11 February 2016

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12




20 November 2014


குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12

மேற்கண்ட தெய்வங்களில் ஸ்ரீ வாராஹி அன்னையையே யாம் உபசிக்கும்படி தெரிவித்துகொள்கிறோம். காரணம் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி பெண் குணம் கொண்டவர். யட்சணி அன்னையும் பெண் குணம் கொண்டவள், ஸ்ரீ வாராஹி அன்னையும் பென்மையானவர் இவர்கள் மூவருமே சம்சார பிராப்ததை கொடுத்து, சந்தோசங்களையும் கொடுத்து தெய்வ வாக்கையும் கொடுத்து அருள்புரிவார்கள்.
ஸ்ரீ ஆஞ்சநேயரும், ஸ்ரீ கால பைரவரும் அவ்வாறு இல்லை சன்யாசம் இருப்பவருக்கே கெடுதல் இல்லாமல் உதவுவார்கள். எனவே மேற்கண்ட பெண் தத்துவ தெய்வங்களையே உபாசியுங்கள் இதில் நிலைகளே முக்கியம். எனவே ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி உபாசனை முதல்நிலை, ஸ்ரீ வாரஹி இரண்டாம் நிலை, ஸ்ரீ யட்சணி மூன்றாம் நிலை இந்த நிலைமைகளை மாற்றக்கூடாது. ஒன்றன் பின் ஒன்றாக உபாசனை செய்யுங்கள்.
ஒன்றை மட்டும் தான் உபாசனை செய்வதாக இருந்தால் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை உபாசியுங்கள். ஆனால் இவரிடம் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருக்க மட்டுமே வேண்டுங்கள். நேர்மையான மனிதருக்கு மட்டுமே இவர் உதவுவார். இதை மறக்காதீர்கள். ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை உபாசனை செய்யும்போது பல் தேய்க்க வேண்டும். குளிக்க வேண்டும், சுத்தபத்தமாக இருக்க வேண்டும், மகாலட்சுமி அம்சமாக பூசையிட்டு வாசனையுடன் தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை இவருக்கு. ஆனால் மனசுத்தம் மிக மிக முக்கியம். அது போன்று மனிதருக்குத்தான் இவர் சக்தியை பயன்படுத்த வேண்டும். எனவே தான் இவரிடம் முன்பே பிரார்த்தனையை வலுவாக கூற வேண்டும். இறைவா ஏன் கோரிக்கைகளையும் என் வாழ்வை முன்னேற்றத்திற்கும், என் அடுத்தடுத்த உபாசனைக்கும் உறுதுணையாய் இருந்து வெற்றியையும், பாதுகாப்பையும், நல்லோர் சேர்ப்பை மட்டுமே தாருங்கள் என சங்கல்பம் செய்து கொள்ளுங்கள்.
என் தனிப்பட்ட கருத்தையும் சற்று கவனியுங்கள் இக்கால கட்டத்தில் நல மனிதரை காண வேண்டுமானால் நாம் காட்டுக்கு தான் செல்ல வேண்டும். அங்கு மிருகங்களே தேவலாம் என்ற நினைப்பே வரும். இதை தவறாக நினைக்க வேண்டாம்.  உங்களிடம் ஒரு சக்தி வந்தஉடன் நாம் அருள் வாக்காக வெளிபடுத்த முயற்ச்சிப்போம். அப்போது நம்மை சுலக்கொடியவர்களில் நல்ல தர்ம ஆத்ம ஆயிரத்தில் ஒன்றாக மட்டுமே இருக்கும். பாவ ஆத்மாக்கள் தன் நிம்மதிக்காக உங்களை சூழ்ந்தே இருப்பார்கள். நிம்மதி பரிகாரம் கேட்பார்கள். அந்த அன்பு அழகையை தவிர்க்க முடியாமல் அவர்கள் கட்டுபாட்டில் அகப்பட்டு கொள்வீர்கள். நம்மையும் பாவ பங்கு சூழும். இது போன்ற ஜனங்களே இன்று அருளாளர்களை சந்திக்க வருகின்றனர். எனவே தங்கள் ஒரு உபாசனையோடு இல்லாமல் யாம் முன்பு கூறிய மூன்று உபாசனையும் கடைபிடியுங்கள். பாவிகளையும் வாழ வையுங்கள் தர்மத்தையும் கடைபிடியுங்கள்.
இனி முதல் நிலையான ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி பூஜையை காண்க.
இவருக்கான பூஜையை சதுர்த்தி அன்று ஆரம்ப்பித்து மறு சதுர்த்தி திதியில் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். 16 நாள் பூஜை செய்தால் போதும். துவங்கும் நாள் வளர்பிறையாகவும் இருக்கலாம் தெயபிரையாகவும் இருக்கலாம் நல்லதே. வளர்பிறை சதுர்த்தி திதியில் ஆரம்பித்தால் தேய்பிறை சதுர்த்தியில் முடிக்க வேண்டும். இது பூஜா விதி. இவரின் மூல மந்திரத்தை ஒரு தடைவைக்கு 444 தடவை ஜெபிக்க வேண்டும். காலை மதியம்  மாலை அல்லது இரவு இந்த மூன்று வேலையும் மந்திரம் ஒரு வேலைக்கு 444  தடவை கூறி பூஜிக்கலாம்.
படையல்கள்
இவருக்கு நெய்வேத்தியம் முதல் நாளும் இறுதி நாளும் மிக விமரிசையாக இவருக்க பிடித்தமானதை எல்லாம் வைத்து படிக்கலாம். முடிந்தவர்கள் அன்றாடம் கூட படைக்கலாம். முடியாதவராக இருந்தாலும் அன்றாடம் வெற்றிலை பாகு வாழை பழமாவது வைத்து வணங்க வேண்டும். என்னென வைவேத்தியமாக வைக்கலாம் என்பதையும் தெரிவிக்கிறோம்.
மாதுளம் பலம் முத்துக்களில் தேன் கலந்து நெய்வேத்தியமாக வைக்கலாம். ஸ்ரீ உச்சிஷ்ட கணபதிக்கு எலுமிச்சை பழம் மிகவும் பிடித்தமானது அதையும் வைத்து படிக்கவும்.
மேலும் இவருக்கு பிடித்தமானது அருகம்புல், எருக்கம்பூ, வெற்றிலை மாலை, தாமரை பூ, வன்னி இல்லை, வேப்ப இல்லை, வில்வ இல்லை, செம்பருத்தி பூ, அரளி பூ, நந்திய வட்டை பூ இந்த புஷ்பங்களை சூட்டவும் அர்ச்சனைக்கும் பயன்படுத்தலாம்.
உணவு வகையில் தயிர் சாதம், எள் சாதம், மிளகு சாதம், அத்தி பழம், உளுந்து வடை. தேங்காய், வெண்ணை, தேன், கொழுக்கட்டை, சுண்டல், அவல்,பொறி, இவைகளும், மஞ்சள் குங்குமமும் இவருக்கு பிடித்தமான பொருட்கள்.
இதில் உங்களால் என்ன முடிகிறதோ அதை வைத்து செய்யுங்கள். சிறிய தம்ப்ளேரில் பசும் பால் வைத்து பூஜிப்பதும் சிறந்ததே. முடியாதவர்கள் வெற்றிலை பாக்கு பழம் மட்டும் வைத்து பூசித்தல் போதும்.
இங்கு ஒரு ரகசியத்தை கவனிக்க வேண்டும்
ஸ்ரீ விநாயகரை முதலில் வழிபட சில காரணங்கள் உண்டு அறிவீராக. பிராப்தம் என்ற ஒரு பெயரை நாம் அதிஷ்டம் என்றும் கூறலாம். ஒருவருக்கு ஒரு செயல் முயற்சி இல்லாமலேயே கிடைத்து விட்டாலும், பலரும் முயன்று அவர்களுக்கு கிடைக்கமால் குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டுமே கிடைத்தாலும் தன்னால் ஒருவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்தாலும் அதை நாம் பிராப்தம் என்று கூறுவோம் அல்லது அவருக்கு அதிஷ்டம் என்று கூறுவோம். ஆன்மிக குருக்கள் சீடர்களுக்கு அடிக்கடி கூறும் வார்த்தை பிராப்தம் இருந்தால் தான் தெய்வ அருள் கிட்டும் என்றும் கூறுவார்கள். இந்த பிராப்தம் ஏன் ஒருவருக்கு ஏற்பட்டு அதிஷ்ட வாய்ப்புகளை தருகிறது என்றால் முற்பிறவி மற்றும் இப்பிறவி தர்மம், நன்மைகள், இறைவழிபாடு, ஒழுக்கம் இவைகள் அளிப்பது தான். மேலும் பலருக்கும் இந்த பிராப்தம் கிடைக்காமல் போவதற்கு காரணம் கண் திருஷ்டியினால் ஏற்படக் கூடிய தோஷங்கள், செய்வினையால் ஏற்படக்கூடிய வினைகள், குடியிருக்கும் வீட்டின் சல்லிய தோஷங்கள், எதிர்படும் போட்டி, பொறாமை, பிணிகள், குடும்பத்தில் சர்ச்சை சச்சரவு, பொருளாதார கஷ்டத்தால் தரித்திரம், தர்மம் செய்யாது போதல், பித்ரு குல தெய்வங்களை மதியாமல் போதல், பெற்றோர் சாபம், முன்வினை கோளாறு, அறியாமல் செய்த தவறுகள், துரோகம், பொய்பேசி மற்றவரை புண்படுத்துதல், இது போன்ற பல காரணங்களால் பிராப்தமும் அதிஷ்டமும் ஒருவருக்கு கிடைக்காமலேயே போகிறது. குறிப்பாக தெய்வ அனுகிரகம் கிடைப்பதில்லை. எல்லாருக்கும் மேற்கண்ட குறைகளில் இன்றைய கால கட்டத்தில் ஒன்றாவது குறை இருக்க தான் செய்கிறது.

