youtube

7 January 2017

வில்வ மரவழிபாட்டு மந்திரம்

வில்வ மரவழிபாட்டு மந்திரம்

வில்வ மரத்தை தரிசனம் செய்யும்போது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி வழிபட இறை அருள் கிட்டும்

தர்சனம் பில்வ வ்ருக்ஷஸ்ய
ஸ்பர்சனம் பாபநாசனம்
அகோர பாபஸம் ஹாரம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்.

செல்வம் பெருக மந்திரம்
108 முறை சொல்லவும்

லக்ஷ்மீ-பதே கமல-நாப
ஸுரேஸ விஷ்ணோ
வைகுண்ட க்ருஷ்ண
மதுஸூதன புஷ்கராக்ஷ
ப்ரஹ்மண்ய கேஸவ
ஜனார்தன வாஸுதேவ
லக்ஷ்மீ - ந்ருஸிம்ஹ
மம தேஹி கரா வலம்பம்.

மேற்கண்ட மந்திரத்தை லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டு ஜெபிக்கவும்.

மாலையில் தீபம் ஏற்றும் போது கூற வேண்டிய மந்திரம்

மாலை நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றும் போது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி விளக்கேற்றினால் சகல சுகமும் உண்டாகும்.

சிவம் பவது கல்யாணம்
ஆயுராரோக்ய வர்த்தனம்
மம: துக்க வினாசாய
ஸந்த்யா  தீபம் நமோ நம:

கெட்ட கனவு பரிகார மந்திரம்

நீங்கள் தூங்கும் போது கெட்ட சொப்பனங்கள் ஏற்பட்டால் கீழ்க்கண்ட மந்திரத்தை 5 முறை கூறினால் பரிகாரம் ஏற்படும்.

ஓம் ஸ்ரீ கோவிந்தன நமஹ

வேலை கிடைக்க மந்திரம்

ஸ்ரீ தேவி ஹி அம்ருதோத்
பூதா-கமாலா-சந்த்ரசேபாநா
விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச
வராஹோஹச்ச ஸார்ங்கிணீ
ஹரி-ப்ரியா தேவ-தேவி
மஹாலக்ஷ்மீ ச ஸுந்தரீ

ஸ்ரீலக்ஷ்மி தாயை வழிபட்டு மேற்கொண்ட மந்திரத்தை 21 முறை ஜெபிக்கவும்.

நாளும், கோளும் நல்லன ஆக மந்திர்ம

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
கேளாய் நங்கிளை கிளைக்குங் கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே.

சிவபெருமானையும், அம்பாளையும், வழிபட்டு 5முறை மேற்கண்ட மந்திரத்தை ஜெபிக்கவும்.

6 January 2017

ஸ்ரீ வாராஹி மூல மந்திரம்


ஸ்ரீ வாராஹி மூல மந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்! ஐம் க்லௌம்
ஐம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி
வாராஹி, வாராஹி வராஹமுகி, வராஹமுகி
அந்தே அந்தினி நம:
ருந்தே ருந்தினி நம :
ஸ்தம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம்
ஸ்ர்வேஷாம் ஸ்ர்வவாக்
சித்த, சக்ஷர் முககதி
ஜிக்வா, ஸ்தம்பனம் குருகுரு

வராகி  வசியம்

ஐம் - க்லௌம் - ட : ட : ட : ட
ஹும் அஸ்த்ராய பட்
ஓம் அஸ்யஸ்ரீ வாராஹி
மஹா மந்த்ரஸ்ய பகவான்
பைரவ ரிஷித் ருஷ்டிப் ஸந்தவராகி
மஹா சக்தி தேவதா
க்லைம் பீஜம்
க்லாம் சக்தி
க்லூம் கீலகம்
மம ஸ்ரீ வாராஹி
மஹா சக்தி பிரசன்ன
ஸித்தியர்த்தே ஜெபோ விநியோக ஹா....



3 January 2017

எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ?

நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம்
சோடசக்கலையைப் பின்பற்றுங்கள்...!!!

எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ?

எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?

இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?

அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.

இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)

மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,

அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களை அதிகம்பாதிக்கிறது. அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.

வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!

இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள், மகான்கள்,செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள் என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.

தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம். இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.
பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார். இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம்

முழுவதும் பரவும்.திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள்.
இந்த 16 வது கலையை சித்தர்களும்,முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த ஒன்றையும் பெற முடிகிறது.

அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.
பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் ( நாம் வாழும் மில்கி வே, அருகில் உள்ள அண்ட்ராமீடா ),சகல உயிரினங்களும் ( பாக்டீரியா, புல், பூண்டு ,மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை, கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு, நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன், கடல்பசு,கடல் பாசிகள், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லி, ஆந்தை, புறா, கிளி, காட்டெருமை, காண்டாமிருகம், நாய், குதிரை,கழுதை,கோவேறுக்கழுதை,எறும்பு, சுறா மீன் ), ஒவ்வொரு மனிதனும் சூட்சுமமாக அதிரும்.

அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும். கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.

ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.

இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்ய வேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்துவிடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. மனவலிமையைப் பொறுத்தது. திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.

தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறு காலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) .நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.

அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை ( திருமணம், பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றி எதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும் ) நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும்.

தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்

==================================================

வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!

2 January 2017

கங்கையில் கரைக்கப்படும் பாவங்கள் எங்கே மறைகின்றது

கங்கையில் கரைக்கப்படும் பாவங்கள் எங்கே மறைகின்றது?

ஒருவன் செய்யும் புண்ணிய பாவ கர்மங்களே, அவனது மறுபிறப்புக்கு காரணமாகின்றன . புண்ணிய கர்மங்கள் ஒருவருக்கு உயர்ந்த பிறப்பையும், பாவ கர்மங்கள் இழிவான பிறப்பையும் அளிக்கிறது. அதேநேரம், கர்மங்கள் ஆற்றாமல் இருக்கவும் முடியாது. ஈ எறும்பு முதல் பிரம்மா வரை கர்மங்கள் ஆற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், மனிதனே மதிகெட்டு பாவ கர்மங்களுக்கு ஆளாகிறான். ஒருவன் செய்யும் பாவங்களை அவன் செய்யும் புண்ணிய கர்மங்கள் கரைத்து கொண்டு வரும். அது எவ்வாறு என்பதை, புராண குறிப்புகளிருந்து பார்ப்போம்.

பாவங்கள் செய்யும் மனிதர்கள் சிலர், தங்கள் பாவங்களை போக்கிக்கொள்ள கங்கையில் நீராடுகின்றனர். அப்படி போக்கிக்கொண்ட பாவங்கள் எங்கே செல்கிறது? சற்று விரிவாக பார்ப்போம்.

ஒருமுறை, பாவங்கள் எதுவும் செய்யாத புண்ணியாத்மாவான முனிவர் ஒருவர், கங்கையில் நீராட சென்றார். அப்போது, அங்கே குளித்துக்கொண்டு இருந்தவர்கள், "மாதா கங்கே, என் பாவத்தினை போக்கி காத்தருள்க" என்று கூறி நீராடினார்கள். இதை கேட்ட அந்த முனிவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. "இப்படி பாவங்களை ஒழுக்கிவிடப்படும் கங்கையில் நான் குளித்தால் இந்த பாவங்கள் என்னை வந்து ஒட்டி கொள்ளுமல்லவா?", எனவே அதில் குளிக்காமல் இருப்பதே நலம் என்று புறப்படலானார்.

அந்நேரம் ஒரு பெண் அங்குவந்து, ஏன் முனிவரே நீங்கள் குளிக்காமல் செல்கிறீர்கள் என்று கேட்க. முனிவர் தன் சந்தேகத்தை அவரிடம் கூறினார். அதை கேட்ட, அந்த பெண், முனிவரே, கங்கை நதியில் ஒழுக்கிவிடும் பாவங்கள், கங்கை நதியில் தங்குவதில்லை என்பதை நீங்கள் அறிந்தாலும். கங்கை நீரானது, சிவபெருமான் சிரஸிலிருந்து தோன்றி, பூமியில் பதித்து வருவத்தால் பாவம் கலக்காத நீரே வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்தாலும். மேலும், இந்த நீரானது, ஒரு இடத்தில் நிற்பதில்லை. இந்த நீர் ஓடி சென்று கடலில் கலக்கிறது, எனவே இந்த பாவங்கள் கடலை சென்று அடைகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள், எனவே நீங்கள் இந்த கங்கையில் நீராடுங்கள் என்று கூற. முனிவர், அந்த பெண்ணை பார்த்து நீங்கள் சாதாரண பெண்ணாக தெரியவில்லை, நீங்கள் யார் என்று கேட்க, அதை நீங்கள் போக போக தெரிந்து கொள்வீர்கள் என்று கூறி, அங்கிருந்து சென்று விட்டாள்.

