16 December 2016

சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் பெறக்கூடிய மேன்மையை பற்றிச் சூத முனிவர் நைமிசாரணிய முனிவர்களுக்கு கூறலாணார்.

சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் பெறக்கூடிய மேன்மையை பற்றிச் சூத முனிவர் நைமிசாரணிய முனிவர்களுக்கு கூறலாணார்.
(1) சிவாலயம் எழுப்புபவன் தினமும் பெருமானை வழிபாடு செய்தால் உண்டாகும் சிறப்பை அகைகிறான்.
(2) அவன் குலத்தில் வாழ்ந்த நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வர்.
(3) சிவாலயம் எழுப்ப வேண்டும் என்று மனதால் நினைத்தாலே ஏழு பிறவிகளில் செய்த பாலங்களில் இருந்து விடுபடுவான்.
(4) ஆலயம் கட்டி முடித்தால் அதில் உள்ள கற்க்கள் ஒவ்வொன்றிர்க்கும் ஒவ்வோரு ஆயிரம் ஆண்டுகள் சிவ லோகத்தில் இருக்கும் வேறு பெறுவர்.
(5) சிவலிங்கத்தை உருவாக்குபவர் சிவலோகத்தில் அறுபதினாயிரம் ஆண்டுகள் இருப்பார். அவனது தோன்றல்களும் சிவலோகத்தை அடையும் புன்னியம் பெருவர்.
(6) சிவாலயத் தொண்டுகளில் ஈடுபடு வோரை எமன் நெருங்கக் கூடா தென்று சிவ பெருமான் எச்சரித்து உள்ளார். அவர்கள் தலைமுறையினரைக் கூட எமதூதர்கள் நெருங்க மாட்டார்கள்.
(7) சிவாலயத்தில் உரிய பொருள்களால் அபிஷேகம் செய்து வழி படுபவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனைப் பெறுவான்.
(8) கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் சிவ லிங்கத்துக்கு சிவ லிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்தால் சர்வ பாவங்களும் விலகும்.
(9) பெளர்ணமி, அம்மாவாசைகளிலும் சிவ லிங்கத்திற்க்கு அபிஷேக ,ஆராதனைகள் செய்வோர்க்கும் அத்தகைய பலனே கிடைக்கும்.
(10) பிரதோஷ காலங்களில் நெய்யபிஷேகம் செய்தால் அது தெரிந்தோ,தெரியாமலோ செய்த பாவங்களை நீர்மூலமாக்கும்.
(11) பசும்பாலால் அபிஷேகம் செய்தால் சிவலோகமடைந்து என்றும் மகிழ்சியாக இருப்பார்.
(12) நவக்கிரகங்களும் அவனுக்கு அருள் புரியும்.
(13) சிவ பெருமானை மனதிற்குகந்த மலர்களால் அர்சுனை செய்யலாம். உலர்ந்த வில்வமும் அர்ச்சனைக்கு உரியதே. (ஆனால்) தாழம் பூ அர்சுனைக்கு ஆகாது.
(14) மலர்களுக்குப் பதில் பிருங்கராச பத்திரம்,அருகம்புல் போன்றவற்றால் அர்சுனை செய்யலாம்.
(15) புண்ணியக் காலங்களில் சிவ பெருமானை வழிபடுவோர் தினசரி வழி பாட்டிலூம் ஆயிரம் பங்கு அதிகமாக பலன் பெருவர்.
என் அன்பு சகோதர சகோதரிகளே சிவனின் அருள் பெற்று அனைத்து நண்பர்களும் நலமுடன் வாழ்க வாழ்க வளமுடன்.


15 December 2016

மாபெரும் சக்தி உடைய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு

மாபெரும் சக்தி உடைய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், கொல்லன் கோவை என வேறு பல பெயர்களும் உண்டு. இருப்பினும்

"ஆகாச கருடன் கிழங்கு" என்ற பெயர்தான் முன்பு அனைவருக்கும் தெரிந்தபெயராக இருந்து வந்துள்ளது.

