youtube

5 October 2014

தெய்வமாலை சுத்தம் செய்யும் முறை


தெய்வமாலை சுத்தம் செய்யும் முறை
கழுததில் அணிய வேண்டிய ருத்ராட்ச மாலையை  பாலில் சிறிது கல் உப்பு போட்டு சுத்தநீரில் கழுவி வைக்கவும். ருத்ராட்ச மாலை சுத்தபடுத்தி இதற்கன மந்திரம் 9 முறைகிழ உள்ளவாறு கூறவும். ருத்ராட்ச மாலையை கையில் வைத்துக் கொண்டு பயபக்தியுடன் மந்திரம்  கூறவும்
ஓம் ஐயும் கிலியும்  செளவும் ஸ்ரீயும்
ஹரிம்ஓம் நமசிவாய ஓம் சிவநேத்ராய
ருத்ராட்சாய நம;
ருத்ராட்ச மாலையை மட்டும் பெற்றோரிடம் அல்லது  தான் மதிப்பவரிடம் கொடுத்து அணித்து கொள்ளவும்..அவர்கள் காலில் விழுந்து வாங்கிக் கொள்ளவும்
அணிந்த பிறகு ருத்ராட்ச மாலையை   காரணமில்லாமல் களாட்டக் கூடாது. .சுய கட்டுப் தேவை

9 September 2014

யட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், ஜின் வசிய பூஜா 3


உடற்கட்டுக்கு மந்திரமும், காவல் தெய்வ மந்திரமும் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. நாம் பெற்ற வரங்களை கொள்ளையடிக்க தீய சக்திகள் முயற்சிக்கும். தீட்டு உண்டாக்கி நம்மிடம் இருக்கும் மந்திர சக்தியை விளக்க பார்க்கும். போலி சாமியார்கள் நம்மை ஏமாற்றி மந்திர சக்தியை ஆசியாக பெற்று அவர்கள் தவறான வழியில் பயன்படுத்தும் போது சக்தி கொடுத்த நம் சக்தியும் விரையமாக பார்க்கும். இது போன்ற நிகழ்வுகள் நம்மை பாதிக்காமல் இருக்க, அவசியம் மேற்கண்ட பூஜை முறைகள் நம்மை காக்கும் என்பதை அறிக. தேவ ரகசியத்தில் இதுவும் ஒன்று.
      சிவன் மலைக்கும், சித்த சமாதிக்கும் சென்று வந்த உடனே நாமும் தீட்சை வாங்கி இருக்கிறோம். எனவே நாமும் சாமிதான் என அலங்காரம் செய்து கொள்ள கூடாது. அடக்கமான பேச்சு ரொம்ப முக்கியம். மற்றவர்களை போல் இறைவனுக்கு நானும் ஒரு பக்தன் அவ்வளவுதான் என்ற எண்ணம் இருக்க வேண்டும். இல்லையேல் மனதில் ஆணவம் புகுந்து சித்தர் ஆசியை பெற விடாது. நிறைய கோவிலுக்கும், சித்தர்கள்  ஜீவ சமாதிக்கும் சென்று வாருங்கள். அடிக்கடி சென்று வாருங்கள். உங்கள் குடும்பத்தில் இறந்தவர்களையும் வழிபடுங்கள், சக்தி பெருக்கம் கூடிகொண்டே போகும். சக்தி கூட கூட இந்த உலகமே உங்களது என்று சொல்ல தோன்றும் பூரிப்பாக, ஆனால் அதில் ஆணவம் மட்டும் இல்லாமல் அன்பான வார்தையாக இருக்க வேண்டும். தன்னடக்கம் மிக முக்கியம். ஆன்மிகத்தால் அந்த அடக்கம் முக சாந்த்தை கொடுக்கும். அதுவே முக்கிய வசியமாகும்.
     நீங்கள் சேர்த்து வைக்கும் விரத மகிமை, செய்யும் தர்மங்கள், செபிக்கும் மந்திரங்கள், ஒழுக்கம் இவைகள் உங்களிடம் உள்ள விற்பனை பொருள். இதன் மூலம் தான் மற்றவர் துன்பம் மற்றும் கோரிக்கையை நிகழ்த்தி கொடுக்க பயன்பதுத்த முடியும். மேற்கண்ட மூலதனம் சிறப்பாக இருந்தால் இறைவனுக்கு அதை சமர்ப்பணம் செய்து வருவோரின் கோரிக்கையை வெற்றியாக முடித்து கொடுக்க முடியும். எனவே மூலதனத்தை எவ்வளவுக்கு எவ்வளவு பெருக்குகிறீர்களோ அவ்வளவு லாபம். பணம் மட்டும் லாபம் என நினைக்க வேண்டாம். இது ஒன்றும் ஆண்மிகவதிகளுக்கு முக்கியமல்ல என்று தெரியும். இருப்பினும் வெளிப்படையான உண்மைகள் தேவைகள் பற்றி கூறுவதில் பிழை இல்லை என்பதால் கூறினோம். ஆத்ம பலம், மன பூரிப்பு, மற்றவர்க்கு உதவிய திருப்தி, பிறவிப்பயன் ஆண்டவன் அருள் போன்ற எண்ணற்றவைகளையும் சேர்த்தே லாபம் என்று கூறினேன். இவைகள் நமக்கு கிடைக்க கூடிய அளவிட முடியத சொத்துக்களாகும்.
     மாந்த்ரீக முறைகளை முறையான ஒழுக்கங்களை கடைபிடித்தால் யாரும் போலிசாமியார் என்று கூற முடியாது.
      

