14 December 2016

வீட்டில் இறைவனை வழிபடும் முறைகளில் பஞ்சோபசாரம் எளிமையானது.



வீட்டில் இறைவனை வழிபடும் முறைகளில் பஞ்சோபசாரம் எளிமையானது.

றைவனின் திருவுருவ படங்களுக்குச் சந்தனம் இடுவது
இறைவனின் திருப்பெயரைச் சொல்லி, மலர் தூவி அர்ச்சிப்பது.
சாம்பிராணி, பத்தி தூபம் இடுவது.
நெய்தீபம், சூடம் தீபாராதனை செய்வது.
நைவேத்யமாக பிரசாதம் படைப்பது.

இந்த ஐந்து முறைகளில் இறைவனை வழிபடுவதே பஞ்சோபசாரம்.இந்த எளிய முறைகளில் பயபக்தியோடு இறைவனை வணங்கி, நியாயமான வழியில் வாழ்பவர்கள் நிறைந்த செல்வமும், தீர்க்காயுளும், வாழ்வுக்குப் பின் பிறப்பற்ற நிலையும் அடைவர்.

எவன் பூஜையைச் செய்துவிட்டு, நிறைவாக ப்ரதக்ஷிணம் செய்யவில்லையோ அவனுக்கு அந்தப் பூஜையின் பலன் கிடைக்காது; அவன் விளம்பரத்திற்காகவே பூஜை செய்தவனாகிறான். எனவே பூஜை நிறைவாக பக்தியுடன் அவசியம் ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். விநாயகருக்கு – ஒரு ப்ரதக்ஷிணம், சூர்யனுக்கு – இரண்டு ப்ரதக்ஷிணங்கள், சிவனுக்கு – மூன்று ப்ரதக்ஷிணங்கள், அம்பாளுக்கும், விஷ்ணுவுக்கும் – நான்கு ப்ரதக்ஷிணங்கள், அரசமரத்திற்கு – ஏழு ப்ரதக்ஷிணங்கள். உச்சி காலத்துக்குப் பிறகு அரசமரத்தை ப்ரதக்ஷிணம் செய்வது தவறு.

🙏🏻🙏🏻

No comments:

Post a Comment