இம்மூலிகை காடுகள்,வனம் , மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச்சையாக வளரும் கொடி இனமாகும்.சுமார் 40 - 50 வருடங்களுக்கு முன்பு குருவிக்காரர்கள் காடு, மலைகளுக்கு சென்று இக்கிழங்கை சேகரித்துகொண்டு வந்து நாடு ,நகரங்களில் கூவி கூவி விற்பார்கள்.

நிலத்தில் பூமியின்அடியில் விளையும் கிழங்குவகையான இம் மூலிகைகிழங்கிற்கு ஏன் ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம்முன்னோர்கள் சூட்டினார்கள்.?

பொதுவாக பூமியில் ஊர்ந்துசெல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்துசெல்வதை பார்த்தால் ஓடி ஒளிந்துகொள்ளும். அதே போன்று இக்கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தைவிட்டு உடனே அகன்றுவிடும், ஓடிவிடும்.

இம் மூலிகை கிழங்கை கயிற்றில்கட்டி வீட்டில் தொங்கவிட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப்போலவே தோற்றம் தரும்.

உண்மையில் ஆகாசகருடன் என்ற இம் மூலிகைக்கு மாபெரும் சக்தி உண்டு. "சாகா மூலி" என பெயரும் இதற்குண்டு. ஆம் இம் மூலிகை கிழங்கு சாகாது . இக்கிழங்கை ஒரு கயிற்றில்கட்டி தொங்கவிட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர்வாழும் சக்திகொண்டது.முளைவிட்டு கொடியாக படர்ந்துவிடும்.

இம் மூலிகைகிழங்கிற்கு சில அமானுஷ்யசக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி,தோஷங்களை போக்கும்தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்ற மாந்திரீக எதிர்வினைகளை ஈர்த்து தன்னைத்தானே அழித்து கொள்ளும் தன்மைகொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீயவிளைவுகளில் இருந்து காக்கப்படுவர்.

ஆகாச கருடன் கிழங்கின் மருத்துவ பயன் :-

இதன் முக்கியகுணம் விஷத்தை முறிக்கும் ஆற்றல்கொண்டது. அத்துடன் இளைத்த உடலைத்தேற்றவும், உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும்குணம் கொண்டது. ஆனால் சித்தமருத்துவரின் மேற்பார்வையில் உண்ணுதல் வேண்டும். இது அதிக கசப்புசுவை கொண்டது.

சிறப்பாக பாம்புவிஷங்கள், தேள், பூரான் விஷங்கள் எளிதில்முறியும். பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாசகருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை காயளவு தின்னகொடுக்க 2தடவை வாந்தியும், மலம்கழியும் உடனே விஷமும் முறிந்துவிடும்.

14 December 2016

விபத்தைத் தவிர்க்க

விபத்தைத் தவிர்க்க
நமஸ்தே அஸ்து பகவன்
விச்வேஸ்வராய மஹாதேவாய
த்ரயம்பகாய - த்ரிபுராந்தகாய
த்ரிகாக்னி காலாய

காலாக்னி ருத்ராய நீலகண்டாய
ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய
ஸதாசிவாய ஸ்ரீமன்
மஹாதேவாய நம
ஜாதக ரீதியாக விபத்து, கண்டம் முதலிய சூழல்களில், இந்த மந்திரத்தை எப்போதும் சொல்லிவருவது, மிகப்பெரும் பலன் தரும். மருத்துவமனையில் ஆபத்தான தருணங்களில் அனமதிக்கப்பட்டவர்களுக்காக அருகில் அமர்ந்து மானசீகமாக 108 முறை ஜபித்தால், நிச்சயம் ஆரோக்கியம் மேம்படும்...

சபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்!

சபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்!
முதல் படி

✻ பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். இதுவே முதல்படி.

இரண்டாம் படி

✻ பரமாத்மாவே என் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம்.

மூன்றாம் படி

✻ கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்.

நான்காம் படி

✻ பாவ - புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.

ஐந்தாம் படி

✻ நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

ஆறாம் படி

✻ கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக் கூடாது. இதுவே ஆறாவது படி.