இவைகளில் இருந்து தப்பித்து இறை பிராப்தம் பெறவே முதலில் ஸ்ரீ கணபதியை வழிபட வேண்டும். இவரே வினைகளை களைய கூடியவர். விக்னேஸ்வரர் என்று பெயர் கொண்டு அழைக்க காரணமும் அது தான். எனவே ஆன்மிக சக்தி பெற விரும்புவர்கள் முதலில் கணபதியை வழிபட்டே தன் வினைகளை போக்கி மேற்படி அடுத்த பயிற்சிகளை கடக்க வேண்டும். தன்னால் சித்துகள் வரவும். ஸ்ரீ விநாயகரே உதவுவார். எனவே முதலில் வழிபடும் முக்கியத்துவத்தை யாம் உணர்ந்த காரணமும் இதற்க்குத்தான்.











         ஸ்ரீ விநாயகர் மூலகடவுள் எனபது உங்கள் அனைவருக்கும் தெரியும். மூலகடவுள் என்றால் என்ன? என்ற கேள்வியும் எழுப்பும். இதை மூன்று விதமாக சித்த ஞானிகள் கூறுகிறோம். ஒன்று எட்டு முளைக்கும் (திக்கு) என்ன தத்துவமோ அவை இவரால் மட்டும் காபந்து செய்யபடுகிறது எனவே மூலகடவுள் என்று பெயர் வைத்தனர். அடுத்து மூலாதாரம் முதல் உச்சி சக்கரம் வரை உள்ள முக்கிய எட்டு சக்கரங்களை இயக்க கூடியவர் இவர் என்பதாலும் இப்பெயர் அழைக்கபடுகிறது,

