29 August 2017

எழுத்துகளின் சக்தி

எழுத்துகளின் சக்தி

எழுத்துகளின் சக்தி

          
அநேக மந்த்ரங்களில் அம் ,ஆம் ,இம் ,ஈம் என்றுவரும் .இந்த ஒவ்வொரு எழுத்திற்கும் சக்தி உண்டு .
"ர"  என்ற எழுத்து அக்னி பீஜம் "ரம் " ர அழைப்பாகவும் பயன்படும் .
 "ய " என்பது  வாயு பீஜம் எங்கும் நிறைத்துள்ளது .நமசிவய , நாராயன .என்பதை காண்க .
இந்த சப்தங்களின் வலிமை கொண்டுதான் நியுமரலாஜி உருவானது .
சொல்லுக்கும் கொள்ளும் தன்மை உண்டு என்பதற்கு ஆதர நூல் "நந்திகலம்பகம் ".

       ஒருவனுக்கு பட்சி அரசாக இருந்து சூரிய நாடியும் நடக்கும்போது அவன் சொல்வது பலித்துவிடும் . இதற்கு நல்லவன் கெட்டவன் பேதம் கிடையது .
ஆகவேதான் குடியிருக்கும் வீட்டிலிருந்து அவச்சொற்களை பேசக்கூடாது என பெரியோர்கள் சொல்வர் .ஆகவே கோபத்தில் குழந்தைகளை திட் டுவதும் வேண்டாம் .

" மந்த்ரங்கள் சப்தங்களின் வடிவாக உள்ளன என என் குருநாதர் கூறுவார் ."
       ஆதியில் மந்திரங்களை வாய்மொழியாகத்தான் கூறுவார்கள் .அதை சீடர்கள் உச்சரிப்பை அறிந்து மனனம் செய்வார்கள் .
"க " என்னும் எழுத்து கஷ்டங்களை நீக்கும்
" ங" என்னும் எழுத்து சகல விஷங்களையும்  நீக்கும்.
" ச " என்னும் எழுத்து வசியம் தரும்
" ண  " என்னும் எழுத்து சித்திகளை தரும்
" ப " என்னும் எழுத்து பேய் பிசாசுகளை பந்தனம் பண்ணும்

இதைப்போல் எல்லா எழுத்துகளுக்கும் சக்தி உண்டு

நாவடக்க மந்த்ரம்

நாவடக்க மந்த்ரம்

நாவடக்க மந்த்ரம்

எதிரிகளின் நாவை அடக்க மந்த்ரம்

நம் மேல் கோபப்பட்டு பேசுபவர்களின் நவை அடக்கலாம் ,மேல் அதிகாரிகள் ,கணவன் , மனைவி ,பேசும் பேச்சுக்களை அடக்கும் மந்த்ரம்

" நாவு அடங்க நமசிவாயம் நயனம் அடங்க நமசிவாயம்
----------------------------------------------------------------------
---------------------------------------------------------------------

என்னோடு எதிர்த்தவர்கள் பலம் செத்து பலம் மாண்டு நாவு விழுந்து நாவு எழாமல் இருக்க சிவ "

இதற்குரிய எந்திரம் ,மந்திரத்தை வைத்துக்கொண்டால் எதிர்த்து பேசுபவர்களின் நாவு அடங்கும் .

இது அனுபவத்தில் செய்துபார்த்து நன்மை அடைத்தது

ஜாதகம் / ஜோதிடம்

ஜாதகம் / ஜோதிடம்

ஜாதகம் / ஜோதிடம் (தொடர்ச்சி)

ஜாதகம் உண்மையா ? பொய்யா ?

 சரியாக கணிக்கப்பட்ட ஜாதகத்தை வைத்து தெய்வ அருள் உள்ள ஒரு ஜோதிடர் 90 % சரியாகக கூறிவிடுவார் கூறிவிடுவார். பஞ்சாங்கத்தில்  வாக்கியம் , திருக்கணிதம் என இருக்கிறது, இரண்டிற்கும் கிரகப் பெயர்ச்சியில் வித்தியாசம் உள்ளது .ஒரு பெண்ணின் ஜாதகத்தில் வாக்கிய பஞ்சங்கப்படி ஒரு ஜோதிடர் புனர்பூச நட்சத்திரம்
மிதுன ராசி என குறித்திருக்கின்றார் . மற்றொருவர் கடக ராசி என    குறித்திருக்கின்றார். திருக்கணிதபடி பூசம் நட்சத்திரம் என குறித்திருக்கின்றார் . இப்படி ஜாதகம் இருந்தால் எப்படி பலன் சொல்வது ?. நடந்த சம்பவம் ஒன்றை கூறுகின்றேன்.

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

                                ஒரு பெரும் செல்வந்தரின் ஒரே மகனுக்கு திருமணம் முடிப்பதற்காக5 ஜோதிடரிடம் பொருத்தம் பார்த்ததில் ஐவரும் வெகு பிரமாதம்  . 
என்று கூறிவிட்டனர். திருமணத்திற்கு நாளும்  குறித்து  திருமணம் நடக்க ஒருவாரம் இருக்கும் போது , மாப்பிள்ளை விபத்தில் இறந்துவிட்டார். இது ஏன் நடந்தது ?
                                         ராமாயணத்தில் ராமருக்கு  பட்டாபிஷேகம் நடக்க நாள் குறித்தவர் வசிஷ்ட மகரிஷி . அவர் குறித்த நேரத்தில் பட்டாபிஷேகம் நடக்கவில்லை. ராமன்  காட்டிற்கு சென்றார் . இது ஏன் நடந்தது ?