ஆண்மிகத்தில் சம்பாதிப்பதில் ஒரு சதவீதம் தர்மம் செய்யுங்கள. அதுபோல் கூறும் மந்திரத்தில் பத்து சதவிதம் யாகத்தில் தேவதைக்கு அர்ப்பணம் செய்யுங்கள்.

           எல்லா தெய்வதிற்கும் காத்தல், அழித்தல், படைத்தல் சக்தி இருக்கின்றது. மனிதனுக்கும் அவ்வாறே உண்டு. ஒவ்வொரு மனிதரை கேட்டு பார்த்தாலும் அது உண்மை என புரியம். அது போல முத்தொழிலும் புரிவது போல முக்காலமும் உணரும் சக்தி ஒரு சில தெய்வங்களுக்கு மட்டுமே உண்டு. அது போல மனிதருக்கும் ஒரு சிலருக்கே உண்டு. அந்த ஒரு சிலரில் நீங்களும் இடம் பெற இந்த பயிற்சியை கடை பிடியுங்கள்.
     நாம் சந்தோசம் பெருகத்தான் இறைவனை நாடுகிறோம், வேண்டுகிறோம். தர்மங்கள் செய்கின்றோம், இது இறைவனுக்கு தெரியும். எனவே கட்டுபாடுகள் உங்கள் ஆத்மாவுக்கு புறம்பாக இருக்க கூடாது. மனதில் ஒரு ஆசை வைத்து கொண்டு கட்டுப்படுகளால் ஆத்மாவை அடக்கி இறைவன் கோபித்து கொள்வார் என நினைத்து மன இருக்கதோடு பூஜைகள் செய்தல் பலன் கிடைக்காது. ஒன்று ஆசைகளை விலக்க வேண்டும், அல்லது அதை அனுபவித்து விட வண்டும். மனதை லேசாக இறுக்கமில்லாமல் வைத்திருக்க வேண்டும். ஆசைகளின் கூடாரமாக அது இருக்க கூடாது. அப்போதுதான் இறை சக்தியை பெற முடியும். நியாயமான சந்தோசங்களை இறைவன் எப்போதும் தடுக்க மாட்டார்.
இறந்தவருக்கு தலை அருகில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். அது புது தீபமாக இருக்க வேண்டும். அது அகலாகவும் இருக்கலாம், காமாட்சி அம்மன் விளக்காகவும் இருக்கலாம். இவர்களுக்கு பயன்படுத்திய விளக்கை தெய்வ பூஜைக்கு பயன்படுத்தகூடாது. குடும்பம் சிரமத்திற்குள்ளாகும். அவசர நிலையில் குடும்பத்தில் பூஜைக்கு பயன்படுத்திய விளக்கை எடுத்து பயன்படுத்தினால் பாதகமிராது. அனால் அந்த விளக்கை மீண்டும் பூஜைக்கு பயன்படுத்துதல் சிறப்பில்லை. குறிப்பாக மாந்திரிக பூஜைக்கு அது போன்ற தீபத்தை பயன்படுத்த கூடாது. அது போன்ற தீபங்கள் குடும்பதில் தலைமுறை விளக்கு என பாதுகாக்கும் வழக்கம் உண்டு. அதை நன்று கேட்டு அறிந்து விளக்கி விடவும். நல்ல தீபமே பழையது இருந்தாலும் தேவதைக்கென செம்பினால் ஆனா புது காமாட்சி அம்மன் தீபம் வாங்கியே பயன்படுத்தவும். துணை விளக்காக இருப்பதை பயன்படுத்தி கொள்ளலாம்.