ஆனால், அந்த பெண் கூறியதை கேட்டு முனிவரின் சந்தேகம் வேறு திசைக்கு சென்றது. சரி, இந்த பாவங்கள் கடலில் கலப்பதால், கடல் பாவங்களின் கேந்திரம் ஆகிறது, ஆனால், மனிதர்கள் அங்கேயும் புண்ணிய நீராடல் செய்கிறார்கள். பாவம் கலந்த கடலில் குளித்தால் பாவமல்லவா சேரும், எப்படி அது புண்ணியமாகும்? இதை அறிய நாம் சமுத்திர தீரத்திற்கு செல்வோம் சென்று சமுத்திரத்தை நோக்கி செல்லலானார். அங்கே சென்ற முனிவர், சமுத்திர தேவனான. வருணனை தபம் செய்தார். வருண தேவனும், அவர் முன் தோன்ற, முனிவர் தன் சந்தேகத்தை அவரிடம் கூறினார். "வருண தேவனே, கங்கையில் ஒழுக்கிவிடும் பாவங்கள் அனைத்தும், சமுத்திரத்தில் வந்து அடைகின்றன, அப்படி இருக்க, எப்படி சமுத்திரத்தில் நீராடினால் புண்ணியம் ஆகும்?". இதற்கு வருண பகவான் கூறியது என்ன?

தன் முன் தோன்றிய வருண தேவனிடம், முனிவர் கேட்டார்....

"வருண தேவனே, கங்கையில் ஒழுக்கிவிடும் பாவங்கள் அனைத்தும், சமுத்திரத்தில் வந்து அடைகின்றன, அப்படி இருக்க, எப்படி சமுத்திரத்தில் நீராடினால் புண்ணியம் ஆகும்?".

இதற்கு, வருண தேவன்... "முனிவரே, கடலில் பாவங்கள் தங்குவதில்லை என்பதை தாங்கள் அறிந்து கொள்ளுங்கள். கடலில் கலக்கும் பாவங்கள் அனைத்தும் சூரிய பகவானின் ஒளிக்கதிர்களால் ஆவியாக மாற்றி இழுத்து கொள்வதால், கடல் ஒருபோதும் பாவங்களை தன்னுள் வைத்துக்கொள்ளவில்லை. எனவே, கடல் புண்ணிய நீராடலுக்கு உகந்தது தான்". என்று கூறி வருண பகவான் மறைந்தார்.

இத்துடன் தன் சந்தேகம் தீராத முனிவர், தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள சூரிய தேவனை நோக்கி பிரார்த்தனை செய்தார். அவர் பிரார்த்தனையில், மனமகிழ்ந்த சூரிய தேவன் அவர் முன் தோன்றினார். அப்போது, தன் முன் தோன்றிய சூரிய தேவனிடம், முனிவர் தன் சந்தேகத்தை எழுப்பினார். "சூரிய பகவானே! கடலில் சேரும் பாவங்களை தன் ஒளிக்கதிர்களால் ஈர்த்துக்கொள்ளும் தங்களை அது பாதிப்பதில்லையா?" என்று. அதற்கு சூரிய பகவான், முனிவரே தங்கள் சந்தேகம் யதார்த்தமானது தான். சொல்கிறேன் கேள் என்று சூரிய பகவான் விளக்கலானார்..."முனிவரே, என் ஒளிக்கதிர்களால் ஆவியாக்கப்படும் பாவங்கள், என் உஷ்ணத்தால் என்னை நெருங்குவதில்லை. இவை மேகங்களாக வானிலே தங்கிவிடுகிறது". உடனே, முனிவர்..."அப்படியென்றால், இந்த பாவங்களின் தாக்கம் என்ன ஆகிறது?" என்று கேட்க", அதை நீங்கள் மேகத்திடமே கேட்டு அறிந்துகொள்ளலாம்", என்று கூறி மறைந்தார் சூரிய தேவன்.