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா11

ஓம் உச்சிஷ்ட கணேசாய நம:
மரியாதையை நிமித்தமான பூஜைகளை முடித்த பின்னர் நாம் துவங்கும் முதல் பூஜை முழு முதற் கடவுள் ஸ்ரீ விநாயகரின் அவதாரங்களில் சகல வித மனிதரும், அசுரகுணம், தேவகுணம் கொண்ட மனிதரும், பொதுவாக வழிபாடு செய்தவுடன் எளிய பூஜைக்கும் பலனளிப்பவரும், அசுத்தமான சூழலையும் அனுசரித்து ஏற்று வழிநடதுபவரும். பாவ புண்ணியங்களை மீறிய நல்வெற்றியை தருபவரும் உலக மாயையில் அகப்பட்டவருக்கும் உதவி புரிபவரும், சிறு உபசரிப்ப்புகு பேரு நன்மை செய்பவரும், சிறந்த வழி நடத்துபவருமான ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியே நம் முதல் பூஜைக்கு உரியவர் ஆவர்.
நாம் ஏன் இவரை வணங்க வேண்டும்?
இவரை வணங்குவத்தின் முக்கியத்துவம் என்ன?
இவற்றை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் பின்பு எல்லாம் ஜெயம். நம் உடலில் இயக்க நிலைகள் உண்டு. அணுக்கள் இயங்கினால் தான் நாம் நினைத்ததை சாதிக்கவும், அடையவும் திருப்திபடவும் முடியும். இதில் முதல் இருக்க மூன்றாவது இயக்கி பலன் இல்லை. மூன்றாவது இயக்க நம்மால் முடியும் அனால் அடித்தளம் போட்டால் தான் மேல்மட்டம் கட்டமுடியம். அதைப்போலத் தான் முதல் நிலை இயக்கம் சரியாக இயங்கினால் தான் அடுத்தடுத்த இயக்கமும் செயல்படுவதால் பலன் இருக்கும். இல்லையேல் எல்லாம் வீணே. இந்த முதல் நிலை இயக்கத்திற்கு உரியவர் ஸ்ரீ கணபதி ஆவார். இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும் கணபதி பூஜையை ஏற்கனவே செய்தோமே பிறகு மீண்டும் எதற்கு என்று கேட்கத்தோன்றும் அல்லவா இங்கு ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் மரியாதையை நிமித்தமாக முதல் கடவுளை வழிபடுவது என்பது வேறு. அவரையே விருப்பக் கடவுளாக வழிபடுவது வேறு. ஒரு சில கட்டுப்பாடுகளுக்கும் ஒருங்கினைப்பிற்க்கும், வழிமுறைகளை பெறவும் அதற்குரிய அவதார குண தெய்வங்களை உபசிப்பது எனபது வெறும் அந்த வகையில் நம் நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதில் உச்சிஷ்ட கணபதி அவதாரமே முதல் நிலை.
இதற்கான காரணத்தையும் அடுத்து அறிக.
தேவைகளை கற்றுக்கொள்ள பல கட்டுபாடுகள் உண்டு. முதலில் குருமுகமாக கற்க வேண்டும் என்ற நிபந்தனையே முதன்மையான கட்டுபாடுகள் ஆகும். குருமுகம் எதற்காக என்றால்? தான் பயின்ற அனுபவங்கள், இடையூறுகள், வெற்றி பெற்ற விதம். ஒழுக்க நெறிகள், தவறுகளை ஒழுங்குபடுத்தி திருத்தி கொண்டு வருவதற்கும், கால நேரத்தில் எழுப்புவதில் இருந்து, கால நேரங்களை குறித்து கொடுப்பது முதலும், கலைகளில் முழுமை பெரும் வரையும் குருவின் அவசியம் இருந்தது. இது இக்காலத்தில் கடுகளவு தான் குருச்செயல் பொருந்தி வரும். குருவே சீடனை பார்த்து பொறாமைப்படும் நிலையே நிறைய இடத்தில் பார்க்கிறோம். அன்றைக்கு துரோணாச்சாரியார் போல யாரோ சில குருக்கள் தான் பொறமைக்காரர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அரிதிலும் அரிதாகவே குருநிலை சிறப்பு உள்ளது.
மேலும் குரு கட்டுபாடுகள் பல இருந்தாலும், ஆர்வமுடன் நாம் பயின்றாலும், நல்ல குருவே நமக்கு கிடைத்தாலும் எல்ல கட்டுபாடுகளும் கடைப்பிடித்து பின்பு தெய்வ பயிற்ச்சிக்கு வருவதற்குள் ஆர்வமே போய்விடும். மேலும் கட்டுபாடுகள் உள்ளவரனாலும் சிற்சில தவறுகள் அறியாமல் செய்ய நேர்ந்தாலும் தொடங்கிய பூஜை தடை பட்டு விடும். நிறைவு பெறாமல் போகும். மேலும் எடுத்த எடுப்பிலேயே நம் பக்தி நெறி வளர்ந்து விடாது. மனதயக்கம், நம்பிக்கை குறைவு, சரியாக செய்கிறோமோ என்ற சந்தேகம் எல்லாம் இருக்கும். நாம் தெய்வத்தை பிரார்த்தனை செய்ய தொடங்கும்போது தெய்வம் நமக்கு சிறு உதவியாவது செய்வதாக நாம் உணர்ந்தாலே நம் பக்தி அதிகரிக்க வைப்பு உள்ளது. மேலும் காம அடக்கம். மன அடக்கம், ஒழுக்க அடக்கம் இவைகளை எல்லாரும் முறையாக கடைபிடிக்கவிட்டாலும் இவர்களை போன்றவர்களை ஆதரித்து பொருத்து ஆன்மிக வழித்தடம் மாறாமல் பாதுகாப்பும், உயர்வும் கொடுத்து வழிநடத்தும் குரு ஸ்ரீ உச்சிஷ்ட கணநாதரே ஆவார்.
ஸ்ரீ சூரிய பகவனை யார் குருவாக நினைத்து வணங்குகிரர்களோ அவர்களுக்கு உச்சிஷ்ட கணபதி காபந்து செய்வார். இவரை வழிபடுவதால் மகா சரஸ்வதியையும், ஹயக்ரீவரையும் வழிபட்ட பலன் கிட்டும். யார் ஒருவர் உச்சிஷ்ட கணபதியை வழிபடுகிறார்களோ எந்த நிலையிலும் அவர்கள் சக்தி குறையாது.
உதரணமாக கூற வேண்டுமானால் குரு எத்தனை மாணவர்களுக்கு தன் அறிவை போதித்தாலும். அந்த குருவின் அறிவு குறையாது. மாறாக அறிவு அனுபவம் அதிகரிக்கும் அதை போலத்தான் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியின் நிலையும். அவரை முன் நிறுத்தி தொடங்கும் பூஜை பல தெய்வ வசிய அஷ்ட சித்துக்கள் அடுத்தடுத்து பெற அவரே வாய்ப்புகளை கொடுப்பார். மேலும் தாங்கள் செய்யும் யட்சணி பூஜை தோல்வி இன்றி முடியவும். யட்சனியால் எவ்வித இடையூறும் இன்று வாக்கு சொல்லவும் இவரை முன் நிறுத்தினால் தான் பாதுகாப்பு கிடைக்கும்.
மேலும் ஆன்மிகத்தில் ஈடுபடகூடியவர்களில் பெரும்பாலனோர் நாக கால சர்ப்பதோஷத்தில் அகபட்டவர்களாக தான் இருப்பார்கள். இந்த தோஷம் இருப்பதால் தான் நல்ல குருவும் கிடைப்பதில்லை. ஆன்மிக வெற்றியும் அடைய முடிவதில்லை. எனவே இவர்கள் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை வழிப்பட்டால் தான் தோஷம் தீர்ந்து தெய்வ நிலை வெற்றி கிடைக்கும்.
இந்த கோஷ தரித்திர நிலை தொடரும் பட்சத்தில் ஒரு கால கட்டத்தில் தெய்வத்தையே இகழகூடிய நிலையும், உறவுகளின் சாப நிலையும் உண்டாகிறது. இந்த இழிவு நிலை தங்களை அண்டாமல் இருக்கவும் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை வணங்கியே ஆகா வேண்டும்.
உலகிற்கே போதனை குருவான ஸ்ரீமன் நாராயணன் ஒவ்வொரு முறை ஆசூரர்களை அழிக்க புறப்படும் போதும் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை வழிபட்ட பின்புதான் சென்று வென்றுள்ளார். மொத்தத்தில் மும்மூர்த்திகளுக்குமே இவரை வழிபட்டுள்ளார். இந்த சிறப்பு மிக்க ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை வழிபடுவதால் தான் எல்லா வெற்றியும் தேவையும் பூர்த்தி அடையும் என்பதை உணர்ந்திருப்பீர்கள்.
எல்லா மனிதருக்கும் மூன்று மனம் உண்டு வெளிமனம், உள்மனம், ஆழ்மனம் இந்த ஆழ்மனமே நம் தெய்வங்கள் குடிகொண்டு செயலாக்கம் செய்கிறார்கள். இந்த ஆழ்மனம் அடுத்து இரண்டு மனதின் கட்டுப்பாட்டில் உலாவும் வரை நமக்கு தெய்வசக்தி சித்திக்காது. உள்மனம் அடங்கினால் வெளிமனம் அடங்கும். இவை இரண்டும் அடங்காததற்கு ஆசையும், காமமும் முக்கிய காரணங்களாகும். ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை வழிபடும் பொது காமம் தன்னால் வெறுக்கும் ஆசை பூர்த்தியாகி அடங்கும். இவ்விரு நிலைகளும் பெறும்போது ஆழ்மனம் தன்னால் செயல்படும். எனவே ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை மனப்பூர்வமாக வழிபடுங்கள். தோல்வி இல்ல, தடையில்லா, போராட்டமில்லாத தெய்வ வெற்றியை காணுங்கள்.
மேலும் நம் அறியாமை தனத்தை போக்கி ஞான தனத்தை இவர் வளர்ப்பார். இதனால் தன்னால் கலைகள் கற்று கொண்டே செல்லலாம். எந்த ஒரும் சந்தேகத்திற்கும் இவர் உடனே விடை கொடுப்பார். இதை அனுபவத்தில் தாங்களே உணரலாம். உபாசனை செய்ய வேண்டுமானால் ஸ்ரீ கணபதியே முதல்நிலை ஆவார். தெய்வத்தின் கருணையை பெற்று மற்றவருக்கு திரிகாலமும் கூற வேண்டுமானால் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியே முதல் நிலை ஆவார்.
இனி இவரின் எளிமையான பூஜைகளை காண்க. ஐயோ இத்தனை பூஜைகளா என மனம் தளரக்கூடாது. இந்த எண்ணமே தோல்வியை வரவேற்பதாகும். வாழ்க்கையையே ஆன்மிகத்திற்கு அர்ப்பணித்த பின் அதில் தோல்வி இல்ல நிலைகளை கடக்க வேண்டுமானால் ஒன்று பக்குவம் வேண்டும். இல்லையேல் பொறுமை வேண்டும். இவை இரண்டும் சேர்த்தால் ஞானம் பெறலாம். இந்த ஞான பெற அடிப்படையில் இருந்தே ஆர்வத்தை பெருக்கி கொள்ள வேண்டும். சலிப்பூ சீக்கிரம், விரக்தி, சோம்பல் போன்ற குணங்களை விரட்ட நாம் தான் முயற்ச்சிக்க வேண்டும். இந்த செயல்களை கூட சரி செய்து தரும் அற்புத ஆற்றல் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதிக்கு உண்டு என்பதை மகிழ்வுடன் ஏற்று கடைபிடியுங்கள். இவர் உங்கள் ஆர்வத்தை அதிகபடுத்துவார். மறைமுக வெற்றிகளை நிறைய தருவார். நிரூபித்து காட்ட முடியாத வெற்றிகளை கொடுப்பார்.
அனுபவத்தில் நீங்களே உணர்வீர்கள்.

