youtube

6 November 2016

தேரையர் சித்தர்

தேரையர் சித்தர்
============

அகத்தியர் தமக்கு ஒரு நல்ல சீடன் வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தார். அது சமயம் அவ்வையார் ஒரு சிறுவனுடன் அகத்தியரை தேடி வந்தார். அவ்வையுடன் வந்த சிறுவனை கண்டு அவனைப் பற்றி விசாரித்தார் அகத்தியர். அதற்கு அவ்வையார் இவன் பாவம் ஊமை பிள்ளை, உங்களுக்கு உதவியாக இருக்கட்டுமே என்று அழைத்து வந்தேன் என்றார்.

உடனே சிறுவனான இராமதேவரை அகத்தியர் சீட னாக ஏற்றுக் கொண்டார். பாண்டிய மன்னன் சிறந்த சிவ பக்தன் ஆனால் கூன் முதுகு உடையவர் இதை ஜாடைமாடையாக மக்கள் விமர்சிப்பதைத் கண்டு மனம் வருந்தி மன்னன் அகத்தியரிடம் ஆலோசனை கேட்டான். அகத்தியரும் தம் மூலிகை வைத்தியத்தால் அவனது கூனை சரி செய்து விடுவதாக கூறினார்.

சீடனை அழைத்து அபூர்வமான சில மூலிகைகளை கொண்டு வருமாறு கட்டளையிட்டார். சீடன் மூலிகைகளை கொண்டு வந்தவுடன் அவைகளை நன்றாக இடித்து சாறு எடுத்து ஓர் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். அப்பொழுது அரண்மனையிலிருந்து அழைப்பு வரவே அகத்தியர் ஊமை சீடனை ``அடுப்பைப் பார்த்துக்கொள்'' என்று ஜாடை காட்டிவிட்டு சென்றார்.

மூலிகை சாறு நன்றாக கொதித்துக்கொண்டிருந்தது சீடன் மிகவும் கவனமாக இருந்தார். கொதிக்கும் மூலிகைச் சாற்றின் ஆவி பட்டு ஆசிரமத்தின் மேல்கட்டப்பட்டிருந்த ஓர் வளைந்த மூங்கில் மெல்ல மெல்ல நிமிர்தது. இது கண்ட சீடன் இராம தேவன் மூலிகை சாறு பதமாகி விட்டது என்று யூகித்து கொதிக்கும் சாற்றை இறக்கி வைத்தார்.

குறிப்பறிந்து செயல்பட்ட ராமதேவனை அகத்தியர் மனமார பாராட்டினார். அந்த மூலிகை தைலத்தால் மன்னனின் கூன் முதுகு சரியானது. காசிவர்மன் என்ற மன்னனுக்கு தலைவலி வந்தது. வேதனை பொருக்க முடியாத வேந்தன் அகத்தியரின் கால்களில் விழுந்து தலைவலியை குணப்படுத்துமாறு கதறினான்.

அகத்தியர் மன்னனின் உடலை பரிசோதித்தார். அவருக்கு தலைவலியின் காரணம் புரிந்து விட்டது. சிகிச்சை தொடங்கப்பட்டது. மன்னன் மயக்க நிலையில் ஆழ்த்தப்பட்டான். ஐந்து நிமிடத்தில் மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. மூளையின் மேற்குபகுதியில் தேரை (தவளை) உட்கார்ந்திருந்தது. இதை கண்ட அகத்தியர் தேரையை எப்படி எடுப்பது என்று யோசித்தார்.

குருநாதரின் திகைப்பை கண்ட ராமதேவன் வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொண்டு வந்து தேரையின் கண்களில் படு மாறு காண்பித்தான். தேரை ணீரை பார்த்த சந்தோஷத்தில் பாத்திரத்தில் குதித்தது. உடனே அகத்தியர் சந்தாகரணி என்னும் மூலிகையினால் மன்னனின் மண்டை ஓட்டை மூடினார்.

