ஒரு முறை காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில், மேடையில் அமர்ந்து பக்தர்களிடையே அருளுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார் மகா ஸ்வாமிகள். அப்போது ஆடு ஒன்று, வாசலைக் கடந்து மடத்தின் உள்ளேயே வந்து விட்டது. பெரியவா அமர்ந்திருந்த மேடைக்கு அருகே வந்து நின்று, ஸ்வாமிகளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தது. கூட்டத்தில் சிலர் எழுந்து, விறுவிறுவென சென்று ‘ச்சூ… ச்சூ!’ என்று அந்த ஆட்டை அங்கிருந்து விரட்ட முற்பட்டனர்.இதைக் கவனித்த ஸ்வாமிகள் உரையை சற்று நிறுத்தி விட்டு, ஆட்டை விரட்ட முயன்ற பக்தர்களைத் தடுத்தார். ”அதை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம். அதுக்குப் பசிக்குது. ஏதாவது தேவையா இருக்கும்.” என்றவர், தனக்கு முன்னால் பித்தளைத் தட்டில் இருந்த வாழைப்பழங்கள் சிலவற்றை எடுத்து, ஆட்டின் முன் நீட்டினார். அந்த ஆடு உற்சாகத்துடன் ஸ்வாமிகளுக்கு அருகே வந்து, ஒவ்வொரு பழமாக வாங்கிச் சாப்பிட்டது. சில விநாடிகளுக்குப் பிறகு, அங்கிருந்து வெளியேறியது.
பிறகு ஸ்வாமிகள், ”இப்ப ஆடு ரூபத்துல வந்துட்டுப் போனது தபோவனம் ஸ்ரீஞானானந்த கிரி ஸ்வாமிகள். தபோவனத்துல உட்கார்ந்துண்டிருக்கிற அவருக்கு என்னவோ ஒரு பசி… என்கிட்டேர்ந்து ஏதாவது வாங்கிச் சாப்பிடணும்னு தோணி இருக்கு. அதான் நேரா இங்கே வந்துட்டார். நான் வாழைப்பழங்களைக் கொடுத்ததும், அதைச் சாப்பிட்டுட்டு சாந்தமா புறப்பட்டுப் போயிட்டா” என்று சொல்ல… பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்!
தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத அந்த காலகட்டத்தில்… பல மைல் தொலைவுக்கு அப்பால் இருந்தாலும்… நேருக்கு நேர் சந்திக்காமலேயே தங்களது கருத்துகளையும் உணர்வுகளையும் மகான்கள் பரிமாறிக் கொள்வர் என்பதற்கு உதாரணம்.இந்தச் சம்பவம் தபோவனம் மகானின் பசியை காஞ்சி ஸ்வாமிகள் தீர்த்தார்.

No comments:
Post a Comment