       தியானத்தின் போது மந்திரங்கள் ஆகாயத்திற்கோ பூமிக்கோ செல்ல கூடாது. இரண்டிற்கும் ஈர்ப்பு சக்தி உண்டு. எனவே ஆகாயத்தின் ஈர்ப்பில் இருந்து தப்பிக்க ப்ரனாயாமம் செய்து நாமே அங்குகிருக்கின்ற சக்தியை உறிஞ்சு கொள்கிறோம். அதை நம் உடலோடு சக்தி பெருக்கத்திற்கு பயன்படுத்துகிறோம். அடுத்து பூமி தன் சக்தியை எப்போதும் யாருக்கும் கொடுக்காது. வேண்டுமானால் இதில் வாழ்ந்து கொள்ளலாம். பிறகு இதிலே தான் அழிய வேண்டும். அதே போல வானத்திலிருந்து பெறப்பட்ட சக்தி வானத்திற்கே சென்று விடும். இதை தான் உயிர் பிரிந்து சென்று விட்டது என்று ஆகாயத்தை பார்த்து வழிபடுவார்கள்.  இது அனைவரும் அறிந்த ஒன்று. மண் ஆகாய சொத்தையும், ஆகாயம் மண் சொத்தையும் அபகரிக்காது. அதனால் தான் நீரை ஆவியாக்கி ஆவியாக்கி எடுத்து கொண்டாலும் மீண்டும் மழையாக கொட்டிவிடும். இதில் களவானியே மனிதன் தான். ஆகாய சக்தியை பெற மூச்சு பயிற்சி செய்வது போல, பூமி தன் சக்தியை இழக்காமல் இருக்க வெறும் தரையில் அமர்ந்து தியானம் செய்யாமல் ஆசனங்கள் மீது அமர்ந்து செய்தார்கள்.  அந்த ஆசனம் மா, பலா, அத்தி, அரசு, வில்வம், ஆலம், இல்லுப்பை போன்ற பல வகையான மரங்களால் ஆன பலகையிலும், கடினமான துனிகாளால் ஆன கம்பளம், பட்டு, சணல் கோணி இவைகளின் மேல் அமர்ந்து தியானம் செய்தாள் பூமி தன் தன சக்தியை நம் மீது செலுத்தி பாதிப்பை தராது என அறிந்து இருந்தனர். நீங்களும் உங்களுக்கு எந்த வகை ஆசனம் கிடைக்குமோ அதை பயன்படுத்துங்கள். கம்பளி ஆசனம் தவிர்க்கவும். தர்ப்பைப்புல் ஆசனம், வெண்பட்டு (அ) சிவப்பு பட்டு ஆசனம், சனலால் ஆன கோணி ஆசனம். இதுவும் இல்லையெனில் சுத்த பருத்தியால் ஆன கனமான விரிப்பு இவைகள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து உங்களுக்கு ஆசனமாக் வைத்து கொள்ளுங்கள். இதுவே போதும், சிறப்பானதும் இதுதான். உங்கள் ஆசனத்தை வேறொருவர் பயன்பதுத்த கூடாது. ஆசனத்தில் ஒரே பக்கத்தைத்தான் பயன் படுத்தவேண்டும். மர ஆசனத்திற்கு நீங்கள் தேர்வு செய்வதனால் பொதுவானதாக மா பலகை அதனை பெரிய மனையாக செய்து வைத்து பயன்படுத்துங்கள் காலத்திற்கு வரும்.
ஆக மந்திரம் தங்கள் பூஜையில் அமர்ந்து படிக்கும் போதெல்லாம் ஆசனத்தை பயன்படுத்த வேண்டும். மற்ற வெளி இடங்களில் சாதரணமாக நீங்கள் வைத்திருக்கும் காவி துண்டை பரப்பி அதன் மேல் அமர்ந்து ஜெபம் படிக்கலாம். எந்த ஆசனத்தை தேர்ந்தெடுத்தாலும் முன்னமே தேர்ந்தெடுத்து, ஒன்றையே தான் அது பழுதடையும் வரை பயன்படுத்த வேண்டும். மாற்றி மாற்றி பயன்படுத்த கூடாது.
.....................நாளை தொடரும்