உடனே, முனிவர் மேகத்தை வேண்டி தன் கேள்வியை எழுப்பினார். முனிவரின் சந்தேகத்தினை அறிந்த மேகம், "முனிவரே, சூரியனின் ஒளிக்கதிகளால் ஈர்த்தெடுக்கப்பட்ட பாவங்கள், காரிருள் மேகங்களாக வானில் வலம் வருகின்றது. ஆனால், அதன் தாக்கம் அதிகரிக்கும்போது, மழை பெய்விக்கப்படுகின்றது, அங்ஙனம் மழையுடன் அந்த பாவங்கள் பூமிக்கே திரும்பவும் அனுப்பப்படுகின்றது. அதை பொறுமையின் தேவதையான பூமியும் ஏற்றுக்கொள்கிறாள்". ஆகவே, தங்கள் சந்தேகத்தை பூமாதேவியிடமே கேட்டறிந்து கொள்ளுங்கள்" என்றது மேகம்.

எனவே, தன் பிரார்த்தனையை பூமாதேவியிடம் திருப்பினார் முனிவர். முனிவரின் பிரார்த்தனையில் மெச்சிய பூமாதேவி முனிவருக்கு அருளலானார். பூமாதேவி கூறியது என்ன?

முனிவரின் பிரார்த்தனையில் மெச்சிய பூமாதேவி முனிவருக்கு அருளலானார். "முனிவரே, பொறுமைக்கு இலக்கணமாகிய எனக்கு, மழை மூலம் என்னை நோக்கி வரும் பாவங்களை ஏற்றுக்கொள்வது என் கடமை. என்றாலும், நான் உட்கொண்ட பாவங்கள், என்னில் தங்குவதில்லை என்பதை நீங்கள் அறிந்தாலும். அத்தகைய பாவங்கள், மரம் செடிகள் வேர்கள் மூலம் உறிஞ்சி எடுத்து, அதன் காய் கனிகளில் அடைத்து விடுகின்றது. அக்காய் கனிகளை சம்பந்தப்பட்ட மனிதர்கள் உண்ணும் போது மீண்டும் அப்பாவங்கள் அவர்களையே சென்றடைகிறது. மனிதர்கள் மீண்டும் கங்கைக்கு சென்று பாவத்தை போக்கி கொள்கின்றனர். இங்கனம், மேற்கொண்ட பாவங்கள் அவர்களை மீண்டும் மீண்டும் வந்தடையும். முனிவரே இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?"..... "இல்லை பூமி மாதா...", என்றார் முனிவர். என்றால், "நீங்கள் கங்கை கரைக்கே செல்லுங்கள், அங்கு நீங்கள் முதலில் கண்ட பெண்மணியை சந்தித்தால், முழு விளக்கவும் உங்களுக்கு கிடைக்கும்", என்றார் பூமி மாதா.

இதை கேட்ட முனிவர் மீண்டும் கங்கை கரைக்கே சென்றார். அங்கே, அவர் முதலில் கண்ட பெண்மணியை காணலானார். இதை பார்த்த அப்பெண்மணி, "முனிவரே, நான் கூறியதில் சந்தேகம் தெளியாத நீங்கள் வருண தேவனையும், சூரிய தேவனையும், மேகத்தையும், பூமி மாதவினையும் சந்தித்துவிட்டு வருகிறீர்கள். இப்போது உங்களுக்கு என்ன சந்தேகம்?" என்று வினவ..... "நீங்கள் வெறும் சாதாரண பெண்மணி இல்லை என்று நான் அறிகிறேன், தாங்கள் யார் என்பதை எனக்கு உணர்த்தியருளுங்கள்", என்று முனிவர் கேட்க, தன் சுயரூபத்தை காண்பித்து, நான் தான் கங்காதேவி என்று முனிவருக்கு அருளினார். இதனால் மகிழியுற்ற முனிவர், "மாதா, மனிதர்கள் செய்யும் பாவங்கள், சுழன்று சுழன்று மீண்டும் மனிதர்களையே சென்றடைகிறது. மனிதர்கள் மேலும் மேலும் பாவங்களை செய்து கங்கையில் கரைப்பதால், கங்காநதியில் பாவத்தின் பாரம் அதிகமாகி கொண்டே செல்லுமல்லவா? இப்படியிருக்க, எப்படி கங்கையில் நீராடுவதால் பாவங்கள் களையப்படும் என்று சொல்கிறார்கள்?" என்று கேட்க. "முனிவரே, இந்த சந்தேகம் ஒருமுறை எனக்கும் வந்தது, அந்நேரம் நான் சிவபெருமானை வேண்டி என் சந்தேகத்தை முன் வைத்தேன், அப்போது நடந்தது என்ன என்பதை கூறுகிறேன் கேளுங்கள்" என்றார் கங்காதேவி.