முக்கிய தகவல்:
உங்களுக்கு இவருடைய உபாசனை மட்டுமே போதுமானது என நினைத்தால் இந்த ரூ உப்பசனையோடு நிறுத்தி கொள்ளலாம். அது தங்கள் விருப்பம். யாம் அடுத்த பயிற்சிக்கும் ஊக்குவிக்க சில காரணங்கள் உண்டு. அறிவீராக. தெய்வ பயிற்சி நாம் தொடரக்கரணமே ஆத்ம திருப்திக்கும் மக்கள் சேவைக்கும் தான். மக்கள் அல்ப்பமான விஷயங்களையும், அசிங்கமான விசயங்களையும் நம்மிடம் கேட்க வருவார்கள். இது போன்ற கீழ்த்தரமான விஷயங்களும் எப்போதும் கணபதி உடன்படமாட்டார்.
ஸ்ரீ கணபதி நம் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பார். வருவோரின் பாவங்களையும் போக்குவார். கஷ்ட சுமைகளை இறக்கி வைப்பார். இதெல்லாம் சரி தான் எனினும் கேவலமான செயல்களை முடித்து தரசொல்லி  வரும் மக்களுக்கு உடன்படமாட்டார பாவசெயலை செய்ய நம்மை தூண்டுபவர்களை விரட்டி விடுவார். பாவம் செய்து அவதிப்படும் மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்கள் கையாலேயே தர்மம் சேர்த்து செய்ய வைத்து அவர்களின் அவதியை போக்க வைப்பார். அதற்கு காலங்களை படிப்பினையாக கடத்துவார்.
இதுபோன்ற பாவ மக்களே ஆண்மிகர்களிடம் நிறைந்து காணப்படுவார்கள். எனவே ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை நம் கோரிக்கை நம் செயல்கள் இவைகளின் வெற்றிக்காக உதவும் படி மட்டும் கேட்டுக்கொள்ளவும். தான் அழைக்கும் போது வந்து உதவ வேண்டும் எனவும் வேண்டி கொள்ளவும். அருள்வாக்கு மட்டும் கூற வேண்டுமானால் இவரை மட்டும் வழிபட்டால் போதுமானது.பரிகாரம் இவர் வாய்திறந்து கூறமாட்டார்.
வருவோர் துன்பத்திற்கு அவசியம் பரிகாரம் கூறவேண்டும் அல்லவா அதற்கு யட்சணி அன்னையை உபாசித்து வாக்குக்கும் பரிகார ரகசியம் கூறவும் வைத்துக் கொள்ளவும். மற்றவரின் நலனுக்காக தாங்களே சகல வித செயலுக்கும் பரிகாரம் செய்ய விரும்பினாலும் அந்த செயலால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டுமானால் அவசியம் யாம் குறிப்பிடும் தெய்வங்களில் ஒருவரின் உபாசனை அவசியமானதாகும். ஒன்று ஸ்ரீ வாரஹி, அல்லது ஸ்ரீ ஆஞ்சநேயர் அல்லது ஸ்ரீ காலபைரவர் இவர்கள் மூவரில் ஒருவரை அவசியம் உபாசனை வைத்த பின்னரே மற்றவர் தர்ம கர்ம செயலை செய்ய நீங்கள் ஈடுபட வேண்டும். இந்த மூவருமே பாவ மனிதர்களின் அஷ்ட கர்ம செயல்களை செய்ய உதவக்கூடியவர்கள்.
தெய்வம், இயற்கை இந்த அஷ்ட கர்மத்திற்கு பஞ்சாட்சரம் மட்டுமே பயன்படும். மேர்கண்ட தேவதைகள் உடன்படமாட்டார்கள். இந்த பஞ்சாட்சரம் பெரும் தகுதி இப்போதைய மனிதருக்கு யாருக்குமே தகுதி மற்றும் அம்சம் இருப்பதில்லை. எனவே சிவனிடம் செல்ல வேண்டாம். மீறினால் தரித்திரம் தாண்டவமாடும் யாராலும் காபந்து செய்ய இயலாது. அக்காலத்திலேயே தோல்வி பெற்றவர்களே பலரும் இருந்துள்ளனர். ஒரு சிலரே வென்றுள்ளனர். உங்கள் சந்யசதையும் வைராக்கியத்தையும் பஞ்சாட்சரதோடு மோதினால் பாவமே மேலோங்கும் உங்கள் வாழ்வை வீணடித்து கொள்ளாதீர்கள். உங்கள் கவனத்திற்காக இந்த தகவலை இங்கு குறிப்பிட்டேன் இனி தகவலுக்கு வருவோம்.

