3 February 2014

விநாயகர் ஜாதகம் மகிமை

விநாயகர் ஜாதகம் மகிமை
 
விநாயகர் ஜாதகம் மகிமைவிநாயகர் ஜாதகம் மகிமை


சனிபகவான் ஒரு முறை விநாயகரைப் பார்த்து  உங்களை  நாளை வந்து பிடிக்க வேண்டும். நாளைக்கு வருகிறேன். என்றார். சனீஸ்வரனே எனக்கும் கணேசபுரியில் வேலைப்பளு அதிகம், உமக்கும் அதிக வேலை இருக்கும். என்னைப் பிடிக்க வரும் நீங்கள் என் முதுகில், நாளைக்கு வருகிறேன் என்று எழுதி விட்டுப் போங்கள் என்று முதுகைக் காட்டினார் விநாயகர்.

அதில் நாளை மறவாமல் வருகிறேன் என்று எழுதினார். சனீஸ்வரன் போய்விட்டு மறு நாள் வந்த போது முதுகைக் காட்டி என்ன எழுதி உள்ளீர் என்று கேட்க, சனீஸ்வரன் அவரிடம் அடி பணிந்தார். என்னை வணங்குபவர்களைப் பிடித்தால் உமக்கும் இது போல சங்கடம் ஏற்படும் என்றார்.

விநாயகர்  கணேசப்பிரபுவே தங்கள் கட்டளைப்படியே செய்கிறேன் என்றார். உங்கள் ஜாதகத்தில் சனியின் பிடிப்புக் காலம் வந்தால் விநாயகர் ஜாதகத்தை ஒரு அட்டையில் எழுதி செவ்வாய் சனிக்கிழமைகளில் வணங்கி வாருங்கள் சனி தசையும், யோக தசை காலமாக அமைந்து விடும். இதுவே விநாயகரின் ஜாதகத்தின் மகிமை

No comments:

Post a Comment