youtube

23 November 2016

விநாயகரைத் துதிக்க ஒரு மந்திரம்ஓ

விநாயகரைத் துதிக்க ஒரு மந்திரம்ஓம் சுமுகாய நமஓம் ஏகதந்தாய நமஓம் கபிலாய நமஓம் கஜகர்ணாய நமஓம் லம்போதராய நமஓம் நாயகாய நமஓம் விக்னராஜாய நமஓம் கணாத்பதியே நமஓம் தூமகேதுவே நமஓம் கணாத்ய க்ஷசாய நமஓம் பாலசந்த்ராய நமஓம் கஜானனாய நமஓம் வக்ரதுண்டாய நமஓம் சூர்ப்ப கர்ணாய நமஓம் ஹேரம்பாய நமஓம் ஸ்கந்த பூர்வஜாய நம

எந்த விதமான கிரக பாதிப்புகளுக்கும் கீழ்க்கண்ட பரிஹாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் கஷ்டங்களின் தாக்கம் வெகுவாகக் குறையும்

எந்த விதமான கிரக பாதிப்புகளுக்கும் கீழ்க்கண்ட பரிஹாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் கஷ்டங்களின் தாக்கம் வெகுவாகக் குறையும். 1) காகத்திற்கு உணவிடுதல். 2) பறவைகளுக்கு தாகம் தீர்க்க மாடியில் நீர் வைத்தல். 3) பசுவிற்கு அகத்திகீரை, பச்சரிசி வெல்லம் தருதல். 4) எறும்பு உண்ண பச்சரிசி மாவில் கோலமிடுதல். 5) சனிக்கிழமை கருப்பு நிற நாய்களுக்கு சப்பாத்தி தருதல். 6) மீன்களுக்கு பொரி அளித்தல். 7) மலை மேல் உள்ள கோவில்களில் உள்ள குரங்குகளுக்கு வாழைப்பழம் தருதல். 8) கோயில் விளக்கிற்கு எண்ணை அளித்தல். 9) ஊனமுற்றவர்களுக்கு உணவு, உடை வழங்குதல். 10) அரசமரத்திற்கு நீர் ஊற்றுதல். 11) அன்னதானம், நீர்ப்பந்தல் போன்றவற்றிற்கு உதவுதல். வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

திசை கட்டும் மந்திரம்அவசர கால திசை கட்டு மந்திரம்

திசை கட்டும் மந்திரம்அவசர கால திசை கட்டு              முதலில் பூமியை தொட்டு வணங்கி பின் சிறிது விபூதியை விரலால் எடுத்து சிரசை தொட்டு யங் என்று சொல்லி விபூதியை நமது முன்புறம் போடவும். பின் வங் என்று சொல்லி பின்புறம் போடவும். சிங் என்று சொல்லி வலப்புறம் போடவும். மங் என்று சொல்லி இடப்புறம் போடவும்.நிதானமான திசைக்கட்டும் மந்திரம்அரி ஓம் தெற்கே நொக்கினேன் தெற்கே நோக்கினேன்தெற்கே சண்முக மூர்த்தியாக கொண்டேன்அரி ஓம் வடக்கே நோக்கினேன் வடக்கே நோக்கினேன் வடக்கே நோக்கினேன்வடக்கே பிரம்மாவாக கொண்டேன்அரி ஓம் கிழக்கே நோக்கினேன் கிழக்கே நோக்கினேன்கிழக்கே தேவேந்திரணாக கொண்டேன்.அரி ஓம் மேற்கே நோக்கினேன் மேற்கே நோக்கினே்மேற்கே நரசிங்க மூர்தியாக கொண்டேன்அரி ஓம் ஆகாயத்தை நோக்கினேன் ஆகாயத்தை நோக்கினேன் ஆகாயம் திருநீலகண்டனாக கொண்டேன்அரி ஓம் பாதளம் நோக்கினேன் பாதாளம் நோக்கினேன் பாதாளம் கால பைரவராக கொண்டேன்அரி ஓம் பூமியை நோக்கினேன் பூமியை நோக்கினேன் பூமி பூடமாக கொண்டேன் பொறுப்பு இருப்பாக கொண்டேன்சிவன் சிவனாக கொண்டேன் சிவன் இருந்தவாறே.                 - மேற்கண்டவாறு சொல்லி விபூதியை எடுத்து நம்மை சுற்றிலும் தூவி ஆகாயத்தையும், பூமியையும் நோக்கி சிறிது விபூதியை தூவ வேண்டும்.

காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. அதைக் கேட்டு நாமும் சூரியனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வோம். ஆனால் இதுவல்ல சூரிய நமஸ்காரம். தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள்தான் சூரியநமஸ்காரம். இதை ஏன் செய்ய வேண்டும், இதை செய்வதனால் என்ன பயன் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை…சத்குரு:யோகா என்ற வார்த்தைக்கு “உங்களை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும்” என்று அர்த்தம். யோகா என்ற வார்த்தை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தை. அது எந்த ஒரு குறிப்பிட்ட பயிற்சியையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நீங்கள் எதைச் செய்தாலும் அது யோகாவாக இருக்கலாம். உங்கள் வளர்ச்சிக்கான செயல்முறையாக அதைப் பயன்படுத்தினால், அதுதான் யோகா.ஆசனம் என்றால் உடலை வைத்திருக்கக் கூடிய ஒரு நிலை. உடலை வைத்து எண்ணிலடங்கா ஆசனங்களை உருவாக்க முடியும். அதில் குறிப்பிட்ட சில ஆசனங்கள்தான் யோகாசனங்கள் என்று அறியப்படுகின்றன. நீங்கள் உயர்ந்த நிலையை அடைய உதவும் ஆசனம்தான் யோகாசனம்.உங்கள் தினசரி வாழ்வில் கவனித்தால், நீங்கள் சந்திக்கும் பலவிதமான மனநிலைகள் மற்றும் உணர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப, உங்கள் உடல் பலவிதமான நிலைகளை எடுக்கிறது. நீங்கள் கோபமாக இருந்தால், ஒரு வகையில் உட்காருவீர்கள்; அமைதியாக இருந்தால், இன்னொரு விதமாக உட்காருவீர்கள். இப்படி உங்கள் உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைத்திருந்தால், அது உங்கள் விழிப்புணர்வை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உயர்த்தி, உங்கள் சக்திகளை அதிர்வடையச் செய்கிறது. இதுதான் யோகாசனங்களுக்குப் பின்னால் இருக்கும் நியதி.சூரிய நமஸ்காரம் என்றால் என்ன?தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள்தான் சூரியநமஸ்காரம் என்று அழைக்கப்படுகிறது. அதை சூரியநமஸ்காரம் என்று அழைப்பதிலேயே பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் சக்திப் பகுதி. சூரிய நமஸ்காரம் உங்கள் நாடிகளைத் திறந்து, உங்களுக்குள் இருக்கும் சூரியனை தூண்டிவிடுகிறது, இதன் மூலம் நீங்கள் மிகவும் துடிப்பாக, உயிர்ப்புடன் இருக்க முடியும். மெதுவாக 100 சூரியநமஸ்காரங்கள் செய்யும் நிலைக்கு வந்துவிட்டால், நீங்கள் ஒரு தடகள வீரரைப் போல ஆகிவிடுவீர்கள்.இன்னொரு விஷயம் என்னவென்றால், உங்களை பேணிப் பாதுகாக்கின்ற சூரியனுக்கு தினமும் காலையில் செய்யும் ஒரு வழிபாடாகவும் அது இருக்கிறது.உங்களுக்கு இந்த உடல் இருப்பதன் காரணமே சூரியன்தான், இல்லையா? இந்தக் கலாசாரத்தில் வழிபாடு செய்வதென்றால் சில சடங்குகளைச் செய்வதோ அல்லது சில மந்திரங்களை முணுமுணுப்பதோ அல்ல. உங்கள் முழு உடலையுமே வழிபாடாக ஆக்குவதுதான் இங்கு வழிபடும் முறை.