வியாபாரத்தை ஆரம்பித்து பெரிய அளவில் விருத்தியடைந்து நம்பர் ஒன்
ஆனவரும் உண்டு. பிரம்மாண்ட தொழிலை தொடங்கி நஷ்டத்தை சந்தித்தவர்களும்
அதிகம். வியாபார இடம் நல்ல பஜாரில் இருந்து பொருள் தரமாக, விலை நியாயமாக
இருந்தும் தொழில் நசிவது வாஸ்து குறையால்தான். வாஸ்து பலம் உள்ள வியாபார
நிலையங்களுக்கு வெற்றி நிச்சயம். புதிதாக தொடங்கும் முன் நல்ல இடத்தைத்
தேர்ந்தெடுத்து வாஸ்துப்படி கடையை அமைத்து வியாபாரத்தைத் தொடங்க வேண்டும்.
ஏற்கெனவே தொழில் செய்வோர் வாஸ்துவை கடைபிடித்து வியாபாரத்தில்
வெற்றிக்கொடி நாட்டலாம்.
பிரதான வாயில்
வாடிக்கையாளர்
நுழைவு வாயில் எந்தத் திசையில் சாலை உள்ளதோ அத்திசையிலேயே அமைக்க
வேண்டும். இரண்டு பக்க சாலை உள்ள கடைகளுக்கு திசை பலம் அறிந்தே வாயில்
அமைக்க வேண்டும். வடகிழக்கு கார்னர் கடைக்கு இருபக்க வாசல் அவசியம். இரு
பக்கமும் ரோட்டின் தரைமட்ட உயரம் மாறுபட்டாலோ திசை 10 °, 20 °, PC, PAC
ஆனாலோ ஆராய்ந்து அமைக்க வேண்டும். வடமேற்கு கார்னர் கடைக்கு மேற்கு
;வாசலும், தென் கிழக்கு கார்னர் கடைக்கு தெற்கு வாசலும் சிறந்தது.
தென்மேற்கு கார்னர் கடை சிறியதானால் இரு பக்கமும் திறந்தால் நல்ல வியாபாரம்
உண்டாகும்.
ஷட்டர்
இரண்டு
ஷட்டர்கள் உள்ள கடைகளில் வியாபாரம் செய்வோர் ஒரு பக்கம் திறந்து வைத்து,
மறுபக்கம் ஸ்டாக் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் கிழக்கு திசையில் ஈசான்ய
ஷட்டரையும், மேற்கு திசையில் வாயு ஷட்டரையும் வடக்கு திசையில் ஈசான்ய
ஷட்டரையும், தெற்கு திசையில் ஆக்கினேய ஷட்டரையும் திறந்து வைத்து வியாபாரம்
செய்வது நல்ல விருத்தியைத் தரும்.
ஷோகேஸ்
ஜவுளிக்கடை,
மோட்டார் சாதனங்க்ள எலக்ட்ரிக் கொருட்கள் வியாபாரம் செய்யும் கடைகளுக்கு
ஷோரூம் சிறிய அளவில் வாசலுக்கு அருகிலிலேயே ரோட்டில் போவோர், வருவோர்
பார்க்கும் வண்ணம் அமைப்துண்டு. வாஸ்து சாஸ்திரப்படி மேற்குப்பார்த்த
கடைக்கு நைருதியிலும், கிழக்குப் பார்த்த கடைக்கு தென்கிழக்கிலும்,
வடக்குப் பார்த்த வாசலுக்கு வாயு மூலையிலும், தெற்குப் பார்த்த கடைக்கு
தென் மேற்கிலும், ஷோஸே; அமைத்தால் நடை உச்சத்துக்கு மாறி, உச்சப்பகுதி
பாரமின்றி இருந்தால் வியாபாரம் செழிக்கும்.
கடை விரிவாக்கம்
வியாபாரம்
சூடுபிடித்து பெருமளவு சாத்தியம் உருவான உடன் கடையை விரிவுபடுத்தினால்
வாஸ்து முறைப்படியே செய்ய வேண்டும். வடக்கு, கிழக்கு, வடகிழக்கு திசையில்
விரிவு படுத்தலாம். ஆனால் விரிவுபடுத்தும் இடத்திற்கு ஈசான்யம் குறையாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும். தெற்கு, மேற்கு திசையில் சேர்க்க வேண்டி
வந்தால் வாஸ்து நிபுணர்களின் ஆலோசனை பெறுவது அவசியம்.
வாஸ்து நிபுணர்
மருத்துவத்தில்
சுய வைத்தியம் செய்வது பக்க விளைவுகளை தந்து எவ்வளவு கெடுதல் செய்யுமொ அதே
போல சயின்டிபிக் வாஸ்து, பென்ஃசூயி, சைக்கோ, சிம்பாலஜி போன்ற வாஸ்து
நுட்பங்கள் அறிந்த நிபுணரின் ஆலோசனைப்படி கேஷ் கவுண்டர், பொருட்கள்
வைக்கும் முறை, வியாபார கவுன்டர், போர்டு அமைப்பு, கோணங்கள், போன்ற அமைப்பு
முறைகளை உருவாக்கி நியூமராலஜிப்படி நல்ல ஐஸ்வரியமுள்ள பெயரும் அமைந்தால்
தொழில் வெற்றி நிச்சியம்