ஈசான்ய மூலை என்பது எது?
sஈசான்ய மூலை என்றதும் இது ஈசனுக்குரிய மூலை என்று பலரால் கூறப்படுகின்றது. இது தவறான கருத்து என்பதே அறிவியல் கூறும் உண்மையாகும். வடகிழக்கு மூலை ஒரு இடத்தின் ஆற்றல் வரும் இடமாக கருதப்படுவதால். இந்த மூலையை ஒரு இடத்தின் வெற்றியை தீர்மானிக்க கூடிய மூலையாக கருதலாம். அது மட்டுமல்லாமல் இந்த மூலை நீரின் ஆதாரம் என்பதால், வடகிழக்கு வெளி மூலையில் ஆழ்துளை கிணறு, நீர் தேக்கும் தொட்டி, கிணறு போன்றவற்றை அமைத்துக்கொள்ளவது சால சிறந்தது. மேலும் வடகிழக்கு மூலை அறையை குழந்தைகள் படிப்பதற்கு ஏற்றவாறு நிறைய திறப்புகளுடன் (ஜன்னல்கள்) அமைக்க வேண்டும் மற்றும் வடகிழக்கு அறையை தியானம் செய்வதற்கும், குழந்தைகள் / பெரியவர்கள் படுத்து உறங்கும் அறையாகவும் பயன்படுத்தலாம்
No comments:
Post a Comment