8 November 2014


குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 10

எனவே அந்த இரு விரலும் விலக்கியே வைத்து ஜபமணியை பயன்படுத்தவும். 108 வரை மந்திரம் சொல்ல வேண்டுமானால் மேரு என்னும் அதன் உச்சியை முதலாக கொண்டு உட்பக்கமாக மந்திரம் ஜெபித்து கொண்டே வந்தால் 108 கணக்குடன் மீண்டும் அதன் உச்சி வந்து விடும். பின்பு தொடர்ந்து மேருவை கடந்து அப்படியே மீதம் எண்ணக்கூடாது. பெரியவர்கள் மகாமேரு போன்றது உச்சி அதனை கடக்க கூடாது என்பார்கள். எனவே மீதம் எண்ணிக்கைக்கு மாலையை திருப்பி கொள்ள வேண்டும். பின்பக்கம் மாலையின் மணிகளை தள்ளக் கூடாது. ஏன் மாலையை திருப்ப வேண்டும். எல்லாம் ஒன்று தானே என நீங்கள் நினைக்கலாம். ஜபமாலையில் மேருவுக்கு அடுத்த மணி எப்பொழுதும் இரண்டாவதாக எண்ணிகையில் வரும் கடைசி மணி எப்பொழுதும் கடைசியாகவே இருக்கும். இது ஒரே பக்கமாக என்னும் பொது சக்தி குறையும் ஏன சித்தர்கள் கூறுகிறார்கள். திருப்பி திருப்பி பயன்படுத்தும் போது முதல் கடைசியும் கடைசி முதலும் மாறி மாறி வரும். அவ்வாறு அமையும் போது ஜப மணிகள் முழு சக்தியும் குறையாமல் இருக்கும் என குருமார்கள் கண்டுணர்ந்து கூறியுள்ளார்கள். எனவே எல்லாவற்றிற்கும் இவாறு பயன்படுத்துங்கள். ஜபமாலையை தரையில் வைக்க கூடாது. ஜப மாலையை பயன்படுத்தும் பொது இன்னொருவர் பார்க்க கூடாது. எனவே காவி துண்டை கையில் மூடி என்னலாம். யாரும் இல்லாத தனி அறையாக இருந்தால் மறைவு தேவை இல்லை. பொதுவாக வெளியிடங்கள் சென்று ஜபம் செய்யும் போது இந்த மறைவு தேவைப்படும். கரமாலையை பயன்படுத்தினாலும் வெளி நபர்கள் காண கூடாது. கரமாலை என்பது கைவிரல் அங்குலஸ்திகளை எண்ணிக்கைக்கு பயபடுத்துவர் அதற்கு கர மாலை என்று பெயர். கைவிரல்களையும் ஜெபத்திற்கு என்னும் பொது காவி துண்டை கொண்டு மறைத்தே எண்ணிகையை தொடர வேண்டும். எல்லாவற்றிலும் ஒரு ரகசியத்தை கடைபிடித்தால் தான் ஈடுபாடும், அக்கறையும் ஒரு நிலைப்பாடும் அதிகரிக்கும் இதுவும் தேவ ரகசியமே.
இவ்வாறாக அன்னை மகா சரஸ்வதியின் மந்திரம் கூற வேண்டும். கீழே உள்ள மந்திரத்தை தான் முறை ஜப மாலை உதவி உடன் முதன் முதலாக கூற வேண்டும். எந்த மந்திரமும் மனதிற்குள்ளேயே கூறவும். இனி மந்திரங்களை காண்க.
ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி வித்யாரம்பம்
கரிஷ்யாமி சித்திற்பவதுமே ஸதா