சீடரை கட்டித்தழுவி பாராட்டினார். ராமதேவர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தேரையர் என்று அழைக்கப்பட்டார். அவனுடைய ஊமை தன்மையை போக்கி தமக்கு தெரிந்த வித்தைகளையெல்லாம் தேரையருக்கு அகத்தியர் போதித்தார். அகத்தியரின் சீடனாகி தொல்காப் பியம் என்ற இலக்கண நூலை இயற்றி தொல் காப்பியர் என்ற பெயரும் பெற்றார்.

பிறகு தேரையர் குருவின் கட்டளைக்கு அடிபணிந்து அணனமயம் என்ற காடுப்பகுதியில் தவம் செய்ய துவங்கினார். அங்கு தவம் செய்த சித்தர்களின் நோய்களைப் போக்கினார். ஒரு சமயம் அகத்தியருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்ட போது அவரது கண்களைப் பரிசோதனை செய்து வைத்தியம் பார்த்து குணமாக்கினார்.

பார்வை தெளிவடைந்த அகத்தியர் சடைமுடியும் தாடியுமாக இருந்த தேரையரைப் பார்த்து தேரையா உன்னை எனக்கு அடையாளம் தெரியாமல் போய்விடுமா! உன்னை வரவழைக்கவே இந்த தந்திரம் செய்தேன் என்றார். தேரையர் மனம் நெகிழ்ந்து அகத்தியரின் கால்களின் விழுந்து வணங்கினார். ஒருநாள் அகத்தியர், தேரையரை அழைத்து தேரையா எனக்கு கண்வெடித்தான் மூலிகை வேண்டும் என்றார்.

கண் வெடிச்சான் மூலிகையைப் பறித்தால் அதிலிருந்து கிளம்பும் புகையால் பறித்தவன் கண்கள் போய்விடும் யாரும் தப்ப முடியாது. ஆனால் தேரையர் தயங்காமல் இதோ கொண்டு வருகிறேன் என்று காட்டுக்குச் சென்றார். கண் வெடிச்சான் மூலிகையைக் கண்டார். அதைப் பறிக்காமல் அங்கேயே உட்கார்ந்து கண்களை மூடி தேவியைத் தியானம் செய்தார். கவலைப்படாதே தேரையா!

மூலிகையை நானே தருகிறேன் என்ற குரல் கேட்டு விழித்த தேரையரின் முன் கண் வெடிச்சான் மூலிகை இருந்தது. தேவிக்கு நன்றி கூறிவிட்டு மூலிகையை அகத்தியரிடம் கொடுத்தார். அகத்தியர் மிகவும் மகிழ்ந்தார். நான் வைத்த எல்லா சோதனைகளிலும் நீ தேறிவிட்டாய் நீ அறிந்த மூலிகைகளைப் பற்றி ஒரு நூல் எழுது என்றார். குருவின் கட்டளைப்படி தேரையர் குலைபாடம் என்ற நூலை இயற்றினார்.

நெடுங்காலம் மருத்துவம் சேவை செய்த தேரையர் பொதிகை சார்ந்த தோரண மலையில் (மலையாளநாடு) தவம் செய்து அங்கேயே ஜீவ சமாதி அடைந்தார். தேரையரை வெள்ளை அல்லது ரோஜா வண்ண வஸ்திரம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கினை நான்கு முக அல்லது ஐந்து முக தீபமேற்றி வழிபட வேண்டும். மூலமந்திரமாக ``ஓம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ தேரைய சித்தரே போற்றி! போற்றி!! என்று 108 முறை கூறி வழிபட வேண்டும்.

நிவேதனம்:- மிளகு பொங்கல், பால் பாயாசம், தேங்காய் சாதம் போன்றவை. தேரையரை தினமும் வழிபட்டு வந்தால் ஜாதகத்தில் சூரிய கிரஹத்தால் ஏற்படும் தோஷம் விலகும். குடும்ப ஒற்றுமை உண்டாகும். பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி குணமாகும். பெண்களாலேயே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை தீரும். தீராத தலைவலி, இடுப்பு வலி நீங்க நலம் உண்டாகும்.