                                        இயேசு அருள் நிறைந்தவர் , தேவகுமாரன் , மகாவல்லமை   உடைவர் , இறந்தவரை உயிர்பிக்க செய்தார் , குஷ்டரோகியை குணமாக்கினார் .பிற்காலத்தில்         நடக்கப்போவதை  உணர்ந்தவர் . அவர் கூறுகிறார் " எவனுடைய பாதத்தை
கழுவி நான் முத்தமிடுகிறேனோ அவன் என்னைக்  காட்டிக்கொடுப்பான் . பேதுரு என்ற சீடனை நோக்கி " பேதுரு கோழி கூவுவதற்கு முன் என்னை நீ 3 முறை மறுதலிப்பாய் ; நான் இறந்தவுடன் என் ஆடைகளை பங்கு போட்டுக்கொள்வார்கள் " என கூறினார் .அப்படியே நடந்தது ,பிதாவின் கட்டளை எதுவோ அது நடக்கட்டும் என  இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார் .

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )
                                எத்தனையோ மகான்களுக்கு துன்பன்களும் துயரங்களும் வந்தன, அதை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டனர் . ஆனால் சாதாரண மனிதனால் அப்படி இருக்க முடியது . நோய் வந்தால் மருத்துவம் பார்ப்பதும் ,கஷ்டங்கள் வந்தால்  பரிகாரங்கள் தேடுவதும் மனித மனம் .அதை தவறு என்று சொல்வதற்கில்லை .
எதைசெய்தாலும் ,தெய்வத்தின் அருளை வேண்டுங்கள் தெய்வத்திடம் சரணாகதி 
அடையுங்கள் அவன் காப்பாற்றுவான் ,அப்படி இல்லாவிட்டால் இறைவன் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் 
பரிகாரம் என்ற பெயரில் போலிகளிடம் ஏமாறவேண்டம்.ஆனால் பரிகாரம் பொய் இல்லை
அதைப்பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம் .

                            ஒரு தீக்குச்சியில் எரியும் நெருப்பை அணைத்துவிடலாம் .ஒரு வாளி தண்ணீரில்
அணையும் நெருப்பும் உண்டு ,தீயணைப்பு வண்டி வந்து அணைக்க வேண்டிய நெருப்பும் உண்டு .
அணைக்க முடியாத காட்டுத்தீயும் உண்டு .கனமாக மழை பெய்தால் காட்டுத்தீயும்
அணைத்துவிடும் . அதுபோலதான்   கடவுளின் அருள். நல்ல குருவின் உதவியுன் கடவுளை தேடுங்கள் ,அவரிடம் சரணடையுங்கள்
கடவுள் உங்களை கப்பார் .நீங்கள் எந்த மதத்தவராயினும் சரி ,அந்த மதத்தின் மீதும்
அந்த கடவுளின்  மீதும் நம்பிக்கை வையுங்கள் ,"இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று
சொல்லுவதில்லை

மந்த்ரம் என்றால் என்ன ?

மந்த்ரம் என்றால் என்ன ?

"நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழி தானே மந்த்ரம் என்ப " என தொல்காப்பியம் கூறும். வையத்துள் வாழ்வாங்கு வாழும் உத்தம மனிதர்களின் வாயில் இருந்து வரும் சொல் எல்லாமே மந்திரங்கள் தான்!

மந்த்ரம் யாருக்கு பலிக்கும் ?

மேஷம்,கடகம் ,சிம்மம் ,கன்னி ,துலாம் ,ஆகிய லக்கினம் அல்லது                ராசிகாரர்கள்.  லக்கினாதிபதி  ஆட்சி ,உச்சம் பெற்று கேந்திரம் ,திரிகோணம் பெறவேண்டும்.

மந்த்ரம் யாருக்கு பலிக்கும் ?

மந்த்ரம் யாருக்கு பலிக்கும் ?

லக்னாதிபதி, 4ஆம் வீட்டதிபதி, 9ஆம் வீட்டதிபதி,ஆகிய மூவரும் 3ஆம் இடத்தில் அமரவேண்டும். 4ஆம் இடத்தோன்   9ம் இடத்தில் அமர்த்து சுபர் பார்வை பெறல்.  லக்னாதிபதியும் ,7ஆம் இடத்தோனும் ஒரே இராசியில் இருக்கவேண்டும்.9ஆம்  வீட்டிற்குரியவர் 1,4,7,10 ல் ,நட்பு ,ஆட்சி .உச்சம் பெறுதல், 4,9 ஆம் அதிபர்களை சந்திரன் பார்த்தல் ,10 ஆம் அதிபதி ,லக்னாதிபதி இவர்களை ராகு பார்த்தல் .இவைகளில் ஏதாவது ஒரு அமைப்பு உள்ளவர்களுக்கே மந்த்ரம் பலிக்கும் " என ஜோதிட சிந்தாமணி என்னும் நூல் கூறுகிறது.