அனுமன் வழிப்பாட்டின் மகிமை !!

அனுமன் வழிப்பாட்டின் மகிமை !!

இளநீர் உடம்பின் வெப்பத்தை அகற்றி சக்தியைக் தரும் வல்லமையுடயது. ஹனுமான் என்றும் சிரஞ்சீவி ஆதலால், அவருக்கு இளநீர் அபிஷேகமோ அல்லது நிவேதனமோ செய்வதால், பக்தர்களை அனுக்கிரஹித்து எவ்வித கஷ்டமும் இன்றி அதிக நாட்கள் இப்பூலகில் வாழ வரமளிப்பார். அனுமானுக்கு பால் அபிஷேகம் செய்தால் எடுத்த காரியங்கள் நிறைவேறும் நல்ல செய்திகள் கிடைக்கும். குளிர்ச்சியான தயிரை அனுமனுக்கு அபிஷேகம் செய்தால் அனுமன் மனம் குளிர்ந்து நமக்கு அருள் புரிவார். தயிரை அபிஷேகம் செய்தால் மக்கட்பேறு உண்டாகும். அனுமானுக்கு நல்லெண்ணை காப்பு சாற்றுவதன் மூலம் குளிர்ச்சி தரும், அவரும் மனம் குளிர்ந்து அருள்வார் என்பது நம்பிக்கை எலுமிச்சம் பழம் ராஜகனி, புளியில்லாத எலுமிச்சம் பழமே சிறந்தது. எலுமிச்சம் பழத்தை அனுமானுக்கு மாலை சாற்றினால் திருஷ்டியினால் உண்டாகும் கோளாறுகள் விலகும். ஏவல், பில்லி, சூனியம் விலகும்

10 August 2014

கடைசி தலைமுறை
1.ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்
2.செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
3.மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!
4.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
5.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
6.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
7.தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
8.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
9.காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.
10.நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
11.மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க புடை சூழ வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்
12.10th 12th ரிசல்ட்  பேப்பர் ல பார்த்த கடைசி தலாமுறை நாம தான்
13.வெட்கப்படுற பொண்ணுங்களை பார்த்த கடைசி தலைமுறை நாமதான்...
14.கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுற நாம தான்
15.ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.
16.சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.
17.போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்
16.ஜவ்வுமிட்டாயில் வாட்ச் கட்டினது
நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை
அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,
கோனார் தமிழ் உரை,வெற்றி அறிவியல் உரை
இதெல்லாம் போச்சு.
18.நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி போன்ற பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...
19.5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,
20.மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை
இதையெல்லாம் படிக்கும்போது சிறுதுளி கண்ணில். எட்டி பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.