உடலில் ஏற்படும் ஒவ்வாமை (அலர்ஜி) நோய் சரியாகும். வீண்பழி, அவமரியாதை அகன்று புகழ் உண்டாகும். வாக்பலிதமும் ராசியோகமும் உண்டாகும். எந்த பிரச்சினையானாலும் சரி முடிவெடுக்கும் ஆற்றல் உண்டாகும். இவரை பூஜிக்க ஞாயிற்றுக்கிழமை சிறந்தது.

வாழ்கவளமுடன்

குலதெய்வ தரிசனம் கனவில் வர இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வத்துடன் பேச,தரிசிக்க



குலதெய்வ தரிசனம் கனவில் வர
இஷ்ட தெய்வம் மற்றும்
குலதெய்வத்துடன் பேச,தரிசிக்க
உதவும் மந்திரம்
இம்மந்திர ஜெபத்தின் பயனாக
நமக்கு விருப்பமான தேவதையின்
( இஷ்ட தெய்வம்,குலதெய்வம்)
தரிசனம் கனவில் கிடைக்கும்.சில
நாட்களில் அந்த தெய்வத்தோடு
பேசி நம் விருப்பங்களை
நிறைவேற்றிக்
கொள்ளலாம்.மேலும் உறங்கும்
முன் ஏதேனும் ஒன்றை கனவில்
காண வேண்டுமென்றால்
ஊதுபத்தி ஏற்றிச் செம்பில் தண்ணீர்
வைத்துக் கொண்டு இன்ன
காரியம் அறியவேண்டும் என்று
சங்கல்பம் செய்து 108 தடவை
மந்திரம் ஜெபித்து செம்பில் உள்ள
தீர்த்தத்தைக் குடித்து உறங்கினால்
வேண்டியது கனவில்
வெளிப்படும்.
சனிக்கிழமை காலை அல்லது
இரவில் ஆரம்பிக்கலாம்.ஸ
்வப்நேச்வரி தேவியின் படத்தை
பிரேம் செய்து முன்னால்
வைத்துக் கொள்ளவும். வீட்டை
அல்லது பூஜை அறையை பச்சைக்
கற்பூரம் கலந்த நீரால் சுத்தம்
செய்யவும்.பின்னர் நெய்
விளக்கேற்றி பூக்களால் விளக்கை
அர்ச்சனை செய்து
,சாம்பிராணி,குங்கிலியம்
போட்டு கற்பூரஆரத்தி
காட்டவும்.வெள்ளை விரிப்பு
விரித்துக் கிழக்கு முகமாக
அமரவும்.தினமும் குறிப்பிட்ட
ஒரே எண்ணிகையில் ஜெபம்
செய்து 45 முதல் 90 நாட்களுக்குள்
51000 உரு மந்திரம் ஜெபித்து
முடிக்க மந்திரம் சித்தியாகும்.
(45 நாட்கள் என்றால் 44 நாட்களுக்கு
1133 எண்ணிக்கையும் 45 வது நாள்
1148 உரு ஜெபித்து பூஜையை
முடிக்கவும்.)
(90 நாட்கள் என்றால் 89 நாட்களுக்கு
566 எண்ணிக்கையும் 90 வது நாள்
626 உரு ஜெபித்து பூஜையை
முடிக்கவும்.)
மந்திரம் :-
ஓம் ஹ்ரீம் விசித்திர வீர்யம் ஸ்வப்னே
இஷ்ட தர்ஷய நமஹா||
இம்மந்திரம் பல தாந்த்ரீகர்கள்,
ஜோதிடர்கள் மற்றும் யோகிகளால்
பயன்படுத்தப்படுகிறது. குல தெய்வம் அறியும் வழிபாடு
-------------------------------------------------
குல தெய்வம் தெரியாதவர்கள்,
ஜாதகத்தில் ராசிக்கு பூர்வ புண்ணிய
ஸ்தானம் எனப்படும் ஐந்தாம் வீட்டின்
அதிபதிக்குரிய கடவுளையோ அல்லது ஐந்தாம்
வீட்டின் அதிபதி பெற்ற சாரநாதரின்
அதிபதிக்குரிய தெய்வத்தை மனமுருகி
வணங்கி வர, குலதெய்வம் பற்றிய
செய்தி பிறர் மூலமோ அல்லது கனவிலோ
அல்லது ஏதாவது ஒருவகையில்
அறியப்பெறுவீர்கள்.
உதாரணமாக, மீன ராசி எனில் பூர்வ
புண்ணிய வீடு கடகம் அதன் அதிபதி
சந்திரன். சந்திரனுக்குரிய அதிதேவதை
பார்வதி ஆவார். மேலும் சந்திரன்
அமர்ந்த நட்சத்திரம் உத்திரட்டாதி எனில்,
அதன் அதிபதி சனி ஆவார். சனியின்
அதிதேவதை ஐயப்பன் ஆவார். இவவரை
மனமுருகி தொடர்ந்து பிராத்தனை
செய்ய, குலதெய்வம் பற்றி அறிய
உதவுவார்கள்.