(108முறை கூற வேண்டியது)
இது வரை செய்த பூஜை எல்லாம் பக்குவ பூஜை மரியாதையை பூஜையாகும் அடுத்து செய்ய போகும் பூஜையே சக்தி யுக்தி புக்தி பலம் கொண்ட கன்னி மூல (தந்குதல௦ பூஜையாகும். உச்சிஷ்ட பூஜையாகும். அசுத்தமே குடி கொண்டாலும், அநாகரிகமாய் நடந்து கொண்டாலும் பொருத்து திருத்தி காத்து வழி நடத்தும் மிக மிக அற்புதமான முதல் பூஜையாகும். எல்ல வெற்றிக்கும் வித்திடும் சக்தி பூஜை இதுவேயாகும்.







சக்தி உச்சிஷ்ட கணேச பூஜை
வயதை கடந்தவர்கள் மற்றும் ஏற்கனவே ஆன்மிக பூஜை கண்டவர்கள், தொழில் முறை ஜோதிடர்கள். ஆலய பனி செய்பர்கள் இந்த பயிற்சியை முதலிலேயே கடைபிடிக்கலாம் பலன் உண்டும் தினத்திலேயே ஜன வசியம் வாகு பலம் உண்டாகும், அதே நேரத்தில் மனப் பக்குவம் இல்லாதவர்கள் ஆரம்ப நிலையில் இருந்து துவங்குவது தான் நல்லது, ஒரு முழு பூஜை என்பது ஆரம்பத்தில் இருந்து செய்வது தான் சிறந்தது, முயற்சித்து ஆரம்பத்தில் இருந்து துவங்குங்கள். முழு வெற்றி கிட்டும், அவசர குணத்திற்கு இங்கு இடம் தராதீர்கள் பூஜை செய்வது இறைவனுக்காக அவர் திருப்தி பட வேண்டும் எனவே அவரை மதித்து முழுமையாய் கடைபிடியுங்கள், நீங்கள் விரும்பியதை கொடுக்க போவது அவர் தான் எனவே அவரை மனபூர்வமாக பற்றிகொல்லுங்கள், ஏன் இதை கூறுகிறேன் என்றால் பலரும் பயிற்சியின் நாட்களை என்னுகிரர்களே தவிர பக்தியின் தீவிரத்தை அதிகரிப்பதில்லை., இது பெரும் பிழையாகும், நாட்கள் நகர நகர பலருக்கும் ஆர்வம் குறைகிறது இது தவறு. நாட்கள் கடக்க கடக்க பக்தி மிகுதிபட்டுகொண்டே போக வேண்டும். இதுவே நாம் பரிபூரண மனதோடு பூஜிக்கிறோம் என்பதின் வெளிபாடகும். ஆர்வம் குறைய எது காரணமோ அதை கண்டு போக்க வேண்டும். மன சளிப்புக்கு இடம் கொடுக்க கூடாது. மனம் சோம்பலை நாடினால் அதை விரட்டி விட வேண்டும். தெய்வ சோதனைகள் நிறைய உண்டு அது இதுவாகவும் இருக்கலாம். இறைவன் சோதனையில் அவர் தோற்று நாம் வெற்றி பெறவே விரும்புவார் இதை உணர்ந்து நாம் இறை சோதனையில் வெற்றி பெற முயற்ச்சிக்க வேண்டும். செய்யாது கர்மாதான் பலன் கழிக்கும். பிறகு தெய்வம் பேசவில்ல என வருத்தப்பட்டு புண்ணியமில்லை. எனவே இந்த பயிற்சியை நாம் ஏன் செய்கிறோம், இதை கொண்டு என்ன அடைய திட்டமிட்டிருக்கிறோம் என்பதை தினம் இறைவனிடம் பிராத்தனை கவனம் செய்தால் ஆர்வம் குறையாது, இறைவனின் அளவறியா வலிமையை உணர்ந்து அவர் ஸ்தானத்தை உணர்ந்தால் ஆர்வம் அதிகமாகும், நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் இறைவன் சித்தமென நினைத்தால் பக்தி பெருகும். மூல பரம் பொருளே உலகின் வசியம், மூல பரம் பொருளே உலகின் வெற்றி, மூல பரம் பொருளே உலகின் உயிர் கரு, மூல பரம் பொருளே உலகின் அணைத்து தெய்வங்களின் முதல் இயக்கம் இவைகளை மட்டுமாவது பரிபூரணமாக உணர்ந்து பாருங்கள் பக்தி தன்னால் பெருகும். உணர்ந்த மாத்திரத்திலேயே அருளும் பொங்கும்.
நீங்கள் வெற்றி பெறுவதே இறைவனின் நோக்கம் எனவே வெற்றிக்கு பாடுபடுங்கள் பலன் உங்களுக்கு தான் என்பதை எண்ணி பாருங்கள். இந்த உலக சலனம் நம்மை திசை திருப்ப பார்க்கும் வெற்றி பெரும் வரை வீண் எண்ணங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். கவனம்.

