மனைக்கு ஆகா விருட்சங்கள் : -
சித்தர் பாடல் : -
தமிழகத்தில் தோன்றிய அருட்பெருஞ் சித்தர்கள் தங்கள் ஞானத்தால் கண்டறிந்த பிரபஞ்ச இரகசிய விதிகளின் உண்மைகளை, உலக மக்களெல்லாம் அறிந்து கொண்டு பயன்பெறவும், அறம், பொருள், இன்பம், என்ற மூன்று வகைப் பேரினையும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும், என்ற பேரருள் எண்ணங்களுடன் வாழ்வியல் தத்துவங்களையும், கோட்பாடுகளையும் வகுத்து சுவடிகளில் பதிப்பித்துள்ளனர்.
இன்றைய வாழ்வியல் சூழ்நிலைக்கு உகந்த,மிகவும் தேவையான இரண்டு வித தலைப்புகளில் விளக்கம் காணலாம்.
1 - மனைக்கு ஆகா விருட்சங்கள்
2 - இரவில் ஆகா போசனங்கள்
"பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு
வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு
கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும்
பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும்
வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர
வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும்
நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே
குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும்
குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி
குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி
ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு
இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு
குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே
பரதேசியாயிருப்பார் பாரே"
அகத்தியர் புனசுருட்டு - 500
இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில்
பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர்.
மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள்
வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி
நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு , கடன் தொல்லை , மனக்குழப்பம் போன்றவற்றிக்கு ஆட்பட்டு தனது வீட்டையே இழக்கும் சூழல் உருவாகும்.
இதுபோன்ற சூழ்நிலை களில் பாதிப்படைவோர் தனதுகிரகம் சரியில்லை, வீட்டின் வாஸ்து சரியில்லை என குழம்பிக் கொண்டிருப்பார்கள்.
எனவே இதில் கண்ட செடி,மரங்களை உடனே
அகற்றி நலம் பெறுங்கள்.
மேற்கண்ட செடி , மரங்களின் வகைகள் :
"1.பருத்தி,
2.அகத்தி,
3.பனை,
4.நாவல்,
5.அத்தி,
6.எருக்கு,
7.வெள்ளெருக்கு
8.புளியமரம்,
9.கருவேலன்,
10.முருங்கை,
11,கல்யாண முருங்கை,
12.கள்ளி
13.கருவூமத்தை,
14.இலவம்,
15.வில்வம்,
16.உருத்திராட்சம்,
17.உதிரவேங்கை"
இந்த 17,வகைகளை வீட்டில் வளர்க்கவே கூடாது.
அடுத்து பதிவில் இரவில் ஆகாத உணவுகள் பற்றிய பாடல் பார்ப்போம். . .

No comments:
Post a Comment