கங்காதேவி கூறியது என்ன?

"மாதா, மனிதர்கள் செய்யும் பாவங்கள், சுழன்று சுழன்று மீண்டும் மனிதர்களையே சென்றடைகிறது. மனிதர்கள் மேலும் மேலும் பாவங்களை செய்து கங்கையில் கரைப்பதால், கங்காநதியில் பாவத்தின் பாரம் அதிகமாகி கொண்டே செல்லுமல்லவா? இப்படியிருக்க, எப்படி கங்கையில் நீராடுவதால் பாவங்கள் களையப்படும் என்று சொல்கிறார்கள்?" என்று முனிவர் கேட்க. "முனிவரே, இந்த சந்தேகம் ஒருமுறை எனக்கும் வந்தது, அந்நேரம் நான் சிவபெருமானை வேண்டி என் சந்தேகத்தை முன் வைத்தேன், அப்போது அங்கு எங்களுக்குள் நடந்த உரையாடலை கேளுங்கள்", என்று தொடர்ந்தார் கங்காதேவி.

கங்காதேவி: சர்வேஸ்வரா! நாள் தோறும் மனிதர்கள் மேலும் மேலும் பாவங்கள் செய்து, கங்கையில் நீராடி அவர்கள் பாவங்களை களைய வருகின்றனர். நானும், அவர்களின் பாவங்களை கழுகி அவர்களுக்கு விமோசனம் கொடுக்கிறேன். இவ்வாறு, என்னால் கழுகும் பாவங்களின் சுமைகளும் அதிகரித்துக்கொண்டே போகின்றதே, இறைவா. இதற்கு எப்போது விமோசனம் கிடைக்கும்? அருள்கூர்ந்து விளக்குங்கள் பெருமாளே!

சிவபெருமான்: தேவி, கங்கையில் பாவம் செய்தவர்கள் மட்டுமே நீராடுவதில்லை. பூமியில் புண்ணியாத்மாக்களும் உண்டு என்பதை அறிந்து கொள்ளவும். அங்ஙனம் புண்ணியம் செய்தவர்கள் கங்கையில் நீராடும் போது கங்கையில் ஒழுகிவரும் பாவங்களின் ஒரு பாகம், அந்த புண்ணியாத்மாவின் புண்ணியத்திற்கேற்ப, எரிந்து நாசமாகிறது. இங்கனம் பாவத்தின் பாரம் குறைந்து கொண்டு வரும். எனவே, தேவிக்கு விதிக்கப்பட்ட பாவத்தினை கழுகும் கர்மத்தினை தொடர்ந்து செய்யவும்.

கங்காதேவி: நன்றி சர்வேஸ்வரா! விடை கொள்ள அனுமதித்தாலும்.

சிவபெருமான்: மங்களம் உண்டாகட்டும்....

"முனிவரே, இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?" என்று கங்காதேவி கேட்க, "ஆம்" என்றார் முனிவர். "அதனால் தான் தங்களை நீராடுமாறு கேட்டுக்கொண்டேன்" என்று தேவி கூற. "நிச்சயமாக செய்கிறேன்", என்று கூறி முனிவர் நீராட சென்றார்.