3 November 2016

பகவதியட்சிணிதேவி மந்திரம்

பகவதியட்சிணிதேவி மந்திரம்
கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ளது உலகப்புகழ் பெற்ற
பகவதியம்மன் கோவில். இக்கோவில் சுமார் 3000 ஆண்டுகள்
 பழைமை வாய்ந்தது. பரசுராமர் இக்கோவிலை நிர்மாணித்ததாக
 வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இங்கு நாள்தோறும் நாட்டின்
பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இச்சிறப்பு மிக்க கோயிலில் உறைந்துள்ள பகவதியம்மன் மந்திரத்தை இன்றைய பதிவில் காண்போம்.





பகவதி மந்திரம்
பாரப்பா இன்னமொரு தீச்சைமார்க்கம்
பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
நேரப்பா பகவதியாள் தியானந்தன்னை
நேர்மையுடன் சொல்லுகிறே நிசமதாக
சாரப்பா தன்சார்பு நிலையில்நின்று
சங்கையுடன் ஓம் றீங் அங்கென்றேதான்
காரப்பா புருவ நடுக்கமலத்தேகி
கருணையுடணாயிரத்தெட்டுருவே செய்யே.

செய்யடா மானதமாயுருவே செய்யத்
திருயுருவாய் நின்றபகவதியாள்தானும்
மெய்யடா உனதிடமாய் நிருத்தஞ்செய்வாள்
பண்ணப்பா இதுசமயமென்று நீயும்
பகவதியாள் விபூதியை நீதரித்துக்கொள்ளே.

கொள்ளடா விபூதியை நீதரித்துக்கொண்டு
குணமாகப் பகவதியைத்தியானம் பண்ணி
நில்லடா உன்முகங்கண்டோருக்கெல்லாம்
நீங்காத பாவமெல்லாம் நீங்கிப்போகும்
சொல்லடா உன்வசனம் நன்மையாகும்
சோதிதிருப்பகவதியாள் சுருக்கினாலே
அல்லடா உன்மனதை நோகப்பண்ணும்
அவர்கள்குடி செந்தீயிலழுந்துப்பாரே.
                           -அகத்தியர் பரிபூரணம்1200

பொருள்:
பகவதியின் தியானத்தை சொல்கிறேன் கேள்,
மனஓர்நிலையோடு புருவமையத்தில் மனதை குவித்து'ஓம் ரீங் அங்" என்று
1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.இம்மந்திரதை சித்தி செய்தவரின் உள்ளத்தில் பகவதி இருந்து இவர்கள் செய்யும்
சகல காரியங்களும் இவர்களுக்கு சித்தியாகும்படிசெய்வாள். விபூதியை பூசிகொண்டு இம்மந்திரத்தை தியானம் பண்ணி
 செல்ல உன் முகம் பார்க்கும் யாவரின் பாவங்களும் விலகிவிடும்.  நீ சொல்வதெல்லாம் பலிக்கும். உனது சகலபாவங்களும் விலகிவிடும்.
உன் மனதை எவனாவது நோகடித்தால் அவன் குடும்பம் அழிந்துபோய்விடும் என்கிறார் அகத்தியர்.