6 August 2014

யட்சிணி வசியம் முறைகள் பாடம் 2


  யட்சிணி வசியம் முறைகள்
பாடம் 2
. மூச்சு பயிற்சி செய்யாமல் மந்திரம் நாம் எவ்வளைவு கூறியிருந்தாலும்,அதனால் சித்தி அடைந்திந்தாலும் நாய் நம் அருகில் வந்து முகர்ந்தால் ,நம் மந்திர சித்திஎல்லாம் eஅது உறிஞ்சிவிடும்.காரணம் நாய் அது அறியாமலேளே வாசி யோகம் செய்யகூடியாது.நீங்கள்  கவனித்திருப்பீர்கள். நாக்கை தொங்கவிட்டு  மூச்சை விட்டு  விட்டு இறப்பை வாங்கும் ,இதுவும் வாசியகலையே.எனவே நாம் மூச்சு பயிற்சி செய்து மந்திரம்  படித்தால் பாதிப்பருக்காது.ஒருதேவரசியம் தெரிந்து கொள்ளுங்கள்.நாம் பிரணாயமம் நன்கு பயிற்சி பெற்றிருந்தாலும்  நம்மை விட சக்தி வாய்த்த வாசியோகி நம்அருகில் வந்து மூச்சை வேகமாக அவர் இழுத்தாலும் நம் மந்திர வலிமை செய்லிலந்து விடு.ம்.இந்த துறையில் உள்ளவர்கள் பெம்பாலும் வாசி யோகியாகவே இருப்பாகள்.இதில் நட்பு என கண்டுகொள்ள முடியாது.எனவே உங்கள் அதுபோல் ஒருவர் சந்திக்க வந்தாலோ அல்லது நீங்கள் ஒருவரை சந்திக்க சென்றாலோ சுழிமுனை வரும்போது சென்று சந்திப்பை வைத்துக் கொள்ளுங்கள்.சுழிமுனை எல்லா  நேரமும் ஒடும் என எதிர்ப்பார்க்க ஆரம்பத்தில் முடியாது எனவே  ஒடாத நேரத்தில் தவிர்த்து விடுங்கள்.எப்பொழுதும் காலை 4-30முதல்6மணி வரை மதியம் 12முதல்1-30மனிகுள்ளும்மாலை5-30-6-30 வரைமனிகுள்ளும் சகல மாந்திரீகற்களை .சந்திக்காகதீர்கல்.சக்கி உள்ளவனுக்கு சக்கி  பெருக்கம் அதிகம் இருகும்.அவன் உங்களுக்கு எதிரியாக இருந்தால்  வாசியாசவல் இழந்தால் உங்கள் மந்திரம் பேய்விடும் கவனம்.எனவே சந்திப்பை தவிர்க்கவும்.