30 December 2016

அறுபத்து நான்குவித பைரவ மூர்த்திகள்



அறுபத்து நான்குவித பைரவ மூர்த்திகள்

அறுபத்து நான்குவித பைரவ மூர்த்திகள்:

ஒரே பைரவர் எட்டு வகை பணிகளை எண் திசைகளிலும்
ஏற்கும்போது அவர் அஷ்ட பைரவர்களாகத் தோற்றம் தருகின்றனர் எனவும், அவரே அறுபத்து நான்கு காலங்களிலும் அறுபத்து நான்கு பணிகளை ஏற்றுச் செயல்படும்போது அறுபத்து நான்கு வடிவங்களாகத் தோற்றமளிக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.

1. நீலகண்ட பைரவர்
2. விசாலாக்ஷ பைரவர்
3. மார்த்தாண்ட பைரவர்
4. முண்டனப்பிரபு பைரவர்
5. ஸ்வஸ்சந்த பைரவர்
6. அதிசந்துஷ்ட பைரவர்
7. கேர பைரவர்
8. ஸம்ஹார பைரவர்
9. விஸ்வரூப பைரவர்
10. நானாரூப பைரவர்
11. பரம பைரவர்
12. தண்டகர்ண பைரவர்
13. ஸ்தாபாத்ர பைரவர்
14. சீரீட பைரவர்
15. உன்மத்த பைரவர்
16. மேகநாத பைரவர்
17. மனோவேக பைரவர்
18. ÷க்ஷத்ர பாலக பைரவர்
19. விருபாக்ஷ பைரவர்
20. கராள பைரவர்
21. நிர்பய பைரவர்
22. ஆகர்ஷண பைரவர்
23. ப்ரேக்ஷத பைரவர்
24. லோகபால பைரவர்
25. கதாதர பைரவர்
26. வஞ்ரஹஸ்த பைரவர்
27. மகாகால பைரவர்
28. பிரகண்ட பைரவர்
29. ப்ரளய பைரவர்  
30. அந்தக பைரவர்
31. பூமிகர்ப்ப பைரவர்
32. பீஷ்ண பைரவர்
33. ஸம்ஹார பைரவர்
34. குலபால பைரவர்
35. ருண்டமாலா பைரவர்
36. ரத்தாங்க பைரவர்
37. பிங்களேஷ்ண பைரவர்
38. அப்ரரூப பைரவர்
39. தாரபாலன பைரவர்
40. ப்ரஜா பாலன பைரவர்
41. குல பைரவர்
42. மந்திர நாயக பைரவர்
43. ருத்ர பைரவர்
44. பிதாமஹ பைரவர்
45. விஷ்ணு பைரவர்
46. வடுகநாத பைரவர்
47. கபால பைரவர்
48. பூதவேதாள பைரவர்
49. த்ரிநேத்ர பைரவர்
50. திரிபுராந்தக பைரவர்
51. வரத பைரவர்
52. பர்வத வாகன பைரவர்
53. சசிவாகன பைரவர்
54. கபால பூஷண பைரவர்
55. ஸர்வவேத பைரவர்
56. ஈசான பைரவர்
57. ஸர்வபூத பைரவர்
58. ஸர்வபூத பைரவர்
59. கோரநாத பைரவர்
60. பயங்க பைரவர்
61. புத்திமுக்தி பயப்த பைரவர்
62.  காலாக்னி பைரவர்
63. மகாரௌத்ர பைரவர்
64. தக்ஷிணா பிஸ்திதி பைரவர்

கங்கைக் கரையில் 64 கட்டங்களில் 64 பைரவர்கள் உள்ளனர்.

பிராண பைரவர்                  - பைரவரின் உபசக்தி

நவக்கிரகங்கள் -   பிராண பைரவர்                  - பைரவரின் உபசக்தி
1. சூரியன்        -   சுவர்ணாகர்ஷணபைரவர்    - பைரவி
2. சந்திரன்        -  கபால பைரவர்                    - இந்திராணி
3. செவ்வாய்    - சண்ட பைரவர்                   - கௌமாரி
4. புதன்            - உன்மத்த பைரவர்                  - வராஹி
5. குரு              - அசிதாங்க பைரவர்                - பிராமஹி
6. சுக்கிரன்        - ருரு பைரவர்                   - மகேஸ்வரி
7. சனி              - குரோதன பைரவர்                 - வைஷ்ணவி
8. ராகு              - சம்ஹார பைரவர்                   - சண்டிகை
9. கேது             - பீஷ்ண்பைரவர்    


