14 December 2016

தீராத நோய்களை தீர்க்கும்...ஸ்ரீ தன்வந்திரி பகவான் மஹா மந்திரம்



தீராத நோய்களை தீர்க்கும்...ஸ்ரீ தன்வந்திரி பகவான் மஹா மந்திரம்

மருத்துவக் கடவுளும், ஆரோக்கியம் அருளும் அமிர்த கலசத்தைத் தமது கரங்களில் தாங்கியிருக்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் மந்திரம்

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாஸனாய த்ரைலோக்ய
நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ’.

இதனை ஜபம் செய்ய துளசி மணி மாலையைப் பயன்படுத்த வேண்டும்
தினமும் 48 முறைகள், பசும்பாலும், துளசி தீர்த்தமும் நைவேத்தியமாக வைத்து, உச்சாடனம் செய்து அவற்றை அருந்தி வரவேண்டும். இந்த முறையால் இழந்த ஆரோக்கியம் மீண்டும் திரும்பும். இதை நமது பிரச்சினைக்குத் தக்கவாறு பயன்படுத்திப் பலனடையலாம்

(அல்லது)

ஒரு வெள்ளி டம்ளரில் சுத்த ஜலம் சிறிது எடுத்துக் கொண்டு, வடக்கு அல்லது கிழக்கு முகமாக ஒரு ஆசனத்தில் அமர வேண்டும். சிறு தர்ப்பைக் குச்சியை வலது கை கட்டை விரலாலும் நடு விரலாலும் எடுத்து அதை அந்த ஜலத்தில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த நிலையிலேயே தினமும் 24 அல்லது 48 முறை மந்திர உச்சாடணம் செய்வதன் மூலமாக அந்த ஜலம் மந்திர சக்தியைப் பெறுகிறது. பிறகு அந்த நீரை அருந்தினால், நமது உடலின் எதிர்ப்புத் திறன் படிப்படியாக உயர்ந்து நிச்சயமாக ஆரோக்கியம் மேம்படும். தீராத நோய்களை தீர்க்கும்.இம்முறையை நாம் மற்றவர்களுக்காகவும் செய்து நல்ல விளைவுகளைப் பெற்று மகிழலாம்.


No comments:

Post a Comment