தது, மண்ணிற்கு அடியில் என்ன புதைந்து கிடந்தது என்பதை அறிந்துகொள்ளக் கூடிய ஞானம் மனிதனுக்கு இல்லை. ஆனால், சில பறவைகளுக்கு அதுபோன்ற ஞானம் நிறைய உண்டு.

* குறிப்பாக சிட்டுக்குருவி, புறா, அதற்கடுத்தது அணில்இவைகளுக்கெல்லாம் சூசகமான, சூட்சமமான சக்தியையெல்லாம் உணரக்கூடிய ஆற்றல் உண்டு.

. அதனால், இயற்கை‌யி‌ல் நம்மை விட நான்கறிவு, மூன்றறிவு உயிரினங்களுக்கு சில சூட்சும சக்தியை இறைவன் கொடுத்திருக்கிறார்.

* ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை நாம் கொண்டுவர வேண்டும். ஜீவன் என்றால், மனிதனும் உயிருடன் இருக்கிறான், ஜீவனுடன் இருக்கிறான் என்று பார்க்கக் கூடாது. மனிதனைத் தாண்டி சிட்டுக்குருவி போன்றவற்றிற்கெல்லாம் ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது. நெற்கதிர்களை வீட்டிற்குள் கட்டித் தொங்கவிடுவார். அதைச் சாப்பிட குருவி இரண்டு வரும், கத்தும், கொறித்துவிட்டு பறக்கும், மீண்டும் வரும். அதேபோல, அணிலுக்கும் கூடு கட்டிக் கொடுப்பார். தூக்கனாங் குருவி கூடு இரண்டு மூன்று எடுத்து வந்து போட்டு வைப்பார். அதை இழுத்துக்கொண்டு போய் ஜன்னல் பக்கத்தில் அது கட்டி வைக்கும்
.
* இதெல்லாம் என்னவென்றால், ஜீவாதார சக்தியை வீட்டிற்குள் கொண்டு வருவதற்கான அமைப்பு.
வீட்டில் சிட்டுக்குருவி, அனில் போன்றவை கூடு கட்டி குஞ்சு பொரி க்கின்றன, குட்டி போடுகின்றன. இதை சிலர் கலைத்துவிடுகிறார்கள்.

ஆனால், இதுபோன்று இவைகள் வருவது, கூடு கட்டுவது, குஞ்சு பொரிப்பது நல்லது
கழுதை படத்தை வைப்பது, நரி முகத்தில் முழிப்பது என்று சிலர் சொல்வார்கள். ஆனால், படங்களை வைப்பதை விட இதுபோன்று செய்தால் நல்ல பலன் இருக்கும்.

புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டினால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீடு கட்டுவது போன்றதெல்லாம் சாதமான சக்திகளை கொண்டுவருவதற்கான ஆத்மாக்கள் இவைகளெல்லாம். இதுபோன்ற சாதகமான சக்தியைக் கொண்டு வருவனவற்றை நாம் விரட்டக் கூடாது.

இதெல்லாம் வந்துவிட்டுப் போனாலே நமக்கு நல்லது நடக்கும்...

25 April 2016

சிவமயம்

கோவிலில் தீபம் காட்டுவது ஏன்?

தீப வழிபாடு நம் தமிழகத்தில் பழங்காலத்தொட்டு நடைபெற்று வருகிறது.கோவிலில் தெய்வத்திற்கு செய்யப்படும் பதினாறு உபச்சாரங்களில் தீப ஆராதனையும் ஒன்று.

கோவிலில் காட்டப்படும் தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.தீபத்தை இறவனுக்கும் காட்டுவதற்கு முன்னால்,ஒரு திரை போடப்படுகின்றது.தீபத்தை காட்டும்பொழுது திரை விலக்கப்படுகிறது.இதன் தத்துவம் என்னவென்றால்,நம்முடைய ஆணவம் என்கின்ற திரையை விலக்கினால் மனதில் ஞான ஒளி பிறந்து.நம்முடைய மனம் தெய்வ நிலையை அடையும் என்பதாகும்.

தெய்வத்திற்கு மூன்றுமுறை தீபம் காட்டப்படுகிறது,முதலில் காட்டுவது உலக நன்மைக்காவும்,இரண்டாவது காட்டுவது ஊர் நன்மைக்காகவும்,மூன்றாவது காட்டுவது பஞ்ச பூதங்களின் நன்மைக்காகவும் ஆகும்.பூசைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன.

தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனைத் தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப் பெறுகின்றன.

நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் – நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும்.

அறிவியல் பூர்வமாக பார்த்தால் அந்த காலத்தில் மின்சார வசதி இல்லாததால் இறைவனின் முகம் தெளிவாக தெரிவதற்கு தீபம் காட்டபடுவதாக சிலரின் கருத்தாக இருக்கும்.எது எப்படி இருந்தாலும் பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னியை தீபமாக காட்டுவதில் நிறைய தத்துவங்கள் அடங்கிருப்பது என்பதே உண்மை.

20 April 2016

#மதுரை சித்திரைத் திருவிழா ....
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவது ஏன்?..
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன.
அவற்றில் வாசனை மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சியே அழகு. இதற்கு சாட்சி பரிபாடல் போன்ற இலக்கியங்கள்.
அப்படிப்பட்ட இயற்கை வளம் மிக்க வைகை, சிவனால் உருவாக்கப்பட்டது. தனது திருமணத்துக்கு வந்தவர்கள் தாகம் தீர இந்த நதியை அவர் உருவாக்கினார். தன் சிரசை சற்றே கவிழ்த்து கங்கையை இங்கே விட்டார். சிவனின் நேரடிப் பார்வையில் உருவான நதி இது. தென்னக கங்கை என்று கூட இதற்கு பெயர் சூட்டலாம். கங்கை என்றாலே பாவம் போக்குவது. இப்படிப்பட்ட நதியில் மூழ்கி எழ யாருக்கு தான் ஆசை வராது! பாவம் தீர்ந்தால் பிறவி இல்லையே! இப்படிப்பட்ட ஆசை தான் சுதபஸ் என்ற முனிவருக்கு எழுந்தது. வைகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே, செய்த பாவம் நீங்குமென்றால், அங்கேயே பலநாள் மூழ்கிக் கிடந்தால், பிறவியே இல்லாமல் செய்து விடலாமே! நதியில் மூழ்கினால், (பிறவி) கடலையே கடந்து விடலாமே என்று கணக்கு போட்டார். அதற்கேற்றாற்ற போல், மூத்த முனிவர் ஒருவர் இவர் அருகே வர, இவர் கண்டும் காணாதது போல் இருந்தார். வந்தவருக்கு கோபம் வந்துவிட்டது. ஏ! சுதபஸ், நீ மண்டூகமாகப் போ (தவளையாய் மாறு). இந்த நதியில் மூழ்கிக்கிட,'' என்று சாபமிட்டார். சுதபஸ் நினைத்தது நடந்து விட்டது. ஏன்...மண்டூகமாகப் போ என மூத்தவர் சாபம் கொடுத்திருக்க வேண்டும்! மச்சமாகப் போ (மீனாகமாறு) என சாபம் பெற்றிருக்கலாமே! மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ முடியும். தவளை என்றால் தண்ணீர், தரை என எங்கும் வாழலாம். முனிவர்களின் கோபம் கூட நல்லதையே செய்யும். அவர்கள் செய்த தவத்தின் பலன் அது. சுதபஸ் அன்று முதல் மண்டூகர் ஆனார். தவளையாய் ஆற்றில் வசித்தார். மிக நீண்டகாலம் தென்னக கங்கையில் கிடந்தார். அவ்வப்போது தரைக்கு
வருவார். காரணம் என்ன! எம்பெருமானான சுந்தரராஜர் அழகர்மலையில் இருந்து என்று வைகைக்கு எழுந்தருளுகிறாரோ அன்று சாப விமோசனம் கிடைக்கும் என்பது மூத்தவர் கொடுத்த வாக்குறுதி....அல்லது சாப விமோசனம். ஒருவேளை பெருமாள் ஆற்றில் இறங்காமல், கரை வழியே நடந்தால் துள்ளிக்குதித்து விழுந்தாவது அவர் திருவடியில் வீழ்ந்து விடலாமே என்ற எண்ணம்!