ஏழாம் படி

✻ இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம் தான். எல்லாமே இறைவன் தான் என உணர்வது பிரம்ம ஞானம்.

எட்டாம் படி

✻ எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.

ஒன்பதாம் படி

✻ கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. சமூக தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது தான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.

பத்தாம் படி

✻ அழகு, அறிவு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது பத்தாம் படி.

பதினொன்றாம் படி

✻ பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.

பன்னிரெண்டாம் படி

✻ இன்பம் - துன்பம், விருப்பு - வெறுப்பு ஏழை - பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.

பதிமூன்றாம் படி

✻ எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து இறைவனே அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல் பதிமூன்றாம் படி.

பதினான்காம் படி

✻ யோகம், பிறப்பு, இறப்பு மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.

பதினைந்தாம் படி

✻ தீய குணங்களை ஒழித்து நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

பதினாறாம் படி

✻ இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது பதினாறாம் படி.

பதினேழாம் படி

✻ 'சர்வம் பிரம்மம்" என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது பதினேழாம் படி.

பதினெட்டாம் படி

✻ யாரிடமும் எந்த உயிர்களிடத்தும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் அடைக்கலம் அடைந்து, அவன் அருள்புரிவான் என்று அவனையே சரணடைவது பதினெட்டாம் படி

ஆன்மா, உடல் இரண்டின்* *விசித்திர விளையாட்டு*

*ஆன்மா, உடல் இரண்டின்*
         *விசித்திர விளையாட்டு*

ஆன்மா ஆன்ம உலகத்திலிருந்து இறங்கி பூமியில் ஓர் உடலை எடுத்தால் அதன் பெயர்...

*பிறப்பு*

ஆன்மா ஓர் உடலை விட்டு விட்டு மீண்டும் இன்னொரு உடலை தேர்ந்தெடுத்தால் அதன் பெயர்...

*மறுபிறப்பு*

ஆன்மா தான் வசிக்கும் உடல் நோய் காரணமாக வாழும் தகுதியை இழந்து அதை விட்டு பயத்துடன் பிரிய வேண்டிய கட்டாயம் நேர்ந்தால் அதன் பெயர்...

*மரணம்*

ஆன்மா தான் வசிக்கும் உடலானது அனைத்து தகுதியினை பெற்றிருந்தாலும் எதிர்பாரதவிதமாக ஏற்படும் அசம்பாவிதம் காரணமாக உடலை இழந்தால் அதன் பெயர்...

*அகால மரணம்*

ஆன்மா தான் வசிக்கும் உடலானது அனைத்து தகுதியினை பெற்றிருந்தாலும் தன் உடலை தானே அழித்து அதனின்று வெளியேறினால் அதன் பெயர்...

*தற்கொலை*

ஆன்மா தான் இருக்கும் உடலில் இருந்தபடியே ஆன்ம உலகிற்கு செல்வதற்காக  தன்னை தான் ஓர் இடத்தில் முற்றிலுமாக முடக்கிக்கொள்வதின் பெயர்...

*ஜீவசமாதி*

ஆன்மா தனக்கு கிடைத்த உடலை பயன்படுத்தாமல், எந்த செயலையும் செய்யாமல்  மீண்டும் தன் ஆன்ம உலகத்திற்கு போக வேண்டி அடம்பிடிப்பது...

*சந்நியாசம்*

ஆன்மா தனக்கு கிடைத்த உடல் மீது எந்த ஒரு அபிமானமும் இல்லாமல் அதாவது காமம் கோபம் ஆசை பற்று அகங்காரம்  ஆகிய அவகுணங்களை பிரயோகம் செய்யாமல் அனைத்து காரிய கடமைகளை அனைவரின் நன்மை பொருட்டு செய்தால் அதன் பெயர்...

*வைராக்கியம்*

ஆன்மா தான் வசித்த உடலை விடும் போது அடுத்து எந்த உடலை எடுக்கப்போகிறோம் என்பதை அறிந்து மரண பயமின்றி ஒரு சட்டையை மாற்றுவது போல் அதனை மிக மகிழ்ச்சியாக செய்தால் அதன் பெயர்...