4 August 2014

மந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1


மந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1
யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள்
கண்ணில் படும்படியாக இறந்தவர் போட்டோ இருக்க கூடாது.அவர்கள் நினைவில் பதிந்தால் அவர்கள் உங்கள் உள்ளே புகுந்து வாக்கு கொடுப்பார்கள்  ஒரு நேரம் சரியாக இருகும். மறுநேரம் பிழையாக இருகும்
எனவே தெய்வம் புகைப்படங்கள் மாட்டி வைக்கவும்.
வெள்ளைநிறமும், காவிநிறமும் ஆன்மிகத்தில் உகந்தது.காவி நிறம் ஆன்மிகஉணர்வை பெருகும் .கட்டுபாடுகளை கொடுக்கக்கூடியதும் காவி நிறமே.வெள்ளை நிறம் மனதை சாந்தபடுப்படுத்தும்.ஒருநிலைபடுத்தும் எது விருப்பமோ அதை பயன்படுத்தலாம்.                                                                                                                                                                                     அதில் ஒரு சித்த இரகசியம் உண்டுநாம் அணியும் விபூது பட்டை வெள்ளை நிறத்னால் ஆனதும், ஆஞ்சநேயர் சன்னதியில் காவி நிறமும் தரிசனம் தருவது.விஷ்ணு கோத்ரத்தார் இடும் நாமம் இருபக்கம் வெள்ளை நடுவில் காவி நிறம் இடுவதும் இதன் இரகசியம் தான
சித்த இரகசியம்
இறந்தவருக்கு தலை அருகில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள்.அது புது
மந்திரம் பூஜை செய்ய அடிப்டை
மந்திரம் பூஜை செய்ய அடிப்டை
மந்திர பூஜை செய்கின்றவர்.சொந்த வீட்டில் இருந்து செய்தால் முழு சக்தி கிடைக்கும். வாடகை வீட்டில் இருந்து செய்தால் முழு சக்தி கிடையாது.பூர்விகமண், சொந்த உழைப்பில் வாங்கிய மண் இவைகளுடன் நம் மனது கலந்திருக்குது. ஒருவித ஈர்ப்பு நம்மையறியாமலேயே இருகும்.இது நமக்கு கட்டுப்பட்டு மிக சீக்கிரம் சித்திகளை  கொடுக்கும் ஒரு வேளை வீடு இல்லாதவர்கள் வாடகை வீட்டில்தான் வழி வேறு இடமில்லை  என்று இருக்கிறவர்கள். தீபத்தில் உற்றிய்  எண்னையில் ஒரு ரூபாய்வில்லைகள் ஒன்றும்  அணைத்து  விளக்கிற்கு போட்டு அதை எடுக் காமல்   அப்படியே வைக்கவும்.வாடகை வீடு தோஷம் நம் மந்திரத்தை தடை செய்யாது. வாடகை வீட்டில் பூஜை செய்தால் பாதி பலம் அந்த இருப்பிட சொந்தக்காருகு போய்ச்சேரும் என்பது விதி.இதைதவிர்ககதான் இந்த நாணயம் போடும் முறை கடைபிடிக்கபடுகிறது.இது   ஓரளளவு பலன் கொடுக்கும்
2   எந்த மந்திரபூஜை முல பூஜை ஆரபித்தாலும் பெளர்ணமியில் ஆராபிப்தே சிறந்தது.  இதற்கான காரணங்கள் தெரித்து கொள்ளுங்கள். பிரச்சனை என்று பலரும் நம்மிடம் வந்து பலன் கேட்டபார்கள்.பரிகாரமும்  செய்ய சொல்வார்கள். அவ்வாறு நாம் செய்யும் போது பலிக்க வேண்டும் அல்லவா.நாம் உண்மையாக சித்தி அடைந்து அணைவரும் நாம் கூறும் வாக்கு  செயல் சித்தியடைந்தாலும்.ஒரு சிலர் நீங்கள் கூறுவது எதுவும் பலிக்கவில்லை என்று வருவார்கள் காரணம் என்னவென்றால் அவர் அமாவாசையில்,மீன ராசி லக்கனத்திலோ,நாகதோஸத்திலோ,பிறந்தவராக இருபார். இவர்களுக்கு  மாந்தீகம் அவ்வளவு எளிதில் பலிக்காது. கர்மகட்டு உள்ளவர்கள் இவர்கள்எனவே இன்நோருவரடைய இறைசக்தியை, புத்திமதியோ எளிதில் போய்ச் சேராது.