பெருமாளின் திருவடியைப் பார்த்தாலே சொர்க்கம்.... ஸ்ரீரங்கத்திற்கு செல்கிறோம்.
பெருமாளின் திருவடியைத் தான் முதலில் பார்க்கிறோம். பிறகு தான் கமலம் போன்ற முக அழகைத் தரிசிக்கிறோம். அந்தத்திருவடி நம்மை மோட்சத்திற்கே கொண்டு சென்று விடுமாம்.
பார்த்தாலே இப்படி என்றால்.... திருவடி பட்டால் என்னாகும்! அழகர்கோவிலில் இருந்து சுந்தர
ராஜப் பெருமாள் குதிரையில் ஏறி வந்தார். வைகையைக் கடக்கும் போது, அவரது திருவடி மண்டூகர் மீது படுகிறது. சுயஉருவைப் பெற்றார். ஆகா...பெருமாளே! இனி எனக்கு மோட்சம் தானே!
""அடேய், பாரடா! இப்போதே நீ மோட்சத்தில் தானே இருக்கிறாய். மண்டூகர் சுற்றுமுற்றும் பார்த்தார். ஆம்...திருவடி பட்ட அந்த நொடியே அவர் மோட்சத்திற்கு போய் விட்டார்.

நமக்கும் அதே நிலை தான்! இன்று அழகர் ஆற்றிலே இறங்குகிறார். பார்க்க முடியாதவர்களுக்காக நாளையும் வைகைக்குள் இருக்கும் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுவார். அவரது திருவடியைத் தரிசித்தாலே போதும். பூலோகத்திலேயே சொர்க்கத்தைக் காணலாம்.ஆம்...அவரிடம் மனதார
பிரார்த்தித்தால் போதும். மழை வேண்டுமென்றால் மழை பெய்யும். பணம் வேண்டுமென்றால் அள்ளித்தருவார். எல்லாம் நாம் அவர் மீது வைக்கும் நம்பிக்கையில் தான் இருக்கிறது.
-
கிரக தொல்லைகளில் இருந்து விலக எளிய பரிகாரங்கள்

சூரியன் : தினசரி காலை சூரிய வழிபாடு செய்து வரவும்.காலை சூரியன் எழுவதை பார்த்து வருவது மிக பெரிய தடங்கல்களையும் விலக செய்யும். முடிந்தால் 'ஆதித்ய ஹ்ருதயம்' கூறி வரலாம். " ஓம் ஆதித்தியாய நமஹ"  108 முறை  கூறி வருவதும் பலன் அளிக்கும். மொட்டை மாடியில் அமர்ந்து பார்த்து வருபவர்கள் வெறும் தரையில் அமர கூடாது. எதாவது விரிப்பின் மேலோ , பலகையின் மேலோ  அமரலாம்.15 நிமிடங்கள் பார்த்து வரவும்.பின்பு மூன்று முறை சூரியனுக்கு நீர் வார்த்து  வணங்கி, தின வேலைகளை தொடரலாம்.

சந்திரன்: மன கவலைகளால் கஷ்டப்பட்டு கொண்டே இருப்பவர்கள், மன கலக்கம், அழுத்தம், ஞாபக மறதி உள்ளவர்கள் அனைவரும் தினசரி இரவு சந்திர தரிசனம் செய்து வர மேற்கண்ட குறைகள் நீங்கும். 15 நிமிடம் செய்தால் போதுமானது. நிலவை பார்த்து கொண்டிருக்கும் பொழுதே சிவபார்வதி சமேதராய் இருப்பதை போல் நினைத்து பார்த்து வரவும்.பார்த்து முடிந்ததும் 10 நிமிடங்கள் ஆழமாக நிதானமாக சுவாசம் செய்து முடிக்கவும்.

செவ்வாய் : தன்னம்பிக்கை இல்லாமை, இனம் தெரியாத பயம், எதிரிகளால் தொல்லை, குறைந்த இரத்த அழுத்தம் போன்றவை விலக : ஒரு பேப்பர் (வெள்ளை தாள்) எடுத்து அதில் குங்குமத்தில் தேன் குழைத்து ஒன்றரை அல்லது இரண்டு அங்குல அளவிற்கு வட்டம் இட்டு கொள்ளவும்-பின்பு சிகப்பு ஆடை அணிந்து உங்களுக்கு எதிரில் அந்த தாளை 2 அடி தள்ளி வைத்து அமர்ந்து  நிதானமாகவும் ஆழமாகவும் சுவாசம் செய்து அந்த வட்டத்தையே பார்த்து வரவும். 15 நிமிடம் செய்தால் போதுமானது. தினசரி செய்து வர மேற்கண்ட குறைகள் நீங்கும்.