மேலும் அகத்தியர் தனது வாதசௌமியம் என்னும் நூலிலும்
இம்மந்திரத்தை பற்றி சொல்லிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இம்மந்திரத்தினால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை.
சகலமும் சித்தியாகும்.செல்வம் பொழியும்.
எடுத்த காரியமெல்லாம் ஜெயமாகும். நினைத்தபடி முடியும்.
ஆபத்து வராது, வல்வினைகள் அகன்றுவிடும். இம்மந்திரம்
கோடானகோடி பூசைசெய்ததற்கு ஒப்பாகும் என்று

வாதசௌமியத்தில் கூறியுள்ளார் அகத்தியர்.

பில்லி சூனியம் ஏவல் இவற்றில் இருந்து பாதுகாக்க

பில்லி சூனியம் ஏவல் இவற்றில் இருந்து பாதுகாக்க
காலம் காலமாய் மாந்திரிகம் என்பது அமானுஷ்யம் நிறைந்த ஒரு கலையாகவே இருந்து வருகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றிய விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும், நம்பிக்கை என்கிற பெயரில் நம்மில் பலரின் நிம்மதியையும், பொருளையும் அழிக்கும் ஒரு கலையாக இருக்கிறதென்றால் மிகையில்லை...

மாந்திரிகம் என்பது அடிப்படையில் ஒரு மனிதன் தன் சக மனிதனை தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப ஆட்டுவிப்பதாகவோ அல்லது அழிப்பதாகவோதான் கருதப் படுகிறது. பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதெல்லாம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் உத்திகள். இது பற்றிய தகவல்களை முன்னரே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன்.

அந்த வரிசையில் இன்று பில்லி, சூனியம், ஏவல் ஆகியவைகளினால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப் பட்டதாய் கருதப் படுகிறவர்கள் தங்களை காத்துக் கொள்ளும் முறை ஒன்றினைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல்கள் கோரக்கர் அருளிய "சந்திரரேகை" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

ஓதிடுவேன் பேய்பில்லிச்சூனி யங்கள்
ஓடுவதற்கு மந்திரங்கள் உண்மை யாக
நீதியுடன் ஓம்உம்லம்சிம் நம்வம்கிலீம்
ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கே
தீதின்றி முக்கோணம் பெரிதாய்க் கீறித்
திட்டமுடன் அஉஇ உள்ளே நாட்டிப்
பேதிக்கா வோங்காரம் சுற்றித் தாக்கிப்
பிரபலமாய் செபிக்கச் சூனியங்கள் போமே.

                                                                                        - கோரக்கர்.

இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த யந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.



இந்த யந்திரத்தினை மூன்றங்குல (3"x3") சதுரமான செப்பு அல்லது வெள்ளியால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான முறைகள் இருக்கின்றன. அந்த தகவல்களை முந்தைய பதிவுகளில் பார்க்கலாம். அதன் படியே இந்த யந்திரங்கள் கீறப்பட வேண்டும்.

இப்போது  வெளிச்சம் நிரம்பிய, தூய்மையான அறையில் கிழக்கு நோக்கி அமர்ந்து, யந்திரத்தை வலதுகையில் ஏந்தியவாறு ஓம் உம் லம் சிம் நம் வம் கிலீம் ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கேஎன்ற மந்திரத்தை அந்தி, சந்தி வேளைகளில் 108 தடவை வீதம் மூன்று நாட்கள் தொடர்ந்து செபித்து வர பில்லி, சூனியம், ஏவல் போன்றவை எது இருந்தாலும் அது அவர்களை விட்டு நீங்கிவிடும் என்கிறார்.

தேவையுள்ளவர்கள் எளிதான செலவு பிடிக்காத இந்த முறையினை பயன்படுத்திக் கொள்ளலாம்

சித்தர்கள் வணங்கிய குலதெய்வம்

சித்தர்கள் வணங்கிய  குலதெய்வம்





சித்தமெல்லாம் சிவமயமாய் திளைத்திருக்க, ஆதிசக்தியின் அருளும், ஆசியும் பூரணமாக தேவைப் படும். இதை உணர்ந்திருந்த சித்தர்கள், அத்தகைய ஆதிசக்தியின் அம்சம் ஒன்றினையே போற்றி பூசித்தனர்.இந்த அம்சம் பத்து வயதுக்குறிய ஒரு சின்னஞ் சிறிய பெண்ணின் அம்சம் என்பது ஆச்சர்யமான ஒன்று!, நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று.