*ஜீவன்முக்தி*

---------------------------------------------------------

பிறப்பு, இறப்பானது ஒவ்வொரு யுகத்திற்கும் மாறுபடும்.

சத்தியயுகம், திரேதாயுகத்தில் *ஜீவன்முக்தி*.

துவாபர யுகத்தில் *ஜீவசமாதி, சந்நியாசம், மரணம்*.

கலியுகத்தில் *மரணம், அகால மரணம், தற்கொலை*.

சங்கம யுகத்தில் *வைராக்கியம்*.

*இதுவே ஞானம், பத்தி மற்றும் வைராக்கிய சுழற்சி*

வீட்டில் இறைவனை வழிபடும் முறைகளில் பஞ்சோபசாரம் எளிமையானது.



வீட்டில் இறைவனை வழிபடும் முறைகளில் பஞ்சோபசாரம் எளிமையானது.

றைவனின் திருவுருவ படங்களுக்குச் சந்தனம் இடுவது
இறைவனின் திருப்பெயரைச் சொல்லி, மலர் தூவி அர்ச்சிப்பது.
சாம்பிராணி, பத்தி தூபம் இடுவது.
நெய்தீபம், சூடம் தீபாராதனை செய்வது.
நைவேத்யமாக பிரசாதம் படைப்பது.

இந்த ஐந்து முறைகளில் இறைவனை வழிபடுவதே பஞ்சோபசாரம்.இந்த எளிய முறைகளில் பயபக்தியோடு இறைவனை வணங்கி, நியாயமான வழியில் வாழ்பவர்கள் நிறைந்த செல்வமும், தீர்க்காயுளும், வாழ்வுக்குப் பின் பிறப்பற்ற நிலையும் அடைவர்.

எவன் பூஜையைச் செய்துவிட்டு, நிறைவாக ப்ரதக்ஷிணம் செய்யவில்லையோ அவனுக்கு அந்தப் பூஜையின் பலன் கிடைக்காது; அவன் விளம்பரத்திற்காகவே பூஜை செய்தவனாகிறான். எனவே பூஜை நிறைவாக பக்தியுடன் அவசியம் ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். விநாயகருக்கு – ஒரு ப்ரதக்ஷிணம், சூர்யனுக்கு – இரண்டு ப்ரதக்ஷிணங்கள், சிவனுக்கு – மூன்று ப்ரதக்ஷிணங்கள், அம்பாளுக்கும், விஷ்ணுவுக்கும் – நான்கு ப்ரதக்ஷிணங்கள், அரசமரத்திற்கு – ஏழு ப்ரதக்ஷிணங்கள். உச்சி காலத்துக்குப் பிறகு அரசமரத்தை ப்ரதக்ஷிணம் செய்வது தவறு.

🙏🏻🙏🏻

தீராத நோய்களை தீர்க்கும்...ஸ்ரீ தன்வந்திரி பகவான் மஹா மந்திரம்



தீராத நோய்களை தீர்க்கும்...ஸ்ரீ தன்வந்திரி பகவான் மஹா மந்திரம்

மருத்துவக் கடவுளும், ஆரோக்கியம் அருளும் அமிர்த கலசத்தைத் தமது கரங்களில் தாங்கியிருக்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் மந்திரம்

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாஸனாய த்ரைலோக்ய
நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ’.

இதனை ஜபம் செய்ய துளசி மணி மாலையைப் பயன்படுத்த வேண்டும்
தினமும் 48 முறைகள், பசும்பாலும், துளசி தீர்த்தமும் நைவேத்தியமாக வைத்து, உச்சாடனம் செய்து அவற்றை அருந்தி வரவேண்டும். இந்த முறையால் இழந்த ஆரோக்கியம் மீண்டும் திரும்பும். இதை நமது பிரச்சினைக்குத் தக்கவாறு பயன்படுத்திப் பலனடையலாம்

(அல்லது)