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 10 

 காவல் தெய்வ பூஜை

இந்த பூஜையை சனிக்கிழமை அல்லது அஷ்டமி திதியில் துவக்கவும்
இதில் துவக்குவதற்கு முன் காவல் தெய்வ பூஜை செய்ய வேண்டும். இது எதற்கு என்றால் வரு முன் காப்பது உடற்கட்டு பூஜை. இதையும் மீறி கர்ம வினையால் சிலருக்கு துன்பம் வரலாம். அவ்வாறு வந்தபின் காப்பது காவல் தெய்வ பூஜையாகும். காவல் தெய்வங்களாக பலரும் பல வழியில் வணங்குகிறார்கள். கருப்பண்ணசாமி, அய்யனாரப்பன், ஆஞ்சநேயர், சாஸ்தா, மதுரைவீரன், பெரியாண்டவர், முனீஸ்வரன், வீரபத்திரன், இடும்பன், சாத்தான், இன்னும் எத்தனையோ வகை தெய்வங்களை அவரவர் பகுதி வழக்கப்படி பூஜிக்கிறார்கள். எனினும் அத்தனைக்கும் தலைமையானவர் ஸ்ரீ கால பைரவர் தான் அக்காலம் முதல் இக்காலம் வரை சித்தர்களுக்கும் ஒரு சிவ ஆலயத்திற்கும் முகப்பிலேயே காவலாய் இருப்பவர் இவரே. எனவே காவல் தெய்வமான இவரை வழிபட்டால் மேற்சொன்ன தெய்வங்களின் சக்தி தன்னாலேயே வழித்துணையாக வரும். இந்த காவல் தெய்வ பூஜை மிக எளிமையானது. ஒரு தடவை செய்தாலும் பலன் உண்டு. நீங்கள் விருப்பட்டால் வாரா வாரம் சனிக்கிழமை செய்யலாம். காவல் தெய்வங்களுக்கு உகந்த நாள் எப்பொழுதுமே சனிக்கிழமை தான். ஆலகால விஷத்தில் இருந்து சிவ பெருமான் கக்கப்பட்டதும் சனிக்கிழமை தான். காக்கும் கடவுள் ஸ்ரீ ஹரிக்கு உகந்த நாளும் சனிக்கிழமை தான் ஸ்ரீ ஆஞ்சநேயர், சாஸ்த, கருப்பசாமி, சனிஸ்வரர், பைரவர் காலி, அய்யனாரப்பன் போன்ற இன்னும் ஏனைய தெய்வங்களுக்கும் உகந்த நாள் சனிக்கிழமை தான். ஓரளவு விஷயம் அறிந்தவர் கூட சனிக்கிழமை சிறப்பை தெரிந்து வைத்திருப்பர். அரச மரத்திற்கு லஷ்மி கடாட்சாரம் கிடைக்கும் நாளும் சனிகிழமை தான். எந்த ஆலயத்திலும் இன்று தீபம் ஏற்றினால் கடன் தொல்லை, தீராத வியாதி, இருந்தால் விலகும். விஷயம் உணர்ந்தவர் அசைவம் தவிர்ப்பர். சனி கிழமையின் பெருமையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த யுகமே சனி யுகம் தான். இதற்கு குருவாக காவலாக இருப்பவர் கால் பைரவர் தான். தெய்வத்தில் உயர்வு தாழ்வு இல்லையென்றாலும் அவரவர்களும் ஒரு பொறுப்பு ஒப்படைகக பட்டிருகிறது. இது தேவ ரகசியம். அதில் காவல் தெய்வமாக இருப்பவர் ஸ்ரீ கால பைரவர் சாமி. இவருக்கு அஷ்டமி சனிகிழமை உகந்தது. மற்ற நித்ய பூஜை நியமனங்களை விடியற்காலை முதல் முறையாக முடித்து பின்பு சிவாலயம் சென்று ஸ்ரீ கால பைரவர் சன்னதில் தேங்காயில் மிளகு தீபம் ஏற்றவும். எவ்வாறெனில் ஒரு சுத்தமான வெள்ளை கலர் காட்டன் துணியில் 12 முழு மிளகு வைத்து கட்டிக்கொள்ளவும். இதுவே திரியாகும்.
இது போல் இரண்டு கட்டிக் கொள்ளவும். சுத்தமான நெய் 100 கிராம் போதுமானது. ஒரு தேங்காய் வாங்கி கொள்ளவும். கட்டிய மல்லிகை பூ சிறிது எடுத்து கொண்டு ஆலயம் செல்கிறீர்கள். அங்கு பைரவ சுவாமிக்கு புஷ்பம் சாற்றவும் பின்பு தேங்காயை இரண்டாக உடைக்கவும். (நிதானமாக வரன்பு பார்த்து தட்டி உடைக்கவும்) அதில் குடுமியை எடுத்து விட்டு சுவாமிக்கு இருபுறமும் தேங்காயை அகல் போல் நிறுத்தி அதில் மிளகு திரியை வைத்து நெய் விட்டு தீபம் ஏற்றவும். பிறகு அவரை வணங்கில் முதலில் பாவ மன்னிப்பு கேட்கவும் எவ்வாறெனில் இறைவ நான் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளும் ஏன் பெற்றோர் பரம்பரை செய்த பாவங்களனாலும், மண் சாபம், பெண் சாபம், மனை சாபமனாலும், பறப்பன நடப்பன, ஊர்வன சாபமனாலும் தெய்வ குற்றம் புரிந்திருந்தாலும், முன் ஹென்ம வினை சாபமானாலும், பிரம்மஹத்தி சாபமனாலும் அனைத்தும் என்னை தாக்காமல் இறைவ தாங்களே என்னை காத்தருள வஐண்டும் என மனப்பூர்வமாக பய பக்தியோடு வேண்டி கொள்ளவும். எவ்வித இடையூறும் இல்லாமல் தாங்களே காவல் தெய்வமாக என்னை காத்தருள வேண்டும். ஏன் பாவங்களையும் தவறுகளையும் நீக்கி காத்தருள வேண்டும் என வணங்கி கீழ்காணும் மூல மந்திரத்தை 108 தடவி கூறவும்.
பிறகு ஆலயத்தில் அணைத்து தெய்வங்களையும் நவ கிரக தேவர்களையும் நிதானமாக மனபூர்வமாக வழிபட்டு வரவும். ஒவ்வொரு இடத்திலும் தீபம் ஏற்ற சிரமமாக நினைக்கலாம் எனவே வாசனையான ஊதுவத்தி ஏற்றி கையில் வைத்து கொண்டு ஒவ்வொரு தெய்வங்களிடம் சென்று ஆராதனை காண்பித்து வணங்கி கொள்ளவும். (இறுதியாக ஊதுவத்தியை ஆலயத்திலோ பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்து விட்டு வரவும்) பிறகு இறுதியாகவும் கால பைரவ சுவமைடம் வந்து இறைவ தங்கள் கருணையால் அனைத்து தெய்வங்களின் அருளாசியும் பெற்றேன். அதையும் தாங்களே என்னன்னாலும் நீங்கமளிருக்க அருள் கூர்ந்து காத்தருள வேண்டும் என வணங்கி சிறிது நேரம் அமர்ந்து மனதை ஆசுவாசபடுத்தி பின்பு வீடு திரும்பவும்.
இந்த காவல் தெய்வ பூஜையை ஒரு தடவை செய்தாலும் போதும். விருப்பபட்டால் முன்பு கூறியபடி சனிக்கிழமை அல்லது அஷ்டமி திதியில் வழிபடலாம். ஒரு தடவை பூஜை செய்தாலும் மனப்பூர்வமாக பூஜிக்க வேண்டும்.
அடுத்து
இவ்விடம் ஒரு தகவலை அறியவும். குரு பூஜை, பூமி பூஜை, உடற்கட்டு பூஜை, காவல் பூஜை என வரிசையாக செய்தீர்கள். அதை ஏன் செய்ய வேண்டும் என்ற முக்கிய காரணத்தையும் மேற்கண்ட பாதுகாப்பு பூஜைகள் செய்யததே முக்கிய காரணம். மற்றவர் வினையை போக்க எத்தனிக்கிறோம் என்றால் மேற்கண்ட தெய்வங்களின் உதவி கண்டிப்பாக வேண்டும். எனவே மனம் சலிக்காமல் மனம் லயித்து பூஜைகளை வரிசையாக செய்து அடுத்த பூஜைக்கு வாருங்கள்.
நமக்கொரு பாதுகாப்பு ஏற்படுத்தி கொண்டே மற்றவர் பாதுகாப்பிற்கு செல்ல வேண்டும். அதுவே புத்திசாலிதனம். ஆன்மிகத்தில் பொறுமையும் கட்டுப்படும் மிக முக்கியம் அதுவே நம் மூலதனமாகும்.