திருநள்ளாறில் சனீஸ்வரரை வழிபடும் முறை:*


*திருநள்ளாறில் சனீஸ்வரரை வழிபடும் முறை:*

முதலில் நளதீர்த்தம் சென்று, குளத்தை வலமாக பிரதட்சணம் செய்து குளத்தில் நடுவில் இருக்கும், நளன், தமயந்தி குழந்தைகள் சிலைகளை வணங்க வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று 9 முறை மூழ்கி எழ வேண்டும். பின், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும். கோயிலுக்குள் உள்ள சுவர்ண கணபதியை வணங்கி, சுப்ரமணியர் சந்நிதியை தரிசனம் செய்தபின், மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், பின் தியாகேசரையும் தரிசிக்க வேண்டும். வலமாக வந்து, அம்மன் சந்நிதியை தரிசிக்க வேண்டும். கடைசியாக சனிபகவான் சந்நிதி வந்து வழிபட வேண்டும். பின்னர் பெரிய பிரகாரத்தை வலம் வர வேண்டும். அவரவர்களுடைய வசிக்கும் சக்திக்கும் ஏற்றபடி சனிபகவானுக்கு அர்ச்சனை, அபிஷேகம், ஹோமம், தர்ப்பணம், ரட்சை தானம், பிரீதி நவ நமஸ்காரம், நவ பிரதட்சணம் செய்யலாம். எல்லாநாளும் சனீஸ்வரரை வணங்கலாம் திருநள்ளாறு க்ஷேத்ரம் சனிபகவானுடன், தர்ப்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட மூர்த்திகளையும் கொண்டது. இங்கு சனிக்கிழமை மட்டும் தான் வழிபட வேண்டும் என்று சிலர் தவறாக வழிகாட்டுகின்றனர். இதனால் பக்தர்கள் கால்கடுக்க நின்று, சில நிமிடம் மட்டுமே சனிபகவானை தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது. ராகுகாலத்தில் ராகுவை வழிபடுவதைப் போன்றே சனிபகவானை, சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதன்படி ஞாயிறு காலை 10-11, மாலை 5-6, திங்கள் காலை 7-8, செவ்வாய் பகல் 11-12, இரவு 6-7, புதன் காலை 8-9, வியாழன் பகல் 12-1, இரவு 7-8, வெள்ளி காலை 9-10, மாலை 4-5, சனிக்கிழமை காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9, ஆக இந்த வார நாள் நேரங்களிலும் சனிபகவானை வழிபட்டு அவரின் பரிபூரண அருளைப் பெறலாம்.
சனிக்கிழமை விரதம்: சனிக்கிழமைதோறும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்ல வேண்டும். சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினமும் இரவு படுக்கும் போது அதனை தலைக்கு அடியில் வைத்து படுத்து மறுநாள் காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். இதனை நமது வசதிக்கேற்ப 9, 48, 108 வாரங்கள் என பின்பற்றலாம். தேங்காய் முறியில் நல்ணெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டும், அல்லது எள் தீபம் (தில தீபம்) ஏற்றலாம். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீலவஸ்திரம், வடைமாலை சாத்தலாம். எள் சாதம் நைவேத்யம் செய்யலாம். அர்ச்சகர், அந்தணர் ஏழை களுக்கு அவற்றை விநியோகம் செய்ய வேண்டும். சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமம், அபிஷேக ஆராதனை மண்டல பூஜை செய்யலாம். எள்ளை சுத்தம் செய்து வறுத்த வெல்லம், ஏலக்காய் பொடியுடன் இடித்து திலசூரணம் செய்து வெங்கடேசப் பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைத்து வினியோகிக்கலாம். ஆஞ்சநேயர், தர்மராஜன் ஆகிய தேவதைகளை ஆராதனை செய்யலாம். அவரவர் பிறந்த ஜன்ம நட்சத்திரம் அல்லது சனிபகவானின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியில் அர்ச்சனை செய்யலாம். எல்லா நாளும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம்.

ஜீவ சமாதி என்றால் என்ன?

ஜீவ சமாதி என்றால் என்ன?


நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வதேயாகும்.

ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும்.

மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். ஆனால் நம்மால் எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது.

மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.
இதைத்தான் ஜீவ சமாதி என்கிறோம்.

சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது.

 பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன. அந்திவேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது.

உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது.யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.
அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும்.

ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார். மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை.

அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். இது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுண்டு. உண்மை தான் ,அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மையாக விளக்கி அருளுவார்கள்.

உயிர் போகினும் போகாதுடலினை வீங்கித்
தலைகிறுத்த கல்வது தனஞ்செயன்.
பிராணனைக் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு இந்த தனஞ்செயன் வாயுவை மற்ற ஒன்பது பிராணன்களில் இருந்து பிரியாமல் இருக்க வைத்து நீண்ட நாள் தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும்.

பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்திமா? என்று கேட்டால் திருமூலர் சாத்தியமே என்கிறார்.

"ஒத்த இவ்வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே."

பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யோகியர் பிராணாயாமப் பயிற்சியின் வல்லமையால் இந்த தனஞ்செயன் என்கிற பத்தாவது பிராணனை மற்ற பிராணன்களில் இருந்து பிரியாமல் செய்து உடலையும், உயிரையும் காத்துக் கொண்டனர்.

 திருமூலர் 4500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாகச் சொல்வார்கள். அகத்தியரோ பல யுகங்களாக வாழ்வதாகச் சொல்வது உண்டு.
ஆனால் இந்த திருமந்திரப் பாடலைப் படித்தால் அது சாத்தியமே என்று தோன்றுகிறது.

இந்த தனஞ்செயன் வாயுவானது உயிர் போனாலும் உடலை விட்டுப் போகாமல் மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து பின் உடலை வீங்கச் செய்து கபாலம் வழியாக வெளியேறும் என்பது சித்தர்கள் கூற்று.

 இவ்வாயுவானது உடலைவிட்டு வெளியேறி விட்டால் உடலானது உடனே வீங்கி வெடித்து விடும்.
இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.

இந்த தனஞ்செயன் என்கிற வாயு மட்டும் மரணத்திற்குப் பிறகு மூன்று நாட்கள் இருப்பது ஏன் ?

அதாவது இந்த தனஞ்செயனானது இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி, அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குரு ஆகிய ஒன்பது நாடிகளிலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன், தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன் கூடி இருக்கும். அப்படி கூடி இருக்கும் வரைதான் உயிர் இருக்கும். இது பிரிந்து செயல்படும் இடத்தை நாற்சந்தி என்பார்கள். வயிரவன், முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன் என்ற இந்த நாற்சந்திகளில் அந்தர்யாம
பிராணவாயுவை உடலினுள்ளேயும், இரத்தத்தினுள்ளேயும் உருவாக்கிக் கொண்டே இருப்பதால் தான் இந்த தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கி விடுகிறது.

இதைப் பயன்படுத்தி சித்தர்கள் இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை அதிகரிக்கச் செய்து உயிர் பெற்று ஏழ வைத்துவிடுவார்கள். இதனால் தான் இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார்கள்.

சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில் இருந்து எவ்வித துன்பமும் இல்லாமல் தனஞ்செயன் வெளியறிவிடும். ஆனால் எரியூட்டப்படும் உடலில் இருந்து தனஞ்செயன் வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற சத்தத்துடன் மண்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும்.மேலும் ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி அவர்கள் தேகத்தை எரித்துவிடக்கூடும், என்று கருதியே வள்ளலார் எரியூட்டுவதைக் கடுமையாக எதிர்த்தார். எரிப்பது என்பது கொலைக்குச் சமம் என்கிறார்.

வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது, உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத் தான் கண்டதாக திரு. முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார்.

யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது. கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி அமர்ந்திருப்பவர்களை விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும். அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனில் மீண்டும் புதைத்து விடுவார்கள். அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள்.

அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு, மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து, மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்து விடும். ஆனால் கண்களைத் திறந்து நம் மீது கோபித்துக் கொள்ளவும் கூடும்.......

சிவ சிவ திருச்சிற்றம்பலம்...

சதுரகிரி சித்தர் தபோவனம்...

சகலமும் சிவார்ப்பணம்....

ஓம் நமசிவாய....