இந்த உயர் தெய்வத்தைப் பற்றி கொங்கணவர் பின்வருமாறு கூறுகிறார்.

"வாலையைப் பூசிக்க சித்தரானார்
வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார்
இந்த விதம் தெரியுமோ? வாலைப் பெண்ணே!"

                                                                                                        - கொங்கணவர் -

சித்தர்கள் வணங்கிய அந்த பால தெய்வத்தின் பெயர் வாலை என்பதாகும். ஆதி சக்தியின் பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை. அனைத்திற்க்கும் ஆதி காரணமான இந்த வாலை தெய்வத்தையே சித்தர்கள் அகப்புற வழிகளில் பூசை செய்தார்கள். இந்த வாலையை பூசிக்காத சித்தர்கள் யாருமே இல்லை. இவள் அருமையை போற்றிப் பாடாத சித்தர்களும் இல்லை எனலாம்.

இத்தகைய வாலை தெய்வம் நமது உடலில் இருந்து இயங்குவதை உணர்ந்து கொண்டு அவளே அனைத்திற்கும் காரண காரியமாக இருந்து ஆட்டுவிப்பதை அறிந்து எல்லாவித யோகா ஞானங்களுக்கும் அவளே தலைமைத்தாய் என்று அறுதியிட்டு உரைத்த சித்தர்கள். அவளையே போற்றி பூசித்து சித்தி பெற்றனர்.


சின்னஞ்சிறு பெண்ணான வாலையின் அருளால் சித்தியடைந்து, பின் அவளை கண்ணித் தெய்வமாக வழிபட்டு படிப்படியாக மனோன்மணித் தெய்வமாக பூசை முடித்து, இறுதியில் ஆதிசக்தியின் அருள் பெற்று முக்தி நிலையான மெய்ஞான நிலையினை அடைந்தனர். இதுவே ஞானத்தின் அதி உயர் நிலையாக கருதப் பட்டது. இந்த நிலை எய்தியவர்களே சித்த புருஷர்கள்.

1 November 2016

அஞ்சனை தேவி வாலைதேவி அகத்தியர் சித்தர் வழிபாடு முறை

அஞ்சனை தேவி வாலைதேவி அகத்தியர் சித்தர் வழிபாடு முறைஅகத்தியர் சித்தர் க்கான பட முடிவு  ஆரம்பத்தில் இந்த தெய்வம் வாயு புத்திரனான ஆஞ்சனேயரின் தாயாராக இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதாலும், அத்தகைய குறிப்புகள் வேறெங்கும் இல்லாததினாலும் இந்த தெய்வம் வாலையைப் போல தனித்துவமான தன்மைகளையும், பண்புகளையும் கொண்டவளாய் இருக்க வேண்டும்.




சித்தர் பெருமக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் படைப்புகளின் ஊடே புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இடமில்லை. எனது சிறிய அனுபவத்தில்  நான் பார்த்த வரையில் அவர்களின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் ஏதோ ஒரு காரணமோ, காரியமோதான் இருக்கிறது. அந்த வகையில் இந்த அஞ்சனா தேவியின் அருளை பெறுவதற்கான மந்திரத்தையும், அதை செயலாக்கும் நுட்பத்தையும் அகத்தியர் தனது "அகத்தியர் 12000" எனும் நூலில் அருளியிருக்கிறார். அந்த பாடல்கள் பின் வருமாறு.....

ஆச்சப்பா இன்னமொரு மார்க்கங்கேளு
அருளான அஞ்சனா தேவிமூலம்
பேச்சப்பா பேசாத மவுனமூலம்
பிலமான புலத்தியனே சொல்லக்கேளு
மூச்சப்பா நிறைந்தவெளி மூலாதாரம்
முத்திதரும் ஆதாரத்தில் மனக்கண்சாத்தி
காச்சப்பா ஓங்கிலியும் ரங்ரங்கென்று
கண்ணார நூறுருவிற் காணலாமே.