காவல் தெய்வ பூஜைக்கு அடுத்த நாள் இந்த பூஜையை செய்யவும்
ஜப மாலை சுத்தம்- வாக்கு தேவதை பூஜை
ஸ்படிக ஜப மாலை ஏற்கனவே சுத்தபடுத்தி எண்ணிக்கையில் அனுப்பியுள்ளேன் எனினும் தங்கள் மன திருப்திக்கு முறையாக சுத்த படுத்தி பின்பு பயன்படுத்தவும்.




அடுத்து ஜப மாலை சுத்தம்  செய்து வாக்கு தேவதையை கொண்டு மந்திர உரு முதலில் செய்ய வேண்டும்.
விளக்கமாக அறியவும்
ஜபமாலை சுத்தம் செய்ய வேண்டும். இந்த ஜபமாலையை மூல மந்திரங்களுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். பொதுவாக உருவேற்றக்கூடிய அணைத்து மந்திரங்களும் பயன்படுத்தலாம். பாதகமில்லை. பசும்பால் அதில் சிறுது உப்பு, சிறிது மஞ்சள் தூள் போட்டு கலந்து அதில் ஜப மாலையை சிறிது நேரம் வைத்து எடுத்து விட வேண்டும். (மந்திர உரு ஏற்ற பலவகையான மாலைகளை பயன்படுத்தினாலும் இக்காலத்தில் ஸ்படிக மாலையே அனைத்திலும் சிறந்தது. பிறகு சுத்த தண்ணீரில் கழுவி பூஜை அறையில் தயாராக வைத்து கணபதி பூஜை, செய்து பிறகு ஜப மாலையை வலது கை ஆகாய விரல் என்னும் நடு விரலில் மத்திய அன்குலாச்த்தியில் வைத்து அதன் உச்சியை கட்டை விரலால் தொட்டு
ஓம் கம் கணபதயே நம: என மூன்று முறை கூறி
ஓம் குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவ மகெஸ்வரஹ குரு சாட்சாத்
பரப் பிரம்மை தஸ்மை ஸ்ரீ குருவே நம:
என்று ஒரு முறை கூறி, பின்பு கட்டை விரலை எடுக்காமலே வெள்ளை தாமரையில் வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ மஹா சரஸ்வதியை நினைத்து மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கல்விக்கும், ஞானத்திலும், ஜப மாலைக்கும், வாக்கு பலித்ததிற்கும், மந்திரங்களை பிழையில்லாமல் கூற அருளும் இவரே கொடுப்பார். எல்ல கல்விக்கும் அதிபதி இவரே. நீங்கள் கற்க இருப்பது தவக்களை இந்த கலை பிழையில்லாமல் கற்கவும், பிழையே செய்தாலும் திருத்தி தரவும். இவர்களே துணை புரிய வேண்டும். எனவே இந்த மகத்துவத்தை உணாந்து முறை உரு ஏற்றவும். ஜப மாலையை ஒவ்வொரு முறை மந்திரம் கூறி உட்பக்கமாக தள்ளவும். ஜபமாலையில் ஆள்காட்டி விரல், சுண்டு விரல் நுனி தொடக்கூடாது. கவனம்
அவசர அலைச்சல் உலகில் உஷ்ணத்தோடு வாழ்கிறோம். அன்னை மஹா சரஸ்வதி தாயை ஸ்படிக மாலையால் முதலில் மந்திர உரு செய்தால் சாந்தம். சீதோஷ்ண சம நிலை உடலில் உண்டாகும். எல்லா உடலுக்கும் ஸ்படிக ஏற்கும்.

No comments:

Post a Comment