ஒரு வெள்ளி டம்ளரில் சுத்த ஜலம் சிறிது எடுத்துக் கொண்டு, வடக்கு அல்லது கிழக்கு முகமாக ஒரு ஆசனத்தில் அமர வேண்டும். சிறு தர்ப்பைக் குச்சியை வலது கை கட்டை விரலாலும் நடு விரலாலும் எடுத்து அதை அந்த ஜலத்தில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த நிலையிலேயே தினமும் 24 அல்லது 48 முறை மந்திர உச்சாடணம் செய்வதன் மூலமாக அந்த ஜலம் மந்திர சக்தியைப் பெறுகிறது. பிறகு அந்த நீரை அருந்தினால், நமது உடலின் எதிர்ப்புத் திறன் படிப்படியாக உயர்ந்து நிச்சயமாக ஆரோக்கியம் மேம்படும். தீராத நோய்களை தீர்க்கும்.இம்முறையை நாம் மற்றவர்களுக்காகவும் செய்து நல்ல விளைவுகளைப் பெற்று மகிழலாம்.


காளி மந்திரம் - மூல மந்திரம்



காளி மந்திரம் - மூல மந்திரம்

ஸ்ரீ காளி தியானம்

வாமோர்த்வேசின்ன முண்டம் வரமபிதததோ தக்ஷிணோர்த்மே திக்ஷ்ணம்
கட்கம் சாதேஹ்ய பீதிம் கரகமலதலே பிப்ரதீம் மேக காந்திம்

திக்வஸ்த்ராம் ஊர்த்துவ கேசீம் சவகரக்ருத் காஞ்சிகலாபாம் சவாஸ்ருக்
விஸ்பூர்யத் வ்யாத்தவக்த்ராம் சரிதஜன பலதாம் காளிகாம் தாம் பஜேஹம் பொருள்: இடது மேல் கரத்தில் கூரிய கத்தியும், அதன் கீழ்க்கரத்தில் வெட்டப்பட்ட தலையும், வலது மேல்கரத்தில் அபயமும், கீழ்க்கரத்தில் வரமும் உடையவள். கருமையான நிறத்தினள். ஆடையற்றவள். மேல்நோக்கிய கேசமுடையவள். சவங்களின் கரங்களை ஒட்டியாணமாக அணிந்திருப்பவள். ரத்தம் சொட்டும் சிவந்த, தொங்கும் நாக்கினை உடையவள். பக்தர்களுக்கு வேண்டியவற்றை அருளுபவளுமாகிய காளியை வணங்குகிறேன்
[14/12 15:22] ‪+91 77601 51307‬: மூல மந்திரம்

க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் தக்ஷிணே காளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா

காயத்ரீ மந்திரம்

ஓம் மஹாகாள்யை வித்மஹே
ச்மசான வாஸின்யை தீமஹி
தந்நோ கோர ப்ரசோதயாத்

ஸ்ரீ காளி அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் காள்யை நம
ஓம் கபாலின்யை நம
ஓம் காந்தாயை நம
ஓம் காமதாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் காளராத்ர்யை நம
ஓம் காளிகாயை நம
ஓம் காலபைரவ பூஜிதாயை நம
ஓம் குருகுல்லாயை நம
ஓம் காமின்யை நம

ஓம் கமனீய ஸ்வபாவின்யை நம
ஓம் குலீனாயை நம
ஓம் குலகர்த்ர்யை நம
ஓம் குலவர்த்ம ப்ரகாசின்யை நம
ஓம் கஸ்தூரி ரஸ நீலாயை நம
ஓம் காம்யாயை நம
ஓம் காம ஸ்வரூபிண்யை நம
ஓம் ககாரவர்ண நிலயாயை நம
ஓம் காமதேனவே நம
ஓம் கராளிகாயை நம

ஓம் குலகாந்தாயை நம
ஓம் கராளாஸ்யாயை நம
ஓம் காமார்த்தாயை நம
ஓம் கலாவத்யை நம
ஓம் க்ருசோதர்யை நம
ஓம் காமாக்யாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் குலஜாயை நம
ஓம் குலமான்யாயை நம
ஓம் கீர்த்திவர்தின்யை நம