சூரிய நமஸ்காரத்தின் பலன்கள்:போதுமான அளவு சூரியநமஸ்காரம் செய்தால், உங்களுடைய தூங்கும் நேரம் மிகவும் குறைந்து, எப்போதும் ஒரு உயர்ந்த நிலையிலேயே இருப்பீர்கள்.நீங்களாக எந்த முயற்சியும் செய்யாமலேயே உங்கள் தூக்கம் 4 அல்லது 41/2 மணி நேரமாக மிகச் சுலபத்தில் குறைந்துவிடும். சில வாரப் பயிற்சியிலேயே உங்கள் உற்பத்தித் திறனும், செயல்திறனும் மேம்பட்டுவிடும்.அது தன்னளவில் ஒரு முழுமையான பயிற்சியாகும்.அதற்கு எந்தவிதமான கருவிகளும் தேவையில்லை. அது ஒரு வரம், ஏனென்றால் நீங்கள் பயணம் செய்து கொண்டிருந்தாலும், உங்களது பயிற்சிகளைத் தொடர முடியும். சூரியநமஸ்காரத்தைத் சரியாக செய்து பாருங்கள்; உங்கள் உடலில் இருக்கும் அத்தனை பகுதிகளும் நீண்டு, மடங்கி, அவற்றுக்குத் தேவையான உடற்பயிற்சி கிடைத்துவிடும். இதைத் தவிரவும், உங்கள் சக்தி நிலைகளும் உயர்ந்த நிலையை அடைவதால், வாழ்க்கையின் மேடு, பள்ளங்களை பெரிய சிரமங்கள் இல்லாமல் எதிர்கொள்ள முடியும். அதை ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வோடு செய்பவருக்கு சூரியநமஸ்காரம் அற்புதங்களை நிகழ்த்தும். தியானத் தன்மைக்குள் நுழைவதற்கு இது மிக எளிமையான ஒரு வழி.யோகப் பயிற்சி செய்வதால், ஒருவர் நாள்பட்ட நோய்களான ஆஸ்துமா, இரத்தக் கொதிப்பு, மூட்டு வலி போன்றவற்றிலிருந்து விடுதலை பெற முடியும். ஆனால் யோகா என்பது ஒரு சிகிச்சை முறை அல்ல.நீங்கள் யோகாசனங்களை பயிற்சி செய்து வந்தால், அதற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பது வேறு விஷயம். ஆனால் இதை ஒரு சிகிச்சை முறையாகப் பயன்படுத்தக் கூடாது. ஒரு சிகிச்சை முறை என்றால், உங்களுக்கு ஒரு உடல் கோளாறு ஏற்பட்டால், நீங்கள் மருத்துவரிடம் செல்கிறீர்கள், அவர் உங்களுக்கு மருந்து கொடுக்கிறார்.நீங்கள் எத்தனை காலம் அந்த மருந்தை சாப்பிடுவீர்கள்?உங்களுடைய பிரச்சனை நீடிக்கும் வரை அந்த மருந்தை உட்கொள்வீர்கள். பிரச்சனை முடிந்தவுடன், மருந்துக்கு எந்த அவசியமும் இல்லை. யோகாசனத்தையும் இப்படி எண்ணக் கூடாது. நீங்கள் யோகாசனங்கள் செய்ய ஆரம்பித்தவுடன், அவற்றை உங்கள் வாழ்க்கையின் ஒரு ஒழுக்கநெறியாகவே கடைபிடிக்க வேண்டும். அதை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.அப்படி செய்தால் அது உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஆகிவிடுகிறது. அதிலிருந்து உங்களுக்கு கணக்கிலடங்காத பலன்களைப் பெற முடியும். யோகாசனங்களை அணுக இதுதான் சரியான வழி.ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட பலனுக்காகவும் யோகாசனங்களைச் செய்யாதீர்கள். அது அப்படி வேலை செய்யாது.யோகம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம்""இதை அனைவருக்கும் பகிர்வோம்""ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"