காணுகிற விதமென்ன மைந்தாகேளு
கற்பூர தீபஒளி சோதிபோலே
தோணுகிற போதுமனம் ஒன்றாய்நின்று
சோதியெனு மஞ்சனா தேவியென்று
பேணியவள் பாதமதைசிர மேல்கொண்டு
பிலமாக மானதாய்ப் பூசைப்பண்ணி
ஊணிமன மொன்றாக நீறுசாத்தி
உத்தமனே நித்தியமுந் தியானம்பண்ணே.

பண்ணப்பா நித்தியமுந் தியானம்பண்ண
பதிவான இருதயமே வாசமாகி
முண்ணப்பா நிறைந்ததிரு சோதிபோலே
முக்யமுடன் காணுமந்த சோதிதன்னால்
கண்ணப்பா கண்ணுமன மொன்றாய்நின்று
காணுதடா அண்டபதங் கண்ணிநேரே
உண்ணிப்பா உன்னியந்த விண்ணுமண்ணும்
ஊடுருவிப் பார்த்ததைநீ ஒண்டிக்கேளே.

ஒண்டுமிடந் தனையறிந்து அண்டத்தேகி
ஊசாடு மஞ்சனா தேவிமூலம்
நின்றுமன தறிவாலே தியானம்பண்ணி
நேமமுடன் விபூதியைநீ தரித்துக்கொண்டு
சென்றுஅந்த ஆகாச வெளியைப்பாரு
திருவான அஞ்சனா தேவிதன்னால்
கண்டுகொள்வாய் பகல்காலம் நட்சத்திரங்கள்
காணுமடா கண்னறிந்து கண்ணால்பாரே.

கண்ணாரப் பூமியைநீ நன்றாய்ப்பார்த்து
கருணைவிழிப் பார்வையினால் உண்ணிப்பாரு
பொன்னான பூமிநடுப் பாதளத்தில்
பொருளான வெகுநிதிகள் பொருந்தக்காணும்
முன்னோர்கள் வைத்தநிதி கண்டாயானால்
மோகமென்ற ஆசையைநீ வைக்கவேண்டாம்
மெய்ஞானி செய்தவத்தை நன்றாய்ப்பாரு
மெஞ்ஞான அஞ்சனா தேவிதானே.

மூலாதாரத்தில் மனதை நிறுத்தி, அஞ்சனா தேவியின் மூலமந்திரமான "ஓங் கிலியும் ரங்ரங்" என்ற மந்திரத்தினை நூறு தடவைகள் செபிக்க வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து செபித்து வந்தால் அஞ்சனாதேவி மனக்கண்ணில் ஜோதி வடிவாக காட்சி தருவாளாம். அப்போது நம் நெற்றியில் திருநீறு சாத்தி அந்த தேவியை வணங்கி, மனதால் பூசித்து மந்திர ஜெபத்தை தொடர வேண்டும் என்கிறார்.

இவ்வாறு தொடர்ந்து ஜெபித்து வந்தால், பகல் நேரத்தில் நட்சத்திரங்கள் தென்படுமாம், அத்துடன் பூமியில் பாதாளத்தில் முன்னோர் வைத்த நிதிகளும் தென்படுமாம். அப்போது  அந்த பொருட்களின் மீது ஆசை கொள்ளாமல், மெய்ஞானிகள் செய்த தவ முறைகளை எண்ணினால், அஞ்சனா தேவியின் அருளினால் அவை யாவும் கைகூடும் என்கிறார் அகத்தியர்.

26 October 2016

பழநி மலை முருகன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலையின் ரகசியங்கள் :

தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு
நான்கு விதமான அபிஷேக பொருட்கள்
மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது.
அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம்,
சந்தனம், விபூதி என்பவை. பன்னீர்
மார்கழி மாதத்தில் மட்டும்
உபயோகபடுத்தபடுகிறது. இவையில்
சந்தனம், பன்னீர் தவிர மற்றவை
எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில்
வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி
முதல், அடி வரை அபிஷேகம் என்கிற
முழு அபிஷேகம் சந்தனத்துக்கும்,
பன்னீரும் மட்டும் தான். இதில்
சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால்
பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு
பிரசாதம். கிடைப்பது மிக புண்ணியம்.