இவர்கள் நம்மிடம் அதிக அளவில் வருவார்கள்.இவர்களுக்கும் பலிக்க  வேண்டுமானால்,ஒளிகிரகம்மான சந்திரன் பரிபூகண வளர்ச்சி அடைத்து பெளர்ணமி நாளில் நம் பூஜை முகூர்த்தம் அமைத்து துவக்கினால் கர்ம கட்டு ஒடித்து நம் வாக்கு பலித்ததை அனைவருக்கும் சேர்க்கலாம்.இல்லையேல்  அவர்கள் விதியை உணராமல் நம்மை குறை சொல்லிவிட்டு சென்று விடுவாரகள்.இந்த குறையை தவிர்க்க பெளர்ணமி திதியில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பூஜை துவகுங்கள் மனித கர்ம பாவத்தையும் வசியம் செய்து பாவத்தை போக்கி அணைவருக்கும் அருள்புயுங்கள்.  இது பிரம்ம இரகசியமாகும்
4பூஜை விதிமுறைகள்
ஆசனம்
தியானத்தின் போது மந்திரங்கள் ஆகாயத்திற்கோ பூமிக்கே செல்லக்க்கூடாது.இரண்டிற்கும் ஈர்ப்பு சக்தி உண்டு.எனவே ஆகாயத்தில் ஈர்ப்பில் இருந்து தப்பிக பிராணாயாமம் செய்து நம் அங்கிருந்து சக்தி உறிஞ்சிக் கொள்கிறோம். அனால் பூமி சக்தியை எப்பொழுதும் யாருகும் அதே கொடுக்கது.பூமி நம் சக்தியை வாங்கிகொள்ளும்.இதை தவிர்க்க மா,பால,அத்தி அரசு,வில்வம்,ஆலம், இலுப்பை போன்ற மரங்களை பயன்படுத்த வேண்டும்.
5பூஜைவிதிமுறைகள்
குலதெய்வம்,இஷ்டதெய்வம்,பித்ருதெய்வம்,கிராமதெய்வம் எல்லை தெய்வம் இவர்களை மட்டும் வணங்கினால் எல்லாம் கிடைத்ததுவிடும்  என ஏமாறக்கூடாது.நம் பிறப்பிற்கென்று சில தேவதைகள், தெய்வம் ,நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அவர்ககளைள் தொடர்ந்து  வழிபட்டால்தான் பலன் கிட்டும் திதி,நட்த்திரம்,ராசி,லக்கணம்,தசாபுத்தி ,இதற்கான தேவதைகளை திருப்படுத்த அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.அவரவர் பிறந்தநாளே அவர்களுக்கு அதிஷ்டகிழமை எனவே அந்தநாளில் சென்று பிராத்தனை செய்தால்தன் மேற்சொன்ன தெவங்கள் அருள் கிட்டும்.இல்லையேல்  ஊர்ஜிதமகா சொல்ல முடியாது.இந்த முறைக்கு விதி தெய்வம் என்று பெயர். விதி தெய்வத்தில் பங்கு பெறக்கூடியாது குலதெய்வம்,பித்ரு தெய்வம்,திதி,நட்சத்திர,லக்கண,ராசி,தாசபுத்தி தெய்வங்கள் அடங்கும் .மற்றுறோமுறை.மதி தெய்வம் அதாவது இஷ்ட,கிராம,எல்லை பரிகார  தெய்வங்கள் மதி தெய்வமார்கள்.விதி தெய்வம் வழி விட்டால் மதி தெய்வம் வழிநடத்தி செல்லும்.எனவே அவரவர் தெய்வங்கள் கண்டு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்  தடையின்றி மேற்கொண்டு செல்ல வழி கிடைக்கும்
 
6 பூஜை விதி முறைகள்
உங்களுக்கு அனேக நண்பர்கள் இருக்கலாம்.எனவே இந்த மாந்ர கலையில்எடுபடும் போது அவர்களையும் கூட்டு கொள்ளகூடாது அவர்களோடு ரகசியைங்களை பகிர்த்து கொள்வதோ கூடாது.அவர்களோடு ரகசியங்கள் பகிர்த்து கொள்ள கூடாது.இரு நண்பர்கள்ஒரே நேரத்தில்மாந்திரீக  பூஜைகள் செய்யகூடாது,மேற்கொண்டால் அதில் யாராவது ஒருவருக்குத்தான்
களை வரும் இது விதி .அது போல்