மூல நோய் நீங்கிட...துத்தி இலைகள்..
.
.
மூலநோய் அறுவை சிகிச்சைக்கு பின்பும் மீண்டும் வர வாய்ப்பு உண்டு.
எந்த வகை மூலநோயாக இருந்தாலும் ...
எங்கும் சாதாரணமாக காணப்படக்கூடிய துத்தி இலைகளை நன்கு அலசி எடுத்து துவரம்பருப்பு சேர்த்து வேகவைத்து கீரை சைமைப்பதுபோல் செய்து தினசரி மதியம் சாப்பாட்டுடன் சாப்பிட்ட வேண்டும்.

காலை ,மாலை துத்திஇலையை அரைத்து ஒரு நெல்லி காய் அளவு
விழுங்கிவிட்டு மோர் குடிக்கவேண்டும்.

துத்திஇலையை ஆமணக்கு எண்ணையில் வதக்கி அதை சூடு ஆறினதும் ஆசனவாயில் வைத்து கட்டி அதன் மேல் இன்னொரு துணியை லங்கோடு கட்டிக்கொண்டு இரவு உறங்கவும்.

காரமான உணவு தவிர்க்கவும்.
வாரம் ஒருமுறை ஆயில் பாத் செய்யவும்.

மேற்கண்டவாறு தொடர்ந்து 40 நாட்கள் செய்துவர மூலநோய் குணமாகும்.