ஒரு நாளைக்கு ஆறு முறை
தண்டாயுதபாணிக்கு அபிஷேகம்
அலங்காரம் செய்யபடுகிறது.

இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள்
முடிந்துவிடும்.

அபிஷேகம் முடிந்து அலங்காரம்
செய்துவிட்டால், பின்னர் அடுத்த
அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ,
பூக்களால் அர்ச்சனை செய்வதோ
கிடையாது.

இரவில் முருகனின் மார்பில் மட்டும்
வட்ட வடிவில் சந்தன காப்பு
சார்த்தபடுகிறது. விக்ரகத்தின்
புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு
அளவுக்கு சந்தானம் வைக்க படும். முன்
காலத்தில் சந்தன காப்பை முகத்திலும்
சார்த்தி கொண்டிருந்தனர். பின்னர்
இந்த முறை மாற்றப்பட்டது.

தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த
சூடாக இருக்கும். ஆதலால் இரவு
முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர்
வெளிப்படும். இந்த நீரை அபிஷேக
தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம்
நடக்கும் போது, அங்கு இருக்கும்
பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம்
செய்கிறார்கள்.

தண்டாயுதபாணி சிலையில்,
நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு,
வாய், தோள்கள், கை, விரல்கள்
போன்றவை மிக அற்புதமாக உளியால்
செதுக்கபட்டது போல் தெளிவாக
இருக்கும். இது போகரின் கை வண்ணம்.

அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு
வித சுகந்த மணம் (இதுவரை ஒரு
போதும் வெளியே உணர்ந்திராத) பரவி
நிற்கும்.

இந்த சிலையை செய்ய போகர்
எடுத்துக்கொண்ட நாட்கள் - ஒன்பது
வருடம்.

அம்பாள், முருகர், அகத்தியர்
இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான்
போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த
சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார்.

இதற்காக 4000 மேற்பட்ட
மூலிகைகளை பல இடங்களிலும் சென்று
தெரிவு செய்து கொண்டு வந்தார்.

81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை
போகர் சொற்படி தயார் பண்ணினர்.

இது பொது நல எண்ணத்துடன்
செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும்
தன் சீற்றத்தை குறைத்துக்கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக ஒரு
தகவல்.

அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன்,
இரு மலைகளை காவடி போல் சுமந்து
பொதிகை நோக்கி கொண்டு செல்ல,
முருகர் அவனை தடுத்து நிறுத்தி,
போரில் தோற்கடித்து, இரண்டு
குன்றையும் இப்போது இருக்கும்
இடத்தில் வைக்க செய்தார் என்று
புராண தகவல்.

போகர், இகபரத்தில் இருக்கும் போது
தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை
நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை
நோக்கி பிரதிஷ்டை செய்தார்.
இதனால், மலை நாட்டில்
உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல
தெய்வம் ஆனார்.

கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை
செய்து கட்டிய எத்தனையோ
கோயில்கள் சிதிலமடைந்து போயும்,
நவபாஷணத்தில் சிலை செய்த இந்த
கோயில் மேலும் மேலும் வளர்ந்து
கொண்டிருப்பதன் காரணம் ... சித்தர்
தான் என்று பலரின் எண்ணம்.

தண்டாயுதபாணி சிலைக்கு இடது
பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம்
உள்ளது. அவரை தரிசிக்க
வலதுபக்கமாக சென்றால், தீபம்
காட்டினால் மட்டும் தான் அதை பார்க்க
முடியும்.

பழனியில் இரண்டு மரகத லிங்கம்
உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில்,
இன்னொன்று போகர் சமாதியின்
மேல். இரண்டுமே போகர் பூஜை
செய்ததாக தகவல்.

ஸ்ர