ஓம் கமஹாயை நம
ஓம் குலபூஜிதாயை நம
ஓம் காமேச்வர்யை நம
ஓம் காமகாந்தாயை நம
ஓம் குஞ்ஜரேச்வர காமின்யை நம
ஓம் காமதாத்ர்யை நம
ஓம் காமஹர்த்ர்யை நம
ஓம் க்ருஷ்ணாயை நம
ஓம் கபர்தின்யை நம
ஓம் குமுதாயை நம

ஓம் கிருஷ்ண தேஹாயை நம
ஓம் காளிந்த்யை நம
ஓம் குலபூஜிதாயை நம
ஓம் காச்யப்யை நம
ஓம் க்ருஷ்ணமாத்ரே நம
ஓம் குலிசாங்க்யை நம
ஓம் கலாயை நம
ஓம் க்ரீம் ரூபாயை நம
ஓம் குலகம்யாயை நம
ஓம் கமலாயை நம

ஓம் கிருஷ்ணபூஜிதாயை நம
ஓம் க்ருசாங்க்யை நம
ஓம் கின்னர்யை நம
ஓம் கர்த்ர்யை நம
ஓம் கலகண்ட்யை நம
ஓம் கார்த்க்யை நம
ஓம் கம்புகண்ட்யை நம
ஓம் கௌலின்யை நம
ஓம் கௌமுத்யை நம
ஓம் காம ஜீவன்யை நம

ஓம் குலஸ்த்ரியை நம
ஓம் கீர்த்திதாயை நம
ஓம் க்ருத்யாயை நம
ஓம் கீர்த்தயே நம
ஓம் குலபாலிகாயை நம
ஓம் காமதேவகலாயை நம
ஓம் கல்பலதாயை நம
ஓம் காமாங்க வர்த்தின்யை நம
ஓம் குந்தாயை நம
ஓம் குமுதப்ரியாயை நம

ஓம் கதம்ப குஸுமோத்சுகாயை நம
ஓம் காதம்பின்யை போற்றி
ஓம் கமலின்யை நம
ஓம் க்ருஷ்ணாநந்த பிரதாயின்யை நம
ஓம் குமாரீ பூஜனரதாயை நம
ஓம் குமாரீ கண சோபிதாயை நம
ஓம் குமாரீ ரஞ்ஜன ரதாயை நம
ஓம் குமாரீ வ்ரத தாரிண்யை நம
ஓம் கங்காளாயை நம
ஓம் கமனீயாயை நம

ஓம் காமசாஸ்த்ர விசாரதாயை நம
ஓம் கபாலகட்வாங்க தராயை நம
ஓம் காலபைரவ ரூபிண்யை நம
ஓம் கோடர்யை நம
ஓம் கோடராக்ஷ்யை நம
ஓம் காச்யை நம
ஓம் கைலாச வாஸின்யை நம
ஓம் காத்யாயன்யை நம
ஓம் கார்யகர்யை நம
ஓம் காவ்யசாஸ்த்ர ப்ரமோதின்யை நம

ஓம் காமாகர்ஷண ரூபாயை நம
ஓம் காமபீட நிவாஸின்யை நம
ஓம் கங்கின்யை நம
ஓம் காகின்யை நம
ஓம் க்ரீடாயை நம
ஓம் குத்ஸிதாயை நம
ஓம் கலஹப்ரியாயை நம
ஓம் குண்டகோலோலோத்பவ நம
ஓம் ப்ராணாயை நம

ஓம் கௌசிக்யை நம
ஓம் கும்ரஸ்தன்யை நம
ஓம் கலாக்ஷõயை நம
ஓம் காவ்யாயை நம
ஓம் கோகநதப்ரியாயை நம
ஓம் காந்தாரவாஸின்யை நம
ஓம் காந்த்யை நம
ஓம் கடினாயை நம
ஓம் க்ருஷ்ண வல்லபாயை நம
ஓம் க்ருஷ்ண ஸாஹ்ய கர்யை நம