21 November 2016

மரகதலிங்கம்

மரகதலிங்கம்
மரகதலிங்கம் ஒரு வகை சிவலிங்கம்; மரகத்தால் செய்யப்பட்டிருக்கும். தமிழகத்தின் பல கோயில்களில் மரகதலிங்கங்கள் உள்ளன.
மரகதத்தின் பண்புகள்
மரகதம் (பெரில்) வகையைச் சேரந்த ஒரு கனிமம். வனேடியம் என்ற மூலகம் மரகதத்திற்கு பச்சைநிறம் தருகிறது. பச்சை நிறம் கொண்ட மரகதம் ஒளிரும்தன்மையுடையது. இதில் சிலிக்கன், அலுமினியம், மக்னீசியம் போன்ற இரசாயனக் கலவைகள் அடங்கியுள்ளன. இக்கற்கள் மிக மென்மையானவை; எளிதில் நொறுங்கும் தன்மை உடையவை. கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி அதில் மரகதத்தைப் போட்டால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றும். நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டால் நீர் முழுவதும் பச்சையாகத் தோன்றும். இப்படிப்பட்ட குணமுடைய கல் மிக விலை உயர்ந்த கல் ஆகும்.
நவரத்தினம்
மரகதக்கல் ஒன்பது நவரத்தினங்களுள் ஒன்றாகும். நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. சில குறிப்பிட்ட நவரத்தினங்களுக்கு ஈர்ப்பு சக்தி உண்டு.
ஆன்மீகப் பண்புகள்
புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்கவடிவில் வழிபடுவது சிறந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. சிலைகளும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக சில மன்னர்கள் மரகதக் கல்லில் லிங்கத்தை வடிவமைத்தனர். மன்னர்கள் இந்த வகை லிங்கங்கள் கோவிலில் வைத்து வழிபடுவதையே சிறப்பு என்று கருதினார்கள். மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகதலிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது என்கிறார்கள். வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகதலிங்கத்தை வணங்கலாம்.
சப்த விடங்க தலங்கள்
ஏழு மரகதலிங்கங்கள் [[இந்திரன்]] மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாக சொல்லப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர்ஆகிய ஏழு இடங்களில் உள்ளசிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.
சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்தது.
திருஇடைச்சுரம
செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் செல்லும் பாதையில் சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. திருஇடைச்சுரம் என்ற திருத்தலம். தற்போது இந்த இடம் திருவடி சூலம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு சிவலிங்கம் ஒரு சுயம்பு மரகதலிங்கம். சிவன் பச்சையாகக் காட்சியளிக்கின்றார். கற்பூர சோதி காட்டும்போது அந்த ஒளி லிங்கத்தின் மீது பட்டுப் பிரதிபலிக்கின்றது. கண்ணாடியைப் போன்று தெரிகிறது. புற்றுருவாக இருந்த சுவாமிக்கு அம்பிகை பசுவாக வந்து பால் பொழிந்த தலம் இதுவாகும்.
சிறுகரும்பூர் காமாட்சி சமேத திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில்
வேலூர் காவிரிப்பாக்கம் அருகே உள்ள சிறுகரும்பூரில் உள்ள சுந்தர காமாட்சி சமேத திரிபுராந்தக ஈஸ்வரர் கோயிலில் உள்ள மரகத லிங்கம் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்தது. இப்போது (கடந்த ஜூலை மாதம்) இது திருடு போனது.
மரகதாசலேசுவரர் கோவில் திருஈங்கோய்மலை
திருச்சி அருகிலுள்ள மரகதாசலேசுவரர் கோவில் திருஈங்கோய்மலையில் சிவலிங்கம், பெயருக்கேற்ப மரகதக்கல் நல்ல பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கிறது.
நஞ்சுண்டேஸ்வரர் கோவில், நஞ்சன்கூடு மைசூர்
நஞ்சுண்டேஸ்வரர் கோவில், நஞ்சன்கூடு மைசூர் ஒரு சிவன் கோவில். இங்கு மாமன்னர் திப்பு சுல்தான் ஒரு மரகதலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் , திருஉத்தரகோசமங்கையில்உள்ளது மங்களேசுவரி சமேத மங்களநாத சுவாமி கோவில். இக் கோவில் வளாகத்திற்குள்ளே நடராஜருக்கென்று தனி சன்னதி உள்ளது. இங்கு உலகப் பகழ் பெற்ற பச்சை மரகதக்கல்லால் ஆன நடராசர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இக்கோவிலில் உள்ள மரகதலிங்கத்திற்கும், ஸ்படிகலிங்கத்துக்கும் தினசரி அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. மார்கழி மாதம், திருவாதிரைக்கு முதல் நாள் மட்டும் நடராசருக்கு அபிஷேகம் நடக்கிறது. ஆருத்ரா தரிசனத்தன்று பச்சை மரகதக்கல் நடராசருக்கு அபிஷேகம் நடப்பதால் அன்று ஒரு நாள் மட்டும் இவ்விரு லிங்கங்களுக்கும் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஒலி, ஒளி அதிர்வுகளைத் தாங்கும் சக்தி இல்லாத மென்மையான பண்புகள் கொண்ட பச்சை மரகதக்கல்லால் ஆன நடராசர் சிலையை சந்தனக் கலவையைப் பூசி பாதுகாத்து வருகின்றனர். திருவாதிரைக்கு முதல் நாள் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனப் பூச்சு கலைக்கப்படுகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் உள்ள போகர் சமாதியில் சித்தர் போகர் வழிபட்டதாகக் கருதப்படும் மரகதலிங்கம் உள்ளது.
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் சென்னைக்கு வட மேற்கே சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33-வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பிரியும் சாலையில் அமைந்துள்ளது. இங்குள்ள சிலைகளில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற சிலைகள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை. கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொலுவாக வீற்று இருக்கிறது. கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகதகல்லில் சூரியனார் சிலை, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட மரகதவிநாயகர் (ராஜகணபதி) சிலை முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் சிலை. இங்குள்ளது போன்ற பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை. இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரதகப்பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.