மயானத்தில், சவம் போல் கிடக்கும் சிவன் மேல் ஏறி நிற்பவள். கொல்கத்தாவில் உள்ள காளிகோயில் மிகவும் புகழ்பெற்றது. பொதுவாகக் காளிக்கு உரிய கோயில்கள் ஊரின் மையத்தில் இல்லாமல், சற்று தள்ளியே ஒதுக்குப்புறத்தில் இருக்கும். காளியின் கணவன் மஹாகாலன், மஹாகவி காளிதாஸன், பாரதியார், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆகியோர் காளியின் தீவிர பக்தர்களாவார்கள். காளி பரப்ப்ரம்ம ஸ்வரூபிணி ஆவாள். கைவல்ய பதவியைத் தரக்கூடியவள். காளி உபாஸனை, குண்டலினி. சக்தியை எழும்பச் செய்யும்.

தக்ஷிணகாளிகே என்றதும் காளியின் சாந்நித்யம் ஏற்பட்டுவிடும். தட்சிணாமூர்த்தி

தக்ஷிணகாளிகே என்றதும் காளியின் சாந்நித்யம் ஏற்பட்டுவிடும். தட்சிணாமூர்த்தி வடிவினரான பைரவரால் ஆராதிக்கப்பட்டதால் தக்ஷிணா. தக்ஷிணா(வலது) புருஷனையும் வாமா(இடது) ஸ்திரீயையும் குறிப்பதால் தக்ஷிணசக்தி, சிவன்; வாமசக்தி காளி. சிவனையும் மிஞ்சி பக்தர்களைக் காத்து முக்தியளிப்பவளாக போற்றப்படுகிறாள் என்கிறது காமாக்யா தந்திரம் எனும் நூல். தக்ஷிணா எனும் பதம் தெற்கு திசையையும் குறிக்கும். தெற்கு யமனின் திசை. அவன் காளி எனும் பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடிச் சென்றுவிடுவானாம். தக்ஷிணா எனில் வல்லவள் என்றும் ஒரு பொருள் உண்டு. பக்தர்களுக்கு வரமளிப்பதில் மற்ற தெய்வங்களை விட வல்லவள் இவள். மோட்சப் பிரதாயினி, பரப்ரஹ்ம ஸ்வரூபிணி, தேஜஸ்வினீ, பராசக்தி, திகம்பரீ, சித்விலாஸினி, சின்மயி, அறம், பொருள், விரும்பியதை நல்கும் தர்மம், மோட்சம் என்ற சதுர்வித புருஷார்த்தங்களையும் அருளும் பலஸித்திதாயினீ என அவள் பத மலர்களைப் பணிவோம். கலியில் காளிதேவி சட்டென்று அருள்பவள். இந்த தேவியை உபாசனை செய்தால் இன்பம், துன்பம், அழகு, கோரம், அன்பு, வெறுப்பு, அறம், அதர்மம் என யாவுமே ஒன்றாகவே தெரியும். எருக்கம்பூ, வாழைப்பூ, அரளி, செந்நிறமலர்கள் ஆகியவற்றால், அஷ்டமி, நவமி, அமாவாசை, சிவராத்திரி, பரணி நட்சத்திரம் ஆகிய தினங்களில் அர்ச்சித்தால் வறுமை நீங்கி வளமான வாழ்வு பெருக, தேடி வந்து அருள்வாள் தேவி. இவள் பூஜையில் நறுமணம் மிக்க சாம்பிராணி, குங்குலியம் போன்ற தூபங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். இந்த காளியின் மந்திரத்தை நதிக்கரையோரம், கடற்கரையோரம், ஏரிக்கரை ஓரம், நல்லநீர் தளும்பும் குளத்தின் கரையோரம், மயானம் போன்ற இடங்களில் ஜபிக்க வேண்டும். இவளை துதிப்பதால் அளவற்ற தைரியம், வாக்குவன்மை, நிகரற்ற செல்வம், தீர்க்க தரிசனம், முக்தி போன்றவை கிட்டும். வாக்கு, மனங்களுக்கு எட்டாத சக்தி படைத்த பராசக்தியான காளியை, வணங்குவோர் வாழ்வில் வளம் பல தந்தருளும் தேவியை வழிபடுவோம். பலனடைவோம்.